கதையாசிரியர் தொகுப்பு: ஆபிதீன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

தினம் ஒரு பூண்டு

 

 சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திலிருந்த மரத்தின் கிளையில் தாவிக்கொண்டிருந்த ஒன்றை அது ஒரு குரங்குதானென்று கண்டுபிடித்து என் மனைவியிடம் சொல்லுமுன்னரே அவள் , ‘ஹை…ஆம்புளெ கொரங்கு ‘ என்று பரவசமாக என்னிடம் சொன்னாள் முன்பு. அத்தனை கூர்மையான கண்கள் அவளுடையது. அந்தக் கண்கள் இப்போது கடுமையான கோபத்தில் சிவந்திருந்தன. பெண்களின் கண்களே இப்படித்தானாம். சக்திப்பிழம்பாகச் சொல்வார்கள் ஹஜ்ரத். ‘ஒரு செகண்ட்தான் பாப்பா. ஒங்க மூக்கு முடி, கம்கட்டு மஞ்ச பூத்துக்கிறது, கால்நவம் வெட்டாம இக்கிறதுண்டு எல்லாம் தெரிஞ்சிடும்.


மூடல்

 

 மாந்தீரிக யதார்த்தமெல்லாம் இல்லை; நிஜமாகவே இருண்டு திரண்டிருந்த பெரும் கருமேகம் ஒன்று கடைசியாக விமானத்தினுள் நுழைந்தது. மூடலாமா கூடாதாவென்ற விவாதங்களில் கலந்து கொள்ள வந்திருக்குமோ ? தெரியவில்லை. ‘டக் ‘கென்று விமானத்தினுள்ளிருந்த அத்தனை விளக்குகளும் அணைந்தாற்போன்றிருந்தது மட்டும் உண்மை. இருட்டு, இந்த மேகத்தின் குணம் மட்டும்தானா ? யார்மேலும் அதன் பக்கங்கள் பட்டுவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன், படு அதிகாரமாக , ‘தேக் kகர் ச்சலோ…! ‘ ( ‘பாத்துப் போ..! ‘) என்று சத்தமிட்டபடி அணைத்து வந்த


போனாலும்… – மீண்டும் ஒரு சஃபர் கதை

 

 RESCUE’ என்று சிவப்பு ஸ்டிக்கரில் பெரிதாக எழுதியிருந்த அரசாங்க வாகனம் ஒன்று , பிரதான சாலையான ஷேக் ஜாயித் ரோட்டின் ஓரத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தது. பார்த்ததும், என்னை உருட்டித் தள்ளிய எங்கள்வீட்டுப் பொடியனின் கேள்விதான் ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவோ தடவை நான் விழுந்திருக்கிறேன். எவ்வளவுதான் நீங்கள் அடித்துச் சொன்னாலும் அதை நம்பாமல் , புத்திசாலியென்று என்று என்னை நினைத்துக்கொண்டு நான் எடுக்கிற முடிவுகள் உதைக்கிற அபாரமான உதைகளால் அடிக்கடி விழுவேன் . ‘என்னய்யா எழுதுறே நீ


ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்

 

 வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை , பாருங்கள்!) மோதிரத்தை எங்கே வாங்கினார்கள் , யாரிடம் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதற்காக அவர்களின் டைரி ஒன்றை புரட்டினேன். வருடா வருடம் எழுதும் டைரி அல்ல அது. கிழிந்துபோன வாழ்க்கை மொத்தத்திற்கும் ஒன்று. ஊரில் பால் பண்ணை வைத்து சொந்தக்காரர்களால் ஏமாந்தது, நாகப்பட்டினத்திற்கு கப்பலில் வந்து இறங்கிய காலத்தில் திமிர் பிடித்த கஸ்டம்ஸ்காரன் போட்ட


உயிர்த்தலம்!

 

 தொடையில் ஓங்கி ஒரு அடி..! வலியில் , வஹாப் – என் தம்பி – எழுப்பிய சத்தம் மனதை அறுத்தது. இது வலி என்றோ அது எந்த இடத்திலென்றோ அல்லது அடித்தது தன் லாத்தாதான் என்றோ அவன் உணர்வானா ? பார்வை , எப்போதும் வானத்தை மறைக்கும் முற்றத்துப் பந்தலின் ஏதாவது ஒரு மூங்கிலில் பட்டு நிதானமில்லாமல் அலைய, எச்சில் வடிகிற கோணல் வாயில் மொய்க்கும் ஈக்களை விரட்டத் தெம்பில்லாத தன் திருகிய கைகைளைத் தொட்டியில் அடித்துக்


விஷம்

 

 ‘சுரீர்’ என்றது. அதற்கப்புறம் நடந்தது ஞாபகம் இல்லை.. கடித்தது பாம்பா , பூரானா ? இந்த வலி வலிக்கிறதே..’ர்ர்’ என்று இன்னும் ஏறிய வண்ணம்.. கொட்டிற்றோ ? பெரிய கருந்தேளாக இருக்குமோ? ஏற்கனவே பட்ட அனுபவம் இருந்திருந்தால் இனம் கண்டு கொண்டிருக்க முடியுமோ என்னவோ..அனுபவம் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிறது.. நுரை தள்ளிய வண்ணம் நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? எனக்கே ஓதிப்பார்க்க தெரிந்துதான் இருந்தது. நாலு வருடங்களாகின்றன ‘இஸ்மு’ வாங்கி. இதை வாங்கவா கெளஸ் ஹஜ்ரத்தின் காலடியில் விழுந்தோம் என்றால்