பூவை கிழிக்காத கத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 5,373 
 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இரு வயதான ஆண்,பெண் தாங்கள் முன்பதிவு செய்த பெட்டியை தேடினர். காசிக்கு செல்லும் அந்த ரயிலில், இவர்கள் பெயர் மதன்,சந்தியா என்று ஒட்டியிருந்த ரயில் பெட்டியில் அமர்ந்தனர்.

இவர்கள் எதிரே தள்ளாத வயது உடையவ ஒரு தம்பதி அமர்ந்தனர். ரயில் புறப்பட்டது சிறு தூரம் சென்ற பின் இவர்கள் எதிரே அமர்ந்து இருந்த தம்பதியினர் இவர்களை பார்த்து: “ நீங்கள் எத்தானவது முறையா போறீங்க, எப்போ கல்யாணம் ஆச்சு”? என்று கேட்டனர்

அதற்கு மதன், முதல் தடவதான் ஆனால் இன்னும் கல்யாணம் ஆகவில்லை எங்களுக்கு என்று சொன்னான். அந்த தம்பதியினர் அதிர்ச்சி அடைந்து உண்மையா வா!, வயசு ஆச்சு!, அப்போ நீங்க கணவன் மனைவி இல்லையா? அப்போ நீங்க யாரு” இந்த கேள்விக்கு விடை,

மதன் மற்றும் சந்தியா ஆகியோர் தங்களை பற்றி அந்த தம்பதியினரிடம் கூறுகின்றனர்.சென்னை முதல் காசிவரை பயண தூரம் 1 நாள்,10மணி நேரம். இந்த பயணத்தில் இவர்கள் காசிக்கு செல்வதற்குள் இவர்கள் கடந்து வந்த வாழ்க்கை பயனத்தை பார்போம்,

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள் இந்த மதன் மற்றும் சந்தியா.இருவரும் ஒரே தெருவில் வசித்து வருகின்றனர். ஒரே பள்ளியில் படிப்பை முடித்தனர் தங்களது வாழ்கையில் நடந்ததை ஒளிவு மறைவின்றி பரிமாறி கொண்டனர், கள்ளம் கபடம் அற்ற உறவு இவர்களுக்குள் இருந்தது

மதன் தந்தை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார், இவன் தாயுடன் வசித்து வருகிறான்

சந்தியாவிற்கு தந்தை மட்டுமே அவர் வங்கி அதிகாரி ஆக உள்ளார். தாயோ இவள் பூமியில் பிறந்தபோது தாய் உயிருடன் இல்லை.பிறந்தது முதல் தாய் இல்லாமல் வளர்ந்தாள் சந்தியா

மதன், சந்தியா இருவரும் குறிப்பிட்ட வயதை அடைந்தபோதும் இவர்கள் தங்கள் நட்பில் ஒரு தயக்கம் இல்லாமல் இருந்தது.இருந்தாலும் ஊர் வாய் சும்மா இருக்குமா, இவர்களது நட்பை கொச்சைப்படுத்தும் முறையில் பேச ஆரம்பித்தது.ஆனால் மதன் மற்றும் சந்தியா அதைப்பற்றி கவலைப்படாமல் நட்பில் உறுதியாக இருந்தனர்.

வெவ்வேறு மாவட்டத்தில் கல்லூரியில் சேர்ந்தனர் விடுமுறைக்கு மட்டும் ஊருக்கு வந்து நட்புடன் பழகி வந்தனர்.இவர்களது ஒளிவு மறைவு அற்ற நட்பை வெளி மக்கள் இதை காதல் என்று நினைத்து இவர்களது வீட்டில் கொளுத்தி போட்டனர்.பெற்றோர்கள் அக்கம் பக்கதிற்கு பயந்து தங்கள் பிள்ளைகளை கண்டிக்கும் பழக்கம் என்றும் போகாது என்று மதன் மற்றும் சந்தியா பெற்றோர் நிருபித்தனர்.மதனும் சந்தியாவும் நட்பை வெளிக்காட்டாமல் சூழ்நிலையை உணர்ந்து மறைமுகமாக இருந்தனர்

கல்லூரி வாழ்க்கை வந்தாலே சிலர் காதல் குழியில் விழுவது சகஜம்,அதுபோல சந்தியாவும் அவளது வகுப்பில் முத்து என்ற பையனை காதலித்து வந்தாள்.முத்துவும் சந்தியாவும் காதலித்து பின்னர் திருமணம் செய்வதாக முடிவு செய்தனர்.சந்தியா தனது தந்தை தன் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார் என்று நம்பினாள்‌.

மதன் கல்லூரியை முடித்து விட்டு பெங்களூரில் வேலை பார்த்து வருந்தான் . 2 ஆண்டுகளாக அங்கே வேலை பார்த்தான். ஒருமுறை விடுமுறைக்கு ஊருக்கு வந்தான், தனது தோழி சந்தியாவை பார்க்க சென்றான்,அவள் தான் காதலித்த விசியத்தை இவனிடம் கூறினாள்

அன்று ஒரு நாள் தொலைக்காட்சி செய்தியில் காஷ்மீர் ராணுவ முகாமில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்று செய்தி வந்தது.அந்த 4 வரில் மதனின் தந்தையும் ஒருவர். மதனும் அவன் தாயும் இடிந்து போய் இருந்தனர்

மதன் தந்தை உடல் வீட்டுக்கு வந்தது நாட்டையும் வீட்டையும் காத்து நின்ற அந்த வீரனை பார்த்து கண்ணீர் விட்டனர்,ராணுவ மரியாதையுடன் அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது .3 நாட்கள் கழித்து மதன் தன் தாயிடம் சென்று: “ மா!, நானும் ராணுவத்திற்கு போகவா?” என்று கேட்டான்.அவன் தாய்: “ வேனாடா, இன்னைக்கு நான் கணவன் இல்லாத மனைவியா இருக்க.நீயும் போனா நாளைக்கு உனக்காக வந்தவளுக்கு இதே நிலைமை வரலாம்”

“ இந்த வாழ்க்கை உன் அப்பாவோட போகட்டும், இது உனக்கு வேண்டாம், போய் வேலையை பாரு”மீண்டும் மதன் வேலைக்கு திரும்பினான். பின்னர் சந்தியாவும் மதன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள்.இருவரும் 2 ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தனர்.மதனின் தாய் திருவண்ணாமலை போக வேண்டும் என்று சொல்லி விட்டு புறப்பட்டாள்‌. சந்தியாவின் தந்தை வங்கி வேலை காரணமாக அரியலூர் செல்ல தயாரானார். சந்தியாவின் காதலன் முத்துவிற்கு பணியிடை மாற்றம் பெற்று தி.மலைக்கு செல்ல இருப்பதை சந்தியாவிடம் சொல்லி விட்டு புறப்பட்டான்

இந்த மூவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்கின்றனர்.மதன் தனது வீட்டில் தனியாக உள்ளான், சந்தியா அவள் வீட்டில் உள்ளாள்.சிறிது நேரம் கழித்து மதன் மற்றும் சந்தியாவின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வருகிறது

இவர்கள் மூவரும் சென்ற பேருந்து அரியலூர்கு 50km முன்னால் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது 8 பேர் பலி ஆகினர்.அதில், மதன் தாய், சந்தியாவின் தந்தை, அவளின் காதலன் முத்து இறந்தனர்.மதன் சந்தியா இருவரும் அலறிக்கொண்டே வீட்டுக்கு வெளியே வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

நேராக இருவரும் அரியலூர் சென்றனர் அங்கு தனது தந்தை மற்றும் காதலன் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை பார்த்து கத்தி கதறினாள், இப்படி தந்தையும், காதலனும் கண்முன்னே இறந்து கிடப்பதை தாங்கி கொள்ள முடியாமல் தவித்தாள்

தனக்கு வளர்த்த தந்தையும் இல்லை, தனக்கு ஆதரவாக இருந்த தாயும் தற்போது கண்முன்னே படுத்து இருக்கிறாள் பிணமாக துக்கம் தாளாமல் துடித்து போனான் மதன்,இறுகிய மனதுடன் தாய்க்கு இறுதி மரியாதை செலுத்தினான் மதன்

சந்தியாவும் தனது தந்தைக்கு கடைசி மரியாதை செலுத்தினாள். சில வாரங்கள் கடந்தன. சந்தியாவின் உறவினர்கள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள கூறினர்.அப்போது மதன் மற்றும் சந்தியா இருவரும் பழகி வந்ததை அக்கம்பக்கத்தினர் கூற சந்தியா மற்றும் மதனை

நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறினர் அவர்களது உறவினர்கள்,அதற்கு இவர்கள்: “ நாங்க சின்ன வயசுலேர்ந்தே நண்பர்கள் தான் நாங்க பேசாத விஷயமே இல்லை”

“ எங்களுக்குள்ள இந்த நினைப்பே வந்தது இல்லை” என்று இருவரும் இதை மறுத்தனர் சந்தியாவின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய்விட்டது.மதன் மற்றும் சந்தியா தங்கள் மனதுக்கு மாற்றம் வர விரும்பினர். எனவே தஞ்சை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு குடியேறினர், ஒரே வீட்டில் தங்கி வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர்

மதன் மற்றும் சந்தியா தங்கள் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை வெறுத்தனர. சில ஆண்டுகள் கழித்து மதனுக்கு விபத்து ஏற்பட்டது அதில் அவனது கால்கள் பாதிக்கப்பட்டன. நடக்க சிரமப்பட்ட அவனை சந்தியா குளியலறைக்கும், கழிவறைக்கும் அழைத்து சென்றாள், அவனை ஒரு தாயை போல பாதுகாத்தாள்

மாதம்தோறும் பெண்களுக்கு ஏற்படும் வலியின் போது சந்தியாவிற்கு தாய் இல்லாத குறையை தீர்த்தான். மதனுக்கு தாய் இல்லாத குறையை சந்தியா தீர்த்தாள், சந்தியாவிற்கு தந்தை இல்லாத குறையை மதன் தீர்த்தான்

இருவரும் ஒருவரையொருவர் தங்களை தாங்கி கொண்டனர்‌.இருவருக்கும் வயது கடந்தது முதிர்ச்சி வர தொடங்கியது. இருவரும் தற்போது உள்ள பணத்தை வைத்து ஊர்சுற்ற நினைத்தனர். ஆகவே இருவரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர்.காசிக்கு தம்பதியராக பலர் சென்றனர் ஆனால் இவர்களோ நண்பர்களாக செல்கின்றனர்

மதன் மற்றும் சந்தியா தங்கள் வாழ்வில் நடந்ததை அந்த வயதான தம்பதியினரிடம் சொல்லி முடித்தனர்.இவர்களது ரயில் வாரணாசி வந்தடைந்தது. அந்த தம்பதியினர் இவர்களை பார்த்து ஆசி வழங்கினர்.மதன் மற்றும் சந்தியா இருவரும் வாரணாசியை சுற்றி பார்க்க புறப்பட்டனர்..

“ ஆண் பெண் நட்பானது கத்தி மேல் உள்ள பூவை போன்றது”

“ இந்த கத்தி நம்மை கிழிகாது என்று பூ கத்தியை நம்புகிறது” அதுபோல

“ நம்மை நம்பி உள்ள பூவை கிழிக்க கூடாது என தனது கூர்மையை மங்கி கொள்கிறது கத்தி”

இவர்கள் நினைத்தால் கடமைக்கு திருமணம் செய்து வாழ்ந்து இருக்கலாம் ஆனால் அப்படி செய்தால் நட்பின் பெயர் கெட்டுவிடும் என்பதால் இறுதி மூச்சு வரை நண்பர்களாக இருந்து விடைபெற்றனர.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *