அரக்கனும்‌ அரசியும்‌

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 3,043 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர்‌ ஊரில்‌ ஓர்‌ அழகிய இளவரசி இருந்தாள்‌. அவள்‌ மிகவும்‌ நல்லவள்‌. ஒருநாள்‌ அவளுடைய தாதியுடன்‌ ஒரு படகில்‌ ஏறிச்‌ சென்றாள்‌. திடீரென்று புயல்காற்று வந்தது. படகு கவிழ்ந்து விட்டது. படகு ஓட்டுகிறவனும்‌ தாதிப்‌ பெண்ணும்‌ தண்ணீரில்‌ மூழ்கிவிட்டனர்‌. இளவரசி எப்படியோ தப்பிப்‌ பிழைத்தாள்‌. ஒரு சிறிய தீவிற்குப்‌ போய்ச்‌ சோர்தாள்‌.

அத்தீவில்‌ ஓர்‌ அரக்கனும்‌ அரக்கியும்‌ குடி இருந்தனா. அவர்களுக்கு ஐந்து குழந்தைகள்‌ இருந்தன. அந்தத்‌ தீவிலிருந்து மனிதர்களை எல்லாம்‌ விழுங்கிவிட்டு வேறு யாராவது வருவார்‌களா என்று எதிர்பார்ததுக்கொண்டு இருந்தனர்‌. இளவரசி கரை ஓரத்தில்‌ மணலில்‌ மயக்கமாகப்‌ படுத்திருந்தாள்‌. அரக்கன்‌ அவள்‌ அருகில்‌ சென்று பார்த்‌தான்‌. ஐந்து அரக்கக்‌ குழந்தைகளுக்‌கும்‌ இன்று நல்ல உணவு கொடுக்கலாம்‌ என்று எண்ணினான்‌.

ஆனால்‌ இளவரசி மிகவும்‌ அழகாக இருந்தாள்‌. சிவந்த கன்னங்கள்‌. சுருண்ட முடி. மிகவும்‌ சிறிய பெண்‌. அவளைக்‌ கொல்ல அரக்கனுக்கு மனம்‌ வரவில்லை. அரக்கியும்‌ அங்கே வந்து பார்த்தாள்‌. இளவரசியைக்‌ தூக்கக்‌ கொண்டுபோய்த்‌ தன்‌ குழந்தைகளுக்கு விளையாட்டுப்‌ பொம்மையாகக்‌ கொடுத்‌தார்கள்‌.

‘எவவளவு அழகான குழந்தை, அவளை வளர்த்துப்‌ பெரியவளாக்க நம்‌ மூத்தமகனுக்கு மணம்‌ செய்து கொடுக்கலாம்‌’, என்று கணவனிடம் கூறினாள்.

இளவரசி அரக்கனுடைய வீட்டில்‌ வசித்து வந்தாள்‌. ஐந்து அரக்கக குழந்தைகளுடன்‌ விளையாடிக்கொண்டு இருந்தாள்‌. அவளுக்குப்‌ பதினாறு வயது ஆயிற்று, அரக்கி தன்‌ மூத்த மகனுக்கு அவளை மணம்‌ செய்துவைப்‌பதற்கு ஏற்பாடு செய்திருந்தாள்‌. இளவரிக்கு அவனைப்‌ பிடிக்கவில்லை. அவன்‌ முரடனாகவும்‌ . மூர்க்கனாகவும்‌ இருந்தான். அவனுடைய உருவமும்‌ அவளுக்குப்‌ பிடிக்கவில்லை.

ஒருநாள்‌ இளவரசி கடற்கரையின்‌ ஓரமாக உலவிக்கொண்டிருந்தாள்‌. கடலில்‌ ஓரு மனிதன்‌ பாறையைப்‌ பிடித்‌துத்‌ தொங்கிக்‌ கொண்டிருந்தான்‌. கரைக்கு வருவதற்கு முயற்சி செய்து பார்த்தான்‌. அவனால்‌ முடியவில்லை. கரையிலிருந்து அவன்‌ சற்றுத்‌ தொலைவில்‌ இருந்ததால்‌ இளவரசியால்‌ அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை. கரை ஓரத்தில்‌ நின்‌று அவனைப்‌ பார்த்துக்கொண்டிருந்தாள்‌. அவன்‌ மிகவும்‌ அழகாய்‌ இருந்தான்‌.

சற்று நேரத்தில்‌ ஒரு பெரிய அலை வந்தது. அந்த அலையில்‌ அடித்தும்‌ புரண்டு கரைககு வந்து சேர்ந்தான்‌. மணலில்‌ உருண்டுகொண்டு வந்து இளவரசியின்‌ காலடியில்‌ வீழ்ந்தான்‌. இறந்தவன்‌ போல்‌ அசைவற்றுக்‌ கிடந்தான்‌. சிறிதுநேரம்‌ கழித்துக் கண்களைத்‌ திறந்து பார்த்தான்‌.

அழகிய பெண் நிற்பதைக் கண்டான்‌. மான்‌ விழிகள்‌. புலித் தோலினால்‌ ஆகிய ஆடை அணிந்திருந்தாள்‌.

கடலிலிருந்து தப்பிய வாலிபனும்‌ ஓர்‌ இளவரசன்‌ தான்‌. அவன ஏறிவந்த. கப்பல்‌ புயல் காற்றினால்‌ கடலில்‌ மூழ்கியது. இளவரசன்‌ மிகவும்‌ துன்பப்பட்டு எப்படியோ கரைக்கு வந்து சேர்ந்தான்‌. அவன்‌ இளவரசியுடன்‌ பேசிப்‌ பார்த்‌தான்‌. அவள்‌ பேசிய வார்த்தை ஓன்‌றும்‌ விளங்கவில்லை. அவன்‌ பேசியது அவளுக்குத்‌ தெரியவில்லை. அரக்கர்கள்‌ பேசும்‌ மொழிதான்‌. அவளுக்குக்‌ தெரியும்‌, அது தமிழ்மொழி போல்‌ இனிமையாக இல்லை. கரடுமுரடாக இருந்தது.

இருவரும்‌ சைகையினால்‌ தங்கள்‌ எண்ணத்தைக்‌ தெரிவித்துக்‌ கொண்டனர்‌. நெடுநேரம்‌ ஓன்றாக உட்கார்ந்திருந்தனர்‌. அரக்கன்‌ வந்தால்‌ இளவரசனைக்‌ கொன்று தின்‌று விடுவானே என்ன செய்வது என்று வருத்தம்‌ அடைந்தாள்‌. ‘உடனே இந்த இடத்தை விட்டு ஓடி. விடு’ என்று சைகை காட்டினாள். அது அவனுக்கு விளங்கவில்லை. இளவரசி அழத்தொடங்கினாள்‌. அவன்‌ இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை.

அவன்‌ கையைப்‌ பிடித்து அழைத்‌துக்கொண்டு போய்‌ ஒரு குகைக்குள்‌ மறைத்து வைத்தாள்‌. அந்தக்‌ குகையை அழகிய வீடாக மாற்றி வைத்தாள்‌. கிழிஞ்சல்கள்‌, மலர்கள்‌, இறகுகள்‌ முதலியவற்றினால்‌ அதை அழகுபடுத்‌தினாள்‌..

சைகை காட்டி இளவரசனை உட்‌காரும்படி. செய்தாள்‌. ‘குகைக்குள்‌ ளேயே இருக்கவேண்டும்‌, வெளியில்‌ போகக்கூடாது’ என்று எச்சரிக்கை செய்‌தாள்‌. வீட்டிற்குப்‌ போய்‌ உணவும்‌: தண்ணீரும்‌ கொண்டு வந்து கொடுத்‌தாள்‌. பழங்களைப்‌ பறித்துக்‌ கொண்டு வந்து கொடுத்தாள்‌. பெரிய சங்குகளில்‌ தண்ணீர்‌ எடுத்து வந்தாள்‌.

இளவரசன்‌ பழங்களைக்‌ தின்று பசி ஆறினான்‌. புன்சிரிப்பினால்‌ தன்‌ நன்றியைக்‌ தெரிவித்தான்‌. இரண்டு நாட்களாக உணவு இல்லாமல்‌ பட்டினியாக இருந்தவனுக்கு அழகியின்‌ கையினால் அமுது கிடைத்தது. பொழுது சாய்ந்தவுடன்‌ இளவரசி வீட்டிற்குப்‌ போனாள்‌. ‘வெளியில்‌ தலை காட்டத்‌. கூடாது’ என்று மீண்டும்‌ எச்சரிக்கை செய்துவிட்டுப்‌ போனாள்‌. ‘நாளைக்கு வருகிறேன்‌’, என்று வாக்களித்தாள்‌.

இளவரசன்‌ இரண்டு நாட்கள்‌ குகைக்குள்ளேயே இருந்தான்‌. இளவரசி அவனுக்கு உணவும்‌ தண்ணீரும்‌ கொண்டு வந்து கொடுத்தாள்‌. அரக்கர்‌களுக்குக்‌ தெரியாமல்‌ அவள்‌ வருவது வழக்கம்‌. இருவரும்‌ சில வார்த்தைகள்‌ பேசக்‌ கற்றுக்கொண்டனர்‌.

மூன்றாவது நாள்‌ இளவரசி தேம்‌பிக்கொண்டு வந்தாள்‌. ‘என்ன நேர்ந்தது?’ என்று இளவரசன்‌ கேட்டான்‌. ‘திருமணம்‌ வந்துவிட்டது. நாளைக்கு அரக்கன்‌ மகனைக்‌ கட்டிக்கொள்ள வேண்டுமாம்‌’, என்று அழுதாள்‌.

‘எனக்குக்‌ கொஞ்சம்கூடப்‌ பிடிக்கவில்லை. அதைவிட இறந்து போவது மேல்‌’, என்றாள்‌.

‘என்னுடன்‌ வந்துவிடு. எங்கள்‌ ஊருக்கு உன்னை அழைத்துச்‌ செல்கிறேன்‌’, என்று இளவரசன்‌ கூறினான்‌.

‘அப்படியானால்‌ சரி, இன்று இரவு நிலவு வந்ததும் புறப்படலாம்‌’; என்றாள்‌.

இரவு வந்ததும்‌ அரக்கியின்‌ அருகில்‌ படுத்துக்கொண்டாள்‌. அரக்கி குறட்டை விட்டுக்கொண்டு நன்றாய் உறங்கினாள்‌. மற்றவர்களும்‌ உறங்கு விட்டார்கள்‌. இளவரசி மெதுவாய்‌ எழுந்து வெளியில்‌ வந்தாள்‌. அரக்கனுடைய ஓட்டகத்தின்‌ மேல்‌ ஏறிக்‌ கொண்டு இளவரசன்‌ இருக்கும்‌ குகைக்‌குச்‌ சென்றாள்‌. நிலவு தென்னைமரம்‌ உயரத்திற்கு வந்திருந்தது. இளவரசனும்‌ இளவரசியும்‌ ஓட்டகத்தின்‌ மேல்‌ ஏறிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நெடுந்தூரம்‌ சென்றனர்‌.

விடியற்காலையில்‌ அரக்கி விழித்து எழுந்தாள்‌. பக்கத்தில்‌ படுத்திருந்த இளவரசியைக்‌ காணவில்லை. உடனே அடுத்தக் குகைக்குச்‌ சென்று தன்‌ கணவனை எழுப்பினாள்‌.

‘இளவரசி ஓடிவிடடாள்‌, எங்கேயோ போய்விட்டாள்‌’, என்று ஒலமிட்டாள்‌.

‘மந்திரச்‌ செருப்பை எடு’, என்றான்‌. அதைக்‌ காலில்‌ போட்டுக்கொண்டு அடிக்கு ஏழுமைல்‌ பாய்ந்து சென்றான்‌. அவன்‌ பின்னால்‌ ஓடிவருவது இடி இடிப்பது போல்‌ கேட்டது. அரக்கனிடமிருந்து எப்படிக்‌ தப்புவது என்று தெரியவில்லை.

‘என்ன செய்யலாம்‌?’ என்று இளவரசன்‌ கேட்டான்‌.

‘என்னிடம்‌ ஓரு மந்திரக்கோல்‌ இருக்கிறது, அது நமக்கு உதவி செய்‌யுமா பார்க்கலாம்‌’, என்றாள்‌. மந்திரக் கோலினால்‌ ஓட்டகத்தைத்‌ தட்டினாள்‌. ஓட்டகம்‌ ஓரு குளமாக மாறிவிட்டது. இளவரசர்‌ ஓரு படகுபோல்‌ ஆனார்‌. இளவரசி ஓரு கிழவியாக மாறினாள்‌.

அரக்கன்‌ குளக்கரைக்கு வந்து சோந்தான்‌. கிழவியைக்‌ கூப்பிட்டான்‌. ‘ஓரு வாலிபனும்‌ ஓரு பெண்ணும்‌ ஒட்டகத்தில்‌ ஏறிக்கொண்டு வந்தார்கள்‌; அவர்களைப்‌ பார்த்தாயா?’ என்று கேட்டான்‌.

‘ஆம்‌, நான்‌ பார்த்தேன்‌ ; எதிரில்‌ இருக்கும்‌ மலையின்‌ ஓரமாய்ச்‌ சென்றார்‌கள்‌’, என்றாள்‌.

அரக்கன்‌ அத்திசையை நோக்கி விரைந்து சென்றான்‌. கிழவிபோல நடித்த. இளவரசி மநதிரக்கோலினால்‌ படகின்மேல்‌ தட்டினாள்‌. இளவரசனுக்குப்‌ பழைய வடிவம்‌ வந்குது. குளம்‌ ஓட்டகமாக ஆய்விட்டது. இருவரும்‌ ஓட்டகத்தின்மேல்‌ ஏறிக்கொண்டு கடற்கரையை நோக்கிச்‌ சென்றனர்‌. அரக்கன்‌ காடு மலை எல்லாம்‌ சுற்றி அலைந்தான்‌. இளவரசியைக்‌ கண்டு பிடிக்க முடியாமல்‌ வீடு திரும்பினான்‌.

‘அவள்‌ அகப்படவில்லையா?’ என்று அரக்கி கேட்டாள்‌.

‘எல்லா இடங்களிலும்‌ சுற்றிப்‌ பார்த்துவிட்டேன்‌. ஒரு கிழவி படகு ஓட்டிச்‌ சென்றாள்‌. அவள்‌ காட்டிய மலைகளிலும்‌ தேடிப்‌ பார்த்தேன்‌. போன இடம்‌ தெரியவில்லை’, என்றான்‌.

‘இளவரசி ஒருவேளை கிழவி வேடம்‌ போட்டிருப்பாள்‌. நமது மந்திரக்‌ கோலை எடுத்துக்கொண்டு போயிருக்‌கிறாள்‌. அதன்‌ உதவியால்‌ வடிவத்தை மாற்றி இருப்பாள்‌. உன்னால்‌ அவளைப்‌ பிடிக்க முடியாவிட்டால்‌ நான்‌ கண்டு பிடிக்கிறேன்‌ பார்‌’, என்று புறப்பட்‌டாள்‌. அரக்கனிடம்‌ இருந்த மந்திரச்‌ செருப்பை வாங்கிக்‌ காலில்‌ அணிந்து கொண்டாள்‌.

மலைகளின்‌ பக்கம்‌ போகாமல்‌ எதிர்ப்புறத்தில்‌ சென்றாள்‌. ஓர் அடி. எடுத்து வைத்தாள்‌. மந்திரச்செருப்பு ஏழு மைலுக்கு அப்பால்‌ அவளைத்‌ தூக்கிச்‌ சென்றது. சிறிது நேரத்தில்‌ ஓட்டகத்திற்குப்‌ பின்னால்‌ வந்துவிட்டாள்‌. இளவரசி அரக்கி வருவதைப்‌ பார்த்து விட்டாள்‌.

‘நாம்‌ உருவத்தை மாற்றாவிட்டால்‌ தப்பமுடியாது. அரக்கி மிகவும்‌ பொல்‌லாதவள்‌’, என்று மந்திரக்கோலை எடுத்து ஒட்டகத்தைக்‌ தட்டினாள்‌. ஓட்டகம்‌ பூந்தொட்டியாகி விட்டது. இளவரசன்‌ பூஞ்செடியாக நின்றான்‌. இளவரசி தேனீயாக மாறிப்‌ பூக்களைச்‌ சுற்றிச்‌ சுற்றி வந்தாள்‌. அரக்கி கலைத்‌துப்போய்ப்‌ பூஞ்செடியின்‌ அருகில்‌ உட்கார்ந்தாள்‌. தேனீ அவளை இரண்டு மூன்று இடங்களில்‌ கொட்டிவிட்டது. ‘இதென்ன தொந்தரவு?’ என்று அரக்கி அந்த இடத்தை விட்டு அகன்றாள்‌.

மீண்டும்‌ பழைய வடிவத்தை அடைவதற்குள்‌ மந்திரக்கோல்‌ காணாமற்‌ போய்விட்டது. அந்த வழியாக ஒரு பையன்‌ வந்தான்‌. கீழே கடநத கோலை எடுத்துக்கொண்டு போய்விட்டான்‌. இளவரசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வாழ்நாள்‌ முழுவதும்‌ செடியாகவும்‌ தேனீயாகவும்‌ காலம்‌ கழிப்பதா? ஒருவரோடு ஒருவா்‌ பேசமுடிந்தது. ஆனால்‌ பழைய உருவம்‌ மட்டும்‌ வரவில்லை.

ஒருநாள்‌ ஒரு வனதேவதை அந்து வழியாக வந்தது. பூஞ்செடியை உற்‌றுப்‌ பார்ததது. அதற்கு முன்‌ அந்த இடத்தில்‌ அதுபோன்ற செடியை அது பார்த்ததில்லை. கீழே குனிந்து செடியை முகர்ந்து பார்த்தது. பால்மணம்‌ வீசியது. ஏதோ மந்திர சக்தியினால்‌ இந்தச்‌ செடி தோன்றி இருக்கிறது என்று தேவதை எண்ணிற்று.

கேவதை மற்றொரு மந்திரக்கோலை எடுத்து மூன்று முறை செடியின்மேல்‌ தட்டிற்று. செடி மறைந்து விட்டது. அந்தக இடத்தில்‌ இளவரசன்‌ நின்றான்‌.

‘உன்னைச்‌ செடியாக மாற்றியது யார்‌?’ என்று தேவதை இளவரசனைக் கேட்டது.

‘இதோ பறக்கிறதே இந்த தேனீ ஓர்‌ இளவரசியாக இருந்தது. அதற்கும்‌ தாங்கள்‌. பழைய உருவத்தைக்‌ கொடுக்க வேண்டும்‌’, என்று கெஞ்சிக்‌ கேட்டுக்‌ கொண்டான.

வனதேவதை தேனீயை மீண்டும்‌. இளவரசியாக மாற்றிக்‌ கொடுத்தது.

‘நீங்கள்‌ இருவரும்‌ எங்கே செல்கிறீர்கள்‌’ என்று கேட்டது.

‘இவளை என்னுடைய நாட்டிற்கு அழைத்துச்‌ செல்கிறேன்‌. இந்தப்‌ பெண்தான்‌ என்‌ உயிரைக்‌ காப்பாற்றினாள்‌. இவளையே நான்‌ மணந்துகொள்‌ளப்‌ போகிறேன்‌’ என்று இளவரசன்‌ கூறினான்.

‘என்‌ பெற்றோர்‌ யார்‌ என்று எனக்‌குத்‌ தெரியாது. குழந்தைப்‌ பருவம்‌ முதல்‌ ஓர்‌ அரக்கன்‌ வீட்டில்‌ வளர்ந்து வந்தேன்‌. அரச குடும்பத்தைச்‌ சேர்ந்தவரை நான எப்படி. மணக்க முடியும்‌?’ என்று அந்தப்‌ பெண்‌ கூறினாள்‌.

‘நீ யார்‌ என்று எனக்குத்‌ தெரியும்‌. நீயும்‌ ஒர அரசனுடைய மகள்தான்‌. உன்‌ தாய்‌ தந்தையர்‌ உன்னைக்‌ தேடிக்‌ கொண்டு இருக்கின்றனா்‌’, என்று தேவதை கூறிற்று. அவளுடைய தந்தையின்‌ பெயர்‌, ஊர்‌ முதலியவைகளை எடுத்துச்‌ சொல்லிற்று.

‘உன்‌ தந்‌தை எங்கள்‌: அரசருக்கு நெருங்கிய நண்பர்‌ ஆயிற்றே! நாங்கள்‌ எல்லோரும்‌ உன்னைக்‌ தேடிக்கொண்டிருந்தோம்‌’, என்று இளவரசன்‌ இளவரசியிடம்‌ தெரிவித்தான்‌.

“நீங்கள்‌ இருவரும்‌ இறந்துபோய்‌ விட்டீர்கள்‌ என்று உங்களுடைய தாய்‌ தந்தையர்கள்‌ புலம்பிக்கொண்டு இருக்கின்றனர்‌. உங்களை இப்பொழுதே வீட்‌டிற்கு அனுப்புகிறேன்‌’, என்று தேவதை சொல்லிற்று. அவர்களுக்குப்‌ பறக்கும்‌ விமானம்‌ ஓன்று கொண்டுவந்து கொடுத்தது.

இருவரும்‌ விமானத்தில்‌ ஏறிப்‌ பறந்து சென்றனர்‌. ஊருக்குப்‌ போய்ச்‌ சோர்ந்தவுடன்‌ எல்லோரும்‌ அன்புடன்‌ வரவேற்றனர்‌. இறந்து போனவர்கள்‌ பிழைத்து எழுந்தது போல்‌ தோன்றியது. இளவரசனுக்கும்‌ இளவரசிக்கும்‌ திருமணம்‌ மிகவும் சிறப்புடன்‌ நடந்தது.

– அயல்நாட்டுக்‌ கதைக்கொத்து (ஆறு புத்தகங்கள்‌), முதற் பதிப்பு: மார்ச் 1964, திருநெல்வேலித்‌ தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகம்‌, லிமிடெட்‌, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *