பகைவர்களின் நடுக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,387 
 
 

இடையன் ஆடுகளை ஓட்டுகிறான். குகையொன்று குறுக்கிடுகிறது. குகையைக் கண்டதும் ஆடுகளை வேறு பக்கம் திருப்புகிறான். அவன் நெஞ்சம் படபடக்கிறது. ஆடுகளை வேகமாக விரட்டுகிறானே, ஏன்? புலியின் குகை அது. புலிக்கு அஞ்சி பயந்தோடுகிறான். பாவம் புலி கண்டால் அவன் ஆடுகளின் கதி என்ன?

குட்டுவன். கோதை பகைவர்க்குப் புலி போன்றவன் அவன் அரண்மனையைக் கண்டாலே பகைவர் நடுங்குவர். அவர்கள் எல்லாம் செம்மறியாட்டுக் கூட்டம் தானே. அவன் இருக்கும் திசையை திரும்பிப் பாராமல் ஓடி ஒளிவர்.

அவனுக்கு அஞ்சாதவரும் உண்டு. அஞ்சாமல் அவன் அவைக்குள் புகுந்து நிமிர்ந்து சிங்க நடைபோடும் அச் செம்மல்கள் யார்? அவர்கள் தமிழ்ப் புலவர்களே ஆவர்!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *