கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.எஸ்.பிரியா

1 கதை கிடைத்துள்ளன.

அப்பா

 

 “அம்மா இன்னைக்கு என்ன சமையல், ரொம்ப பசிக்குதும்மா” என்று விசாரித்தவாறு மின்னலாய் சமையலறைக்குள் நுழைந்தான் முகிலன். மெலிந்த, உயரமான தோற்றம் முகிலனுக்கு. மாநிறம், காண்போரை சுண்டி இழுக்கும் சிறு புன்னகை அவன் முகத்தில் எப்போதும் பரவிக்கிடக்கும். அழகிய மண் பானையில் கம்பீரமாக கொதித்துக் கொண்டிருந்தது மீனாட்சி வைத்த சின்ன வெங்காயம் காரக்குழம்பு. அடுப்புக்குப் பக்கத்தில், வெண்டைக்காய் பொரியல் செய்ய வெண்டைக்காயை வெட்டிக் கொண்டிருந்தார் மீனாட்சி மௌனமாக. “என்னம்மா, இன்னைக்கும் காரக்குழம்பா…? மீன், கோழி எதுவும் இல்லையாமா?” என்று