கதையாசிரியர் தொகுப்பு: இந்திராமைந்தன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

நாட்காட்டி

 

 காவ்யா, என்ன ஒரே ஹேப்பியா இருக்க போல தெரீது, ம்… எஞ்சாய் எஞ்சாய் என்று ஊக்கப்படுத்தினாள் தோழி ஜான்சி. கண்டிப்பா, மெடிக்கல் காலேஜ்ல படிக்கப் போறா, சந்தோசப்படாம… என்று இன்னொரு தோழி மீராவும் ஊக்கப்படுத்தினாள். தேங்க் யு ஆல், வாங்க எல்லாம் காஃபி சாப்ட்டுட்டே பேசலாம் என்று காவ்யா இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். வாம்மா ஜானு, மீரா@ அம்மா எப்டிடா இருக்காங்க மீரா என்று காவ்யாவின் தாய் சந்தியா கேட்டாள். ம்… அப்டியேதா இருக்காங்க ஆன்ட்டி,


தீர்ந்து போன “மை”

 

 இணையத் தரவிறக்க மையம் முழுவதும் கூட்டமாக மாணவர்கள் நின்றனர். கைபேசியில் முயன்று தோல்வியுற்றதால் அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க ஆவலோடு நின்றனர். டேய் என்னடா, அரியர்ஸ் எல்லாம் கிளியரா, கம்ப்யூட்டர் சைன்ஸ் பாசா என்று அனிதா ஒரு மாணவனைக் கேட்கிறாள். போங்கடி, நீங்கள்லாம் பாசாகிட்டீங்களாக்கும், ஒரே திமிருல அலைறீங்க என்று அவன் அதட்டிச் சென்றான். ஏய் எரும, சும்மா இருக்க மாட்டியாடி, அவனுங்க திமிருக்கு ஃபெயில் ஆவானுங்க, கேட்டா நம்ம அசிங்கமா பேசுவானுங்கடி என்று அஞ்சலி


வாய்ப்புகள் உன்னாலே உருவாகின்றன

 

 மூன்றாம் குறுக்குத்தெருவைக் கடந்து புனிதா வீட்டின் வாயிலுக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து வினிதா, திவ்யா, புவனா ஆகிய தோழிகள் வந்தனர். வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததைக் கண்டதும் ஏமாற்றம் அடைந்தனர். உடனே புவனா தனது மொபைல் மூலம் புனிதாவை அழைத்தாள். ஆனால் வீட்டிற்குள் ரிங்டோன் ஒலிப்பதை வினிதா கவனித்தாள். உடனே தோழிகளையும் கவனிக்க அறிவுறுத்தினாள். வீட்டுக்குள்ள சவுன்டு கேக்குது பாருங்கடி, என்று வினிதா கூறினாள். அப்போது அந்தத் தெருவின் குப்பைகளை எடுத்துச் செல்லும் குப்பை


உணர்ந்து விட்டாயா தேவனை?

 

 சேவல் கூவுகின்ற அதிகாலைப் பொழுது. மின் மோட்டாருக்கென அமைக்கப்பட்ட அந்த அறையினுள் இரவுப் பொழுதில் மறைந்து கொண்டிருந்த ஜேம்ஸ் மனதிற்குள் பெரும் கவலை ஏற்பட்டது. தூக்கமே வரல, சாப்புடுற சாப்பாடு கூட நிம்மதியா சாப்புட முடீல, இப்புடி தெனந் தெனம் அடுத்தவென் ஒழச்ச காச அமுக்கி வாழற வாழ்க்க நமக்குத் தேவதானா, தூரத்துல ஏதோ வெளுச்சம் தெரீது, மொதல்ல இங்க இருந்து கிளம்பனும்…. இவ்வாறு புலம்பிக் கொண்டே அவ்விடத்திலிருந்து தப்பிக்க வெகு விரைவாகக் கிளம்பினான் ஜேம்ஸ். ஜேம்ஸ்