கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 6,585 
 
 

ஜகன் மஞ்சரியின் தலையை தடவி விட்டு,நெற்றியில் அழுத்தமாக முத்தத்தை பதித்துவிட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமானான் என்னங்க கதவை பூட்டி விட்டு போய்விடுங்கள் எனக்கு எழும்புவதற்கு சோம்பேறித்தனமாக இருக்கு என்றாள் மஞ்சரி,சனிகிழமை என்றாலே உனக்கு எழும்புவதற்கு நினைவு வராதே சரி சரி நீ படு நான் கதவை பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு போறேன் உன்னிடம் இன்னொரு சாவி இருக்கு தானே என்றான் ஜகன் ஆமாம் இருக்கு லைட்டை அனைத்துவிட்டுப் போங்கள் என்றாள் மஞ்சரி,அவன் சரியென்று சென்று விட்டான் அவள் மறுப்படியும் சுருண்டுப் படுத்துக் கொண்டாள்,சற்று நேரத்தில் மஞ்சரியின் போன் ரிங் ஆகி கட் ஆனது உடனே எடுத்துப் பார்த்தாள் மாயா என்று இருந்தது உடனே மஞ்சரி மறுப்படி ரிங் பன்னினாள் என்னடா எப்படி சரியான டையத்திற்கு ரிங் பன்னின காக்காவிற்கு மூக்கில் வேர்த்த மாதிரி என்றாள்,பிறகு இருக்காதா ஜகன் போய் இருப்பான் என்று எனக்கு தெரியாதா மகாராணி என் நினைவுகளுடன் கட்டிலில் தலையணையை கட்டிப் பிடித்துக்கிட்டு கிடப்ப அது தான் பாவமே என்று ரிங் பன்னினேன் என்றான் மாயா என்ற யாதேஷ்

ஆமா உனக்கு நினைப்பு தான்,உன்னை நினைத்து ஏங்குவதாக அப்படி எதுவும் இல்லை என்றாள் மஞ்சரி,பொய் சொல்லாதே நீ ஐபேடில் ஸ்கைப்பில் பேசு ஏக்கமா இல்லையா என்று நான் பார்க்கிறேன் என்றான் இரண்டு அர்த்தங்களுடன் அவன்,உனக்கு என்று மஞ்சரி செல்லமாக சினுங்கினாள்,அவள் மெதுவாக எழுந்துப் போய் ஐபேடை கையில் எடுத்தாள் ஸ்கைப்பை ஒன் பன்னினாள்,லைட்டை போடு இருட்டில் ஒன்றும் தெரிய மாட்டேங்குது என்றான் யாதேஷ்,மஞ்சரி எழுந்து லைட்டை போட்டு விட்டு மறுப்படியும் வந்து கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்,ஏய் இந்த நைட்டியில் நீ அழகாகவே இருக்க கொஞ்சம் பெட்ஷீட்டை கீழே இறக்கி விடேன் என்றான் அவன்,ஜகனுக்கு கொண்டாட்டம் தான் இரவு எல்லாம் என்றான் யாதேஷ்,நீ வாயை மூடு அவர் வந்து பக்கத்தில் படுத்த உடனே தூங்கிவிட்டார்,உன் அழகை ரசிக்காமலா என்றான் அவன்,அவர் லேட் ஆகி தான் வந்தார் பாவம் தூங்கிவிட்டார் என்றாள் மஞ்சரி,அப்ப எனக்காக தான் இந்த நைட்டியை போட்டியா நான் காலையில் போன் பன்னுவேன் என்று தெரிந்து தானே என் கண்ணுக்கு விருந்தாக இப்படி ஒரு நைட்டி போட்டு இருக்க என்றான் யாதேஷ்,அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று வாய் மட்டுமே சொன்னது அது தான் உண்மை என்று மஞ்சரி கண்கள் காட்டிக் கொடுத்தது யாதேஷிடம்

ஜகன் மஞ்சரி கணவன்,யாதேஷ் காதலன் இந்த காலத்தில் இதுவெல்லாம் சகஜம் என்று நினைக்கும் சில பெண்களின் மத்தியில் மஞ்சரியும் ஒரு ஆள்,யாதேஷ் காலேஜ் படிக்கும் போது மஞ்சரியை காதலிப்பதாக வந்து நின்றவனை அவளும் மறுப்பு இல்லாமல் காதலிக்க ஆரம்பித்தாள்,இருவரினதும் காதல் நன்றாக தான் போய் கொண்டு இருந்தது யாதேஷ் வெளிநாடு செல்லும் மட்டும்,தீடீரென்று ஒரு நாள் யாதேஷ் எனக்கு வெளிநாடு செல்வதற்கு வாய்பு வந்திருக்கு என்றான் மஞ்சரியிடம்,என்ன விளையாடுறீயா இன்னும் காலேஜ் முடிக்கவில்லை என்றாள் அவள்,வந்த வாய்ப்பை ஏன் நழுவவிட,மாமா பணம் கொடுத்து உதவுவதாக சொன்னார் என்றான் அவன்,இது எனக்கு சரியாக படவில்லை,முதலில் படிப்பை முடி அதன் பிறகு வெளியில் போவதற்கு யோசி இப்போது வேண்டாம் என்றாள் அவள்,யாதேஷ் அதை கேட்க்கவில்லை,பிடிவாதமாக இருந்தான்

நான் முதல் போய் எல்லாம் நன்றாக அமைந்தால் உடனே வந்து உன்னை திருமணம் செய்து அழைத்துக் கொண்டு போய்விடுகிறேன் என்றான் யாதேஷ்,அவள் அதை அரை மனதோடு ஒத்துக் கொண்டாள்,போனவன் ஆறு ஏழு மாதம் மஞ்சரியுடன் தொடர்பில் இருந்தான்,பிறகு எந்த தொடர்பும் இல்லை அவளும் யாதேஷ் நண்பர்கள் முதல் கொண்டு அவன் உறவினர்கள் வரை அனைவரையும் விசாரித்து விட்டாள் யாருக்கும் எதுவும் தெரியவில்லை,கடைசி முயற்சியாக தைரியத்துடன் யாதேஷ் வீட்டை தேடிப் போனாள் அவன் வீடு பூட்டி கிடந்தது,அக்கம் பக்கம் விசாரித்தப் போது அவர்கள் வீட்டை காளிப் பன்னி ஆறு ஏழு மாதம் இருக்கும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது அவளுக்கு ஒன்னும் புரியவில்லை,என்ன செய்வதென்றும் தெரியவில்லை,வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்

காதலித்த காதலைனை காணவில்லை,அவன் தொடர்பில் இருந்தால் அவனை காதலிக்கிறேன் என்று வீட்டில் கூறலாம்,தற்போது அதற்கும் முடியாது,இனி யாதேஷை எங்கு போய் தேடுவது என்று மஞ்சரிக்கு தெரியவில்லை,அதனால் அமைதியாக வீட்டில் பார்த்த ஜகனுக்கு கழுத்தை நீட்டிவிட்டாள் மஞ்சரி,ஆறு மாதம் சந்தோஷமாக வாழ்க்கை போனது,ஒரு நாள் ஜகன் மஞ்சரி இருவரும் சாப்பிட ஒரு ரெஸ்டாரன்டுக்குப் போனார்கள் அங்கு வெள்ளை யூனிபோம் அணிந்து வந்து நின்றவன் யாதேஷ்,இதை சற்றும் எதிர் பார்க்காத மஞ்சரி ஆடிப் போனாள்,அவனும் கொஞ்சம் தடுமாறி தான் போனான் சமாளித்துக் கொண்ட யாதேஷ் கையோடு கொண்டு வந்த மெனு கார்டை கொடுத்து விட்டு சட்டென்று சென்று விட்டான்,ஜகன் என்ன வேண்டும் என்று மஞ்சரியிடம் கேட்க்கும் போது தான் சுயநினைவுக்கு வந்தாள் அவள்,எதையாவது ஓடர் பன்னுங்கள் என்றாள்,ஏன் என்ன செய்து ஒரு மாதிரி இருக்க என்றான் ஜகன்,ஒன்னும் இல்லை என்று சமாளித்தாள்,பிறகு யாதேஷ் வரவில்லை,வேறு ஒருவன் வந்து தான் இவர்கள் ஓடர் பன்னிய உணவுகளை குறித்துக் கொண்டுப் போனான் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அவன் சுட சுட உணவுகளை கொண்டு வைத்து விட்டுப் போனான்.

மஞ்சரிக்கு சாப்பிட முடியவில்லை,ஏசியிலும் வேர்த்துப் போனது அவளுக்கு,மறுப்படியும் அவள் கண்களுக்கு யாதேஷ் எங்காவது தெரிகின்றானா என்று தான் பார்க்க தோன்றியது என்ன வந்ததில் இருந்து எதையோ தேடிக் கொண்டே இருக்க என்றான் ஜகன்,இல்லை எனக்கு தெரிந்தவர்கள் யாரோ இங்கு இருக்க மாதிரியே இருக்கின்றது அது தான் என்றாள் மஞ்சரி,இருக்கும் இருக்கும் நன்றாக தேடு,அப்படியே இருந்தால் நல்லது தான் நமக்கும் சேர்த்து பில்லை அவர்கள் தலையில் கட்டிவிடலாம் என்று கிண்டல் பன்னினான் ஜகன்,ஆனால் அவள் சிரிக்கும் நிலையில் இல்லை,யாதேஷ் எப்படி இங்கு வந்தான் அவன் தானா அல்லது அவனைப் போல் வேறு யாராவதுமா என்று மனம் குழம்பியது மஞ்சரிக்கு,எனக்கு போதும் என்று மஞ்சரி ஓடர் பன்னிய உணவில் பாதியை வைத்து விட்டாள்,ஜகன் முடிந்தளவு அவள் வைத்த சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிட்டு போதும் இதற்கு மேல் சாப்பிட முடியாது என்று வைத்து விட்டான்,பில் கொண்டு வந்து கொடுத்தான் ஒருவன் பணத்தை வைத்து கொடுத்து விட்டு இருவரும் போய் காரில் ஏறிக் கொண்டார்கள் மஞ்சரி தூக்கம் வருவதாக கண்களை இருக்க மூடிக் கொண்டாள், இல்லையென்றால் ஜகன் ஏதாவது கதைப்பான்,அதை கேட்க்கும் மனநிலையில் தற்போது அவள் இல்லை

வீடு வரும் மட்டும் மஞ்சரிக்கு யாதேஷ் நினைவாகவே இருந்தது,எப்படி இங்கு வந்து வேலை செய்கிறான்,வெளிநாட்டுக்கு போனவன் எப்போது திரும்பி வந்தான்,எப்படி என்னை மறந்தான்,கடவுளே இது என்ன சோதனை அவனை தேடி எந்த தகவல்களும் இல்லை என்பதால் தான் ஜகனை கட்டினேன்,இந்த ஆறு ஏழு மாதமாக சந்தோஷமாக தான் வாழ்க்கை போகிறது,இப்போது ஏன் என் கண்ணில் யாதேஷை காட்டின என்று கடவுளை நொந்துக் கொண்டாள் மஞ்சரி,காரணத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது,அடுத்த நாள் ஜகன் வேலைக்கு போனப் பிறகு,ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு அந்த ரெஸ்டாரன்டை தேடிப் போனாள் மஞ்சரி,என்னம்மா வேண்டும் என்று வரவேற்ப்பு இடத்தில் உட்கார்ந்து இருந்த ஒருவர் கேட்டார்,அவரிடம் இங்கு யாதேஷ் என்று ஒருவர் வேலை செய்கின்றாரா என்றாள் மஞ்சரி, ஆமாம் அம்மா இரண்டு மணிக்கு தான் வருவார், நீங்கள் யார் என்றார் அவர்,எனக்கு வேண்டப் பட்டவர் தான் என்றாள் மஞ்சரி,அவர் வீடு பக்கத்தில் தான் இருக்கு,அங்கு போய் பாருங்கள் இப்போது தான் பத்து மணி,இரண்டு மணி மட்டும் அவருக்காக காத்திருப்பதை விட அங்கு போய் பார்ப்பது நல்லது அம்மா என்றார் அவர்

எனக்கு வீட்டு விலாசத்தை கொஞ்சம் தர முடியுமா என்றாள் மஞ்சரி,நீ யார் என்றே தெரியாது எப்படியம்மா விலாசம் கொடுப்பது இரு அம்மா அவருக்கு போன் போட்டு கேட்கிறேன் உனது பெயர் என்ன என்றார் அவர்,மஞ்சரி என்றாள் அவர் யாதேஷுக்கு போன் எடுக்கும் போது,இவள் மனம் படபடத்தது அவர் உங்களை தேடிக் கொண்டு மஞ்சரி என்று ஒரு பொண்ணு வந்திருக்கு வீட்டு விலாசம் கேட்க்குது கொடுக்கவா என்றார் யாதேஷிடம்,அந்த பொண்ணுகிட்ட கொஞ்சம் போனை கொடுங்கள் என்றான் அவன்,அவர் மஞ்சரியிடம் போனை கொடுக்க அவள் கைகள் நடுங்கியது ஹலோ என்றான் யாதேஷ்,அதே குரல் உங்களை பாக்கனும் என்று தட்டுத் தடுமாறி சொன்னாள் மஞ்சரி,சரி அங்கு ஒரு அரைமணித்தியாலம் வெயிட் பன்னு நான் வந்து விடுகிறேன் என்று போனை வைத்து விட்டான் யாதேஷ்

அரைமணி நேரம் மஞ்சரி மனதில் ஆயிரம் கேள்விகள் வந்து என்ன சொல்வான் என்னை காதலித்து கட்டாமல் துரோகம் பன்னி விட்ட என்று கத்துவானோ,அப்படி என்றால் இத்தனை நாட்கள் என்னை தேடி வரவில்லையே,எனக்கு ஒரு போன் கூட பன்னவில்லையே இவனுக்காகவே போன் நம்பரை கூட இன்னும் மாத்தவில்லை இவன் தான் என்னை ஏமாத்தி இருக்கான் வந்து என்ன சொல்வான் பல குழப்பம் மனதில் யாரோ பைக்கில் ஓன் அடிக்கும் சத்தம் திரும்பி பார்த்தாள் யாதேஷ் பைக்கை நிறுத்தும் இடத்தில் பைக்கை நிறுத்தியவன் கையை அசைத்தான் மஞ்சரியை வரும்படி அவள் அவனை நோக்கி நடக்கும் போது மனம் படபடவென்று அடித்தது அவன் பக்கத்தில் போனவுடன் மயக்கமே வருவதுப் போல் இருந்தது,யாதேஷ் அவளிடம் அமைதியாக என் பின்னால் வா இது நான் வேலை செய்யும் இடம் பக்கத்தில் ஒரு காப்பி கடை இருக்கு அங்கு போய் பேசலாம் என்று அவன் வேகமாக நடந்தான்,மஞ்சரியும் அவன் பின்னாடியே நடந்தாள் இருவரும் அந்த காப்பி கடையோரத்தில் உட்கார்ந்தார்கள் மஞ்சரி யாதேஷை நிமிர்ந்து பார்த்தாள் அதே காந்த கண்கள் அவளை ஏதோ செய்தது கண்களை தாழ்த்தியவள் எப்படி என்னை மறந்தீங்கள் என்றாள் கண்களின் கண்ணீர் துளியுடன்,உன்னை மறக்கவில்லை எனக்கு வேறு வழியில்லை என்று பெருமூச்சி விட்டான் அவன்,மேலும் அவன் சொன்னது நான் வெளிநாடு போய் ஆறு மாதம் ஒரு கம்பனியில் வேலை செய்தேன்,அந்த கம்பனி கள்ளக்கடத்தலோடு தொடர்புடைய கம்பனி என்று அங்கு வேலை செய்த வெளுயூர் ஆட்களை மட்டும் அரெஸ்ட் பன்னிடார்கள் அதில் நானும் ஒருவன் என்றதும்

மஞ்சரி ஆடிப் போய்விட்டாள் உண்மையாகவா என்றாள் அவள்,ஆமாம் பல கேள்விகள்,பல துன்புறுத்தல்கள் வேண்டாம் என்று போய்விட்டது ஆறு ஏழு மாதங்களாக என்றான் அவன் பாவமாக,நான் உங்களை தேடி உங்கள் வீட்டுக்கு போனேன்,ஆனால் அங்கு யாரும் இல்லை என்றாள் மஞ்சரி,அடிக்கடி பொலிஸ் வந்து நம் வீட்டில் விசாரித்து இருக்கார்கள்,ஊர் ஆட்கள் ஒரு மாதிரி பேச ஆரம்பித்தவுடன் குடும்பமே வேறோரு இடத்திற்கு போய்விட்டார்கள் என்றான் யாதேஷ்,ஏழு எட்டு மாதம் ஆகிவிட்டது வெளியில் விடுவதற்கு,அதன் பிறகு பாஸ்போட்டை மட்டும் கையில் கொடுத்து இனி இந்த நாட்டில் இருக்க கூடாது என்று அனுப்பிவிட்டார்கள் நான் கையில் எதுவும் இல்லாமல் வந்து இறங்கினேன்,ஊரில் யாரும் இல்லை அந்த பதட்டத்தில் மாமா வீட்டுக்குப் போனேன் அவர் தான் சொன்னார் அம்மா,அப்பா தங்கை இருக்கும் இடத்தை

மாமா அவர் மகள் கார்த்திகாவின் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை எனக்கு கொடுத்து உதவினார் வெளியூர் போவதற்கு,நான் போய் உழைத்து அனுப்பி விடுவேன் என்ற நம்பிக்கையில்,தற்போது எதுவும் இல்லாமல் வந்து நின்றதும் மாமாவிற்கு மனவருத்தம்,கார்த்திகாவின் திருமணத்தை எப்படி நடத்துவது என்று தெரியாமலும் தடுமாறிப் போய் நின்றார்,என் காதல் தெரியாத நம் வீட்டில் நீ தான் கார்த்திகாவை கட்ட வேண்டும் என் பெற்றோர்கள் கட்டாயப் படுத்தி கார்த்திகாவை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றான் யாதேஷ்,மஞ்சரி அமைதியாக உட்கார்ந்து இருந்தாள் கண்களில் கண்ணீர் மட்டும் எட்டிப் பார்த்தது,நீங்கள் எங்களுடைய காதலை வீட்டில் சொல்லவில்லையா என்றாள் மஞ்சரி,எப்படி சொல்வது மாமா இக்கட்டான நிலைக்கு தள்ளப் பட்டது என்னால் மேலும் எங்கள் காதலை சொல்லி அவர்களை காயப் படுத்த நான் விரும்பவில்லை அதனால் மறைத்து விட்டேன் என்றான் அவன்,அப்ப நான் எப்படி போனாலும் பரவாயில்லை என்று யோசித்து விட்டீங்கள் அப்படி தானே என்றாள் மஞ்சரி,அதற்கு அவனிடம் பதில் இல்லை,அமைதியாக இருந்தான்,எப்போது நீ திருமணம் செய்துக் கொண்ட என்றான் யாதேஷ்,நானும் உங்களை தேடாத இடம் இல்லை,எனக்கும் வேறு வழி தெரியாமல் ஜகனை திருமணம் செய்து கொண்டேன் என்றாள் மஞ்சரி,இருவரும் அமைதியாக இருந்தார்கள்,சரி நமக்கென்று கடவுள் அமைத்த வாழ்க்கை இது தான் என்றாள் மஞ்சரி,யாதேஷ் அவனுடைய போன் நம்பரை கொடுத்தான்,இது என்னுடைய புதிய நம்பர் என்று அவளும் வாங்கி வைத்துக் கொண்டாள்,நீ ஏதும் போன் நம்பரை மாற்றவில்லை தானே என்றான் அவளும் இல்லை என்றாள்,இருவர் கண்களும் கலங்கிய நிலையில் விடைப் பெற்றுக் கொண்டார்கள்

அவனை விட்டு வரும் போது மஞ்சரிக்கு கவலையாக இருந்தது அவன் இடுப்பை கட்டிப் பிடித்தப் படி பைக்கில் சுற்றிய காலங்களும் உண்டு,எத்தனை கற்பனைகள் எத்தனை ஆசைகள் அவன் கைகோர்த்து நடந்த நாட்கள் இதுவெல்லாம் இனி திரும்பி வரவே வராது என்று நினைத்தப் படி ஓர் ஆட்டோவை பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் மஞ்சரி,யாதேஷுக்கும் மஞ்சரி நினைவாகவே இருந்தது இருவரும் வருங் காலத்தைப் பற்றி எவ்வளவு பேசியிருப்போம் அழகான கற்பனைகளோடும் ஆசைகளோடும் இருவரும் எவ்வளவு நெருக்கமாக இருந்து இருக்கோம் இன்று அவள் வேறொருவன் மனைவி மறுப்படியும் ஏன் நான் அவளைப் பார்த்தேன் என்று அவன் கவலைப் பட்டான்,நாட்கள் சென்றது ஒரு நாள் யாதேஷ் போன் பன்னினான்,மஞ்சரி போனை எடுத்தாள் எப்படி இருக்க என்றான் நன்றாக இருக்கேன் என்றாள் நான் போன் பன்னி பேசினால் உனக்கு ஏதும் பிரச்சினையா என்றான் அப்படி எதுவும் இல்லை என்றாள் மஞ்சரி இருவரும் அடிக்கடி போனில் பேச ஆரம்பித்தார்கள் ஜகன் காலை எட்டு மணக்கு வேலைக்குப் போய் விடுவான்,கார்த்திகாவும் அந்த நேரத்தில் வேலைக்குப் போய் விடுவாள்,யாதேஷ் இரண்டு மணிக்கு வேலைக்குப் போவதால் அது மட்டும் அவனுக்கு நேரம் இருக்கும் மஞ்சரியுடன் கதைப்பதற்கு,ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை என்று பேச ஆரம்பித்தவர்கள் இப்போது எல்லாம் ஒவ்வொரு நாளும் பேச ஆரம்பித்து விட்டார்கள் இருவரும் ஒரு நாள் கூட கதைக்காமல் இருக்க முடியாது ஞாயிற்று கிழமையை தவிர்த்து,பக்கத்தில் இல்லாத குறை மட்டும் தான் போனில் வீடியோ ஒன் பன்னிவிட்டால் தங்களையே மறந்து இருவரும் மணித்தியாலமாக பேசுவார்கள்

ஜகனிடம் கூட வெட்க்கப் படும் மஞ்சரி யாதேஷிடம் துளியும் இல்லாமல் போனது காரணம் இருவரும் செக்ஸ் முதல் கொண்டு நாட்டு நடப்பு மட்டும் அனைத்தையும் அலசி ஆராய்வார்கள் ஜகன் வாயே திறக்க மாட்டான் லைட்டை அனைத்து விட்டு படுத்து எழும்பினால் போதும் என்று நினைக்கும் ஆள் அவன்,மஞ்சரிக்கு அது கொஞ்சம் போரிங் தான் யாதேஷிடம் பேச ஆரம்பித்ததில் இருந்து,அவன் ஒவ்வொன்றையும் ரசிப்பவன்,போடும் ஆடைகள் கொண்டு அனைத்தயையும் ரசனையோடு பார்ப்பவன் அதனால் என்னவோ தனது மொத்த அழகும் அவனுக்கு தெரிய வேண்டும் என்பதில் மஞ்சரி கவனமாக இருப்பாள்,இப்போதும் அப்படி ஒரு நைட்டியுடன் யாதேஷ் முன்னுக்கு தலையணையில் சாய்ந்து கதை பேசிக் கொண்டு இருக்காள் மஞ்சரி,ஏய் இந்த நைட்டியில் நீ ரொம்ப அழகாக இருக்க பார்த்தால் எனக்கு என்னமோ செய்கிறது ஒரு பத்து நிமிடம் என்று அவன் கண்ணடித்தான் அவளும் புரிந்துக் கொண்டு இருவரும் போனில் பாரத்து எல்லாம் முடித்துக் கொண்டார்கள் மறுப்படியும் நைட்டியை சரி செய்துக்கொண்டு மஞ்சரி நிமிர்ந்து உட்கார்ந்தாள், இன்னைக்கு அதிகமாக சந்தோஷமாக இருப்பதாக தெரியிது என்றாள் மஞ்சரி யாதேஷிடம்,ஆமாம் கார்த்திகா கர்ப்பமாக இருக்காள் என்றான் யாதேஷ்,அப்படியா சந்தோஷமான விடயம் எத்தனை மாதம் என்றாள் மஞ்சரி,இரண்டு மாதமாக போகுது என்று நினைக்கிறேன் என்றான் யாதேஷ் நீயும் அப்பாவாகப் போற என்றாள் மஞ்சரி ஆமாம் நீ தான் இன்னும் பெத்துக்காம இருக்க ஜகன் பக்கத்தில் வைத்துக் கொண்டு என்ன பன்னுறான் என்று சிரித்தான் யாதேஷ்,முயற்சி செய்றோம் ஆனாலும் ஒன்னும் இல்லையே என்றாள் மஞ்சரி அப்ப நான் தான் வரனும் என்றான் யாதேஷ் நீ வாயை மூடு நானும் நீயும் கட்டி இருந்தாள் இன்னு நேரம் அம்மாவாக ஆகி இருப்பேன் என்றாள் பெருமூச்சி விட்டப் படி

சரி சரி கவலைப் படாதே இப்போதும் நானும் நீயும் சந்தோஷமாகத் தானே இருக்கோம் பக்கத்தில் இல்லாத குறை மட்டும் தானே என்றான் யாதேஷ்,இது ஒரு வாழ்க்கையா இரண்டு பேரும் நாங்கள் கட்டி இருப்பவர்களுக்கு துரோகம் பன்னிக் கொண்டு கள்ளமாக இன்னும் காதலித்துக் கொண்டு என்ன வாழ்க்கை யாதேஷ் இது என்றாள் மஞ்சரி,உனக்கு என்னை மறக்கவும் முடியாது நீ இல்லாமல் எனக்கு இருக்கவும் முடியாது இனி,நானும் நீயும் அந்தளவிற்கு நெருக்கம் ஆகி விட்டோம்,இந்த வாழ்க்கை சரியென்று நான் சொல்ல வரவில்லை,துரோகம் செய்வதும் உண்மை,ஆனால் இந்த அன்பு இல்லாமல் இரண்டு பேருக்கும் வாழ முடியாது,உனக்கு முடியும் என்றால் என்னிடம் இரண்டு நாட்கள் பேசாமல் இரு பாக்கலாம் அது உனக்கும் முடியாது எனக்கும் முடியாது எத்தனை தடவைகள் நானும் நீயும் அப்படி முயற்சி செய்து தோத்து போய் இருக்கோம் எல்லார் பார்வைக்கும் நாங்கள் துரோகிகள் தான் இந்த போன்,ஐபேட்,லெப்டொப் எல்லாம் நம் கைகளில் இருக்கும் மட்டும் எதுவும் பன்ன முடியாது,நாங்களே இந்த தொடர்பு வேண்டாம் என்று ஒதுங்கினால் கூட இதுகள் நம்மை விடாது என்றான் யாதேஷ்,அதுவும் ஒரு வகையில் உண்மை தான் என்றாள் மஞ்சரி,இதுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லனும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *