மக்களைப் பெற்ற மகராசி!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 8,016
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு கொடு வேகத்தில் முடுக்கிவிடப்படுகிறது. அருவறுப்பான பிரச்சாரங்களை
படுபயங்கர துறுதுறுப்போடு செய்து வருகிறார்கள்.
“ஒரு தாய் ஒரு சேய்”
“ஒரு குடும்பம் ஒரு வாரிசு”
“நின்று யோசி; ஒன்று போதும்.”
“பிறப்பதைத் தவிர்ப்பது பாவமல்ல, பெற்றபின் தவிப்பது நியாயமல்ல.”
“அதிகம் பெறாதே; அவதிப்படாதே.”
“ஒன்று பெற்றால் ஒளிமயம்; ஒன்றுக்குமேல் அல்லல் மயம்”
இவ்வாறெல்லாம் பேருந்து முதல் பெருவழிப் பாதை வரை, திரைக்காட்சிகள் முதல் சிறைக் கைதிகள் வரை பெரும் பிரச்சாரங்கள் செய்து வருவதைக் காண்கிறோம்.
இதற்கிடையில் ஒரே பிரசவத்தில் மூன்று, நான்கு, ஐந்து என்று பிள்ளைகள் பிறக்கும் செய்திகளை நாளேடுகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்து வருகின்றன.
இந்நாளில்தானே, ரஷ்யாவில் ஒரு தாய் பெரும் சாதனை படைத்துள்ள செய்தி கிடைத்துள்ளது. அவர்களின் ஒலிம்பிக் 88 சாதனையை இங்கு குறிப்பிடவில்லை.
“ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா!” என்று வரவேற்கும் செய்தி.
அதிர்ச்சியடைந்துவிடாதீர்கள். 69 குழந்தைகளைப் பெற்று ஒரு சோவியத்தாய் உலகப் பட்டியலை முறியடித்துள்ளாள்.
அதெப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.
ரஷ்யாவைச் சேர்ந்த வாசிலெட் என்ற மாது 27 பிரசவங்களில் 69 குழந்தைகளைப் பெற்றுள்ளாள்.
16 முறை – இரட்டைக் குழந்தைகள், ஏழு முறை – மூன்று குழந்தைகள், நான்கு முறை – நான்கு குழந்தைகள். இப்பொழுது பெருக்கிக் கூட்டிப் பாருங்கள்.
பிரிதொரு பெரிய உலக சாதனை என்னவென்றால் 69 பிள்ளைகளும் உயிரோடிருக்கிறார்கள்.
மூன்றாவது அதிசயத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது.
சோவியத் அரசு அந்தத் தாய்க்கு “வீரத்தாய்” என்ற பட்டம் வழங்கியுள்ளது. சகல வசதிகளோடு வாழ அரசு வழி செய்து கொடுத்துள்ளது.
பிள்ளைகள் ஜே..ஜே.. என்று வாழ்கிறார்கள் (அந்தத் தாய் 1978ஆம் ஆண்டுவரை வாழ்ந்தாள்).
“அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்…” [நீதிமொழிகள் 31:28]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
