நாம வேண்டிண்டதே தானே அவ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 3,653 
 

15-8-1947 சுதந்திர நாளன்று அன்று பிறந்தவன் ஏகாம்பரம்.அவன் பள்ளியில் ஒண்ணாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான்.அன்று அவன் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப் பட்டது.பள்ளி முதல்வர் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி விட்டு பள்ளி மாணவர்களுக்கு ‘சாக்லெட்’ கொடுத்து விட்டு ஒரு சின்ன உரை ஆற்றினார்.
“பள்ளி மானவர்களே,இன்று சுதந்திர நாள்.நம் இந்தியா சுதந்திரம் அடைந்து ஆறு வருஷங்கள் ஆகி விட்டது.நீங்கள் எல்லோரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா சுதந்திரம் அடைந்து பிறகு நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்.நீங்கள் எல்லோரும் வெள்ளைகாரர்களின் அடிமையிலே இல்லை.சுதந்திர இந்தியப் பிரஜைகள் நீங்கள்.குடுத்து வைத்தவர்கள் நீங்கள்.ஆனால் நாங்களோ கடந்த ஆறு வருஷங் களுக்கு முன்பு வெள்ளைக்காரங்க கிட்ட அடிமைகளாக இருந்து வந்தோம்.ஆம் வெள்ளைக்கா ரர்களின் அடிமை ………”அவர் மேலே பேசிக் கொண்டு இருந்தது ஒன்றும் ஏகாம்பரத்தின் காதில் விழவில்லை.அவன் தான் ‘சுதந்திரமானவன்’ என்று கேட்டதும் அவன் மனம் ஆகாயத்தில்  பறந்தது.
பல கனவுகளை மனதில் கொண்டு வந்து ஏதேதோ எண்ணங்களில் மிதந்து வந்தான்.

கஷ்டமான குடும்பத்தில் இருந்து வந்த ஏகாம்பரம் நன்றாகப் படித்து வந்தான்.வேலூரில் அவன் அப்பா வரதன் நான்கு ஏக்கருக்கு சொந்தமான ஒரு விவசாயி.
இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் மணைவியை இழந்து விட்டார் வரதன்.

இரண்டு குழந்தைகளையும் நன்றாகப் படித்துக் கொண்டு இருந்தார் வரதன்.ஏகாம்பரம் S.S.L. C.யில் நல்ல மார்குகளைப் வாங்கி ‘பாஸ்’ பண்ணினான்.அவன் அப்பா சிபாரிசின் போ¢ல அந்த ஊரில் இருந்த ஒரு சின்ன கம்பெனியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தான் ஏகாம்பரம்.

இந்த வேலையை கண்ணும் கருத்துமாய் செய்து வந்தான்.காஞ்சீபுரத்தில் ஒரு நல்ல குடும்ப த்தில் வளர்ந்து வந்த காமாக்ஷியை கை பிடித்தான் ஏகாம்பரம் தன்  அப்பா காலமாகி விடவே தன் தம்பி கோபாலை நன்றாகப் படிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.அவன் S.S.L.C.’பாஸ்’ பண் ணினவுடன்,சென்னைக்குப் போய் வேலைத் தேடிக் கொள்வதாய் சொல்லி சென்னைக்குப் போய் விட்டான்.

ஏகாம்பரத்திற்கு சீக்கிரமே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது.தன் சொற்ப சம்பளத்தில் இர ண்டு பையன்களையும் நல்ல ‘காண்வெண்ட்டில்’ சேர்த்து படிக்க வைத்தார்.படிப்பு செலவுக்கு நிறைய பணம் தேவை பட்டதால் காமாக்ஷி சீட்டு கட்டி,கொஞ்சம் பணம் சம்பாதித்து, குடும்ப செலவை எவ் வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து பணத்தை மீத்தி வந்தாள்.

ஆரம்ப நாட்களில் ஏகாம்பரம் அதிக விலை கொடுத்து ஏதாவது வாங்க வேண்டும் என்றால் காமாக்ஷி அதை தடுத்து ‘குறைஞ்ச விலைக்கு வாங்கினா போதும்’ என்று கணவா¢டம் சொல்லி  சிக்க னமாக வாங்கிக் கொண்டாள்.

வருடங்கள் ஆக, ஆக,காமாக்ஷி ஏதாவது  நாள் கிழமைக்கு பட்டுப் புடவை வாங்க ஆசைப் பட் டால் உடனே ஏகாம்பரம் “நூல் புடவை போறுமே காமாக்ஷி.நாளைக்கே நம் பையங்க நன்னாப் படிச்சு விட்டு,வேலைக்கு சேந்து விட்டா,அப்புறமா நீ நிறைய பட்டு புடவையா வாங்கி கொள்ளேன்.இப்போ இந்த கம்மி விலை புடவை போறுமே”என்று தன் பணக் கஷ்டத்தை மனதில் கொண்டு சொல்லி வந்தார்.காமாக்ஷியும் கணவன் பணக் கஷ்டத்தை நன்றாகப் புரிந்துக் கொண்டு இருந்ததால்,கணவன் சொன்னதைக் கேட்டு அப்படியே வாங்கிக் கொண்டு வந்தாள்.

சேர்த்து வைத்து இருந்த இருந்த பணத்தை எல்லாம் ‘டொனேஷன்’ கொடுத்து,முதல் பையன் ரமேஷை வேலூரில் இருந்த நல்ல ‘இஞ்சனீயா¢ங்க்’ கல்லூரியில் சேர்த்தார் ஏகாம்பரம்.அவன் வசதி யாக படித்து வர ஒரு வாடகை வீடும் கையில் பணமும் கொடுத்து கஷடமில்லாமல் இருந்து வர வழி செய்தார்.

இரண்டு வருஷம் கழித்து ‘டொனேஷன்’ கொடுத்து அடுத்த பையன் சுரேஷையும் அதே வேலூர் ‘இஞ்சினியா¢ங்க’ கல்லூரியில் சேர்த்தார் ஏகாம்பரம்.ரமேஷூக்கு செய்தது போல சுரேஷூக்கும் வசதியாக படித்து வர ஒரு வாடகை வீடும் கையில் பணமும் கொடுத்து கஷடமில்லாமல் இருந்து வர வழி செய்தார்.

ஏகாம்பரமும் காமாக்ஷியும் தங்கள் பையன்கள் நன்றாய் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்பதில் மிகவும் குறியாய் இருந்தார்கள்.தங்கள் குறைந்த சம்பள பணத்தில் எவ்வளவு சேர்க்க முடி யுமோ அவ்வளவையும் சேர்த்து பையன்கள் படிப்புக்கு செலவு பண்ணி வந்தார்கள்.

ரமேஷ் B.E. படித்து முடித்தும் அவன் அப்பா அம்மாவிடம் “நான்அமெரிக்கா போய் மேல் படி ப்பு படிச்சா தான் அமெரிக்காவில் நல்ல கம்பெனியில் வேலை கிடைச்சு,நல்ல சம்பளமும் வரும். அதனால் நான் அமெரிக்காப் போய் படிக்க ஆசைப் படறேன்” என்று சொல்லி ரமேஷ் ஒரே காலில் நின்று அடம் பிடித்தான்.

ஏகாம்பரமும் காமாக்ஷியும் இதை கேட்டு திடுக்கிட்டுப் போனார்கள்.

ரமேஷை அழைத்து “இதோ பாருடா ரமேஷ்.நம் குடும்பம் ரொம்ப சாதாரண குடும்பம்.இத்த னை வருஷமா நானும் உன் அம்மாவும் வயித்தை கட்டி,வாயை கட்டி,எப்படியோ உங்க ரெண்டு பேரையும்,வேலூரில் B.E.படிக்க வச்சோம்.நான் சாதாரண S.S.L.C. படிச்ச குமாஸ்தா தான். இத்த னை வருஷமா நாங்க  ஒரு சுகத்தையும் காணலே.உங்க படிப்பு ஒன்னு தான் குறின்னு இருந்தோம் நீங்க ரெண்டு பேரும் எப்போ உங்க படிப்பை முடிச்சு வேலைக்கு சேர போறேள்ன்னு காத்துண்டு இருக்கோம்.நீங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சா,மீதி இருக்கும் கொஞ்ச வருஷங்களாவது நாங்க சுகமா இருந்து வரலாமேன்னு நினைச்சுண்டு காத்துண்டு இருக்கோம்”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

கண்கலைத் துடைத்துக் கொண்ட ஏகாம்பரம் “இப்போது என்னடான்னா நீ அமெரிக்கா போய்  படிக்கணும்ன்னு அடம் பிடிக்கிறே.எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலே.நம்ம குடும்ப சூழ் நிலைக்கு நீ அமெரிக்கா எல்லாம் போய் மேல் படிப்பு படிக்க  முடியுமான்னு யோஜனை பண்ணுப்பா.நீ கேக்கறது சா¢ன்னே எனக்குப் படலே” என்று  வருத்த்தோடும் கவலையோடும் சொன்னார் ஏகாம்பரம்.

காமாக்ஷியும் தன் பங்குக்கு “ஆமாண்டா,அப்பா சொல்வது சா¢.நமக்கெல்லாம் அமெரிக்கா எல் லாம் வேணாம்,இந்த ஊரே போதும்.இங்கேயே நீ ஒரு நல்லா வேலையைத் தேடிக்கோப்பா” என்று பரிவோடு சொன்னாள்.ஆனால் ரமேஷ் “இல்லைப்பா,நான் அமெரிக்கா போய் தான் படிக்கப் போறேன்  என்னை விட  மட்ட மார்க் வாங்கின பையங்க தான் இந்த ஊர்லே வேலை பார்ப்பா.நான் ரொம்ப  நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்.நான் அமெரிக்கா போறது தான் சா¢.இங்கே வேலை பண்ண மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தான்.

வேறு வழி இல்லாமல் பையன் ரமேஷ் ஆசைக்கு அடி பணிந்தார்கள் ஏகாம்பரமும் காமாக்ஷியும். ரமேஷ் அமெரிக்கா படிப்பு படிக்க  வேண்டிய பணத்தை இங்கும் அங்குமாய்  அலைந்து,நிறைய கடன் வாங்குவதற்குள் ஏகாம்பரத்திற்கு முழி பிதுங்கி விட்டது.

ஒரு நல்ல நாள் பார்த்து ரமேஷை அமெரிக்கா அனுப்பி வைத்தார்கள்ஏகாம்பரமும்,காமாக்ஷியும்.

இரண்டு வருஷம் ஆனதும் சுரேஷ் B.E. படித்து ‘பாஸ்’ பண்ணினான்.

சுரேஷூம் ரமேஷ் சொன்னதைப் போலவே அவனும் ‘அமெரிக்காப் போய் மேல் படிப்பு படிக்க வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தான்.ஏகாம்பரமும் காமாக்ஷியும் எவ்வளவோ சொல்லியும்,அவன்  “நான் இந்தியாலே வேலை பண்ண மாட்டேன்,அண்ணாவைப் போல அமெரிக்காப் போய் மேல் படிப் புத் தான் படிப்பேன்”என்று சொல்லி ஒரு காலில் நின்று பிடிவாதம் பிடித்தான்.

வேறே வழி ஒன்னும் இல்லாமல் ஏகாம்பரம் நிறைய கடன் வாங்கி, சுரேஷையும் அமெரிக்கா படி க்க அனுப்பி வைத்தார்.

இரண்டு பையன்களும் அமெரிக்கா படிப்பு முடித்து விட்டு நல்ல வேலையில் சேர்ந்தார்கள்.

ஏகாம்பரத்திற்கும் காமாக்ஷிக்கும் ரொம்ப சந்தோஷம்.இப்போது அவர்கள் பட்ட கஷ்டம் அவர்க ளுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

ஆறு மாதம் ஆகி விட்டது.

ஒவ்வொறு மாதமும் ஏகாம்பரமும் கமாக்ஷியும் பையன்கள் எதாவது பணம் அனுப்புவார்கள் என்று எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாந்தார்கள்.

வேறு வழி தெரியாமல் ஏகாம்பரம் தன் வெட்கத்தை விட்டு ஒரு நாள் இரண்டு பேருக்கும் ‘·போனில்’ “நானும் அம்மாவும் இங்கே பணத்துக்கு ரொம்ப கஷ்டப் பட்டு வறோம்.எங்களுக்கு பணம் கொஞ்சம் அனுப்புங்கோ” என்று கேட்டார்.

உடனே இருவரும் ”அப்பா, நாங்க அன்னிய ஊர்லே இருக்கோம்.எங்களுக்கு அவசரத்துக்கு பணம் வேண்டியதா  இருந்தா,நாங்க யாரையும் போய் இங்கு  கடன்  எல்லாம் கேகக முடியாது.அத னால் நாங்க எங்களுக்கு பணம் சேர்க்கணும்.இப்போதைக்கு எங்களால் பணம் அனுப்ப முடியாதுப்பா” என்று சொல்லி விட்டார்கள்.
ஆடிப் போய் விட்டார்கள் ஏகாம்பரமும் காமாக்ஷியும்.

பிள்ளைகள் இருவரும் வாரம் தவறாமல் அப்பா அம்மாவுடன் பேசி வந்தார்களே ஒழிய பணம் அனுப்புவதைப் பற்றி மூச்சே விடவில்லை.மாசம் ஆக,ஆக இருவரும் ‘நாங்க கார் வாங்கினோம்,ஒரு சோபா செட் வாங்கினோம்.52” கலர் டீ.வி. வாங்கினோம்,கட்டில் வாங்கினோம்’என்று பெருமை அடித்துக் கொண்டார்கள்.கூடவே “அம்மா,அப்பா நீங்கள் இதை எல்லாம் பார்த்தா ரொம்ப சந்தோஷப்  படுவேள்” என்று வெறுமனே சொல்லி அப்பா அம்மாவுக்கும் அம்மாவுக்கும் ஆசை காட்டி வந்தார்கள்.
இரண்டு வருஷங்கள் ஓடி விட்டது.

ஒரு நாள் ரமேஷ் போனில் “அப்பா,நானும் சுரேஷூம் இங்கே பக்கத்து பக்கத்லே வீடு வாங்கி இருக்கோம்.வீடு என்ன விலை தெரியுமா” என்று சந்தோஷமாக கேட்டார்கள்.விரக்தியுடன் ஏகாம்பரம் “எனக்கு என்னடா தெரியும்.நீயே சொல்லுடா” என்றார் சலிப்புடன்.“ரெண்டு கோடி ரூபாய்ப்பா ஒவ் வொறு வீடும்”என்றான் ரமேஷ் பெருமையுடன்.“ஓ,அப்படியா ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லி விட்டு அவர் போனை வைத்தார் ஏகாம்பரம்.

“காமு,பிள்ளைங்க அழகு இப்போ முழுக்க தெரிய ஆரம்பிச்சிடுத்து.முதல்லே வெளி நாட்லே இருக்கோம்,அதனால் பணம் சேர்க்கணும்ன்னு சொன்னா.அப்புறம் அவ ஆத்துக்கு வேண்டிய சாமா ன்க வாங்கினோம்ன்னு சொன்னா.இப்போ ரெண்டு கோடிலே வீடு வாங்கி இருக்காளாம் ரெண்டு பே ரும்.அப்புறமா வாங்கின அந்த வீட்டுக்கு கடன் அடைக்க மாசா மாசம் பணம் கட்டணும்ன்னு சொல் லுவா.அப்புறமா கல்யாணம் பண்ணிப்பா.அப்புறமா சம்சாரத்துக்கு ‘இது வாங்கணும்,அது வாங்கணும்’ ன்னு சொல்லுவா.அப்புறமா ஒன்னோ ரெண்டோ வருஷம் ஆனா குழந்தைகளுக்கு நிறைய செலவு இருக்குன்னுவா.இவா இனிமே நமக்கு பணம் எங்கே அனுப்பப் போறா.அதை நாம மறந்துட வேண் டியது தான்.இவாளுக்காக நாம் செலவு பண்ண பணம் எல்லாம் வீண், காமு வீண்.எல்லாம் விழலுக்கு இறைச்ச நீர் போல் ஆயிடுத்து” என்று சொல்லி விட்டு,தன் துண்டை உதறி தோளில் போட்டுக் கொ ண்டு வெளியே கிளம்பிப் போனார்  ஏகாம்பரம்.

நடை பிணங்கள் போல் தங்கள் வேலைகளை செய்துக் கொண்டு வந்தார்கள் ஏகாம்பரமும் காமாஷியும்.

ரெண்டு வாரம் தான் ஆகி இருக்கும்.வாசலில் படகு போல் ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கி வந்தவரைப் பார்த்து “நீங்க யாரைப் பார்க்கணும்.“ என்று கேட்டார் ஏகாம்பரம்.”நீங்க தானே ஏகாம்பரம்.ரமேஷின் அப்பா” என்று கேட்டார் காரில் வந்த பணக்காரர்.”அமாங்க நீங்க..” என்று இழுத்தார் ஏகாம்பரம்.

உடனே அவர் ”என் பேர் சன்முகம் செட்டியார்.இது என் சம்சாரம்.பேர் மரகதவல்லி.நாங்க அண் ணா இருக்கோம்.எனக்கு ரெண்டு பெரிய ‘·பாக்டா¢கள்’ இருக்கு.அதை தவிர சென்னையில் மூனு வீடும் இருக்குது.என் பெண் ரம்யாவும், உங்கள் பையன் ரமேஷூம் அமெரிக்காவில் ஒன்னாய் படிச்சு இப்போ ரெண்டு பேரும் ஒரே கம்பனியில் வேலை செஞ்சு வறாங்க.அவங்க ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புறாங்க.உங்களுக்கு சம்மதம்ன்னா,நீங்க உங்க பையன் ஜாதகத்தை கொஞ்சம் தர முடியுமா. இதோ என் பெண் ஜாதகம்” என்று சொல்லி தன் ‘ப்¡£·ப்’ கேஸை திறந்து தன் பெண்ணின் ஜாதகதை எடுத்து  நீட்டினார் சண்முகம் செட்டியார்.

ஏகாம்பரமும் காமாக்ஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.நிலமை மோசமாகி விடுவதற்கு முன் ஏகாம்பரம் “எனக்கு ஆ§க்ஷபணை ஒன்னும் இல்லே.காமாக்ஷி நம்ம ரமேஷ் ஜாதகம் அந்த மர பீரோவில் இருக்கு.அதை காமாக்ஷி படத்துக்கு முன்னாடி வச்சுட்டு, அம்பா ளை வேண்டிண்டு எடுத்துண்டு வா” என்றார்.காமாக்ஷிக்கு ஒன்றும் புரியவில்லை.இருந்தாலும்  கண வன் சொன்னது போல் ரமேஷ் ஜாதகத்தை காமாக்ஷி படத்துக்கு முன்னாடி வைத்து விட்டு,அம்பா ளை வேண்டிக் கொண்டு  கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தாள் காமாக்ஷி.

காமாக்ஷி இடம் இருந்து ரமேஷ் ஜாதகத்தை வாங்கி  வந்த பெரிய  பணக்கார மனிதா¢டம் நீட்டி னார் ஏகாம்பரம்.ஜாதகத்தை வாங்கிக் கொண்டு “நீங்களும் ஜாதகம் பொருத்தம் பாருங்க. நாங்களும் பார்க்கறோம்.கடவுள் கிருபையாலே எல்லாம் நல்ல படியாய் நடக்கணும்” என்று சொனார் சண்முகம் செட்டியார்.பிறகு அந்த பணக்கார தம்பதிகள் எழுந்துக் கொண்டார்கள்.“எனக்கு பெங்களூர் ‘பாக்ட ரிக்கு’ அவசரமா போகணும்.போற வழியிலே இந்த ‘நல்ல’ வேலையும் பண்ணி விடலாமேன்னு தான் நாங்க வந்தோம்.இப்போ நாங்க வறோம்” என்று சொல்லி விட்டு இருவரும் கிளம்பிப் போனார்கள்.

“என்ன அநியாயம் இது.நாம பிராமண ஜாதியை சேர்ந்தவா.வந்தவா முதலியார் ஜாதியை சேர்ந் தவா.நீங்க என்னமோ ஜாதகப் பரிவர்த்தனை பண்ணி இருக்கேள்.இது உங்களுக்கு நியாயமா படறதா  உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா என்ன” என்று கத்தினாள் காமாக்ஷி.

“என்னமோ வந்தா ஆம்படையானும் பொண்டாட்டியும். அவா பொண்ணு ஜாதகத்தை குடு த்ததா.நம்ப பையன் ஜாதகத்தை வாங்கிண்டா.உடனே கிளம்பிப் போயிட்டா.இதுவா ஜாதகப் பரிவர்த் தனை பண்ற அழகு”என்று புலம்பினாள் காமாக்ஷி.அவளுக்கு கோவம் கோவமாக வந்தது தன் ஆத்துக்காரர் மேலே.சற்று நேரம் கழித்து “பொறுத்து இருந்து எல்லா ‘டிராமாவையும்’ பார் காமாக்ஷி.இப்போ என்ன ஆச்சு.இன்னும் நிறைய நமக்குப் பாக்க இருக்கு” என்று பொறுமையாகச் சொன்னார் ஏகாம்பரம்.காமாக்ஷிக்கு ஒன்னும் புரியவில்லை..
இரண்டு மாதம் ஓடி விட்டது.ஒரு நாள் விடியற்காலை ஆறு மணி இருக்கும் ரமேஷ் இரண்டு பெரிய பெட்டிகளுடன் காஞ்சீபுரம் வந்து வீட்டிற்குள் நுழைந்தான்.ஈஸி சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார் ஏகாம்பரம்.“வாடா சௌக்கியமாய் இருக்கியாடா ரமேஷ்” என்று கேட்டார்.சமையல் ரூமில் இருந்து வெளியே வந்தாள் காமாக்ஷி.”நீங்க ரெண்டு பேரும் சௌக்கியம் தானே” என்று கேட்டுக் கொண்டேஅமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த சாக்லெட்,அம்மாவுக்கு புடவை,அப்பாவுக்கு ‘ஷர்ட்’எல்லாம் பெட்டியில் இருந்து எடுத்து அவர்களிடம் நீட்டினான் ரமேஷ்.

உடனே அவள் “என்னடா அமெரிக்கா போனதும் பெரிய மனுஷன் ஆயிட்டயடா நீ.யாரடா இந்த ஷன்முகம் செட்டியார்.அவர் பெண்ணையா நீ ஆசைப் படறே.இது என்னடா பெரிய மனுஷத்த னம்” என்று கத்தினாள் காமாக்ஷி.ரமேஷ் நிதானமாக “ஆமாம்மா,நான் அவளை தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப்போறேன்.ஷன்முகம் செட்டியார் தான் என் வருங்கால மாமனார்.அடுத்த வாரம் நாங்க கல்யாணம் பண்ணிண்டு இன்னும் பத்து நாள்ளே திரும்ப அமெரிக்கா போகணும்.பதினைந்து நாள் தான் லீவு எனக்கு”என்று சொல்லி விட்டு ‘செல் ·போனில்’ யாரிடமோ இங்கிலிஷில் சரமாரியாக பேசிக்கொண்டு இருந்தான்.காமாக்ஷி ஆடிப் போய் விட்டாள்.

சற்று நேரம் கழித்து ”நம்பளை கல்யாணத்துக்கு கூப்பிட வந்து இருக்கான் பிள்ளையாண்டன். வேறு ஒன்னுமில்லே காமாக்ஷி” என்று சொல்லி நிறுத்தினார் ஏகாம்பரம்.“ஆமாம்மா,அப்பா சொல்வது தான் கரெக்ட்”என்று சொல்லி விட்டு குளிக்கப் போய் விட்டான் ரமேஷ்.

குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ”இந்த பாக்கெட்டில் ஐஞ்சு ஆயிரம் ரூபாய் இருக்கு நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வேண்டிய துணி மணிகள் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்க. கல்யாணம் எட்டாம் தேதி.ராஜ ராஜேஸ்வா¢ கல்யாண மண்டபத்திலே நடக்கறது.கல்யாண மண்டபம் ‘அட்ரஸ்’ வந்து 18. T.T.K. ரோட் ஆழ்வார்பெட்.எனக்கு நிறைய வேலை இருக்கு.உங்களை மண்டப த்லே சந்திகிறேன்.நான் வரட்டுமா” என்று சொல்லி விட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் தன் பெட்டி களை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் ரமேஷ்.மலைத்து நின்றுக் கொண்டு இருந்தார்கள் ஏகா ம்பரமும் காமாக்ஷியும்.

பையன் சொன்ன தேதியில் ராஜ ராஜேஸ்வா¢ கல்யாண மண்டபத்துற்கு போனார்கள் ஏகாம்பர மும் காமாக்ஷியும்.சாதாரணமாக வீட்டில் இருக்கும் போது போட்டுக் கொண்டிருக்கும் ‘டிரஸ்ஸோடு’ தான் அவர்கள் பையன் கல்யாணத்திற்கு வந்து இருந்தார்கள்.தாலி கட்டின உடனே ரமேஷ் கொடுத்த ஐந்தாயிரம் ரூபாயை அவனுக்கே ‘ஆசீர்வாதம்’ பண்ணி விட்டு அடுத்த பஸ்ஸில் காஞ்சீபுரம் கிளம்பி வந்து விட்டார்கள் ஏகாம்பரமும் காமாக்ஷியும்.வரும் வழியிலே ரமேஷ் ‘அழகை’ சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டு வந்தார்கள் இருவரும்.

ரெண்டு வருஷம் ஒடி விட்டது.ரமேஷ் வந்த மாதிரியே ஒரு நாள் அதி காலையில் சுரேஷ் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் காஞ்சீபுர வீட்டிற்குள் நுழைந்தான்.
வெள்ளையும் கருப்புமாய் தலை மயிருடனும்,தலையிலே ஒரு பெரிய கறுப்பு கண்ணாடியுடனும்  பாதி தொடை தெரியும் துணியுடனும்,வெள்ளை வெளேரென்று ‘செலுலாய்ட்’ பொம்மை மாதிரி ரமேஷூடம் நின்றுக் கொண்டு இருந்தாள் அந்த வெள்ளைக்காரப் பொண்ணு .

ஏகாம்பரம் ஈசி சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.சுரேஷைப் பார்த்ததும் ஹாலுக்கு வந்தாள் காமாக்ஷி.கூட வந்தவளிடம் ஏதோ இங்கிலிஷில் பேசிக் கொண்டு இருந்தான் சுரேஷ். கொஞ்ச நேரம் ஆனதும்,இருவரும் ஏகாம்பரம்,காமாக்ஷியின் கால்களைத் தொட்டு வணங்கினார்கள்.

ஒரு அடி பின்னால் போனாள் காமாக்ஷி.சுரேஷ் எழுந்துக் கொண்டு “அம்மா,அப்பா,இவ பேரு ஜூலி.நான் இவளை அமெரிக்காலே கல்யாணம் பண்ணிண்டுட்டேன்.இப்போ இந்தியாவை இவளு க்கு சுத்தி காட்ட அழைச்சுண்டு வந்து இருக்கேன்.நாங்க சுத்தி பார்த்துட்டு பாம்பேலேருந்து அப்படி யே அமெரிக்கா போய் விடுவோம்” என்று சொல்லி விட்டு அவளோடு எதிர் சோ¢ல் உட்கார்ந்து கொண் டான் சுரேஷ்.

காமாக்ஷிக்கு உடம்பெல்லாம் கொதித்தது.

“இது என்ன கண்றாவிடா.இப்படி ஒரு வெள்ளைக்கார பொண்ணைக் நீ கல்யாணம் பண்ணி ண்டு வரவா நாங்க உன்னை அமெரிக்க அனுப்பினோம்.உனக்கு புத்தி மழுங்கி விட்டதா என்ன. நாங்க ஒரு பொண்ணைப் பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோமாடா.உனக்கு என்ன அவசரம்டா.ஒரு வெள்ளைகார போண்ணே கல்யாணம் பண்ணீண்டு வந்து இருக்கே”என்று கோவ த்தோடு கத்தினாள் காமாக்ஷி.

ஏகாம்பரம் “காமக்ஷி,நீ சித்தே  சும்மா இருக்கியா.நீ உள்ளே போய் உன் வேலையை கவனி” என்று சொல்லி நிறுத்தினார்.காமாக்ஷி சமையல் ரூம்முக்குப் போய்,இருவருக்கும் காமாக்ஷி ‘கா·பி’ கொண்டு வந்து கொடுத்தாள்.

‘கா·பி’ டம்ளரை  பாதி வாயிக்குள் வைத்து உறிஞ்சி குடித்தார்கள் இருவரும்.தலையில் அடித் துக் கொண்டாள் காமாஷி.நல்ல வேலை ஜூலி இதை கவனிக்கவில்லை.
ஒரு பத்து நிமிஷத்திற்கெல்லாம் “அப்பா இங்கே ‘வெஸ்டர்ன் டாய்லெட்’எல்லாம்  இல்லே.தவிர இங்§ குளீக்க  ‘ஷவரும்’ இல்லை.ஜூலிக்கு இந்த இடம் சா¢ப்படாதுப்பா.அதனால் நாங்க ஒரு ஹோட் டலுக்குப் போய் தங்கிக்கறோம்” என்று சொல்லி விட்டு இருவரும் அவரவர்கள் கொண்டு வந்த பெட்டிகளுடன் அவர்கள் வந்த காரிலேயே கிளம்பி  ஹோட்டலுக்குப் போய் விட்டார்கள்.

அவர்கள் கிளம்பிப் போனதும் “காமாக்ஷி ரெண்டு பசங்களையும் பாத்தியா.நீ ஆசையோடும் அன்போடும் வளர்த்த பசங்க மாதிரியா இவா ரெண்டு பேரும் இருக்கா.இவா போ¢லே நாம எவ்வளவு நம்பிக்கை வச்சுண்டு இருந்தோம்.பெரியவன் என்னடான்னா ஒரு பணக்காரா முதலியார் பொண்ணே க் கல்யாணம் பண்ணீண்டு இருக்கான்.அதுவே தேவலைப் போல இருக்கு.சின்னவன் என்னடான் னா ஒரு வெள்ளைக்கார பெண்ணே கல்யாணம் பண்ணீண்டு வந்து நமக்கு நமஸ்காரம் பண்றதுகும்,  அவளே இந்தியா சுத்திப் பாக்கவும் அழைச்சுண்டு வந்து இருக்கான்.இவா படிச்சு முன்னுக்கு வரணும் ன்னு நாம ரெண்டு பேரும் எவ்வளவு சிக்கனமா  இருந்துண்டு,நம் சௌகா¢யங்களை எல்லாம் குறை ச்சுண்டு இவா படிப்புக்கே முக்கியத்துவம் குடுத்து வந்தோம்” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ”ஒரு நல்ல நாள்,தீபாவளி,பொங்கல் நவராத்திரின்னு எதுக்காவது உனக்கு ஒரு பட்டு புடவை வாங்கி கொடுத்து இருப்பேனா.இல்லை ஹோட்டல்,சினிமா ன்னு எதுக்காவது போய் பணம் செலவு பண்ணோமா.இல்லே பணத்தே சேர்த்து வச்சு, நமக்குன்னு ஒரு நிலம்,மணை,ஒரு வீடுன்னு ஏதாவது வாங்க பிரயத்தனம் பண்ணிணோமா இல்லையே.வரும் சம்பளத்லே சாப்பாடு செலவு போக மீதி பணத்தை சேர்த்து வச்சு இவா படிப்புக்குத் தானே செலவு பண்ணோம்” என்று சொல்லும் போது அவருக்கு மறுபடியும் அழுகை வந்தது.

“இவா ரெண்டு பேரும் படிச்சு ஒரு நல்ல வேலையிலே சேந்துட்டு,உன்னையும் என்னையும் ராஜா,ராணீ போல வச்சுப்பான்னு,தானே நாம கனவு கண்டுண்டு வந்தோம்.இவாளுக்காக தானே நான் இவ்வளவு கடன் வாங்கி அவாளை அமெரிக்கா அனுப்பினேன்.இன்னைக்கு நான் ஒரு கடனா ளியாக நிக்கறேன்.ஆனா நடந்தது என்ன.அவா ரெண்டு பேரும் ராஜாவாகி அவாளுடன் ஒரு ராணீ யே  சேத்துண்டு மாளிகை போல ஒரு ஆத்திலே வாழ்ந்துண்டு வறா.நாம உயிரோடு இருக்கோமா ன்னு  மட்டும் அவா அடிக்கடி ‘·போன்’ பண்ணி தெரிஞ்சுக்குவா.நம்ம பிராணன் போனா ஊர் உலக த்துக்கு பயந்துண்டு ‘காரியம்’ பண்ண இந்தியா வருவா.காமு எல்லாம் முடிஞ்சுப் போச்சு”என்று சொல் லும் போதே அவர் கண்கள் குளமாயிற்று.

கண்களைத் தன் துண்டால் துடைத்துக் கொண்டு முகத்தை துண்டில் புதைத்துக் கொண்டார் ஏகாம்பரம்.அவர் விக்கி விக்கி அழுவது அவர் உடல் குலுங்குவதில் இருந்து தெரிந்தது.”அழாதீங்கோ, அழுது என்ன பண்றது.பிள்ளைங்க லக்ஷணம் அவ்வளவுதான்”என்று சொல்லி கணவனுக்கு ஆறு தல் சொன்னாள் காமாக்ஷி.
இருவரும் ஒரு அரை மணி நேரம் மௌனமாய் இருந்தார்கள்.

“உங்க தம்பி பொண்களைப் பாருங்கோ.இரண்டு பேரும் அமெரிக்காவில் தான் இருக்கா.அப்பா அம்மா பார்த்த பையனைத் தான் கல்யாணம் பண்ணிண்டா.மாசம் தவறாம அப்பா அம்மாவுக்கு பணம் அனுப்பறா.என் அண்ணா பெண்ணைப் பாருங்கோ.மாசம் தவறாம அப்பாவுக்கு பணம் அனுப் பறா.நல்ல வரன் அப்பா தேடி சொல்லும் வரும் வரை அவளும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கா. என் அக்கா பெண்ணும் ஆஸ்த்ரேலியாவில் இருக்கா.அவ நம ஊர் பையனைத் தான் கல்யாணம் பண்ணிண்டு வேலை பண்ணிண்டு வறா.அப்பாவுக்குன்னு மாசம் பணம் அனுப்ப தவறதில்லே. நமக்கு பொறந்த ரெண்டும் ஏன் தான் இப்படி ‘வக்ரமா’ தலை கீழா நடக்கறதோ” என்று சொல்லி வருத்தப் பட்டாள் காமாஷி.

”அது சொல்லப் போயிட்டேயே காமாக்ஷி.என் முதலாளியுடைய பெண்ணும் அமெரிக்காவில் தான் இருக்கா.என் முதலாளி அவா ஜாதி பையனை தான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இரு க்கார்.என் முதலாளி ‘வேணாம்’ வேணாம்’ இங்கேயே எனக்கு நிறைய பிஸினஸ் ஆறது’ என்று சொன் னாலும் கேக்காம மாசம் தன் சம்பள பணத்லே பாதியே அப்பாவுக்கு அனுப்பி வைக்கிறா அந்த பொண்ணு.அதுக்கு அவ என்ன பதில் சொல்றா தெரியுமா காமாக்ஷி.’அப்பா, நீங்க ‘பிஸினஸ்’ ஆரம்பி ச்ச போது கஷ்டப்பட்டு தானே என்னை படிக்க வச்சேள்.நான் இப்போ வசதியா  இருக்கேன்.நான் உங்களுக்கு பணம் அனுப்பாம இருந்தா என் கடமைலே இருந்து  நான் தவறியவளா ஆயிடுவேன். என் கடமையை பண்ண எனக்கு  அனுமதி குடுங்க’ என்று கெஞ்சறாளாம் காமாக்ஷி.பொண் குழந் தையா இருந்தா என்ன.ஆண் குழந்தையா இருந்தா என்ன.’கடமை’ ஒன்னு இருக்கே காமாக்ஷி

இந்த குழந்தை எங்கே,நம்ம பையன்களும் எங்கே சொல்லு.மலைக்கும் மடுவுக்கும் இருக்கற வித்தியாசமா இருக்கே ” என்று விரக்தியாய் பேசினார் ஏகாம்பரம்
“நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை தான்” ஆமோதிதாள் காமாக்ஷி.

சற்று நேரம் கழித்து காமாக்ஷி அம்மன் படத்தின் முன்னால் நின்றுக் கொண்டு ”உனக்கு எவ்வளவு பூஜைகள்ளாம் நான் மனம் உருகி பண்ணி வந்து இருக்கேன்.எவ்வளவு நோம்புகள் பக்தி சிரத்தையுடன் பண்ணி வந்து இருக்கேன்.எவ்வளவு விரதங்கள் பக்தியுடன் இருந்து வந்து இருக் கேன்.எனக்கு ஏன் இந்த கஷ்டத்தை குடுத்து இருக்கே” என்று கை கூப்பி கேட்டுக் கொண்டு இருந்தாள்.

காமாக்ஷி அம்மன் படத்துக்கு முன்னால் நின்றுக் கொண்டு இருக்கும் வேண்டிக் கொண்டு இருக்கும் மணைவியைப் பார்த்துச் சிரித்தார் ஏகாம்பரம்.

“என்னேப் பாத்து ஏன் சிரிக்கறேள். எவ்வளவு பூஜைகள்ளாம் நான் மனம் உருகி பண்ணி வந்து இருக்கேன்.எவ்வளவு நோம்புகள் பக்தி சிரத்தையுடன் பண்ணி வந்து இருக்கேன்.எவ்வளவு விரதங் கள் பக்தியுடன் இருந்து வந்து இருக்கேன்.அதே எல்லாம் நீங்கோ பாத்துண்டு தானே இருந்தேள். நான் அம்மன் கிட்டே பொய்யைச் சொல்லலையே.அப்படி இருக்கும் போது ஏன் என்னேப் பாத்து சிரிக்கறேள்” என்று ஒரு சின்ன குழந்தையைப் போலக் கேட்டாள் காமாக்ஷி.

ஏகாம்பரம் சிரித்துக் கொண்டே”காமு,நீ பண்ன பூஜைகள்,நோம்புகள்,வி¢ரதங்கள் எல்லாம் உண்மைத் தான்.நான் இத்தனை வருஷமா பாத்துண்டு தானே வந்துண்டு இருக்கேன்.ஆனா நீ அம்மனைப் பாத்து கேட்டுக் கொண்டு இருந்ததைப் பாத்து நான் சிரிச்சேன்” என்று சொன்ன போது காமாக்ஷிக்கும் ஒன்றும் புரியவில்லை.

“காமாக்ஷி,அந்த அம்பாளை ஏன் அந்த கேள்வியைக் கேக்கறே.நாம் வேண்டிக் கொண்டதைத் தானே அவள் நமக்கு தந்து இருக்கா” என்றார் ஒரு வித மன அமைதியுடன்.
மீண்டும் ஒன்னும் புரியாதவளாய் “நீங்க என்ன சொல்றேள்.நாமா அம்பாளை கேட்டோம் இந்த மாதிரியான பிள்ளகளே எங்களுக்குக் குடுன்னு” என்று கேட்டாள் காமாக்ஷி.

“நீ யோஜனைப் பண்ணிப் பார் காமாக்ஷி” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் சும்மா இருந்தார் ஏகாம்பரம்.

“சொல்லுங்களேன்,சும்மா நின்னுண்டு இருக்கேளே”என்று அவசரப் படுத்தினாள் காமாக்ஷி கொஞ்ச நேரம் ஆனதும் “நம்ம பிள்ளைங்க  வயத்லே இருந்தப்ப,நாம என்ன வேண்டிண்டோம்.  ’அம்பாளே பொறக்கும் குழந்தையை பொண்ணா குடுத்து விடாதே.அவாளை வளத்து,படிக்க வச்சு, நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணி,ஒருவன் கையில்  பிடிச்சு குடுக்க எங்க கிட்டே பண வசதி இல்லை.பிள்ளைக் குழந்தையா கொடும்மா.எங்க அந்தி காலத்திலே அவா சம்பாதிச்சு எங்களுக்கு  ஒரு வாய் சாதமாவது போடுவான்’ன்னு தானே வேண்டி கொண்டோம்.அம்பாள் நாம வேண்டிண்ட தே தானே அவ குடுத்து இருக்கா காமாக்ஷி.அவ பேர்லே ஒரு தப்பும் இல்லே.நாம வேண்டிக் கொண்ட திலே தான் தப்பு இருக்கு காமாக்ஷி” என்று தங்கள் தப்பை சுட்டிக் காட்டினார் ஏகாம்பரம்.

தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டாள் காமாக்ஷி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *