கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 14,534 
 
 

பசி எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

பசி என்றால், அடுப்பில் மனைவி சாதத்தை வடித்துக் கொண்டிருக்கும்போதே ‘பசிக் கிறது, பசிக்கிறது’ என்று கத்து வோமே அந்தப் பசியையோ, அல்லது ஹோட்டலில் ‘ஸ்பெ ஷல்’ சாப்பாட்டுக்காக டிக்கட் வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, மேஜையைச் சுத்தம் செய்யும்வரை தாள முடியாமல் ஒரு கையால் வயிற்றைப் பிடித் துக்கொண்டு மறு கையால் மேஜையில் சிந்திக் கிடக்கும் சாம்பார் ஈரத்தில் டிக்கட்டை வைத்துக்கொண்டு நிற்போமே அந்தப் பசியையோ குறிப்பிட வில்லை. நான் சொல்லும் பசி வேறு. அதன் வேகம் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தால் இப் படிக் கதை வாசித்துக்கொண் டிருக்கமாட்டீர்கள்! அதைப் பற்றி உங்களுக்கு வெகு ஆணித் தரமாக விளக்கக்கூடிய நபர், நான் அறிந்தவரை செல்லம்மா ஒருத்திதான்.

செல்லம்மாவைப் பற்றிக் கொஞ்சம் வர்ணிக்கிறேன். அவளுக்கு 20 வயதிருக்கும். ‘இருபது வயதுப் பெண்’ என்ற தும், ஆண்டாண்டுகளாகக் கதைகள் படித்து, ‘இலக்கிய ரசானுபவத்தில்’ திளைத்துப் போன உங்கள் கற்பனையில், சந்தன கலரில் சந்திரபிம்ப முகலாகிரியுடன், கடைசல் பிடித்தது போன்ற தேகக் கட் டுடன் முன்னழகும் பின்னழ கும் நெஞ்சை அள்ள நடமாடும் வாலைக் குமரி ஒருத்திதான் தோன்றுவாள். நீங்கள் அப்படி எதிர்பார்ப்பீர்கள் என்ற கார ணத்திற்காக அவள் அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. செல்லம்மா இந்த உல கத்தில் நடமாடும் ஆயிரமாயி ரம் பெண்களைப் போல் ஒருத்திதான். ஆயிரத்தில் ஒருத்திகூட அல்ல. ஆனால், தெருவில் நடமாடும் அத்த னைப் பெண்களும் சகட்டு மேனிக்கு உங்கள் நெஞ்சை அள்ளிக்கொண்டிருக்கும்படி உங்கள் மனவளம் அமைந்திருந் தால் செல்லம்மாவும் உங்கள் மனத்தை அள்ளக்கூடும். கார ணம், 20 வயதுப் பெண்ணுக்கு ரிய பருவக் கவர்ச்சி அவளுக் கும் இல்லாமல் இல்லை. ஆனால், அந்தக் கவர்ச்சி விவகாரத்தில் நமக்கு ஏற்படுகிற அளவு ஈடுபாடு செல்லம்மாவுக் கும் சரி, அவள் கணவன் கந்தப்பனுக்கும் சரி, கிடையாது. அந்த லயிப்புக்குப் போதிய அவகாசம் அவர்களுக்குக் கிடையாது. ஆயிரம் பிரச்னை களுக்கு மத்தியில் ‘அது’ அவர் களுக்கு ஒரு பொழுது போக்கு!

கந்தப்பன் கொத்து வேலை செய்வதாகப் பெயர். ஆனால், அவனுக்கும் அவனுடைய கொத்து வேலை மேஸ்திரிக்கும் உள்ள தொடர்பைவிட, இன் னொரு எஜமானனுக்கும் அவ னுக்கும் உள்ள தொடர்புதான் ரொம்ப நெருக்கம். அந்த எஜ மானனின் பெயர் ‘காச நோய்’. மேஸ்திரி எட்டு மணி நேரம் தான் வேலை வாங்குவார். ஆனால், அவனுடைய சக்திக் கும் சர்வீசுக்கும் 24 மணி நேரமும் அதிகாரியாக இருப் பது அந்தக் காச நோய்தான்.

வாரத்தில் மூன்று நாள் அதனுடன் அத்யந்த உறவு கொண்டாடி, படுக்கையில் சாய்ந்து கிடப்பான் கந்தப்பன். மீதி நாட்களில் அரைகுறைத் தெம்புடன் வேலைக்குப் போவான். செய்யும் வேலையும் அரைகுறையாகத்தான் இருக்கும். கிடைக்கும் கூலியும் அரை குறையே! முழுசாகக் கிடைப் பது மேஸ்திரி மூச்சுக்கு மூச்சு வழங்கும் திட்டுக்கள் மட்டுமே! மேஸ்திரியைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் ரொம்பவும் மனிதாபிமானமுள்ளவனாக இருக்கவேண்டும். இல்லா விட்டால், இரண்டு மணி நேரம் நிழலில் ஒதுங்கி நிற்கிற ஆசாமியை இன்னும் சீட்டுக் கிழிக்காமல் விட்டு வைத்திருப்பானா? ‘முழுசா இரண்டு நாழிகை வேலை செய்யத் துப்பில்லாத சீக்காளி ஜென்மங்களெல்லாம் எங்கேயாவது ஒழிஞ்சுபோகாமல் என் பிராணனை எடுக்கிறானுவ’ என்று திட்டுவதோடு சரி.

ஆனால், கந்தப்பன் ‘ஒழிஞ்சு’ போகிறதானால், போகக்கூடிய ஒரே இடம் எமனுடைய சாம் ராஜ்யம்தான். அதற்குரிய டிக்கட் கந்தப்பன் கைவசம் தயாரா கவே இருந்தது. அக்கம்பக்கம் மெல்லாம்கூட ‘இதோ புறப் பட்டுவிட்டான்’, ‘அதோ புறப் பட்டுவிட்டான்’ என்று நாலைந்து வருஷமாகப் பேசுகிறார்கள். அந்தப் ‘புறப்பாட்டை’த் தள்ளி வைப்பதற்காக தன் மூச்சைக் கொடுத்துப் போராடிக்கொண் டிருந்தாள் செல்லம்மாள்.

காலையில் நாலரை மணிக் கெல்லாம் செல்லம்மா விழித் துவிடுவாள். அவள் அப்படி விழிக்கத் தவறினால் கந்தப்ப னின் இருமல் அவளை எழுப்பி விடும். எழுந்ததும் ஒரு மணி நேரம் அவன் ‘சுகமாக’ இரு முவதற்குத் தோதாக அவனு டைய நெஞ்சைத் தடவி விட்டுக்கொண்டிருப்பாள். சிறு இருமல், பெரும் இரும லெல்லாம் இருமி முடித்து விட்டு அவன் அந்தக் களைப் பில் வேர்க்க வேர்க்கப் பாயில் சாய்வான். உடனே அவனு டைய சிரம பரிகாரத்துக்கு ஓலை விசிறியால் விசிறுவாள் செல்லம்மா.

அப்புறம் அவனுக்கு நீரா காரம் கொடுத்துவிட்டு ‘நாஸ்தா’ தயார் செய்வாள். அந்த வேலை முடிய ஏழரை மணி ஆகும். பின் வெந்நீர் வைத்துப் புருஷ னைக் குளிப்பாட்டுவாள். அவ னைக் குளிப்பாட்டுவது ஒரு துவந்த யுத்தம். வெளிறிப்போன தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூட்டுக்கு ஓர் அழகான மாற்றுப் பெயர்தான் கந்தப்பன். செல்லம்மா அவனுடைய முது கையும் நெஞ்சையும் தேய்க்கும் போது, அவளுடைய கையின் அழுத்தம் தாங்காமல் எலும்பு கள் நொறுங்குவதுபோல் வலி எடுப்பதாக அவன் முனகிக் கத்துவான். ஆனால் அவனு டைய எலும்புகள் குத்துவதால் அவளுடைய உள்ளங்கை வலி எடுப்பதைக் கொண்டு அவள் ஒரு படி அதிகமாகவே முனக லாம். எட்டு மணிக்குக் கணவ னுக்கு அமுதூட்டி அலுவலுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவளும் தன் ‘சிற்றாள்’ உத்தியோகத்துக்குக் கிளம்புவாள். இரண்டு பேருக்கும் ஒரே இடத் தில்தான் வேலை. அதுகூட, புருஷனுக்குத் திடீரென ஏதா வது ‘கேஷ§வாலிட்டி’ ஏற்பட் டால் துணைக்கு அருகில் இருக்கவேண்டுமே என்ற பயத் தால் செல்லம்மா ஒரே இடமா கப் பார்த்து செய்துகொண்ட ஏற்பாடு.

ஒரு நாள் செல்லம்மாள் தட்டில் பிசைந்து வைத்திருந்த நாலு உருண்டைச் சாதத்தில் இரண்டு உருண்டையைத் தின்றுவிட்டு, ஒரு உருண்டையை வாந்தி எடுத்துவிட்டு உட்கார்ந் திருந்த களைப்பில் கந்தப்ப னுக்கு வேதாந்தம் பிறந்தது.

“செல்லி, நான் செத்துத்தான் பூடுவேன் போலிருக்கு” என்று ஆரம்பித்தான். உடனே சினிமா கதாநாயகி பாணியில் ‘அப்படிச் சொல்லாதீர்கள் நாதா!’ என்று செல்லம்மாள் அவன் வாயைப் பொத்தவில்லை. “அட, நீ ஒண்ணு காலங்கார்த்தாலே பினாத்திக்கிட்டு! உலகத்திலே யாரு சாகாவரம் வாங்கிக்கிட்டு வந்திருக்காங்க?” என்றாள்.

“நீ இந்தப் பாடு படறியேன்னு சொல்றேன் புள்ளே! நான் திடீர்னு செத்துப்பூட்டா என்ன பண்ணுவே?”

“ஆமா, பண்ணுவாங்க பானையும் சட்டியும்! உசிரோட இருக்கிறப்போ என்ன பண்ற துன்னு பேச்சைக் காணோம்! செத்தப்புறம் என்ன பண்றதுன் னுதான் யோசனையாங்காட்டி யும்! இந்த ஏழைச் சிறுக்கி ஏண்ட மட்டும் வைத்தியம் பார்க்கறேன். அப்புறம் உன் விதியாச்சு, என் விதியாச்சு… விட்டுத் தள்ளு!” என்றாள்.

கந்தப்பனை எமன் நெருங்கி விடாதிருக்க செல்லம்மா கட்டி வைத்த கோட்டைகள் அனந் தம். இங்கிலீஷ் வைத்தியத்துக்கு தர்ம ஆஸ்பத்திரி இருந்தது. நித்தம் ஒரு பாட்டில் ‘தண்ணி மருந்தும்’ மாத்திரைகளும் அதன் உபயம். உபரியாக ஆயுர் வேத, சித்த வைத்தியங்களோடு பாட்டி வைத்தியம், பக்கத்து வீட்டுப் பெண் வைத்தியம் என்று எதையும் அவள் விட்டு வைக்கவில்லை.

ஒரு நாள் திடீரென்று ஒரு புதிய ஆராய்ச்சியை வெளிப் படுத்தினாள் செல்லம்மாவுக்கு பர்சனல் செக்ரட்டரி போல் இருந்த ஒரு புகையிலைக் கிழவி. “என்னடி செல்லம், நீ செய்யாத வைத்தியமா? இருந் தும் ஒம் புருசனுக்குக் குண மாகலேன்னா என்ன அர்த்தம்? அவன் உடம்பிலே ஒரு வியாதி யும் இல்லேடி. எல்லாம் முனீஸ் வரன் கோபம். அதுக்கு ஒரு தாயத்து மந்திரிச்சுக் கட்டு. பறந்துடாதா பார்ப்பம்!” என்று மந்திரோபதேசம் செய்தாள்.

‘தன் புருஷனுக்கு வியாதி இல்லை’ என்று கிழவி சர்ட்டி பிகேட் கொடுத்ததில் செல்லம் மாவுக்கு பரம திருப்தி. உடனே ஒரு தாயத்து ஓதி, அதை 25 ரூபாய் பெறுமான வெள்ளியில் பொதிந்து புருஷனின் அரை ஞாணில் கட்டிவிட்டாள்.

இத்தனை வைத்தியங்களுக் கும் கட்டுப்படாததாலோ, அல் லது இத்தனை வைத்தியங்க ளும் ஒன்று சேர்ந்ததாலோ, திடீரென்று ஒரு நாள் அது நடந்தேவிட்டது. செல்லம்மா வோடு தான் வாழ்ந்த வாழ்க் கையை முறித்துவிட்டு காலனு டன் கைகோத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான் கந்தப்பன்.

கந்தப்பன் இறந்த மறுநாள் செல்லம்மாவின் குடிசையினுள் ஒரு மூலையில் ஒரு சிட்டி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதுதான் ‘அமரன்’ கந்தப்பனின் ஜோதி! அதற்குப் பக்கத்தில் செல்லம்மா சுருண்டு படுத்திருந் தாள்.

அப்பொழுது, தன் வயிற் றுக்கும் வாய்க்கும் இலக்குத் தேடி ஒவ்வொரு குடிசையாக உற்றுப் பார்த்தவாறு சுற்றுலா வந்துகொண்டிருந்த புகையி லைக் கிழவி, திறந்திருந்த செல் லம்மாவின் குடிசைக்குள் நுழைந் தாள். செல்லம்மா கிடந்த நிலை யைப் பார்த்ததும் அவளருகில் உட்கார்ந்துகொண்டு, “என்னடி, ஏதாச்சும் துன்னியா?” என்று ஆதரவாகக் கேட்டாள்.

“ஒண்ணும் புடிக்கலை ஆயா! வயிறு ஒரு மாதிரியா யிருக்கு…”

“அப்படித்தாண்டி இருக் கும். அதுக்காக வயித்தக் காயப் போடப்படாதுடீ. ஒரு சோடா வாங்கியாறேன்… குடி!”

“சரி, வாங்கிக்கினு வா ஆயா! அந்தா, அந்த மாடத்திலே அறுபத்தி மூணு பைசாவோ என்னமோ கெடக்கு. அதை எடுத்துக்கினு போயி எனக்கு ஒரு சோடா வாங்கிக்க; நீயும் ஒரு கலர் குடிச்சுக்க. வெத்திலை பாக்கும், போயிலையும் வாங் கிக்க…”

“சரி, கண்ணு! சும்மா படுத்து படுத்துக் கெடக்காதே! எழுந்து குந்திக்கினு இரு. தோ வர்ரேன்! மாரியாத்தா, இந்தப் பொண் ணோட நல்ல மனசைப் பார்த் தாவது இரக்கம் காட்டப் படாதா, தீயை அள்ளி வச்சுட் டியே!” என்று வார்த்தைகளைச் சிந்திக்கொண்டு வெளியேறி னாள் கிழவி.

சோடாவைக் குடித்த கிறக்கத்தில் சுவரில் சாய்ந்து கொண்டாள் செல்லம்மா.

“என்னடியம்மா, தலையைச் சுத்துறாப்போல் வருதா?”

“இல்லை ஆயா, வயித்தைக் காந்துது. ஆயாசமா வருது. நாளைக்கு எப்படி வேலைக்குப் போறதுன்னு ஒரே ரோசனையா இருக்கு” என்றாள் செல்லம்மா.

“என்னடி இது கூத்தா இருக் குது? நாளைக்கு வேலைக்குப் போறியா?” என்று அதிர்ச்சி யுடன் கேட்டாள் கிழவி.

“சுத்த வெவரம் கெட்டவளா இருக்கியே! கந்தப்பன் ‘காரியம்’ முடியட்டும். அதுவரை நீ வெளி யேவே போகக்கூடாது. எட் டாம் நாளிலே காரியத்தை முடிச்சுப்பிடலாம். நீ இத்தினி நாளும் அவனுக்குக் குறையில் லாம பாடு பார்த்தது சரிதான். அந்த மாதிரி அவன் காரியத் தையும் முறைப்படி முடிச்சுப் பிடு. இல்லாட்டி ஊர்க்காரங்க ‘தூ’ன்னு துப்புவாங்க. என்ன, நான் சொல்றதைக் காதிலே வாங்கிக்கினியா?”

“சரி ஆயா! போவப்படா துன்னு சொன்னா போவலை!”

சிறிது நேரத்துக்குப் பின் செல்லம்மா எழுந்து போய்த் தண்ணீர் பானையைத் திறந்து பார்த்தாள். இரண்டு நாட்க ளுக்கு முன் எடுத்து வைத்திருந்த தண்ணீர் சில்லிட்டுப் போயி ருந்தது. நசுங்கிப் பச்சை நிற மேறிப் போயிருந்த அலுமினியக் குவளையை எடுத்துத் தன் சேலைத் தலைப்பால் துடைத்து விட்டு, இரண்டு குவளை நீரை மொண்டு குடித்தாள். வயிறு ‘மொட மொட’வென்று இரைந் தது. சிறிது நேரம் வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டிருந் தாள். பின்பு முந்தானையால் தலையில் முக்காடிட்டு மூடிக் கொண்டு படுத்துக்கிடந்தாள்.

நடு நிசி கடந்துவிட்டது. திடீரென்று செல்லம்மாவின் குடிசைக் கதவு திறந்தது. செல் லம்மா வெளியேறிக் கதவைச் சாத்திக்கொண்டு புறப்பட் டாள். அவள் முகம் கறுத்து, இறுகிப் போயிருந்தது.

செல்லம்மாவின் கால்கள் வேகமாக நடை போட்டன. சிறிது நேரம்தான் அவள் வெளிச்சம் நிறைந்த பெருஞ்சாலையில் நடந்தாள். பின்னர், ஓர் இருண்ட குறுக்குப் பாதை யில் இறங்கி நடந்தாள்.

அந்தக் குறுக்குப் பாதை ஒரு முக்கியத்துவம் பெற்ற பாதை. அதன் வழியாக ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் ஒரு நாள் போய்த்தான் தீர வேண் டும் என்றாலும், எவனும் மனமார அதில் காலெடுத்து வைக்கத் துணியமாட்டான். செல்லம்மாவின் கணவன் கந் தப்பன் கூட மூன்று நாட்களுக்கு முன் அந்தப் பாதை வழியாகத் தானே சென்றான்! ஆம், அந்தப் பாதையின் முடிவில்தான் ‘புதைகாடு’ இருந்தது. அந்தப் பாதையில்தான் செல்லம்மாள் இப்போது நடந்தாள்.

அர்த்த ஜாமத்தில் ஒரு பெண் அங்கே போவது என் றால், சாமானிய பய உணர்வை மீறிய ஏதோ ஒரு வெறிக்கு அவள் ஆளாகியிருக்க வேண் டும்; அல்லது, அவளுக்குப் பயித்தியம் பிடித்திருக்க வேண்டும். செல்லம்மாவுக்குப் பயித்தியம் இல்லை.

அவள் நேராகத் தன் கண வன் புதை குழியருகே சென் றாள். ஒரு விநாடி பித்துப் பிடித்தவள் போல் கல்லாக நின்றாள். பின் ஆவேசத்துடன், மூன்றாம் மனிதருக்குப் பயங்கர மானதும் அருவருப்பானது மான ஒரு காரியத்தைச் செய் தாள். அந்தப் பச்சை மண்ணா லான குழியை வெறி கொண்ட வேகத்துடன் தோண்டினாள்.

பத்து நிமிடங்களுக்குப் பின் அவள் அந்தக் குழிக்குள்ளிருந்து ஒரு பொருளை எடுப்பதற்கும், குடிசையிலிருந்தே அவளைத் தொடர்ந்து கிழவி தள்ளாடித் தள்ளாடி அங்கு வந்து சேரு வதற்கும் சரியாக இருந்தது.

“அடிப் பாவி! என்ன கொடு மையடி இது! என்ன செஞ்சே!” என்று அலறினாள் கிழவி.

தான் அங்கேயிருந்து எடுத்த பொருளை கிழவியிடம் நீட்டிக் கொண்டு, “அவரு காரியம் முடிஞ்சு நான் வேலைக்குப் போறவரைக்கும் இந்தப் பாவி வயித்துக் கொடுமையைத் தீர்த் துக்கக் கெதியற்றுப் போய் என் ராஜா மடியைத் தேடி வந்தேன், ஆயா!” என்று கதறினாள் செல்லம்மாள்.

கிழவி அதை வாங்கிப் பார்த் தாள். கந்தப்பனின் வியாதி நிவாரணத்துக்காக மந்திர உச்சாடனத்துடனும் 25 ரூபாய் மதிப்புடனும் அவனுடைய அரைஞாணில் தொங்க விடப் பட்டு, அவன் இறந்த பின்னும் கழற்றப்படாமல் விடப்பட்ட வெள்ளித் தாயத்துதான் அது!

உங்களால் இதை நம்ப முடியவில்லை அல்லவா? நம்ப முடியாதுதான். கதையென்று வாசிப்பதில் இது ஒரு சௌக ரியம். நம்மால் ஜீரணிக்க முடி யாத, அல்லது நாம் ஜீரணிக்க விரும்பாத விஷயங்களை ‘நம்பத் தகாதது’ என்று ஒதுக்கிவிட லாம். ஒருவேளை, இந்த விஷ யம் எந்தப் பத்திரிகையிலா வது, ‘அதிசயம், ஆனால் உண்மை’ என்ற தலைப்பில் பரபரப்புச் செய்தியாக வந்தால் சுவாரசியமாகப் படித்து ரசிக் கலாம். இப்படித் ‘தப்பித்து’க் கொள்ள வழியின்றி அனுபவித் துத் தீர்க்க வேண்டியவர்கள் என்ன செய்யலாம்?

– ஜனவரி, 1965

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *