பெரிய காடு உண்டு. அந்தக் காட்டிலிருந்த ஒரு மரத்தின் கிளையில் ஆணும் பெண்ணுமான இரண்டு குருவிகள் கூடுகட்டிக் குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தன.
பெண் குருவி, கூட்டில் பல முட்டைகளை இட்டு வைத்திருந்தது.
ஒருநாள் பகல்நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு பெரிய யானை வந்தது.
நிழலுக்காக மரத்தடியில் நின்ற யானை விளையாட்டாகத் தனது துதிக்கையை உயரே தூக்கி துதிக்கைக்க எட்டக்கூடிய மரக்கிளைகளையெல்லாம் ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தது.
அவ்வாறு ஒடிந்து விழுந்த கிளைகளில் குருவி கூடு கட்டியிருந்த கிளையும் ஒன்று.
கிளை கிழே விழுந்த காரணத்தால் குருவிக் கூட்டில் இருந்த முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து நாசமாகி விட்டன.
நல்ல வேளையாக குருவிகள் இரண்டும் தப்பித்துக் கொண்டன.
தான் இட்ட முட்டைகள் அனைத்தும உடைந்து பாழாகி விட்டதைக் கண்டு பெண் குருவி வேதனை தாள மாட்டாது கதறி அழுதது.
பெண் குருவியின் பரிதாப ஓலத்தைக் கேட்டு, அதன் தோழியான மரங்கொத்திக் குருவி ஒன்று விரைந்து வந்து அதற்கு ஆறுதல் கூறலாயிற்று.
தோழி, நடந்துபோன துயர நிகழ்ச்சியை எண்ணியெண்ணி அழுவதனால் என்ன பிரயோசனம்?
அறிவுள்ளவர்கள் இறந்துபோன அன்புக்கு உரியவர்களைப் பற்றியும், காணாமல் போன தங்கள் அரிய பொருட்கள் பற்றியும் கலக்கமடைந்து வருந்த மாட்டார்கள்.
இறந்துபோன நமது அன்பிற்கு உரியவர்களை நினைத்து நாம் வருந்தினால் மேல் உலகில் இருக்கும் அவர்கள் ஆத்மா யானையை எவ்விதமாவது பழி வாங்க முயற்சிப்பதுதான் நல்லது.
இவ்வாறு மரங்கொத்தி பறவை கூறியதைக் கேட்டதும் பெண் குருவி, தோழி நீ சொல்வதும் உண்மைதான். இழந்த முட்டைகளைப் பற்றி அனாவசியமாக எதற்காகச் சிந்திக்க வேண்டும் ? அதற்குப் பதிலாக என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட யானையின் உயிரை வாங்கிப் பழி தீர்க்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று தான் யோசிக்க வேண்டும் என்று கூறிற்று.