கதையாசிரியர் தொகுப்பு: அழகிய சிங்கர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

உறவினர்கள்

 

 அந்த வருடம் பாட்டி செத்துப் போய்விடுவாள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். பாட்டி அப்படி இருந்தாள். பாட்டிக்கு எப்போதும் இரத்தக் கொதிப்பு நோய் உண்டு. மே–ஜூன் மாதங்களில் இந்த நோயின் கடுமை நன்றாகவே தெரியும். ஆகஸ்ட் மாதம் நெருங்கியும் பாட்டியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பெரியப்பா பையன் பாபுவின் கல்யாணத்திற்கு குடும்பம் முழுவதும் சுவாமிமலைக்குக் கிளம்புவதாக இருந்தோம். தனியாக பஸ் ஏற்பாடு செய்திருந்ததால் போய் வருவதில் சிரமம் எதுவுமில்லை. ஆனால் பாட்டியின் நிலைதான் கவலைப்படும்படியாக இருந்தது. டாக்டர்


தவறு

 

 பத்மாவைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யாணம் செய்துகொண்டு அவளுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்று தோன்றியதில் வியப்பேதுமில்லை. பார்க்க உயரமாக கொஞ்சம் வெளுப்பாகத் தோற்றமளித்தாள். நான் அணிந்திருப்பதுபோல் அவளும் கண்ணடி அணிந்திருந்தாள். பிரசுரமான என் முதல் கதையைப் பாராட்டி என்னுடன் நட்பைத் துவக்கியவள். என் முதல் கதை ஒரு சிறு பத்திரிக்கையில் பிரசுரமாகி இருந்தது. பத்திரிக்கையின் நூறு சந்தாதாரர்களில் பலர் என் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு நாள் ஜகன் என்னைத் தொடர்புகொண்டு அவன் பணிபுரியும் பகுதிக்கு வரச் சொன்னான். இரண்டாவது