கதையாசிரியர் தொகுப்பு: இவள் பாரதி

2 கதைகள் கிடைத்துள்ளன.

5E

 

 ‘‘நானும் அரைமணி நேரமா நின்னுட்டு இருக்கேன்.. நான் போக வேண்டிய 5E இன்னும் வரல ..அதென்னமோ தெரியல..நாம ஒரு பஸ்க்கு காத்திருக்கும் போதுதான் அந்த பஸ் வரவே வராது.. இல்லனா எதிர்த்த மாதிரியே போகும். இல்ல ஈ போக முடியாத அளவுக்கு கூட்டமா இருக்கும்.. காலைல எவ்வளவு சீக்கிரத்தில வந்தாலும் எல்லா பஸ்லயும் கூட்டம் நிரம்பி வழியுது.. என்ன செய்யட்டும் ..நானும் சீக்கிரம் வந்து பஸ் ஏறலாம்னு நினைச்சா கூட குளிச்சு கிழிச்சு கிளம்ப எட்டு மணியாயிடுது..


ஐந்து பூரிகளும் சில பத்திரிக்கைகளும்

 

 அந்த விடுதியின் சமையலறையில் புத்தகங்களும், பத்திரிக்கைகளும் மேஜை மீது கிடந்தன. சமையல் செய்தபடியே படிப்பார்களோ என்று நினைக்கவோ அல்லது வேறு எங்கும் வைக்க இடமில்லாமல் சமையலறையில் வைத்துள்ளார்களோ என எண்ணவோ முடியவில்லை. காரணம் சமையல் செய்கிற அந்தநடுத்தர வயது கடந்த இரண்டு பெண்மணிகளை இந்த விடுதிக்கு வந்து சேர்ந்த மூன்று நாட்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களது பேச்சிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் அவர்களுக்கு படிக்கும் பழக்கமே கிடையாது என்பது தெளிவாக புரிந்தது. பின்னர் எதற்கு இங்கு புத்தகங்களை வைத்துள்ளார்கள் என