கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 13,598 
 

(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 7 | அத்தியாயம் 8 – 14

அத்தியாயம் 1 

காலை தன் வழக்கமான பணிகளை முடித்து விட்டு பிரபு தன் வீட்டின் ஒரு பகுதியில் உள்ள தன் அலுவலக அறைக்குள் வந்தான். 

ஊதுவத்தி வாசனை அறையெங்கும் கமகமத்தது. பிள்ளையார் படத்துக்கு மல்லிகை சரம் போடப்பட்டு அந்த வாசனையும் சேர்ந்து மேலும் நறுமணமாயிருந்தது. 

அவனைப் பார்த்ததும் நிலா தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் இரு கைகளையும் கூப்பி ‘வணக்கம் சார்!’ என்று கூறி புன்னகைத்தாள். 

நீண்ட முகம், கூர்மையான நாசி, நேர்த்தியான புருவம், மாநிறமான நிறம், உயரமான உருவம், முடி பின்னப்படாமல் ப்ரி ஹேர்ஸ்டைல் சுடிதார் போட்டிருந்தவள். தன் வக்கீல் படிப்பை முடித்துக்கொண்டு 

இளவயது என்றாலும் தன் தொழிலில் மற்ற வக்கீல்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக 

விளங்கும் பிரபுவிடம் ஜூனியராக இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறாள். 

பிரபு எள் என்றால் இவள் எண்ணெயாக இருப்பாள் வேலையில். தன் ஜூனியர் என்றாலும் தன் சக தோழிபோல் பழகுவான் பிரபு. ஆனால் வேலை என்று வந்துவிட்டால் பசி தூக்கம் மறந்துவிடும் இருவருக்கும். 

உள்ளே நுழைந்த பிரபு தலைகுளித்த கூந்தல் காற்றில் பறந்தபடி தேவதை போல் நின்றிருந்த நிலாவைப் பார்த்ததும், 

“வாவ் …. இரவில் வரவேண்டிய நிலா பகலில் வந்து விட்டதே…’ என்று கூறியபடி அவள் கூறிய வணக்கத்திற்கு பதில் கூறிய பிரபு, 

“நிலா! உங்களுக்கு எத்தனை முறை சொல்வேன்…கால் மீ பிரபு. இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம், புரியுதா…?” என்றவனிடம், 

“என்ன இருந்தாலும் நீங்க என்னோட பாஸ் இல்லையா..?” என்று நிலா கூற, 

“என்ன பெரிய மனுசனா நினைச்சிடாதம்மா… நான் இன்னும் கல்யாணமாகாத பேச்சிலர் பாய்…” 

“ஓகே …. இனிமே ஐ கால் யூ பிரபு” என்று நிலா கூற, 

“தட்ஸ் ரைட்” என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தான் பிரபு. “ஓகே … அடுத்தவாரம் ஹியரிங் வர்ற புராஜக்ட் 243 ரெடி பண்ணிட்டியா…..? 

“ரெடி பிரபு…! அப்புறம் புராஜக்ட் 187 வாய்தா வாங்கணும்….!”

அப்போது சீனு என்கிற ஆபிஸ் பாய் உள்ளே வந்து “குட்மார்னிங் சார்…! என்றான். 

அவனைப் பார்த்ததும் பிரபு, “வெரி குட்மார்னிங் சீனு ! எத்தனை அப்பாயிண்ட்மென்ட்” என்று கேட்க, 

“பத்து இருக்கு சார்…!” என்றதும், 

“சரி…வரச்சொல்….” என்றான் பிரபு. 

மாலை ஐந்தாகிவிட்டது. உடம்பை சோம்பல் முறித்துக்கொண்ட பிரபு சீனு கொண்டுவந்த காப்பியை சுவைத்துக் கொண்டே நிலாவைக் கவனித்தான், அவள் காப்பி குடிக்கும் அழகை ரசித்தபடி. 

அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் நிலா. 

அவள் தன்னை கவனிக்கிறாள் என்பதை புரிந்துக்கொண்ட பிரபு, 

“நிலா…போனவாரம் பொண்ணுபாக்க வந்தாங்களே …. என்னாச்சு…?” என்று கேட்டான். 

“ப்ச்…பிடிக்கலை….” 

“ஏன்…?” 

“தெரியலை…” 

“ஆமா….நீ ஏன் என்னை பார்ட்னராக்கிக்க கூடாது…?” பட்டென்று கேட்ட கேள்வியில் திடுக்கிட்டாள் நிலா….! 

அப்போது உள்ளே நுழைந்த சீனு “சார்…! ஒரு லேடி வந்திருக்காங்க. உங்களைப் பாக்கணுமாம்….” என்றான். “வேற அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா….?” 

“இல்ல சார்….” 

“அப்ப வரச்சொல்” 

உள்ளே வந்த பெண்மணியைப் பார்த்ததும் ஒருகணம் திடுக்கிட்டான் பிரபு! 

அத்தியாயம் 2 

திடுக்கிட்டு எழுந்த பிரபு தன் எதிரே நிற்பவரை கண்கொட்டாமல் பார்க்க, 

“வணக்கம் பிரபு சார்…!”என்றுதன் இரு கரங்களையும் கூப்பி எதிரே நின்றிருந்த சுமார் முப்பது வயதிருக்கும் பெண்மணி கூற, 

“வணக்கம்..” என்று பிரபு கூறினான். 

“உட்காரலாமா…?” என்று அந்தப் பெண்மணி கேட்க, 

“ப்ளீஸ்…டேக் யுவர் சீட்…” என்று தன் எதிரே இருந்த நாற்காலியைக் காட்டி அமரச் சொன்னான் பிரபு. ஹைஹீல்ஸ் போடாமலே உயரமான உருவம். களையான முகம். நல்ல கலர். 

நெற்றித்திலகம் வட்டமாக பளிச்சென்று இருந்தது. 

அவர் உடுத்தியிருந்த ஆடை விலை உயர்ந்ததாக இருந்தது.கழுத்திலும் கையிலும் தங்கநகைகள் மின்னின.பார்ப்பதற்கு அந்தகால நடிகை சரோஜாதேவி போல இருந்தார். 

அந்த பெண்மணி ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு வெளியே சென்றவர், ஒரு ஐந்து வயது குழந்தையை அழைத்துவந்தார். குழந்தையையும் அந்த பெண்மணியையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பிரபு அவர்கள் தனக்கு நன்கு அறிமுகமானவர்கள் போல இருப்பதாக நினைத்தான். ஆனால் யாராக இருக்கும் என்பது நினைவுக்கு வரவில்லை. தலைக்குள் ஏதோ குடைவது போல இருக்க, தன் தலையை இருகைகளால் பிடித்தான். 

“என் பெயர் மாதங்கி….இவள் என் மகள் இந்து. நாங்கள் உங்க உதவி கேட்க இங்கு வந்திருக்கிறோம்” என்று கூற, 

நார்மலுக்கு வந்துவிட்ட பிரபு “கூறுங்கள் என்ன உதவி நான் செய்யனும்” என்றுகேட்க 

“நான் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவள், 

என் பூர்வீக இல்லம் சேத்துப்பட்டு பொன்ராயன் மங்கலத்தில் உள்ளது. 

அந்த வீட்டில் இப்போது நாங்கள் யாரும் இல்லை. எனது உறவினர் ஒருவர் தங்கியிருக்கிறார். இப்போது வீடு எங்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் அவர் வெளியேற மறுக்கிறார்.” 

“மேலும் அந்த மாளிகை அவருக்கே சொந்தம் என வாதிடுகிறார். இதை தட்டிக்கேட்கப் போன எனது கணவர் திரும்பி வரவேயில்லை…. 

உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் இந்த புகாரை பதிவு செய்ய மறுக்கிறார்கள். நீங்கள் தான் இந்த பிரச்சினைக்கு தீரவு காணவேண்டும்” என்றுகூற, 

“மேடம்…. நீங்க சொன்ன விஷயம் ஏதோ எனக்கு வித்தியாசமா தோணுது. உங்கள் கணவர் காணாம போயி எவ்வளவு நாள் ஆச்சு? என்று பிரபு கேட்க, 

“ஒருவருஷம் ஆகுது..” 

“எந்த ஊர் போலீஸ் ஸ்டேசன்ல புகார் குடுத்தீங்க…” 

“எங்க ஊர்லதான்” 

“நிச்சயமா அவங்க அப்படி செய்ய மாட்டாங்க…சரி. ..நான் அவங்ககிட்ட பேசுறேன்….” 

“கண்டிப்பா அவங்க ஆக்ஷன் எடுக்கமாட்டாங்க….ஏன்னா அந்த உறவுக்காரர் அவங்களுக்கு வேண்டப்பட்டவர். அதுவுமில்லாம் அந்த ஊர்ல பெரிய ரவுடி….” என்றதும், 

“அந்த ஸ்டேசன் எஸ்.ஐ எனக்குத் தெரிந்தவர்… நீங்க கவலைப்படாம போய்வாங்க…நான் பாத்துக்கிறேன்” என்று பிரபு கூற, 

“ரொம்ப நன்றி…இந்து…மாமாவுக்கு பை சொல்லு…” என்று அந்தப்பெண்மணி கூற, 

“பை அங்கிள்…!”என்று அந்த குழந்தை கூறியது. ஏனோ அந்தக் குழந்தையை வாரி அணைத்துக்கொள்ளவேண்டும் போல் இருந்தது பிரபுவுக்கு. 

அவள் வெளியேறும் சமயம் ஜானி உள்ளே வந்துகொண்டிருந்தான். 

அவள் வெளியேறியதும் பிரபு வாசலையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். 

அப்போது நிலா அவன் தோளைத்தொட்டு “பிரபு…பிரபு..” என்றழைக்க, 

திடுக்கிட்டவனாய் நிலா தன் அருகில் நிற்பதைப்பார்த்ததும், லேசான புன்னகை செய்தான். 

“பிரபு…ஆர் யூ ஆல்ரைட்…? அந்த லேடி வந்ததிலேயிருந்து உங்க முகமே சரியில்லை…. ஏதோ நெர்வஸா இருந்தது போலவே இருந்தீங்க…உங்களுக்கு தெரிஞ்சவங்களா…” என்று நிலா கேட்க, 

“நோ…நோ…ஆனா அவங்களைப்பார்த்தா ஏதோ ரொம்ப நெருக்கமானவங்க போல இருந்துச்சி… எனக்கு ரொம்ப பெமிலியர் பேஸ் போலவே இருந்துச்சி..” என்று பிரபு கூற, 

“ஒஹோ…..அதனாலத்தான் அவங்க வந்தவுடனே எழுந்துநின்னீங்களா….?” என்று கேட்க 

“ஏன் எழுந்தேன் என்றே எனக்கு புரியல….” என்று பிரபு கூற

“இந்தாங்க…தண்ணிய குடிங்க….” என்று வாட்டர் பாட்டிலை நீட்ட 

அதை வாங்கி மடமடவென்று குடித்தான். 

அப்போது உள்ளே வந்த ஜானி “ஹாய் எவ்ரிபடி…!” என்று கூறிக்கொண்டே மேசையின் விளிம்பில் அமர்ந்தான். பிரபுவின் முகமாறுதலை கவனித்த ஜானி 

“எனிதிங்க் ராங்….?” என்று நிலாவைப்பார்த்து கேட்டான். பிரபு ஜானியிடம் “நீ உள்ளே வரும்போது ஒரு லேடியும் குழந்தையும் வெளியே போனாங்களே…. அவங்களை சீனுவ விட்டு கூப்பிடச்சொல்லு….போன் நம்பர வாங்க மறந்துட்டேன்…..” என்று கூற 

“என்ன பாஸ் சொல்றீங்க….? நான் வரும்போது யாருமே வெளியே போகலியே….” என்று கூற, 

“என்ன சொல்ற…? போய் சீனுவ கூப்பிடு” என்று கூற சீனு உள்ளே வந்தான். 

“சீனு….உள்ள ஒரு லேடிய கொஞ்சநேரத்துக்கு முந்தி அனுப்பினேயே….அந்த அம்மா இப்பத்தான் வெளிய போனாங்க…அவங்களை கூப்பிடு” 

“சார் நா எந்த லேடியையும் அனுப்பலியே ….அப்பாயிண்ட்மெண்ட் உள்ளவங்க மட்டும்தானே அனுப்பினேன்….” என்றதும் 

பிரபுவும் நிலாவும் திடுக்கிட்டார்கள்! 

அத்தியாயம் 3 

“சார்….அப்பாயிண்ட்மெண்ட் இல்லாதவங்க யாரையுமே நான் அனுப்பலையே…..” என்று சீனு கூறியதைக்கேட்ட நிலாவும் பிரபுவும் அதிர்ந்தனர்.

“என்ன சீனு விளையாடுறியா…? நீதானே கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஒரு லேடி உங்களைப் பாக்க வந்திருக்காங்க…அனுப்பட்டுமான்னு வந்துகேட்ட, நானும் அனுப்புன்னு சொன்னேனே…..மறந்துட்டியா….இல்ல தூங்கிட்டியா….?” 

“சார்…..அஞ்சு மணிக்கு நீங்க லாயர் பிரபாகரன் சார்கிட்ட கொடுத்துடுன்னு கவர் ஒன்னு கொடுத்தீங்களே….அத கொடுத்துட்டு இப்பத்தான் வந்தேன்…. ஜானி சார் கூட நான் வர்றதைப் பார்த்தாரு” 

“ஓ…ஆமால்ல….மறந்துட்டேன்…ஆனா நிலா உனக்கு ஏதும் புரியுதா….?” 

“எப்படி ஒரே நேரத்துல சீனு இங்கயும் இருப்பான்….எனக்கு ஒரே குழப்பமா இருக்கு…” 

“ஆமாம்…எனக்கும் அதேதான். ஆமா நீ ஏன் போகும்போது சொல்லிட்டு போகல…?”

“இல்ல சார்…..நான் சொல்லாம்னு தான் வந்தேன் ஆனா நீங்க ரெண்டு பேரும் ஏதோ பர்சனலா பேசுறமாதிரி தெரிஞ்சுது….அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு போயிட்டேன்….” 

“சொல்லாம போனதுக்கு இது காரணமா….? வரவர உனக்கு குளிர் விட்டுப் போச்சு…..” 

“என்ன பாஸ் நடக்குது இங்கே…? எனக்கு ஒன்னுமே புரியல…..”

“அத அப்புறம் சொல்றேன்…நீ போன வேல என்னவாச்சு….?”

“நா போனா முடிக்காம வருவேனா…? அந்த சேனா பார்த்திபன் பெரிய்ய ஆளுதான் பாஸ்…! அவன் உங்ககிட்ட சொன்னது எல்லாமே பொய். அந்த அம்மாவும் அவனுடைய வொய்ப்பே இல்ல….இல்லீகல் ரிலேசன்ஷிப். அந்த நிலம் ராஜாமணிக்குத்தான் சொந்தம். அதனாலதான் இந்த பெண்மணியை வச்சு ராஜாமணியை கைப்பாவையா ஆக்கிகிட்டு நிலத்த எழுதி வாங்கிகிட்டான். அது அவரோட வொய்ப்புக்கு தெரியவர பிரச்ன ஆரம்பமாயிருக்கு. இதனால் அவரும் மனசு மாறி நிலத்த திருப்பிக் கேட்க, வெளியில கூட்டிக்கிட்டு போயி ராஜாமணியை ஆளுங்கள வச்சு போட்டுத்தள்ளிட்டான். 

போலீசு இவர புடிக்க போகுதுன்னு தெரிஞ்சதும் நம்மகிட்ட வந்து அவரோட சொத்த ராஜாமணி தன்னோட வொய்ப்போட சேர்ந்து அபகரிக்க பிளான் போட்டு அதுக்காக தன்னை கூலியாட்கள் மூலம் கொலை பண்ணவந்ததாகவும் தற்காத்துக் கொள்ளவே ராஜாமணியை தாக்கியதாகவும் அது காரணமா உயிர் போயிட்டதாகவும் சொல்லி நாம அவருக்கு வாதாடணூம்னு வந்திருக்காப்ல… இப்ப என்ன சொல்றீங்க பாஸ்…?” 

“ஃபேக் ஸ்டேட்மெண்ட்டா இருந்தா நாம அந்த கேச எடுக்கறது இல்லன்னு உனக்கு தெரியாதா…? ரிஜெக்ட் பண்ணிடு…”

“இந்தாங்க…அந்த பைல்…” என்று பிரபுவிடம் குடுக்க, அதை வாங்கிப் பிரித்துப்பார்த்த பிரபு, 

“குட்…! இந்தா நிலா…இத 302 பைல்ல வச்சிடு” என்று கொடுத்தான். 

“சரி…இன்னிக்கு என்ன புரோக்கிராம்…வெளிய ஏங்காவது போகலாமா…..?” என்று ஜானியைப் பார்த்துக் கேட்க, 

“ஏன்…அவருக்கா புரோக்கிராமுக்கு பஞ்சம்” நிலா கேட்க, 

“பாஸ்….நா வந்தப்ப பிரச்ன ஒண்ணு போய்கிட்டு இருந்தே என்ன…?” என்று ஜானி நினைவுப்படுத்திக் கேட்க, 

நடந்த நிகழ்வுகளை நிலா விவரிக்க 

ஆச்சரியமானான் ஜானி….”பாஸ்…. இதுல ஏதோ அமானுஷ்யமான வேல மாதிரி தெரியல ?….”

“ஆமாம் ஜானி…அவங்களப் பார்த்ததும் பிரபுவோட முகமே சரியில்ல…எனக்கே பயமா போச்சு….” 

“ச்சு….அதெல்லாம் ஒண்ணுமில்ல….ஏதோ மர்மம் இருக்குது….கண்டுபிடிச்சிடலாம்….!” 

“அப்புறம் நிலா…! என்னவாச்சு உன்னோட மாப்பிள்ளை பார்க்கும் படலம். நா வேணா அப்ளிகேசன் போடட்டா…?” ஜானி நிலாவின் மேசையில் கையையூன்றி கண்சிமிட்டியபடி கேட்க, 

“ஏன் டினா என்னவானாள்…?” என்று நிலா கேட்க, 

“நேத்திக்கி அவ காபிஷாப்புக்கு கூப்பிட்டா…..நா போகல…அதனால ஒரே சண்டை ….அதனால அவள பிரேக்கப் பண்ணிடலாம்னு இருக்கேன்…” 

“நேத்திக்கி ஏன் போகல….? நாம தான் எவ்வளவு வேலயா இருந்தாலும் ஏழு மணிக்கு டாண்ணூ கிளம்பிடுவோமே…” நிலா கேள்வி கேட்க, 

“நா அவளப்பாக்கத்தான் போனேன். பஸ்ஸ்டாப்புல கீதா நின்னுகிட்டு இருந்தாலா…மனசு கேக்கல…அவளை டிராப் பண்ண போயி அப்படியே காபி ஷாப்புக்கு போயிட்டேன்… 

“அங்கதானே டினாவும் இருந்தா…?” 

“என்ன நிலா நீ….! அங்க போவேனா…வேற காபிஷாப்….” 

“சரி அப்புறம் என்ன நடந்தது….?” 

“அவளை அவ வீட்டுக்குப்பக்கமா இறக்கிவிட்டுட்டு இங்க வந்தா அவளைக்காணோம்… சரி போன் பண்ணி சாரி கேக்கலாம்னு போட்டா உன் சாரிய நீயே வச்சுக்க…அப்பிடீன்னு போனக்கட் பண்ணிட்டா… அவளுக்கு மட்டுந்தான் கோவம் வருமா… நானும் இன்னிக்கி முழுக்க போனே போடல…” 

“ஆமாம் அது யாரு கீதா புதுசா இருக்கு…?” பிரபு கேட்க, 

“யாருக்குத்தெரியும்….பஸ்ஸ்டாண்டுல தனியா பாவமா நின்னுக்கிட்டிருந்தா…சரி ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு போனேன்…” 

“ஹேய்…! உன்னயத்திருத்தவே முடியாது…” என்று பிரபு சிரிக்க, 

“என்ன நிலா கேட்டதுக்கு பதிலே காணும்..” 

“இல்ல ஜானி…! இனிமே மாப்ள பாக்கும் படலம் கிடையாது…” 

“ஏன்? சாமியாராப்போறியா…பாத்தும்மா…நாட்டுல சாமியாரா இருந்தாலும் பொண்ணுண்ணா விடறது இல்ல….!” 

“அதில்ல ஜானி…..சிக்கியாச்சு மாப்ள….” என்று கூறிக்கொண்டே பிரபுவைப்பார்க்க, 

“இஸிட்….!யாரு அந்த அதிர்ஷ்டசாலி …..நானா…?” 

“உனக்கு ஒருத்தி பத்தலையாக்கும்….டினா உன்ன டிவோர்ஸ் பண்ணிடப்போறா பாரு…” 

“அப்ப யாருதான்னு சொல்லு. மனசு படபடன்னுது….” 

“வேற யாரா இருக்கும்னு உன்னால் ஊகிக்க முடியலையா…?” என்று கண்களால் பிரபுவைப் பார்க்க,

“அப்படியா… முடிவு பண்ணியாச்சா…..தி கிரேட் சக்ஸஸ்…!” என்று பிரபு நிலாவைப்பார்த்துக்கேட்க,

“ம்ம்…” என்று நிலாகூற, 

“அப்படிப்போகுதா கதை….வெரிகுட்…பாஸ். நீங்க பெரிய ஆளுதான்…கங்கிராட்ஸ் போத் ஆப் யூ…” என்று பிரபுவின் கையைப்பற்றி குலுக்க,இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க 

“என்ன பாஸ்….ட்ரீட் கிடையாதா…..?” 

“கண்டிப்பா உண்டு. என்ன நிலா எங்க போகலாம்னு சொல்லு…?’ 

“பார்ரா….இப்பவே உத்தரவ எதிர்பாக்கிறத…பாத்து பாஸ்…அப்புறம் நீங்க நினைச்சாலும் வெளிய வரமுடியாது….” என்று ஜானி பிரபுவை கலாய்க்க, 

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. என்ன நிலா பதிலக்காணோம்…” என்று பிரபு நிலாவைக் கேட்க, 

“ஐயையோ…! நேரத்துக்கு வீட்டுக்கு போகலண்ணா…அவ்வளவுதான்….. எங்கப்பா என்னை பிரிச்சி மேஞ்சிடுவார். நா வரலேப்பா…. நீங்க போயிக்கீங்க…” என்று கூறிவிட்டு தன் பேக்கை எடுத்துக்கொண்டு ஜானிக்கு பை சொல்லிவிட்டு பிரபுவுக்கு கண்களால் விடைபெற்றாள். 

“என்ன பாஸ் இப்பிடி உப்பு உறப்பு இல்லாத பார்ட்டியா இருக்கு…பாவம் பாஸ் நீங்க…!” என்று ஜானி வெறுப்பேத்த 

“எல்லாம் போகப்போக சரியாயிடும்…கிளம்பலாமா…” என்று கூறிவிட்டு மேசையின் மேல் இருந்த பேப்பர்களை ஒழுங்குப்படுத்தினான். 

அப்போது மடிக்கப்பட்ட ஒரு காகிதம் இருப்பதைக்கண்டான் பிரபு. 

அதை எடுத்து பிரித்துப்பார்க்க, 

அதில் 

“மாதமானது மதம் பிடித்திருக்கிறது, 
மதில் மேல் மையம் கொண்டவள் காத்திருக்கிறாள்” 

என்று இரத்தக்கறையில் எழுதப்பட்டிருந்து. 

அத்தியாயம் 4 

பிரபு அக்கடிதத்தை எடுத்துப் படிப்பதைப் பார்த்த ஜானி ′′ என்ன பாஸ் ….! லவ் லெட்டரா … நேர்ல சொல்ல வெக்கப்பட்டு லெட்டரா எழுதி வச்சுட்டாளா …. நிலா ….” என்று கேட்க, 

குழப்பமாக கடிதத்தை ஜானியிடம் நீட்டினான் பிரபு .

“என்ன பாஸ் …. பர்சனல் லெட்டர எங்கிட்ட குடுக்கிறீங்க…. எனக்கு வெக்கமா இருக்கு … வேண்டாம் பாஸ் …” என்று நேரம் காலம் தெரியாமல் ஜானி கலாய்க்க, 

“இடியட்…! இதை முதல்ல வாங்கிப்படி …” என்று கடுமையாக கூற, 

வாங்கிப் படித்த ஜானி “என்ன பாஸ் … ஏதோ கொட்டேஷன் போல இருக்கு…!” என்றான் . 

“அது எதனால் எழுதி இருக்குன்னு பாரு …” என்று பிரபு கூற, 

மீண்டும் அதைப் பார்த்தவன் “ரெட் இங்க்ல எழுதி இருக்கு…இல்ல…ஐயோ…இரத்தத்தால் எழுதி இருக்கு…” என்று பயத்துடன் ஜானி கூற, 

“ஆமாம்… இரத்தம்தான்…” என்று பிரபு கூற மீண்டும் அக்கடிதத்தை வாங்கிப் படித்தான். 

“இதுல இருக்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தமாயிருக்கும் …?” ஜானியிடம் வினவ, 

“நான் எப்பவும் லேட் பங்ஷன்தான் …. என்னய போயி கேக்கிறீங்களே….. ஆமாம் பாஸ் … இத இங்க வச்சிட்டுப் போனவங்க யாரா இருக்கும் …?” என்று பிரபுவை எதிர் கேள்வி கேட்டான் ஜானி . 

“இன்னிக்கி நிறையப் பேரு வந்துட்டுப் போனாங்க …. யாருன்னு தெரியும் ….?” பிரபு கூறவும், 

திடீரென்று ஜானி’ பாஸ் ஐ காட் ஐடியா ….!’ என்று கூவ 

என்ன என்பது போல பிரபு பார்க்க 

“சிசிடிவி கேமரால பாத்தா…” 

“சரி…அந்த புட்டேஜ எடு…பாக்கலாம்” என்று பிரபு கூற, 

கேமராவில் பதிவான படங்கள் எதுவும் திருப்தியாயில்லை… 

“பாஸ்…ஒன்னு கவனிச்சீங்களா…ஒரு லேடி வந்ததா சொன்னீங்களே…அது பதிவாகவேயில்லை…” 

“ஆமாம்…சம்திங் ராங் …” 

“கண்டிப்பா இது ஏதோ ஆவி சமாச்சாரம் போல் தெரியுது பாஸ்…அதனால தானா யார் கண்ணுக்கும்தெரியல…” 

“ஏன் … நானும் நிலாவும் பார்த்தது ….” 

“அங்கதான் இருக்கு விஷயம் …அந்த ஆவிங்க உங்ககிட்ட உதவி கேட்டு தானே வந்துருக்கு…சும்மா சொல்லக்கூடாது பாஸ்…தமிழ்நாட்டுல தான் கலக்குறீங்கன்னு பாத்தா…ஆவி உலகத்துல கூட உங்களுக்கு கேசு கிடைக்குது …” பிரபுவை ஜானி கலாய்க்க, 

“ஏய்….! உதை வாங்கப்போற…. சீரியசான விஷயமா இருக்கு…. அதுக்கு வழி தேடாம் கிண்டலா ….” அடிப்பதுபோல் கையை ஓங்க 

“பாஸ்…இந்த மரமண்டைக்கு ஸ்லோவாதான் வேல செய்யத் தெரியும்…இப்ப முதல்ல வயிற்றுப்பசியை சரி செய்வோம் … பிறகு நிதானமா யோசிக்கலாம்… சரிதானே பாஸ் ….!” வயிற்றைத்தட்டி ஜானி பேசுவதை ரசித்த பிரபு “சரி வா போகலாம்…” என்று கூறிவிட்டு சீனுவிடம் அலுவலகத்தை பூட்டச் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டனர். 

இரவு மாடியில் பால்கனியில் சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி தீவிர யோசனையில் ஆழ்ந்து இருந்த பிரபு தன் அருகில் அவனுடைய அம்மா பால் தம்ளருடன் தன் அருகில் வந்தமர்ந்ததை கவனிக்கவில்லை. 

“என்னப்பா…. யோசனை…” என்று கேட்டபடி பால் தம்ளரை நீட்ட, 

அதைப் பெற்றுக்கொண்ட பிரபு . 

“ஒன்னுமில்லம்மா…சும்மாதான்…” என்று கூற, 

“ஏப்பா…காலையில நான் சொன்னேனே அதுக்கு பதிலே சொல்லலியே ….?” என்று கேட்க 

“என்னம்மா கேட்டீங்க….அந்த நிலம் விஷயந்தானே?” 

“பாழாப்போச்சு….இப்ப நிலம் வாங்கறதுதான் ரொம்ப முக்கியம்…. ஜட்ஜ் பரமேஸ்வரன் பொண்ணு ஜாதகம் வந்திருக்கே. அதுக்கு என்ன பதில்…?” 

“ஓ…பொண்ணு பாக்கறதப்பத்தி சொன்னீங்கல்ல…மறந்துப்போச்சு…இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம் … இன்னும் ரெண்டு வருசம் போகட்டும் ….”

“சரிதான்….வேதாளம் பழையபடி முருங்கமரம் ஏறுதா….? உனக்கு என்ன இப்பதான் இருபது வயசுன்னு நினப்பா…முப்பது முடியுது … இன்னமும் தள்ளிப் போட்டுகிட்டே இருந்தா கிழவி கூட உனக்கு கிடைக்கமாட்டா….!”

“அம்மா கூல்… கூல். கோவப்படாதீங்க …. உங்க கவலை எனக்கு பொண்ணு கிடைக்காதுன்னுதானே…அந்த கவலை இனிமே உங்களுக்கு வேண்டாம்…பொண்ணு ரெடியா இருக்கு..” என்று பிரபு கூறியதும், 

“என்னப்பா சொல்ற…பொண்ணு ரெடியா….? யாருப்பா அது…லவ்வா…அத முதல்லேயே சொல்லியிருந்தா…தரகனுக்கு குடுத்த காசுலேயே கல்யாணத்தயே முடிச்சிருக்கலாம்”. 

“அம்மா….முதல்லயே எப்படி சொல்றது . இன்னிக்கிதானே கன்பார்ம் ஆச்சு…” 

“அப்படியா …. யாருப்பா அந்த பொண்ணு. சீக்கிரம் சொல்லு ..” பரபரத்தார் அம்மா… 

“அம்மாடியோவ் ….! என்னைவிட உங்களுக்கு தான் அதிக எக்சைடீடிங்…சொல்றேன்…சொல்றேன் நம்ம ஆபிசுல இருக்காங்களே என்னுடைய ஜூனியர் நிலா….அவங்கதான் …” 

“அப்படியா…நிலாவா…ரொம்ப சந்தோசம். ரொம்ப தங்கமான பொண்ணு…நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதான்…ஆனா…அவங்க குலம் கோத்திரம் வேறயாச்சே…” என்று இழுப்பதை பார்த்த பிரபு, 

“என்னம்மா…நீங்களுமா…? மனசு ஒத்துப்போன பிறகு குலமாவது..கோத்திரமாவது…”

“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லப்பா…எப்படியோ நீ குடும்பஸ்தனா ஆனா எனக்கு போதும். ஆனா அவங்க வீட்டுல ஒத்துக்கனும் இல்ல…” 

“இப்பத்தானே பிள்ளையார் சுழி போட்டுருக்கு…பாக்கலாம்…” என்று பிரபு கூற, 

“எப்படியோப்பா…உனக்கு நல்லது நடந்தா சரி. உங்கப்பா போனபிறகு நா இன்னும் இருக்கேன்னா அதுக்கு நீதான் காரணம் . உனக்கு ஒரு கால்கட்டு போட்டுட்டேனா என் கடமை முடிஞ்சிடுச்சின்னு நிம்மதியா உங்கப்பா கூட போய் சேர்ந்திடுவேன்…!” கண்களில் துளிர்த்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டார். 

“அம்மா ….! உங்ககிட்ட எத்தனைமுறை சொல்லியிருக்கிறேன் இந்த மாதிரி பேசக்கூடாதுன்னு … என்ன வயசாயிடுச்சி உங்களுக்கு மேல போறதுக்கு உங்க பேரன் பேத்திகளை தூக்கி நீங்க கொஞ்ச வேணாடாமா…?” பிரபு தன் தாயை கோபமாக திட்ட, 

“அதுக்காகத்தானே நானும் ஆசைப்படறேன். உனக்கு தொழிலைத்தவிர வேற சிந்தனையே கிடையாது . சரி எப்படியோ…ஒரு நல்ல சேதி சொன்ன அது போதும் எனக்கு….” என்று கூறிக்கொண்டே தம்ளரை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் கிளம்ப பிரபு ஏதோ நினைத்தவனாய், 

“அம்மா உங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும்….” என்றதும், 

“என்னப்பா… என்ன கேக்கணும் ….. சொல்லு ….!” என்றவராய் மீண்டும் சோபாவில் அமர்ந்தார். “இந்த உலகத்துல ஆவி…பிசாசு… இதெல்லாம் இருக்கா…. உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கா ….?” என்று பிரபு கேட்க, 

அவர்கள் இருவருக்கும் பின்னால் இருந்த உருவம் அதைக்கேட்டு புன்முறுவல் பூத்தது. 

அத்தியாயம் 5 

ஆவி…. பிசாசு இருக்கா …. உங்களுக்கு நம்பிக்கை இருக்கா என்று பிரபு கேட்டதும், 

“என்னப்பா…. திடீர்னு இது மாதிரி கேள்வி….? ஏதாச்சும் ஆராய்ச்சி பண்றியா …?” என்று அம்மா கேட்க, 

“இல்லம்மா…இது என் நண்பன் ஒருவன் கேட்ட கேள்வி, எனக்கு இதிலெல்லாம்  நம்பிக்கை கிடையாது . இருந்தாலும் உங்ககிட்ட கேட்டுப்பாக்கலாம்னு தான் ….” பிரபு பதிலளிக்க, 

“உனக்கு கடவுள் பக்தி கிடையாது . அதனால் எதையுமே நீ சந்தேகமாத்தான் பார்ப்பே …. பாசிட்டிவ் இருந்தால் கண்டிப்பாக நெகட்டிவ் இருக்கும். இருட்டு – வெளிச்சம், பகல் – இரவு, நன்மை – தீமை போலவே கடவுள் என்று ஒருவர் இருந்தால் கண்டிப்பா ஆவி, பிசாசு என்பதும் இருக்கும் ….” 

“இருக்கும் என்றால் நிச்சயமா உங்களால சொல்ல முடியாது அப்படித்தானே ….!” 

“ஆமாம்பா…. நா எப்பிடி நிச்சயமா கூற முடியும்….?. எல்லோரும் சொல்றதால நாமளும் அத உறுதிபடுத்த முடியாது இல்லியா …. சரி இப்ப எதுக்கு இந்த டாபிக் … ரொம்ப நேரமாச்சு …. படுக்கலாம் ” என்று கூறிவிட்டு  எழுந்திருக்க, பின்னால் நின்று கொண்டிருந்தவரைப் பார்த்து 

“என்ன… எப்ப வந்தீங்க…. சைலண்டா வந்து நிக்கிறீங்க….?” என்று பிரபுவின் தாயார் அங்கு நின்றிருப்பவரைப் பார்த்துக் கேட்க, 

அதுவரை யோசனையில் இருந்த பிரபு 

பின்னால் திரும்பி பார்க்க அங்கே அவனது சித்தப்பா பரந்தாமன் நின்று கொண்டிருந்தார். 

“என்ன சித்தப்பா ….! எங்க போயிட்டீங்க….? ரெண்டு மூணு நாளா ஆளையே பாக்க முடியல …..?” என்று பிரபு கேட்க, 

“நா வந்தது கூட தெரியாம அம்மாவும் புள்ளையும் சீரியஸா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தீங்க….அதனால தான் சைலண்டா வந்து நின்னுக்கிட்டு இருந்தேன்…ஆங்… என்ன கேட்ட…எங்க போயிருந்தேன்னுதானே …. நாகர்கோவில்ல என்னோட நண்பனுடைய பையன் கல்யாணம் . அதுக்குதான் போயிருந்தேன் ….” 

“ஏம்மா …. என்னய கல்யாணம் பண்ணச்சொல்லி வற்புறுத்திரீங்களே….ஏன் சித்தப்பாவைமட்டும் அவர் இஷ்டத்துக்கு விட்டுட்டீங்க….?” 

“நாங்க கல்யாணப்பேச்ச ஆரம்பிச்சாலே ….ஆறு மாசத்துக்கு ஆப்சண்டா ஆயிடுவாறு….சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு…சரி தலையெழுத்துப்படி நடக்கட்டும்னு விட்டுட்டோம்…சரி…கீழ வாங்க…படுக்கணும்… நேரமாச்சு…” என்று கூறியபடி கீழே இறங்கினார். 

காரை ஜானி ஓட்டிக்கொண்டிருக்க அருகே பிரபு அமர்ந்தவாறு செல்லை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். 

கார் சேத்துப்பட்டு பொன்றாயன் மங்கலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது . ஞாயிறு விடுமுறை என்பதால் இருவரும் அலுவலகம் விடுமுறை. 

“பாஸ் … அந்த லேடியைத்தேடித் தானே போறோம் …” என்று கேட்க, 

“அந்த ஊர் ஸ்டேசனுக்குப் போயி அவங்க சொன்ன விஷயம் உண்மையா என்று விசாரிக்கப் போறோம் ….”

“வாங்க…. வாங்க பிரபு… ஜானி …! எங்க இந்த பக்கம் …? இந்த ஜோனலுக்கெல்லாம் வரமாட்டீங்களே….அதிசயமா இருக்கு …” என்று வரவேற்றார் 

பொன்றாயன் மங்கல ஸ்டேசன் எஸ்.பி. சற்குணம்.

“வணக்கம் சற்குணம் …! எப்பிடி இருக்கீங்க ….?” என்று பிரபு கேட்க, 

“போலீஸ்காரன் நல்லா இருக்கேன் என்று சொன்னால் கண்டிப்பா அது பொய்தான் … இல்லையா ஜானி” என்று கூறிக்கொண்டே இருவரின் கையைப்பற்றி குலுக்கினார். 

“அப்புறம்….வேலை இல்லாம நீங்க வரமாட்டீங்களே ….?” என்று கூறிக்கொண்டே டீயை கொண்டுவரச் சொல்லிவிட்டு தானும் அமர்ந்தார். 

“சொல்லுங்க பிரபு …. என்ன செய்யனும் நான்” சற்குணம் கூற, 

“சார்…நீங்க கற்பூரம். சட்டுனு புரிஞ்சிக்கிட்டீங்க…..” ஜானி கூற, 

“இல்லன்னா … இந்த உத்தியோகத்துல தாக்கு புடிக்க முடியுமா…. ஜானி ” என்று சற்குணம் கூறவும், 

“சற்குணம்…! உங்க ஏரியாவுல ஜமீன் மாளிகை ஏதாச்சும் இருக்கா …?” என்று பிரபு கேட்க, 

“ஜமீன் மாளிகையா …? இருக்கிற மாதிரி தெரியலையே….” கொஞ்சம் யோசித்த சற்குணம் “ஆனா…பாழடைஞ்ச மாளிகை ஒண்ணு இருக்கு, ஏன் கேக்குறீங்க….?” கேள்வியாய் கேட்க, 

“பாழடைஞ்ச மாளிகையா…இல்லை….வேற இருக்கும் யோசிச்சி சொல்லுங்க …!” பிரபு தொடர, 

“கொஞ்சம் இருங்க ….” என்று கூறிவிட்டு “கனிமுத்து….இங்க வாங்க…” என்று கூப்பிட ஹெட்கான்ஸ்டபிள் கனிமுத்து அருகில் வந்து “சார் …!” என்று வந்து நிற்க, 

“கனிமுத்து…நம்ப ஏரியாவுல ஜமீன் மாளிகை இருக்கா…?” 

“அப்பிடி எதுவும் இல்லை….ஆனா பாழடைஞ்ச மாளிகை ஒண்ணு இருக்கு. அதை ‘மாதப்பன் கோட்டை’ன்னு சொல்லுவாங்க …” 

“பிரபு ….இந்த கோட்டை மட்டுந்தான் பழங்கால மாளிகை. அதுவும் சேதமடைஞ்சு கிடக்கு. மக்கள் நடமாட்டம் இல்லாததால முள்காடு முளைச்சுக் கிடக்கு, ஆமா எதுக்கு இதப்பத்தி கேக்குறீங்க…? எனிதிங்க் ராங் …?” என்று சற்குணம் கேட்க, 

“நத்திங் சீரியஸ் …! என்னோட நண்பர் ஒருவர் அந்த பங்களா வாங்குற முயற்சியில் இருக்கார். அதப்பத்தி டீடெய்ல்ஸ் வேணும்னு எங்கிட்ட கேட்டுக்கிட்டார். அதனாலதான்.” 

“எனக்குத் தெரிந்தவரை அந்த பங்களாவுக்கு உரியவர் என்று யாரும் இருப்பதாக தெரியவில்லை . மே பி வெளியூர்ல இருக்கிறாங்களோ… என்னவோ …” 

“ஒகே சற்குணம் ….! எதுக்கும் அந்த பங்களாவ பாத்துட்டுப் போறோம் …” 

“உங்களுக்குத் துணையா கான்ஸ்டபிளை அனுப்பட்டுமா …?” 

“நோ … தேங்க்ஸ் …! ஆன் தி வே பாத்துட்டுப் போறோம், பை… சற்குணம் …!” என்று கூறிவிட்டு இருவரும் கிளம்பினார்கள். 

வெளியே வந்ததும் ஜானி “ஏன் பாஸ் …அந்த லேடி ஸ்டேசனுக்கு வந்து கம்ப்ளெயிண்ட் குடுத்ததாக கூறினார்களே….அதைக் கேட்டிருக்கலாம் அல்லவா…? 

“எனக்கே இது எப்படிப்பட்ட கேசு என்று புரியவில்லை. அவங்களையும் நாம குழப்ப வேண்டாம்னு தான் சொல்லலை. சரி…வண்டியை எடு…. அந்த இடத்துக்குப் போவோம் ..” என்று பிரபு கூறவும் ஜானி காரை ஸ்டார்ட் செய்தான். 

“பாஸ் … கண்டிப்பா அங்க போகத்தான் வேணுமா… நல்லா யோசிச்சி சொல்லுங்க …” ஜானியின் கேள்வியில், 

“அடப்பாவி … நீயா … இப்பிடி பேசுறது. அசால்ட்டா பெரிய பெரியகிரிமினல்ஸ் கூட எல்லாம் போராடி வந்துருக்கே…. நீயா இப்பிடி…?” பிரபு கலாய்க்க, 

“பாஸ்….மனுசனுங்கன்னா தைரியமா போராடலாம்…இது வேற மாதிரி இல்ல தோணுது” 

“மண்ணாங்கட்டி…..நாம வக்கீல்…. எதையும் தீரவிசாரிக்காம இதுதான் என்று பாயிண்ட் பண்ணக்கூடாது . கிளம்பு…மழை வர மாதிரி தோணுது…”

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் காடுகள் போல் வளர்ந்து கிடக்கும் மரங்கள். மரங்களினூடே செல்லும் வழியாக கார் மெல்ல சென்று கொண்டிருந்தது. 

தூறல் மெல்ல போட்டுக்கொண்டிருக்க பகல் நேரமானாலும் மேகமிருட்டும் மரங்களின் அடர்த்தியும் சேர்ந்து வழி இருட்டாக இருந்தது. வைப்ரேட்டர் மெல்ல நீரினை தள்ளிக் கொண்டிருக்க, ஜானி மெல்ல கார் ஓட்டிக் கொண்டிருந்தான். 

திடீரென்று மின்னல் கீற்று வெளிப்பட, காருக்கு முன்னால் முண்டாசு கட்டிய மனிதன் ஒருவன் தலையில் விறகு சுமந்தபடி செல்வது தெரிந்தது. 

அவனைப் பார்த்ததும் ஜானி “பாஸ்… அந்த ஆளை நிறுத்தி விசாரிக்கலாம் …. இந்த ஏரியா ஆள் போலத் தெரியுது ….” என்று கூற, 

பிரபு தலையாட்டவே கார் அந்த மனிதனருகே மெல்ல சென்று நின்றது. 

கார் தன்னருகே வந்து நிற்பதை பார்த்ததும் அந்த மனிதன் நிற்கவே, 

ஜானி காரின் கதவைத் திறந்து “ஐயா … நீங்கள் இந்த ஊர்க்காரரா …?” என்று கேட்க 

“ஆமாம்… எதுக்கு கேக்குறீங்க…?” 

“இங்க ஜமீன் மாளிகை இருக்காமே….எவ்வளவு தூரத்துல இருக்கு தெரியுமுங்களா …?” 

“அந்த கோட்டை பங்களாவா…. இதோ நீங்க போற வழியிலேயிருந்து மூணு கல் தொலைவுல இருக்கு. ஆமா …எதுக்கு அந்த பங்களாவ பாக்க போறீங்க ….”

“நாங்க பழங்கால அரணமனைகள், வீடுகள், மாளிகைகள் எல்லாம் ஆராய்ச்சிப் பண்ற படிப்பு படிக்கிறோம். இந்த ஊர்லயும் பங்களா ஒண்ணு இருக்கிறதா கேள்விப்பட்டோம். அதை பார்க்கணும்னுதான் கேக்குறோம் ….” 

“ஐயா…சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க…அந்த இடம் ஒரு மாதிரிங்க…அங்கெல்லாம் நீங்க தனியா போகவேணாம். தாய்க்கு புள்ளையா பத்திரமா ஊர்போய் சேருங்க…அதான் உங்களுக்கு நல்லது …” என்று கூறிவிட்டு நடையைக்கட்டினான். “ஐயா… ஐயா… கொஞ்சம் நில்லுங்க . ஏன் அந்தப் பக்கம் போகக்கூடாதுன்னு சொல்றீங்க…காரணத்த தெரிஞ்சுக்கலாமா …?” ஜானி கேட்க, 

“என்ன தம்பி…! இதெல்லாம் பட்டவர்த்தனமாவா சொல்லுவாங்க…அங்க போனவங்க யாரும் திரும்பி வந்ததா சரித்திரமே இல்லை. எங்க ஊர்லயும் உன்னப் போல இளவட்ட பசங்க சொன்னப்பேச்சக் கேக்காம போயி காணாப்பொணமா போயிட்டாங்க…. எல்லாம் பேய் பிசாசுங்க செய்யிற வேலதான் . நல்லத்தனமா போய் சேருங்க …. மழை அதிகமா வருது. நா வீட்டுக்குப் போகணும்…” அதற்கு மேல் தனக்கு அங்கு வேலையில்லை என்பதுபோல் நடையைக் கட்டினான் அம்மனிதன். 

“என்ன பாஸ்…என்ன பண்றது …?” என்று ஜானி வினவ “சரி…திரும்பலாம். மழை வேறபலமா வர்ற மாதிரி தெரியுது” என்று பிரபு கூற, 

காரை ரிவெர்ஸில் எடுத்தான் ஜானி . 

ஆனால் காரை எடுக்கமுடியாமல் ஏதோ தடுக்கவே “என்ன பாஸ்…காரும் ஜகா வாங்குது…..”

“இறங்கி பாரு …கல் ஏதாச்சும் இருக்கப்போகுது…” மழையில் நனைந்துகொண்டே கீழே இறங்கி காரின் பின்னால் சென்ற ஜானி 

“பா …. ஆஸ் …..” என்று அலறினான். 

அத்தியாயம் 6 

ஜானியின் அலறல் சத்தம் கேட்டு பிரபு காரை விட்டு இறங்கி பின்னால் ஓடி வந்தான். 

அங்கே அவன் கண்ட காட்சி மனதை உறைய வைத்தது. சற்று முன்னர் தங்களிடம் பேசிய முண்டாசு கட்டிய மனிதன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். 

இருவரும் பிரமை பிடித்து நிற்க ஜானி திகிலுடன் “பாஸ் …! எப்ப இந்த ஆளு பின்புறம் வந்தான் . நம்மிடம் பேசிவிட்டு முன்புறமாகத்தானே சென்றான்…அன்பிலீவபுள்….” என்று சொல்லிக்கொண்டே சாலையின் ஓரம் கிடந்த ஒரு பாறாங்கல் மேலே அமர்ந்தான். 

பிரபுவும் தன் நெற்றியைத் தேய்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான் . பின்பு இறந்து கிடந்த உடல் அருகே குனிந்து உற்றுப்பார்த்தான். 

“பாஸ்….இறந்துட்டானா….பாருங்க …..” சற்று படபடப்புடன் பேசிய ஜானியை சைகையால் தன் அருகே வருமாறு அழைத்தான் பிரபு. 

அருகில் வந்த ஜானியிடம் காதில் ஏதோ காதில் கிசுகிசுத்தான் பிரபு. 

“இஸிட்…நெசமாவா …!” என்று ஆச்சரியத்தோடு வினவினான் ஜானி . 

“யெஸ் …. சரி நீ போய் கார்ல கேமராவை எடுத்துவா….” காரிலிருந்து காமிராவை எடுத்து வந்த ஜானி பல கோணங்களில் அந்த பிணத்தை படம் பிடித்தான். 

“பாஸ் …. அடுத்து என்ன ?” என்று ஜானி கேட்க, “சற்குணத்துக்கு போன் போட்டு வரச்சொல்லு…” என்றான் பிரபு. 

போன் சிக்னல் கிடைக்காம போகவே “பாஸ் …இங்க சிக்னல் கிடைக்கல….என்ன செயாயிறது…” 

“சரி…நான் டிரை பண்ணி பார்க்கறேன்…” என்று பிரபு போன் போட முயல அவனுக்கும் சிக்னல் கிடைக்கவில்லை. 

“ஒண்ணு செய்….அந்த மேடு ஏறி அங்க ஒரு பாறை இருக்கு பாரு….அங்கே ஏறி டிரை பண்ணி பாரு….” பிரபு கூறியதும், 

மேட்டுப்பகுதியை ஒரே தாவில் ஏறிய ஜானி அங்கிருந்த பாறை மேல் மெல்ல ஏறினான். 

சிக்னல் கிடைக்கவே சற்குணத்திற்கு விஷயத்தைக் கூற, உடனே ஆம்புலன்ஸிடன் வருவதாக தகவல் கிடைத்தது. 

கீழே இறங்கிய ஜானி விவரத்தைக் கூற காற்றுடன் மழை பலமாகவே இருவரும் காரைத் திறந்து உட்கார்ந்தனர். 

“பாஸ் … மணி நாலுதான் ஆகுது . ஆனாலும் மணி ஆறு போல இருக்கு பாருங்க ….” என்றான். 

பிரபுவும் வாட்ச்சைப் பார்த்துவிட்டு ஜானியிடம் “உனக்கு பசிக்குதா ….?” என்று கேட்க, 

“பசிச்சுது ஆனா இப்ப இல்ல. நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னே புரியலை….” தலையை லேசாக பிடித்தவாறு ஜானி காலை நன்றாக நீட்டி சீட்டில் நன்கு சாய்ந்து அமர்ந்தான். 

“என்ன…பயந்துட்டியா….?” பிரபு கேட்க, 

“பயமா…எனக்கா…நெவர். ஆனா இது என்னவாக இருக்கும்னு ஒரு கியூரியாசிட்டி மனசுல ஓடிட்டே இருக்கு…அதான்…” 

“சரி பாத்துக்கலாம்….ஜீப் சத்தம் கேட்குது. வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்….” என்று பிரபு கூறவும், 

முன்னால் ஜீப்பும் பின்னால் ஆம்புலன்ஸும் அவர்களுக்கு பின்னால் சத்தத்துடன் வந்து நின்றது. 

ரெயின்கோட்டில் சற்குணமும் இரண்டு கான்ஸ்டிபிளும் இறங்கிவர, காரின் கதவை திறந்து இருவரும் கீழே இறங்கினர். 

“என்ன பிரபு ….எனி பிராப்ளம்….? ஜானி சொல்றபோது எனக்கு எதுவும் சரியா கேட்கல….ஏதோ விபரீதம்னு மட்டும் புரிஞ்சுது. நீங்க ஏதோ ஆபத்துல இருப்பீங்கன்னு மட்டும் புரிஞ்சுது. ஏதோ ஆக்ஸிடண்ட் ஆம்புலன்ஸ் வேணும்னு ஜானி கூறினாரே….யாரு…எங்க இருக்கு பாடி….?” என்று சற்குணம் சற்று படபடப்பாக பேச, 

“உங்க ஜீப் லைட்டை போட்டு வெளிச்சத்தைக் காட்டுங்க…எங்க காருக்கு கீழே தான் இருக்க …” பிரபு கூற, 

டிரைவர் ஜீப்பை ஆன் செய்தார். 

அனைவரும் கீழே குனிந்து பார்க்க ஆச்சரியம் காத்திருந்தது அவர்களுக்கு. 

கீழே எந்த உருவமும் காணவில்லை. இரத்தக்கறையும் இல்லை. 

“என்ன பிரபு…எதுவும் இல்லையே…” சற்குணம் கேட்க, 

“என்ன…மாய மந்திரம் போல் இருக்கு…நாம கார்லதானே இருந்தோம் . யாராவது வந்து எடுத்திருந்தா நமக்கு தெரியாம போகாதே…. சே…!” என்று கையை பிசைந்து கொண்டான் ஜானி. 

பிரபு காரிலிருந்து காமிராவை எடுத்து வந்து தான் எடுத்த போட்டோவை சற்குணத்திடம் காட்ட, அதைப்பார்த்த சற்குணம் 

‘யெஸ்….யூ ஆர் கரெக்ட்….யாரோ பாடியை ரிமூவ் பண்ணியிருக்காங்க….எனக்கு ஆரம்பத்துலேயிருந்து இந்த காட்டுவழியும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் சந்தேக லிஸ்டில தான் இருந்தது. அதற்கேற்றாப்போல இப்ப இது நடந்துருக்கு.

சரி பிரபு …. இந்த மழையில இந்த பகுதிய சர்ச் பண்ண முடியாது . நீங்க கிளம்புங்க..நாளைக்கு பகல் நேரத்துல இங்க வந்து ஒரு ரவண்டு போயி பாக்கிறோம். எப்பிடிப்பட்ட கில்லாடியா இருந்தாலும் என்னைக்காவது ஒருநாள் போலீஸ்காரன்கிட்டே மாட்டாம இருக்க முடியாது . ஒகே… வி வில் சீ யூ அனதர் டே….!” எனாறு கூறவும், இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். 

மறுநாள் அலுவலகம் வந்த பிரபு நிலா இன்னும் அலுவலகம் வராததைக் கண்டு சீனுவைக் கூப்பிட்டு கேட்க, “தெரியலீங்க சார்…மேடம் போன் எதுவும் பண்ணல…டிராபிக்கில மாட்டிக்கிட்டாங்களோ…என்னவோ…?” என்று கூறினான். 

தன் சேரில் அமர்ந்து சிறிது நேரம் கண்மூடி யோசனையுடன் இருந்தான். மீண்டும் சீனுவை அழைத்து அப்பாயிண்ட்மெண்ட் இருக்குதா என்று கேட்க, 

“நீங்கதான் திங்கள் மதியம் ரெண்டு மணியிலிருந்து அப்பாயிண்ட்மெண்ட் கொடுன்னு சொன்னீங்களே ….” என்று கூறவும், 

“ஆமாம்…. மறந்துட்டேன்….! சரி நீ போர்த் கபோர்டுல 506, 377 பைல்களை எடுத்து கொடுத்துட்டு, டீ பிளாஸ்க்கை கொண்டுவா” என்று கூற, 

பிரபு சொன்ன வேலைகளை முடித்துவிட்டு டீ கப்பில் டீயை ஊற்றி பிரபுவிடம் கொடுத்தான் சீனு. நிலா எப்போதும் சரியா பத்து மணிக்கெல்லாம் தன்னுடைய கேபினுள் இருப்பாள். 

அன்று எந்தந்த பைல்களுக்கு நோட் எழுத வேண்டுமோ எழுதி பிரபுவின் டேபிளில் வைத்துவிடுவாள். கஸ்டமர்களுக்கு அனுப்பவேண்டிய லீகல் பார்மாலிட்டீஸ் அனுப்ப தயாராகிவிடுவாள் . 

பிரபு வந்தவுடன் அவன் கொடுக்கும் ஸ்டேட்மெண்டுகளை டிக்டேட் எடுத்துக்கொண்டு கம்யூட்டரில் பதிவு செய்து விடுவாள். 

அவன் மேலோட்டமாக கொடுக்கும் இன்ஸ்களை டீடெய்லாக கோட் நம்பருடன் பதிவு செய்து விடுவாள். ஜானி ஐகோர்ட்டுக்கும் பீல்டுலயும் பிரபு கொடுக்கும் அசைய்ன்மெண்டுகளை முடிப்பான். 

இருவரும் அவனுக்கு இரு கைகளைபோல. அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதினால் தான் இன்று அவன் ஒரு சக்ஸஸ்புல் லீடீங் லாயராக இருக்கிறான். ஜானிக்கு பிரபுமேல் அளவுகடந்த மரியாதை . பிரபுவின் ஒவ்வொரு அணுகுமுறையும் ஜானிக்கு பிரமை ஏற்படுத்தும். தன் பாஸ் ஒரு கேஸில் ஆஜரானால் அது கண்டிப்பாக ஜெயம் என்று நினைப்பான். 

அப்படித்தான் பிரபுவும் தான் எடுக்க வேண்டிய பிராதுகள் உண்மையானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பான். 

ஏழ்மை நிலையிலிருப்பவர்களின் நியாயமான காரணங்களுக்கு பீஸ் வாங்காமல் இலவசமாகவே வாதாடி வெற்றி பெற்றுத் தருவான். 

அதனால் அவனுக்கு நல்ல பெயர் மக்களிடத்திலும், வக்கீல்களின் சுற்றத்திலும் உண்டு . 

அவனை கண்காணிக்கும் இளவட்ட நாயகிகளிடம் அவன் ஒரு ஹீரோ . ஜானி அடிக்கடி பிரபுவை கலாய்ப்பான். 

இருந்தாலும் அவன் மனதில் யாராலும் இடம் பிடிக்க முடியவில்லை. நிலாவுக்கு அவன் மேல் மரியாதை உண்டு . அவன் தனக்கு எட்டாக்கனி என்பதால் அந்த நினைப்பே அவளுக்கு வருவதில்லை. 

நிலாவின் இந்த ஆட்டிட்டூயூட்டே பிரபுவை அவள் பக்கம் ஈர்த்தது. 

நிலா இல்லாதபோது தான் தான் அவளை அதிகம் மிஸ் பண்ணுவது புரிந்தது . வேலையில் கவனம் செல்லவே இல்லை. 

“ஏன் இத்தனை நாளும் இல்லாத பரிதவிப்பு தன்னிடம். அவளும் எத்தனையோ முறை விடுப்பு எடுத்திருக்கிறாள். அப்போதெல்லாம் தோன்றாத வெறுமை இப்பொழுது மட்டும் ஏற்படக்காரணம் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியதால் இருக்குமோ…?’ 

அவனுக்கு எந்த வேலை செய்வது என்றே சற்று நேரம் புரியவில்லை. 

சரி அவளுக்கு போன் செய்து பார்க்கலாம் என்று போன் போட சுவிட்ச்ஆப் என்று பதில் வந்தது. 

கோர்ட்டிலிருந்து ஜானி பேச அவனுக்கு தேவையான தகவல்களை கோப்புகளை பார்த்து பிரபு கூறிவிட்டு, தன்னுடைய வேலையில் ஆழ்ந்து விட்டான் . 

சோம்பலுடன் கையை நீட்டி முறித்தவாறு மணியைப் பாராத்தான் . மணி ஒன்று . 

‘இந்த ராட்சசிக்கு என்ன வந்தது. போன் கூட போட முடியாத அளவுக்கு . இங்க ஒருத்தன் கண் பூத்து காத்துக்கிடப்பானே…என்ற நினப்பு இருக்குதா….ஜடம்…ஜடம்…என்னடா….காதலிக்கிறோமே அவங்கிட்ட சின்ன சின்ன ரொமான்ஸ்….ஏக்கப்பார்வை… ஹீம்….இந்த காலத்து பொண்ணு மாதிரியா இருக்கா…சரியான சாம்பாரு….’ மனதுக்குள் அவளை திட்டியபடி நேற்று எடுத்த போட்டோவை பார்க்கலாம் என்று காமிராவை எடுத்தான். 

அப்போது சீனு உள்ளே நுழைந்து “சார்…சாப்பாடு போயி எடுத்து வரட்டா…?” என்று கேட்க, 

“சரி…போயிட்டு சீக்கிரமா வா….அம்மா அந்த வேல சொன்னாங்க….இந்த வேல சொன்னாங்கன்னு லேட் பண்ணக்கூடாது ” என்று பிரபு கூற, 

“சரிங்க சார்…சீக்கிரமா வந்துடறேன்…” என்று கூறிவிட்டு சீனு கிளம்பும்போது, 

“வேண்டாம் சீனு …..! இன்னிக்கு சாருக்குநா சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், இந்தா இந்த கேரியரை அம்மாவுக்கு கொடுத்திடு…” என்று பிரபுவின் அம்மாவிற்காக ஒரு டிபன் கேரியரை சீனுவிடம் கொடுத்துவிட்டு ஒரு சிறிய டிபன் பாக்சை “இந்தா இது உனக்கு…” என்று கொடுத்தாள் நிலா… 

அவளைப்பார்த்ததும் முகம் பரவசமானாலும் ஒரு நொடியில் மறைத்துக்கொண்டு வேலையில் கவனமாக இருப்பதுபோல் பாவனை செய்தான் பிரபு. 

“பிரபு…குட்ஆப்டர்னூன்…” என்று கூறிக்கொண்டே தன் இருக்கை மேசையில் பைகளை வைத்தபடி பிரபுவைக் கவனித்தாள் நிலா. 

தான் விஷ் பண்ணிணால் மறுநொடியில் விஷ் பண்ணும் பிரபு, அன்று சைலண்டாக இருப்பதைப் பார்த்ததும் ‘என்ன பிரபு இன்று கோவமாக இருக்கிறாரோ….நாம போன் பண்ணி பர்மிசன் கேட்காததால இருக்குமோ….?’ என்றெண்ணியவளாய் பிரபுவின் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தாள். “ஸாரி பிரபு…! போன் பண்ணி உங்ககிட்ட பர்மிசன் கேட்க முடியல….ஐயாம் வெரி ஸாரி…!” என்று கூற, அவளை ஏறெடுத்துப் பார்த்த பிரபு “ஏன்…அவ்வளவு பிசியா நீங்க…” என்று வெடுக்கென்று கேட்டான். 

“அப்படி இல்ல…போன்ல சார்ஜ் இல்ல….கரெண்டு வேற காலை ஆறு மணிக்கே போயிடுத்து. நா வர்ர வரைக்கும் வரவே இல்ல… உங்ககிட்ட சொல்லாம பர்மிசன் எடுத்தது தப்புதான். வீட்ல என் தாத்தாவுக்கு திதி . ஆனா நா ஆபிஸ் கிளம்பிட்டேன். அம்மாதான் சண்டை போட்டாங்க…கூடமாட நா ஒத்தாசையா இல்லன்னு…சரி…மதியம் வந்துடலாம்னுதான்…” என்று இழுத்தவளை,

“என்னடா….இங்க ஒருத்தன் நமக்காக ஏங்கி கிடப்பானே….லீவுன்னா பர்சனலா பேசக்கூடாதுன்னு கண்டிசன். சரி வெளியில சந்திக்கலாம் என்றால் அதுக்கும் 144. இன்னிக்கி நா மூட் அவுட்ல இருந்தேன். சரி உன்னப் பாத்தா குறையும்னு நினைச்சேன். ஆனா நீ ஆடி அசைஞ்சு வர்ர… உன்னோட முக தரிசனத்தைப் பார்க்க காத்துக்கிடக்கிற நிலமை எனக்கு…” பிரபுவின் ஆதங்க வெளிப்பாட்டைபா பார்த்து, 

வெட்கமடைந்த நிலா “பிரபு…! நீங்க இப்பிடியெல்லாம் பேசுவீங்களா..ஒண்ணுமே பேசத்தெரியாத ஸாரி ….காதல் வசனம் பேசத் தெரியாதவர்னு நினைச்சிருந்தேன்…ஆனா பிச்சி உதறீங்க…” என்று கூறி சிரிக்கவும், 

அவள் சிரிப்பில் கலந்து கொண்ட பிரபு “ஆமா…என்ன இன்னிக்கி எனக்கும் சாப்பாடு…” 

“இன்னிக்கி வீட்டுல ஸ்பெஷல் சாப்பாடு . உங்கள் விட்டுட்டு என்னால சாப்பிட முடியல…அதனால நானும் ஆபிசிலேயே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டு ரெண்டு பேருக்கும் சேர்த்து எடுத்து வந்தேன்….கையை கழுவிக்கிட்டு வாங்க ..சாப்பிடலாம்…” என்று நிலா கூறி விட்டு வாழை இலையை டேபிளில் பரப்பினாள் . 

அதே நேரம் உள்ளே நுழைந்த ஜானி “என்ன இலையில சாப்பாடு….? பாஸ்…அம்மா ஸ்பெஷலா என்ன சமைச்சிக் கொடுத்தாங்க….வீட்ல விசேஷமா ….?”

“வாங்க ஜானி…! சாப்பாடு நான் கொண்டு வந்தது . நீங்களும் வாங்க….சேர்ந்து சாப்பிடலாம்….” நிலா அழைப்பு விடுக்க, 

“நைஸ் … தேங்க்யூ ..! ஆனா நா ஒருத்தருக்கு வாக்கு கொடுத்திருக்கேன் அவங்களோட சாப்பிடுவதாக…அதனால நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க …” ஜானி கூற, 

“யாருகிட்ட ஜானி…? எக்குதப்பா வாக்கு குடுத்துடாத…” கையை துடைத்தவாறு பிரபு வந்து உட்கார, 

“நா யாருக்கு வாக்கு குடுக்க முடியும்..அதான் ஒரு சுருக்கு கயிரு மாட்டிக்கிட்டு இருக்கேன்ல ….” 

“ஓஹோ….டினாவை சொல்றியா…? அவளுக்கெல்லாம் நீ பயப்படற ஆளா…!” பிரபு கலாய்க்க, 

“பாஸ்….நாட்டுக்கு ராசாவானாலும் வீட்டுக்கு கூஜா தான். இது எனக்கு மட்டுமா…? நாளைக்கி உங்களுக்கும் இந்த நிலமைதான்….” நிலாவை பார்த்துக் கொண்டே ஜானி சொல்ல, 

“ஜானி…. ஓவரா கலாய்க்காதீங்க….அடுத்த நிமிடம் எப்படி நிலமை மாறும்னு யாருக்கும் தெரியாது . நா மட்டும் இதுல விதி விலக்கா என்ன…?” நிலா உணவை பரிமாறிக்கொண்டே புன்சிரிப்புடன் கூற, 

“ஓ…. அம்மாவுக்கு அப்பிடியெல்லாம் ஒரு எண்ணம் இருக்கா….அது இந்த ஆளுகிட்ட செல்லாது. நம்ம வீட்ல எப்பவும் சிதம்பர ஆட்சிதான்….” பிரபுவும் வேண்டுமென்றே நிலாவை வம்புக்கு இழுக்க, 

“என்ன …என்ன … அப்ப நா உங்களுக்கு அடிபணிஞ்சி நடக்கணுமா…அதெல்லாம் முடியாது…ஈக்குவல் அண்டர்ஸ்டாண்டிங் இல்லன்னா உடனே டிவோர்ஸ்தான்…புரிஞ்சுதா…” நிலா பிரபுவை மடக்க, 

“நிலா…டிவோர்ஸுக்கு வேற யார்கிட்டேயும் போயிடாதீங்க….எங்கிட்டேயே வந்திடுங்க….ஈசியா நா உங்களுக்கு வாங்கி கொடுத்து பிரிச்சி விட்டுடறேன்…” ஜானி கலகலவென்று சிரிக்க, 

“ஏண்டா…உனக்கு இந்த கொல வெறி…! அடின்னு கூப்பிடறதுக்கு பொண்டாட்டி இல்ல…அதுக்குள்ளே புள்ள எத்தனை…குட்டி எத்தனைன்னு கணக்கெடுத்தானாம் ஒரு கேனயன். இப்பதாண்டா….நாங்க பிள்ளையார் சுழியே போட்டிருக்கோம்…எங்கள விட்டுடு…” 

கெஞ்சுவதுபோல் பிரபு ஜானியை பார்த்து கும்பிடு போட, 

மூவரும் கலகலவென்று நகைத்தனர். 

அப்போது மேசையின் மேலிருந்த நிலாவின் கைப்பை திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. 

அத்தியாயம் 7 

தன் கைப்பை திடீரென்று எரிவதைப் பார்த்த நிலா ‘ஐயோ…!’ என்று அலற, 

பிரபுவும் ஜானியும் பதறியபடி வாட்டர்கேனுடன் அருகே ஓடினர். ஜானி நீரை எரிகின்ற கைப்பைமேல் ஊற்ற நிலாவும் இன்னும் நீரை எடுத்து வந்து ஊற்ற நெருப்பு அணைந்து புகைய ஆரம்பித்தது. 

நிலா அப்பையை எடுக்க சட்டென்று பிரபு தட்டிவிட்டு, “உனக்கென்ன அவசரம். நெருப்பில் இளகி இருக்கும் தொட்டால் கையில் ஒட்டி கை சதையே வெந்துவிடும் ? கொஞ்சநேரம் இரு ஆறட்டும்…” என்று சொல்ல, 

“இல்ல…அதுல ஏடிஎம் கார்டு பான் கார்டு ஐடி பாஸ்புக் எல்லாமே இருக்கு….எரிஞ்சுடுச்சான்னு பாக்கணும் கேஷ் வேற இருக்கு…” 

“சரி….நானே எடுக்கிறேன்…ஒன்னும் ஆகியிருக்காது. கவலப்படாதே ….!” என்று கூறிவிட்டு கர்சிப்பை வைத்து பேக்கின் ஜிப்பைத் திறந்து அதில் இருக்கும் பொருட்களை கீழே கொட்டினான் பிரபு . 

“நல்லவேளை….எதுவும் பாழாக …உடனே பாத்துட்டு அணைச்சிட்டோம்ல…எல்லாம் சரியா இருக்கா பாரு நிலா….” என்று ஜானி கூற,

நிலா ஒவ்வொன்றாக தனியே எடுத்து வைத்தாள். கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்த நிலாவைப்பார்த்து, 

“என்ன….பயந்துட்டியா…” பிரபு கேட்க, 

“இல்ல….இது எப்படி நடந்துருக்கும்….எனக்கு குழப்பமா இருக்கு….” நிலா நடுக்கம் குறையாதவளாக கேட்க, 

“தீப்பெட்டி கற்பூரம் மாதிரி எளிதில் தீப்பிடிக்கிற பொருள் ஏதும் கொண்டுவந்தியா ….” ஜானி கேட்க,

“அப்பிடியெல்லாம் எதுவும் எடுத்து வரல….”

“ஜானி அந்த பேக்கை எடு ….” பிரபு கூற, 

ஜானி எடுத்துத்தர அதை வாங்கிய பிரபு அப்பிடியும் இப்பிடியும் திருப்பி திருப்பி பார்த்தான் . பின்பு அதை மூக்கினருகே எடுத்து மோர்ந்துப் பார்த்தான்….

‘என்ன பாஸ்…கெரசின் வாடை வருதான்னு பாக்கிறீங்களா…” ஜானி கேட்க, 

“இல்லை….இதப்பாரு….” என்று பேக்கை நீட்டினான். ஜானி அதை வாங்கிப் பார்க்க அதன் மேல் வெண்மை படலம் ஒன்று படிந்திருப்பதைப் பார்த்து, 

“பாஸ்…இது பாஸ்பரஸ் போலத் தெரியுது…” 

“ஆமாம்….பாஸ்பரஸ் பொடியை தூவி இருக்காங்க….நிலா பேக் எப்பவும் உங்கிட்டத்தானே இருக்கும் ….” 

“ஆமாம் பிரபு…”

“வீட்டுக்கு இன்னிக்கி தெரியாதவங்க யாராவது வந்தாங்களா ….? 

“இல்ல…எங்க ரிலேசன்ஸ் மட்டுந்தான் வந்தாங்க….”

“இப்ப வரும்போது வண்டிய எங்கியாவது நிறுத்தினியா….?” 

“ம்…ம்…இல்லியே….எங்கியும் நிறுத்தலயே …” திடீரென்று ஞாபகம் வந்தவளாய் 

“ஆமாம்….நா வரும்போது ஒரு சைக்கிள்காரன் குறுக்கே வந்துட்டான்…சடன் பிரேக் போட்டு நின்னேன்…ஆனா இறங்கலியே…” 

“ம் ..ம்…அப்பத்தான் யாரோ இதை போட்டிருக்காங்க….” பிரபு கூறவும், 

ஜானி “எனக்கு நல்லா புரிஞ்சுடுத்து…அந்த சைக்கிள் மோதல் கூட திட்டத்தின் ஒரு பகுதியாத்தான் இருக்கும்….”

“சரியா சொன்ன ஜானி….! நிலா நீ நிக்கும்போது பின்னால யாராவது பக்கத்தில் வந்த மாதிரி தெரிஞ்சுதா….?” 

“எனக்கு அப்பிடி எதுவும் தெரியலையே…” 

“நீதான் சைக்கிள்காரன் மேல கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு இருந்திருப்பியே…அப்புறம் எப்பிடி பின்னால் நடக்கறது தெரியும்..” 

“அப்பிடி பார்த்தா பேக முன்னாலதானே தொங்க விட்டிருந்தேன்..எனக்கு தெரியாம எப்படி பண்ண முடியும்….ஜானி….”

அப்போது பிரபு குறுக்கிட்டு “இல்ல…இது பக்கா பிளான். அந்த சைக்கிள்காரன் மோதும்போது நீ தடுமாறி இருப்பே…அப்ப அவன் விழாம இருக்க உன் வண்டியை பிடிச்சிருப்பான்…சரியா…?” 

“யெஸ்…அவன் பாலன்ஸ் பண்ண முடியாம என் வண்டியை புடிச்சான். அப்ப வண்டியும் லேசா சாய நா கால கீழே ஊணிட்டேன் …” 

“அப்ப நா கெஸ் பண்ணிணது கரெக்ட் ….” பிரபுவின் பேச்சைக் கேட்ட நிலா, 

“அப்ப என்னை யாரோ பாலோ பண்றாங்களா ..?” பயத்துடன் கேட்க, 

“மே பி….ஆனா இது உனக்கான டாஸ்க் இல்ல…எங்கள பிலேம் பண்ண யாரோ செய்யிற பிளே …” பிரபு அவளை ஆறுதல் படுத்த, 

“பாஸ்…. ஏதோ ஒரு கூட்டம் நம்மள ஸ்மெல் பண்ணிக்கிட்டே இருக்கு. ஆனா மாட்டாமலா போகும். எங்ககிட்ட விளையாட்டா…?” 

ஜானி காலரை தூக்கி விட்டு கெத்தாக பேச, 

“நாம பாக்காதா…விடு ஜானி… சீக்கிரம் அதுக்கும் விடை கிடைச்சிடும். சரி நீ போய் சாப்பிட்டு வா. டினா லேட்டுன்னு கோவிச்சிக்கப் போறா…” 

“சரி .. நாளைக்கி அமிர்தம் கேஸ் பைனல் இல்ல… கிளையண்ட்ஸிக்கு சொல்லிட்டியா….?” 

“சொல்லியாச்சு பாஸ்….கரெக்ட் டைம்முக்கு வந்துடுவாங்க…பாஸ் மறந்தே போச்சு…அன்னிக்கி ஒரு கொட்டேசன் வந்துதே…அதுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சிட்டீங்களா?” 

“ஆமாம் பிரபு…என்ன அர்த்தம் அதுக்கு….?” நிலாவும் ஆர்வத்துடன் கேட்க, 

“நானும் உங்களப்போலத்தான்….எனக்கு மட்டும் எப்படித் தெரியும் …எனக்கு தெரிஞ்ச சிவனடியார்கிட்ட குடுத்திருக்கேன்….சொல்றேன்னு சொல்லியிருக்கார்….பார்க்கலாம்…” 

“அப்புறம் பாஸ்…உங்க மேட்டரை அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா….கீரின் சிக்னல் கிடைச்சிடுச்சா…”ஆர்வமுடன் ஜானி கேட்க, 

“இல்ல….அதுக்குள்ள என்ன அவசரம். மெல்ல சொல்லிக்கலாம் ….” 

“என்ன நிலா…நீங்க எப்படி….”

“என்ன ஜானி…எங்கப்பாவைப்பத்தி தெரியாதா உங்களுக்கு….ரொம்ப டென்சன் பார்ட்டி. அதுவுமில்லாம பயங்கர ஆர்தடாக்ஸ் அம்மா கூட பரவாயில்லை. எப்பிடியாச்சும் சமாளிக்கலாம். எப்பிடி சொல்றதுன்னே தெரியலை….கொஞ்ச நாள் போகட்டும்….தானா தெரிஞ்சா அதுக்குப்பிறகு பார்த்துக்கலாம்…” 

“அதுவும் சரிதான். ரெண்டு பேரும் கொஞ்சநாள் ப்ரியா இருங்க. அப்புறமா பார்த்துக்கலாம் ..” 

“அனுபவம் பேசுது…அப்பிடித்தானே ஜானி…!” 

“சரியா சொன்னீங்க நிலா….! காதலிக்கும்போது இருக்கும் அன்பு இப்ப எங்கன்னு தேட வேண்டியதா இருக்கு….” 

“அதெல்லாம் நாம பாக்குற கண்ணோட்டத்துலதான் இருக்கு. நீங்க டினாவை காதலோடு கவனிச்சா அவளும் பதில் ரியாக்ட் பண்ணுவா….நீங்கதான் வேல வேலன்னு அவளை கண்டுக்கிறதேயில்லை..” 

“சரியாப்போச்சு….உங்ககிட்ட கம்ப்ளெயிண்ட் வந்துடுச்சா…அதெல்லாம் சரியாயிடும்…நாங்க ரெண்டு பேரும் சின்னப்புள்ளங்க மாதிரி. அப்பப்ப இப்பிடித்தான் சண்டை போட்டுக்குவோம …த்ரில் இருந்தாதான் லைப் நல்லா இருக்கும்…நா சொல்றது சரிதானே பாஸ்…!” 

“எனக்கு எப்படி தெரியும்…நா இன்னும் பேச்சுலர்….பாக்கலாம்…எங்களுக்கு கெமிஸ்ட்ரி எப்பிடி வொர்க்அவுட் ஆகுதுன்னு….” 

“சரி பாஸ்….! நீங்க சொன்ன வேலையை முடிச்சிட்டு போன் பண்றேன்….” என்று கூறிவிட்டு ஜானி கிளம்ப நிலாவும் பிரபுவும் உணவருந்த தொடங்கினர். 

இரவு ஒன்பது மணியளவில் ஜானி போன் பண்ண என்னவென்று பிரபு கேட்க, 

நிலாவை இடித்த இடத்து சிக்னல்ல இருக்கும் புட்டேஜை தான் வாங்கி விட்டதாகவும் இப்போது கொண்டு வருவதாகவும் கூறினான். 

ஜானி வந்தவுடன் பிரபு தன்னுடைய ரூமுக்கு அழைத்துச் சென்றான். 

லேப்டாப்பை எடுத்து போட்டு பார்க்க நிலா வண்டியில் வருவதும் சைக்கிள் ஒன்று வேகமாக குறுக்கே வர நிலா தடுமாறி விழுவதும் அப்போது சைக்கிள் மனிதன் தன்னுடைய கையில் இருந்த ஏதோ ஒன்றை தடுமாறி வண்டியை பிடிப்பது போல் முன்னால் இருந்த பேக்கின் மீது தடவுவதும் பின்பு எழுந்து செல்வதும் நிலாவும் மீண்டும் வண்டியை கிளப்புவதும் இருந்தது. 

அந்த மனிதனின் முகத்தை ஜும் பண்ணி பார்க்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .”பாஸ்…. இவன் சேனா பார்த்திபனோட கையாள்….உங்களுக்கு தெரியுதா….?” என்று ஜானி சொல்ல,

“எனக்கும் பார்த்த மாதிரிதான் இருக்கு….ஸ்யூரா உனக்கு தெரியுமா….அவன்தான் இவன்னு…”

“டெபனட்லி….ஏன்னா எங்கிட்ட இவன்தான் ரொம்ப வேகமா பேசினான்.” 

“சரி….நாளை நாம சற்குணத்த பாத்துட்டு நெக்ஸ்ட் தயாவை பாத்துட்டு வரலாம்….” 

“ஒ கே….அப்ப இயர்லி மார்னிங் சிக்ஸ் ஓ கிளாக் வந்துடறேன். நீங்க ரெடியா இருங்க…” 

காலை ஒன்பது மணியளவில் சேத்துப்பட்டு பொன்றாயன் மங்கலம் அடைந்தனர். 

சற்குணம் வர சிறிது தாமதமானது. வந்தவுடன் இருவருக்கும் வணக்கம் கூறிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். 

“பிரபு….அந்த பங்களா கொஞ்சம் கிரிடிகலான பிளேஸ் மாதிரிதான் இருக்கு. நாங்க சர்ச் பண்ணும்போது யாருமே அங்க இல்லை. ஆனா நடமாட்டம் இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. நாங்க அங்க வரப்போறத ஸ்மெல் பண்ணி இருக்கிறாங்க…மே பி அங்க ஏதோ இல்லீகல் ப்ராசஸ் நடக்குது. வேர் தே ஆர் வுட் கோயிங் அவுட்சைட்.” 

“எக்ஸாட்லி …! தப்ப பண்றவங்க என்னிக்குமே ஜெயிச்சிக்கிட்டே இருக்கமுடியாது . பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தானே தீரணும் ….” பிரபு சற்குணத்திற்கு பதிலளிக்க “இந்த சஸ்பெக்ட் கேசை லாக்கப்புலருந்து கூட்டிக்கிட்டு வாங்க ….” சற்குணம் ஆர்டர் பண்ண கனி அழைத்து வந்த ஆளைப் பார்த்ததும் இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர்.

– தொடரும்…

– உள்ளே வராதே (திகில் நாவல்), துப்பறியும் செவென் ஸ்டார் சீரீஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *