கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 11, 2022
பார்வையிட்டோர்: 7,082 
 

ரொம்ப ஆசப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்ட கல்யாண ராத்திரி விடித்து, மழை பெய்திருந்தது இரவெல்லாம். புசு புசு என்று சிணுக்கு மழை பெய்து கொண்டிருந்தது. சாவித்திரிக்கு தெரியும் ஒவ்வொரு மழைத் துளியாக எண்ணிக் கொண்டுதான் படுத்துக்கிடந்தாள். கல்யாணம் எல்லாமே கொஞ்சம் அவசரக்கோலத்தில் நடந்தது. கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பூக்களின் வாசனை மந்திர புகை ஹோமப்புகைபெல்லாம் எழுப்பிய கதகதப்பு கூட்டத்தின் நெரிசல் சம்பந்திகளின் மோதல்கள் குழந்தைகளின் கூச்சல்கள், மனதில் இனம் தெரியாத திகில் இவர்களிடையே உட்காந்திருந்தான் பார்த்தசாரதி. அவனுக்கு சாவித்திரி கிடைப்பாளென்று சந்தேகத்தினிடையே போராடிப் பெற்றிருக்கிறான். அவளை? சந்தேகம்தான் இப்பவும்! –

நிச்சயம் ஆனபோதிலிருந்தே அவளை உடனேயே தூக்கிக்கொண்டு ஓடிவந்துவிடவேண்டும் என்று இருந்தது பார்த்தனுக்கு! ஆனால் அன்றிலிருந்தே நகை போடுவது விஷயமாக சண்டைகள் ஆரம்பம் ஆகிவிட்டது. அப்பொழுதிலிருந்தே வேறு பெண் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். அவளிடம் அப்படி என்ன இருந்தது. அவளைப் பார்த்த தினத்திற்கு முந்தின தினம், “சாவித்திரி தெரியுமாடா?” யாராவது கேட்டிருந்தால் பார்த்தன் சிரித்திருப்பான். அன்றைக்கு அறிமுகமாகி அன்னைக்கே இவ்வளவு நெருக்கமாகிவிட்ட சாவித்திரி என்னதான் செய்துவிட்டாள்!

சின்னஞ்சிறு மெல்லிய பெண் லேசாக சுருண்ட தலைமுடி ஒற்றைக்கல் மூக்குத்தி! அதிகம் நகை ஏதும் இல்லாதது போல ஆனால் மங்களாம்பிகை போல சர்வ அலங்காரம் ஏற்றது போல அம்பிகையாக காட்சியளித்தாள், தினமும் பரிசுத்தமான ஓவியம் ஒன்று மனதிலே எழுந்து தின்றது. எப்படி என்று பார்த்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது! மெல்லிய வெள்ளை நிற பொன்னிறத்தால் கருப்பு திரைச்சீலையில் உயிராக எழும்பினான் சாவித்திரி.

பார்த்தன் அதற்குப் பின் ஓய்வு நேரங்களில் எல்லாம் ஒலியத்தினுடையே பேசிக்கொண்டிருந்தான்.

அம்மா கூட கேட்டாள். இப்படியொரு பைத்தியம் இருப்பானா, அந்தப் பொண்ணப்போய் பார்த்ததிலிருந்து, மோட்டுவளையைப் பாத்துக்கிட்டே உக்காந்திருக்காள். அப்படியென்னா ஓவியம்! ஊர்ல பொண்ணா இல்லை? ஒரே ஒரு பொண்ணுதான் பார்த்திருக்கான். அதுக்குள்ள அவன்தான் வேணுங்கிறான், பொண்ணு பாத்து பாத்து பத்து ஜோடி செருப்பு தேயணும்பாங்க இவன் என்னாடான்னா இவனுக்கு நாங்கதா சொல்லிக் கொடுக்கனும், இவதாண்ட பொண்ணு கட்டுடான்னு சொல்லிக்கொடுக்கனும். அப்பக்கூட பந்தகால்ல கட்டுனாலும் கட்டுவான் என்று புலம்பிக்கொண்டே, வேலை செய்து கொண்டிருந்தாள்.

அவளுக்கென்ன நிறையக்காசு, நிறைய நகை, நிறைய சீர்சினத்தியென்றெல்லாம் நிறைய வேண்டும்.

அவனுக்கோ சாவித்திரி மட்டும் போதும், சாவித்திரியினுடைய அப்பா பார்த்தனை பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டார். பொண்ணு வந்துட்டுது மாப்பிள பொண்ண பாக்காம மோட்டு வளையையா பாத்துட்டுயிருப்பாங்க நெஜமாகவே அவள் சாவித்திரியை பார்க்கவில்லை. சாவித்திரியைப் பார்க்காமல் இருக்கவும் இல்லெ. அதிக தரம் திரும்பி பார்க்கவும் அவசியம் இல்லாதபடி அவள்தான் ஓவியமாக இருந்தானே நெஞ்சுக்குள் இப்படி புகுந்து கொண்டது ஆச்சரியம்தான்.

ஒரு பார்வைதான், ஒரு துளி நெருப்பு மாதிரிப் பற்றிக்கொண்டது. ஆறுமாத காலம் கொடுக்கல் வாங்கல் சீர்சினத்தி டவுரி மற்றும் நகைகள் விஷயத்திலெல்லாம் சின்ன சின்ன பிணக்குகள் கல்யாணத்தை தடை செய்து கொண்டிருந்தன. வேறு பெண்களை பெண்பார்க்க அப்பாவும், அம்மாவுமாய் இழுத்துக்கொண்டு போகவேண்டியிருந்தது. போன இடத்திலெல்லாம், ஏதாவது ஒரு கோளாறு பண்ணிக்கொண்டு திரும்பி வந்தான் பார்த்தன். பார்த்தனின் நடவடிக்கைகள் அப்பாவுக்கு அறவே பிடிக்கவேயில்லை. சாவித்திரிதான் என்று சொல்ல பார்த்தனுக்கு திராணியில்லை. அது என்னவோ வந்து நுழைந்ததும் அப்படியே ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டாள். அதை வெளியில் சொல்ல அவனால் முடியவில்லை. ஆனாலும் அமைதியாக எதிர்த்து மறுத்துப் போராடிக் கொண்டிருந்தான் பார்த்தன்! தனது எதிர்ப்பை புரிந்து கொள்வார்களென்று அவனுக்கு தெரியாது.

நண்பர்களெல்லாம் என்னடா இது இப்படி வீட்டுக்குள்ளே முடங்கிகிடக்கிறியாம் என்று கோட்டா பண்ணினார்கள், அவனுக்கு சாவித்திரியை கூட்டிக்கொண்டு வந்து வீட்டுக்குள் ஓடிப்போய்விடவேண்டும். கதவை சாத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

அப்பா பெரிய நகைக்கடை வைத்திருந்தார். ஏராளமான சொத்து இருந்தது. கடைத்தெருவிலேயே வெள்ளிப் பாத்திரங்கள் விற்பனைக்கும். ஈயப்பாத்திரங்கள் மற்றும் சரிகை வியாபாரத்திற்கும் வேறு கடைகள். லாபம் 90% என்பதால் எல்லாரும் பார்க்க பார்க்க மேவேறிக் கொண்டிருந்த குடும்பம் பார்த்தனுடையது. சாவித்திரி மட்டும்தான் இதையெல்லாம் அவனைக் கட்டிக்கொண்டு ஆளப்போகிறாளென்பது ஆச்சரியமான சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் கோடிக்கணக்கில் சொத்தும் இருந்தும் சாவித்திரியின் சொத்தையும் முழுக்க கேட்டார். பார்ந்தனின் அப்பா கொஞ்சம் கூட யோசனையில்லாமல் சாவித்திரியின் சொத்து முழுவதையுமே அள்ளிக் கொள்ளும் வெறியோடு வரதட்சணை அப்புறம் சீர்வரிசை, அன்பளிப்பு என்றெல்லாம் அடுக்கிக்கொண்டேயிருந்தார்கள்.

அம்மாவும், அப்பாவும் பார்த்தனை தவிர அவர்களுக்கு வேறுபிள்ளைகள் இருந்தாலாவது. அவர்கள் பேரைச் சொல்லியாவது வசூலிக்கலாம். நீண்ட பணப்போர் நடந்தது. பார்த்தனின் அப்பாதான் ஜெயித்தார். நிச்சியதார்த்தமும் தடந்து ரொக்க பணமாக முப்பது இலட்ச ரூபாய் கொடுத்தபின்தான் கல்யாணம் உறுதியாயிற்று நகையும் வயிரமுமாய் ஒன்றைரைக்கோடி கல்யாணச் செலவுவிருந்து, கச்சேரி பத்து லட்சத்துக்கு மேலே எல்லாம். இதுபோக ஊர்வலம், பேண்டு செட்டு, நடனம், நாட்டியம் வாணவேடிக்கை பந்தல் செலவெல்லாம் சாவித்தரி அப்பா தலைமேலே.

சாவித்திரி வீடும் அப்படி ஒன்றும் அல்பை சல்பையான வீடு அல்ல. திருச்சியில் மலைக்கோட்டை, சராப்மெர்சண்ட் வையிரம் வியாபாரம் வைத்திருந்தார். ஒரு போட்டி, ஒரே மகள் ஒரு ஆயிசு சம்பாத்தியம் எல்லாற்றையும் வைத்து ஒரு கல்யாண வாணம் விட்டுப்பார்க்க வேண்டும். ஆசைக்கு ஒரு மகள் ஆசைக்கு ஒரு கல்யாணம். ஆசைக்கு ஒரு விளையாட்டு. பார்த்தசாரதிக்கு பற்றிக்கொண்டு வந்தது. அம்மா மேலும், அப்பா மேலும் ஏகப்பட்ட ஆத்திரம் ஒரு மயிரிழை பிசகினால் கூட சாவித்திரி கிடைக்காமல் போய்விடுவாள். எங்கேயாவது பணவிஷயத்தில் ஒரு கோளாறு வந்தால் கூட நின்ற இடத்தில் கல்யாணம் நின்றுவிடும் என்று பார்த்தனுக்கு தெரியும்.

காசு ஒன்றுதான் எல்லாவற்றிற்க்கும் மூலம் என்று பார்த்தனுக்கு தெரியும். அதனாலேயே பயந்தான், அவனுக்கு சாவித்திரிதான் பயம் கல்யாணம் முடியவேண்டும். இந்த பணங்காசெல்லாம் வேண்டாம். நகையெல்லாம் மூட்டையாககட்டி அம்மாவிடம் கொடுத்துவிட வேண்டும். ரொக்க பணத்தையும் அப்பாவிடம் கொடுத்துவிடவேண்டும். இரண்டு பாலிஸ்டர் புடவையுடன் இரண்டு பேண்ட் சட்டையுடனும் சாவித்திரியை கையில் பிடித்துக்கொண்டு கண்காணாத இடத்துக்கு பணத்தை தேடாத வெறும் சதையும் உயிருமான மனிதர்கள் இருக்கிற புல்வெளிக்கு போய்விடவேண்டும். அருவிக்கரையோரம் பாறைகளிடையே தண்ணீர் சலசலத்து ஓடும் தண்ணீர் கிடையில் கூழாங்கல் வைரத்தைவிட வீரம் மிகுந்த ஒளிவீசும் கண்ணாடி போன்ற தண்ணீர்க்கடியில் பல நிறத்தில் செடிகள் அலைந்து பூக்கும் இடையில் ஒரு பாறையில் வட்டம் சுற்றிய மேடையில் சாவித்திரி இரண்டு கல் அடுக்கு வைத்து சமைப்பாள், லேசாக மழைச்சாரால் வீசும். நனைந்தபடியே பார்த்தன் சாரல் இன்பத்தில் அவளுடன் அமர்ந்து சாப்பிடுவான். பறந்து செல்லும் பறவைகள் மலர்களை உதிர்த்து விட்டு செல்லும், மாலை மயங்கும்போது சாவித்திரியின் கலவரத்துக்குள் பார்த்தான். அணைத்துக்கொண்டு தூக்கிப்போனான். இரவுகள் பகல்களாய் சாவித்திரிக்கும் பார்த்தனுக்கு விடிந்து போவதனால், பகல் நேரங்களில் ஒருவித மயக்கத்துடனேதாள் அவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் கவிந்து கொண்டிருப்பார்கள். ஒரு ஒரு மலையிடுக்கில் பார்த்தன் கையினாலேயே கட்டி கரையேற்றிய மறைவுக்குள் காட்டு புல்கள் மெத்தையிட்ட படுக்கையில் பகலின் கொடுமையான வெயில் நேரத்தில் இருவரும் ஆழ்ந்து உறங்கிப்போவார்கள். இருட்டும் போது விழித்துக் கொள்வார்கள். சாவித்திரி நன்றாக பாடுவாள் நிலவு வீசும் இரவு வேளைகளில் அவர்கள் இருவரும் பூக்கள் படர்ந்த அருவிக்கரையோரம் நாணல் மெத்தையில் கிறுகிறுத்துக் கிடப்பார்கள். இப்படி ஒரு கனவை அவன் அப்பாவின் நகைக்கடையில் கல்லாப் பெட்டியின் அருகே உட்கார்ந்து கண்டு கொண்டிருப்பது. சாவித்திரியைப் பெண்ணாக பார்த்தபின்தான்.

இப்பொழுது மழை பூவாகக் கொட்டி சந்திரனையும் சூரியனையும் கழுவிவிட்ட காலை நேரம் கனவுகளுக்கு மேல் முதல் இரவு முழுசும் ஒவ்வொரு துளி மழையையும் எண்ணிக்கொண்டே கிடந்தான். அவளுடைய உடம்பு முழுகம் நிரம்பிபோனான் நிரம்பிவழிந்தான் இரவு முழுகமே இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பேச்சுக்கு அவசியமில்லை. பேச்சு இல்லாத மவுனம் சோ என்ற பெருமழையாக இருவருக்கும் ஒரே மொழியாய் பொழிந்தது. அவன் அணைப்பில் ஒரு பூக்குடலைபோல் அவன் தந்தாள். ஒவ்வொரு துளியாய் இன்பம் மழையாய் அவர்களுக்குள் இறங்கியது. ஒவ்வொரு முறை அலை வீசும்போதும், திடுக்கிட்டு விழித்து சாவித்திரி என்பான் பார்த்தன் “ம்” என்று மட்டும் அவளிடமிருந்து பதில் வரும். அப்புறம் மவுனப் பெருங்கடலிலிருந்து மூழ்கிவிடுவார்கள். இரண்டுபேரும் விடியும் போது இருவருமே மயங்கிடந்தார்கள். அவன் எழுந்தபோது ஜன்னல் ஓரமாக சென்று வெளியே எட்டிப் பார்த்தான். மழை அப்போதும் லேசாக தூறிக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் சூரியனும் மழையோடயே வெளியே வர்ற மாதிரி சிவப்பா வானமெல்லாம் மழையை கிழிச்சுக்கிட்டு ஒளிக் கிரணங்கள் தலைகாட்டிக் கொண்டிருந்தன. திரும்பி பார்த்தபோது அவளை காணோம். எங்கு பார்த்தாலும் மிச்சம் இருந்தது. படுக்கையெல்லாம் சரங்கள் உதிர்ந்துகிடந்தன. சந்தன பேலா ஒன்று மேசையில் ஓடி கவுந்து கிடந்தது. அவளை இப்போது நெஞ்சுக்குள்ளயிருந்து வெளியே கொண்டு வந்துவிட்ட மாதிரியிருந்தது. அவள் புடவையின் சரிகைப்பாவு ஓரம் அவன் கால்களை அறுத்துயிருந்தது. இப்போதும் லேசாக கணுக்கால்களில் எரிச்சல் இருந்தது. ஏராளமான நகைகளை அணிந்திருந்தாள். ஆனாலும் ஒவ்வொன்றாக கழட்டி அவைகளை இருட்டில் வைத்திருந்தபோதும் எல்லா நகைகளையும் கழட்ட முடியவில்லை. அவனால்.

இரவு முழுகம் முத்து மாலை ஒன்று அவன் மார்பில் உருண்டு உருண்டும் நகங்கி புரண்டது. இப்போதும் ஞாபகம் வருகிறது. காதுகளின் மடல்களை அவள் அணிந்திருந்த எதோ புது நகைகள் வைரத்தோடு அவன் கன்னங்களில் குத்தி கீறியிருந்தன. பெரிய காயம் இல்லை என்றாலும் வைர பேசரி! அவன் மூக்கில் இழுத்தகோடு இப்போதும் இன்பமாகத்தான் இருந்தது. அமைதியாக உள்ளே வந்து கொண்டிருந்த சாவித்திரியை கண்ணெடுக்காமல் பார்த்து ரசித்தான் பார்த்தசாரதி. அவள் என்ன பேசுகிறாள், என்று அவனும், அவன் என்ன பேசுகிறான் என்று அவளும் பிரமித்திருந்தார்கள். கையில் வெள்ளிக்கோப்பையில் காபி மெல்ல ஆவிவிட்டது. காப்பியை கையில் வாங்கிக் கொண்டான், மறு கையால் அவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“ஆ” என்றாள். அவள் ஒட்டியானம் வயிற்றில் கீறிவிட்டதாம். குளித்து முழுகி கலவங்கள் பூசி ஈரத்தலைமுடியுடன் வந்திருந்தாலும்கூட கொஞ்சமாக ஒரு பத்து இலட்ச ரூபாய்க்கு வைர நகைகள் சிம்பிளாக அவன் உடம்பை தழுவிக் கொண்டிருந்தன. அங்கங்கே அவன் வளைத்த வளைப்புக்கும், இழுத்த இழுப்புக்கும் சில நிமிஷங்களிலேயே வையிரமும், தங்கமுமாய் அவள் உடம்பெல்லாம் வலிக்க குத்தியது. அவனுக்கு தெரிந்தது.

பேச்சற்ற மவுனத்தில் இளசுகள் இரண்டும் முரட்டுத்தனத்தில் சொடுங்கின கீழேயிருந்து கூப்பாடு கேட்டன.

“அவன குளிக்கப் போச் சொல்லலையா”

“குளிக்க போங்க”

“போகமாட்டேன்” “குளிக்கபோங்கங்கிரல்ல”

“நீ பேசுற நீ என்னோட பேசுற முதல் வார்த்தையே இதுதானா”

“குளிக்க..”

மீண்டும் ஒரு முறுக்கு பிடி…

“நா குளிச்சிட்டேன் நீங்க குளிக்கப் போங்க”

“தா ரொம்ப அழுக்காயிருக்கேனா”

“ஆமா ஆ – மா”

“நிசமா”

“போய்க்குளிங்க ஒரே வியர்வை! இட்லி ஆறுது”

“சாவித்திரி இன்னம் எதுக்கடி இந்த நகையெல்லாம் பணம், காக எல்லாம் மதிப்பா மனுசமேல தொங்கிக்கிட்டேயிருக்கணுமா, எனக்கு நீ இருந்தா போதுண்டி சாவித்திரி ஒரு நூல்புடவை. ஒரு முழம் பூ இது போதாதா அம்மனுக்கு பூ சாத்திப்பாந்தா போதாதா

“என்ன ஔர்ரீங்க! நூல் புடவையாவுது, பூவாவது ஓங்கப்பாவும், அம்மாவும் ஒவ்வொரு வேளைக்கும் மாட்டி, மாட்டி கழட்டிவிடுராங்க தெரியுமா! நாத்தினாருவளும், கொழுந்தியாலுவளும், இதுதா பொண்னான்னு கேட்டுகிட்டு வந்து என்னோட நகையைத்தான். புடிச்சு புடிச்சு பாக்கிறாளுவோ உங்களுக்கென்ன மாப்பிள்ளையாச்சே மணவறையில் உட்கார்ந்தப்பக்கூட கையில் பத்து பவுன்ல ஒரு மகரச் சங்கிலி போட்டிருந்தீங்க, யாரு பாக்கப்போறா ஆனா ஏங்கத் அப்படியா? ஒவ்வொருத்தரும் பொண்ணு எத்தின பவுனு நகைப் போட்டிருக்கு வைரம் எத்தன லெட்சத்துக்கு போட்டிருக்கு அப்படின்னு கையாலெ தூக்கி தூக்கி பாப்பாருவ” – என்று ஆக்குரோஷமாக கேட்டாள் சாவித்திரி!

பார்த்தன் அவள் முதற்கோபத்தின் முதற்காலை மிகக் கஷ்டத்துடன் வாங்கிக் கொண்டான். அவன் அருவிக்கரையோரம் மலைப்பாறைகள் பிளந்து விழுந்தன. மலைக்குடில் அவளே கட்டிய அமைதியான பிளவியிருந்து பள்ளத்தாக்கில் விழுந்தன. பூக்களும் புல்வெளிகளும் சிதறுண்டு போயின.

“குளிக்கபோங்க அம்மா கூப்டறாங்க” “சாவித்திரி இதையெல்லாம் உட்டுட்டு எங்கயாவுது மலையடிவாரமா பாத்து நீயும் நானும் மட்டுமா போயிடப்புடாதா”

“ஏமெப்பா நாம் மாட்டேன்ப்பா ஒன்றரைக்கோடி ரூபாய் செலவு பண்ணி செலவு பண்ணி கட்டிக்கிட்டேன். எங்கப்பா கடையலித்து, உருப்படிவித்து, சொத்து பத்து வித்து, பண்ணின கல்யாணம் ஏன் எங்காவது ஓடனும்,

ஒங்களுக்கென்ன பைத்தியமா இந்தாங்க துண்டு, சோப்பு போயி குளிச்சிட்டுவாங்க.”

கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் ஒரே புல்வெளி எல்லாவிதமாகவும் கலர் கலரா பூ வானம் விளிம்பு வரைக்கும். நீண்டு கிடக்கிற மலைச்சரிவு கண்ணுக்கெட்டின தூரம் மேகங்கள் மலைச்சரிவின் மீது படர்ந்து கிடந்தன மேகத்துக்குள் புகுந்து அலையலாம். சூடான புகை வெள்ளையான பஞ்சு பொதிகள் போல், அடுக்கிவரும் மேகச் சுனைகள், மழைச்சரிவுகளிலிருந்து கீழே கூடத்தில் சரிந்து கொண்டே போகும். அப்புறம் யாரும் காப்பாற்ற முடியாது. வேகம் வேகமாக சரிந்து கொண்டே போகிறாள் பார்த்தசாரதி கீழே கூடத்தில் இறங்கிப் போகிறான். மாடிப்படியிலிருந்து கலையாத தோரணங்கள், மணவீட்டு அலங்காரங்கள், வாடிய மலர் மாலைகள், ஓடிவளைய வரும் குழந்தைகள் இன்னம் ஊருக்கு திரும்பாத சொந்தக்காரர்கள், நண்பர்கள் பந்துக்கள் கூட்டம் அவன் பார்த்தபின் கால்கள் பூமியில் படிந்தன. எல்லோரது கேலிக்கிடையிலும் நேராக கொல்லைப்புறம் சென்றான். ஆவிப்பறக்கும் வெத்தீர் அந்த மழைநோத்துக்கு இதமாகத்தான் இருக்கும். ஆனால் அங்கே இருந்தது வெந்நீரல்ல. பாசிபடிந்த குளியல் அறை சிறிய குட்டை, துண்டு ஒன்று கொடியில் தொங்கியது. மச்சினிப்பெண் ஒருத்தி சாரதார் என்ன அத்தான் குளிக்கிறீங்களா முதுகு தேய்க்க அக்கா வரமாட்டா, குளியல் அறையிலேயே பாறை ஒன்று இருக்கும் அதில் முதுகு தேச்சுக்கங்கயென்று சொல்லிவிட்டு கணிரென்று சிரித்தாள் குளிக்கும் வெகுநேரம் தண்ணீரை அலம்பிக் கொண்டே நின்றாள் பார்த்தன்!

ஒன்றரைக்கோடி செலவு செய்த கல்யாணம் முதுகு தேய்க்க பொண்டாட்டி வரமாட்டாள். எருமைமாதிரி பாறையில் தேய்த்துக் கொள்ள வேண்டியதுதான்… சோப்புப் பெட்டியைத் திறந்து பார்த்தான் சோப்புப் பெட்டிக்குள் ஒரு லைபாய் சோப்பு நாலு துண்டமாக வெட்டப்பட்டு ஒரு துண்டு அவனைப் பார்த்து விளித்தது. அவனுக்கு உடம்பு தண்ணீரிலேயே நிலைக்கவில்லை. குளிப்பது கஷ்டமாயிருந்தது. குளித்துவிட்டு வெளியில் இறங்காமல் உடலை நனைத்துக் கொண்டு இறங்கியபோது இன்னொரு மைத்துனி நர்மதா என்று பெயர், அவனைப் பார்த்து சீக்கிரம் சாப்பிட போங்க நாங்கல்லாம் சாப்பிட்டாச்சு என்ன ஒரு அண்டா தண்ணீரையுமா குளிச்சு தீத்துப்புட்டிங்க. இந்த தண்ணி இறக்கிறதுக்கு ஒரு யூனிட் சுரண்டாவது ஆயிருக்கும் மோட்டாருக்கு. அவன் வயது பெண்களுக்கு இருக்கக் கூடிய கனவுகள் ஏதும் இல்லை . திடமான பார்வை சுரண்ட் வீணாகுதே என்ற கவலை காகபோர்சே என்கிற ஆதங்கம் பார்த்தனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. மாடிக்கு வந்தான் மறுபடியும் விஷத்தை வாரி இறைத்தாள் சாவித்திரி,

“குளிச்சிட்டிங்களா அய்யய்யோ சோப்புப் பெட்டிய எடுத்துட்டு வல்லயா தாயுங்க சோப்ப எடுத்திருமே சோப்பு திருடிங்க சாஸ்தி.”

“நாயிங்களா யார் சொல்ற இருக்கிறது ஒந் தங்கச்சீங்க, ஒங்க அம்மா, ஒங்க அப்பா ஒரு முழு சோப்பு ஒவ்வொருத்தரும் வச்சுக்க கூடாதா அது என்ன கஞ்சத்தனம்.”

“என்னாது கஞ்சத்தனமா சிக்கனமுன்னு சொல்லுங்க. இல்லென்னா ஒங்க மாதிரி ஒரு மாப்பிள்ளை கேட்டார்ன்னு இருபது லட்ச ரூபாய் கல்யாணச் செலவு பண்ண முடியுமா கருமித்தனன்னா என்னான்னு ஒங்களுக்குத் தெரியுமா.”

வெள்ளை வெளேரென்று வானத்தில் என்ன சுதந்திரமாய் ஒரு கூட்டம் கொக்குகள் பறக்கின்றன. வாழ்க்கை முழுசும் நீ இந்த ராட்ஷசியுடன் ஒவ்வொன்றையும் கணக்குப் பார்த்து கூட்டிக் கழித்து வாழ வேண்டும் என்று நினைத்த போது நெஞ்சம் பதைத்தது. பெரிய சோப்பு பெட்டி அதற்குள் கிடந்தான் பார்த்தசாரதி திமுதிமுவென்று சோப்பு நுரை பொங்குகிறது. கண்ணை கரிக்குது. ஒரு சின்ன சோப்புத் துண்டு அதிலிருந்து இவ்வளவு நுரையா கண்ணைக் கரிக்கிறது. அவனுக்கு போதும், போதும் என்று கத்துகிறான். “பத்து வருஷத்துக்கு இந்த சோப்பு துண்டு ஒங்களுக்கு போதுமே வேற சோப்பு வாங்காதீங்க”

கீழே இறங்கி போனான் பார்த்தசாரதி என்ன மாப்பிள்ளை ஆயிரம் ரூபாய்க்கு போய் நீங்க கட்டியிருக்க பட்டு வேட்டிய வாங்கி இருக்கீங்க ஒங்க மச்சான் கிட்ட சொல்லியிருந்தீங்கின்னா எட்டாயிரம் ரூபாயில் ரெட்டத்தட்டு சரிகை வேட்டி கொண்டு வந்திருப்பானே. ஒரு பேஷனாகூட எடுத்துயிருக்கலாம்.” “எனக்கு ஒத்தக்கம்பி சரிகை ஓடினால் போதும். நூல் வேட்டி சாதாரணமான டெரிகாட்டன், பேண்ட் இதுதான் போடுவேன். கட்டுவேன், எட்டாயிரம், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிற டபுள்பேட் தங்க சரிகை வேட்டி -ஆடம்பரமா இருக்குமுன்னாகூட கட்டிக்க ரொம்ப சிரமமாயிருக்கும், வேத்துவடியும். திகுதிகுன்னு கம்பி பாகு காலை அறுக்கும்.

“ஹோ… ஹோ… ஹோ” என்று மாப்பிள்ளையின் பேச்சைக் கேட்டு மாமனாரும் மருமகள்களும், மைத்துனர்களும், சிரித்தார்கள்

மாப்பிள்ளைக்கு காசு பணம் வேண்டாம். ஆடம்பரம் வேண்டாம். சொல்லப்போனா மாப்பிள்ளைக்கு அவரே வேண்டாம் என்றார் மாமா சாப்பாட்டு மேஜையின்மேல் அலங்காரமா வெள்ளி பாத்திரங்கள், ஐம்பொன் சிலைகள் எல்லாம் இருந்தன. ஒரு பரிசாரகள் கையில் இந்த பாத்திரத்திலிருந்து மல்லிகைப்பூ போன்ற இட்லிகளை அவன் கையில் வைத்து சட்னியை ஊற்றினான். உள்ளேயிருந்து கையில் கிண்ணத்தோடு வந்தாள் சாவித்திரி இட்லியை விரல்களால் தொட்டபோது சில்லிட்டது. அதிர்ந்து போனான், பார்த்தசாரதி கையிலிருந்து பாத்திரத்திலிருந்து வெங்காய சட்டினியை கரண்டியால் எடுத்து வைத்தபடி அவன் முகத்தைப் பாத்தது “என்னது இப்படி முழிக்கிறீங்க சாப்பிடலையா” சட்டினிகள் இரண்டும் ஊசல் ஊசிள. அவைகளும் சில்லிட்டிருந்தன, எதிரே மைத்துனர்கள், மருமகன்கள் உட்கார்ந்து அதே ஐஸ் இட்டிலிகளையும், ஊசிப்போன சட்டினிகளையும் ருசித்து சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள் அத்தை வெள்ளி தட்டில் பலகாரம் பரிமாறி கொண்டிருந்தார்கள். கல்யாணத்துக்காக செய்திருந்த பலகாரங்கள்தான் நிஜமாகவே அவைகளும் காரல் வீசின. முறிந்துபோன

டால்டாவின் காரல், கசடு வாசனை. ஆனால் அவர்கள் எல்லோரும் குசித்து சாப்பிட்டுக் கொண்டயிருந்தார்கள். மாப்பிள்ளை முறுக்கு ஏதும் காட்டாமல் அவைகளை பார்த்தசாரதியினால் சாப்பிட முடியவில்லை. “என்னங்க என்னாச்சு என்னா வேறு சாப்டலையா” “பசியில்ல ருசியும் இல்லை ” “பலகாரம் செய்ய சமையல்காரனுக்கு கூலி மட்டும் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல அப்பா கொடுத்திருக்காங்க தெரியுமா எல்லாம் நெய்ல செஞ்சது.”

அப்படியே எழுந்து கைய கழுவிவிட்டு மாடிக்கு வந்தான் பார்த்தன் அடி சாவித்திரி உன்னை எவ்வளவு பரிசுத்தமான களங்கம் இல்லாத ஒன்றும் தெரியாத பெண்ணொன்று பெருமையோடு வந்தேன். இங்கு வந்து உன்னையும் உன்னைச்சுற்றிய இன மனங்களையும் பார்த்த பின்னால் எத்தனை ஏமாற்றம் எல்லாம் ரூபாய் பைசா எனக்கு வைத்த விலையில் நான் விற்பனையாகிப் போனேன். சாவித்திரி மட்டும் போதுமென்று புலம்பிக் கொண்டியிருந்ததெல்லாம் என்னாயிற்று.

“அய்யய்யே இங்க இருந்த வெற்றிலை தட்ட எங்க வச்சிங்க.. “ராத்திரியே இரண்டு மூன்று தடவை போட்டேனா எனக்கு தெரியாதா வெற்றிலையெல்லாம் நானேல்ல கொண்டு வந்தேன். எல்லாம் கற்பூர வெற்றிலை. ஏன் நீங்க வெற்றிலை வாங்கலையா”

அய்யய்யே இரண்டு கவுளி இருந்திருக்கும் போலியிருக்கே எல்லாத்தையும் மாடு மாறி மின்னுட்டாங்மிச்சமாகுமேன்னு நாங்க வெற்றிலையே வாங்கல. மீண்டும் மீண்டும் மழைச்சாரலில் நிற்கிறான் பார்த்தன் இப்பொழுது அருவியின் அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறான். நேராக்கூட அல்ல. கலைகனாக சாவித்திரி தன் கையிலிருந்த சவுக்கை சொடுக்கிக் கொண்டேயிருந்தாள். பகல் வேளைகளில் கூட அவனை எங்கும் விடாது துரத்தினாள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விலை வைத்தான், அந்த விலையும் அவனிடமிருந்து வசூலித்தாள். அவன் பார்த்தன் எல்லாவற்றையும் அவளிடம் கொடுத்துவிட்டு தனியாக நின்றான். பகல் நேரங்களில் காலை வேளைகளிலும்கூட அவனை முறுக்கி வேலை வாங்கினாள் சாவித்திரி அவனது மலைச்சரிவும், மைதானமும் இப்பொழுதெல்லாம் எங்கிருந்தன, என்பது அவனுக்கோ சொட்டு சொட்டாக இரத்தம் வில்லை வில்லையாக விழுந்து காசாகி, வெள்ளிப்பணமாகி ஒன்று சேர்ந்து தோட்டாக பரிமாறி செங்கல் செங்கல்லாய் மாறி மீண்டும், நோட்டுக் கட்டுகளாய் மாறி நோட்டு கட்டுகள் தங்க பாளங்களாய் மாறி நீண்ட மதிற்சுவராகி அவனை நாற்புறமும் அடைத்துக் கொண்டது.

சாவித்திரி! சாவித்திரி! என்ற கூக்குரலுக்கு யாரும் பதில் அளிப்பதில்லை. வெகுநேரம் கழித்து “இங்கேதானே இருக்கேன், என்ன எழவு சொல்லித் தொலைங்களேன்” என்று பதில் வரும் சாவித்திரி சீக்கிரமாகவே பவுன் மாதிரி நிறத்தில் ஒரு குழந்தையை தங்கம் மாதிரி குணத்துடன் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தாள்.

வெள்ளிமணி சிரிப்பை அது வாரி கொட்டி இறைத்து ஓடி விளையாடியது. அவளால் முடிந்தது இதுதான், சாவித்திரி அவனை கட்டிக் கொண்டால்தானே பணத்தைக் கட்டிக் கொண்டேயிருந்தாள். நீண்ட இடைவெளி ஏராளமான சம்பாத்தியத்தை அவன் செய்தான். இன்னும் புதிய புதிய கடைகளைத் திறந்தாள் அது என்னமோ அவனுக்கு பெரிய பணக்கார வியாபாரிகளுக்கு நேர்வதே போல் லாபம் லாபமாக வாபத்துக்கு மேல் லாபமாக வந்து கொண்டேயிருந்தது.

அருவிகளும் மலைச்சரிவுகளும் ஆழத்தில் ஆழத்தில் மலர்வனங்களும், சோலைகளும். மண் முடி புதைந்து போயின. சாவித்திரி நிறைய நகைகளுடனும் பட்டு சரிகை கனத்துடனும் கொடி போல் இருந்த உடம்பு மலைபோல் அகண்டு போனாள். குழந்தைகள் வளர்ந்து அவர்களும் ஏராளமான பணத்துக்கு விலையாகிப் போனார்கள். இப்போதெல்லாம் வியர்வை கொட்ட ஆரம்பித்துவிடுகிறது. பணக்கார வியாதி வந்துவிட்டது. நெஞ்சு படபட என்று கூப்பிடும்போது போகவேண்டிய நேரம் ஞாபகம் வருகிறது. நிறைய இன்ஞ்செக்ஷன் உடலை சல்லடையாக்கின. ஆனாலும் இரத்தம் கொதித்தது. இரத்த கொதிப்பு வரவேண்டாமே, வருவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்டாள் சாவித்திரி நல்ல வேளை மருந்து இல்லாத வியாதி, வைத்தியம் இல்லாத வைத்தியம், செய்ய முடியாத வைத்தியம் என்றாள்.

டாக்டர்கள் அமெரிக்காவிற்கு வழிகாட்டினார்கள், எதுக்கு வேண்டாமே அங்கே போயி சாகிறத பிள்ளையங்களோட இங்க இருக்கலாமே என்றாள், சாவித்திரியுடைய அம்மாள். பலமாக எதையும் நிற்க போகிறது மாதிரி படபடவென்று அடித்துக் கொள்ளும் உடம்பு முறுக்கி வாங்கும் அப்போதுகூட யாரும் பார்த்தனுக்காக யாரும் பைசா செலவு செய்ய வேண்டாம் என்றார்கள். இந்த வியாதியெல்லாம் தீராது என்றார்கள். நெஞ்சுக்குள்ளே இப்பொழுது அருவி ஓசை, கமகமவென்று கேட்க ஆரம்பித்துவிட்டது.

இரத்தம் கொதித்து உதிரம் மண்டைக்கு ஏறியபோது மனசுக்குள் காடாய் பூக்கள் பூத்தன. தடாகங்கள் நீலநிறமாய் பூத்தன. பூத்து வழிந்தன. அருவிகள் சப்தகடலாய் பெருகி இரைந்தன. யார் இதை நம்ப முடியுமா, கற்பனை என்பார்கள். கேலியும் செய்வார்கள். ஆறை நீலக்கடல் அலை ஓசையாய் ஏழு சமுத்திரங்களும் பார்த்தனுக்கு பேரொலி கொட்டி பேரொலி செய்து அண்டங்களை கிடுகிடுக்க வைத்தன. இவைகள் யாவும், ஒரு நாள் வெடித்து சிதறி நிஜமாக போவது யாருக்கும் தெரியாது. சாவித்திரி இப்போது தனியாக வைர மார்க்கெட் ஒன்றை பெரியகடைத் தெருவில் திறந்திருக்கிறாள். அவளே நேரடியாக நின்று மூச்சிறைக்க குனிந்து நிமிர்ந்து வயிற்றைத் தூக்கிக் கொண்டு வியாபாரத்திற்குள் வியாபாரம்.

(வெளிவராதது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *