‘ஐயோ அப்பா!’ – ஹோம் ஒர்க் முடிக்காததற்காக செளந்தர்யா டீச்சர் பிரம்பால் அடித்தபோது, இப்படித்தான் அலறி விட்டாள எட்டாம் வகுப்பு மாணவி அபிதா.
அந்த தனியார் மெட்ரிக் பள்ளி வளகத்துக்குள் ப்ரீ கே.ஜி.யில் சேர்ந்த நாள் முதலே ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். யாரும் தமிழில் பேசக்கூடாது.
அனிதா அலறிவிட்டாள். இப்போது என்ன செய்ய?
அனிதா, ஆஸ் பர் அவர் ஸ்கூல் ரூல்ஸ், நோபடி ஷூட் ஸ்பீக் இன் டமில். ஐ திங்க் யூ நோ த பனிஷ்மென்ட் ஃபார் தட்!
யெஸ் மேடம்…ஹண்ட்ரெட் ருபீஸ் ஃபைன்…ஒகே…மேம்…என்ற அபிதா உட்கார்ந்தாள்.
விதிகளை மீறி யாராவது தமிழில் பேசினால் இப்படித்தான் அந்தப்பள்ளியில் நூறு ரூபாய் ஃபைன் பிடுங்குவார்கள்.
அபிதாவிடம் பேசிவிட்டு தன் இருக்கைக்குப் போக வேகமாகத் திரும்பினாள் செளந்தர்யா டீச்சர்.
வழியில் இருந்த பெஞ்சின் கால்பகுதி நீண்டிருக்க..அதில் இடித்துக் கொண்டவள், வலி தாங்காமல், தன்னையும் அறியாமல் கத்தினாள்….”ஐயோ, அம்மா!”
– கே.ஆனந்தன் (நவம்பர் 2012)