கணவன் ஊர்ந்த குதிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,899 
 
 

மறக்குல மங்கை . ஒரே புதல்வன். அவனும் கைக்குழந்தை; போர் முரசு முழங்கியது. கணவன் விடை பெற்றுப் போய்விட்டான்.

போர் முடிந்தது. சிலர் திரும்பினர். யானை, பரி, தேர் மீது வந்தனர். கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வரும் குதிரைகளை யெல்லாம் பார்க்கிறாள்.
தன் கணவன் ஏறிச் சென்ற பரியைக் காணவில்லை . கணவனையும் காணவில்லை . கவலை பற்றியது.

”குதிரை வரவில்லை . எல்லோருடைய குதிரைகளும் வந்து விட்டனவே. என் கணவர் ஊர்ந்து சென்ற குதிரை வரக்காணோமே. இரு பேராறு கூடும் இடத்தில் அகப்பட்ட பெரு மரம்போல், இரு பெரும் படைக்கு இடையே அகப்பட்டு அலைப்புண்டு அழிந்ததோ?” என்று புலம்பினாள்.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *