ஒரே இருட்டு… ஒன்றுமே தெரியவில்லை…..
மல்லாந்தவாரு கிடக்கிறேன்….
உடம்பு மேலே அப்படி ஒரு கனம்… மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது…
கருத்த ஒரு முரடன் மேல இருப்பது போல தோன்றுகிறது… கருத்தவனா இல்லை இல்லை இருட்டில் அப்படி தெரிகிறது..
தாடி கழுத்தில் உரச உரச இவன் இயங்கி கொண்டிருக்கிறான்…
தடுக்க, தள்ளிவிட எத்தனித்து களைத்துவிட்டேன்…. முடியவில்லை…
பெரிய உருவம்…
வலியும் தாங்க முடியவில்லை….
ஒரு சமயத்தில் என் இடுப்புக்கு கீழே மறத்து போயிற்று…..
இவ்வளவு நேரம் இருந்த வலிகூட இப்பொழுது இல்லை…
இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை…
மூச்சு விடதான் கடினமாக உள்ளது… தாகம் வேற… கத்தி கத்தி வரண்டுவிட்டது தொண்டை…
இன்னொருவன் வேற நின்று கொண்டிருக்கிறான், இல்லை இல்லை காத்திருக்கிறான்… அடுத்து வருவான் என நினைக்கிறேன்….
நிர்வாணமாக அவன் வாய்ப்புக்கு காத்து கொண்டிருப்பவனிடம் ஒரு வாய் நீர் கேட்கலாமென தோன்றுகிறது…
‘ஏன்டி இந்நேரம் ஊருக்கு கெளம்புற, இருந்துட்டு காலைல முத பஸ்க்கு போக வேண்டியது’தான என அதட்டிய என் அம்மாவின் பேச்சை கேட்டிருந்திருக்கலாம்…
இப்பொழுது இந்த சரளை மண் அறுக்க கிடக்கிறேன்… இடுப்பெல்லாம் எரிச்சலாக உள்ளது..
தொடை மொத்தம் ஈரமாகி இருப்பது போல தோன்றுகிறது… ரத்தமாக இருக்கலாம்….
என் கண்ணீரைவிட அதிகமாக வெளியேறி இருக்கக்கூடும்…
இந்த சாராய நாற்றமில்லாதிருந்தாலாவது பரவாயில்லை….
கொஞ்சம் கொஞ்சமா செத்து கொண்டிருக்கிறேன்… மிச்சம் இருக்கும் உயிருடனாவது விடுவார்களா என்று தெரியவில்லை…
அன்று கல்லூரியில் உணவு இடைவேளையின் போது தோழிகளுடன் முதல் கலவி எப்படியிருக்கும் என்று சிலாகித்தது ஞாபகம் வருகிறது…. ‘அவ்வளவு சுலபம் இல்லையாம்’ என்று மலர்விழி சொன்னபோது ‘இவளுக்கு எல்லாம்தெரியும் பாருடி’ என சிரித்தோம்….
தப்புதான்…
இப்படியாகத்தான் இருக்கும் என்று எனக்கு சத்தியமாக தெரியாது….
ஒருவழியாக அயர்ந்துவிட்டான்…. இன்னும் என் மீதிருந்து எழதான் மனமில்லை அவனுக்கு…
அடுத்து காத்திருந்தவனின் கண்களில் அப்படி ஒரு ஆர்வம், ஆனந்தம்..
என்னால்தான் சரியாக பார்க்கமுடியவில்லை கலங்கிய கண்களுடன்….
ஒரு வழியாக எழுந்துவிட்டான்…
உடம்பு லேசாகிவிட்டது..கொஞ்சம் சுத்தமான காற்று சுவாசிக்க முடிகிறது…கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது… சாராய நாத்தமும் இல்லை…கடவுளுக்கு நன்றி சொல்லாம் என தோன்றுகிறது….
எதிரில் நின்றுருந்த அடுத்தவனை காணவில்லையே என கண்கள் தேடியது.. எங்கு சென்றான்!
ஒரு கை மட்டும் கண்ணத்தில் தட்டுகிறது…
எழுந்திரி…
எழுந்திரி…
‘எழுந்திரிடி எரும.. நேரமாகலையா உனக்கு.. ஊருக்கு கெளம்பனுட்டு பகல்ல இப்படி தூங்கிட்டிருக்க … எரும….’
கண்விழித்ததும் அம்மா….
‘கண்டிப்பா இந்நேரம் கிளம்பனுமா இருந்துட்டு காலைல முத பஸ்ஸூக்கு கிளம்பேன்டி…….’