கதையாசிரியர் தொகுப்பு: இளசை மதீனா

1 கதை கிடைத்துள்ளன.

கைசேதம்

 

 “மரியம் மகப்பேறு மருத்துவமனை” என்ற போர்டை தாங்கியுள்ள காம்பவுண்டுக்குள் தன் மனைவி சகிதமாக நுழைந்த காதர், அங்குள்ள இருக்கையில் அமர்ந்த படி கண்களைச் சுழலவிட்டான். அந்த வட்டாரச் சூழலையே அவன் தன் முப்பத்தைந்தாவது வயதில்தான் பார்க்கிறான். மிரட்சியால் – மருளும் கண்களுடனும், தாய்மைப் பேறுற்ற பரவசத்தால் ஆன முகங்களுடனும், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மழலையரைப் பிடிக்கப் போகும் பெண்களும் ஆண்களுமாகக் பட்டம் கலகலத்துக் கொண்டிருக்கும் அம் மருத்துவமனைக்கு அன்று அவன் வந்ததே பெரும் நிர்ப்பந்தத்தினால்தான். மூன்று வயது