கதையாசிரியர் தொகுப்பு: இளையராஜா

3 கதைகள் கிடைத்துள்ளன.

மானிட வேட்டை

 

 இருட்டில் மூழ்கி இருந்தது அறை. கட்டில் பக்கத்தில் இருந்த பெரிய டிஜிட்டல் வாட்ச் மணி 10.20 எனக் கூறியது. அந்த இரவு நேரத்தில் நிமிட நேர நிசப்தத்தை கூட விரும்பாதவன் போல் பேசினான் ஜன்னல் ஓரம் நின்றிருந்த பரத். “பயமா இருக்கு சித்தப்பா..” இதே வார்த்தைகளை வேறு வேறு உடல்மொழியோடு முன்னமே அவன் சித்தப்பா என்றழைத்த மூர்த்தியிடம் பல முறைக் கூறிவிட்டான். இதே வேறு சூழ்நிலையில் இந்த வார்த்தைகளை அவன் கூறியிருந்தால் தலையில் கொட்டி “டேய்.. எத்தனை


ஊமை சாட்சிகள்

 

 மணி இரவு பனிரெண்டைத் தாண்டிருக்கும். அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறத் தொடங்கியது ரகுவின் செல்போன்.. சத்தம் கேட்டு முதலில் விழித்த ரகுவின் அப்பா அருகில் படுத்திருந்த ரகுவை எழுப்பி., “டேய் ரகு… போன் அடிக்குது பாருடா…” என்றார்.. ரகுவின் வீடு சிறியது… ஹால், கிச்சன், பாத்ரூம், ஒரு சிறிய பெட்ரூம் அவ்வளவே தான்.. ரகுவின் அம்மாவும், தங்கையும் பெட்ரூமில் படுத்துக்கொள்ள ரகுவும் அவன் அப்பாவும் ஹாலில் படுத்துக்கொள்வது வழக்கம்… தூக்கம் கலைந்த ரகுவும் செல்போனை


காற்றாடிப் பெண்

 

 ” ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார்..?” என்று சந்தியா கேட்ட கேள்விக்கு பேந்த பேந்த விழித்தான் அச்சு.. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் அச்சுவும் சந்தியாவும் சேர்ந்தே பள்ளி செல்வது தான் வழக்கம்.. பள்ளி அவர்களின் வீட்டிலிருந்து மிகவும் தூரமென்பதால் அச்சு சந்தியாவின் வீட்டில் வந்து அவளையும் தன்னுடன் சேர்த்து கூட்டி கொண்டு பள்ளிக்கு செல்வான்.. அவனுக்கு இப்படி வருவது சில சமயங்களில் சலிப்பை உண்டாக்கினாலும் சந்தியாவை அழைத்து