போலீஸ் என்கவுண்ட்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,671 
 

” உங்களை ரவுண்ட் அப் செஞ்சிருக்கோம். வெளியே வந்துடுங்க. இல்லாட்டி ஃபயரிங் செய்ய வேண்டியிருக்கும்”

“வேளச்சேரி பேங்க் ராப்ரி, தாம்பரம் காலேஜ் பொண்ணு ரேப் அண்ட் மர்டருக்காக உங்க நாலு பேரையும் அரெஸ்ட் செய்ய ஆர்டர் இருக்கு. நீங்க கோ-ஆப்ரேட் செய்யலைண்ணா என்கவுண்ட்டர் செய்வோம்”

“அசிஸ்டெண்ட் கமிஷனர் பேசறேன். உங்க உயிருக்கு நான் க்யாரண்டி. கம் அவுட்”

“பாஸ், போலீஸ் அட்டாக்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நாம ஆரம்பிச்சுடலாமா”

“…………”

“வேண்டாம். ரொம்ப குறைவான போலீஸ்காரங்கதான் வெளியே இருக்காங்க. நாம ஈஸியா தப்பிக்க நிறைய சான்ஸ் இருக்கு”

“பின்னாடி இருக்கிற கதவுக்கு பக்கத்தில் யாரும் இல்லை அது வழியா தப்பிக்கலாமா?”

“சார்..அவங்க வேற ஏதோ ஒரு ப்ளான்ல இருக்காங்க போல இருக்கு. சரண்டர் ஆகச் சொல்லி இன்னொரு தடவை சொல்லலாமா”

”ம்ம்ம்ம். செய்யுங்க”

“பாஸ், பின்னாடி இருக்கிற கதவையும் பூட்டிட்டாங்க”

“இன்னும் பத்து எண்ண போறோம். அதுக்குள்ள சரண்டர் ஆகிடுங்க”

“கவுண்ட் ஸ்டார்ட்ஸ் நவ்”

“ரவி, நீ பின்னாடி கதவுக்கு போ. பிரசாத் அந்த ஜன்னல் வழியா பாரு”

“டென்”

“நைன்”

“பாஸ் சரண்டர் ஆகிடலாமா?”

“என் கூட இருக்கிறவங்க இருக்கலாம். சரண்டர் ஆகிறவங்க ஆகலாம்”

“செவன்”

“சிக்ஸ்”

“எல்லோரும் பொசிஷன்ல ரெடியா இருங்க. வி வில் ஃபயர் நவ்”

“ஃபோர்”

“த்ரீ”

“இதுக்கு மேல வேற வழியில்லை..போலீஸ் சுட ஆரம்பிக்க போறாங்க. நாமும் சுடுவோம்”

“டூ”

“ரெடி”

“ஒன்”

“ஃபயர்ர்ர்ர்ர்ர்……..”

டுமீல், டமார், டிஷ்யூம்….டுமீல்

“அம்மா”

தொப்…குப்…தப்

“சனி, ஞாயிறு ஆனா போதும் மனுஷன் வீட்ல இருக்க முடியறதில்லை… பிஞ்சுல பழுத்ததுக”

குப்…தப்…குப்

“எங்கேயாச்சும் போய் விளையாடுங்கன்னு சொன்னா கேக்குறீங்களா நாலு மொத்து மொத்துனாத்தான் அடங்குறீங்க”

– ஜூன் 26, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)