கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 4,315 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்டீபன் க்ரேன்: (1871-1900)

[‘தி ரெட் பாட்ஜ் ஆப் கரேஜ்’ என்ற புத்தகத்தின் மூலம் அமெரிக்க இலக்கியத்தில் நிரந்தரமான ஒரு ஸ்தானம் பெற்றவர் ஸ்டீபன் க்ரேன். அமெரிக்க உள் நாட்டுப் போரைப்பற்றிய இப்புத்தகத்தில் தத்ரூபமாக. யுத்தக்காட்சி களை மயிர்க் கூச்செறியும் வண்ணம் வர்ணித்துள்ள இவர், தனது ஆயுள் காலத்தில் ஒரு சிறு சண்டையைக்கூட நேரில் பார்த்ததில்லை என்ற உண்மை மிகவும் குறிப்பிடத் தக்கது. ‘தி ரெட் பாட்ஜ்’ புத்தகம் ஒன்றே இவருடைய மேதையை எடுத்துக் காட்டப் போதுமான சான்றாகும். எனினும் ‘திறந்த படகு ‘முதலிய இவரது மற்ற சிருஷ்டிகளும் ‘சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்’ என்ற உண்மையைப் படிப்படியாக ஊர்ஜிதப்படுத்தக் காரணமாயிருந்தன.]

அமெரிக்காவில், நியூ ஜெர்ஸி மாகாணத்தில் நிவார்க் என்னுமிடத்தில் பிறந்தவர் ஸ்டீபன் க்ரேன். இவரது குறுகிய ஆயுள் காலம் முழுவதும் நோய் முதலிய கஷ்டங்கள் நிறைந்திருந்ததால் எழுத்தாளராகவும், யுத்த நிருபராகவும் இவர் செயலாற்றியுள்ளதைப் பற்றிக் கூறும் குறிப்புகளில் தோல்வியும் ஆதரவின்மையுமே அதிகமாகக் காணப்படுகின்றன. எழுத்துத் துறையில் இவர், தன்னுடைய காலத்திற்கு மிகவும் முற்போக்காக விளங்கிய தீவிரமான கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஆனால் இவருடைய நூல்களைப் பிரசுரித்த ஆசிரியர்களில் அநேகர் இவரது கருத்துக்களை வன்மையாக எதிர்த்தனர்.

ஜோஸப் கான்ராட் என்பவர் பாராட்டி எழுதிய புத்தகங்களில் திறந்த படகும் ஒன்று. “மிகச் சிறிய படகு ஒன்றில் செல்லும் நான்கு பேரைப் பற்றிய இவருடைய இயற்கையான கதை அமைப்பு வாழ்க்கையின் சாரத்தையே பிரதி பலிக்கிறது” என்று ஜோஸப் கான்ராட் எழுதியுள்ளார்.

***

வான வெளியே அவர்களில் யாருக்கும் தெரியவில்லை. தங்களை நோக்கிப் பாய்ந்து வந்த அலைகளின் மீதே அவர்கள் எல்லோரின் பார்வை நிலைத்திருந்தது. நுரையுடன கூடிய அலைகளின் வெளுப்பான மேல் பாகத்தைத் தவிர மற்ற எல்லாம் அவர்களுக்கு ஒரே கருஞ் சாம்பல் வர்ணமாகத் தெரிந்தது. அலைகள் ஓயா மல் எழும்பி விழுந்துகொண்டிருந்ததால் அடிவானம் ஏறி இறங்குவது போலவும் குறுகி விரிவது போலவும் காணப்பட்டது. கடலில் பாறைகள் போல குத்திட்டு எழும்பிய அலைகள் வான முகட்டைக் கிழித்து விடுவது போல் தோற்றமளித்தன.

இம்மாதிரியான சூழ்நிலையில் தான் ஒரு சிறிய படகு கடலில் மிதந்து போய்க் கொண்டிருந்தது. சாதாரண மாக ஒரு குளிக்கும் தொட்டிகூட இன்னும் சற்றுப் பெரியதாக இருக்கும். அதைக் காட்டிலும் இந்தப் படகு சிறியதாக இருந்தது. கடலில் செங்குத்தாகவும் மிக உயரமாகவும் எழும்பி நின்ற பயங்கரமான அலை ஒவ்வொன்றும், அந்தச் சிறிய படகைச் செலுத்துவதில் ஒவ்வொரு பிரச்னையாக இருந்தது.

படகின் அடிப்பாகத்தில் உட்கார்ந்து கொண்டு ஆறு அங்குல கனமுள்ள அதன் விளிம்பையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் சமையற்காரர். சட்டையை முழங்கைக்கு மேல் சுருட்டி விட்டுக்கொண்டு படகி லிருந்த தண்ணீரை இறைப்பதற்காகக் குனிந்த போதெல்லாம், அவருடைய பித்தான் போடாத உள் சட்டைத் தலைப்புகள் இரண்டும் காற்றில் அடித்துக் கொண்டிருந்தன. அடிக்கடி அவர், “கடவுளே! இப்போதைக்குத் தப்பினோம்” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். சொல்லிவிட்டுக் கடலின் கீழ்த்திசையை பரிதாபகரமாக நோக்கிக் கொண்டிருந்தார்.

படகிலிருந்த மற்றவர்களில் ஒருவர் கட்பலில் என்ஜினை கவனிக்கும் சிப்பந்தி. மேனி முழுதும் எண்ணெய்ப் பசை படர்ந்திருந்தது. படகில் இருந்த இரண்டு துடுப்புகளில் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்த அவர் படகின் மேல் தெறித்துவிடும் அலையைப் புறக்கணிப்ப தற்காக ஒவ்வொரு சமயம் திடீரென்று எழுந்தே நின்று விடுவார். துடுப்பு மிகவும் மெல்லியதாக இருந்ததால் எந்த நிமிஷமும் உடைந்துவிடுமோ என ஐயுறவேண்டி இருந்தது.

மற்றொரு துடுப்பை இயக்கிக் கொண்டிருந்த நிருபர் அலைகளை நோக்கிய வண்ணம் தான் அந்தச் சமயத்தில் அங்கு வந்து சிக்கிக்கொண்ட விதத்தைப் பற்றி ஆச்சரியம் அடைந்தவராய் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

படகின் பின் புறத்தில் காயங்களுடன் கிடந்தார் படகின் தலைவன். ‘வியாபாரம் நொடித்து விட்டது; படை தோற்றுவிட்டது: கப்பல் கவிழ்ந்து விட்டது’ என்ற செய்திகளைக் கேட்கும்பொழுது, மிகத் தைரியமும், சகிப்புத் தன்மையும் கொண்டவர்கள் கூட சிறிது நேரம் எதிலும் பற்றில்லாமல் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அந்த நிலையில் தான் படகின் காப்டனும் அப்போது இருந்தார். ஒரு படகின் மீது அதன் காப்டனுக்கு உள்ள ஆதிக்கம், ஒரு நாளானாலும் சரி, பத்து வருஷங்களானாலும் சரி, அவருடைய சிந்தனை எல்லாம் படகின் ஆயுள் ஒன்றில்தான் வேரூன்றியிருக்கும். அதேபோல் இந்தக் காப்டனுக்கும் அன்று விடியற்காலையில் தான் கண்ட ஒரு பரிதாபகரமான காட்சி கவனத்தில் நன்றாக பதிந்திருந்தமையால் அதன் நினைவே மீண்டும் மீண்டும் வந்தது.

மூழ்கிக் கொண்டிருந்த ஒரு கப்பல். அதன் தளத்திலிருந்து தன்னையே பரிதாபமாக நோக்கும் ஏழு முகங் கள். பிறகு அந்தக் கப்பலின் கொடிமரத்தின் மேல்பாகமும் அதன் நுனியில் ஊசலாடிக் கொண்டு, அலைகளால் மோதப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வெண்மையான பந்து போன்ற வஸ்துவும் தெரிந்தது. கொடி மரம் சிறிது சிறிதாகக் கடலுக்குள் ஆழ்ந்துவிட்டது. ஆம், அந்த ஏழு மனிதர்களுடன் தான். இந்தக் காட்சி நினைவுக்கு வந்தவுடன் காப்டனின் குரலில் அதிசயமான ஒரு மாறுதல் காணப்பட்டது. தெளிவாக இருந்த போதிலும் அதில் கண்ணீர் பொங்கிவரச் செய்வதற்கும் மேலான வருத்தம் – விளக்கத்திற்கும் மேலான தன்மை வாய்ந்த வருத்தம்- இருந்தது.

“பில்லி! படகை இன்னும் சிறிது தெற்காகச் செலுத்து!” என்று காப்டன் உத்தரவிட்டார்.

“இன்னும் சிறிது தெற்காகவா? அப்படியே” என்று சிப்பந்தி பதிலளித்தார் படகின் முன் பக்கத்திலிருந்து.

அந்தப் படகிலிருந்தவர்களின் நிலை அடிக்கடி பின் னங்கால்களில் எழும்பி நிற்கும் ஒரு பழக்கப்படாத. காட்டுக் குதிரை மேலிருப்பவனின் நிலையைப் போலவே இருந்தது. மேலும், இப்படகைக் காட்டிலும் ஒரு குதிரை இன்னும் சற்றுப் பெரிதாக இருக்கும் என்று கூடச் சொல்லலாம். கடலில் அப் படகு முன்னும் பின்னுமாகப் பாய்ந்து சென்றது ஒரு குதிரை முன்னும் பின்னும் செல்லுவது போலத்தான் இருந்தது. ஒவ்வொரு அலைக்கும் அது உயரே எழும்பும்போது, உயரமான ஒரு வேலியைத் தாண்டும் குதிரையைப் போலத் தோன்றியது. அலைகளின் மேல் அது எழும்பிக் குதிக்கும் விதத்தைக் காற்றில் துள்ளிக் குதிக்கும் குதிரைக்கு நிகர் எனலாம். அலையின் உச்சிக்குப் போனால் அங்கும் பிரச்னைகள் தான்! அலையின் நுரைகள் உச்சியிலிருந்து வேகமாகக் கீழ் நோக்கிச் சரிந்து மற்றொரு பாய்ச்சலுக் குத் தயாராகும். படகு ஒரு அலையைத் தாண்டிவிட்ட பெருமையோடு அதனின்றும் வழுக்கி வேகமாக கீழே செல்லும். நேரே ஆடி அசைந்து சமநிலைக்கு வந்ததும் அடுத்த படையைச் சமாளிக்கத் தயாராக வேண்டி வரும்.

கடலில் வேறு எதிலும் இல்லாத ஒரு அசவுகரியம் என்னவென்றால் ஒரு அலையை வெற்றிகரமாகக் கடந்த வுடன் முன்னதைப் போலவே பயங்கரம் பொருந்திய மற்றொரு அலையும், அதற்கடுத்து அதே போன்ற இன்னொரு அலையும் தாண்டுவதற்கு இருக்கின்றன என் பதுதான். கடலில் பிரயாணம் செய்து பழக்கம் உடைய வனாயினும் ஒரு 10 அடி நீளமுள்ள படகில் ஏறி நடுக் கடலில் சென்று பார்க்கும் பொழுது தான் ஒருவனுக்கு அலைகளை உண்டாக்குவதில் சமுத்திரத்திற்குள்ள எல்லை யற்ற சக்தி சிறிதளவாவது தெரியவரும். ஒவ்வொரு தடவையும் அலை எழும்பி வரும்போது படகில் இருப்ப வர்களின் பார்வைக்குத் திரை போட்டு மற்ற எல்லாக் காட்சிகளையும் மூடி மறைத்துவிடும். அப்பொழுது, “இந்த ஒரு அலைதான் முடிவானது; சமுத்திரமே பொங்கி வந்து விட்டது! கொந்தளிக்கும் கடலின் கடைசி முயற்சிதான்” என்ற எண்ணம் சுலபமாக எழக்கூடியது தான். அலைகளின் அசைவில் ஒரு கம்பீரமான அழகு இருக்கிறது. அவைகளின் உச்சி எழுப்பும் சீறலைத் தவிர மற்றபடி அவை பயங்கரமான அமைதியுடன் தான் வருகின்றன.

அந்த இருள் ஒளியில் அம் மனிதர்களின் முகங் கள் மங்கலாகத்தான் இருந்திருக்க வேண்டும். படகின் வெளியே அவர்கள் வெறித்துப் பார்த்தபோது, அவர்களுடைய கண்கள் வித விதமாக ஜொலித்திருக்கும். ஒரு மாடி முகப்பிலிருந்து பார்த்தால் அக் காட்சி முழுவதும் நிச்சயமாக ஒரு கோரச் சித்திரமாகத் தெரிந்திருக்கும். ஆனால் அப் படகிலிருந்தவர்களுக்கு அதைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரமில்லை. அப்படி அவர்களுக்கு அவகாசம் இருந்தாலும் அவர்கள் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்ள வேறு விஷயங்கள் இருந்தன. வானத்தின் உச்சியை நோக்கிப் பகலவன் சிறிது சிறிதாக ஏறிக் கொண்டிருந்தான். கடலின் நிறமும் சாம்பல் கருப்பிலிருந்து மரகதப் பச்சையாக மாறிக்கொண்டு வந்ததிலிருந்து, பகற்பொழுது வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தனர். கடல் நுரைகள். சிதறும் பனிக் கட்டிகள் போல் காணப்பட்டன. பொழுது எப்பொழுது விடிந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர் களை நோக்கி உருண்டு வந்து கொண்டிருந்த அலை களின் நிறத்தில் ஏற்பட்ட மாறுதலைக் கொண்டு தான் அவர்கள் பொழுது புலர்ந்ததை உணர முடிந்தது.

கோர்வையில்லாத வாக்கியங்களில் சமையற்கார ரும் நிருபரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு உயிர் பாதுகாப்பு நிலையத்திற்கும், அகதி விடுதிக்கு மிடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி அவர்கள் விவாதத்தில் ஆழ்ந்திருந்தனர். மஸ்கிடோ இன்லெட் லைட் ஹவுஸுக் குச் சிறிது வடக்கே அகதி விடுதி ஒன்று இருக்கிறது. “அவர்கள் நம்மைப் பார்த்தவுடன் தங்கள் படகில் நம்மை ஏற்றிக்கொண்டு செல்வார்கள்” என்று சமை யற்காரர் சொல்லியிருந்தார்.

“யார் பார்த்தவுடன்?” என்று நிருபர் கேட்டார்.

சமையற்காரர்: படகுக்காரர்கள் தான்.

நிருபர் : அகதி விடுதிகளில் படகுக்காரர்கள் கிடையாது. எனக்குத் தெரிந்தவரை கப்பல் கவிழ்ந்து போய்க் கரை சேருகிறவர்களின் நலனை உத்தேசித்துத் துணிமணிகளும், உணவும் சேகரித்து வைக்கப்படும் இடங்களே அவை. அவைகளில் படகுக்காரர்கள் இல்லை .

சமையற்காரர் – ஓ! அவைகளில் நிச்சயம் படகுக் காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

நிருபர் : இல்லை! கிடையாது!

படகின் பின்னாலிருந்த சிப்பந்தி இப்போது குறுக் கிட்டு, “சரி! சரி! அது எப்படியிருந்த போதிலும் நாம் இன்னும் அங்கு போகவில்லையே!” என்றார்.

“ஒருகால் ‘மஸ்கிடோ இன்லெட் லைட் ஹவு ஸு’க்கு அருகில் இருப்பதாக நான் சொன்னது அகதி விடுதியாக இருக்காது. ஒருவேளை உயிர் பாதுகாப்பு நிலையமாகவே இருக்கலாம்” என்றார் சமையற்காரர்.

“நாம் இன்னும் இங்கு சேரவில்லையே” என்று மீண்டும் சிப்பந்தி வற்புறுத்தினான்.

படகு ஒவ்வொரு அலையைத் தாண்டும்போதும் படகிலிருந்தவர்களின் தலைமயிர் காற்றில் பிய்ந்து விடு வதுபோல் வேகமாய்ப் பறந்தது. அவர்களின் தலையில் தொப்பி கிடையாது. படகின் பின்புறம் தண்ணீரில் மூழ்கும் போது அவர்கள் மீது தண்ணீர் வாரியடித்தது. ஒவ்வொரு அலையும் ஒரு குன்றாக எழுந்து நின்றது. அதன் உச்சிக்குப் படகு வரும் போதெல்லாம், அவர் கள் தங்களைச் சுற்றிலும் கொந்தளித்துக்கொண்டிருந்த விஸ்தாரமான கடற் பரப்பைக் கண்டனர். காற்றின் வலிமையால் பிளவுகள் தோன்றி ஜொலித்துக்கொண்டிருந்தது கடற்பரப்பு. மரகதப் பச்சையும், தூயவெள்ளையும், மஞ்சள் நிறமும் கலந்த வெளிச்சத்தில் ஜொலித் துக்கொண் டிருந்த-கரை காணமுடியாத கடலின் விளையாட்டு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. மற்ற சமயங்களில் இந்த அழகை ரசித்துக்கூட இன்புற லாம். ஆனால் இப்பொழுது, இந்த சூழ்நிலையில்…….

நல்ல வேளையாக காற்று கரையை நோக்கி வீசு கிறது. இல்லாவிட்டால் நாம் எங்கிருப்போம் ? நம் சாமர்த்தியத்தைக் காட்டி மீள முடியாது” என்றார் சமையல்காரர். அவர் சொல்வதை நிருபரும் ஆமோ தித்தார். சிப்பந்தி தமது வேலையில் சுறு சுறுப்பாக ஈடு பட்டிருந்தாலும், மௌனமாகத் தலையை அசைத்துத் தமது ஆமோதிப்பை வெளியிட்டார்.

படகின் முன் புறம் இருந்த காப்டன், வருத்தம், ஹாஸ்யம், வெறுப்பு எல்லாம் கலந்த தோரணையில் மௌனமாகச் சிரித்தார். பிறகு, “தோழர்களே! இப்போது மட்டும் நாம் என்ன சாமர்த்தியத்தைக் காட்டி விட்டோம்!” என்றார்.

பிறகு அம் மூவரும் பேசவில்லை. அதற்குப் பதி’ லாக மெதுவாக முணு முணுத்துக்கொண்டனர். இந்தச் சமயத்தில் நம்பிக்கை தரும் விஷயமாக எதையும் வாய் வீட்டுப் பேசுவது முட்டாள்தனமாக இருக்கும் என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனினும் அவர்கள் மனத்தில் நம்பிக்கை துளிர்விட்டுக்கொண்டுதான் இருந் தது. இதைப் போன்ற சந்தர்ப்பததில் ஒரு இளம் உள் ளம் விடா முயற்சியுடன் சிந்திக்கும். ஆனால் அவர்கள் அப்போது இருந்த நிலையானது அவநம்பிக்கையை விளை விக்கும் எந்த யோசனைக்கும் எதிரானதேயாகும். ஆத லால் அவர்கள் மௌனமாக இருந்தனர்.

காப்டன் தன்னுடைய சகாக்களைத் தேற்றும் வகை யில் சொன்னார், “எப்படியும் நாம் கரை சேரத்தான் போகிறோம்”.

அவருடைய குரலில் மற்றவர்களை யோசனை செய்யத் தூண்டும்படி ஏதோ இருந்தது. “ஆம்! இந்தக் காற்று இப்படியே நீடித்தால்” என்றார் சிப்பந்தி.

“அலைகளால் நமக்கு எதுவும் இடையூறு ஏற்படாமல் இருந்தால்-“- இது சமையற்காரர். படகில் புகும் கடல் தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தார் அவர்.

கடற்பறவைகள் அவர்களுக்கு அருகாமையிலும் வெகு தூரத்திலுமாகப் பறந்து கொண்டிருந்தன. சில சமயம் கடலில் கம்பளம் விரித்தாற்போல் அலைகளுடன் மிதந்து வந்து கொண்டிருந்த கடற்பாசிகளுக்கு அருகா மையில் அவை வந்து உட்காரும். அவை கூட்டமாக வந்து மிகவும் சுலபமாக கடற்பரப்பின் மேல் உட்காரு வதைக் காணப் படகிலிருந்த சிலருக்குப் பொறாமையாகக் கூட இருந்தது. கடலிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சம வெளியில் திரிந்து கொண்டிருந்த கோழிக் குஞ்சுகளுக்கு கடலின் கொந்தளிப்பினால் உண்டான பயம் எப்படி சிறிதளவுகூட இல்லையோ அதே போல் அந்தக் கடற்பறவைகளுக்கும் அலைகளின் பயங்கரம் கொஞ்சமேனும் இருக்கவில்லை. அவை அடிக்கடி அந்த மனிதர்களுக்கு அருகாமையில் வந்து தங்களுடைய கண்ணின் கண்ணாடி போன்ற கருமணிகளால் அவர் களை உறுத்துப் பார்த்தன. அப்படி இமை கொட்டா மல் அவர்களை ஆராயும் தினுசில் அவை பார்த்தது மிக வும் விசித்திரமாகவும் “ஆபத்து வருகிறது” என்று அச்சுறுத்துவது போலவும் இருந்தது. அந்த மனிதர் கள் ஆத்திரத்துடன் அவைகளை விரட்டியடித்தனர். பறவைகளில் ஒன்று காப்டனின் தலையில் உடகாருவ தற்காக இறங்கி வந்தது. படகைச் சுற்றி வட்டமிடா மல் படகு செல்லும் திசையிலேயே அது பறந்து வந்து அடிக்கடி பக்கவாட்டில் கோழிக்குஞ்சுபோல் சிறகடித் துப் பாய்ந்து கொண்டிருந்தது. அதனுடைய கருமையான கண்கள் காப்டனின் தலையையே ஆவலுடன் குறி வைத்துக் கொண்டிருந்தன.

“அட சனியன்! என்ன, குத்திவிடுகிறாப்போல் பார்க்கிறாயே’ என்று சிப்பந்தி பறவையை நோக்கிக் கத்தினார். சமையற்காரரும், நிருபரும் அதைச் சபித் தார்கள். படகில் கட்டப்பட்டிருந்த கனமான கயிற்றால் அந்தப் பறவையை அடித்து வீழ்த்த வேண்டும் என்று காப்டனுக்கு ஆசைதான். ஆனால் கொஞ்சம் பலமாக அசைந்து கொடுத்தாலும் ஏற்கனவே அளவுக்கு மீறிய சுமையைத் தாங்கிக்கொண்டிருந்த அந்தப் படகு கவிழ்ந்து விடக் கூடுமாகையால் அவர் அதற்குத் துணிய வில்லை. எனவே நிதானமாகவும், வெகு ஜாக் கிறதையோடும் பறவையை நோக்கிக் கையை வீசி விரட்டிக் கொண்டிருந்தார். பறவை படகைத் தொடர் வதை நிறுத்தியபிறகு, காப்டன் தன் தலைமயிர் தப்பியது குறித்து நிம்மதியாக மூச்சு விட்டார். அந்தப் பறவையை ஒரு குரூரமான அபசகுனம் என்று நினைத்த மற்றவர் களும் நிம்மதியடைந்தனர்.

இதற்கிடையில் சிப்பந்தியும், நிருபரும் துடுப்பை தள்ளிக் கொண்டே இருந்தனர். கூடவே அவர்கள் தங்கள் வெறுப்பையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தனர். ஒரே ஆசனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு துடுப்பாக போட்டுக் கொண்டிருந்தனர். பிறகு சிப்பந்தி மட்டும் ஒரு துடுப்பினால் படகைத் தள்ளினார். பிறகு நிருபர் மட்டும் ஒட்டினார். பிறகு ஒருவர் மாற்றி ஒருவராக இரண்டு துடுப்புகளையும் ஒருவரே இயக்கி னர். படகை ஓட்டினார்கள, ஓட்டினார்கள். அப்படி ஓட்டினார்கள். ஓட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் சிறு சச்சரவிலும் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவர் தன் ஓய்வு முடிந்து துடுப்புப் போடும் வேலையை மேற் கொள்ளப் போகும் சமயத்தில் தான் இக்கட்டான நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. படகில் இம்மாதிரி இடம் மாற்றிக் கொண்டிருந்தது அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது உண்மையில் ஒரு பெட்டைக் கோழியிடமிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகளைக் கூட சுலபமாக எடுத்து விடலாம். ஆனால் இந்தப் பட கில் ஒருவர் இடத்தை மற்றவர் மாற்றிக்கொள்ளுவது அதைவிடக் கடினமான காரியமாக இருந்தது. மிக வும் ஜாக்கிரதையாக இடம் மாற்றிக கொண்டனர். முதலில் ஒருவர் படகின் ஒரு பக்கத்தில் தன் கைகளை நீட்டித்தான் முன் பக்கமாக சாய்வார். அதே சமயம் மற்றவர் படகின் மறுபக்கத்தில் எதிராக தன கைகளை நீட்டி பின்னுக்குச் சாய்வார். இப்படி இருவரும் வெகு ஜாக்கிரதையாக ஒரு பீங்கான் ஜாடியை இடம் விட்டு இடம் நகர்த்துவது போல, இடம் மாறுவார்கள். ஒரு வரை யொருவர் தாண்டிச் செல்லும்போது, படகி லிருந்த மற்றவர்கள் தங்களை நோக்கிவரும் அலையையே கவனமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். இடம் மாறுபவர்களைப் பார்த்த காப்டன், “அதோ! அலை வருகிறது; ஜாக்கிரதை!” என எச்சரிக்கை செய்தார்.

அவ்வப்பொழுது கடலில் பாசிக் குப்பல்கள் சிறு தீவுகள் போலத் தோன்றின. பார்வைக்கு அவை எத் திசையிலும் நகர்வதாகத் தோன்ற வில்லை. அவை ஒரே இடத்தில் நிலைத்திருப்பதாகத் தான் அம்மனிதர்க ளுக்குப் பட்டது. படகு கரையை நோக்கி மெதுவாகச் சென்று கொண்டிருந்தது என்பதை அவை ஒருவாறு புலப்படுத்தின. ஒரு பெரிய அலையுடன் படகு மேலே எழும்பிய போது படகின் பின்புறத்திலிருந்த காப்டன் ஜாக்கிரதையாக எழுந்து நின்று கொண்டு “மஸ்கிடோ இன்லெட்” பகுதியிலுள்ள லைட் ஹவுஸைத் தான் பார்ப்பதாக அறிவித்தார். உடனே சமையற்காரரும் அவ்விதமே கூறினார். அச்சமயம் துடுப்பை இயக்கிக் கொண்டிருந்த நிருபரும் எக்காரணத்தினாலோ தானும் லைட் ஹவுஸைக் காண ஆவல் கொண்டார். ஆனால் கரை அவருடைய முதுகுப் புறத்திலிருந்ததாலும், அலை மிகவும் உயரமாக இருந்ததாலும் சிறிது நேரம் தலை திரும்பிப்பார்க்க அவருக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. கடைசியில் எல்லா அலைகளையும் விட சாதுவான ஒரு அலை வந்த போது அதன் உச்சியிலிருந்து அவர் மேற்குத் திசையில் அடிவானம் தெரிவதைக் கண்ணுற்றார். அவர் கவனிப்பதைக் காப்டனும் கவனித்தார்.

“தெரிகிறதா?” என்று காப்டன் கேட்டார்.

“இல்லை, நான் எதையும் காணவில்லை” என்று நிருபர் மெதுவாகப் பதிலளித்தார்.

காப்டன் ஒரு திசையில் சுட்டிக் காட்டி, “மறுபடி யும் பாருங்கள். நான் காட்டிய அதே திசையில் தான் லைட் ஹவுஸ் இருக்கிறது” என்று குறிப்பிட்டார். அவர் சொன்ன பிரகாரம், நிருபர் மற்றொரு அலையின் உச்சிக் குப் படகு வந்த போது, ஏறி இறங்கித் தெரிந்த அடி வானத்தின் முனையில் அசையாமல் நிற்கும் ஒரு சிறிய பொருளைக் கண்டார். ஒரு குண்டூசி முனை போலத் தான் அது தெரிந்தது. ஒரு லைட் ஹவுஸ் அவ்வளவு சிறியதாகத் தெரிவது அவருக்கு சிறிது ஆச்சரியமாகவே இருந்தது.

“அதை நாம் அடைய முடியும் என்று நினைக்கி றேன், காப்டன்!” என்று அவர் சொன்னார்.

“காற்று மாறாமல் இருந்து, படகும் முழுகாமல் இருந்தால் நாம் அதை அடையாமல் இருக்கமுடியாது!” என்று காப்டன் கூறினார்.

ஒவ்வொரு அலைக்கும் மேலே எழும்பி, அதன் உச்சியிலிருந்து திடீரெனக் கீழே சரிந்து விழுந்த வண்ணம் அந்தச் சிறு படகு கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கடற்பாசிகள் தோன்றாத சமயங்க ளில், படகு நகருவதாகவே அதிலிருப்பவர்களுக்குத் தெரியவில்லை. அதிசயமான வகையில் கடலின் தயவை எதிர்பார்த்து மேலும் கீழுமாக அல்லாடிக் கொண்டிருந். தது அந்தத் திராணியில்லாத படகு. சில சமயம் வெண்மையான தீ ஜுவாலை போன்ற தண்ணீர்ப் பரப்பு படகை நோக்கி வேகமாகப் படையெடுத்து வரும்.

“தண்ணீரை இறை!” என்று சமையற் காரரைப் பார்த்து வெகு நிதானமாக ஆனால் அழுத்தமாகச் சொன்னார் காப்டன்.

“அப்படியே, காப்டன்!” என்று பதிலளித்தார் உற்சாகமாகக் காணப்பட்ட சமையற்காரர். நடுக்கடலில் இம் மனிதர்களிடையே இருந்த நுணுக்கமான சிநேக பாவத்தை விவரிக்கவே முடியாது. அவ்விதம் பரஸ்பரம் ஒரு சிநேகபாவம் இருக்கிறதென்று யாரும் கூறவும் இல்லை. அதைப்பற்றி குறிப்பிடவும்கூட இல்லை. எனினும் அந்தப் படகில் இருந்தவர்களிடையே ஒருவித மான சிநேகபாவம் இருக்கத்தான் செய்தது. அதை ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். அதன் கதகதப்பை அனுபவித்தார்கள். ஒரு காப்டன், ஒரு சிப்பந்தி, ஒரு நிருபர், ஒரு சமையற்காரர் – இவ்வளவு பேர் தான். அவர்கள் எல்லோரும் நண்பர்கள், நண்பர்கள் என்று பொதுப் படையாகச் சொல்வதைக் காட்டிலும் இரும் புத் தளையால் கட்டுண்டதைப் போன்ற நெருங்கிய சிநேகிதர்கள் என்று விசேஷமாகக் குறிப்பிட வேண் டும். காயமடைந்திருந்த தலைவன் படகிலிருந்த குடி தண்ணீர்ப் பீப்பாய் மீது சாய்ந்தபடியே எப்போதும் மிகவும் அடக்கமான அமைதியான குரலில் தான் பேசிக் கொண்டிருந்தார். – சொல்லுவதற்கு முன் செய்கையில் ஈடுபடத் தயாராக இருந்த இவர்களை விட மேலான சிப்பந்திகளை அந்தக் காப்டன் ஒரு போதும் கண்ட தில்லை. எல்லோருடைய நலத்தை உத்தேசித்தே அவர் கள் அவ்விதம் நடந்து கொண்டார்கள் என்றாலும், அதைக் காட்டிலும் இன்னும் விசேஷமாக ஒவ்வொரு வனும் தனது செய்கைகளை யெல்லாம் மனப்பூர்வ மாகவே தான் செய்தான். அதை முதலில் குறிப்பிட வேண்டும். அது அவர்களுக்கே உரித்தான, விசேஷ மான குணம் தான். காப்டனிடம் அவர்கள் காட்டிய இந்த மரியாதை ஒரு பக்கம் இருக்க, அவர்களிடையே நிலவி யிருந்த நட்பும் விசேஷமானது தான். அதிலும் குறிப்பாக மனிதவர்க்கத்தையே வெறுப்புடன் நோக்கக் கற்றிருந்த நிருபருக்கு இந்த விதமான நட்பும் அப்போ தைய அனுபவமும் அவரது வாழ்க்கையிலேயே மிக வும் சிறந்ததாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதைப் பற்றி எல்லாம் ஒருவரும் வாய்விட்டுக் கூற வில்லை. குறிப்பிடவும் இல்லை.

“ஒரு பாய் விரிப்பு இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். என்னுடைய மேலங்கியை உபயோ கிக்கலாம். நீங்கள் இருவரும் சிறிது ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கும்” என்று காப்டன் சொன்னார். அதன்படியே, சமையற்காரரும் நிருபரும் பாய்மரத்தை நிமிர்த்திப் பிடித்தார்கள். அதன்மேல் காப்டனுடைய மேலங்கி விரித்துப் பிடிக்கப்பட்டது. துடுப்பில்லாமலே படகைச் சரியான திசையில் செலுத்துவதில் சிப்பந்தி தான் ஈடுபட்டார். இந்தப் புதிய சாதனத்தால் அந்தச் சிறு படகு சற்று வேகமாகவே செல்லத் தொடங்கியது. சில சமயம் அலை தண்ணீ ர் படகுக்குள் வந்து புகா வண்ணம் தடுப்பதற்காக சிப்பந்தி துடுப்பையும் உப யோகிக்கவேண்டி யிருந்தது. மற்றப்படி பாய்மரம் உபயோகித்தது நல்ல பலனையே தந்தது.

இதற்குள் லைட் ஹவுஸ் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகத் தெரிய ஆரம்பித்தது. இப்பொழுது அநேக மாக அதன் நிறமும் கண்ணுக்குப் புலப்பட்டது. வானத் தில் ஏதோ மங்கலான ஒரு நிழல்போல அது தெரிந்தது. இந்தச் சிறிய மங்கலான நிழலைக் காணுவதற்காக துடுப்புத் தள்ளுபவர் அடிக்கடி கரைப்பக்கம் திரும்பு வதைத் தடுக்க முடியவில்லை.

கடைசியில் ஒவ்வொரு அலையின் உச்சிக்கும் வந்த போது ஆடி அலைக் கழிந்து கொண்டிருந்த அந்தப் படகி லிருந்து அவர்கள் கரையைக் கண்ணால் காணமுடிந்தது. வானத்தின் பின்னணியில் லைட் ஹவுஸ் செங்குத்தான ஒரு நிழல்போல் தெரிந்தது. ஆனால் கரையோ கடலின் பரப்பில் ஒரு நிழல் போன்று நீளமாக உருவமற்று காட்சி யளித்தது ! ஒரு காகிதத்தையும் விட அவ்வளவு மேன்மையாக அந் நிழல் காணப்பட்டது. ” நாம் ‘ நியூ ஸ்மிர்னா’ என்ற பகுதிக்கு நேராக வந்திருப்பதாகத் தெரி கிறது” என்று சமையற்காரர் சொன்னார். அடிக்கடி சிறு சிறு கப்பல்களில் சென்று அந்தக் கரையில் இறங்கி அவருக்குப் பழக்கம் உண்டு. “காப்டன்! இந்தக் கரையி லிருப்பவர்கள் சுமார் ஒரு வருஷத்திற்குமுன் பே அங்கு உயிர் மீட்பு நிலையம் நடத்துவதைக் கைவிட்டு விட்டார் கள் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

திறந்த படகு “அப்படியா?” என்றார் காப்டன்.

சாற்று கொஞ்சம் கொஞ்சமாக நிற்கத் தொடங்கியது. எனவே சமையற்காரரும் நிருபரும் முன்னைக் காட்டிலும் இப்போது ஓயவு எடுத்துக்கொள்ள சாத்தியமாயிற்று. இருந்தாலும் கரையோரத்தில் படகு இருந்ததால் அலைகளின் மோதல்கள் அதிகமாகிக் கொண்டுதான் இருந்தன. படகு இப்போது மேலே செல்லமுடியாமல் அலைகளின் நடுவே சிக்கித் தவித்தது. மறுபடியும் சிப்பந்தி அல்லது நிருபரில் யாராவது ஒருவர் துடுப்பு போடவேண்டியிருந்தது.

கடலில் கப்பல் விபத்து நேருவதென்பதும் அதைக் கண்டு நடுங்குவதும் சந்தர்ப்பங்களைப் பொருத்து உள்ளன. விபத்தைச் சமாளிப்பதற்கு ஏற்ற வகையில் ஒன்றாகப் பயிற்சி பெற்று அவர்களும் நல்ல ஆரோக்கிய நிலை யில் இருந்தால் கப்பல் விபத்தைப்பற்றிப் பயப்பட வேண்டியதில்லை. ஒரு உயிர் கூட சேதமாகாது. ஆனால் இந்தப் படகின் நிலை அத் தன்மையதல்ல. பிர யாணம் துவங்குவதற்கு முன்னாலேயே இரண்டு நாள் இரவும் பகலும் அந் நால்வரில் ஒருவராவது கொஞ்சம் கூட தூங்கவேயில்லை. மூழ்கிக் கொண்டிருந்த கப்பலி லிருந்து தப்பியவர்கள் தானே இந் நால்வரும். அந்தக் கப்பல் தளத்தில் அவர்கள் தப்புவதற்காக தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த களேபரத்தில் சரியாக சாப்பிடக் கூட மறந்து விட்டனர். வ இந்தக் காரணத்தை முன்னிட்டும் இன்னும் இதர காரணங்களுக்காகவும் நிருபர் சிப்பந்தி ஆகிய இரு வரில் எவரும் இந்த சமயத்தில் துடுப்புப் போட விரும்பவில்லை. ‘படகு தள்ளுவது ஒரு வேடிக்கை விளையாட்டு என்று நினைப்பவர்கள் யார்தான் இருக்க முடியும்?’- இவ்வாறு நிபர் ஆச்சரியப்பட்டார். படகு தள்ளுவது ஒரு தமாஷான காரியமே அல்ல, ஒரு கொடூரமான தண்டனை என்றே சொல்லவேண்டும். கோணல் வழிகளிலேயே என் மூளையை உபயோகிப் பதில் சாமர்த்தியம் வாய்ந்த ஒரு மேதாவிகூட படகு தள்ளும் வேலையைத் தன் உம்புக்குத் தானே இழைத்

துக்கொள்ளும் ஒரு அநீதி என்பதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமாட்டார். படகு தள்ளும் ” தமாஷ்” பற்றித் தன்னுடைய அபிப்பிராயத்தை நிருபர் இவ்விதம் மற்றவர்களிடம் பொதுப்படையாக குறிப்பிட்டார். களைப்பின் மிகுதியால் அவர் இவ்வாறு சொல்லித் தன் ஆயாசத்தை வெளிப்படுத்தினார். மிக வும் களைப்படைந்த முகத்தோடு காணப்பட்ட சிப்பந்தி யும் நிருபர் சொன்னதைக் கேட்டு அதை ஆமோதிப்ப வர் போல இரக்கம் கலந்த ஒரு புன்னகை புரிந்தார். கப்பல் மூழ்குவதற்கு முன்பு அதன் யந்திர அறையில் அவர் ஏற்கனவே இரட்டிப்பு நேரம் காவல் புரிந்தவர்! அவர் அடைந்திருந்த களைப்பு எவ்வளவு என்பது சொல்லாமலே விளங்கும்!

“படகை மெதுவாகவே செலுத்துங்கள்! உடம்பை அலட்டிக்கொள்ள வேண்டாம் ! ஏதாவது கடல் பாறை கள் மீது மோதிவிட்டால் பிறகு நாம் நம்முடைய தேக வலிமையை யெல்லாம் சேர்த்து நீந்தும்படி ஆகிவிடும். ஆகையால் கொஞ்சம் நிதானமாகவே செல்லுங்கள் !” என்று காப்டன் சொன்னார். அவர்களது நிலையை அவர் நன்றாகவே உணர்ந்து கொண்டார்.

சிறிது சிறிதாக கடலுக்கு மேல் நிலப்பரப்பு தெரிய ஆரம்பித்தது முதலில் ஒரே கருங்கோடாகத் தெரிந்த இது போகப் போக கறுமையும் வெண்மையும் ஆகிய இரு கோடுகளாகத் தனித் தனியே பிரிந்து காணப் பட்டன-மரங்களும், மணற்பரப்பும்! கடைசியில் கரை யில் ஒரு வீடு போல் ஏதோ தெரிவதாக காப்டன் சொன்னார் “அதுதான் அகதிகளின் விடுதி. நிச்சயம் சீக் கிரமே அங்குள்ளவர்கள் நம்மைப் பார்த்து விட்டு எதிர் நோக்கி வருவார்கள்” என்று சமையற்காரர் கூவினார்.

தொலைவில் இருந்த லைட் ஹவுஸ் இப்போது உயர்ந்து நன்றாகவே காணப்பட்டது. “ஒரு தூர திருஷ்டிக் கண்ணாடி மூலம் அவ்விடுதிக்காரர் நம்மைப் பார்த்தாரானால் இத்தனை நேரம் நம்மைக் கண்டிருப் பார். உயிர் மீட்புக்காரர்களிடமும் தகவல் கொடுத் திருப்பார் ” என்று காப்டன் சொன்னார்,

“கப்பல் மூழ்கியது குறித்துக் கரையிலிருப்பவர் களுக்குச் செய்தி தெரிவிக்க, மற்றப் படகுகள் எதுவும் இது வரை கரை சேர்ந்திருக்காது. அப்படிச் சேர்ந்திருந் தால் இதற்குள் மீட்புப் படகு நம்மைத் தேடி வந்திருக் கும்’ என்று சிப்பந்தி மெதுவான குரலில் இதுவரை உதவி வாராமைக்குக் காரணம் கூறினார்.

கடலிலிருந்து நிலப் பரப்பு மெதுவாகவும், அழகாக வும் உருவெடுத்தது. காற்று மறுபடியும் வீசியது. வட கிழக்குத் திசையிலிருந்து வீசிய காற்று இப்போது எதிர்ப்புறமாகத் தென் கிழக்கிலிருந்து வீசத் தொடங்கி யது. கடைசியில் ஒரு விநோதமான சப்தம் படகிலிருந் தவர்களின் காதுக்கு எட்டியது. அலைகள், கரைமீது மோதுவதால் உண்டான சப்தமே அவ்விதம் மெல்லிய இடி முழக்கம்போல் கேட்டது. “பில்லி! இப்போது நாம் லைட் ஹவுஸை அடைவது சாத்தியமில்லை. பட கைச் சிறிது வடக்குப் புறமாகத் திருப்பு” என்றார் காப்டன்.

“இன்னும் கொஞ்சம் வடக்குப் புறமாகவா?” என்று சிப்பந்தி கேட்டார்.

அதன் மேல் படகு மீண்டும் ஒரு முறை காற்றடிக் கும் திசையில் திரும்பி கடலை நோக்கியே செல்லத் தொடங்கியது. துடுப்புப் போடுகிறவர்களைத் தவிர மற்ற எல்லோரும் இப்போது கரையைக் கண்ணால் கண்டார்கள். இவ்விதம் மேன் மேலும் கரை தெளி வாகத் தெரிய ஆரம்பித்து விட்டதால் அம்மனிதர்களின் மனத்திலிருந்த சந்தேகமும் பீதியும் நீங்கத் தொடங் கின. படகைச் சமாளிப்பது இன்னும் கூட கஷ்டமாக இருந்த போதிலும், அவர்களுடைய அமைதியான உற் சாகத்தை அது தடை செய்வதாக இல்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் எப்படியும் கரையை அடைந்துவிடக் கூடும்.

படகின் ஆட்டத்தைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு அவர்கள் இப்போது நன்றாகப் பழகி விட்டனர். காட் டுக் குதிரைபோன்ற அந்தப் படகை அவர்கள் சர்க்கஸ் காரர்களைப் போல பழக்கி வெகு திறமையுடன் செலுத்தினர். உடல் முழுவதும் தொப்பமாக நனைந்துவிட்டதை உணர்ந்த நிருபர் தன்னுடைய சட்டைப் பையில் கையை வீட்டுத் துழாவிப் பார்த்த போது அதில் எட்டு சுருட்டு கள் இருக்கக் கண்டார். அவைகளில் நான்கு கடல் தண்ணீரில் நனைந்திருந்தன. மற்ற நான்கும் கெடாம லிருந்தன. நெருப்புக் குச்சிக்காக சிறிது தேடியபோது, அவர்களில் ஒருவர், நனையாமலிருந்த மூன்று நெருப்புக் குச்சிகளை எங்கிருந்தோ எடுத்துக் கொடுத்தார். பிறகு, அந்த நான்குபேர்களும், தங்களுடைய சிறிய படகில் மிகவும் அலட்சியமாக பொழுது போக்கத் தொடங் கினர். கரை சேரப் போகும் குதூகலம் கண்களில் பிரதிபலிக்க அவர்கள் தங்கள் சுருட்டுகளை அனாயாச மாக ஊதிய வண்ணம், மனித வர்க்கத்தின் நன்மை, தீமைகள் பற்றிய நினைவில் ஆழ்ந்திருந்தனர். ஒவ்வொரு வரும் சிறிது தண்ணீர் கூட அருந்தனர்.

“நீ குறிப்பிட்ட அகதிகள் விடுதியில் மனிதர்களின் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியே தென்பட வில்லையே” என்று சமையற்காரரைப் பார்த்து காப்டன் கேட்டார்.

“அப்படியல்ல, அவர்கள் நம்மைப் பார்க்கவில்லை. என நினைக்கிறேன். அது விநோதமாகத்தான் இருக்கிறது” என்றார் சமையற்காரர்.

அவர்களின் கண் முன்னால் நிலப் பரப்பு மிகவும் தாழ்ந்து விஸ்தாரமாகக்காணப்பட்டது. அந்தத் தாழ்ந்த மணற் பரப்பு சற்று நேரத்திற்கெல்லாம் மேடும் பள்ளமு மாக தென்பட்டது. அதில் கரும் பசுமையான தாவர வர்க்கங்கள் நிறைந்திருந்ததையும் கண்டார்கள். அலை கள் கரைமேல் மோதும் சப்தம் இப்போது மிகத் தெளி வாகக கேட்டது. சில சமயம் அலைகள் கரைமேல் பரவி ஓடும்போது ஏற்படக்கூடிய வெண்மை நுரைகள் கூட அவர்கள் கண்ணுக்குப் புலனாகியது. வானத் தைப் பின்னணியாகக் கொண்டு ஒரு சிறிய வீடு கரை யில் கருமையாகத் தோன்றியது. லைட் ஹவுஸ் இப் போது இன்னும் சிறிது உயரமாகத் தெரிந்தது. அதன் நிறமும் மங்கலாகக் காணப்பட்டது.

காற்றும் அலைகளும் சிற்றலைகளும் அந்தப் படகை இன்னும் வடக்காகத் தள்ளிக்கொண்டிருந்தன. “அவர் கள் இன்னமும் நம்மைப்பாராதது மிகவும் ஆச்சரியமே!” என்றனர் அந்த மனிதர்கள். அலைகளின் ஓசை இப்போது சிறிது அடங்கிக் கேட்டது. எனினும் அந்த ஓசை கூட இடி முழக்கம்போல பலமாகத் தான் காதில் வந்து மோதியது. அலைகளின் மேல் படகு நீந்திச் சென்று கொண்டிருந்தபோது அம்மனிதர்கள் அதில் அமர்ந்த வண்ணம் அலைகளின் பேரிரைச்சலைக் கேட் டுக் கொண்டிருந்தனர். “நாம் நனைந்து போவது நிச்சயம்” என்று ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

எத்திசையிலும் 20 மைல் தூரத்திற்கு உயிர் பாது காப்பு நிலையம் எதுவும் இல்லை என்ற உண்மையை இங்கு குறிப்பிடுவது நல்லது. ஆனால் இந்த உண்மை அவர்களுக்குத் தெரியாது. அதன் விளைவாக அவர் கள், அந்தப் பிரதேசத்திலிருக்கும்படியான உயிர் மீட் பாளர்களின் கண் பார்வையைப் பற்றிக் கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள். மிகவும் வெறுப்படைந்து போன அவர்கள் வசவுச் சொற்களை அள்ளி வீசுவதில் ஒரு வரை ஒருவர் மிஞ்சி விட்டார்கள்!

‘நம்மை அவர்கள் பார்க்காதது பெரும் விந்தையோ” என்று மீண்டும் ஒருவர் சொன்னார்.

பழைய நாளில் இருந்த இரக்கத் தன்மை இப் போது அடியோடு மறைந்து விட்டது போலும்! கரையி லிருந்தவர்களின் செயலற்றத் தன்மை, கண்மூடித் தனம், கோழைத்தனம் இவைகளைப் பற்றி எல்லா வகையிலும் கற்பனை செய்வது அவர்களுடைய தீவிர மான உள்ளங்களுக்கு அந்த சூழ்நிலையில் எளிதாக இருந்தது. ஜனக்கூட்டம் நிறைந்த நிலப்பரப்பு அதோ தான் இருக்கிறது! ஆனால் அதிலிருந்து எந்தவிதமான அடையாளமும் வர வில்லை! இதை நினைத்த போது அம் மனிதர்களுக்கு துக்கத்துக்கு மேல் துக்கமாக வந்தது.

“சரி, நாமே முயற்சி செய்து பார்க்கவேண்டியது தான் போலும். அதிக நேரம் இங்கு தங்கியிருந்தால், படகு முழுகிப் போன பிறகு நம்மில் எவருக்கும் நீந்துவ தற்குக் கூட சக்தி மிச்சம் இராது” என்று காப்டன் இறுதியாகக் கூறினார்.

எனவே, படகில் துடுப்புப் போட்டுக் கொண்டி ருந்த சிப்பந்தி கரையை நோக்கி படகைத் திருப்பி நேராக செலுத்தத் தொடங்கினார். திடீரென்று அவர்க ளுடைய தசைகளில் புது உற்சாகத்தினால் முறுக்கேறியது. சிறிது நேரம் அவர்கள் சிந்தனை செய்தனர்.

“நாம் எல்லோரும் கரை சேரவில்லை யென்றால் எல்லோரும் ஒன்றாகக் கரைசேரவில்லை யானால் – என்னுடைய முடிவைப்பற்றி யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?” என்று காப்டன் கேட்டார்.

பிறகு அவர்களிடையே சில விலாசங்களும் எச்ச –ரிக்கைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அவர்களின் மனத்தே பெரிய கொந்தளிப்பு இருந்ததை அவர்களின் தோற்றங்கள் பிரதிபலித்துக் காட்டின. வார்த்தைகள் மூலம் உள்ளக் கிளர்ச்சியை உருவாக்க வேண்டுமா னால், கீழ்க்கண்டபடி தொகுத்துக் காட்டலாம். ஏ, கடல் காக்கும் தெய்வங்களே! நான் கடலில் முழுகிச் சாக வேண்டும் என்றிருந்தால்…முழுகிச் சாகத்தான் வேண்டும் என்று விதி இருந்தால்… எதற்காக இவ்வளவு தூரம் கரைக்குச் சமீபமாக என்னைக் கொண்டு வந்தீர்கள்? அதற்கு ஏங்கவேண்டும்! புனர் ஜன்மம் எடுக் கப் போகிறோம் என்றிருந்த சமயத்தில் விதி குறுக்கிட்டு என் மூக்கைப் பிடித்து மறுபடியும் கடலுக்கே இழுத்துக் கொண்டு போகிறதே! இது இயற்கைக்கு மாறான அநீதி அல்லவா? விதியாகிற இந்த முட்டாள் பெண் ணால் இதைத் தவிர வேறு எதுவும் நன்மை செய்ய முடியாதென்னும் பட்சத்தில் மனிதர்களுடைய அதிர்ஷ் டத்தின் பேரில் ஆதிக்கம் செலுத்தும் உரிமையை அவ ளிடமிருந்து பறிக்கவேண்டும்! தன்னுடைய எண்ணம் தனக்கே தெரியாத பேதைதான் அவள்! என்னை மூழ் கடிக்க வேண்டுமென்று அவள் தீர்மானித்திருந்தால் ஆரம்பத்தில் கடல் மத்தியிலேயே அதைச் செய்திருக்கக் கூடாதா? எனக்கு இந்தக் கஷ்டங்களெல் லாம் இல்லாமல் போயிருக்குமே! எல்லாம் பைத்தி யக்காரத்தனம்தான்-ஆ! அப்படியல்ல / என்னை மூழ் கடிக்க வேண்டும் என்று அவளால் எண்ணவே முடி யாது/ அதற்கு அவள் துணியவும் மாட்டாள். என்னை மூழ்கடிக்க அவளால் முடியாது–இவ்வளவும் செய்த பிறகு மேகக் கூட்டங்களை நோக்கி முஷ்டியை உயர்த்திக் காட்டி, ” என்னை மாத்திரம் நீ மூழ்கடி ! பிறகு நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேள்!” என்று அவர்களுக்குக் கத்த வேண்டும் போல் இருக்கும்.

இந்தச் சமயத்தில் வீசிய அலைகள் முன்னைவிடப் பலம் பொருந்தியவைகளா யிருந்தன். கொந்தளிக்கும் நுரைகளோடு அப்படியே படகின் மேல் கவிழ்ந்து அதைக்கபளீகரம் செய்து விடுவது போல் அவை தோன் றின. முன் கூட்டியே ஆயத்தம் செய்து கொள்வதற்கு அறிகுறியான ஒரு நீண்ட உறுமல் அவர்களின் பேச்சில் வெளிப்பட்டது. இந்த அலை உயரங்களைப் படகு கணத் தில் தாண்டிவிட முடியும் என்ற விஷயம் கடலில் பழக்க மில்லாத எந்த உள்ளத்தாலும் தீர்மானிக்க முடியாத தாகும். கரை இன்னும் வெகு தூரத்தில் இருந்தது. படகுகளைச் சமாளிப்பதில் அந்தச் சிப்பந்தி மிகவும் தந் திரம் வாய்ந்தவர். அவர் சொன்னார்—“தோழர்களே! படகு இனி மூன்று நிமிஷத்திற்கு மேல் தாங்காது. நீந் திச் செல்வதற்குக் கூட நாம் வெகு தூரத்தில் இருக்கி றோம். காப்டன்! படகை மறுபடியும் கடலுக்கே கொண்டு செல்லட்டுமா?”

“ஆம்! செல்” என்றார் காப்டன்.

அவர் அடுத்தடுத்துப் பல தந்திரங்களைக் கையாண் டார். தன்னுடைய துரிதமான படகோட்டும் திறமை யினால் அலைகளுக்கு நடுவில் படகைத் திருப்பி மீண்டும் கடலுக்கே செலுத்திச் சென்றார்.

உழுது விட்ட நிலம் போல் காட்சியளித்த கடல் பரப்பின் மேல் படகு எழும்பிக் குதித்தவாறே ஆழ் கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சிறிது மௌனம் நிலவியது. பிறகு மந்தமான அந்தச் சூழ்நிலையில் யாரோ பேசினார். “எப்படியும் இதற்குள் கரையிலிருந்து அவர்கள் நம்மைப் பார்த்திருப்பார்கள்” என்றார் அவர்.

ஒரே அந்தகாரமாய்க் கிடந்த அந்த ஏகாந்தமான வெளியில், கிழக்குத் திசையை நோக்கி எதிர்காற்றில், கடற்பறவைகள் சாய்வாகப் பறந்து சென்று கொண்டி ருந்தன. திடீரென்று தென் கிழக்குத் திசையில் புயல் காற்றுடன் மங்கலான மேகப் படலமொன்று திரண் டெழுந்தது. எரியும் வீட்டிலிருந்து வரும் சிவப்பு கலந்த புகையைப் போல அம் மேகப்படலம் தோற்றமளித்தது.

“அந்த உயிர் மீட்பாளர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்களுக்குத் தகவல் அறிவிக்கிற வர்கள் யாரும் இல்லையோ ?” இது ஒருவரின் கேள்வி.

“அவர்கள் நம்மைப் பார்க்கவில்லை ! வேடிக்கை தான் !” இது மற்றவனின் பதில்.

“ஒரு வேளை நாம் இங்கு விளையாடுவதற்காக வந் துள்ளோம் என்று அவர்கள் நினைக்கக்கூடும் / மீன் பிடிக்கிறோம் என்றுகூட நினைத்துக் கொண்டிருப்பார் கள் // அல்லது நம்மைப் படு முட்டாள்கள் என்று நினைத்திருக்கலாம்!”

அந்த மாலைப் பொழுது அவர்களுக்கு மிக நீண்ட தாகத் தோன்றியது. திசை மாறி வந்த அலை ஒன்று அவர்கள் இருந்த படகைத் தெற்குப் புறமாக ஒதுக்கித் தள்ளப் பார்த்தது. ஆனால் காற்று படகை வடக்குப் பக்கம் தள்ளியது. வெகு தூரத்தில் கடற்கரையும் கடலும், வானமும் ஒன்றாகக் கூடிப் பெரியதொரு கோணத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அந்த இடத்தில் ஒரு நகரம் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் சில புள்ளிகள் தெரிந்தன.

“செயின்ட் அகஸ்டைன் தான், இல்லையா?”

காப்டன் தன் தலையை அசைத்தார். “மஸ்கிடோ இன்லெட் பிரதேசத்திற்கு மிகவும் அருகாமையில் தான் உள்ளது” என்றார்.

சிப்பந்தியும், நிருபருமாக மாறி மாறிப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். அது மிகவும் களைப்பை உண்டாக்கும் காரியமாக இருந்தது. ராணுவத்தில் சேருகிறவர்களின் உடல் எவ்வளவு சிரமத்தைத்தாங்க முடியும் என்பதை வரையறுத்துக் காட்டும் ஒரு புத்தகத் தில் இருந்த குறிப்புகளைக் காட்டிலும் அதிக அளவு சிரமத்தை தாங்க மனித உடம்பால் முடியும் என்பதை அவர்களுடைய கடினமான உழைப்பு நிரூபித்துக் காட் டியது. அந்தப் படகுக்குள் ஒரு சிறிது இடம் தான் இருந் தது.எனினும் அதுவே கணக்கில்லாத தசைக்கோளாறு களையும், சுளுக்கு, மூட்டு நழுவுதல், பிடிப்புமுதலிய பிணிக ளையும் உண்டாக்கப் போதுமான அரங்கமாக விளங்கியது

“பில்லி ! நீ எப்பொழுதாவது படகுதள்ள விரும் பியது உண்டா?” என்று நிருபர் கேட்டார்.

“ஐயோ! வேண்டாம் அந்தப்பேச்சையே விட்டுத் தள்ளு” என்றார் சிப்பந்தி.

படகின் தளத்தில் போய் படுப்பதற்காக துடுப்புப் போடும் இடத்தை விட்டு எழுந்து சென்றவர்கள் அப் படியே அடித்துப் போட்டது போல விழுந்தார்கள். அப் போது வேறு எதிலும் அக்கரை கொள்ள நினையாதவர் கள் ஒரு சுண்டு விரலை அசைக்க வேண்டுமென்றாலும் ‘ஐயோ’ என்று கதறக்கூடிய நிலையிலிருந்தார்கள். பட கின் உட்புறத்தில் கீழே ஜில்லென்ற கடல் தண்ணீர் அங்கு மிங்கும் பரவி ஓடிக்கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரில் தான் அவர் படுக்க வேண்டியிருந்தது. படகு தள்ளுபவரின் ஆசனத்தில் தலையை வைத்துப் படுத்திருப்பார். சுழன்று வரும் அலையின் நாக்குகள் படகினுள் வந்து விழும்போது அவருடைய தலைக்கும் அலைகளுக்கும் ஒரு அங்குல இடை வெளிதான் இருக் கும். சில சமயம் பேரிரைச்சலோடு கூடிய ஒரு அலை படகினுள் பாய்ந்து, கீழே விழுந்து கிடப்பவரின் உடலை மீண்டும் ஒரு முறை நன்றாக நனைத்து விடும் எனினும் கீழே படுத்திருப்பவரை எவ்விதக் கவலைக்கும் உள் ளாக்குவதில்லை. படகு கவிழ்ந்தால் கடல்மேல அவர் இன்னும் சௌகரியமாக இருக்க முடியும் என்பது என் னவோ நிச்சயம். கடல் பரப்பை ஒரு மெத்தை விரிப் யுப்போல் அவர் நினைக்கக் கூடும்.

“அதோ பாருங்கள் ! கரைமேல் ஒரு ஆள் நிற்பது தெரிகிறது”

“எங்கே”

“அதோ! அந்த இடத்தில் தான்! தெரிகிறதா?”

“ஆம்! நிஜந்தான்! கரையோடு நடந்து செல்கிறான்.”

“இப்போது பாருங்கள்! அவன் நின்று நம்மைக் கவனிக்கிறான்!”

“நம்மை நோக்கிக் கையை வீசுகிறான்!”

“ஆம்! நிச்சயமாக நம்மை நோக்கித்தான் கையை வீசுகிறான்!”

“ஆம். நமக்குக் கதிமோட்சம் வந்து விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் நமக்காக ஒரு படகு வந்து சேரும்.”

“இப்போது ஓடுகிறான்! அதோ ! அந்த வீட்டிற்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்!”

அடைய முடியாத நிலையிலிருந்த அந்தக் கடற்கரை, கடற்பரப்பையும் விடத் தாழ்வாக இருந்ததால், கரும் புள்ளி போலத் தெரிந்த அவ்வுருவத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்கு மிகவும் பிரயாசைப்பட்டுத் தேடவேண்டி யிருந்தது. கடலில் ஒரு தடிக்கம்பு மிதப்பதைக் காப்டன் பார்த்தார். உடனே படகை அங்கு செலுத்திக்கொண்டு, சென்றனர். அதிருஷ்டவசமாகப் படகில் ஒரு துவாலை கிடந்தது. அதைத் தடிக்கம்பு ஒன்றின் நுனியில் கட்டி உயரே தூக்கி அசைத்தார் காப்டன். துடுப்புப் போட் டுக் கொண்டிருந்தவர் திரும்பிப் பார்க்கத் துணிய வில்லை. எனவே அவர் கேள்விகள் மூலமே தன் ஆவ லைத் தணித்துக்கொள்ள வேண்டி யிருந்தது.

“அவன் இப்போது என்ன செய்கிறான்?”

“மீண்டும் அவன் அசையாமல் நின்று கொண்டு பார்க்கிறான் என நினைக்கிறேன். அதோ, மறுபடியும் போகிறான்-அந்த வீட்டை நோக்கி இப்பொழுது மீண்டும் நின்று விட்டான்”

“நம்மை நோக்கிக் கையை வீசுகிறானா?” “இல்லை! இப்போது வீசவில்லை”

“அதோ, பார்! இன்னொரு மனிதன் வருகிறான்.”

“ஓடிக்கொண்டிருக்கிறான்.”

“அவனையே கவனி!கவனிக்கிறாயா”

“அட! அவன் ஒரு சைக்கிலில் போகிறான். இப்பொழுது இன்னொருவனை சந்திக்கிறான். இரண்டு பேரும் நம்மை நோக்கிக் கையை வீசுகிறார்கள்!”

“கரையை நோக்கி ஏதோ வருகிறது!”

“அது என்ன?”

“ஒரு படகுபோல் காணப்படுகிறது”

“ஏன்! நிச்சயமாய்ப் படகுதான் ”

“படகு ஒன்றுமில்லை! சக்கரங்கள் இருக்கின்றன பார்”

“ஆமாம்! அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு வண்டியில் அதை வைத்துக் கரைக்கு இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.”

“அது உயிர் மீட்புப் படகுதான்! நிச்சயம்”

“இல்லை! கடவுள் மீது ஆணை! அது ஒரு பிரயாணிகள் பஸ்.”

“அது உயிர் மீட்புப் படகுதான் என்று நான் உனக்குக் கூறுகிறேன்”

“இல்லவே இல்லை! பிரயாணிகள் பஸ்தான் ! நான் அதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. உனக் குத் தெரிகிறதா, பார், ஏதோ ஹோட்டலைச் சேர்ந்த பிரயாணி பஸ்களில் ஒன்று தான் அது ”

“ஆ ! ஆமாம் ! நீ சொல்வது விதியைப்போன்று உண்மையே! பிரயாணிகள் பஸ்தான்! அதை வைத் துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் என்று நீ நினைக்கிறாய்? சுற்றிலும் சென்று உயிர் காப்பாளர் களை ஏற்றிக் கொண்டு வருவார்கள் என்று நினைக்கிறேன்! எப்படி ?”

“அப்படியும் இருக்கலாம்! அதோ பார்! ஒருவன் ஒரு சிறிய கருப்புக்கொடியை ஆட்டுகிறான். அவன் அந் தப் பஸ்ஸின் படிகளில் நின்று கொண்டிருக்கிறான். மற்ற இருவரும் அதோ வருகிறார்கள். இப்பொழுது எல்லோரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொடி வைத்துக் கொண்டிருப்பவனைப் பார்! அவன் அதை இப்போது ஆட்டவில்லையே”

“அது ஒரு கொடியா! இல்லை போல் தோன்று கிறதே! அது அவனுடைய கோட்டு. ஆம், நிஜமாக அவனுடைய கோட்டுத்தான்.”

“ஆம்! அவனுடைய கோட்டுத்தான். அதை அவன் கழற்றித் தலைக்கு மேல் வீசுகிறான். ஆனால், உனக்கு அவன் அப்படி வீசுவது தெரிகிறதா?”

“ஓ! அங்கு உயிர் காக்கும் நிலையம் எதுவுமில்லை என்று நினைக்கிறேன். குளிர்கால வாஸத்திற்காக வந் திருப்பவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் ஒன்றின் பஸ்தான் அது. நாம் முழுகுவதை வேடிக்கை பார்ப்ப தற்காக அவர்களை ஏற்றி வந்து கொண்டிருக்கிறது அது”

“அதோ, அந்த முட்டாள் கோட்டைக் கையில் பிடித்துக்கொண்டு என்ன சைகை செய்கிறான் ! அது எதைக் குறிக்கிறது ? சொல், பார்க்கலாம்!”

“நம்மை வடக்கு நோக்கிச் செல்லும்படி கூற அவன் முயற்சிக்கிறான் எனத் தோன்றுகிறது. அங்கே ஒருகால் ஏதாவது உயிர் மீட்பு நிலையம் இருக்கக் கூடும்.”

“அதெல்லாம் இல்லை! நாம் மீன் பிடிக்கிறோம் என்று அவன் நினைக்கிறான். நமக்கு உற்சாகமூட்டு வதற்காக கையை வீசுகிறான். ஆ! அதைப்பார், பிலலி”

“நல்லது! அந்த அடையாளங்களைக் கொண்டு ஏதாவது ஊகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்! அவன் சொல்ல விரும்புவது எதுவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“அவன் எதுவும் சொல்ல நினைக்கவில்லை! நம் மோடு விளையாடுகிறான்! அவ்வளவுதான் ”

“சரி! நம்மைக் கரையை நோக்கித்தான் வரச் சொலகிறானோ ; அல்லது ஆழ் கடலுக்குப் போய்க் காத் திருக்கும்படி கூறுகிறானோ : வடக்கே போகச் சொல்கி றானோ, தெற்கே போகச் சொல்கிறானோ ; அல்லது நர கத்திற்கே தான் போகச் சொல்கிறானோ : அம்மாதிரி ஏதேனும் உட்கருத்திருந்தால், அவன் கோட்டை வீசுவ தற்கு அர்த்தமிருக்கும். ஆனால், அதோ பார், அவனை! சும்மா நின்று கொண்டு, கோட்டை சக்கரம் போல் சுழற்றுகிறானே! கழுதைப்பயல்!”

“அதோ, இன்னும் அதிகப் பேர் வருகிறார்கள்!”

“இப்போது ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது. அதோ! அது ஒரு படகுதான், இல்லையா?”

“எங்கோ ஓஹோ / நீ காட்டுமிடத்தில் தான் நானும் பார்க்கிறேன். இல்லை! அது ஒன்றும் படகு இல்லை /”

“அந்த ஆள் தன் கோட்டை இன்னும் சுழற்றிக் கொண்டுதானிருக்கிறான் !” – அவன் அப்படி செய்வதை நாம் பார்க்க விரும்பு கிறோம் என்று நினைக்கிறான் போலும்! அதை ஏன் அவன் வீட்டுத் தொலைக்கவில்லை? அர்த்தமற்ற செய் கைதான்!”

“அது எனக்குத் தெரியாது. நம்மை வடக்கே போகும்படி செய்ய அவன் முயற்சிக்கிறான் என்று நான் நினைக்கிறேன். அங்கே ஏதோ ஒரு இடத்தில் உயிர் மீட்பு நிலையமிருக்கிறது என்பதைத்தான் அது குறிப்பிடுகிறது!”

“அவன் இன்னும் சளைக்கவில்லை! அதோ பார், அவன் சுற்றுவதை!”

“எவ்வளவு நேரம் தான் அப்படிச் சுற்றுவானோ, எனக்கு அதிசயமாக இருக்கிறது. எப்பொழுது நாம் அவன் கண்களில் பட்டமோ, அப்பொழுது முதற் கொண்டே அவன் தன் கோட்டைச் சுற்றிக்கொண்டி ருக்கிறான். முட்டாள் பயல் / ஏன் சில மனிதர்களுடன் ஒரு படகை வரச்செய்ய வில்லை ? மீன் பிடிக்கும் படகு களில் பெரிதாக ஒன்று இருந்தாலும் போதும். இந்த இடத்திற்கு வந்து சேர முடியும். ஏன் அவன் ஏதாவது செய்யக் கூடாது?”

“ஓ! இப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது.”

“அவர்கள் நம்மைப் பார்த்து விட்டபடியால், இன் னும் சற்று நேரத்திற்குள் நமக்காக ஒரு படகைக் கொண்டு வந்து விடுவார்கள்.”

அடி வானத்தில் மெல்லிய மஞ்சள் புகைப்படலம் ஒன்று கிளம்பியது. கடலின் மேல் படிந்த நிழல்கள் சிறிது சிறிதாகக் கறுத்துக்கொண்டே வந்தன. காற்று குளுமையை வாரிக் கொண்டு வந்து வீசியது : கடலி லிருந்தவர்களின் உடல் முழுவதும் குளிரால் நடுங்க ஆரம்பித்தது.

நெஞ்சிலிருக்கும் கலக்கம் குரலில் தொனிக்க, “அடக் கடவுளே ! நாம் இங்கேயே தவித்துக் கொண் டிருக்க நேரிட்டு விட்டால் ! இரவு பூராவும் நிர்க்கதியா கக் கிடக்கும்படி ஆகி விட்டால்…!” என்று ஒருவர் சொன்னார்.

“ஊஹும்! இரவு முழுவதும் நாம் இங்கு தங்கும் படி யிராது. கவலை வேண்டாம். அவர்கள் இப்போது நம்மைப் பார்த்து விட்டார்கள். நம்மைத் தொடர்ந்து வருவதற்கு வெகு நேரம் பிடிக்காது”

கரையில் இருட்டவாரம்பித்து விட்டது. கோட் டைக் கையால் சுற்றியபடி யிருந்த மனிதன் அவ்வந்த காரத்தில் மூழ்கி விட்டான். பஸ்ஸும், ஜனக் கூட்ட மும் கூட இருளோடு கலந்துவிட்டன. கடலில் அலைச் சிதறல்கள் படகின் பக்கவாட்டில் பேரிரைச்சலுடன் மோதும் போது, படகிலிருந்தவர்கள், சூடு போடப் பட்டவர்களைப் போல் நடுங்கியவாறே, அலைகளைத் தூற்றினர்.

“கோட்டை வீசிக்கொண்டிருந்த அந்தக் கய வாளிப் பயல் மட்டும் என் கைகளில் அகப்பட்டால் ஓங்கி ஒரு உதை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது!”

“ஏன்? அவன் என்ன செய்தான்?”

“ஒன்றுமில்லை! ஆனால், அவனுக்கென்ன, அவ் வளவு உற்சாகம்!”

இதற்கிடையில், சிப்பந்தி படகைச் செலுத்திக் கொண்டிருந்தார். பிறகு, அவரும் நிரூபருமாக மாறி மாறிப் படகு தள்ளினர். இருண்ட முகத்துடன் காணப்பட்ட அவர்கள், முன்னால் குனிந்தபடி யந்திரம் போல மாறி மாறித் துடுப்புகளைப் போட்ட வண்ண மிருந்தனர். தென் பக்கத்து அடிவானத்தினின்றும் லேட்ஹவுஸின் உருவம் மறைந்து, அது இருந்த இடத் தில் இப்போது ஒரு மங்கிய நட்சத்திரம் கடலிலிருந்து எழும்பியது போலத் தோன்றியது. மேற்குத் திசையில், வானத்தில் மஞ்சளும் சிவப்பும் கலந்த கோடுகள், கவ் வும் இருளில் மறைந்து கொண்டு வந்தன. நிலப்பரப்பு மறைந்து விட்டதெனினும், கரை அருகிலிருப்பதை அதன் மீது மோதும் அலைகள் புலப்படுத்தின.

“ஏ! கடல் காக்கும் தெய்வங்களே / நான் மூழ் கிச் சாக வேண்டும் என்று இருந்தால்… நான் மூழ்கிச் சாக வேண்டும் என்று விதி இருந்தால்… எதற்காக இவ் வளவு தூரம் கரைக்குச் சமீபமாக வர வேண்டும் ! அதற்கு ஏங்க வேண்டும்? புனர் ஜன்மம் எடுக்கப் போகிறோம் என்றிருந்த சமயத்தில் விதி குறுக்கிட்டு என் மூக்கைப் பிடித்து மறுபடியும் கடலுக்கே இழுத்துக் கொண்டு போகிறதே!”

படகில் தண்ணீர் பீப்பாய் மேல் சாய்ந்து கொண்டு பொறுமையுடனிருந்த காப்டன், சில சமயம் துடுப்புத் தள்ளுகிறவரிடம், “படகை நேராகச் செலுத்து,” என்று சொல்லவேண்டியிருந்தது.

படகிலிருந்த மற்றவர்களும் அதையே சொன்னார்கள்.

அந்திப் பொழுது மிக அமைதியாக இருந்தது. துடுப் புக்காரரைத் தவிர மற்ற எல்லோரும் படகின் தளத்தில் அடித்துப் போட்டது போல் கிடந்தனர். துடுப்புப் போடு பவர், தன்னை நோக்கிப் பயங்கர நிசப்தத்துடன் எழும்பி வந்து கொண்டிருந்த கருமையான அலைகளையும், சற்று நேரத்துக்கு ஒரு முறை அந்த அலைகளின் உச்சி எழுப்பிய குமுறல் சப்தத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

சமையற்காரர் படகு தள்ளும் ஆசனத்தின் மேல் தலை வைத்துப் படுத்திருந்தார். தன் முகத்தருகே வந்து பாயும் அலைத் துளிகளை அசிரத்தையாகப் பார்த்த வண் ணம், ஏதோ யோசனைகளில் ஆழ்ந்திருந்தார். கடைசி யாக, ஏதோ கனவில் முணு முணுப்பது போல் அவர் பேசினார்; “பில்லி! உனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு எது?”

“சாப்பாடு! சாப்பாடா! அம்மாதிரி விஷயங்களைப் பற்றிப் பேசாதே!” என்று நிருபரும், சிப்பந்தியும் எரிச்சலுடன் ஒரே சமயத்தில் கூறினர்.

“நான் நினைத்துக் கொண்டிருந்தது என்ன வென்றால், பன்றிக்கறி, ரொட்டித் துண்டுகள்….இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார், சமையற்காரர்.

நடுக்கடலில், திறந்த படகு ஒன்றில் இருந்து கொண்டு இரவைக் கழிப்பதென்றால் மாளவே மாளாது / நன்றாக இருட்டிய பிறகு, தென் திசையில் தெரிந்த வெளிச்சத்தின் ஜோதி கடல் பரப்பின் மேல் தங்கப் பாளமாய்ப் பிரதி பலித்தது! வடக்குத் திசையின் அடிவானத்தில் இப்போது ஒரு புதிய வெளிச்சம் கடற்பரப்பின் கோடியில் நீல நிறமான ஒளிக்கதிர் தோன்றியது. இவ் விரு வெளிச்சங்களுமே இப்பரந்த உலகில் அவர்களுக்குத் துணையாக நின்றன! மற்றப்படி அவர்கள் கண்டதெல்லாம் வெறும் அலைக்கூட்டங் களைத் தவிர வேறு எதுவுமில்லை.

படகின் பின் பக்கத்தில் இருவர் முடங்கிக் கிடந் தார்கள். படகை ஓட்டுபவர் தன்னுடைய கால்களைக் கீழே படுத்துக் கொண்டிருந்த சகாக்களின் உடலோடு உராசி, அவர்கள் உடலின் உஷ்ணத்தினால் தங்கள் கால்களையும் உஷ்ணமாக வைத்துக் கொண்டிருந்தனர். படகில் அவர்களுக்குள் இருந்த இடைவெளி குறுகி இருந்ததால் இதை விட தாராளமாக இருக்க முடிய வில்லை. படகிலிருந்தவர்களின் கால்கள் படகு தள்ளும் ஆசனத்தின் கீழே காப்டனின் கால்களையும் தொடும் அளவுக்கு நீண்டு கிடந்தன. களைத்துப் போயிருந்த துடுப்புக்காரர் எவ்வளவோ முயற்சி செய்தும் சில சமயம், அந்த இரவில் படகில் பனிக்கட்டிபோல் குளிர்ச் சியான அலைகள் வந்து வீழத்தான் செய்தன. அப் போது அவர்களின் உடம்பு பூராவும் மற்றுமொருமுறை அந்தக் குளிர் ஜலத்தில் ஊறும். ஒரு கண நேரம் அவர் கள் தங்களுடைய உடலை முறுக்கியபடியே முனகுவார் கள், பிறகு மீண்டும் தூக்கம், ஆழ்ந்த தூக்கம் தான்!

படகு அசைந்து ஆடும் பொழுதெல்லாம் அவர்களைச் சுற்றிலும் தண்ணீர் பரவி ஒடும்.

நிருபர், சிப்பந்தி இருவரும் செய்து கொண்ட திட் டத்தின்படி, ஒருவர் தன சக்தியெல்லாம் ஓயும் வரை படகு தள்ளிய பிறகு, படகின் தளத்தில் தண்ணீர்மேல் உறங்கிக் கொண்டிருந்தவரை எழுப்ப வேண்டும்.

தன்னுடைய தலை ஆடி விழும் வரை சிடபந்த படகு தள்ளினார். பிறகு அவரை வெல்லும் தூக்கம் அவரது இமைகளை மூடச் செய்தது / அதற்கு மேலும் சிறிது படகு தள்ளிய பிறகு, படகின் அடி தளத்தில் படுத்தி ருந்த ஒருவரைத் தட்டி அழைத்து ”எனக்குப் பதிலாக நீ கொஞ்சம் படகு தள்ளுகிறாயா?” என்று கேட்டார்.

“ஓ! தாராளமாக, பில்லி!” என்றவாறே நிருபர் விழித்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து உட்காரும் இடத்தை அடைந்தார். இருவரும் வெகு ஜாக்கிரதை யாக இடம் மாறினர். தண்ணீ ர் மேல் சமையற்காரருக் குப் பக்கத்தில் நெருங்கிப் படுத்துக் கொண்ட சிப்பந்தி அந்தக் கணமே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டதாகக் காணப்பட்டார்.

கடலின் அந்தக் குறிப்பிடத்தக்க ஆக்கிரோஷம் இப்போது அடங்கி விட்டது. அலைகள் சீறல் இல்லா மல் வந்து கொண்டிருந்தன.

அலைகளின் மோதல் காரணமாகப் படகு கவிழ்ந்து விடாமல் அதை நேர் முக மாகச் செலுத்துவதும், அலைகள் படகைத் தாண்டிச் செல்லும் போது அவற்றின் சிதறல்கள் படகுக்குள் புகா மல் தடுப்பதும் துடுப்புப் போடுகிறவரின் முக்கிய கடமை. நிசப்தமாக இருந்த அந்தக் கரிய அலைகளை இருளில் காண்பதே அரிதாக இருந்தது. படகு தள்ளு பவர் உணர முடியாத வகையில் அவை வந்து படகின் மேல் தாக்கின.

தாழ்ந்த குரலில் காப்டனை விளித்துக் கூறினார் நிரு பர். “காப்டன்! வடக்கில் தெரியும் வெளிச்சத்தை நோக்கிப் படகைச் செலுத்தட்டுமா?” காப்டன் விழித் துக் கொண்டிருந்தாரா என்பது நிருபருக்குத் தெரியாது. அந்த ‘இரும்பு மனிதன்’ எப்பொழுதுமே விழித்துக் கொண்டிருப்பதாகத் தான் தோன்றியது.

அதே நிதானமான குரல் நிருபரின் கேள்விக்குப் பதிலளித்தது. “நேர் வடக்குக்கு அப்பால் சிறிது தூரம் தள்ளிப் படகைச் செலுத்து”.

சமையற்காரர் தன்னைச் சுற்றி ஒரு ‘ மிதக்கும் பெல்ட்’டைப் பிணைத்துக் கொண்டு படுத்திருந்தார்.இந் தக் கோணங்கி ஏற்பாட்டின் மூலம், முடிந்த அளவுக்கு அவர் கத கதப்பாகப் படுத்துக்கொண்டிருக்க முடிந்தது. படகு தள்ளிவிட்டு வந்து கீழே படுத்துக்கொள்ளுபவ ரின் பற்கள் குளிரினால் ஒன்றோடொன்று தந்தி அடித் துக் கொண்டிருந்த சமயம், இந்த சமையற்காரர் ஒரு எரியும் அடுப்பைப்போல ‘கத கத’ வென்றிருந்தார்.

படகு தள்ளிக்கொண்டிருந்தபோது நிருபர், தன் கால்களின் கீழே படுத்திருந்த இருவரையும் கவனித் தார். சமையற்காரரின் கை சிப்பந்தியின் தோள் பட்டையைச் சுற்றிப் பின்னியிருந்தது. உடலை சிறிதளவு மட்டும் மூடக்கூடிய உடைகளுடன் களைப்படைந்த முகங்களோடு கிடந்த அவர்கள், கடலின் குழந்தைக ளெனக் காட்சியளித்தனர்/ மரத்தில் செதுக்கப்பட்ட சித்திரங்களைப் போல் இருந்தது, அவர்கள் பின்னிக் கிடந்த காட்சி!

திடீரென்று அலை உறுமும்சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு அலை பேரிரைச்சலுடன் படகினுள் பாய்ந்தது. ‘ மிதக்கும் பெல்ட்’ அணிந்திருந்த சமையற் காரர் அந்தத் தண்ணீ ரில் மிதக்காமல் இருந்தார் என் றால் அது ஆச்சரியமே! அவர் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சிப்பந்தி மட்டும் எழுந்து உட்கார்ந்து கொண்டு, திடீரென்று ஏற்பட்ட ஜில்லிப்பி னால் நடுங்கியவாறே கண்களைக் கசக்கினார். தன் அஜாக்கிரதைக்காக நிருபர் வருத்தப்பட்டார்.

“ஓ! நான் மிகவும் வருந்துகிறேன் பில்லி ” என்றார் அவர்.

“பரவாயில்லையப்பா” என்று கூறிவிட்டு சிப்பந்தி மீண்டும் படுத்துத் தூங்க ஆரம்பித்து வீட்டார்.

இப்போது காப்டன் கூடத் தூங்கிவிட்டதாகத் தெரிந்தது. பரந்த அந்தக் கடலில், தான் ஒருவனே மிதந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு நிருப ருக்கு ஏற்பட்டது. அலைகளுக்கு மேலாக வந்த காற் றின் ஆதிக்கம் வெகு தீவிரமாக இருந்தது. சாவை விட அது துக்ககரமாக இருந்தது!

படகின் பின்புறத்தை ஒட்டினாற்போல் தண்ணீரில் ஏதோ சல சல வென்ற சப்தம் பலமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து கருமையான அந்த நீர்ப்பரப்பில் நீல நிற ஜோதிபோல் ஏதோ பளிச்சிட்டது. ஒரு பெரிய கத்தியைப் போலத் தெரிந்தது.

நிருபர் “ஆ!” வென்று வாயைப் பிளந்தவண்ண ம் கடலை நோக்கினார்! அவ்விதம் நோக்கிய சமயம் கடலில் வெறும் அமைதி நிலவியது.

த பிறகு திடீரென்று மறுபடியும் நீரைக் கிழிப்பது போன்ற சப்தம் கேட்டது. மீண்டும் நீலநிற ஜோதி தெரிந்தது. இப்பொழுது படகுக்கு அருகாமையில் ஒரு துடுப்பினால் எட்டக்கூடிய தூரத்தில் அது தெரிந்தது. ஒரு பிரம்மாண்டமான மீனின் செதில்களை நிருபர் கண் டார். தண்ணீ ரில் நிழல் போல் அதிவிரைவாகத் துள் ளிச் சென்றபோது அதன் செதில்கள் பளிங்குபோன்ற நீர்த்திவலைகளை வாரியிறைத்தன. பிரகாசமானதொரு ஜோதியை வீசிவிட்டு அது மறைந்தது.

நிருபர் தலையைப் பின்புறம் திருப்பி தோள்பட் டைக்கு மேலாக காப்டனைப் பார்த்தார். காப்டனின் முகம் மறைந்திருந்தது. அவர் தூங்குவது போல் காணப்பட்டார். பிறகு தளத்தில் படுத்திருந்த தன் சகாக்களை- கடலின் குழந்தைகளைப் பார்த்தார். அவர் கள் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். தன் மீது இரக்கம் காட்ட யாருமே இல்லாததால் நிருபர் படகின் ஒரு பக்கமாகச் சாய்ந்து நீர்ப்பரப்பை நோக்கிக் குனிந்த வாறு ஏதோ வாய்க்குள் சபித்துக்கொண்டார்.

செதில்களுடன் காணப்பட்ட அந்த மீன் படகின் அருகாமையை விட்டு அகலவில்லை. முன்புறமோ, அல்லது பின்புறமோ, இடதுபுறமோ அல்லது வலது புறமோ, அடிக்கடி அல்லது விட்டு வீட்டு மின் வெட்டி னாற்போல் அது பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. கறுமை யான அதன் செதில்கள் எழுப்பிய ‘விர்’ரென்ற சப்தமும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அத னுடைய வேகமும் சக்தியும் அதிசயப்படத் தகக வகை யில் இருந்தன. ராட்சஸ உருவம் கொண்டு, கூர்மையான கத்தியைப் போல் கடல் பரப்பைக் கிழித்துச் சென்றது-ஆம். அது ஒரு சுறாமீன் தான்!

உல்லாசமாகப் பொழுதுபோக்க வந்தவராக இருந் தால் இந்நிலையில் அவருக்கு எவ்வளவு பயம் ஏற்பட் டிருக்குமோ அந்த அளவுக்குக்கூட அவர் இப்போது பயம் கொண்டவராகத் தெரியவில்லை. கடல்மீது மந்தமான பார்வையைச் செலுத்தியவண்ணம் இருந்தார் அவர்.

அந்தச் சுறாமீனைக் கண்டதும் உண்டான பீதியை தான் மட்டும் தனியாக இருந்து கொண்டு அனுபவிக்க அவர் விரும்பவில்லை. சந்தர்ப்ப வசத்தினால் தன் சகாக் களில் யாராவது விழித்துக் கொண்டு தன்னுடன் துணை யாக இருந்தால் அவருக்கு அந்த சமயத்திற்குச் சற்று ஆறுதலாக இருக்குமே என்று ஆசைப்பட்டார். ஆனால காப்டனோ தண்ணீர்ப் பீப்பாய் மீது சாய்ந்தபடியே அசையாமல் தூங்கி வழிந்தார். சிப்பந்தியும் சமையற் காரரும் படகின் அடிப்பாகத்தில் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர்.

மீண்டும் ஒரு மனப்பிராந்தி! ”நான் ஒருகால் முழுகிப்போக நேர்ந்தால்! முழுகிவிட்டால்! ஐயோ! கடல்காக்கும் தெய்வங்களே ! நான் சாகவேண்டிய வனாக இருக்கும்பட்சத்தில் இவ்வளவு தூரம் என்னைக் கொண்டுவருவானேன்? கரையைக் கண்ணில் காட்டி வீட்டுக் கரைக்காக ஏங்கும்படி செய்வானேன்?”

சோகமயமான அந்த இரவில், அநீதி என்று கூடப் பாராமல் தன்னைக் காவு கொள்வதே அத்துர்த்தேவதை களுடைய எண்ணமாக இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறுவிதமான முடிவுக்கு எவனும் வந்திருக்க முடியாது. இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கும் ஒருவனை கடலில் மூழ்கச் செய்வது நிச்சயம் வெறுக்கத்தக்க அநீதியேயாகும். அது இயற்கைக்கு விரோதமான கொடும் குற்றம் என்பதையும் அவன் அறிவான். ஏராள மாகப் பாய் மரங்கள் உள்ள கப்பல்கள்கூட கவிழ்ந்து அநேகர் மூழ்கியிருக்கிறார்கள். எனினும் –

‘இவன் ஒன்றும் முக்கியமானவன் இல்லை; இவ னைத் தீர்த்துக் கட்டுவதன் விளைவாக இப்பிரபஞ்சம் ஒன்றும் முழுகிவிடாது’ என்று இயற்கையன்னை, தன் னைப் புறக்கணிப்பதாக ஒருவனுக்குத் தோன்றிவிட் டால், அவளுடைய கோவில்மீது ஏன் கல்லை விட் டெறியக்கூடாது?’ என்ற எண்ணம் தான் அவனுக் கும் உடனே ஏற்படும் / ஆனால் ‘ கோவிலும் இல்லை ; கல்லும் கிடையாது’ என்ற உண்மை புலனுக்கு எட்டும் போது அவனுக்கு அதிகமான வெறுப்பு ஏற்படுகிறது! கண்ணுக்குப் புலனாகும் வகையில் இயற்கை திருவிளை யாடல் புரியும்போது, அது அவனுடைய கேலிக்கு இலக் காவது நிச்சயம்.

பழித்துக்கூற எதுவுமே அகப்படவில்லையென்றால், பிறகு ஒரு வேளை ஏதாவது ஒரு உருவத்தை எதிரில் கற்பனை செய்துகொண்டு, ஒரு காலால் மண்டியிட்டு கைகள் இரண்டையும் எதிரே விரித்து நீட்டியபடி உங் கள் எண்ணம் எப்படி இருந்தாலும் என்னுடைய உயிர் எனக்கு பற்றுள்ளதாகத்தானே இருக்கிறது. !” என்று கதறலாம் போல அவனுக்குத் தோன்றும்.

குளிர் காலத்தில் வானத்திலே தெரியும் ஒரு நட்சத் திரமே, இயற்கை அன்னை அவனுக்கு அளிக்கும் பதில் போலத் தோற்றமளித்தது. அதனை நோக்கி மண்டி யிட்டுத் துதிக்கலாமா? அல்லது சபிக்கலாமா? எது செய்தும் என்ன பயன்? அவனுடைய நிலையின் பரிதா பத்தை அவன் தான் உணர முடியும்.

இந்த விஷயங்களையெல்லாம், இப்படிப்பட்ட சிந்தனைகளை எல்லாம் படகிலிருந்தவர்கள் ஒருவருக் கொருவர் பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு வரும் அவைகளைத் தன் மனத்திற்கிசைந்தவாறு மௌன மாகவே எண்ணிப் பார்த்தனர். மிகுந்த களைப்பு ஒன்றைத் தவிர அவர்கள் முகத்தில் வேறு எவ்விதமான உணர்வும் ஏற்படவேயில்லை. ஏதாவது எப்பொழுதா வது பேசினால் அந்தப் பேச்சுக்கள் படகைப் பற்றிய தாகவே இருந்தன.

நிருபரின் உள்ளுணர்வைத் தீட்டியெழுப்பிய போது, அங்கே அவருக்கே புதிராகத் தோன்றும் வகை யில் எப்போதோ எங்கேயோ கேட்ட ஒரு பாட்டின் நினைவு ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பாட்டுத் தனக்கு மறந்து போயிருந்தது என்பதையே அவர் மறந்து விட் டார். இப்போது திடீரென்று அவரையும் மீறி அவர் ஞாபகத்தில் முளைத்தது அது. அதன் சாராம்சம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அல்ஜீயர்ஸ் என்ற நகரில் ஒரு படையைச் சேர்ந்த வீரன் செத்துப் போகும் நிலையிலிருந்தான். அவனுக் குப் பணிவிடை செய்ய அங்கே எந்தப் பெண்ணின் தளிர்க்கரமும் இல்லை. பெண்களின் கண்ணீருக்கே அங்கு பஞ்சமாகிவிட்டது! ஆனால் அவனுக்குப் பக்கத் தில் ஒரு தோழன் நின்றிருந்தான். அந்தத் தோழனின் கையைப் பிடித்துக் கொண்டே அந்த வீரன் “நான் இனிமேல் என்னுடையே சொந்த நாட்டைப் பார்க்கவே. முடியாது” என்று கூறினான். இவனுடைய நிலைமை யும் இந்த ஆல்ஜியர்ஸ் வீரனின் நிலைமையும் ஒன்றாகத் தானேயுள்ளது/

அல்ஜியர்ஸ் நகரில் ஒரு வீரன் செத்துக் கொண் டிருந்தான் என்ற உண்மையை சிறு வயதில் யாரோ சொல்லக் கேட்டிருக்கிறார் நிருபர். ஆனால் அந்த சோகத்தின் சிகரம், அதன் உண்மை அப்போது அவ ருக்கு முக்கியமானதாகப்படவில்லை. ஏன், விளங்கக் கூட இல்லை. அந்த வீரனின் பரிதாப நிலையைப் பற்றி அவருடைய பள்ளித் தோழர்கள் அநேகர் அவருடைய காதுகளில் எடுத்தி ஓதியிருந்தார்கள். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமலே இருந்துவிட்டபடியால் அந்த ஒலி தானாகவே அவர் காதுகளை விட்டு நீங்கிப் போய்விட்டது! அல்ஜியர்ஸ் நகரில் எவனோ ஒரு படைவீரன் செத்தால் அதில் நமக்கு என்ன இருக்கிறது!

என்று அவர் நினைத்தார். அது துக்கப்படவேண்டிய விஷயமாகவும் அவருக்குத் தோன்றவில்லை. ஒரு பென் சில் கூர் ஒடிந்துபோனால் எப்படியோ, அதைவிடச் சாதாரணமான விஷயம் என்று அவர் அதை ஒதுக்கித் தள்ளினார்.

எனினும் அது இப்போது ஏதோ ஒரு அதிசயம் போல, மனிதத் தன்மையோடு கூடிய உயிருள்ள விஷய மாகப்பட்டது அவருக்கு! குளிர் காய்ந்து கொண்டே தேநீரை உறிஞ்சும் ஒரு கவிஞனின் இதயத்தில் எழுந்த ஒரு கற்பனை அலைகளாலான வெறும் கவிச் சித்திரமாகப் படவில்லை அது இப்போது / அதில் உண்மையின் சொரூபத்தை அவர் கண்டார் /- உறுதியான, சோகம் ததும்பும் மென்மையான உன்னதமான உண்மை!

இப்போது அந்த வீரன் நிருபரின் முன் நிதரிசன மாகக் காட்சியளித்தான். அவனுடைய கால்கள் அசை யாமல் நீண்டு கிடக்க, அவன் மண்மேல் வீழ்ந்து கிடந் தான்! உடலைவிட்டுப் பிரியும் உயிரைத் தடுத்து நிறுத் தும் முயற்சியில், அவனுடைய வெளிறிப்போன இடது கை மார்பின் மேல் படிந்து கிடந்தது. விரல்களுக் கிடையே ரத்தம் பொங்கி வழிந்தது. அந்திப் பொழுதில் தெரியும் சூரியனின் கடைசி ஒளி வர்ணங்களால், மங்க லாய் மாறிப் பிரகாசித்த வானத்தில் இப்போது ஒரு நகரம்- வெகு தூரத்திலிருந்த அல்ஜீரிய நகரம்–சிறு அளவில் சித்திரம் போலக் காட்சி தந்தது. துடுப்பு போட்டுக் கொண்டே, வீரனின் உதடுகள் மெல்ல அசைவதுபோலக் கனவு கண்டுகொண்டிருந்த நிருபர், இப்போது ரொம்பவும் தீவிரமான, முற்றிலும் தன்னல மில்லாத ஓர் உள்ளுணர்வினால், உள்ளம் நெகிழ்ந்தார். அல்ஜியர்ஸ் நகரில் செத்துக்கொண்டிருந்த படைவீரனுக் காக இப்போது அவர் வருத்தட்பட்டார்!

இதற்கிடையில் படகைத் தொடர்ந்து வந்துகொண் டிருந்த அந்தச் சுறாமீன் வெகுநேரம் அப்படி வந்ததினால் ஏற்பட்ட வெறுப்பினால் சலித்துப் போய் நின்றிருக்க வேண்டும். நீரைக் கிழித்துச் செல்வதால் ஏற்படும் சலசலப்பு இப்போது கேட்கவில்லை. நீலமாய் தெரிந்த அந்த ஜோதியும் இப்போது காணப்படவில்லை. வடக் கில் தெரிந்த வெளிச்சம் இன்னும் மினுக் மினுக்கென்று ஒளி வீசியது. எனினும் அந்த வெளிச்சம் படகுக்கு அருகில் வந்ததாகத் தெரியவில்லை, அலை கரை மோதும் சப்தம், சில சமயம் நிருபரின் காதுகளில் பேரொலியாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அதனால் அவர் படகை இன்னும் கடல் பக்கமாகத் தள்ளி வேகமாகச் செலுத் திக்கொண்டு போனார். தெற்கில், கடற்கரையில் யாரோ காவலுக்காகத் தீ வளர்த்திருந்தார்கள். மிகவும் தாழ் வாகத் தெரிந்த அது, கண்ணுக்கே தெரியாத அளவு தூரத்தில் இருந்தது. எனினும் அதன் வெளிச்சம் அவ்வப்போது விட்டுவிட்டுத் தெரிந்தது. கடல் மட்டத் திற்கு மேல் செங்குத்தாகத் தெரிந்த ஒரு கரைப் பகுதி யில் அந்தத் தீ ஜுவாலைகளின் சிவப்பு வெளிச்சம் பிரதி பலித்தது. அதைப் படகிலிருந்தபடியே தெளிவாகப் பார்க்க முடிந்தது. காற்று இன்னும் பலமாக வீசத் தொடங்கியது. சிலசமயம் திடீரென்று ஏதாவது ஒரு அலை சிறுத்தையைப் போலச் சீறும். அலையின் உச்சி மடிந்து விழும்போது அதன் பளபளப்பு கண்ணுக்குத் தெரியும்.

காப்டன் தண்ணீர்ப் பீப்பாய் அருகில் நகர்ந்து நேராக உட்கார்ந்து கொண்டார். “அப்பா | இப்படி இரவு வளர்ந்துகொண்டே போகிறதே!” என்று நிருப ரிடம் பேச்சுக் கொடுத்தார். பிறகு கரைப்பக்கம் பார்வையைச் செலுத்திவிட்டு, “அந்த உயிர் மீட்பாளர்கள் வெகு சாவதானமாகத்தான் வருவார்கள் போலிருக் கிறது?” என்றார்.

“ஒரு சுறாமீன் படகைச் சுற்றி விளையாடியதே, நீங்கள் பார்த்தீர்களா?”

“ஆம், பார்த்தேன்! மிகவும் பெரியது தான்”

“அடடா! நீங்கள் விழித்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே”

இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு நிருபர் படகின் அடியில் குனிந்து “ பில்லி!” என்று கூப்பிட்டார். பில்லிப் படுத்திருந்த பாகத்தில் மெதுவாக, படிப்படியாக அசைவு கண்டது. “பில்லி / நீ சிறிது படகு தள்ளு கிறாயா?”

“ஓ, தாராளமாக” என்று பதில் கொடுத்தார் சிப்பந்தி.

படகின் அடிப்பாகத்தில் ஜில்லென்றிருந்த கடல் தண்ணீரைத் தொட்டுக்கொண்டே சமையற்காரரிடம் ஒண்டிக்கொள்ளப் போன நிருபர், படுத்தவுடனே தூக்கத்தில் ஆழ்ந்தார். அவருடைய பற்கள் பலவித மாகத் தந்தியடித்த போதிலும், அவர் நல்ல தூக்கத்தில் இருந்தார். ஒரு கண நேரம் மட்டுமே படுத்துத் தூங்கி யதுபோல அவருக்குத் தோன்றியது. அதற்குள் அவ ருடைய பெயரை, களைப்படைந்து போன ஒரு குரல் அழைப்பதை அவர் உணர்ந்தார். ” நீ சிறிது படகு தள்ள வருகிறாயா?” என்றது அந்தக் குரல்.

“ஓ! நிச்சயமாக பில்லி!” என்றவாறே நிருபர் எழுந்தார்.

வடக்கே தெரிந்த வெளிச்சம் எப்படி மறைந்த தென்றே தெரியவில்லை. ஆனால் கண்ணைக் கொட் டாமல் விழித்திருந்த காப்டனின் உத்தரவுகளிலிருந்து படகு செல்ல வேண்டிய வழியை நிருபர் கேட்டுக் கொண்டார்.

இரவு சிறிது நேரம் கழித்து, அவர்கள் படகைக் கடலில் வெகு தூரம் வரை கொண்டுவந்து விட்டார்கள். சமையற்காரரையும் துடுப்புப் போடச் சொல்லி அழைத் தார் காப்டன். அலைகளுக்கு நேராகப் படகின் முன் புறம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறும், அலை களின் பேரிரைச்சல் காதில் கேட்டால் உடனே கூப்பிடும்படியும் அவருக்கு உத்தரவு போட்டுவிட்டு, “இவர்கள் இருவரும் இப்போது ஓய்வு எடுத்துக் கொண்டு தெம்பு அடையட்டும்!” என்றார். அந்த ஏற்பாட்டின் மூலம் நிருபரும், சிப்பந்தியும் சேர்ந்தாற் போல் ஓய்வு எடுக்க முடிந்தது. கீழே சுருண்டு படுத் துக்கொண்டு சிறிது நேரம் பேச்சில் ஈடுபட்டுவிட்டுப் பிறகு அவர்கள், அடித்துப் போட்டது போல் தூங்கினார் கள் / சமையற்காரருக்கு இப்போது துணையாக இருக்கும் பாக்கியம் வேறு ஒரு சுறா மீனுக்குக் கிடைத்ததா? அல்லது முன்பு வந்த அதே சுறா மீனுக்கு கிடைத்ததா என்பது அவர்களில் யாருக்கும் தெரியாது.

அலைகளின் மீது படகு தாவீச் சென்றபோது, நீர்த் திவலைகள் எப்பொழுதாவது ஒரு சமயம் படகின் பக்க மாகத் தெறித்து விழும். அப்போது அவர்கள் மீண்டும் அபிஷேகத்துக்குள்ளாவார்கள். ஆனாலும் அவர்களது தூக்கத்தைக் கலைக்கும் சக்தி அதற்கில்லை. அபசகுனம் போல வீசிய காற்றும், அலைகளும் உயிரற்ற கட்டை களை எவ்வளவு தூரம் அலைக் கழிக்குமோ அவ் வளவுக்குத்தான் அம்மனிதர்களும் அல்லல் பட் டனர்.

தூங்குகிறவர்களை எழுப்ப விரும்பாத தயக்கம் நிறைந்த குரலில் சகாக்களை சமையற்காரர் அழைத்து, “கரைக்கு வெகு சமீபத்தில் படகு மிதக்கிறது. உங்க ளில் யாராவது படகை மீண்டும் கடல் பக்கமாகக் கொண்டுபோனால் நல்லது என்று நினைக்கிறேன்” என்றார். விழிப்படைந்த நிருபர் அலைகளின் உச்சிகள் மோதி விழும் சப்தத்தைக் கேட்டார்.

அவர் துடுப்புப் போட்டுக் கொண்டிருந்தபோது, காப்டன், அவருக்கு விஸ்கியும் தண்ணீ ரும் கலந்து குடிக்கக் கொடுத்தார். அதைக் குடித்ததும் நிருபருடைய குளிர் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. நான் எப் பொழுதாவது கரை சேர்ந்து, அங்கே என்னிடம் யாரா வது ஒரு துடுப்பின் படத்தைக் காட்டினாலும் போதும் கிழித்து எறிந்துவிடுவேன்” என்றார் அவர்.

பிறகு பில்லியை அழைத்தார். பில்லி, பில்லி/ எனக்குப் பதில் கொஞ்சம் துடுப்பு போட வா

“அப்படியே” என்றார் பில்லி.

நிருபர் மீண்டும் கண்களை விழித்தபோது கடலும், வானமும் அதிகாலை நேரத்தின் மங்கலான ஒளி பெற் றுத் திகழ்ந்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு நீர்ப்பரப்பு முழுவம் சிவப்பும், பொன்னிறமும் கலந்த வர்ணம் பூசினாற்போல் மாறியது. கடைசியில் நிர்மலமான நீல வானத்துடன் காலைப் பொழுது மலர்ந்தது. அலைகளின் நாக்கில் சூரிய வெளிச்சம் பட்டு அவை தீ ஜுவாலையைப்போல் ஒளி வீசின.

தூரத்தில் தெரிந்த மணல் மேடுகளில் அநேக குடிசைகள் கறும்புள்ளிகள் போலக் கண்ணுக்குத் தெரிந்தன. அவைகளுக்குமேல ஒரு காற்றாடி யந்திர சாலை வெள்ளை வெளேரென்று தெரிந்தது. இப்போது கரையில் மனிதனோ, நாயோ, சைக்கி லோ எதுவும் தெரியவில்லை. குடிசைகள் எல்லாம் சேர்ந்து, ஆள் அரவமே இல்லாத பாழடைந்த ஒரு கிராமம்போலக் காட்சியளித்தன.

படகில் இருந்தவர்கள், கரையை உற்று நோக்கினார் கள். பிறகு எலலோரும் கூடி ஏதோ விவாதித்தனர். கடைசியில் காப்டன் சொன்னார், ”சரி நமக்கு உதவி ஏதும் வராதபட்சத்தில் நாமே அலைகளை நேராகக் கடந்து செல்ல முயற்சி செய்ய வேண்டியது தான்! இங்கு அதிக நேரம் தங்கினால் பிறகு எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு நாம் பலஹீனமடைந்து வீடு வோம்” என்றார். “வாஸ்தவம் ” என்று மற்றவர்கள் மௌனமாக ஒப்புக் கொண்டனர். தூரத்தில் தெரிந்த காற்றாடி யந்திர சாலையின் உயரமான கூண்டு நிருபரின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் மேல் யாருமே ஏறிக் கடல் பரப்பைக் கண்டிருக்கமாட்டார்களோ எனற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. ஈ எறும்பு கூட ஏற முடி யாத அளவுக்கு ராட்சஸ உருவம் கொண்டு உயர்ந்து நின்றது அந்தக் கூண்டு / தனிப்பட்ட ஒருவரின் முயற்சி களுக்கு எதிராக இயற்கையின் சக்தி எவ்வளவு மகோன்னதம் வாய்ந்தது என்ற உண்மை நிருபருக்கு அப்போது ஓரளவு விளங்கியது. மனிதர்கள் காணும் காட்சியிலும், காணமுடியாத காற்றிலும் இயற்கையின் மகோன்னத சக்தியை அவர் கண்டார். இதை உணர்ந்த பிறகு, இயற்கையன்னை கொடூரமானவள் என்ற எண் ணம் அவரைவிட்டு நீங்கியது. எப்படி கொடூரமான வளில்லையோ அதேபோல் உதவி செய்யக் கூடியவ ளாகவும், சதி செய்கிறவளாகவும், இரக்கம் கொண்டவ ளாகவும் தோன்றவில்லை. எதையுமே பாராட்டாதவ

ளாக உதாசீனத்துடன் தான் இருப்பதாகத் தோன்றி யது. இவ்வீதம் இயற்கையின் பாரபட்சமற்ற தன்மை யால் கவரப்பட்ட ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கை யில் தான் செய்த கணக்கில்லாத குற்றம் குறைகளை மனதில் அருவருப்பாக எண்ணிப் பார்ப்பது நியாயமே. அதை ஈடு செய்யும் வகையில் வேறு சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பதும் இயற்கைதான். சாவு நெருங்கும்போது ஏற்படும் இந்தப் புதிய ஞானோதயத்தில், நல்லது கெட் டது இவை இரண்டிற்குமிடையே உள்ள தாரதம்யம் மிகத் தெளிவாக விளங்கிவிட்டது போல் அவனுக்குப் படுகிறது. இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் தன்னுடைய சொல்லையும், நடத்தையையும் சுத்தப்படுத்திக் கொண்டு, இனிமேல் புதுப்புது மனிதர்களைக் காண நேரும்போது முன்னைவிட நன்றாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவன் நினைக்கிறான்.

காப்டன் கடைசியில் சொன்னார்:-“தோழர்களே, கவனியுங்கள்! படகு இனிமேல் மூழ்கிவிடுவது நிச்சயம். அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்வது தான் நாம் செய்யக்கூடிய காரியம். அதற்கு மேல் படகு முழுகிய பிறகு வெளியில் குதித்து நீந்திக் கரைசேர முயலுங்கள். அவசரம் வேண்டாம். நிதான மாக இருங்கள். படகு முழுகுவதற்கு முன் குதித்து விடாதீர்கள் ”

பில்லி துடுப்பு போடத் தொடங்கினார். கரைமீது மோதும் அலைகளை அவர் தோள்பட்டையின் புறமாகத் திரும்பிப் பார்த்தார். பிறகு ” காப்டன் / படகைக் கடல் பக்கம் திருப்பி, பின்புறமாகக் கரையை நோக்கிப் போகலாமா என்று நினைக்கிறேன்’ என்றார்.

“சரி! அப்படியே செய்!” என்றார் காப்டன். சிப்பந்தி படகைத் திருப்பினார். படகின் பின்புறம் உட்கார்ந்திருந்த நிருபரும், சமையற்காரரும் இப்போது கரையைக் காண தோள்பட்டையின் புறமாகத் திரும்ப வேண்டியிருந்தது.

கரையை நோக்கி வீசிய பயங்கரமான அலைகள் படகை அப்படியே உயரக் கிளப்பின. அப்பொழுது படகிலிருந்தவர்கள் மீண்டும் வெள்ளை வெளேரென்ற நுரைத் தண்ணீர் சாய்வான கரை மீது பரவி ஓடு வதைக் காண முடிந்தது. ”நாம் கரைக்கு மிக அருகில் செலலவே முடியாது!” என்றார் காப்டன. ஒருவரின் கண் பார்வை, அலைகளுக்குத் தப்பும் ஒவ்வொரு சம யத்திலும் அவர் கரையின் பக்கம் ஆவலோடு திரும்பிப் பார்க்கும் போதும் அந்தக் கண்களில் வீசும் ஒளியின் தன்மையே அலாதியாக இருந்தது. நிருபர் மற்றவர் களை ஆராய்ந்த பொழுது அவர்கள் மனத்தில் இப்போது பீதி இல்லை என்பதைக் கண்டார். எனினும் அவர் களது பார்வையின் முழு அர்த்தம் அவருக்கு விளங்க வில்லை.

அவரைப் பொறுத்தவரை அவர் மிகவும் களைப் பாக இருந்தபடியால் அடிப்படையான உண்மையை அவர் உணர்ந்து கொள்ள முடியாமலிருந்தது. அதைப் பற்றிச் சிந்தனை செய்ய அவர் தன் மனத்தைக் கட்டுப் படுத்த முயன்றபோது, அவருடைய தசைகளின் ஆதிக் கம் மேலாக இருந்தது. சிந்தனை செய்வதற்கு அவரை அவைகள் அனுமதிக்கவில்லை. தான் முழுகிவிட நேர்ந் தால் வெட்கக்கேடாக இருக்குமென நினைத்தார்.

படகிலிருந்தவர்கள் பரபரப்பு கொள்ளாமல் முகம் வெளிறிப் போகாமல் நிதானமாக இருந்தார்கன். அவர்களுக்குள் கொந்தளிப்பு எதுவும் ஏற்பட வில்லை. கரையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந் தார்கள் “குதிக்கும்போது படகை விட்டுச் சிறிது தூரம் தள்ளிக் குதிக்கவேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று காப்டன் எச்சரித் தார்.

கடல் பக்கத்திலிருந்து ஒரு பெரிய அலை திடீ ரென்று எழும்பிக கீழே விழுந்தபோது இடி முழக்கம் போல பலத்த சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரே வெண்மையான நுரைப்படலம் பேரிரைச்சலுடன் படகின்மீது பாயவந்து கொண்டிருந்தது.

“ஜாக்கிரதை!” என்று எச்சரித்தார் காப்டன். மற்றவர்கள் மௌனமாயிருந்தனர். கரைமீது நிலைத்திருந்த பார்வையைத் திருப்பி அலையைப் பார்த்தவண்ணம் அதற்காகக் காத்திருந்தனர். அலைச் சரிவின் மேல் படகு ஏறி ஆக்கிரோஷமான அதன் உச்சிக்கு மேலா கத் தாவி மறுபக்கம் சரிந்து ஓடியது, படகுக்குள் கொஞ்சம் தண்ணீர் புகுந்தது. அதை சமையற்காரர் இறைத்தார்.

இதேபோல் அடுத்த அலையும் பலத்த சப்தத் துடன் முறிந்து விழுந்தது. கொந்தளிக்கும் அந்த வெண்மையான அலை வெள்ளத்தின் நடுவில் சிக்கிய அந்தப் படகு இப்போது அநேகமாய் செங்குத்தான நிலைக்கு வந்துவிட்டது. நாலா பக்கங்களிலும் அலைகள் சூழ்ந்துகொண்டன. படகின்மேல் விளிம்பில் நிருபர் கையை வைத்திருந்தார். அலைத் தண்ணீர் அந்த இடத்தை நெருங்கியபோது அவர் கையை நனைத்துக் கொள்ள விரும்பாதவர் போல் ‘சடக்கென்று இழுத் துக்கொண்டார். -தண்ணீ ரின் கனம் தாங்காமல் படகு அலையில் சுழன்றபடியே கடலினுள் மூழ்க ஆரம்பித்தது.

உடனே காப்டன் கத்தினார். ” தண்ணீ ரை இறை/ சீக்கிரம் இறைத்து வெளியில் கொட்டு!”

“இதோ, காப்டன்!” என்று விரைந்தார் சமையற்காரர்.

“நண்பர்களே! இப்போது இன்னும் ஒரு அலை போதும். நம்மை ஒழித்துவிட. படகைவிட்டு அப்பால் குதிக்கவேண்டும்! ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார் காப்டன்.

மூன்றாவதாக ஒரு பெரிய ஆக்கிரோஷமான அசைக்கமுடியாத அலை முன்னேறி வந்தது. அநேக மாய் அது படகைக் கபளீகரம் செய்துவிட்டது. அதே சமயம் படகிலிருந்தவர்களும் கடலுக்குள் குதித்தனர்; படகின் அடியில் ஒரு ‘மிதக்கும் பெல்ட்’ இருந்தது. நிருபர் கடலில் குதிக்கும் போது அதைத் தன இடதுகையில் மார்போடு சேர்த்துக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

ஜனவரி மாதத்திய கடல் தண்ணீர் பனிக்கட்டியைப்போல் ஜில்லென்றிருந்தது. பிளாரிடா தீப கற் பத்தினருகே கடல் எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கு மென்று நிருபர் நினைத்தாரோ அதைவிட குளிர்ச்சி யாக இப்போது இருப்பதை அவர் உடனே உணர்ந் தார். அச்சமயம் அது மனத்தில் பதிய வைக்கவேண் டிய முக்கியமானதொரு உண்மையே என்று நிருபரின் பிரமை தட்டிய மனதில்பட்டது. சோகத்தை உண்டு பண்ணும் அளவுக்கு அந்தத் தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது; துக்ககரமானது என்றும் குறிப்பிடலாம். அதோடு தன்னுடைய நிலைமையைப்பற்றிய எண்ணத் தையும் சேர்த்துப் பார்த்தபோது அதுவே கண்ணீர் பொங்கி வரச் செய்வதற்குப் போதுமானதாக இருந் தது. தண்ணீ ரில் குளிர்ச்சி அப்படி இருந்தது!

நீர்ப் பரப்புக்குமேல் வந்தபோது தண்ணீரின் பேரிரைச்சல் தவிர வேறு எதையும் அவரால் உணர முடியவில்லை. பிறகு கடலில் தன்னுடைய சகாக்களை அவர் கண்டார். கரையை நோக்கி அவர்கள் நீந்தும் போது அவர்களில் பில்லிதான் முதலாவதாக இருந் தார். மிகவும் தெம்போடு அவர் வேகமாக நீந்திக் கொண்டே போனார். நிரூபரின் இடது புறத்தில் சமை யற்காரரின் பரந்த வெளுப்பான முதுகு தண்ணீருக்கு மேல் தெரிந்தது, பின்னால் காப்டன் கவிழ்ந்த படகின் அடிபாகத்தை ஒரு கையினால் பிடித்த பிடியே தண்ணீ ரில் மிதந்து கொண்டிருந்தார். கடலின் இந்தக் கொந் தளிப்புக்கு நடுவில் கடற்கரை எப்படி அசைவற்று அலட்சியமாக திண்மையுடன் இருக்கிறது என்ற ஆச் சரியத்தை அப்போது நிருபர் உணர்ந்தார்.

கடலில் நீந்திச் செலவது வேடிக்கையாக இருந்த போதிலும் தாங்கள் தொடங்கி யிருப்பது மிக நீண்ட பிரயாணம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆகவே மெதுவாக கைகளைப்போட்டு நீந்திக்கொண் டிருந்தார். அவருக்கு அடியில் அந்த மிதக்கும் பெல்ட் இருந்தது. சிறு சமயம் ஒரு அலையின் சரிவில் வேகமாகப் போகும் போது அவருக்கு, குளிர் பிரதேசத்தி பனிக் கட்டி மேல் இருப்பதற்கு உபயோகமாகும் சக்கரமில்லாத வண்டியில் கையை வைத்துக்கொண்டு வழுக்கிச் செல்வதுபோலத் தோன்றும்.

கடைசியில் கடலில் ஓரிடத்துக்கு வந்தபோது நீர் திச் செல்வது மிகக் கஷ்டமாக இருந்தது. ‘எந்த மாதிரி சுழலில் மாட்டிக்கொண்டோம்’ என்று பார்ப்பதற்காக அவர் நீந்துவதை விட்டுவிடவில்லை. எனினும் அவ ருடைய வேகம் அந்த இடத்தில் தடைப்பட்டது. ஒரு நாடக மேடைமேல் தெரியும் காட்சிபோல கரை அவ ருக்கு எதிரே காட்சி யளித்தது. கரையின் ஒவ்வொரு அம்சத்தையும் அவருடைய கண்களில் அவர் வீவரமாக ஆராய்ந்தார்.

காப்டனின் இடது புறத்தில் வெகு தூரத்தில் சமையற்காரர் வந்தபோது காப்டன் சொன்னார், “அப்படியே மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு துடுப்பை உபயோகித்து முதுகினால் மிதந்து செல்!” என்றார்.

“சரி!” என்று சமையற்காரரும் மல்லாந்து படுத் துக்கொண்டு ஒரு படகைப்போல துடுப்பை உப யோகித்து நீந்தினார்.

நிருபருக்கு இடது புறத்தில் இப்போது படகு அவரைக் கடந்து சென்றது. அதன் அடிப்பாகத்தைத் தொட்டுக்கொண்டே காப்டன் மிதந்து சென்றார். படகு மட்டும் சர்க்கஸ் வித்தை செய்யாமலிருந்தால் அவர் ஒரு திரைக்கு மேல் எழும்பிப் பார்க்கும் மனிதனைப் போலத் தெரிந்திருப்பார். இன்னும் அந்தப் படகில் அவர் தொத்திக் கொண்டிருந்தது நிருபருக்கு ஆச்சரிய மாக இருந்தது.

சிப்பந்தி, சமையற்காரர், காப்டன் மூவரும் கரைக்கு அருகாமையில் நீந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக் குப் பின்னால் படகிலிருந்த தண்ணீர்ப் பீப்பாய் அலை களினூடே ‘ஜாம் ஜாம்’ என்று எழும்பிக் குதித்துக் கொணடே சென்றுகொண்டிருந்தது.

நிருபர் மட்டும் இப்போது ஒரு புதிய எதிரியின் பிடியில்-சுழலில்-சிக்கிக் கொண்டிருந்தார். கரையின் சாய்வான மணல் பரப்பும், அதன் மேலிருந்த தாவர வர்க்கங்களும், சிறிய குடிசைகளும் ஏதோ திரையில் காணும் சித்திரக் காட்சிபோல அவருக்குத் தெரிந்தன. கரை அவருக்கு வெகு அருகாமையில் தான் இருந்தது. ஆனாலும் அது அவருக்கு அல்ஜிரியா அல்லது பிரிட் டானி தேசத்தில் சினிமா கொட்டகையின் ‘காலரி’யிலிருந்து கொண்டு காணும் ஒரு படக் காட்சி போலவே உணர்வில் தோன்றியது.

‘நான் முழுகிப் போய்விடுவேனோ? அது சாத்தியமா?’ என்று அவர் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண் டிருந்தார். ஒரு வேளை தன்னுடைய சாவுதான் இயற்கை யின் லீலா வினோதங்களில் இறுதியானதோ என்று ஒருவருக்குத் தோன்றக் கூடும்.

பயங்கரமான அந்தச் சுழிலின்றும் அவரை உந்தித் தள்ளியிருக்க வேண்டும் ஒரு அலை. ஏனெனில் இப் போது கரையை நோக்கி மீண்டும் தன்னால் நீந்த முடி வதை அவர் உணர்ந்தார். அதன் பிறகு காப்டன் படகை ஒரு கையால் பிடித்துத் தொத்திக்கொண்டே நிருபரையும் படகுக்கு வரும்படி அழைப்பதை அவர் கண்டார்.

படகையும் காப்டனையும் அடைவதற்கு முயன்று கொண்டிருந்தபோது இப்படி ஒரு நினைவு- ரொம்பவும் களைத்துப்போய்விட்ட பிறகு தண்ணீரில் மூழ்கிப் போய் விடுவதுதான் நல்ல முடிவாக இருக்கும். கொடூரங்க ளெல்லாம் ஒழிந்து ஒரேயடியாக நிம்மதியாகக் கண்ணை மூடிவிடலாம். அதை வரவேற்கவும் அவர் தயாராக இருந்தார்! ஏனெனில் தற்காலிக வேதனையின் பயங் கரமே அவரது மனத்தை மிகவும் அர்த்துக்கொண் டிருந்தவைகளில் மிக முக்கியமானதாகும்.

திடீரென்று ஒரு மனிதன கடற்கரை ஓரம் ஓடுவதை அவர் பார்த்தார். அதிவேகமாக அவன் தனது உடை களைக் கழற்றிக்கொண்டிருந்தான். மேலங்கியும், கால் சட்டை முதலியவைகளும ஏதோ ஜாலம்போல் அவனிடமிருந்து சுழன்று பறந்தன.

“படகுக்கு வா!” என்று கூவினார் காப்டன்.

“அப்படியே, காப்டன்” என்றபடி நீந்திவந்து கொண்டிருந்தார் நிருபர். கவிழ்ந்திருந்த படகின் அடிப்புறத்தைப் பற்றியிருந்த காப்டன் அதைவிட்டு நகர்ந்து கொள்வதை நிருபர் கவனித்தார். அப்போதுதான் நிருபர் தன் பிரயாணத்தில் இதுவரை செய்யாத ஒரு அற்புதத்தைச் செய்ய நேர்ந்தது. ஒரு பெரிய அலை அதிவேகத்தோடு வந்து நிருபரை அலக்காகத் தூக்கிப் படகுக்கும் அப்பால் வீசியெறிந்தது. அந்த சமயத்தில் கூட அது ஏதோ சர்க்கஸ் வித்தை போலவும், கடலின் அற்புதச் செயல்களில் ஒன்றாகவும் அவருக்குப் பட்டது. கடலில் நீந்திக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு, கவிழ்ந்து போன படகு ஒன்றும் வேடிக்கையான பொருளல்ல.

இடுப்பளவு தண்ணீருக்கு நிருபர் வந்து சேர்ந்தார். ஆனால் அவரது நிலைமை ஒரு கணத்துக்குமேல் நிற்க அவருக்கு இடம் கொடுக்கவில்லை ஒவ்வொரு அலையும் அவரைப் பந்துபோல் உருட்டியடித்தது. எதிரலை அவ ரைப் பின்னுக்கு இழுத்தது.

பிறகு கரையிலிருந்த மனிதன் தனது உடுப்புகளைக் களைந்துவிட்டுத் தண்ணீ ரில் இறங்கி ஓடி வருவதைப் பார்த்தார். அவன் சமையற்காரரை இழுத்துக் கரை சேர்த்தான். பிறகு காப்டனை நோக்கி விரைந்தான். ஆனால் அவனை நிருபரிடம் போகும்படி காப்டன் கை யசைத்தார். உடுப்புகளைக் கழற்றிவிட்டிருந்த அந்த மனிதன் நிருபரின் கண்களுக்கு ஒரு மகான் போலத் தோற்றமளித்தான். அவனைச் சுற்றி ஒரு ஜோதி பிரகா சிப்பதைப் போல அவர் உணர்ந்தார். நிருபரின் கை யைப் பிடித்து அவன் பலமாக இழுத்தான். நிருபர் அவனுக்கு வந்தனம் செலுத்தினார். ஆனால் அந்த மனிதன் திடீரென்று ஒரு விரலால் சுட்டிக் காட்டி அதோ அது என்ன?’ என்று கூவினான்.

“போய்ப் பார்!” என்றார் நிருபர்.

ஆழமில்லாத ஒரு இடத்தில் சிப்பந்தியின் உடல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. ஒவ்வொரு அலையும் வந்து மோதிவிட்டுச் சென்ற பிறகு மணல் நன்றாகத் தெரிந்த அந்த இடத்தில் அவருடைய நெற்றி மணலில் படிந்து கிடந்தது.

பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் நிருபருக்குத் தெரியாது. கரையில் பத்திரமான ஒரு இடத்தை அடைந்துவிட்ட பிறகு அவர் உடல் முழுவதும் சாஷ் டாங்கமாக மணலில் படியும்படி கீழே விழுந்துவிட்டார். ஏதோ கூரை மீதிருந்து அவர் விழுந்ததைப் போல ‘தொப்’பென்று சத்தம் கேட்டபோதிலும் அது அவ ருடைய காதுகளுக்கு இனிமையாக வரவேற்கத் தக்க தாக இருந்தது.

திடீரென்று அக் கடற்கரை பூராவுமே ஜனக் கூட் டம் நிறைந்துவிட்டாற்போலத் தோன்றியது. ஆண்கள் பலர் கையில் போர்வை, துணி மணி, பிளாஸ்க முதலிய வற்றுடன் நின்றிருந்தார்கள். பெண்கள் கையில் காபி பாத்திரம் மற்றும் அவசியமாகத் தோன்றிய சாமான் களை எடுத்து வந்தனர். கடலிலிருந்து கரை சேர்ந்த அந்த மனிதர்களுக்கு, கரையிலிருந்தவர்கள் அளித்த வரவேற்பு உபசாரம் மிகவும் பலமாகவும், அன்பு நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால் சொட்டச் சொட்ட ஈரமான நிலையில் மரக்கட்டைபோன்றிருந்த ஒரு உரு வம் கரைக்குத் தூக்கிவரப்பட்டது. அந்த உருவத்திற்கு கரையினின்றும் கிடைத்த வரவேற்பு முற்றிலும் வேறு விதமாக இருந்திருக்கும்! சவக் குழியின் பரிகாசமான வரவேற்புதான் அதற்குக் கிடைத்திருக்கும்!

இருட்டிப்போன பிறகு, சந்திர வெளிச்சத்தில் அந்தக் கரைமீது வெண்மையான அலைகள் முன்னும், பின்னுமாக உலாவிக்கொண்டிருந்தன. ஆழ்கடலின் அறைகூவல் அந்த மனிதர்களின் காதுகளில் காற்றில் மிதந்து வந்து மோதியது. அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறத் தங்களால் முடியும்போல அம்மனிதர்களுக்குத் தோனறியது.

– அமெரிக்கக் கதைகள், முதற் பதிப்பு: செப்டம்பர் 1957, சக்தி காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *