கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,613 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

சொற்களைத் திறமையுடன்பேச வல்லனாதல்.

விசுவநாததத்தருக்கும், புவனேசுவரி தேவி யார்க்கும் புதல்வராய்த் தோன்றியவர் விவேகா னந்தர். 1898ம் வருடத்தில் அமெரிக்கா தேசத்தில் உள்ள சிகாகோ நகரத்தில் பிரபலமான சர்வ மதங்களின் பிரதிநிதிகளையும் வரவழைத்துப் பிரசங்கங்கள் செய்யச் சபை ஒன்று ஏற்படுத்தினார் கள். பிரசித்திபெற்ற மதப்பிரசங்கிகள் கூடிப் பேசினார்கள். அச்சபைக்குச் சென்னை வாசிகள் விவேகானந்தரை அனுப்பினார்கள். இவர் தமக்குப் பேசக்கிடைத்த நேரத்தில் அனைவரும் பெரியோர் களே! என்று அழைக்க இவர் அவ்விதம் சபையோர் களை அழைக்காமல், “அன்பான சதோதர சகோதரி களே’ என்று அழைத்தார். இதைக் கேட்டவுடன் சபையோர் பேரானந்தம் அடைந்தனர். இவரைப் புகழ்ந்து பேச ஆரம்பித்துவிட்டனர். மறுநாள் பத்திரிகைகள் புகழ ஆரம்பித்ததும் இவருக்குப் பகையாய் வேறு மதத்தில் உள்ள வரும், “இவர் பேசி யதை நாம் கேட்கவில்லையே மேலும் இவர் எப் பொழுது பேசுவார்” என்று ஆசைப்பட்டு அறிய லாயினர். இவ்விதம் கேட்டவர்களைத் தன் வயப் படுத்தும் தன்மையோடு கேளாத பகைவரும் என்று கேட்போம் என்று விரும்பும்படியாகப் பேசுவதே சொல்வன்மை என்று வள்ளுவரும் கூறினார்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (48)

கேட்டார் = நட்பாய் ஏற்றுக் கொண்டவரை

பிணிக்கும் = பின் வேறுபடாமல் தன் வயப்படுத்தும்

தகை = குணங்களை

அவாய் = விரும்பி

கேளாரும் = பகைவரும்

வேட்ப = (பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை) விரும்பும் வண்ணம்

மொழிவது = சொல்லப்படுவதுவே

சொல் ஆம் = சிறந்தமொழி ஆகும்.

கருத்து: பகைவரும் நண்பரும் விரும்பும்படி மொழிவதே மொழி ஆகும்.

கேள்வி: எவர் எவர் விரும்பும்படி மொழிவதே மொழி ஆகும்?

விளக்கம்: தகை = குணங்கள். குற்றமில்லாமை; சுருங்கச் சொல்லல்; விளங்கவைத்தல்; இனிய தாதல்; சிறந்த பயன் தருதல்; முதலியன சொல்லின் குணங்களாகும். கேட்டார் – நண்பர். கேளார் – பகைவர்.

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *