கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 4,320 
 

கடந்து வந்தது உண்மையை அல்ல!

கடந்த ஒரு நொடி கூட மறந்து விடுமா!

மரணத்தின் பின்!

இது என்ன மரணமா!

மரணத்தின் பின் ஒரு புது வாழ்வா!

“எதுவுமே ஞாபகம் இல்லையே. எனக்கு என்னாச்சி!”

முதலில் தெரிந்தது ஒரு முகம். பார்த்தவுடன் மனதில் பதிவானது. என்றுமே நீங்காது. பிறக்கும் போது ஒரு குழந்தை இந்த ஜட உலகில் எதை பார்த்தாய் என்று கேட்டால் அது கூறி விடுமா? நான் இந்த நொடி பிறக்கையில் பார்த்த முகம். அவ்வளவு வடிவு. பெயர் பலகையில் யார் என்று கூறியது.

“டாக்டர் குரு மணியன்”

ஒரு முப்பது, நாற்பது வயது இருக்கும். வெண்மை முகம். நம்பிக்கை ஒளிகளை வீசியது. சிரிய அளவிலான மூக்கு கண்ணாடி. தெளிவான கூர்மை பார்வை. அடர்த்தியில்லா கரு மீசை. அவர் முன் வீற்றிருந்ததால் என்னவோ பதற்றம் காணாமல் போனது. ஆனால் என்றும் அடங்காத பீடித்த ஒரு பீதி, உமிழ் நீரை விழுங்க வைத்தது. உடலை போர்த்தி இருந்த வெள்ளை சீருடை, நான் சிறை கைதி இல்லை! ஒரு நோயாளி இல்லை!

இல்லை, பயம் வேண்டாம். என் உடல் நன்றாக உள்ளது.

நான்கு புறமும் அமைதி குடி கொண்ட விசால அறை.

“இட்ஸ் ஆல்ரைட்”

என்ற குரல் அவரிடம் இருந்து ஆரம்பமானது. தன் நிஜத்திற்க்கு மீண்டான். அவன் இரண்டு கைகளும் வழமை போல் இல்லை. உறுதியான உணர்வு. என்றும் இருக்கும் மென்மை இழந்து ஏதோ அனுபவங்களை வடுக்களாக கொண்ட இறுக்கமான உள்ளங்கைகளை. கைகள் முகத்தை தொட்டு பார்த்தது. நீளமாக வளர்ந்த தாடியும் மீசையும். ஆங்காங்கு நரைகளும் எட்டி இருந்தது. தலை மயிரும் அடர்த்தியாக படர்ந்திருந்தது.

இது நான் இல்லை. கூடு விட்டு கூடு பாய்ந்து விட்டது போல் இருந்தது. இது நான் இல்லை. தன் உடல் நிலையை உணர்ந்த தொடுகை, பயத்தை உருவகித்து உடலை அனலாக மாற்றியது.

சத்தியமாக அது நான் இல்லை.

சுற்றி உள்ள அமைதி வெண்மை சூழலும் அதில் குடி இருக்கும் இந்த மனித கடவுளும் இதற்காகத்தானா!

நீண்ட காலம் பேச்சு வராத வாய் போல தன் குரல் பேச்சை செல்படுத்த தடையாக இருந்தது.

முகத்தில் நிதானத்தை இழுத்து பிடித்து வரவழைத்து, பெரு மூச்சு காற்றை வெளியிட்டு சாந்தமானான்.

“டொக்டர்! புரியுது. ஆனா…நா இந்த மாதிரி நேரத்துல ரிலக்ஸா இருக்கனு இல்லையா”

“ஆமா உங்களுக்கு எதாவது ஞாபகம் இருக்கா. நம்ம இதுக்கு முன்னாடி என்ன பேசிக்கிட்டோனு, எப்ப கடைசியாக சந்திச்சோனு”

முந்திய ஞாபகம் என்றதும் தான் பித்தன் ஆக இருந்து மனிதனாக மாறிவிட்டோமோ என்ற பயம். பெருமூச்சில் கரைந்த பயம் மீண்டும் பற்றிக்கொண்டது. தூக்கத்தில் இருந்து விழித்தவனுக்கு ஒரு குழப்பம் இருக்கும். அன்று புதிய நாளின் தொடக்கம். ஆனால் அவனுக்கோ மறு பிறப்பின் தொடக்கம் போல் இருந்தது.

“ஏ…து இல்ல”

குரல் கொஞ்சம் மாறி இருந்தது உணர்தான்.

“எதுமே எனக்கு ஞாபகம் இல்ல டாக்டர்! ஆனா…நீங்க எனக்கு உதவ முடியும்.ப்ளீஸ். நா ஒன்னும் பைத்தியம் இல்ல”

பயம் வார்த்தைகளோடு மீட்டி வந்தது.

“ரிலாக்ஸ் ஆகுங்க…”

“அதுதான்…நா நார்மல் தா”

“ஆமா நீங்க இங்க வந்து ஒரு… பத்து நிமிஷம் தான் ஆகிருக்கும்”

வார்த்தையில் அமைதியும் நிதானமும்.

“அது வரைக்கு எதாவது ஜெயில்ல அடைச்சு வச்சிருப்பாங்க… நா நார்மல் தா டாக்டர்…! என்ன இங்க இருந்து ரீலீஸ் பணிருங்க…இது ஒரு அசைலம்னு எனக்கு நல்லா தெரியும்”

அவரின் பார்வை அவனின் மொத்த செயலையும் பற்றி படம் பிடித்திருந்தது.

“ஸ்டாப் பிட்…!!!”

“வாய மூடுங்க”

“நீங்க, இங்க இந்த அசைலம்க்கு வந்து ஜஸ்ட் பத்து நிமிஷம் தான். அதுக்கு ஏ இப்படி பயப்பிடிரிங்க..இங்க இந்த யூனிஃபார்ம் சில ப்ரோஸுஜருக்காக அவ்வளோதான்”

உறுதியான குரல் சத்தம் அரங்கை அதிர வைத்தது.

இருக்கையை விட்டு எழுந்தான். உடல் பாரம் அவனுக்கு புதிதாக இருந்தது. முகத்தில் வியப்பில் ஆழ்ந்த புரியாத பயம். சுற்று முற்றும் உடலும் பார்வையும் திரும்பியது. கைகளையும் முகத்தையும் மீண்டும் பதட்டத்தோடு தொட்டுப்பார்த்துக் கொண்டான்.

“இது என்ன வியாதினு எனக்கு புரியல…”

“லிஸ்ட்ன் மிஸ்டர்…உங்களுக்கு எந்த பிரச்சனயும் இல்ல..உங்க ஹேல்த் என்ட் பொடி பெர்ஃக்ட் ஓகே! உங்கள பத்தி இப்ப நீங்க தான் என்கிட்ட சொல்லணும். அதுக்கு அப்பறம் தான் நா உங்களுக்கு உதவ முடியும்.”

“ஓகே”

“என்ன ஞாபக இருக்குனு… சொல்றேன்”

“பேரு ஜீவ காந்தன். அப்பா சுந்தரம். ராஜ்யா சிட்டி ஃபோர்மெர் மேயர் செக்ரேடரி. இப்ப உயிரோட இல்ல. அம்மா ஆசியா சிட்டி வள்ளுவர் ஸ்கூல் பிரஃபோசர் இப்ப ரிடயர்மண்ட். பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் இல்ல. எனக்கு பெருசா ஃப்ரெண்ட்ஸ் சர்கிள் இல்ல. மார்வல் ஏசியன் மியூசியம் ஆர்கிவிஸ்ட் டிபார்ட்மெண்ட் வேல மட்டும் தான் எல்லாமே. வயசு இருபத்தி ஏலு. ராஜ்யா சிட்டி. ஹலோ ஸ்ட்ரீட். நாற்பத்து ஆறு நம்பர் வீடு. எங்க வீட்ல நா மட்டும் தான்”.

“வேற..”

“இன்னைக்கு என்ன நாள்னு கூட ஞாபகம் இல்ல டாக்டர்! எனக்கு கடைசியாக என்ன ஆச்சினு உங்களுக்கு தெரியுமா! இங்க என்ன நடக்குது!”

அவனின் பேச்சைக் கேட்டு சில கணம் அமைதி முகத்தில் யோசனைகளை அலைய விட்டார் குரு. பின் முகம் கொஞ்சம் குழப்பத்தோடு பயம் ஏறி மாறியது. எழுந்தார்.

சிறு பரிதாப புன்னகை.

“கதையே இனிமே தான் ஆரம்பிக்க போகுது…”

“கடைசியாக நினைவில இருந்த தேதி என்னனு தெரியுமா?”

“மார்ச்…! டேட் ஞாபகம் இல்லயே! நான் ஞாபகங்களை இழந்திட்டே கடவுளே…இப்ப என்னையே ரீஸ்டார்ட் பண்ண மாதிரி இருக்கு… ஓகே கூல்”

தன் நிலை புரிந்து பயம் தெளிந்த அமைதி முகம் புன்னகைத்தது.

“ஆனா எனக்கு தெரியும். உங்களுக்கு எல்லாதுக்கு சொலியூஷன் இருக்கு”

“ஓ!”

கண்ணாடி பார்வை புருவங்களை உயர்த்தி பார்த்தது. ஒரு வியப்பு.

“ஏன் என்ன பாத்து அப்டி சொல்றிங்க”

“எனக்கு ஃபேஸ் ரீடிங் தெரியும்!”

“ஓ!”

“அப்படினா நா சொல்றத பொறுமையா கேளுங்க. இன்னைக்கு தேதி மார்ச் இருவத்தி நாலு…இப்ப, வருஷம் என்னானு சொல்லுங்க பார்ப்போம்!”

“இரண்டாயிரத்து ரெண்டு!”

“ஐயம் சோரி ஜீவன்”

“இது ரெண்டாயிரத்தி இருவத்தி ரெண்டு, உங்களுக்கு ஏஜ் இப்ப நாப்பத்தி ஏழு”

உலகம் சுற்றியது. இந்த இரு கண்களுக்கு மட்டும் உலகம் சிரிதானது. இது கனவு இல்லை. கண்கள் உண்மையை காண்கின்றதா! ராஜ்ய பெரு நகரம் எதிர்காலத்திலும் மாறவில்லை. அதே ஞாபகங்கள் ஓடியது. ஒரு நாளில் என்ன மாறிவிடும்! சிறு தெருக்கள் நெடுஞ்சாலை ஆனது. சிரிய கட்டிடங்கள் வானுக்கு போட்டியிட்டு நீண்டிருந்தது. அழகிய மாலை மங்கி இருளுக்கு வழி வகுக்க காத்திருக்கும் நேரம், எவ்வளவு அழகானது! சூழல் உணர்வு எதோ செய்தது.

சாலையில் செல்லும் வாகனங்கள் மாறிவிட்டது. தொழில்நுட்பங்கள் மாறிவிட்டது. இது தான் எதிர் காலமா!

இந்த பெரு நகரின் ஒரு ஜீவனுக்கு மட்டும் இது பெரு நரகம். ஒரே நாளில் எதிர் காலங்களை உணரும் உயிருக்கு இது இருள் காலம்! இவன் கண்களுக்கு முன் அனைத்தும் அதிசயம் தான். இனி எந்த அதிசயமும் நிகழப்போவதில்லை. கடந்த காலங்களை எப்படி மீண்டும் அடையும் இந்த உயிர். அந்த சுவடுகள் எதை விட்டு சென்றிருக்கும். பாதைகளில் நடக்கும் போது புதியதொரு உலகில் உதித்த மனிதன் ஆனான். அவன் உடை, தோற்றம் அவனுடன் பேசியது. இது நான். ஜீவன். வயதுகள் கடந்தாலும் அது நீதான். இங்கு என்ன ஆகியது! பார்வையில் ஹலோ ஸ்ட்ரீட் தெரியும் போது பழைய நினைவுகளுக்கு உயிர் கொடுத்து இருள் காலத்தில் தவிக்கும் உயிருக்கு உணர்வழித்தது. சிறு புன்னகை உதிர்ந்தது. நாற்பத்து ஆறு இலக்கம் வீட்டை பார்த்தான். காலம் கட்டிட நிர்மாணிப்பை மெருகூட்டி இருந்தது. அவன் வாடகை இல்ல வாழ்க்கை முடிந்து பல வருடங்கள் ஆனது எதோ மனதின் மாய வித்தையால் அறிந்தான் போல! பார்த்தவுடன் ஒரு வேற்றுமை உணர்வு. அந்நிய குடும்பம் வசிக்கும் இல்லம் இனி அது! வழிக்கு திசை தெரியாத புதிய உலகின் ஜீவனுக்கு தன்னுடன் உரையாடும் மாந்தர் வைத்தியன் மட்டுமே. செவியில் பொருத்திய கருவி மூலம் குரு மணியுடன் தொலைதொடர்பு மேற்கொண்டுதான் இனி தனது அடுத்த பயணங்கள்.

2020 இல்லம்.

இந்த எதிர்காலம் ஒரு அதிசயம்.

இந்த அதிசய வாழ்க்கை இங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கோ! என்ற ஆச்சர்ய கேள்வியோடு நுழைந்தான். கடந்த நினைவுகள் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணும் போது தன்னை இரு உயிராக உணர்ந்தான். எதிர் கால உயிரை தேடும் கடந்த கால உயிர்.

வீடு பாழ் அடைந்திருந்தது. நுழைந்தான். இது நான் இல்லை! உனது வாசனை இங்கு இல்லை. நினைவுகள் ஏதும் இல்லை. இது ஒரு மர்மம். இதை விலகி ஓடி விடு என்று எண்ணங்கள் அலைமோதியது. வீட்டில் ஓர் அறை மட்டும் எரிந்து கருகி இருந்தது. நினைவுகளின் கடந்த சுவடுகள் அந்த தீயிக்கு இரையாகியிருந்தது. இதன் பின் உள்ள மர்மங்களை நினக்கும் போது உணர்வால் எழுத முடியாத ஒரு பயம், அதற்க்கு எதிராக ஒரு ஆதங்கமும் மனதில் போட்டியிட்டது. எண்ணத்தில் சந்தேகம் எனும் கூர்மையில் உருத்திய ஒரு விடயம் கையில் அகப்பட்டது. “தி ஃபேட்” கம்பனியின் அட்டை. சிந்தனையின் மூலம் நினைவுகளின் ஆழத்திற்கு நுழைந்து ஆரம்பத்தை எண்ணினான். ஃபேட் கம்பனி, மியூசியம் மற்றும்…

ஒரு உயிரின் நினைவுகள். இரு காலங்களுக்கு இடையில் அந்த ஒரே ஒரு உயிர் மட்டும் அன்பால் இணைக்கும் பாலமானது. அந்த ஒரு அன்பு எனும் பந்தம் இந்த இருள் வாழ்க்கை தேடும் நேரத்திலும் மனதில் ஒரு ஆனந்தத்தை உருவாக்கியது. நம்பிக்கையை தந்தது. அந்த ஒரு உயிருக்காக உருவாகும் அன்பு மட்டுமே தன்னை தன் எதிர்காலம் எனும் போர்வையில் மாறிய இருள் காலத்தின் இன்னொரு பிரதியின் வாழ்க்கை சுவடுகளை தேட உயிருக்கு உணர்வு தந்து மனிதனாக மாற்றியது.

அந்த அன்பு.

அவள்.

ஒரு பெண். அவளை பற்றிய நினைவு, நினைவுகள், நினைவு அலைகள். அந்த மியூசியத்தில்… எண்ணங்களால் மட்டுமே மீட்டிப்பார்க்கும் நிலையானது.

அவனின் வேலை தளமான மியூசியம். காலம் எனும் பாதையில் மாற்றத்தில் நின்றது. இப்போது பார்த்தவுடன் அவள் நினைவுகள் தான் முதலில் வீசியது. வருடங்கள் கடந்த நினைவுகள் அழியலாம். காலத்தில் ஓடாத நினைவுகளை தாங்கிய உயிருக்கு எதுவுமே அழியாது. நேற்று இரவு தான் பணிகள் முடித்து கிளம்பினான். இருபத்தி நாலு மணித்தியாலங்கள் ஆகாமல் இருபது வருடங்கள் ஆகிவிட்டது. அது இந்த உடலுக்கு. இந்த உயிருக்கு அல்ல.

நேற்றைய நினைவுகளை மட்டும் சுமந்த மாய உலகில் வாழும் ஆன்மா நிஜத்திற்கும் நிழல் போன்ற கனவிட்கும் இடையில் சிக்கி தவிக்கும் வலி இந்த நகரம் எனும் நரகத்தை விட கொடியது.

எதிர்காலம் புரட்டி போட்டாலும் இதயம் இன்னும் துடிக்கிறது. துடிப்பின் சத்தம் அவள் மட்டுமே. அவளின் மொத்த நினைவுகளையும் இங்கு மட்டுமே மீட்டி பார்க்க முடியும்.

அந்த பெண்ணின் முகத்தை காணும் நாள் மீண்டும் வராதா? மனதிற்குள் அவள் மட்டும் தானே! அவளை நினைவுகளால் காண்கிறான். அவள் நினைவை தாண்டி சென்றாலும் இங்கு எதுவுமே அவன் நினைத்ததாக இல்லை. தன்னுடன் பணியாற்றிய பணியாளர்கள் பற்றிய விபரம் கூட சரியா பெற முடியவில்லை.

ஃபேட் கம்பனியின் அட்டை மட்டும் பற்றி கொண்ட முதல் துப்பை சுமந்த பொதி ஆனன். அவனுக்கு இருக்கும் ஒரே தீர்வு ஃபேட் மட்டும் தான்.

சென்றான். அறிவியலில் எல்லையை தொட்டு செல்லும் நிறுவனம். அட்டையை சமர்ப்பிக்க அங்கு எதுவும் அசாதாரணமாகவில்லை. பதினைந்து வருடத்திற்கு முன்பே அத்தகைய வடிவமைப்பு அட்டை உபயோகத்தில் இருந்தது காணாமல் போய்விட்டது. நாட்கள், வாரங்கள் சுற்றி சுற்றி திரிந்தும் ஃபேட் நிறுவனத்தை பற்றி அறிந்து அந்த இரு மனிதர்களும் அறிவியல் நிறுவனத்தை படித்தார்கள் தவிர வேறு எதுவும் புதிதாக பட வில்லை. அவனுக்கும் நிறுவனத்திற்கும் எதுவும் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை.

நாட்களும் ஓடியது.

பாழ் அடைந்த வீடு திருத்தப்பட்டது. எதிர்கால ஜீவனை பற்றி அக்கம் பக்கம் கூட அந்நியமாக இருந்தது.

நண்பர்கள் இல்லை.

யாரும் இல்லை.

ஆனால் தனி ஒருவனும் இல்லை.

காதில் குறுமணியின் குரல் ஓசை கேட்ட போது,

“உன்னோட மனைவிய பத்தி எது தெரியல?…லீலா!”

ஒரு நொடியில் பல பிரபஞ்ச பயணங்களை அந்த வார்த்தையின் அரத்தத்தால் மேற்கொண்டுவிட்டான். தன் இத்தனை கால வாழ்க்கை பயணத்தில் தன்னுடன் வாழ்ந்தது தன் மனதில் பதிந்த இந்த மலரா!

பெயர் லீலா!

தங்கம். அவளுக்காக எதையும் செய்து விடலாம் என்று அன்பு அவன் மனதில் ஒரு நாள் கூட நீங்கியதில்லை. அது ஒரு காலம். அது நேற்று இல்லை. இருபது வருடங்கள். பல மாதங்கள் நொடியில் ஓடிவிட்ட வரலாறாக மாறிய தன்னுடைய காலம். அந்த ஒவ்வொரு நாட்களும் பொங்கும் அன்பு இதயத்தை நனைத்தது. பார்த்தவுடன் முகத்தை படித்தான். மலரின் மென்மை போன்ற மனம். அவளின் குணம் அப்பாவி தனம் எதோ செய்தது. வரலாறுகள் பதித்த சுவடுகள் மத்தியில் தேடி அறிய முடியாத மர்மத்தில் ஒரு மலரால் நினைவுகளை மட்டும் விட்டு சென்றதே வாசனையோடு.

“என்னோட மனைவி பத்தி எனக்கு எதுவு தெரியாது. இத்தன வருசத்துல எதுனாலு நடந்திருக்கலாம்.”

“ஒரு வேள உன் ஞாபகத்துக்கு தெரிஞ்ச பொண்ணா இருந்து, அது ஒனக்கு, ஒன்ன பொறுத்த வரைக்கும் நேத்து நடந்தது தான். இருந்தாலு உண்மைய மாத்த முடியாது ஜீவன். உன்னோட மனைவி உயிரோட இல்ல! உன் வீடு! உன்னோட நிலம, எல்லாத்துக்கு அவளோட மரணோ தான் காரணம்!

ஆனா இது எதிர்காலத்தை மாத்த கூடிய சக்தி. நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட விஞ்ஞானம். அதுக்கு ஆதாரமே நீதான்.

சில வருஷத்துக்கு முன்னாடி ஃபேட் கம்பனி ரகசியம் திருடப்பட்டிச்சு. இது உன் குடும்பத்தோடு சம்பந்த பட்ருக்கு. இதெல்லாம் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்திருக்கலாம்!”

“மரணம் தான் காரணம்! உயிரோட இல்ல!”

இந்த வார்த்தைகள் மட்டுமே காதில் நுழைந்து இதயத்துடிப்போடு சேர்ந்தது.

அதன் பின் அவனுக்கு எதுவும் கேட்கவில்லை.

இந்த வார்த்தைகள் அவனை பிணமாக்கியது. உயிர் பிரிந்து வேற்று உடம்பானான். இன்னும் என்ன கொடுமைகளை தாங்க வேண்டும். அவன் மனிதனாக பிறந்து, இந்த வாழ்க்கைக்கு அவன் அர்த்தம் தேட நாட்கள் கடந்தது.

மாதங்கள் ஆனது

அவன் வாழ்கையில் நடக்கும் விதி எனும் காலச்சதியில் விளையாட்டு பொம்மையானான். எதுவும் மாறவில்லை. மர்மமும் அகலவில்லை.

வருடங்களும் கடந்தது.

இரண்டு வருட நரகத்தின் வாழ்க்கை அனுபவத்தோடு சுழன்று விட்டு சாதாரணமாகிவிட்டது!

உயிருக்கு இருபத்தி ஒன்பதாவது ஆண்டின் பரிமாணம். உடலுக்கு நாற்பத்தி ஒன்பது. புதிய வாழ்க்கை வாழ்ந்த ஜீவனுக்கு அனுபவம் எனும் புதிய பாடத்தை கற்றவனுக்கு இனி எதும் புதிதல்ல. ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளத்தில் அனையாமல் எரிந்தது. தி ஃபேட் கம்பனியின் மர்மம் கிழிக்கப்படும் வரை முயற்சி. அதோடு அவளின் ஞாபகத்தோடு ஒரு வாழ்வு. இரண்டு வருடங்கள் பழகிவிட்டது.

உண்மை கண்டான். ஃபேட் கம்பனியின் மறு பக்கம், பல வருடத்திற்கு முன் நடந்த போர் சுவடுகள் போல், தனி மனித வாழ்வு இந்த ஒரு அரக்கர்களின் அமைப்பின் மூலம் போராட்டமானது. அது இருள் வரலாறு பக்கம். இன்று எதுவும் மாறப்போவது இல்லை. முடிவு எழுதப்பட்ட விளிம்பில் நின்றான் ஜீவன். ஆனால் அது மட்டுமே அவன் உலகையே மாற்றும். விஞ்ஞான அறையில் உடல் புதைக்கப்பட்டது. இயற்கை விதியில் எழுதப்பட்ட காலங்களில் நினைவுகள் மூலம் பயணம் செய்ய இயற்கைக்கு எதிரான இந்த மனித பேய்களின் பேராசையில் உதித்த விஞ்ஞானம் எனும் அழிவின் நுட்பம். காலங்களை நினைவுகளின் மூலம் கடந்தால் மனித உடல் என்னவாகும். மூளை பாதிப்படையும். பித்தன் அல்லது ஞாபகங்களை முழுமையாக இழந்த ஜடமாவான். இனி இழுப்பதற்கு என்ன இருக்கிறது!

அவளின் வாசனைகள் காற்றில் கரையும் முன் அவளை தரிசித்தது தான் அவன் வாழ்ந்த வாழ்கையின் அர்த்தம். உடல் மாறியது. இளமை திரும்பியது. உயிர் மீண்டும் வந்தது. அந்த மலரின் நினைவுகள் நிஜத்தில் வந்தவுடன் பூரணமானான். நிகழ்கால நினைவுகளுடன் 24 வயதுக்கு சென்றான். 27 கும் சென்றான். 30க்கும் சென்றான். அவளுடன் கடந்த நாட்களை மீண்டும் வாழ்ந்தான். அவன் 2022 எதிர்காலம் மாற வில்லை. ஃபேட் கம்பனியின் போர் சுவடுகளை மீண்டும் நிகழ்த்தி பார்க்கும் திட்டத்தை அவன் நினைத்து பார்க்க கூட இல்லை. உயிரை பணயமாக வைத்து சென்ற ஒவ்வொரு காலப்பயணமும் அவளை தன் வாழ்வில் இருந்து பிரித்து விட. அவளுக்காகத்தான் எதையும் செய்து விடலாமே. இறந்த காலங்களில் அவளிடம் இருந்து விலகினால் அவனுடன் சேர மாட்டாள். அவள் மரணம் என்பது நடைபெறாது. அவன் எதிர்காலம் 2022, அவன் நிலை கூட மாறிவிடும்.

ஒரு ஆண்டு கடந்தது. அவன் உலகம் இரண்டானது. உடல் நிலை மோசமானது. வயது ஏறுவது வேகமானது. செயலும் மனதும் மட்டும் மாறவில்லை. நடையில் நிதானம் இல்லை. கைகளில் உறுதி இழந்த நடுக்கம். ஆனால் அவளுடன் வாழ்ந்த இளமை வாழ்க்கை அவனை மனிதனாக்கியது. ஒரு முறை கூட அவன் காலப் பயணி என்ற உண்மையை கடந்த காலத்தில் உடைக்கவில்லை. அவள் மீது அன்பு அதிகமானது. எதோ மனம் இறுகிய கண்ணீருடம். அர்த்தம் தெரியாத பயணத்தில். அந்த ஞாபகங்களை சூடியே வாழும் உயிரானான். அனுபவங்களும் காயங்களும் தாங்கிய இதயத்திற்கு முழுமையான வாழ்க்கை அர்த்தம் உணரும் தடம் இறுதியில் தான் கிடைத்தது. அவன் உதிரத்தில் உதித்த உயிர்.

அவன் மகள் உயிரோடு இருப்பது அறிந்தான். அவளை தேடி காண உடல் ஒத்துழைக்கவில்லை. பத்து வயது குழந்தை புகைப்படம் மட்டும் சட்டைப்பையுடன் இதயத்தில் என்றும் தங்கி இருந்தது. அவன் நினைத்தால் திட்டம் தீட்டிய ஒரே ஒரு கால பயணம் மூலம் தன் எதிர் காலத்தை மாற்றி இருக்கலாம். இல்லாவிடில் மூன்று வருட நிகழ் காலத்தின் நினைவுகளுடன் கடந்த வாழ்க்கைக்கு சென்று இளமை பெற்று தீர்க்க தரிசாயாக வாழலாம். ஆனால் அவன் அன்பில் உதித்த ஜீவனுக்காக அனைத்தையும் மாற்றிக்கொண்டான். தன் குழந்தைக்காக. அவளின் பிறப்பை தடுக்க விரும்பவில்லை. அதோடு தன் மலரின் இறப்பை தடுக்க எண்ணினான். மனதோடு பதிந்த அந்த குழந்தையின் அன்பு மட்டுமே அவன் வாழும் மூச்சானது. தன் முயற்சிகளை கை விட்டான். இந்த விஞ்ஞானம் கூட அவுனுக்கு புதுமை என்ற எண்ணத்தை மனதில் பொருளாக்கவில்லை. அதில் ஏற்படும் பயனும் கூட அவனுக்கு தேவையில்லை. அனைத்தும் அவனின் சர்வத்திற்கு. இந்த மூன்று ஆண்டுகால ஜீவனின் அன்பிற்கு முன் ஒன்றுமில்லை.

“இந்த கதையில உன்ன பத்தி மட்டும் தெரியாதுனு நெனச்சிராத குரு! என்னோட உண்மையான நினைவு மட்டும் திரும்ப வந்திருந்தா உன் நிலமைய யோசிச்சு பாரு! என்ன பாத்து நீ பயப்பட தேவையில்லை. இப்ப நா என்ன செய்யனும்னு எனக்கு நல்லா தெரியும்”

நினைவுகள் காலப்பயணத்தின் மூலம் சென்றது…

24 மார்ச் 2022

சதியின் விளையாட்டின் சுழலாத சொர்கம் போன்ற எதிர்காலத்தில்… பத்து ஆண்டுகால நினைவு அஞ்சலியை சுமந்த கல்லறை முன் லீலாவும் அவளது மகளும் வீற்றிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *