அவளும் அவனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 4,595 
 
 

அவள்- மலை, பனியுடன் காற்று, பரவசமான குருவிங்க சத்தம்…இதையெல்லாம் நாளைக்கு நான் பாக்கபோறதில்லை ஆனா.. அதே சமயம் என் பிரச்சனை எதுவும் என்னுடன் இருக்காது. கடைசி உறக்கம்; இதுதான் எனக்கு….

அவன்- ஹெலோ…

அவள்- (மௌனம்)

அவன்- ஹெலோ உங்களைத்தாங்க..?

அவள்- யாருங்க நீங்க ..? எதுக்கு என்னைத் தொல்லைப்படுத்தறிங்க..?

அவன்- அயயோ.. தொல்லையெல்லாம் இல்லைங்க.. தனியா சாகலாம்னுதான் வந்தேன்; துணையா நீங்களும் கீழே குதிக்கப்போறிங்கன்னு நெனைக்கறேன் அதான். சாகறதுக்கு முன்னமே பேரை தெரிஞ்சிக்கிடா செத்த பிறகு கூப்ட வசதியா இருக்குமே..

அவள்- (சிரிப்பு)

அவன்- அடட.. நல்லாதான் சிரிக்கிறிங்க ஆனா இதுதான் உங்க கடைசி சிரிப்பா இருக்கும்னு நெனைச்சா..

அவள்- இதுதான் என் முதல் சிரிப்புன்னு நெனைக்கறேங்க..ஆமா உங்க பேரு..?

அவன்- அது நான் சொல்லனும்ங்க. நான் எப்போ சிரிச்சேன்னு எனக்கே தெரியலங்க..ம்.. நான் மணி. நீங்க..

அவள்- தேவி..

அவன்- சரி தேவி. இனி நாம் நண்பர்கள்.

அவள்- என்னது நண்பர்களா..?

அவன்- ஆமா

அவள்- சாகறதுக்கு முன்னாடி இந்த நட்பு அவசியம்தானா..?

அவன்- வாழும்போதுதான் நல்ல நட்பு இல்லாம இருந்தேன்.சாகறதுக்கு முன்னமாச்சும்

எனக்கும் நல்ல தோழி இருந்தாங்கன்னு நிம்மதியா சாகலாமே..?

அவள்- உங்களுக்கு நண்பர்களே இல்லையா..? குடும்பம் எல்லாம்..?

அவன்- (சிரிப்பு) நண்பர்களா..? இருந்தாங்க இருந்தாங்க.. ஆனா இப்போ இல்ல.. ஒரே ஒரு மையொப்பம்தான் என் வாழ்க்கையையே திருப்பிடுச்சி.. அவசரம்னு கேட்டதால நானே முன்னிருந்து கடன் வாங்கிக் கொடுத்தேன்.. இப்போ அவனுங்க யாரையும் காணோம்.. கடன் கொடுத்த சீன தவுக்கே என்னை புடிச்சிகிட்டான்.. வாங்கின கடனுக்கும் வட்டிக்கும் வீடு கார் எல்லாம் கொடுத்தும் பத்தல.. என்னால என் குடும்பத்துக்கும் பிரச்சனை.. அதான் ஒரே வழின்னு இங்க வந்துட்டேன். நல்லவேலையா என் வீடு எங்க இருக்குன்னு தவுக்கேக்கு தெரியாது. அந்த ஒரு நிம்மதி போதும்.

அவள்- ஆனா உங்களைப்பாத்தா கடன்பட்டு நொந்தவர் மாதிரி தெரியலையே..?

அவன்- நம்முடைய பிரச்சனை அடுத்தவங்களுக்கு தெரிஞ்சி அவங்க கஷ்டப்படறத நான் விரும்பறது இல்லைங்க..இப்பகூட பாருங்க நான் வேளிநாட்டுக்கு வேலைக்கு போறேன்னுதான் வீட்டில் எல்லாம் நினைச்சிக்கிட்டு இருப்பாங்க.. இன்னையொட என் கதை முடிஞ்சிடும். இங்கிருந்து விழுந்த கண்டுபிடிக்கறது கஷ்டம்.யாருக்கும் சந்தேகமும் வராது. ஆமா என் கதையைக் கேக்கறிங்க உங்க கதை என்ன..? செல்லமாட்டிங்கலா..?

அவள்- என் கதை இருக்கட்டும். நீங்க எவ்வளவு பணம் தந்தா உங்க பிரச்சனை தீரும்..?

அவன்- ஏங்க கொடுக்கப்போறிங்கலா.. நீங்களும்தானே சாகப்போறிங்க.?

அவள்- இந்தாங்க இது என்னோட செக் புக் இதில் உங்களுக்கு தேவையான பணத்தை எழுதிக்கோங்க..

அவன்- என்னங்க நீங்க அவ்வளவு பெரிய ஆளா..

அவள்- பணம் என்னங்க பணம்.. மனசனுக்கு உடம்பு ஆரொக்கியம்தானே முக்கியம். என் கதையைக் கேட்டிங்கலே சொல்லவா..? எனக்கு புற்று நோய். எப்படியும் சாகப்போறேன். எதுக்கு நோயால நொந்து சாகனும் அதான் நானே சாகலாம்னு முடிவு எடுத்துட்டு வந்துட்டேன்.

அவன்- என்னங்க எவ்வளவோ பணம் இருக்கும் உங்களுக்கு, இதை குணப்படுத்தலாமே.?

அவள்- அப்படியா.. எவ்வளவு பணம் கொடுத்தா இந்த நோயில் இருந்து நான் தப்பிக்கலாம் சொல்லுங்க.. ஒரே ஒரு மருந்தைச் ஒல்லுங்களேன்.. எல்லாம் பார்த்தாச்சிங்க

அவன்- நான் வேணும்னா ஒரு மருந்து சொல்லவா..?

அவள்- ம்

அவன்- நம்பிக்கை

அவள்- என்கிட்ட இல்லாத நம்பிக்கையா..?

அவன்- நம்பிக்கை என்பது இருக்கிறது இல்லைங்க.. நாமா உருவாக்கறது. நாம் உருவாக்கினதை எந்த ஒரு சந்தேகம் இல்லாமான் முழுமையா நம்பனும்.

அவள்- ஆனா..இந்த நோயால நான் சாகறது உறுதிதானே..?

அவன்- இல்லைங்க அந்த நோய் இல்லாட்டியும் மரணம் உறுதிதான். நோயை நம்பற நீங்க உங்களை நம்முங்களேன். வாழப்போற கொஞ்ச நாளிலாவது உங்களால யாருக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து நிம்மதி அடைங்க..

அவள்- இவ்வளவு பேசற நீங்களும் தற்கொலைக்குத்தானே வந்திருக்கிங்க..?

அவன்- என் கதை வேறங்க.. உங்களைப்போல நோய் இருந்திருந்தா பரவாலைங்க..என்னால சமாளிச்சிருக முடியும்.. ஆனா இங்க இருக்கற நிலமை வேற.. பணத்தை கட்டிமுடிக்கலைனா என் குடும்பத்துக்கும் எனக்கும் ஏற்படப்போறதை நெனைச்சா ரொம்ப பயமா இருக்கு.. அதான் தினம் பேப்பர்ல பாக்கறமே.. வெட்டி கொன்னாங்க சுட்டுக் கொன்னாங்கன்னு. நானும் அப்படி சாக விரும்பலைங்க… நான் எங்கயோ இருக்கேன்ற நம்பிக்கையை வீட்டில் உள்ளவங்ககிட்ட கொத்தாலே போதும் அவங்க கொஞ்சமாவதும் நிம்மதியா இருப்பாங்க..

அவள்- அதைவிடுங்க; இனி அந்த பிரச்சனை இல்ல. இந்தா இந்த செக் உங்க வாழ்க்கையை மாற்றும்.. உங்க பிரச்சனைக்கு என்கிட்ட தீர்வு இருக்கு

அவன்- ஆமாங்க அதே போல உங்களுக்கு தேவை நம்பிக்கையான வார்த்தைகள். ஆக உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு என்கிட்ட இருக்கு.

அவள்- ஆச்சர்யா இருக்கே… உங்க பிரச்சனைக்கு என்கிட்ட தீர்வும் என் பிரச்சனைக்கு உங்ககிட்டயும் தீர்வும் இருக்கிறதை பார்த்தா..

அவன்- சாக வந்த நாம ஏன் இங்கயே நம்முடைய புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூடாது..

அவள்- எனக்கும் அப்படித்தான் தோணுது ஆனா… எனக்கு புற்றுநோய்…

அவன்- அதனால என்னங்க இருக்கிற கொஞ்ச நாளிலாவது நான் உங்களை சந்தோஷமா வச்சிருந்தா அதுவே எனக்கு போதும்.. ஆனா…ஒன்னு.. கேட்கவா..?

அவள்- ம். கேளுங்க..

அவன்- உங்களுக்கு தங்கச்சி இருக்கா..?

அவள்- அடப்பாவி.. அதுக்கு நீ சாகலாம்

அவன் – நான் மட்டுமா நீங்களும் வாங்க..

அவள் – ஆ…!

அவன் – ஆ……!

அவள்- மலை ,பனியுடன் காற்று, பரவசமான குருவிங்க சத்தம்…. இதையெல்லாம் நாளைக்கு நான் பாக்கபோறதில்லை ஆனா.. அதே சமயம் என் பிரச்சனை எதுவும் என்னுடன் இருக்காது. கடைசி உறக்கம்; இதுதான் எனக்கு….

அவன்- ஹெலோ…

அவள்- (மௌனம்)

அவன்- ஹெலோ உங்களைத்தாங்க..?

அவள்- யாருங்க நீங்க ..? எதுக்கு என்னைத் தொல்லைப்படுத்தறிங்க..?

அவன்- அயயோ.. தொல்லையெல்லாம் இல்லைங்க.. தனியா சாகலாம்னுதான் வந்தேன்;துணையா நீங்களும் கீழே குதிக்கப்போறிங்கன்னு நெனைக்கறேன் அதான். சாகறதுக்கு முன்னமே பேரை தெரிஞ்சிக்கிடா செத்த பிறகு கூப்ட வசதியா இருக்குமே…..

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *