கதையாசிரியர் தொகுப்பு: அழகிய பெரியவன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

வனம்மாள்

 

 சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள். சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுடன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து ஆடும்


பொற்கொடியின் சிறகுகள்

 

 இளங் காலையின் செறிந்த மௌனம் பொற்கொடிக்காகக் காத்துக்கொண்டு இருந்தது. அவள் திண்ணையில் வந்து அமர்ந்ததும் வெறியோடு அவளைத் தழுவிக்கொண்டது. குளிருக்குக் கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இப்படியும் அப்படியுமாக உடலைத் திருப்பினாள். சில நேரங்களில் அம்மா எதுவும் பேசாமல் இவளையே பார்த்துக்கொண்டு இருப்பார். அந்தக் கவனிப்பின் இறுதியில் அவர் கண்கள் இரண்டு படிகச் சொற்களைத் துளிர்க்கும். இவள் பார்ப்பதற்குள்ளாக முந்தானையால் அவற்றைத் துடைப்பார். ”நீ கொழந்தடி எம் பொண்ணே. ஆயுசுக்கும் நீ கொழந்தையாவே இருக்கணும்னு அந்த ஆண்டவன் எழுதிட்டான்.


தோப்பு

 

 மாலையில் பள்ளிக்கூடம்விட்டு வந்தபோது சாமுடியை பஸ் நிலையத்தில் பார்த்ததில் இருந்தே தவிப்பு கூடிவிட்டது. இனிப்புக் கடையோடு இருக்கும் தேநீர்க் கடை ஒன்றின் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டவுடன் சாமுடி, தேநீருக்குச் சொன்னான். அது வரும் வரை பேசிக்கொண்டு இருந்தோம். பேச்சின் ஊடே திடீர் என என்னிடம் அவன் சொன்னான். ”வேங்கப்புலி, உங்க ஊரு பாண்டுரங்கன் தென்னந்தோப்பு வெலைக்கு வருதாம்.வாங்கிக்கிறயா?” அங்கேயே எனக்குக் கவனம் தப்பிவிட்டது. தேநீரை லயித்துக் குடிக்க முடியவில்லை. பழுப்பு நிறத் தேயிலைச் சாறால் நனைந்து இருந்த


வெளுப்பு

 

 குளிர்கால இரவின் நிலவொளியில், வீட்டுத் திண்ணையின் மீது உட்கார்ந்திருந்தான் பூபாலன். காலையில் நடந்தவை மசமசவென்று கண் முன்னால் தோன்றி ஆத்திரத்தையும் துக்கத்தையும் கொடுத்தன. குளிர்காற்று வீசத் துவங்க, நைந்து பழசாகியிருந்த துப்பட்டியை இழுத்து இறங்கப் போர்த்திக்கொண்டான். தூக்கம் வரவில்லை. ஒரு முடிவெடுக்க முடியாமல் தவித்தது மனம். அவன் எதிரில் இப்போது இரு முடிவுகள் இருந்தன. வத்சலாவைக் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டுப் போய்விடுவது; அல்லது பெரியபட்டிக்குப் போய்த் திருடுவது. இந்த ஊரின் எவ்வளவு அழுக்குகளை அந்தக் கைகள் துவைத்திருக்கும்? படிப்பை


வாகனம் பூக்கும் சாலை

 

 முரளியை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருக்கிறேன். அவனே அப்படி குழப்பமானவன்தான். அவன் தற்போது மாறியுள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடத் தெரு கடைக்குப் போனால் உங்களுக்குத் தெரியும். உங்கள் இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும்படி அவனிடம் உருட்டிச் செல்லும்போது முரளியை அப்படியான தருணங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். சில நேரங்களில் உங்களுக்குப் பெருத்த வரவேற்பு இருக்கும். சில சமயங்களிலோ கண்டுகொள்ளாமல் வேலையில் மூழ்கி இருப்பான். மிகப் பழைய வண்டிகளையும் புதுப் பிறவி எடுக்கச் செய்வதில் முரளி பிரம்மன்