ராஜாராமன் வாங்கின ஒரு பளார் அறை….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 15,219 
 

கேன்டீன் மிகவும் கலகலப்பாகவே இருந்தது ராஜா தான் வழக்கமாக உட்காருகிற டேபிளை பார்த்தான்.

‘மலர் அங்க பாரு .. நம்ம டேபிள்ள ஒரு விஜய் சேதுபதி உக்காந்து இருக்கான் என்ன தெனாவட்டு ….என்ன கலரு…. மயிர் பாரு கட்டையா ஒரு அடியாள் மாதிரி இருக்கான் இல்n.,,,,

‘டேய் ஆரம்பிச்சிட்டியா ….இன்னைக்கு வம்புக்கு ஆள் கிடைச்சாச்சு ….நான் திரும்பி போறேன் ….நான் எந்த பஞ்சாயத்துக்கும் தயாராயில்லை….

‘சாரிம்மா… சாரி சாரி.. கோவிச்சுக்காத தங்கம் l…. நான் எவன்கிட்ட யும்ம்வம்புக்கு போகல …சந்தோஷமா வா……..

தோளைப் பிடித்து தள்ளிக்கொண்டுபோனான்

‘தள்ளாதடா …உனக்கு வெட்கமே இல்லையா…. கையை எடு….

தன் இருக்கைக்கு வந்து மலர் உட்கார்ந்தாள் அந்த விஜய் சேதுபதி எதிரில் உட்கார்ந்திருந்தான்.

.ராஜாராமன் உட்காரவில்லை. ஒரு தடவை காண்டினை கண்களால் அளந்து விட்டு நின்று கொண்டு சத்தமாக ஒரு அறிவிப்பு செய்தான்.

‘அன்பார்ந்த கடன்கார கணிப்பொறியாளர்களே கனியாத பொறியாளர்களே எனக்கு ஆறு மாதமாக வட்டி தராத பெரிய மனுஷன் களே …இன்னிக்கி எனக்கு கேண்டீன் பில் தர மலர் ஒத்துக்கல..ஆகவே ஆறு மாசமாக வட்டி தராத புண்ணியாத்மாக்கள் கல்லாவில் 500 ரூபாய் கொடுத்து இன்னும் 6 மாசம் வட்டி சலுகை பெற கேட்டுக்கொள்கிறேன் தவறினால் காலையில் உங்கள் மேலிடத்துக்கு செய்தி பகிரப்படும் ….டும் டும் டும் டும்….…

இருக்கையில் உட்கார்ந்து ராஜாராம் எதிரில் இருந்த ஆளைப் பார்த்து புன்னகைத்தான்

‘தப்பா நினைச்சுக்காதீங்க சார் இதுல பாதி நாய்ங்க என்னை ஏமாத்துறாங்க…. இன்னும் பாதி நாய்ங்க என்னை ஏமாற்ற நேரம் பார்க்கிறாங்க…இப்ப பாருங்க கல்லாவுக்கு ஆயிரம் வந்துரும் எப்படி மலரு ஐடியா…

‘மலர் அவன்கால்களை மிதித்தாள் அதற்கு அர்த்தம்’ கொஞ்சம் பொத்திகிட்டு இரு….…

‘சரி சரி…

ஒருத்தன் எழுந்து வந்தான்.. ‘உனக்கு அறிவு இருக்கா…நீ எல்லாம் ஒரு என்ஜினியர் ஏன்டா இப்படித்க நடக்க உனக்கு வெக்கமா இல்ல …’

‘மச்சி பத்து பேர் கடன் கொடுக்கணும் எவனாவது வட்டி தருவான்ணு நினைக்கிறயா.. ஒரு பருப்பு வேகாது ஆமாம் … ஒரு சமாச்சாரம் தெரியுமா… உன் பாட்டியோட அம்மா எங்க பாட்டிக்கு ஆயித்து தொளாநிரத்திஇருபதிலே ஒரு ஆயிரம் வாங்கி இன்னம் திருப்பி தரல்லியாம் கல்லாவில் போய் ஒரு ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போ… வட்டி வேண்டாம் கட்ன் தீரட்டும்்… அப்புறம் அவனுங்களுக்கு வக்காலத்து வாங்கு. என்று சொல்ல”அவன் நீ சுண்ணாம்பு காளவாயில் விழுந்து சாவே… நீ சரியான புளுகினி … இவன் பக்கத்திலே உட்காராதிங்க ஸார் … செலவு வைப்பான்.இவனை நம்பிராதீங்க காண்டாமிருகம் முட்டை போடும்னு ஆபிஸையே நம்ப வச்சான்…

‘இரு … இரு .. இப்ப சொல்றன் … காண்டா மிருகம் மாத்திரமில்ல ஒட்டகம் கூட முட்டை போடும் … ஏண்டா … நீங்கள்ளாம் டிஸ்கவரி சேனல் பாக்கவே மாட்டீங்களா…நேத்து ஒட்டகம் முட்டை போடுற தூ காமிச்சான்..சூப்பர்…

‘உடாத…அவ்வளவு பெரிய மிருகம் முட்டை போடுமா என்னன….…என்றாட் சந்தேகமாக…’

‘போடாமயா காமிச்சான் … மச்சான்… டைனோஸாரும் ஒட்டகமும் ஒரே பேமிலி…நீ கலிபோர்னியா போனபோது டைனோஸார முட்டைஊ பார்த்தேயில்லே…ஒட்டகம் முட்டை
அதவிட அஞ்சு மடங்கு கம்மியா இருக்கும் … ஓகேயா…

“டேய் மாப்ளே … போன தடவை நீ காண்டாமிருகம் முட்டை போடும்னு சொன்னனத அப்பாகிட்டட சொன்னேன் ஒரே.. களேபாஆயிருச்சி …’சண்டாளப்பாவி ங்களா பையைனை கம்ப்யூட்டர் படிக்க வக்காதேன்னு சொன்னேனே எவளாவது கேட்டாளா.. இப்பப இவ்ன் இப்பிடி பித்து பிடிச்சி நிக்கறானே … ஈஸ்வரான்னு ‘புலம்பி தள்ளிட்டார்.. இப்ப ஒட்டகம் முட்டை போடும்னு சொன்னா என்ன செய்வாரு தெரியுமா……

‘என்ன செய்வாரு உன்னை கீழ்ப்பாக்கம் அனுப்பிடு வாரோ…

அப்பிடி செய்ய மாட்டாரு… அவரே பொண்டடாடிநோட அதாவது எங்கம்மாவோட கீழ்ப்பாக்கம் போயிடுவாரு… மாப்ளே இந்த கார்டை வச்சசி உன் வட்டி முதல் எல்லாம் எடுத்துக்கோ … என் வாழ்க்கயோட விளையாடாதே … என் பொண்டாட்டிகிட்ட ஒட்டகம் முட்டை போடும்னு சொன்னாஅவஎன்னைடைவோர்ஸ்பன்னிடிவா…..என்னைவிட்டிருடா.நான்பாவம்டா.குடும்பத்தில் குழப்பம் பண்ணாதடா…என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்…டேய் முண்டயா நீ ரத்தம் க்ககி சாவ… உனக்கு குஷ்டம் வரும்…

எதிரிலிருந்தவிஜய்சேதுபதியிடம்வாயைக்கத்தான் ராஜா….

‘இதெல்லாம் இங்கே ரொம்ப சகஜம் சார்… பை த வே ஐ அம் ராஜாராம் இது மலர்கொடி எங்க ஏரியா ஐஸ்வர்யா ராய்…

‘டேய் ….என்று பல்லைக் கடித்தாள் மலர்

‘கைகொடு மலரு சார் எனக்கு கை கொடுத்துட்டாரில்ல உனக்கு கை நீட்டறாரரில்லே தமிழ்பண்பாடுதெரியுமில்லேக உனக்கு நீ அவருக்கு நீகை-கொடுக்கணும்மா….தத்தி மாதிரி இருக்க’

ஒரு மிதி மிதித்து விட்டு எரிச்சலுடன் கையை நீட்டினான் மலர்.

‘சார் உங்க பேர் சொல்லலையே….’ என்றான் ராஜா

‘பிச்சை..’

‘சார் உங்க தொழிலை கேட்கல…. பேர தான் கேட்டேன்’…

‘பேர்தான் சார் பிச்சை….’ என்றான் அந்த விஜய் சேதுபதி

‘டேய் ஏதாவது வம்பு செஞ்சு டாத ‘என்று அவன் காதில் முணுமுணுத்தாள் மலர்.

‘விடு மலரு ஒரு தமாஷ்தான.. சார் உங்க பேர் பிக்சை உங்க அப்பா பேர் இன்னும் தமாஷா இருக்குமோ….

எங்க அப்பா பேரு ஆண்டி… என்றான் நம்ம விஜய் சேதுபதி

‘அப்படி போடு.. நல்லா பேர் வச்சாங்க சார் அப்பன் பேரு ஆண்டி மகன் பேரு பிச்சை தப்பில்லை …. சுந்தர் பிச்சை ன்னுபேரு வச்சிட்டு உலகமே அதிருதில்ல இப்போ நம்ம அப்பா என்ன உத்தியோகம் சார்……..

‘அது பெரிய தமாஸ் .. இந்த வேலைதான் செய்யறார்ன்னு கிடையாது கை ரிக்ஷா வலிச்சார் அப்புறம் சைக்கிள் ரிக்ஷா

‘அப்புறம் வக்கீல் ஆயிட்டாரலோ….
..
இல்லயில்ல அவரு ரொம்ப நேர்மையான ஆளு..பத்து நாள்முன்னாலபாதாளசாக்கடைகிளீனபணபோயிட்டார ….பார்த்து போய் இழுத்துட்டு வந்து இரண்டு மணி நேரம குளிப்பாட்டி ரெடி பண்ணுனாங்க….

‘ கப்படிச்சதேன்னு பார்த்தேன் …ரெண்டு மணி நேரம் பத்தாது சார் ரெண்டு வாரம்ஆகலாம்..மொத்தத்துல படிப்ப இல்லாத ஆள்அபப்கைநாட்டுன்னும்சொல்லலாமாஇல்ல….

‘ஒரு வகையில…..நீங்க சொல்றபடி பார்த்தா எங்கப்பா படிக்காதவர் ,,,ஆனால் அவருக்கு ஏழு லாங்குவேஜ் தெரியும்பலதொழில்தெரியும் இன்னைக்கும்ப டிக்காதஅவரால படித்தவனை விட அதிகமா சிந்திக்க தெரியும் நல்லசிந்தனை உள்ள எவனுக்கும் படிப்பு அவசியமா என்ன….

‘அது சரிதான் படிக்காத படிக்க முடியாத எல்லாரும் சொல்ற வசனம் இதுதான் அது விடுங்க உங்க அம்மா எப்பிடி அவங்களும் கைநாட்தானே அவங்களுக்கும் நிறைய சிந்திக்க தெரியும் அப்படின்னு சொல்லப் போறீங்களா.என்ன….

கரெக்டா சொன்னீங்க எங்கம்மா பெரிய சிந்தனைவாதி.. தமிழ்ல இங்கிலீஷ்ல ஹிந்தில சமஸ்கிரதத்தில் பெரிய படிப்பாளி பிரின்ஸ்பால் வரை போனாங்க….

எதுக்கு பிரின்ஸ்பால் ரூமை கூட்டி பெருக்கவா… .,,,

‘இல்ல ஸார்அவங்கநெஜம்மாவேபிரின்ஸ்பால்..

‘ஐயோ மலரு தாங்க முடியல எந்திரிச்சு ஓடி விடலாமாஎன்னைவிட பெரிசா ….விடுவான் போல….இவங்க அம்மா அமெரிக்கா போனது ஜெர்மன் போறாதுன்னு கூட விடபோறான் என்று மலரின் காதில் கிசுகிசுத்தான் ராஜா … வா .. ஓடிடலாம் என்ன…..

‘வேணும்டா உனக்கு எத்தனை பேர கலாய்ச்சசு இருப்பேன இப்ப சிக்கினியா…. மவனே நீ சாகுறது நான் பாக்கணும் டா இருந்து இத ரசிக்கிறேன் இன்னிக்கு நீ செத்த..என்று கிசுகிசுத்தாள் மலர் …..

‘அது சரி சார் இவ்வளவு படிச்ச உங்க அம்மா அதுலயும் ஒரு பிரின்ஸ்பால்….எப்படி சார் கை ரிக்ஷா இழுக்குற ஒருத்தனை கல்யாணம் செய்துகிட்டங்க….ரொம்பதமாஷாஇல்லை….அதான் எங்க ஆத்தா சந்தேகம்…….

‘ஐயோ நான் எதுவும் கேட்கலை… என்றாள் மலர்

தேட்டாலும் தப்பில்லை. விடுங்க ..அம்மா பிரியபட்டாங்ககல்யாணம்செய்துட்டாங்க ஆதுல ஆச்சரியம் என்னன்னா அப்பா அம்மாவை கட்டிக்க ஒத்துக்கவே இல்லைஅம்மாதான் பிடிவாதமா ரெண்டு வருஷம் காத்திருந்து ஒரு ஆட்டோ டிரைவரை படிக்காதவனை குப்பத்தில் இருந்த ஒருத்ஒருதர்ரைதீர்மானமாயஇருந்துகல்யாணம்பண்ணிட்டாங்க….அதைவிடமுக்கியம் அப்பாவை இப்பவும் உயிரக்கு உயிரா அம்மா வச்சிருக்காங்க….

அதுல பாருங்க அப்பா சரியான தண்ணி வண்டி

‘ஆஹா அது வேறயா கிரேட் கேக்க நல்லாத்தான் இருக்கு ஆனா நம்ப முடியலையே ….ஒருவேளை உங்க அம்மா பார்க்க அழகா இல்லாம பல்லு எல்லாம் தூக்கி அசிங்கமா இருப்பாங்களோ என்றான் ராஜா..

‘டேய் ..ஓவரா போற… என்று கிசுகிசத்தாள் மலர்..

‘அப்படி இல்லை அம்மா பார்க்க ரொம்ப அழகா இருப்பாங்க இப்ப சொன்னீங்களே அது மாதிரி அவங்க வயசுல அந்த ஐஸ்வர்யாராய் மாதிரி ஏன் இன்னும் அழகா கூட இருப்பாங்க…..…

‘யபடிச்சிருக்காங்க ரொம்ப அழகா இருக்காங்க ஆனால் ஒரு படிக்காத ஒரு சாதாரண ஆள எப்படி சார்கல்யாணம்செய்துட்டாங்க…

.மலரு ஒருவேளைஅந்த பிளட்டானிக் லவ்வுன்னு சொல்றாங்ங்களே அது தெரியுமா உனக்கு,,…,

‘என்னை எதிலாவது இழுத்தா செருப்பால அடிப்பேன்.. என்று கிசுகசுத்தது ஒரு மிதி மிதித்தாள் மலர்
..
மலருக்கு டைட்டானிக்தான் தெரியுமாம் …பிளட்டானிக் தெரியாதாம்… அட …ரெண்டும் ஒன்னுதான் மலர்… ஐயோஅங்ககிள்ளாத…..
.
பிச்சை எதுவும் தெரியாத மாதிரி ஆரம்பித்தான் ‘அப்பாவுக்கு கூடஅம்மாபெரிய இடத்துக்குபோகணும்னுஆசைஅப்படித்தான் அம்மாகிட்ட அவர் சொல்லுவாராம் அம்மா தன்னுடைய ஆசையை அப்பாகிட்ட சொன்னபோது அப்பா அளவில்லாத கோபப்பட்டாராம் … ஏன் ஒன்னு ரெண்டு தடவை அம்மாவை அடிக்க கூட போய் விட்டாராம் உன் மூஞ்சில முழிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லி ஆறு மாசம் ஒதுங்கி இருந்தாராம்…

‘…..ஒருவேளை அப்பாவுக்கு அம்மாவைப் பிடிக்கலையா…. என்று கேட்டான் ராஜாராமன்

‘இல்ல அம்மா மேலே அப்பாவுக்கு அளவில்லாத பிரியம் …சொல்லக்கூடாது அது எதையும் தாண்டி பனிதமானது..… ஓ.கேயா….தன்னாலே அம்மா ஒரு துளி கண்ணீர் விட்ற சூழ்நிலை வரக்கூடாதுன்னு அவர் அம்மாவை தவிர்த்திருக்கிறார் ,,,,, அப்பா எவ்வளவு பெரிய ஆத்மா தெரியுமா அது புரிஞ்ச அம்மா எனக்கு ஒரு சத்தியமான ஆம்பளை போதும் … படிப்பும் சம்பாத்தியமும் நாகரிகமும் எனக்கு வேண்டாம் அவர் அப்படி இருக்கிறதே எனக்கு பிடிக்கும் அப்படின்னு சொல்லி கல்யாணம் செஞ்சுட்டாங்க…..

‘கிரேட் ரியலி கிரேட் ஆனா உங்க அம்மா பார்க்க அவ்வளவு அழகா இருப்பாங்களா என்ன…

‘அழகா ….எங்க அம்மா தேவதை மாதிரி இருப்பாங்க எப்படின்னு கேட்டா இதோ இவங்க மாதிரி அழகா இருப்பாங்கன்னு சொல்லலாம் ஓகேவா…..

சுருக்கென்று உறைக்கது மலருக்கு … ஏதும்ம் புரியாமல் சட்டென்று பிச்சையை வெறித்தாள் கொஞ்சம் கோபம் வந்தது..ஏன் இந்த ஆள் என்னை இழுக்கனும்.. இது நாகரீகம் இல்லையே.. இந்த நாய் ஏன் கம்முனு இருக்கான் …

‘சரி சார் அம்மா படிச்சவங்க அப்பா ஒரு பெரிய ஞானி நீங்க என்னதான் படிச்சீங்க எங்க படிச்சீங்க….

‘ஜஸ்ட் ஒரு கார்ப்பரேஷன் ஸ்கூல்ல ஃபைனல் வரை படிச்சேன்….

‘அப்புறம் ஒரு கார் மெக்கானிக் ஆயிட்டீங்க சரியா … உங்கள ஒரு மெக்கானிக் ஷெட்டில் பார்த்தேன் எங்க வண்டிய ஒரு சின்ன ரிப்பேர் செஞ்சு தந்தீங்க ….நூறு ரூபா கூட தந்தேன் சரியா.

‘வாஸ்தவம் அது என் ஹாப்பி ….அது என் தொழில் இல்ல…. அப்புறம் பிலானி அங்க போய் பி டெக் முடிச்சேன்….

‘என்னது பிலானியா … ஒரு போன் வர ‘ ஒரு நிமிஷம் ….என்று சொல்லிவிட்டு பிச்சை நகர்ந்தான்…

‘மலரு போதும் இவன் ராயப்பேட்டையில் மெக்கானிக் இவங்ங்கப்பன் ரிக்சாக்காரன் இல்லை ஆட்டோ ஓட்டுறவன் இவன் ரொம்ப ரீல் விடுறான் தாங்க முடியல…. இன்னிக்கு காப்பியே வேண்டாம் …. இரு அவன் அந்தப் பக்கம் போய் இருக்கான் நாம இப்படியே தப்பிச்சு ஓடிடலாம் என்று ராஜா சொல்லி அவள் கையை பிடித்து இழுத்தான். .

‘டக்கென்று ராஜாவின் காலை மிதித்தாள் மலர் அதற்கு அர்த்தம்’ வாய மூடிட்டு இருடா ….

போன பிச்சை அரை நிமிடத்தில் திரும்பி வந்தான்.

‘இருமலர் ….பையன் வீட்டோட வர்றான் அவசரப்படாதே ….சார் சொல்றாரு …. ஒரு தேவதை சாக்கடை வழிக்கிறவரை இஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சுகிட்டதா சொல்றாரு…. நான் இவரை மெக்கானிக்கா பார்த்தேன்…. இப்ப இல்லைங்றார்…. சார் கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்க சார்….

‘டேய் என்று அவன் தொடையில் கிள்ளினாள்
மலர்.

‘இருமலர் ஒரு மனுஷன் ஏதோ கேட்பதுக்கு என்ன சொன்னாலும் நாம அப்பிடியே நம்ப முடியாதில்லல.. அவரையே கேட்கிறதுலே தப்பு என்ன இருக்கு…. சரி சார் பிலானியில் படிச்சீங்க அப்புறம் என்ன செஞ்சீங்க…பெரிய சைன்ணிஸ்ட் ஆயிட்டூங்களோ…..

‘சரி நா சொன்னீங்க… படிச்சு அப்புறம் ஸ்டேட்ஸ் போனேன் …நிறைய படித்தேன்… ரொம்ப நிறைய படிச்சேன் படிச்சிட்டிருக்கேன்….

‘அது கிடக்கட்டும் வேலை.. அங்க நாசாவிலே இருக்கீங்களா என்ன…

‘ கரெப்டடா சொன்னீங்க நான் நாசாவில சைன்டிஸ்டடா இருக்கேன்…

‘அப்பிடிப்போடு…சம்பளம் என்னகிடைக்கும்…

‘சம்பளம் கிடையாது ஒரு ப்ராஜெக்ட் டிசைன் பண்ணா அஞ்சு கோடிமாதிரிகூடகிடைகலாம் ……

பிச்சைக்கு மறுபடி ஒரு போன் வர’ ஒரு நிமிஷம் …என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்

‘மலர் உலகத்துல பெரிய பெரிய ப்ராடுகளை பார்க்கலாம் இவனை விட பெரிய பிராடு பார்க்க முடியாது ராயப்பேட்டையில் ஒரு டண்டனக்கா பட்டறையில் கார் மெக்கானிக்கா இருக்கான் … விட்டா எனனைக்கூட மீறீடுவான் போல நித்தி ரேனசுக்கு பேசறான் …அம்மாடியோ… வா தப்பிச்சி போயிடலாம் அல்வாவும் வேண்டாம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம் … இங்க இருந்தா இவன் நம்மை மாத்திடுவான் ஓடிப் போலாமா….

‘இருடா இந்த ஆள் கதையில ஒரு சுவாரசியம் இருக்ககு கொஞ்சம் இருந்து கேட்கிறதுல என்ன கெட்டுப் போச்சு… அவன் எவ்வளவு தூரம் போறான்னு பார்க்கலாமே விடு …கெட்டிக்காரன் புளுகு எட்டு நிமிஷத்துல …எப்படி இருந்தாலும் கொஞ்ச நேரத்துல இவன கண்டுபிடிப்போம்… ஏன்டா நம்மைச் சுற்றி இத்தனை எஞ்சினியர் இருக்காங்களே அவங்க எல்லாம் இளிச்சவாயனா …. ஒரு நிமிஷம் கவனிப்போம் என்ன…

‘இவன் சொன்னதை நம்ப முடியாது மலரு… அம்மா தேவதையாம் அவங்க சாக்கடை வழிக்கறவனைகல்யாணம்பண்ணிககிட்டாங்களாம்…அதுவும்அவனைகட்டாயப்படுத்தி….. இவன் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்சி பிலானிவரை போவானாம்…..நாசாவில் ப்ராஜெக்ட் பண்றானாம் ….எனக்கு ட்ரம்பையே தெரியும்னுட கூட சொல்லு வான் போல இருக்கு மலரு எனக்கு பயமா இருக்கு இந்த மாதிரி பசங்கள நம்ம பக்கத்திலேயே வைக்ககூடாது….வாஓடிரலாம்…ஸெண்டிமென்டலா அம்மா அப்பா பேரைச்சொல்லி இவன் கவுத்துடுவான்னு பயமா இருக்கு மலரு……

‘இருடா அவன் வந்துட்டான் பஜ்ஜி வேற வந்திருச்சி ….

‘வாங்க சார் உக்காருங்க… உங்களுக்காக ஸ்வீட் எல்லாம் வந்திருக்கு இன்னைக்கு பில் நீங்க தருவீங்க ஏன்னா அஞ்சுகோடி பத்து கோடி சம்பாதிக்கிறேன்னு சொல்றீங்க நீங்க கலிபோர்னியாவில ரெண்டு ரோல்ஸ்இருக்கு பெரியமாளிகைஇருக்கு பத்துவேலைக்காரங்க இருக்காங்க இப்படி எல்லாம் சொன்னா கூட எனக்கு கவலை இல்லை… ஏன்னா எனக்கு இன்னைக்கு கேண்டீன் பில் கொடுக்க ஒரு ஆள் வேணும் ஓகே யா…அப்புறமு அந் அல்வாவை வாயிலே போட்டுக்குங்க அப்பத்தான் ஒரு பத்து நிமிஷம் பேச முடியாது.எங்களுக்கு யோசிக்க வும் நேரம் கிடைக்கும்… ஆமா உங்களுக்கு கொறஞ்சது ரெண்டு ரோல்ஸ் மாளிகை பாதிரி வீடு இதெல்லாம் இருக்கனுமே…

‘ஆமாம் பார்த்த மாதிரி சொல்றீங்க ஆனா நீங்க என்ன நம்பல்லையா என்ன…ஒரு மாதிரியா சிரிக்கறீங்க…..

‘எப்படி ங்க நம்பறது எத வச்சி நம்பரது…

‘நம்ப வேண்டாம்… எனக்கு அது கட்டாயம் இல்லை நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன் நிச்சயம் உங்க பில்ல கொடுக்கிறேன் ஓகே யா…

‘சரி சார் நம்பறது அப்புறம் வெச்சுக்கலாம் ஸ்டேஸ்னிலிருந்து இப்ப எங்க வந்தீங்க எதுக்கு வந்தீங்க….

‘அம்மா வரச் சொன்னாங்க… இந்த தடவை கல்யாணம் ஆனா ….ஆனா என்ன ஆகணும் அது முடிஞ்ச பின்னாடி தான் நீ ஸ்டேட்ஸ்போகணும் அப்படின்னு உறுதியாசொல்லிட்டாங்க இப்போ அவங்க சொல்றத கேட்கவேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கேன்….

‘ஏன் சார் உங்கள மாதிரி இவ்வளவு பெரிய ஆளு இந்தியாவிலேயோஅமெரிக்காவிலேயோ எப்படி சார் விட்டு வச்சாங்க…..

‘நிறைய பேர் …எவ்வளவோ ஆஃபர்ஸ் ….ஒரு மூனு மாசம் முன்னே ஹாலிவுட்ல இருந்து ஒரு பெரிய ஸ்டார் நேரா கேட்டா ….எனக்கு ஐநூறு கோடி சொத்து இருக்கு அது முக்கியமில்லை உன்னை மாதிரி ஒருத்தன் இருந்தா அது அதை விட பெருசு ….சொல்லு நாளைக்கே மோதிரம் மாத்திக்கலாம் அப்படின்னு கேட்டா அது மாதிரி நிறைய பேர் ….எனக்கு யாரையும் பிடிக்கல… ஏன்னும் தெரியல….

‘இந்த கரு முண்டம் மூஞ்சிக்கு ஹாலிவுட் ஸ்டார் …ம்ம்ம் … மவனே உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்ல …என்று மலரிடம் கிசுகிசுத்தான் ராஜா

‘சரி…சார் இப்போ உங்க அம்மா கட்டாயத்துக்காக நீங்க யாரையாவது பன்னிக்க வேண்டி வரலாம் ..அப்ப என்ன செய்வீங்க…

யஅவங்க சுதந்திரமானவங்க யாரையும் கட்டாயப்படுத்த மாட்டாங்க… அவங்கவங்க யோசிச்சு முடிவு பண்ணு அப்படித்தான் சொல்லுவாங்க இப்போ கூட ஒரு பெண்ணை பார்க்கத்தான் என்னை அனுப்பினாங்க…

‘அட அது வேறயா அவள பார்த்தீங்களா என்ன..

‘பார்த்தேன் எப்படியும் அந்தப் பெண்ணைப் பார்த்துஇப்பகல்யாணம்வேண்டாம் எனக்கு இதிலே இஷ்டமில்லைன்னு சொல்லலாம்னு தான் வந்தேன்…

‘அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க சார் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு….

‘அந்தப் பெண்ணை பார்த்ததும் மனசு மாறிட்டது …. ஒரு கம்பீரமான அழகு ..,பார்வையிலே .ஒரு ஆளுமை …ஒரு கருணை எங்க அம்மா மாதிரி அவளும்…ஒரு அழகு தேவதை மாதிரி அவ நடந்து வந்தபோது அவ எனக்காகவே காத்திருந்த மாதிரி …. ஸாரி அவளுக்காக நான் கல்யாணம் செய்துக்க்காம காத்திருந்த மாதிரிஒருஉணர்வு..பார்த்துபுல்லரித்துப் போனேன் …. அப்பிடி ஒரு அழகு… ………போட்டோவில்பார்த்தபோதஅவ்வளவு புரியல …நேரில் பார்த்தபோதுதான் அவளோட அழகு புரிஞ்சது….

‘ஆஹா ….அந்த பொண்ணு கிட்ட உங்க எண்ணத்தை சொல்லிட்டீங்களா….

‘ சொன்ன மாதிரிதான்…..

‘ இன்னமும் சொல்லலையா சொதப்பட்டீங்க ஐயா படிச்சத்வங்களே இப்பத்தான்ஸார் …… இப்ப தெரியுது சார் நீங்க படிச்சு இருக்கலாம் அதனாலதான் ஒரு பொண்ணுகிட்ட உங்க அபிப்ராயத்தை நேரடியா உங்களால சொல்ல முடியலை ….அந்த பொண்ணு எப்படி இருப்பா சார் எங்க மலர் மாதிரி இருப்பாளா.

மலர் கோபத்துடன் ராஜாவிடம் திரும்பினாள்

‘மாதிரி இல்லை மலரரேதான் அந்த பொண்ணு போதுமா … மலரை பார்க்கிறவரை என் மனசிலே எந்த எண்ணமும் வரல்லை… இப்ப தெரியுது இந்த மாதிரி ஒரு சந்திப்புக்கு தான் கடவுள் என்னை காக்க வைத்ததுன்னு ……

திடீரென்று இதைக்கேட்டதும் உடல் உதறியது மலருக்கு .என்னை பார்க்க இவன் வந்திருக்கிறான் என்னை பிடித்து இருக்கு என்று சொல்லுகிறான் .இது மாதிரி நூறு பேர்கள் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் இப்போது ஒன்றும் புரியவில்லை .யார் இவன் என்னை பார்க்க சொன்னது யார் திடீரென்று எந்த அடிப்படையில் அறிமுகமில்லாத ஒருத்தன் பொய்சொல்கிறானா நிஜமாகப் பேசுகிறானா புரியவில்லை . யார் கொடுத்த தைரியத்தில் ….இவன் என் எதில் உட்கார்ந்து பேச முடிந்தது.. எதறகெடுத்தாலுடம் எகிறும் இந்த ராஜா ஏன் திருடன் மாதிரிசிரிக்கிறான்… என்னவோ நடக்கிறது இங்கே….உடல் நடுங்கியது மலருக்கு சட்டென்று முகம் சிவந்தது.

பக்கத்தில் இருந்த ராஜா மலரின் கையை ஆதுரமாய் அழுத்தினான்.

‘மதர் மச்சி பேசுனது எல்லாம் நிஜம்… ஒரு வார்த்தை பொய்யில்லை…. இவரை இங்கே வரவழைத்தது நாங்க தான் …..அக்கா அத்தை அம்மா எல்லாரும் தான்…. உனக்கு மாப்பிள்ளயா இவரை முடிவு பண்ணி இருக்கோம்… ஓகேயா… மச்சி நீங்க பேசுங்க ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வரேன்….

ராஜாராமன் அகல மலர் பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள் .எதிரிலிருந்த பிச்சையை பார்க்க அவள் மனம் துணியவில்லை மெள்ள பிச்சை ஆரம்பித்தான்.

‘மலர் உன்னை நான் ஒருமையில்கூப்பிடறேன் ஏன்னா நான் ராஜா குடும்பத்திலே ஒருத்தன் மாதிரி..என்னை நீ வேண்டாம்னு சொல்ல எந்த காரணமும் இல்லை பத்து நிமிஷம் இல்லை ஒரு கால்மணி நேரம் முன்னாடி எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. இப்போ ஒருவேளை நீ என்னை வேண்டாம்னு சொல்லிட்டா ரொம்ப சங்கடப்படுவேன்னு எனக்கு புரியுது.. இது எப்படி இருக்கும்னா ரிஷ்யசிருங்கர் முதமுதலா ஒரு பெண்ணைப் பார்த்து அதிசய பட்ட மாதிரி நான் என்னை யோசிக்ககறேன் ஏதாவது பேசு மலர் கொஞ்சம்அதிர்ச்சியா இருக்கா…..

மலர் ஒட்டிப்போயிருந்த உதடுகளை கஷ்டப்பட்டு பிரித்தாள்.

‘வாஸ்தவமாக சொல்றதானா கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு…. கொஞ்சம் நம்ப முடியல திடீர்னு எதிர்பார்க்காமல் ஒரு மின்னல் தாக்கின மாதிரி உணர்றேன் …எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… எப்படி ஒரு வாழ்க்கை+ பிரச்சனையை ஒரு நிமிஷத்திலே முடிவு பண்ண முடியும் ….ராஜா குடும்பம் சம்பந்தப்பட்ட இருந்தா அது நல்ல விஷயம் தான்…. ஆனா சட்டுனு நான் எப்படி முடிவு எடுக்க முடியும் ….உங்களை எனக்கு தெரியாது ,,,,நீங்க சொன்னதெல்லாம் சுவாரசியமா இருக்கு…. நீங்க சொல்றத பாத்தா அம்மா ரொம்ப பெரியவங்களா தெரியுது அப்பாவும் ரொம்ப பெரிய மனுஷனா தெரியுது …எல்லாம் சரி எப்படி சட்டுனு நான் முடிவு சொல்ல முடியும்……

‘என்னால புரிஞ்சுக்க முடியுது ….என் மனசை சொல்லிட்டேன் இப்படி சொல்ல முடிஞ்சது எனக்கு ஆச்சரியமா இருக்கு என் வாழ்க்கையிலே இப்படிப் பேசினது இதுதான் முதல் தடவை அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுபோ வாங்க…. ரொம்பசந்தோஷமும்படுவாங்க ….அவங்க எல்லாம் உன் பதிலுக்காக காத்து இருக்கலாம்தான்.. ..சரி …நாளைக்கு போன்பண்றேன் நிதானமா பேசலாம் சரியா….

ராஜாராமன் திரும்பி வந்தான் ‘என்ன’ மச்சி பேசிட்டியா….

‘நான் பேசிட்டேன் …. அடுத்து மலர் தான் சொல்லணும் ….நாளைக்கு மறுபடியும் பேசுவேன்…. நான் புறப்படட்டுமா …அக்கா அம்மா கிட்ட அத்தைகிட்ட விஷயத்த சொல்லு.. தேங்க்ஸ் மலர் நான் புறப்படுறேன்…

கம்பீரமாக எழுந்த பிச்சை வாசலுக்கு நடந்தான்.

‘ஏண்டா இதெல்லாம் முன்னாடியே நீ எனக்கு சொல்ல வேண்டாமா….

‘சொல்லலாம் நீ என்ன சொல்லுவே ….வழக்கமான உன் தோரணையில் பேசுவே வேலை ஆகாது ….இது உன் குடும்பத்தோட கலந்து எடுத்த முடிவு அவன் வாயாலேயேஅவன்குடும்பத்தைபத்திகேட்டுட்ட.. ரொம்ப அந்நியோன்னியம் உள்ளவங்க சரியாக சொல்லப்போனால் அவன் எனக்கு ஒரு அண்ணன் மாதிரி …நான் அமெரிக்காவிலே அவன் கிட்ட தான் ப்ராஜெக்ட் பண்ணேன் அளவில்லாத படிப்பு அற்புதமான குடும்பம் எங்க தேடினாலும் இவனை மாதிரி கிடைக்காது …. அது புரியுதா உனக்கு உன்னை ரொம்ப கசக்கக் கூடாது ….நிதானமா யோசிச்சு நாளைக்கு அவனுக்கு பதில் சொல்லு … ம் ..அப்புறம் ஒரு விஷயம் சொல்லட்டுமா மலர் …. .. வா … நடந்துட்டே பேசலாம்…நான் சோல்றதுக்காக என் மேல நீ கோப்பபடலாம்…

‘என்ன என்கிற மாதிரி பார்த்தாள் மலர்.

‘எனக்கு ஒரு அக்கா இருந்தாங்க உன்ன மாதிரி ரொம்ப அழகா இருப்பாங்க… அவங்க ரொம்ப நாள் கல்யாணம் செய்துக்கலை … எனக்கு அப்போ புரியற வயசு ஒரு நாள் அவங்க ரொம்ப வருத்தத்தோட இருந்தாங்க அப்போ ஒரு விஷயம் சொன்னாங்க….’ டேய் ராஜா நான் கல்யாணம் செய்து க்கலைன்னு எல்லாம் திட்டுறாங்க ஆனா ஒரு விஷயம் கவனி… நான் ரொம்ப அழகா இருக்கேனா,,, அதோடு ரொம்ப சுத்திமானவளா கூட இருக்கேன்.. நாளைக்கு ஒருத்தன் வருவான்…. கல்யாணம் செய்துக்்குவான் இவ்வளவு அழகான பொண்ணு எவனாவது விட்டு வைத்திருப்பானா அப்படி இப்படி இருந்திருக்கலாம் தான் அப்படின்னு ஒருநாள் பேசுவான் …அன்னைக்கு என் மனசு உடைந்து விடும் அப்புறம் அவன் கூட வாழவே பிடிக்காது…. இதெல்லாம் எதுக்குன்னு தான் நான் கல்யாணமே செய்துக்கலை… நான் சொல்றது உனக்கு புரியுதா….’ அப்படின்னு கேட்டா……

‘ஆமா இதையே ன் என்கிட்ட சொல்ற இப்ப..

‘ஏன்னா உனக்கும் அதே மன நிலை இருக்கலாம் அதான் உன்னால கல்யாண விஷயத்துல சட்டுனு முடிவெடுக்கமுடியவில்லைன்னுநான்நெனைக்கிறே்ன…சரிதானா…

ஒரு நிமிஷம் அவனை எரிக்கிற மாதிரி பார்த்தாள் மலர் .சட்டென்று அவனே எதிர்பார்க்கமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

‘என்ன தைரியம் உனக்கு…. இதோட உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை என் மூஞ்சில நீ முளிக்காதே… என்று சொல்லிவிட்டு சட்டென்று வேகமாக ஆபிசுக்கு நடந்தாள்.

ஒரு நிமிடம் திகைத்து ராஜாராமன். மெல்ல அவள் பின்னே நடந்த போது சிவு வந்தான்.

‘என்னடா செஞ்ச மலர் கிட்ட …என்ன சொன்ன அவை ஏன் உன்னை அடிச்சா…

‘அதுவா உண்மையைச் சொன்னேன்…’

அவ்வளவுதான்.. கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ராஜா தன் இருப்பிடத்திற்கு வந்த போது அவன் அடி வாங்கின விஷயம் வைரலாகி இருந்தது…

(அடுத்த தொடரில் முடியும் ..)..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *