கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 10,689 
 

அந்த மாநிலத்தில் செல்வாக்குள்ள அந்தக் கட்சியின்தொண்டர் அணியின் மாநாடு மிகச் சிறப்பாகநடந்தகொண்டிருந்தது.

கட்சித்தலைவர் தொண்டர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு தொண்டர் தயங்கிக் கொண்டே கேட்டார்.

“தலைவரே!…தப்பா நினைக்கக் கூடாது….எனக்கு நீண்ட நாளா … ஒரு சந்தேகம்….இருக்கு..”

“தைரியமா..கேளு…எந்த சந்தேகமாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்…”

“எந்த மாநிலமாக இருந்தாலும் சரி..எந்தப் பிரச்சினையை வைத்து பெரிய கலவரம் ஏற்பட்டாலும் சரி..அதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி நான் பார்ப்பேன்..அப்படி பார்க்கும் பொழுது அந்தக் கலவரம் வெடிக்க மூல காரணமாக இருந்து, அதை தூண்டி விட்டவர் அந்த மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைவராகத் தான் இருக்கிறார்கள்!…அது ஏன் என்றுதான் புரிய வில்லை!..”

தலைவர் சிரித்துக் கொண்டே அதற்கு விளக்கம் கொடுத்தார்.

“சமீபத்தில் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும்….இனி அடுத்த தேர்தலில் தான் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்…அடுத்த தேர்தல் இன்னும் ஐந்து வருஷம் கழித்துத் தான் வரும்….அவ்வளவு காலம் பொறுத்திருப்பது கஷ்டம்…சீக்கிரம் தேர்தல் வர வேண்டுமானால் ஒரே வழி அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்க வேண்டும்…அதனல் தான் மறைமுகமாக அப்படி அவர்கள் முயற்சி செய்கிறார்கள்!” என்று சொல்லி விட்டுச் சிரித்தார்.

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *