கதையாசிரியர் தொகுப்பு: ஆழ்வாநேரி சாலமன்

1 கதை கிடைத்துள்ளன.

குட்டச்சி

 

 பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்; சாப்பிட வாருங்கள்’ ஒலிப்பெருக்கி மூலம் அழைப்பு விடுத்தார்கள். அழைப்பு விடுத்த நேரம் நண்பகல் இரண்டு மணி. குடிசைக்குள் முடங்கிக் கிடந்த குட்டச்சி எழுந்து கொண்டாள். நாக்கின் சுவை மொட்டுகள் ருசியான பதார்த்தங்களுக்காக ஏங்கின. ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவதை தவிர, அவளால் வேறொன்றையும் செய்ய முடியாத நிலை. ஊர் ஜனமான சொந்த பந்தங்கள்