கதைத்தொகுப்பு: தென்றல்

66 கதைகள் கிடைத்துள்ளன.

புன்னகைக்கும் இயந்திரங்கள்

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (ஸ்மைலிங் மெஷின்ஸ்) “சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8.00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறது” நகரின் முக்கிய இடங்களில் லேசர் எழுத்துக்கள் வெற்றுவெளியில் தோன்றி நகர்ந்து கொண்டிருந்தன மீண்டும் மீண்டும். ஒரு நிமிடம் நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தொடர்ந்தேன். பெருமிதமாய்


மறுபக்கம்

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பயனீட்டாளர் தன் வர்த்தகரோடு பேசும் தொனியில், பெரிய ஒரு ஒட்டுதலின்றி தான் சந்திரா ரகுவிடம் பேசினாள் ஒவ்வொரு முறையும். ஆனாலும், அவள் அவருடன் பேசும் போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து உட்கார்ந்து கொண்டன. பட்டுப் போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது. சந்திரா அவரிடமிருந்து பிரியும் முன்பும், பிரியும் போதும்


பருந்தும் குருவியும்

 

 குழந்தைகளே! தீபாவளி வந்தாச்சு. கொண்டாட்டம் தானே! ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று வசித்து வந்தது. அங்கும் இங்குமாய்ச் சிறகடித்துப் பறந்த அதற்கு இன்னும் உயரமாய்ப் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே மெல்ல மேலெழும்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் பறந்திருக்கும். அவ்வளவு தான், சூரியனின் வெப்பத்தை அந்தக் குருவியால் தாங்க முடியவில்லை. மேலும் அதன் எடையும் சிறிய சிறகுகளும் அது உயரே பறப்பதற்குத் தடையாக இருந்தன. சோர்ந்து


அம்மா பேசினாள்

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணை நெடி. சமையலறையில் டின் டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியான படியிருந்தன. “எங்க பாட்டி சொல்லுவா, ஒரு தடவ தட்டிப் போச்சுன்னா தொடர்ந்து நாலு வருஷம் தட்டும்னு, சரியாத்தான் இருக்கு. பாரேன், நாலு வருஷமா நம்மாத்துல தீபாவளியே கொண்டாடல்ல. இந்த விச எல்லாருமே கூடியிருக்கிறதே மனசுக்கு ரொம்ப நெறவா இருக்கு இல்ல” அமெரிக்காவிலிருந்து நேற்று வந்திருந்த


மழைக்கு வெளியே

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தக்கதை, இன்றைய இளைய தலைமுறையினரின் தவறான அல்லது தாறுமாறான முந்துரிமைகளைப் (misplaced priorities) பற்றித் தெளிவாகப் பேசுகிறது. ஒரு மூன்று வயதுக் குழந்தையின் மெல்லிய உணர்வுகளை, ஏக்கங்களைப் புரிந்துகொள்ள இயலாத இளம் தாய், அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒரு தலை முறைக்கு முந்திய பாட்டியின் பக்கத்தில் வைத்துப் பேசப்படுவது (juxtaposed) கதையின் சிறப்பு. இரண்டு வெவ்வேறு காலத்தை, பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் அருகில் வைத்துப்


நுணலும் தன் வாயால் கெடும்

 

 குழந்தைகளே, நலமா? வழக்கம்போல ஒரு கதையோடு வந்திருக்கேன். கேளுங்க. அது ஓர் ஆறு. அதில் எப்போதும் வற்றாமல் சலசலவென்று தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். அதில் நிறைய மீன்கள், தவளைகள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஆற்றில் உள்ள ஒரு தவளைக்குக் கொக்கு ஒன்று நண்பனாக ஆனது. கொக்கு தினமும் வந்ததும் வழியில் பார்த்த விஷயங்கள், நடந்த அதிசயங்கள் என எல்லாவற்றையும் ஆர்வத்துடன் விவரிக்கும். தவளைக்கு இவையெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். தானும் இது போலப் பறந்து பல


வல்லவனுக்கு வல்லவன்

 

 குழந்தைகளே! ஒரு கதை சொல்றேன் கேளுங்க! அது ஒரு பெரிய காடு. அங்கே விலங்குகள் மிக ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தன. ஒருநாள் யானை ஒன்று காட்டு வாழைகளைத் தின்றுவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஈ ஒன்று பறந்து வந்தது. யானையின் பிரமாண்ட உருவமும், அது துதிக்கையையும் காதுகளையும் அசைத்துக் கொண்டே இருப்பதையும் கண்டு அதற்குச் சிரிப்பாக இருந்தது. அது யானையைச் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரமிட்டது. யானை தன் காதுகளை முன்னிலும் வேகமாக அசைத்து


வியாபாரியும் கற்பக மரமும்

 

 கற்பக மரம் என்றால் என்ன தெரியுமா? நாம் எதைக் கேட்டாலும் அதைக் கொடுக்கும் மரம்! ‘ஆஹா, அப்படி ஒரு மரம் என்னிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்று நினைக்கிறீர்கள் அல்லவா? நம்மிடமும் அப்படி ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? கதையைக் கேளுங்கள், கடைசியில் சொல்கிறேன். காட்டு வழியில் நடந்து ஒரு வியாபாரி கொண்டிருந்தான். வெகு தூரத்தில் இருந்து நடந்து வந்ததால் அவனுக்கு மிகவும் களைப்பாகி விட்டது. எனவே அருகில் எங்காவது தங்கி சிறிது நேரம்


முரட்டுக் குதிரையும் நோஞ்சான் குதிரையும்

 

 ஒரு ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தான். அவன் பெயர் கந்தன். அவன் தன்னுடைய குதிரையை விற்பனை செய்யச் சந்தைக்குக் கொண்டு போனான். அது மிகவும் முரட்டுக் குதிரை. யாருக்கும் அடங்காது. மிகவும் கவனமாக அதை அழைத்துக் கொண்டு போனான். இரவு நேரம் ஆனதும் ஒரு சத்திரத்தில் அவன் தங்கும்படி ஆனது. அருகிலுள்ள மரத்தடியில் குதிரையைக் கட்டிப் போட்டுவிட்டு, கந்தன் உணவுண்ட பின் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கமாக மற்றொரு குதிரை வியாபாரி வந்து சேர்ந்தான்.


எல்லாம் எனக்கு தெரியும்

 

 குழந்தைகளே, சௌக்கியம் தானே! அம்மா-அப்பா பேச்சைக் கேட்டு நடக்கிறீங்க தானே! நல்லது. அப்படித்தான் இருக்கணும். பெரியவங்க கிட்ட இருந்து நல்ல விஷயங்களைக் கத்துக்கணும். அவற்றை நம்ம வாழ்க்கையில கடைப்பிடிச்சு வாழணும். அதுதான் முக்கியம். ‘எல்லாம் எனக்குத் தெரியும்’னு அலட்சியமா இருந்தா என்ன ஆகும்? இந்தக் கதையைக் கேளுங்க புரியும். அது ஒரு சின்ன கிராமம். அதற்கு ஒரு தலைவர் இருந்தார். அவரோ சரியான சோம்பேறி; முட்டாளும் கூட. எப்போது பார்த்தாலும், சாப்பிடறதும், தூங்குறதுமா காலத்தைக் கழிச்சு வந்தார்.