கதைத்தொகுப்பு: கல்கி

217 கதைகள் கிடைத்துள்ளன.

மகனுக்குத் தெரிந்தது தந்தைக்குத் தெரியவில்லை

 

 (1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்னதான் படித்தாலும் முடிகிறதில்லை. ஒவ்வொரு பரீட்சையின்போதும் ஏதாவது ஒரு சப்ஜெக்டில் இழுத்துக்கொண்டு விடுகிறது. இந்த முறை கணக்கு, குறைந்த பட்சம் பாஸ் மார்க் வாங்குவதற்குக்கூட தங்கராசு வாத்தியார் மனசு வைத்தால்தான் உண்டு. ஏழுமலைக்குக் கலக்கிக் கொண்டு வந்தது பயம். கோபத்தில் கத்துவதற்கென்றே அப்பாவிடம் தனியாக ஒரு குரல் இருந்தது. ”என்ன எழவுக்குன்னு சாம்பார்ல தெனம் இவ்வளவு உப்பைக் கொட்டறே?” என்று அம்மாவை அதட்டுவதற்கும்.


அவள் ஒரு அக்கினி புஷ்பம்

 

 (1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சில நாட்களுக்கு முன் வெளியான பத்திாகை செய்தி :- தம்பதியை வழி மறித்து நான்கு கயவர்கள் மனைவியை மட்டும் இழுத்துச் சென்று அவரை மானபங்கப் படுத்தி அனுப்பி விட்டனர். வீடு திரும்பிய அவள் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாள். இச்செய்தி பின்னால் மறுக்கப்பட்டது. ஆனால் – இதில் ஒரு கதை ‘கரு’ நமக்கு அகப்படுகிறது. இதை ஆதாரமாக வைத்து எப்படி கதையைத் தொடரலாம்


கண்ணாடியின் பின் பக்கம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனித வர்க்கம் பரபரப்பான வாழ்க் கையை மேற்கொண்டு விட்டது. இதுவே கலியுகத்தின் முடிவு போலத் தோன்றுகிறது. அடிப்படைப் பண்புகள், அடிப்படை நியாயங்கள் எல்லாம் தொட்டுக்கொள், துடைத்துக்கொள் என்றாகிவிட்டன. தாய்மை தன் பரிபூரண ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதே குறைந்து விட்டது. கற்பு, அடக்கம். இவையெல்லாம் இலக்கியங்களோடு நின்றுவிட்டன. ஹோட்டல்களிலும், தெருக்களிலும் ஆண்களும் பெண்களும் இனத் தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வாகனங்களின் புகை


இடுக்கண் வருங்கால் நகர்க…

 

 (1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) படுத்திருந்த கணவனை எழுப்பினாள் நிரஞ்சனா, “என்னங்க… என்னங்க…உங்களைத்தான். கொஞ்சம் எந்திரிங்க…” குரல் உயர்த்தினாள். மெதுவாக ஓணான் போல் தலை உயர்த்தினான் பரணிவாசன். “என்னடி அவசரம்? தூங்குகிறவனை எழுப்புற?” “அவசரம்தான். கொல்லைப் பக்கமே போக முடியலைங்க, பின்னாடி, அவன் தான் இன்னாசி முத்து – கொட்டகை போட்டுக் கள்ளச் சாராயம் மதுக்கசாயம் வித்துக்கிட்டு இருக்கான். சந்தைக் கடை மாதிரி ஒரே சப்தம், கெட்ட கெட்ட


கங்கையில் நெருப்பு

 

 (1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கங்கா ஸ்டீல் ஃபாக்டரியின் ‘மெயின் கேட்டை’ வாட்ச்மேன் ஓடிவந்து திறந்து சல்யூட் அடித்து நின்றான். ஒரு வெள்ளை நிற ஃபாரின் கார் அன்னம் போல் உள்ளே நுழைந்து ஃபாக்டரியின் ‘மானேஜிங் டைரக்டர்’ அறை வாசலில் ஒரு குலுங்குக் குலுங்கி நின்றது. காரிலிருந்து கங்கா இறங்கினாள். வயது முப்பதிலிருந்து நாற்பதுவரை எடை போட முடியாத தோற்றம், முகத்திலே உணர்ச்சிகள் பிரதிபலிக்காத ஒரு இருக்கம். கங்கா


அன்புள்ள அக்கா

 

 (2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆறு ஐம்பதுக்கு வந்து சேரவேண்டிய நெல்லை எக்ஸ்ப்ரஸ் வழக்கம் போல ஏழு ஐம்பதுக்கு சாவகாசமாய் எழும்பூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. ரயிலை விட்டுக் கீழே இறங்கி, ரெண்டு பக்கமும் பார்த்தான். கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. அக்காவையோ அத்தானையோ காணோம். காலையில் ஆஃபீஸுக்கு போக வேண்டியவர் அத்தான். ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். ரயில் ஒரு மணி நேரம் லேட் என்றறிந்ததும் வேறே வழியில்லாமல் கிளம்பிப் போயிருப்பார். அது


நந்தாவதி

 

 இரவு சரியாக எட்டு மணி, கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் முதலாவது `பிளாட் பாரத்’தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, `ஜம்’மென்று புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது மட்டக்களப்பு மெயில் வண்டி. வண்டி என்றும் போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம்பாறை நீர்ப்பாசன `இராட்சத அணைத் திட்டம்’ மட்டக்களப்புக்கு வந்தாலும் வந்தது மட்டக்களப்பு மெயிலின் நிலையே ஒரு பூரண கர்ப்பிணியின் நிலைதான். புறப்பட்ட ஐந்து நிமிஷங்களில், கொழும்பு நகரின் அடுத்த பெரிய ஸ்டேஷனான மருதானையை `நொறுக்கி’க் கொண்டு


நல்லதோர் வீணை செய்து

 

 காலையில் பிடித்த மழை, கொஞ்சமாவது நிற்க வேண்டுமே? இல்லை. கொட்டித் தீர்த்துவிடுவேன் என்பது போல் விடாமல் பெய்து கொண்டிருந்தது. தார் பூசிய சுவர் போல் வானம் மேகங்களால் இருண்டு கிடந்தது. மலைக்குளிர் வேறு சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? “ஏன் இங்கு வந்து மாட்டிக் கொண்டோம்?” என்று ஆகிவிட்டது எனக்கு. தேயிலை எஸ்டேட்டின் நடுவில் இடிந்த அந்தச் சின்னஞ்சிறிய தகரக் கொட்டகை இருந்தது. அதில் ஒழுகிய இடம் போக மிஞ்சிய ஒரே ஒரு மூலையில் நானும் டிரைவரும்


ஆகாயமும் பூமியுமாய்

 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அழகும், ஆபத்தும் அருகருகே இருக்கும் என்பதை அறிவுறுத்துவது போல், அந்தச் சாலையின் ஒரு பக்கம் புதர்களும், பொந்துகளுமாய் மண்டிக் கிடக்க, இன்னொரு பக்கம் மாடிக் கட்டிடங்கள் கூடிப் பேசுவது போல் நெருக்கமாய் நின்றன. அழகுதான் ஆபத்து என்பது போல் எத்தனையோ உயிர்களை விபத்துக்களால் விழுங்கிய அந்தச்சாலை, விசாலத்தோடும், கண்ணைப் பறிக்கும் கறுப்பு நிற வண்ணத்தோடும், மத்தியில் கூம்பு வடிவத்திலான மஞ்சள் வெள்ளை கோடுகள்


ஊனம்!

 

 கணபதி மெஸ் காலை ஆறு மணிக்கு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாதுங்கா பகுதியில் கணபதி மெஸ் இருந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கணபதி மெஸ்சை நாடினார்கள். எளிமையான தரமான உணவு. கந்தசாமி அம்சவள்ளி தம்பதியினர் விருதுநகரில் இருந்து பிழைப்புக்காக மும்பை மாதுங்காவிற்கு சென்றார்கள். ஆரம்பத்தில் அவர்கள் மாதுங்கா பிளாட்பாரத்தில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்தனர். அதில்தான் அவர்கள் அன்றாட வாழ்வு நகர்ந்துகொண்டிருந்தது. மாதுங்காவில் வசிக்கும் ராஜாராம் மதுரைக்காரன் தினமும்