(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு வரும் காபூலிப் பட்டாளம் எங்கள் கிராமத்தின் வெளிப்புறத்திலே உள்ள ஒரு பெரிய தென்னந்தோப்பிலே முகாம் போட் டிருந்தது, சென்ற ஒரு வாரமாக. விரும்பத் தகாதவர் கூட்டத்தினரோடு கூட்டத்தினராக இவர்களும் போலீஸாரால் கரு தப்பட்டிருந்தபடியால், கிராம எல் லைக்கு உள்ளே தங்குவதற்கு இவர்களுக்கு அனுமதி கொடுபடவில்லை.
இவர்கள் வந்தது முதல் கிராமத்தில் ஒரே பர பரப்பு. இவர்களை அராபியர் என்றும் கூப்பிடுவ துண்டு. “அராபிப்படை வந்திருக்கு. பிடித்துக் கொண்டு போய் விடுவான்கள். நகைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுவான்கள். இராக் காலத்தில் வீடு களிலே திருட வருவான் கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்” என்றெல்லாம் உஷார் வார்த்தைகள் பறந்த வண்ணமாகவே இருந்தன. போலீஸ்காரர்களும் முன் ஜாக்கிரதையாக ஜாமத்திற்கு ஜாமம் ரோந்து சுற்றிக்கொண்டும் பாராக் கொடுத்துக்கொண்டும் இருக் தனர். பொழுது விடிந்தால் தான் ஒவ்வொருவர் மனத் திலும் நிம்மதி பிறக்கும்.
இந்தக் காபூலியர்களுடனே வியாபாரம் செய்வ தற்கு ஒரு தனிச் சாதுரியமும் சாமர்த்தியமும் வேண்டும். எப்பை சாப்பைகள் இவர்களிடம் அகப்பட்டுக் கொண்டால் படும்பாடு வேறு தான், இவர்கள் பெரும்பாலும் பச்சை, சிவப்பு, நீலம் முதலிய கல் வியாபாரந்தான் – செய்பவர்கள். அரை ரூபாய் பெறும்படியான கற்களை ஐம்பது ரூபாய் என்று ஆரம்பிப்பார்கள். படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து நாம் கேட்ட விலைக்குச் சில சமயம் கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் தாறு மாறாக வைதுகொண்டும் போய்விடுவார்கள். இவர் களிடம் பேரம் பேசினால் ஏதாவது வாங்கித் தீரவேண்டும். உண்டானதெல்லாம் பார்த்துவிட்டுப் பின்பு ‘எனக்கு வேண்டாம்’ என்று சொல்லி விட்டால் வந்து விட்டது ஆபத்து; பிரமாதமாகச் சண்டைக்கு வந்து விடுவார்கள். ஆகவே யாவரும், முக்கியமாகப் பெண்கள், இவர்களுடன் வியாபாரம் செய்ய அஞ்சுவார்கள். இப்படி உருட்டி மிரட்டி இவர்கள் வாழ்க்கையும் கழிந்து சென்று கொண்டிருக்கிறது.
இவர்கள் உடல் வன்மைக்கும் தேகக் கட்டிற்கும் பேர்போனவர்கள். ஒவ்வொருவனுக்கும் ஐந்தாறு நபர் களை அடித்து விரட்டக்கூடிய ஆற்றல் உண்டு. காபூலிப் பெண்களுங் கூட அப்படித்தான். மிகுந்த உடல்வலிமை படைத்தவர்கள். அதனாலேயே இவர்கள் உருட்டும் மிரட்டும் சென்றுகொண்டிருந்தது. இத்தகைய காபூலிப் பட்டாளம் ஒரு முறை எங்கள் திராமத்தில் முகாம் ‘ போட்டிருந்தபோது நிகழ்ந்த ஓர் அபூர்வ சம்பவம் என் மனத்திலே அழிக்கமுடியாத ஒரு முத்திரை இட்டுச் சென்றது. வீரச் செய்கைகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இன்னும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது; அவை களுக்கு உரிய இடம் கொடுபடவேண்டும்; இக்காலத் திலும் அவை அசாத்தியமானவையல்ல என்ற ஓர்” உணர்ச்சியை உண்டாக்கிவிட்டுச் சென்றது அது.
ஒரு நாள் ஆஸ் தமன சமயம். நடுக்கடலில் தீப் பிடித்து எரிந்து கொஞ்சங் கொஞ்சமாக ஜலத்திற்குள் அமிழ்ந்து போய்க்கொண் டிருக்கும் ஒரு கப்பலைப் போல் சூரியன் மேற்கு மலைவாய்க்குள் போய்க் கொண் டிருந்தான். அதே சமயம், எதிரியின் கப்பல் மறையும் தருணம் பார்த்து, மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும், கொஞ்சங் கொஞ்சமாக ஜலத்திற்குள்ளிருந்து வெளிக் கிளம்பும் நீர்மூழ்கிக் கப்பலைப்போன்று பூர்ண சந்திரன் சீழ்வானில் கிளம்பிக்கொண்டிருந்தான்.
காபூலியர் முகாமில் ஒரே களேபரமாக இருந்தது. ஆண்கள் எல்லோரும் கற்கள் விற்றுவரக் கிராமத்திற் குள் போயிருந்தார்கள். பெண்கள் மட்டும் கத்தி, கத்தரிக் கோல் போன்ற சாமான்களைக் கடை பாப்பி வைத்து வியாபாரம் செய்துகொண் டிருந்தார்கள். இவர்களிடம் வியாபாரம் செய்வதைவிட வேடிக்கை பார்க்கும் எண்ணத்தோடு கிராமமே திரண்டுவந்து கூடிக் – கிடந்தது. ரெயில் வருவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்தபடியால் எட்டினாற்போல் இருந்த ஸ்டேஷன் கூட்டமும் ஒன்று சேர்ந்து விட்டது. கேட்க வேண்டுமா இரைச்சலுக்கும் சந்தடிக்கும்?
இங்கும் அங்குமாகக் காபூலிக்காரிகள் தங்கள் | கடைகளைப் பரப்பி இருந்தனர். எல்லோரையும் விட ஒருத்தி இருந்த இடத்தில் தான் கூட்டம் அதிகமாகக் கூடியிருந்தது. அவள் ஒரு யௌவனப்பெண். வயது பதினெட்டுக்கு மேல் இராது. இதரக் காபூலிக்காரி களைப் போலவே நல்ல சிவப்பு நிறம். அவர்களிடையே கறுப்பைக் காண்பதே அரிதல்லவா? மற்றவர்களைப் போலவே அழுக்கேறிப்போய்க் கிடந்த ஒரு பெரிய பாவாடையையும் முழங்கால்வரை” தொங்கும் அங்கியையும் அணிந்திருந்தாள். ஒரு சிவப்புக் கைக் குட்டையைத் தலையை மறைத்து ஜோராகக் கட்டி யிருந்தாள். அதுவும் ஓர் அழகாகத்தான் இருந்தது. அதற்குள்ளிருந்து இரண்டு பின்னல்கள் பிளந்து, இரண்டு தோள்களிடையேயும் முன்பாக மார்பில் விழுந்து இடுப்புக்குக் கீழாகத் தொங்கிக்கொண் டிருந்தன. பச்சை குத்தின பொட்டு ஒன்று அவள் நெற்றியை அலங்கரித்துக்கொண் டிருந்தது. கைகால் களில் கருமணிகளும் வளை களும் வளையங்களும், ஏகத் தாறாகக் கிடந்து சப்தித்துக்கொண் டிருந்தன. காது, மூக்குகளில் புதுப் புது விதமான நகைகள் தொங்கிக் கொண் டிருந்தன. நல்ல அங்க அமைப்பு; கட்டு , மஸ்தான சரீரம். ஆளை மயக்கும் கண்கள். காபூலிய ரிடையே சாதாரணமாகக் காணப்படாத ஓர் உருவம் அவளது. அவள் இருக்கும் இடத்தைத்தான் சுற்றிச் சுற்றி வந்து கொண் டிருந்தது, அந்த வேடிக்கை பார்க்கும் கூட்டம். அந்தக் கூட்டத்தைப்பற்றி ஏளனமாகத் தன் பாஷையில் மற்றவர்களோடு கேலி செய்துகொண் டிருந்தாள் அந்தப் பெண்.
கூட்டம் அவளைச் சுற்றி, “இதென்ன விலை? அது என்ன விலை?” என்றெல்லாம் ஓயாமல் கேட்டுக்கொண் . டிருந்தது. அவள் ஒரு சமயம் சாந்தமாகப் பதில் சொல்வாள், சில சமயம் எறிந்து விழுவாள். அதை யெல்லாம் கூட்டம் பொருட்படுத்தாது.
ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு வந்த குண்டாத்தேவன் அவள் கடைக்கு முன் வந்து உட்கார்க் தான். கள்ளுக் கடையிலிருந்து திரும்பி வீட்டிற்குப் போய்க்கொண் டிருக்கும் வழி அது. அப்பொழுது அவன் முழுப்போதையில் இருந்தான். . சுற்றி வெகு தூரத்திற்குக் கள் நாற்றம் வீசியது. குண்டான் வரவும் கூட்டம் கொஞ்சங் கொஞ்சமாக அவனுக்கு வழி செய்து விட்டுக் கலைந்து கொடுத்தது. குண்டானைப்பற்றிக் கிராம வாசிகளுக்குப் பூரணமாகத் தெரியும். குடி விஷயத்தில் மட்டுமல்ல ; தேக வலிமையில் தான் முக்கியமாக, சரியாக ஆறடி உயரம், கற்பனை க்குக் கூட விளங்கா தபடி மார்பகலம், புயவீக்கம். அவன் உடல் 6’லிமையைப்பற்றிக் கிராமத்தில் புரண்டுகொண் டிருக்கும் கதைகள் அநேகம். அனைக் கண்டால் யாருக்கும் பயம். ஒதுங்கி ஒருபுறம் போய்விடுவார்கள்.
ஒரு மலைக்குன்று போல் குண்டான் அருகில் வந்து உட்காரவும், அந்தக் கா பூலிப் பெண் அவனை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்து விட்டுத் தன் பாஷையில் என்ன வேண்டுமென்று கேட்டாள். குண்டான் பதில் பேசாமல் ‘ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு ஒரு நல்ல கத்தியை – எடுத்து விலை கேட்டான். உடைந்த தமிழில் அவள் அதன் விலையைக் கூறினாள். குடிவேகத்தில் குண்டான் ரொம்பக் குறைந்த விலைக்கு அதைக் கேட்டான். அவள் கொடுக்க இஷ்டமில்லாமல் கத்தியைத் திரும்பக் கேட்டாள். அதற்கும் அவனுக்குச் சம்மதமில்லை. அவள் தன் பாஷையில் என்னவோ திட்டிக்கொண்டு கத்தியை அவன் கையிலிருந்து பிடுங்கப் போனாள். அவளுக்கு இஷ்டமில்லை; இந்த விளையாட்டுப் பிடிக்கவும் இல்லை. அவனைப் பார்த்து விழித்துக்கொண்டே, “கீழே வை கத்தியை. இல்லாவிட்டால் சொன்ன விலையைக் கொடு” என்றாள்.
சொல்லிக்கொண்டே சட்டென்று அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டாள். குண்டான் பொத், தென்று கத்தியைக் கீழே போட்டான்.
குண்டானை அந்தச் சிறு பெண் அடித்து விட்டதைப் பார்த்துக்கொண் டிருந்த கூட்டம் பரபரப் படைந்தது. மேலே என்ன நடக்கப் போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண் டிருந்தது. குடி வெறியில் குண்டான் பலக்கச் சிரித்தான். அந்தச் சிரிப்பு, தோப்பு முழுவதும் எதிரொலித்தது.
குண்டான் சரேலென்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டான். பிடிக்கவும் அந்தப் பெண் சிரித்தாள். எளிதாக நினைத்து லேசாகத் திமிறினாள். முடியவே இல்லை. அவ்வளவு இரும்பான பிடிப்பு அது.
குண்டான் முகத்தில் ஒரு தீவிரமும் காணவில்லை.. அவன் லேசாகத்தான் பிடித்துக்கொண் டிருந்தான். அந்தப் பெண் பயந்து போனாள். கூவி மற்றப் பெண்களை அழைத்தாள். எல்லாரும் ஓடி வந்து அவனைத் தாக்கி அவளை விடுவிக்கப் பார்த்தனர். அத்தனை பேர் கூடியும் அவளை விடுவிக்க முடியவில்லை. அவன் அவர்களை லகுவாக விரட்டி அடித்துவிட்டான்.
இந்தச் சமயம் இரண்டு மூன்று ஆண்கள் வந்து சேர்ந்தார்கள் ; சப்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு ஓடிவந்தார்கள். அருகில் நின்றுகொண்டு உடைந்த தமிழில் கோபத்துடன், “அவள் கையை விடுகிறாயா இல்லையா?’ என்று குண்டானைப் பார்த்துக் கர்ஜித் தார்கள்.
குண்டான் சிரித்துக்கொண்டே, “என்னை அடிக்க இந்தச் சிறுக்கிக்கு அவ்வளவு தைரியமா?” என்று கூறிக்கொண்டே பிடித்திருந்த கையை வீசிவிட்டான். அந்த வேகத்தில் அவள் அந்தக் காபூலியர்மீது விழுந்து, சாய்ந்தாள்.
காபூலியர்களுக்குக் குண்டானைப் பார்த்ததும் அவன் மீது கைபோடத் தைரியம் வரவில்லை. சிறிது தயங்கி நின்று கோபமாக விழித்தார்கள். குண்டான் அலக்ஷியமாக எதிர்த்துப் பார்த்தான்.
“தூ! பெண்பிள்ளை கிட்டப் போய்ச் சண்டை போடறே நீ! சோதாப்பயல்! எங்ககிட்ட வந்து பாரு” என்று மீசையை முறுக்கினான் ஒருவன்.
“என்ன செய்யணுங்கறே? ஒரு கை பார்க்கிறயா? தனித்தனியா வறியா? சேர்ந்து வறியா?” என்று கிருதாவில் கைபோட்டுக் கேட்டான் குண்டான்.
காபூலியர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அப்பொழுது இருட்டிக்கொண் டிருந்தது. “சரி; நாளைக்குச் சாயந்திரம் இங்கே வா, ஒரு கை பார்ப்போம். சத்தியமாக வறியா?” என்றான் ஒரு காபூலியன்.
“சத்தியமா வறேன்” என்று கையடித்துக் கொடுத்துவிட்டுக் கிராமக் கூட்டம் தன்னைப் பின் தொடர்ந்து வா, வீறாப்புப் பேசிக்கொண்டு அதை விட்டுப் புறப்பட்டான் குண்டான்.
காபூலியனோடு குண்டான் பந்தயம் போட்டிருக்கும் விஷயம் கிராமம் முழுவதும் பரவிவிட்டது. மறுநாள் சாயந்திரம் காபூலியர் முகாம் போட்டிருந்த தோப்பிலே ஒரு பெரும் திரளான கூட்டம் கூடி இருந்தது. காபூலியர் ஒரு பக்கமாகவும் ஜனங்கள் ஒரு பக்கமாகவும் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்கள். காபூலியர் முன்னணியில் ஐந்தாறு பலிஷ்ட ஆடவர்களும், எதிரில் குண்டானும் அவனுடைய சகபாடிகள் ‘சிலரும் நின்று கொண்டிருந்தார்கள்.
தன் வயிறு கொள்ளுமட்டும் நிறையக் குடித்து விட்டு வந்திருந்தான் குண்டான். அவன் கண்கள் ரத்தம்போல் சிவந்து கிடந்தன. ‘நான் தயார்’ என்று சொல்லும் பாவனையாக ‘ஹும்’ என்று காபூலியரைப் பார்த்துத் தலையை அசைத்தான் அவன். என்ன நடக்கப் போகிறதோ என்று கூட்டம் வெகு ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தது.
“நீதான் பந்தயம் வைக்கணும்” என்றான் காபூலி யரில் ஒருவன், குண்டானின் முகத்தைப் பார்த்துக் கொண்டே.
“நீதானே கூப்பிட்டே? நீயே கூறேன். நான் எதுக்கும் சம்மதம்” என்றான் குண்டான் அலக்ஷியமான பார்வையுடன்.
தங்கள் பாஷையில் காபூலியர் ஒருவருக்கொருவர் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். அத்தருணம் குண்டான் அவர்களைத் திரும்பக் கூப்பிட்டது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தார்கள்.
கொஞ்ச தூரத்தில் ஒரு கூடாரத்தின் கயிறு இழுத்துச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பாறாக் கல்லைச் சுட்டிக் காண்பித்து, “இந்தா, அதை இங்கே தூக்கிக்கிட்டு வந்து போடு” என்றான் குண்டான் அழுத்தமான குரலில்.
ஒரு காபூலியன் சென்று அதைத தூக்கிப் பார்த்தான். அதை அசைக்கவே முடியவில்லை. இன்னும் ஒருவனை உதவிக்குக் கூப்பிட்டான். இருவரும் சேர்ந்து முக்கி முனகிக்கொண்டு தூக்கமுடியாமல் தூக்கிக் கொணர்ந்து போட்டார்கள்.
அதன் மீது தன் ஒரு காலைத் தூக்கிவைத்துக் குண்டான், “ரெண்டு தரம் இந்தக் கல்லைத் தூக்கி ஆள் உசரம் வீசிப்போட்டு, தோள்ளே ஏந்திக் கீழே விடறேன். என்ன சொல்றே?” என்று அறை கூவிப் பேசினான்.
அதைக் கேட்ட காபூலியர்கள் திகைத்து நின்று விட்டார்கள். “முடியாது! ஒருதரங் கூட முடியவே முடியாது அவனால்” என்று அவர்கள் வாய் முணு முணுத்தது. இரண்டொருவர் வாய்விட்டும் சிரித்தார்கள்.
குண்டானுக்கு அந்தச் சிரிப்புப் பிரமாதமான கோபத்தை உண்டாக்கி விட்டது, திரும்பவும் “என்ன சொல்றே?” என்று கர்ஜித்தான்.
இதைக் கேட்டுக்கொண்டு முன்னால் நின்றிருந்த அந்தக் காபூலிப் பெண், குண்டானைக் கன்னத்தில் அடித்த அந்த அழகி, ஒரு வினாடி தீர்க்கமாயும் தீவிர மாயும் குண்டானைப் பார்த்து விட்டுத் தன் பாஷையில் காபூலியரிடம் ஏதோ கூறி விட்டுக் குண்டான் பக்கம் திரும்பினாள். அவள் கண்களில் ஓர் ஒளி வீசியது. அவள் முகத்தில் தீரத்தின் குறிகள் குறுக்கிட்டு ஓடின. குண்டானைப் பார்த்து மெதுவாகச் சிரித்துக்கொண் டாள். அவள் விழிகள் அவனையே உறுத்துப் பார்த்தன. காபூலியர் இன்னும் வெறுமனே இருப்பதைப் பார்த்து, அவர்கள் பக்கம் அவள் திரும்பி, ”ஹும்!” என்று தலையை அசைத்தாள். தான் சிறிது முன் கூறியதை அவனிடம் கூறுங்கள் என்று வற்புறுத்துவதுபோல் இருந்தது அந்த அசைப்பு.
திரும்பவும் அவள் கண்கள் குண்டானை உற்றுப் பார்க்கத் தொடங்கின. அதில் ஒரு சாந்தமும் அமைதி யும் அன்பும் கலந்து தோன்றின.
காபூலியரில் ஒருவன் முன்னுக்கு வந்தான். “நீ சொன்ன படி ஒருதரம் செய்துட்டயானால், இதைத் தூக்கிப்போட்டுப் பிடிச்சுட்டேயானால், இதோ-” என்று சொல்லிக்கொண்டே அருகில் நின்ற அந்தக் காபூலிப் பெண்ணின் கையைப் பற்றிக்கொண்டு, “நீ கையைப் பிடிச்சு இழுத்த இந்தக் குட்டியை உனக்குக் கட்டிக் கொடுத்துடறேன். சம்மதமா?” என்று கம்பீர மான தொனியில் பந்தயம் கூறினான். அவன் கண்களில் ரோஷம் வழிந்தோடியது.
கூட்டமோ திகைத்து நின்றுகொண் டிருந்தது, இந்த விநோதமான பந்தயத்தைக் கேட்டுக் காபூலிப் படையோ சிரித்துக் கெக்கலி ‘கொட்டிக்கொண் “டிருந்தது. அவனால் அதைத் தூக்கமுடியாதென்பதும், அவனை அவமானப்படுத்தி அனுப்பி விடலாம் என்பதும் அவர்களுக்கு நிச்சயம். அந்தப் பெண்ணோ குண்டா னையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தாள்.
குண்டான் இதைக் காதுகொடுத்துக் கேட்டான். ஒரு ‘முறை அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தான். அவர்கள் கண்கள் சந்தித்தன; இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
அடுத்த விநாடி குண்டான் கையில் இருந்த தடி தூரச் சென்று விழுந்தது. தலைக்கட்டை அவிழ்த்து எறிந்தான். கச்சத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டான். கல்லருகில் சென்று கீழே குனிந்து கல்லை வசம் பார்த்து வைத்துக்கொண்டான்.
கூட்டத்தின் பரபரப்பு அதிகரித்தது. எல்லா ருடைய கண்களும் குண்டானையே பார்த்த வண்ணம் இருந்தன. எல்லோரும் விலகி நின்று கொண்டார்கள். குண்டான் தனக்கு வழிவிட்டு வெகு தொலைவில் தள்ளி நின்று கொள்ளும்படி கூட்டத்தை எச்சரித்துவிட்டு, கல் இருக்கும் இடத்திலிருந்து சுமார் நூற்றைம்பது அடி பின் சென்று நின்று கொண்டான்.
பரபரப்படைந்த கூட்டம் விலகி நின்று மௌன மாகப் பார்த்துக்கொண் டிருந்தது.
பாறை உருளுவதுபோல் அங்கிருந்து ஓட்டமாகக் கல்லை நோக்கி வந்தான் குண்டான். வந்த வேகத்தி, லேயே சரேலென்று கீழே குனிந்து கல்லைத் தூக்கி *உயரே விட்டான். ஆள் உயரத்திற்குமேல் சென்றது அந்தக் கல்!
அடுத்த விநாடி விழும் கல்லிற்கு. நேராக முண் டாவைப் பிடித்தான். கல் முண்டாவில் தாக்கி நின்றது. அருகில் நின்றுகொண் டிருந்தவன் ஒன்று இரண்டு என்று எண்ணினான், பன்னிரண்டுவரையில், அடுத்த எண்! கல்லை வீசிவிட்டான் குண்டான். தடாலென்ற சப்தத்துடன் பேரொலி செய்து கொண்டு தரையில் விழுந்து சிறிது பதிந்தது அந்தப் பாறாங்கல்!
கூட்டத்தினரின் திகைப்பும் வியப்பும் மாறி, அவர்கள் சுயப்பிரக்ஞைக்கு வரச் சில ‘விநாடிகள் சென்றன, சுய நினைவு வந்தவுடன் அவர்கள் பார்த்தது இது தான்.
அந்தக் காபூலிப் பெண், எல்லோரையும்விட அதிக ஆவலோடு இந்த வீரச்செயலைப் பார்த்துக்கொண் டிருந்தவள், குண்டானுடைய கைப் பிடிக்கு நடுவில் நின்றுகொண்டாள். அவள் கரங்கள் அவன் தோள் மீது இருந்தன. நம்பக்கூடியதா?
காபூலியர் குண்டானை அப்படியே செண்டுபோல் தூக்கிக்கொண்டு ஆரவாரத்துடனே கூடாரத்தை நோக்கி ஓடினார்கள். அந்தச் சிறுமி குதூஹலமே ஓர் உருவெடுத்து வந்தவள் போன்று இருந்தாள். கூட்டத்தின் ஆர்ப்பரிப்புக்குக் கேட்க வேண்டுமா?
உடனே சடம் சடமாகக் கள் கொண்டு வரப்பட்டது. குண்டானுக்கும் வேண்டிய மட்டும் கொடுத்துத் தாங்களும் சடித்து வெற்றியைக் கொண்டாடினார்கள் காபூலியர். வீரனை வீரன் தானே மதிக்க முடியும்!
மேலே வளர்த்துக்கொண் டிருப்பானேன்? அந்த இடத்திலேயே, அப்பொழுதே அந்தக் காபூலிப் பெண்ணிற்குத் தன் சாதி வழக்கப்படி தாலி கட்டினான் ‘ குண்டான். அந்தப் பெண் அடைந்த பெருமைதான் , என்ன? தன் உயிரையே அவனிடம் வைத்து விட்டாள்..
காபூலியர் முகாம் மேற்கொண்டு ஒரு மாதம்அந்தக் கிராமத்திலேயே போட்டிருந்தது. குண்டான் முக்கால்வாசி நேரம் அந்தத் தோப்பிலே தான் கழிப் பான் ; மிகுதி நேரத்திற்கு அந்தக் காபூலிப் பெண் குண்டான் வீட்டிற்கு வந்து விடுவாள். தன் இனத்தை விட்டு வந்த அவள் சமைத்துப்போடும் உணவைக் குண்டான் ஆவலோடு சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே! உடைந்த தமிழில் அவள் உளறுவதைக் கேட்டு அவன் மகிழ்வதையும் காண வேண்டுமே!
ஒரு மாதம் கழிந்தது. காபூலியர் பட்டாளம் முகாமை வேறு இடத்திற்கு மாற்றும் நாளும் வந்து விட்டது. அன்று சாயங்காலம் கூடாரங்கள் எல்லாம் பிரிக்கப்பட்டு மூட்டை முடிச்சுக்கள் கழுதைகள் மீது ஏற்றப்பட்டுப் புறப்படத் தயாராக இருந்தன… தோப்பிலே திரளான கூட்டம் கூடி இருந்தது, அவர்களை வழி அனுப்புவதற்கு. காபூலியர் ஒவ் வொருவராகக் குண்டானிடமும் அவன் புதுக் காபூலி மனைவியிடமும் தனித்தனியே விடை பெற்றுக்கொண் டார்கள். தங்களோடு கூடவே புறப்பட்டு வரும்படி அழைத்ததற்கு அவள் வர மறுத்து விட்டது கண்டு மிக்க வருத்தம் தெரிவித்தார்கள். அந்தக் காபூலிப் பெண் தன் இனம் பிரிந்துபோவதைப்பற்றிச் சிறிது வருத்தப்பட்டாள். ஆனால் குண்டானை விட்டுப் பிரிந்து அவர்களோடு வரக் கண்டிப்பாக மறுத்து விட்டாள்.
காபூலியர் எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். குண்டானும் அவளும் தோப்பில் நின்று அவர்களை வழி அனுப்பிக் கண்ணுக்கு மறையும்வரை அந்தத் திசையையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத் திரும் பினார்கள்.
– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை.