ஒரு சமயம் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருந்த பெரியார் (முழுப் பெயர்: ஈ.வெ.ராமசாமி) அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றார்.
ஒரு காலணா கொடுத்து மிட்டாய் கேட்டார்.
வந்தவர் தந்தை பெரியார் என்பதை அறிந்த கடைக்காரர், காலணாவை வாங்கிக் கொண்டு கை நிறைய மிட்டாய்களை அள்ளிக் கொடுத்தார். மிட்டாய்களை வாங்கிய பெரியார் கடைக்காரனைப் பார்த்து, “எங்க ஊர்ல இவ்வளவு தரமாட்டேங்கறான். நீங்க கை நிறையத் தர்றீங்க.
http://www.dinamalar.com/siruvarmala…es/Smr-1-2.jpg
அப்ப இன்னொரு காலணாவுக்குத் தாங்க!” என்று கூறிவிட்டு இன்னொரு காலணாவை எடுத்து நீட்டினார். கடைக்காரர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். கொடுக்கலாமா வேண்டாமா என்று நினைத்துத் தடுமாறினார். அப்போது பெரியார், “”ஐயா! வியாபாரத்துல வியாபாரியாத்தான் இருக்கணும். காலணாவுக்கு இவ்வளவு மிட்டாயை அள்ளிக் கொடுத்தா, உங்க வியாபாரம் என்னாகிறது. நானாக இருந்தாலும், எத்தனை வேண்டியவரா இருந்தாலும் உள்ளதைத்தான் தரணும்!” என்றார். பின்னர் ஒரே ஒரு மிட்டாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி மிட்டாய்களை கடைக்காரரிடமே கொடுத்துவிட்டார் தந்தை பெரியார். அவரது நியாயமான நடத்தையைக் கண்ட கடைக்காரர் பெரிதும் வியந்தார்.