கதைத்தொகுப்பு: காதல்

885 கதைகள் கிடைத்துள்ளன.

என்றும் மறவாதே!

 

 பெயர்ப் பலகையில் புலியூர் என்று இருந்தது.. அங்கு, ” முத்து இருடா நானும் வரேன் என்ன விட்டு போகாதா நில்லு டா ” என்று எட்டு வயது சிறுமி தொரத்திக் கொண்டு ஓடினாள்…. “ஹா ஹா ஹா! உன்னால என்ன பிடிக்க முடியாது மீனு” என்று பத்து வயது நிரம்பிய சிறுவன் சிரித்துக் கொண்டு ஓடினான்.. “அஹ அம்ம்ம்ம்மா..” “ஹே என்னாச்சு மீனு பார்த்து வர மாட்டியா நீ??? எங்க அடிபட்டிச்சு மா?? “முத்து மீனுவின் கால்களை


அழகி

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேருந்துப் பயணத்திற்காக ஏகத்துக்கும் ஏங்கியிருக்கிறான் குணா. கையிலிருப்பதோ ஹிரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள், ‘மாநகரப் பேருந்துகள் அத்தனைக்கும் வெள்ளை வண்ணம்தான் பொருத்தமானது! எண்ணற்ற தேவதைகளைச் சுமந்து செல்லும் அவற்றை, அரசு, பச்சை வண்ணத்தால் கொச்சைப்படுத்தி விட்டது’ என்பதாக விஜய டி.ராஜேந்தர் மொழியில் விமர்சிப்பவன், கடன் அட்டைகளை கரும்புச்சாறு விற்கும் மதுராந்தகம் இராமத்து மனிதனிடம் கூட விற்றுவிடும் திறமைசாலி. கைநிறையச் சம்பளம், பை நிறைய


திருப்பம்…

 

 தெருவில் வீடுகள் வரிசையாக இருந்த மய்ய பகுதியில் சின்னதாக ஒரு காலனி, இதை ராவ் காலனி என்பர், இங்கு கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும், நடுவில் சந்தும் எதிர்புறமாக கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும் இருக்கும். இந்த காலனியின் ஒருபக்க மேல் தளத்தில் ஒரு குடும்பம் நம் கதையின் நாயகன் பிரபுடையது.. அம்மா, அப்பா, தங்கை இவன்.–என நாண்கு பேர். இங்கிருந்து… டேய் பிரபு…. இன்னிக்கு கடைசி பரிட்சைன்னு சொன்ன, காலேஜ் கிளம்ப வேண்டாமா? எவ்வளவு நேரம்


காதலே மௌனமானால்…

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைநகரிலிருந்து இருநூறு கிலோமீற்றர்களுக்கு சற்று அதிகமாக உள்ள தனது இலக்கை நோக்கிப் புறப்பட இருந்த அந்த அதிகாலை கடுகதி ‘இரயிலில்’ மூலை ஆசனம் ஒன்றினைப் பிடித்து வசதியாக அமர்ந்துகொண்டேன். சனநெரிசல் இல்லை. எதிரிலே என்னைக் காட்டிலும் ஓரிரு வயது அதிகம் மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் சிறிது பதட்டத்துடன் ‘பிளாட்பாரத்தையும்’ தனது கை கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். சாதாரண ஆடையில் அவன்


கென்னியா

 

 கிறிஸ்தீனா, வீட்டின் கதவைத் திறக்கிற சத்தத்தைக் கேட்வுடனேயே ,தனது இருப்பிடத்திலிருந்து தன் கழுத்தில் கட்டப்பட்ட மணி இசைக்க பெருமகிழ்ச்சியில் ஒருவகையாகக் குலைத்தபடி ஒடி வருகிறாள் கென்னியா.தன் கையில் இருந்த பைகளை வைத்துவிட்டு அவளது நீண்ட காதுகளிடையே தனது கைகளை கோர்த்துத் தடவியபடி அவள் நெற்றிப்பகுதியில் முத்தமிட்டபோது மனதில் ஒருவகையான குளிர்ச்சி பரவுவதை உணருகிறாள் கிறிஸ்தீனா. கென்னியா சலுக்கி வகையைச் சேர்ந்த பெண் நாய். கிறிஸ்தீனாவின் சுற்றுலாத்தளம் எப்பொழுதும் ஆபிரிக்காவாகவே இருக்கும். அப்படி லிபியாவுக்குப்போன போதே இந்த வகை


உறவுக்கு மரியாதை

 

 காதல் என்பது ஆணும் பெண்ணும் பிறக்கும் போதே மூன்றாவது அனுக்களாய் ரத்தத்தில் உருவாயிடுது. வெளிப்படுத்தும் வயசும் விதமும் ஒவ்வொருத்தர் வாழ்கையில் வெவ்வேறாக அமைகிறது. ஒரு சிலரின் வாழ்க்கையில் காதல் ஊனமடைந்து சலனமின்றி ஊமையாகி விடுகிறது. உற்சாக மிதப்பில் உரக்கச் சொல்ல வைக்கும் காதல் வாலிப வயதினர்களை பாடாய் படுத்துகிறது. காதல் படுத்தும் பாடு சொல்லி வைக்க மாளாது. புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட இந்துவை ஒரு நாற்காலியோடு நாற்காலியாக கைக்கால்களை கட்டிப் போட்டுருந்தனர். மூன்று மணி


எங்கே என் காதல்

 

 ‘தமிழா!! தமிழா!! நாளை நம் நாளை’ என்ற பாடல் செந்திலின் கைபேசி அலாரம் ஒலித்தது. அலாரத்தை நிறுத்திவிட்டு, தினமும் செய்யும் நடைப்பயிற்சியை தொடர்ந்தான். காலையில் மழைத் தூரலில் நனைந்த படியே நடையை தொடர்ந்தான். செந்தில் ஒரு பத்திரிக்கையாளராக வேலை பார்க்கிறான். பெண்ணிய சுதந்திரம், சமத்துவம் போன்ற சமுதாயத்தின் மாறுபட்ட நல்ல சிந்தனை உடையவன். அழகான தோற்றம். எதிலும் சாதாரணமாக தான் இருப்பான். உடை, நடை, பேச்சு எல்லாவற்றிலும் இயல்பாகவும், எளிமையாகவும் நடப்பவன். நேர்மை குணம் கொண்ட அவனை


காதல் கத்தரிக்காய் – ஒரு பக்க கதை

 

 “ஹலோ…” “சொல்லுங்க.., நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்…” “கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்…” “ஓ… தாராளமா…!” “எப்ப கூப்பிடலாம்…?” “இப்பவே நான் ஃப்ரீ தான்… காரை ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க…” “காதலர் தினத்தைப் பற்றி உங்கள் கருத்து?” “காதல் என்கிற உன்னதமான கான்ஸப்ட்டுக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்..!” ஒரு மணி நேரப் பேட்டியில் காதல் குறித்து நவீனன் பேசிய ஒவ்வொன்றும் தேன்மொழிக்கு பிரமிப்பைத்


உனக்கு மட்டும்

 

 பழனிமலையில் கோவிலுக்கு வெளியே தென்புறத்துப் பிராகாரத்தில் உட்கார்ந்து யோசனையில் மூழ்கியிருந்தேன். பின்புறம் கொடைக்கானல் மலைத்தொடர் நீலக் காரிருளின் நடுவே பனியிலும் மேகத்திலும் நெய்த வெண்பட்டுப் போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. கீழே ஊர் விளக்குகள் மினிக்கிக் கொண்டிருந்தன. ஊரின் ஓசைகளும் சந்தடிகளும் எட்டாத உயரத்தில் உட்கார்ந்திருந்தேன். பார்வதி! கதையை மேலே எழுதுவதற்கு முன்னால் உனக்கு ஒரு வார்த்தை. உன்னைப் பற்றித்தான் எழுதப் போகிறேன் என்பதை இதற்குள் நீ புரிந்து கொண்டிருப்பாய். ஆனால் யாருக்காகவோ எதற்காகவோ, எதையோ, எழுதுகிறேன் என்று


சுசீலை

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுசீலை தன் தந்தையின் தூரபந்துவாகிய அம்மணியம்மாள் கூட வசிக்கத் தொடங்கி ஒரு வருஷத் திற்குப் பிற்பாடு தான் இராமநாதனை முதன்முறை சந்தித்தாள். இராமநர் தன் அம்மணியம்மாளுடைய தங்கையின் குமாரன். சுசீலை சிறு குழந்தையா யிருக்கையிலேயே அவள் தாய் இறந்துவிட்டாள். அவள் தகப்பனார் பெருஞ் செல்வவானாயிருந்தார். அவருடைய பண முழுவதையும் போட்டிருந்த அர்ப்பத்நட் பாங்கு திடீரென்று முறிந்து விட்டது. தமது ஏக் புத்திரியை வறுமை