திசை மாறிய தென்றல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 2,414 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலை ந்தரை மணிக்கே வானம் சினக்க தொடங்கிவிட்டது. தங்க கட்டிகளை கரைத்து ஊற்றினாற் போல் தகதகவென ஜொலித்தது. காலைப் பனிகாற்று இதமாக இருந்தது.

போர்வைக்குள் இருந்து வெளிப்பட்டான் ஆதர்ஷ் இரண்டு கைகளையும் கட்டிலில் ஊன்றி குனிந்த நிலையில் சிறிது நேரம் கண்களை மூடியபடி இருந்தான். பின்பு கண்களை தேய்த்துவிட்டுக் கொண்டு எழுந்தான். ஜன்னலின் அருகே வந்து திரைசீலையை முழுவதுமாக விலக்கினான். மெல்ல எழும்பி இருக்கும் மஞ்சள் சூரியனையும் மஞ்சள் கலரும் சிவப்பு கலரும் கலந்த நிலையில் இருக்கும் வானத்தையும் பார்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுவான். அதிகாலையின் இயற்கையும் குளுமையும் நிசப்தமும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். இறய்கையை உன்னிப்பாக ரசிக்கும் பொது கவலை டென்ஷன் எல்லாம் விலகி மனதில் ஒருவித அமைதி உருவானதை நிறையவாட்டி உணர்ந்திருக்கிறான்.

தாடையில் இருந்த முள்தாடியை ஆள்காட்டி விரலால் நெருடியபடி சிவந்த வானத்தை பார்த்து ரசித்தான் டாக்டர் ஆதர்ஷ் நேரம் ஆக ஆக வானம் வெளீர் நிலநிறமாக மாறத் தொடங்கியது.

ஆதர்ஷ் டர்க்கி டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான். எவ்வளவு குளிராக இருந்தாலும் பச்சை தண்ணீரில் தான் குளிப்பான். தினமும் ஷவரில் குளிப்பது தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

குளித்துவிட்டு வந்த ஆதர்ஷ் ப்ளூ நிற ஜீன்ஸீம் சிவப்பு நிற ரவுண்ட் நெக் டீஷர்ட்டும் அணிந்துக் கொண்டான்.

டீஷர்ட்டுக்குள் புரண்டுக் கொண்டிருந்த மெலிதான தங்க சங்கலியை எடுத்து வெளியே விட்டுக் கொண்டான். ஈரத்தலையிலேயே நேர் வகிடு எடுத்து வட்ட வடிவமான சீப்பால் தலைவாரிக் கொண்டான். கேசம் காய காய புஸீபுஸீவென் அலைப்பாயத் தொடங்கியது. முள் தாடியை நீட்டு சீப்பால் சரிசெய்துக் கொண்டான். உலர்ந்து போய் இருந்த உதட்டை லேசாக எச்சில் பண்ணி பளபளப்பாக்கினான். தன்னோட பர்சனாலிட்டியை கண்ணாடியில் ஒரு நொடி பார்த்து ரசித்துவிட்டு கண் சிமிட்டி கொண்டான். ஆக்ஸ் பர்ப்பும் நறுமணத்துடன் கம்மென்று அறையை விட்டு வெளியே வந்தான்.

அம்மா மங்களா வழக்கம் போல் சமையல் அறையில் பரபரப்பாக இருந்தான். அப்பா ஈஸ்வர் டிவியில் பக்தி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்து ரிடையர்டு ஆனவர். இரண்டு பையன்களையும் நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவர ரொம்பவே கஷ்டப்பட்டார். அவர் பட்ட கஷ்டத்துக்கு பலன் நன்றாகனே கிடைத்தது. இரண்டு மகன்களும் இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.

மங்களாளின் சமையல் வீடு முழுக்க புதுமணத்துடன் கமகமத்தது. நெற்றியில் இருந்த வியர்வையை காட்டன் புடவையால் ஒற்றியபடி கரண்டியும் கையுமாக சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

“ஆதர்ஷ் டிபன் ஆயிட்டே இருக்கு ஒரு பத்து நிமிஷம்பா!” என்றாள் பரபரப்பாக.

“மெதுவாகவே ரெடி பண்ணுங்க எனக்கு என்ன அண்ணன் மாதிரி டான்னு ஒன்பதரைக்கா ஆபிஸ் ஒரு பத்தடி எடுத்து வெச்சா என்னோட கிளினிக்கு போயிடலாம். பேஷண்ட் இல்லாதப்ப நடுவுல கூட வந்து சாப்பிட்டுட்டு போயிடுவேன்.!”

“நீ கிளினிக்கில் ஒழுங்காக உட்காரததால் தான் வர வர பேஷண்ட்ஸீம் சரியாக வர மாட்றாங்க! ஒழுங்கா நான் சொன்னமாதிரி எம்.பி.பி.எஸ் படிச்சிருந்தேன்னா இந்நேரம் சிட்டிக்குள்ள நாலு நர்சிங் ஹோம் ஓபன் பண்ணியிருக்கலாம்!”

“கால்நடை மருத்துவத்துக்கு என்ன குறைச்சன். மிருகங்களும் நம்மளை மாதிரி உணர்ச்சியுள்ள ஜீவராசிகள் தான். அதுங்களுக்கு சேவை செய்றதில் ஒண்ணும் தப்பில்லை!”

புருவத்தை சுருக்கிக் கொண்டு ஈஸ்வர் சொன்னார்.

“இப்ப நான் என்ன சொல்லிலிட்டேனு காலங்காத்தால என் மேல பாய்றீங்க, நான் என்ன சொன்னாலும் அதுக்கு மறுப்பா ஏதாவது பேசலைன்னா உங்களுக்கு தூக்கம் வராது!”

“சரி… சரி… விடுங்கம்மா காலையிலேயே உங்க கச்சேரியை ஆரம்பிக்காதீங்க!” என்றான் ஆதர்ஷ்.

“டிபன் ரெடியாயிடுச்சி… சாப்பிட வாடா!”

“அண்ணா எங்கேம்மா? இன்னும் காணோம்?”

“சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆச்சே ஆபீஸில் வேலை பார்க்கிறது போதாதுன்னு வீட்டுல வேற எந்நேரமும் சிஸ்டம் முன்னாடியே உட்கார்ந்துகிட்டு இருக்கான்!”

ஆதர்ஷ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். கம்ப்யூட்டரில் சேட் பண்ணுவது அவனுக்கு தெரியும். மங்களா பண்ணி இருந்த இட்லியை தேங்காய் சட்னி, புதினா சட்டினியுடன் சாப்பிட்டுவிட்டு வீட்டின் முன்புறம் இருந்த வெரண்டாவிற்கு வந்தான் ஆதர்ஷ். அதன் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி கதவை திறந்தான்.

அந்த அறை தான் அவனோட கிளினிக். கண்ணாடி கதவில் மாட்டியிருக்கும் ஸ்க்ரீன் எந்நேரமும் முடி தான் இருக்கும். உள்ளே சென்று கண்ணாடி கதவை சாத்தினான்.

அந்த அறையின் முன்புற கதவை திறந்து வைத்தான். வெளியே போடப்பட்டிருந்த மரபெஞ்சில் இரண்டு பேர் காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பெண் அவளது நாய்குட்டியை மடியில் வைத்து தடவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு சற்று தள்ளி ஒரு நடுதர வயதுக்காரர். அவரது பூனையை எடுத்து வந்திருந்தார்.

ஆதர்ஷ் ப்ரவுன் நிற குஷன் இருக்கையில் போய் அமர்ந்தான்.

கண்ணாடி மேசையின் மீதிருந்த பெல்லை அழுத்துவதற்காக போனான்…

அந்த நேரம் கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு ஆதர்ஷின் அண்ணன் முருகேஷ் வந்தான்.

அப்படியே ஆதர்ஷின் சாயலில் இருந்தான். ஆனால் முகத்தில் சற்று முதிர்ச்சி தெரிந்தது.

“ஹாய் அண்ணா குட்மார்னிங்!” என்றான் ஆதர்ஷ்.

“இன்னுமா ஆபிஸீக்கு கிளம்பலை!”

“சூடான இட்லியை எல்லாம் நீ காலிபண்ணிட்டு போயிட்டே அம்மாவை இட்லியை சூடு பண்ணச் சொல்லியிருக்கேன். இதுக்குள்ளே இருந்த சி.டி எங்கேடா?”

முகேஷின் கையிலிருந்த சி.டி. பவுச்சில் அஜித்தின் புகைப்படம் போட்டிருந்தது.

“ஓ அஜித் படமா? நேத்து ராத்திரி பார்த்துகிட்டிருந்தேன் அப்படியே அசந்து தூங்கிட்டேன்!”

“ஒரு சி.டி.யை எடுத்தேன்னா அந்தந்த கவரில் கரைக்டா வைனு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்!”

“என் ரூமில் சி.டி. ப்ளேயரில் தான் இருக்கும். கொஞ்சம் இருங்க பார்த்து எடுத்துக்கிட்டு வர்றேன்!” என்று எழுந்து போனான். ஆதர்ஷ் சென்றதும் அவன் சீட்டில் அமர்ந்தான் முகேஷ். கை தெரியாமல் பட்டு பெல்லை அழுத்திவிட்டான்… தலையை நிமிர்த்தியவன் ஒரு கணம் மின்னலை தாக்கியவன் போல் பிரமித்து போனான்.

அவன் எதிரில் அழகு தேவதையாய் மின்னும் கண்களுடன் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தாள். நழுவி விழுந்த கிரஷ் துப்பட்டாவை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டாள். மடி மீது வைத்திருந்த பொமரேனியன் நாய்குட்டியை பாவமாக தடவி கொடுத்துக் கொண்டிருந்தாள். முகேஷை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“டாக்டர் என்னோட நாய்க்குட்டி இரண்டு நாளாக எதுக் கொடுத்தாலும் சாப்பிடமாட்டேங்குது கொஞ்சம் என்னது பார்த்துச் சொல்லுங்களேன்!”

அவள் நாய்க்குட்டியை அவனிடம் நீட்டினாள். அவன் கண்களை இமைக்க மறந்து நாய்க்குட்டியை வாங்கினான்.

“பெயர் என்ன?”

“பப்பி டாக்டர்!”

“உங்க பெயர் என்ன?”

“சிந்து டாக்டர்!”

“அழகான பெயர்! வயசென்ன!”

“ஒரு வயசு!”

“ஒரு வயசா… நான் உங்க வயசை கேட்டேன்!”

“என்னோட வயசெல்லாம் உங்களுக்கு எதுக்கு டாக்டர்?”

“ஐயம் சாரி… ம்… ம்… என்ன மாத்திரை கொடுக்கலாம்… நான் இப்போ அவசரமாக ஹாஸ்பிடலுக்கு கிளம்பிகிட்டிருக்கேன் அங்கே நடிகை ரம்பாவோட டால்மேஷன் ப்ரெக்னட்டாக இருக்கிறது கண்டிஷன் கொஞ்சம் கிரிட்டிக்கல் நான் போய் தான் ஆப்ரேஷன் பண்ணி குட்டியை வெளியே எடுக்கனும்… பேசக் கூட நேரம் இல்லை. உங்க மொபைல் நம்பர் குடுத்தீங்கன்னா நான் இப்போ காரில் போகும் போது உங்க பப்பிக்கு என்ன மாத்திரை குடுக்கலாம்ங்கிறதை சொல்லிவிடுவேன்…”

வேக வேகமாக கிளம்புவது போல எழுந்தான். சிந்து வெறுவழியில்லாமல் அவளது மொபைல் நம்பரை அவனிடம் சொன்னாள். பின்பு தயக்கமாக கிளம்பினாள்.

“கவலையடாமல் போங்க இப்போ ஒரு பத்து நிமிஷத்துல உங்களுக்கு கால் பண்றேன்!”

அவள் நாய்க்குட்டியை தூக்கி கொண்டு எழுந்தாள். கிளினிக்கின் வெளியே நிறுத்தியிருந்த ஸ்கூட்டியில் கிளம்பி போனாள். அவள் சென்ற பிறகு சி.டி.யுடன் அருகே வந்தான் ஆதர்ஷ்.

“இந்தா அண்ணா சி.டி!”

“சி.டி.யை இந்த கவரில் போட்டுடு பொமரேனியன் நாய்க்குட்டி இரண்டு நாளா சாப்பிடலேன்னா என்னடா மாத்திரை குடுக்கணும். என் ஃபிரெண்ட் ஒருத்தன் அவசரமாக போன் பண்ணி கேட்டான். கொஞ்சம் சொல்லுடா!”

ஆதர்ஷ் மாத்திரையின் பெயரைச் சொன்னான். மாத்திரையின் பெயரை ஒரு முறை மனதிற்குள் சொல்லி மனப்பாடம் செய்துக் கொண்டான்.

“முகேஷ் சாப்பிடவாப்பா!”

மங்களா அழைக்கும் தரல் கேட்டது. மூத்த பையன் என்பதால். அவன் மீது அவளுக்கு பிரியம் ஜாஸ்தி.

“இதோ வர்றேம்மா!” முகேஷ் மனதிற்குள் சீட்டி மன அடித்துக் கொண்டு சாப்பிடுவதற்காக சென்றான்.

2

தி நகரில் உள்ள ராமலிங்க நகரில் இருக்கும் மூன்றாவது வீடு தான் சிந்துவின் வீடு. க்ரோடன்ஸ் செடிகளும், ரொௗ செடிகளும் வீட்டின் முன் புறத்தில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. மெயின் கேட்டின் முன்பு ஸ்கூட்டியை நிறுத்தி ஹாரன் அடித்தாள். யாரும் வந்து திறக்காததால் ஸ்கூட்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு அவளே சென்று கேட்டை திறந்தாள். கேட்டை திறந்ததும் தான் தாமதம் பப்பி துள்ளி குதித்துக் கொண்டு உள்ளே ஓடியது.

ஸ்கூட்டியை போர்டிகோவில் நிறுத்திவிட்டு கேட்டை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

“சிந்து வந்துட்டியா? டாக்டர் என்ன சொன்னார்?” டி.வியில் மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அவள் அம்மா சாந்தா தேவி கேட்டாள்.

“ஏம்மா வந்து கேட்டை திறக்ககூடாது?”

“நான் என்ன சும்மாவா உட்கார்ந்திருந்தேன்… முக்கியமான ஸீன் போயிகிட்டிருக்கு… சரி அதை விடு… டாக்டர் என்ன சொன்னார்?”

“டாக்டர் அவசரமாக ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிகிட்டிருக்கார் அங்கே ஏதோ அவசர வேலையாம். என்னோட போன் நம்பரை வாங்க வெச்சிருக்கார். அப்புறம் போன் பண்ணி என்ன மாத்திரை குடுக்கலாம்ங்கிறதை சொல்வாராம். பத்து நிமிஷத்துல போன் பண்றேன்னார். இன்னும் அவர் கிட்டே இருந்து போனை காணோம்!”

“புதுசா இருக்கே! டாக்டர் அங்கே தானே இருந்தார். மாத்திரை பெயரை எழுதி தருவதற்கு இரண்டு நிமிஷம் ஆகுமா…சொல்லியிருக்கலாம்…”

“அவரு ரொம்ப அவசரத்துல இருந்தாரும்மா!”

மதியானத்துக்கு மேலேயும் முகேஷிடமிருந்து போன் வராததால் சிந்துவிற்கு சாப்பாடு இறங்க மறுத்தது.

“ஏய் அப்பா வர்றார் சாப்பிடமால் நீ இப்படி உம்மென்று இருப்பதைப் பார்த்தால் கத்தப் போறார்!”

சாந்தாதேவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தர்மராஜ் வந்து விட்டார். எப்பொழுதும் மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிடுவார். சொந்தமாக இரண்டு கடைகள் வெச்சிருக்கார். ஒன்று கிஃப்ட் ஷாப், மற்றொன்று மளிகை கடை.

“சிந்துவோட செர்ந்து நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க!”

“இல்லை சாந்தா கடையில் வேலை இன்னும் முடியலை, முடிச்சிட்டு வந்து சாப்பிட்டுகிறேன். மோர் ஏதாவது இருந்தால் குடு!”

ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருந்த மோரை பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்தாள். ஒரு பெரிய கிளாசில் ஊற்றி அவரிடம் கொடுத்தாள்.

“சாப்பாட்டு தட்டை முன்னாடி வெச்சிகிட்டு சிந்து ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கா!”

அவளருகே ஒரு சேரை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தார்.

“அ… அப்பா நம்ம பப்பி இரண்டு நாளா எதுவுமே சாப்பிடமாட்டேங்குது. டாக்டர்கிட்டே தூக்கிட்டு போனேன் அவர் அவசரமாக வெளியே கிளம்பி பேயிட்டார். என்ன மாத்திரை குடுக்கலாங்கிறத போன் பண்ணி சொல்றேன்னார். அவர் கிட்ட இருந்து இன்னும் போனைக் காணோம்!”

“எந்த டாக்டடும்மா?”

“டாக்டர் ஆதர்ஷ்ப்பா!”

“அது யாரும்மா புதுசா இருக்கு?”

“என்னோட ஃப்ரெண்ட் தான் சொன்னா. அவர் ரொம்ப ராசியான ருக்டர்னு. அதனால தான் அவர்கிட்டே கூட்டிகிட்டு போனேன். கடைசியில இப்படி ஆயிடச்சு!”

“சாந்தா சிந்துவோட செல்போனை எடுத்துகிட்டு வா!”

“என்னுமோ எடுக்க முடியாத தூரத்தில் இருக்கிற மாதிரி கேட்கறீங்க. காலையிலிருந்து அவளோட கையில் தான் வெச்சிகிட்டிருக்கா!”

சிந்த அவள் இடதுகையில் வெச்சியிருந்த செல்போனை அப்பாவிடம் கொடுத்தாள்.

“ஒரு மெஸேஜ் கூடவா டாக்டர் அனுப்பலை!” என்று அவள் போனில் ஏதாவது மெஸேய் வந்திருக்கா என்று பார்த்தார்.

“நீங்க இரண்டு பேரும் எவ்வளவு தான் தேடினாலும் அதுல வந்த மெஸேஜை கண்டுபிடிக்க முடியாது!”

குரல் வந்த திசையை சிந்துவும் தர்மராஜும் ஒன்றாக திரும்பி பார்த்தார்கள். சிந்துவோட தம்பி யுவராஜ் புன்னகையோடு வந்தான்.

“உனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்த மெஸேஜை நான் தான் டெலீட் பண்ணினேன்!”

“அடப்பாவி ஏன்டா அப்படி பண்ணினே என்னோட மொபைலை நீ எப்போ எடுத்தே?”

“உன்னோட பப்பிக்கு உடம்பு சரியில்லைன்னாலும் கண்ணாடி முன்னாடி நின்னு அழகு பாக்கிறதை விட மாட்டியே. அப்ப தான் உனக்கு தெரியாமல் எடுத்தேன்!”

“எது எதுல விளையாடறதுனு ஒரு விவஸ்தை இல்லை” என்று தர்மராஜ் கேட்டார்.

“பின்னே என்னப்பா? என்னோட ஃப்ரெண்டஸ் அனுப்புற மெஸேஜை மட்டும் அக்கா வேணும்னே டெலிட் பண்றா. அவளை மாதிரி இன்னிக்கு நானும் விளையாடி பார்த்தேன்!”

“உன்னை டாக்டர் இல்லை இன்ஜினியரிங் லைனில் விடனும்னு ஆசைப்பட்டேன். நீ வாங்கின மார்கிற்கு பி.பி.ஏ சீட்டு தான் கிடைச்சது. உனக்கு இந்த வயசுல செல்போன் வாங்கி கொடுத்ததே பெரிய விஷயம். இது மாதிரி சேட்டை எல்லாம் வேற பண்றீயா?”

“நல்லா கேளுங்கப்பா!”

*டாக்டர் என்னடா மாத்திரை சொல்லியிருந்தார்!”

“இவன்கிட்டே போய் கேட்கறீங்க…இவனுக்கு அந்த மாத்திரையோட ஸ்பெல்லிங்கை கூட சரியாக படிக்க தெரிஞ்சிருக்காது!”

“ஓய் அதுமாதிரி எல்லாம் பேசினே அப்புற உன்னோட பப்பி பெப்பே…பெப்பேனு…உசுரை விட்டுவிடும்!”

“அது மாதிரி எல்லாம் சொல்லிலாதேடா நான் தெரியாம சொல்ட்டேன் மாத்திரை பெயரை கொஞ்சம் சொல்லுடா!”

“ஆங் அப்படினா வழிக்கு!” என்று அவன் கண்களை குறும்பாக ஒரு உருட்டு உருட்டினான். பின்பு மாத்திரையின் பெயரை சொன்னான்.

தர்மராஜ் எழுந்தார்.

“நான் இப்போ நம்ப கடைக்கு தான் போறேன்…!”

“வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்துடுங்கப்பா…!”

“கடைப்பையன் கிட்டே குடுத்து அனுப்பறேனம்மா!”

சொல்லிக் கொண்டே செருப்பை அணிந்துக் கொண்டு அவரது டி.வி.எஸ் பைக்கில் கிளம்பி போனார். யுவராஜை பார்த்து “சாப்பிட வாடா” என்றாள் சாந்தா தேவி.

“இந்த இத்து போன சாம்பாரை அக்காவுக்கே நல்லா ஊத்துங்க நான் என் ப்ரெண்ட்ஸ் கூட போய் ப்ரோட்டாவும் சிக்கனும் சாப்பிட போறேன்!” என்று கிளம்பினான்.

“உனக்கு அப்பக் கூட மூளை வளராதுடா!” என்றாள் சிந்து.

“ஏய் போடி!”

“பாருங்கம்மா என்னைப் பார்த்து போடினு சொல்லிட்டு போறான். இருடா வர்றேன்!” என்று எழுந்து அவன் முதுகில் அடிப்பதற்காக ஓடி வந்தாள். அதற்குள் யுவராஜ் சிந்துவோட ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

“இவன் ஏனம்மா என்னோட ஸ்கூட்டியிலல்லாம் கை வைக்கிறான்!”

“எடுத்தா எடுத்துட்டு போறான் விடுடி!”

சிந்து கைகளை கழுவி விட்டு பப்பியை தூக்கி கிட்டு வந்தாள்.

“ச்சு … ச்ச்சு இனிமேல் என் செல்லம் நல்லா சாப்பிடும்லம்மா”

“சும்மா நாய்க் குட்டியை வெச்சுகிட்டு விளையாடிகிட்டு பொழுதை வெட்டியா கழிக்காதே. நல்ல வரன் வந்தால் உன்னோட கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடுவோம். அதற்கு முன்னால் சமையலை பண்ண சீக்கிரம் கத்துக்கோ!*

“அடபோங்கம்மா!”

பொமரேனியனை கீழே விட்டு வீட்டு அவள் அறைக்குச் சென்றால், செல் போனை மெத்தையில் தூக்கிப் போட்டாள். சற்று நேரம் படுக்கலாம் என்று நினைத்து கட்டிலில் அமர்ந்தாள். செல்போனில் மெஸேஜ் டோனின் ‘பீப்’ சப்தம் கேட்டது. ஒன் மெஸேஜ் ரிசீவிட்டு என்று காண்பித்தது. இன் பாக்ஸை ஓபன் பண்ணி என்ன மெஸேஜ் என்று பார்த்தாள்.

“நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், எனக்கு உன்னை பிடிச்சிருக்கு… நீ என் மனைவியாக அமைந்தாள் என் உலகம் பசுமையாக இருக்கும்… உன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்…” என்று அந்த மெஸேஜில் இருந்தது. சிந்து லேசாக திகைத்தாள். இது மாதிரி மெஸேஜை யார் அனுப்பறது… நம்பரை பார்த்தாள்…மிகுந்த ஆச்சர்யத்துடன் அவன் கண்கள் விரிந்தன. உதடுகள் தன்னிச்சையாக முனுமுனுத்தன.

“டாக்டர் ஆதர்ஷ்…!”.

3

சிந்துவின் மனசுக்குள் மாமழை பெய்ய தொடங்கியது. அழகிய ஆண் மகன் அதுவும் ஒரு டாக்டர் தன்னை காதலிக்கிறான் என்று நினைக்கும் போது பரவசமாக இருந்தது. நெயில் பாலிஷ் நகங்களை லேசான நாணத்துடன் கடித்து துப்பினாள்.

“நான் எப்படி என் காதலை வெளிப்படுத்துவது”

ஒரு சில விநாடிகள் யோசித்தாள். பின்பு தயங்கி தயங்கி, “எனக்கும் உங்களை புடிச்சிருக்கு… ” என்று டைப் செய்து மெஸேஜ் அனுப்பினாள். மெஸேஜை அனுப்பிவிட்டு லேசான படபடப்புடன் கண்களை மூடிக்கொண்டாள்.

உதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டு லைனர் பூசிய இமைகள் படபடக்க கண்களை திறந்து பார்த்தாள் அவளது முகம் மாற்றத்துடன் வாடிப் போனது. அவள் அனுப்பின மெஸேஜ் டெலினர்ட்டு ஆகாமல் ஃபெயில்டு என்று காண்பித்தது. செல்போனை எரிச்சலுடன் தூக்கிப்போட்டாள்.

அவள் பி.காம் படிக்கும் போது இந்த செல்போனை தர்மராஜ் வாங்கிக் கொடுத்தார். மூன்று வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. நடுவில் இரண்டு தடவை தண்ணீரில் வேறு போட்டு எடுத்தாள். அதன் கிளாசில் வேறு சில ஸ்கிராச்சஸ் இருந்தது. சமயத்தில் இது மாதிரி வேலை செய்யாமல் போகும். தர்மராஜிடம் எவ்வளோவாட்டி கேட்டு பார்த்து விட்டாள்.

“இந்த மொபைல் அப்பப்பபோ வேலை செய்ய மாட்டேன்குது வேற புது மொபைல் வாங்கி குடுங்கப்பா”

அதற்கு அவர்,

“உன்னை கல்யாணம் கொடுக்கும் போது சீதனத்துடன் உயர் ரக மொபைலும் வாங்கி கொடுக்கிறேன். அதுவரைக்கும் இதை தான் வெச்சிருக்கனும்” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

சிந்து கலங்கிய கண்களுடன் படுத்துக் கொண்டாள். அன்று இரவு முழுவதும் அவளுக்கு தூக்கம் வரவில்லை.

அவள் காதலை எப்படியாவது முகேஷிடம் வெளிப்படுத்தி ளிட வேண்டும் என்று துடிப்புடன் இருந்தாள். மறுநாள் காலை எழுந்தவுடன் வேகமாக கிளம்பினாள். முதலில் ப்ரவுன் நிற சுடிதார் அணிந்து அதற்கு மேட்சிங்காக வளையல் கம்மல் பொட்டு வைத்து கண்ணாடி முன் பார்த்தாள். அவளுக்கு திருப்தியாக இல்லை. ப்ரவுன் நிற சுடிதாரிலிருந்து மஞ்சள் நிற சுடிதாருக்கு. மாறினாள். அதற்கு மேட்சிங்காக வளையல் கம்மல் பொட்டு வைத்து கண்ணாடி முன் நின்று பார்த்தாள். அந்த டிரெஸீம் அவளுக்கு திருப்தியாக இல்லை.

நீல நிற சுடிதார் அணிந்து அதற்கு மேட்சிங்காக வளையல் கம்மல் பொட்டு எல்லாம் வைத்து விட்டு கண்ணாடியில் பார்த்தாள். நீல கலர் அவளது அழகை கூட்டி காண்பித்தது.

அம்மா பண்ணிக் கொடுத்த இரண்டு தோசையில் ‘ஒண்ணு மட்டும் போதும்மா’ என்று அந்த ஒரு தோசையையும் இரண்டே நிமிடத்தில் விழுங்கினாள்.

“சரி நான் கிளம்பறேன்ம்மா!”

“எங்கேடி!”

“டாக்டர் இன்னிக்கு ப்ரியாக இருக்காராம். பப்பியை தூக்கிட்டு வந்து காண்பிக்கனுன்னு போன் பண்ணினார். நான் போயிட்டு வந்துடறேன்!”

ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பறந்தாள். கதவை சாத்திவிட்டு உள்ளே வந்த சாந்தா தேவி அதிர்ந்தாள். பொமேரியன் நாய்க்குட்டி ஹாலில் சோபாவின் அருகே சுற்றிக் கொண்டிருந்தது.

கிளினிக்கில் லிப்ஸ்டிக் பூசாத ரோஸ் நிற உதட்டை கடித்தாள் சிந்து.

“இஸ்… பப்பியை மறந்து விட்டுவிட்டு வந்துட்டேனே… திரும்ப போய் எடுத்துகிட்டு வரலாமா என்று யோசித்தாள். பப்பியை தூக்கிட்டு வர்றதுக்குள்ளே இங்கே கூட்டம் சேர்ந்து விடுமோ… காத்திருந்து அப்புறம் அவனைப் பார்த்து காதலை வெளிப்படுத்தும் அளவிற்கு பொறுமை இல்லை. என்ன செய்வது… ஆதர்ஷின் கிளினிக்கில் சிந்துவின் மனது குட்டிப் போட்ட நாயை போல் பறிதவித்துக் கொண்டிருந்தது. கிளினிக்கின் கதவு இன்னும் திற்கப்படாமல் இருந்தது. இவள் தான் முதல் ஆள். என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிளினிக்கின் கதவை மெதுவாக திறந்துப் பார்த்தாள். அது தானகவே திறந்துக் கொண்டது. மெதுவாக உள்ளே போனாள். அவள் தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஆஷ் கலர் சிறிய ஹேண்ட் பேக்கை திறந்தாள். உள்ளேயிருந்த வெள்ளை நிற காகிதத்தை வெளியே எடுத்தாள். காகிதத்தைப் பிரித்து மீண்டும் படித்துப் பார்த்தாள்.

“எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது”
இப்படிக்கு சிந்து

இரண்டு இதயங்கள் போடப்பட்டிருந்த லெட்டர். பேப்பரில் அது மாதிரி எழுதி இருந்தாள். அதை இரண்டாக மடித்து படபடக்கும் நெஞ்சத்சோடு கண்ணாடி மேசையின் மீது வைத்தாள். அந்த லெட்டர் பறந்து விடாமல் இருப்பதற்காக அதன் மீது அங்கிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து வைத்தாள்.

பக்கவாட்டில் இருந்த கண்ணாடி கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சிந்து கதவை சாத்திவிட்டு விறுவிறுவென வெளியே வந்தாள். அவளது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து அமர்ந்தாள்.

உள்ளே வந்த ஆதர்ஷின் பார்வை அந்த வெள்ளை காகிதத்தின் மீது விழுந்தது. உதட்டை சப்பியபடி அந்த காகிதத்தை எடுத்தான். பிரித்துப் பார்த்தான். அதில் எழுதியிருந்த வாக்கியத்தை படித்துப் பார்த்ததும் அவன் மனது சஞ்சலமானது.

தெரு முனையில் ஸ்கூட்டியை பிரேக் போட்டு நிறுத்தினாள்.

சிந்து. இந்நேரம் லெட்டரை எடுத்துப் பார்த்திருப்பானா… அவள் ஹேண்ட் பேக்கிலிருந்து செல்போனை எடுத்துப் பார்த்தாள். எனக்கு கால் பண்ணியிருப்பான் அட்லீஸ்ட் ஒரு மெஸேஜாவது அனுப்பியிருப்பான் ஒண்ணையும் காணோமே வருத்தத்துடன் தலையை திருப்பிப் பார்த்தாள். கிளினிக்கை நோக்கினாள் எதேசையாக அவளது பார்வை சற்று மேலே உயர்ந்தது. மொட்டை மொட்டை மாடியில் முகேஷ் நின்றுக் கொண்டிருந்தான். சிந்துவைப் பார்த்து லேசான புன்னகையுடன் கையசைத்தான்.

அவள் வைத்துவிட்டு போன லெட்டரைப் பார்த்து விட்டு தான் கையசைக்கிறான் என நினைத்தாள். பதிலுக்கு சிந்துவும் அவனைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தாள்.

கிளினிக்கின் உள்ளே சஞ்சலமான மனதுடன் லெட்டரைப் பார்த்து யாரிவள்? என்று சிந்தித்தான் ஆதர்ஷ். என் டேபிளின் மீது தைரியமாக லெட்டரை வைத்துவிட்டு போனது யார்? அவள் யார் என்று பார்க்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

வேக வேகமாக கிளினிக்கின் முன்புறக் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தான். நேர் ரோட்டின் முனையில் புன்னகையுடன் கையசைத்து கொண்டிருந்த சிந்து அவன் கண்ணில் பட்டாள். ஆதர்ஷ் அவள் அழகில் மயங்கிப் போனான்.

4

தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியையே கண் இமைக்காமல் பார்த்த வண்ணம் இருந்தான் ஆதர்ஷ். உடையை கூட மாற்றாமல் அப்படியே படுத்திருந்தான். சிந்துவின் அழகான முகம் அவன் மனதில் பதிந்து போனது. இவள் என் கிளினிக்கிற்கு எப்போது வந்திருக்கிறாள். நான் இவளை பார்த்திருக்கேன்னா… என்னிடம் நன்றாக பழகியது டாட்டா வேறு காண்பித்து விட்டு போயிருக்கிறாள். வருபவர்களிடம் நான் நன்கு பழகுவது போல் இவளிடமும் நன்றாக பேசியதால் என்னைப் பிடித்துப் போய்விட்டதா… அவளை நேரில் சந்திக்கும் போது தான் எல்லாவற்றையும் கேட்க வேண்டும்.

அவளை மீண்டும் பார்க்கணும் போல் தோன்றியது… சே நான் கொஞ்சம் சீக்கிரம் போயிருந்தால் அவளை அருகிலேயே பார்த்திருந்திருக்கலாம். இரண்டு வார்த்தை பேசியும் இருந்திருக்கலாம். அவளிடம் நிறைய பேச வேண்டும் என்று உணர்வுகள் துடித்தன.

அவனுக்கு வெட்னரி டாக்டர் டிகிரி எப்படி கிடைத்தது? முதன் முதலில் அவன் வாங்கிய சம்பளம் எவ்வளவு? எவ்வளவு. நண்பர்கள் இருக்கிறார்கள்… அவர்களுடன் எங்கெல்லாம் ஊர்ச் சுற்றி திரிவது… அவனுக்கு பிடித்த கனவு கன்னி யார்?

இது போன்ற நிறைய விஷயங்களை அவள் கிட்டே பேசிகிட்டே இருக்க வேண்டும் என்று அவன் மனம் துடித்தது.

நாளைக்கு அவள் வருவாளா? ஒரு வேலை வராமல் போய்விட்டாள்… நினைக்கும் போதே லேசாக வருத்தமாக இருந்தது.

அவன் ஆசைப்பட்ட மாதிரி அடுத்த நாள் அவள் வந்தாள். பாவாடை தாவணியில்..

***

சாந்தா தேவி கொடுத்த டிபனை சாப்பிட்டுவிட்டு டி.வியில் சன் மியூசிஸிக் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. நைட்டியில் இருந்தாள். டீபாயின் மீதிருந்த அவளது செல்போன் சிணுங்கியது. எடுத்து யாரென்று பார்த்தாள். முகேஷின் எண் திரையில் ப்ளாஷ் ஆகியது. ஓடிக் கொண்டிருந்த டி.வி.யையும் பேன்னையும் ஆஃப் பண்ணாமல் அவள் அறைக்கு பரவசத்தோடு ஓடினாள். ஆன் பண்ணி ஆர்வமாக ‘ஹலோ’ என்றாள்.

“ஹாய் சிந்து, எப்படி இருக்கே?” மறுமுனையில் முகேஷ் கேட்டான்.

“ந…நல்லா இருக்கேன்!”

“நாம இன்னிக்கு மீட் பண்ணலாமா?”

சிந்து என்ன செய்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தாள்.

“என்ன பேச்சை காணோம் மீட் பண்ணலாமனு? கேட்டேன்!”

“ம்… மீட் பண்ணலாம். எங்கே?” மெல்லிய குரலில் கேட்டாள்.

“உங்க வீட்டிலிருந்து மெதுவா நடந்து பக்கத்து தெருவிற்கு வா நான் வந்து உன்னை பைக்கில் பிக்கப் பண்ணிக்கிறேன்!”

“என்னோட வீடு எங்கிருக்கிறதுனு உங்களுக்கு தெரியுமா?” ஆச்சர்யமாக கேட்டாள். முகேஷ் சிரித்தான்.

“ஒரு பையன் ஒரு பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சிட்டா அவளோட ஒட்டு மொத்த ஜாதகமும் அடுத்த செகண்ட் அவனோட கையில் வந்திடும்!”

“ஓஹோ… சரி… நீங்க சொன்னபடி வந்துடறேன்!”

“ஆனா ஒரு கண்டிஷன்!”

“என்ன கண்டிஷன்!”

“நீ பாவாடை தாவணியில் தான் வரணும்!”

“பாவாடை தாவணியிலா?”

“ஏன் உன்கிட்டே ஒரு பாவாடை தாவணிக் கூட கிடையாதா!”

“ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு ஆதர்ஷ்!” என்றாள்.

மறுமுனையில் முகேஷ் சட்டென்று அமைதியானான்.

“ஹலோ ஆதர்ஷ்!*

“யெ… யெஸ்…!”

“என்னாச்சு?*

“ஒண்ணுமில்ல பாவாடை தாவணியில் வந்துடு!”

“அம்மா கேட்டால் என்ன சொல்லுவது?”

“ப்ரண்ட் வீட்டுக்கு போயிட்டு வர்றேனு சொல்லிட்டு கிளம்பி வா. பயப்படாதே உன்னை சீக்கிரம் திரும்ப கொண்டு வந்து விட்டுடுவேன்!”

“ஓகே பை ஆதர்ஷ்!”

என்று போனை கட்பண்ணிவிட்டு பீரோவை திறந்தாள். அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜீன்ஸ் டிஷர்ட்.. சுடிதார்களுக்கு அடியில் லேசாக கசங்கிய நிலையில் இருந்த பாவாடை தாவணியை இழுத்து வெளியே எடுத்தாள். பச்சை கலர் பாவாடை சிவப்பு நிற பாடருடன் இருந்தது.

அவளுக்கு சுடிதார் ஜீன்ஸ் அணிவதில் தான் ஆர்வம் அதிகம். அவன் ஆசையாக கேட்டான் என்பதற்காக அணிந்தாள். ஒரு வாட்டி பெரியம்மா பெண்ணின் கல்யாணத்திற்கு அம்மா சொன்னதற்காக அணிந்தாள். கொஞ்ச நேரத்திலேயே சுடிதாருக்கு மாறினபிறகு தான் ப்ரியாக உணர்ந்தாள். நாலுவருடத்திற்கு பிறகு இப்போது தான் பாவாடை தாவணி அணிகிறாள்.

கண்ணாடி முன்னாடி நின்றுப் பார்த்தாள். வித்தியாசமாக அழகாக தெரிந்தாள். சாந்தா தேவியிடம் சொல்லி விட்டு போவதற்காக வந்தாள். சமையல் அறையில் கடாயில் சிக்கனை ஃப்ரை பண்ணிக் கொண்டிருந்தாள். காலடி யோசை கேட்டு திரும்பி பார்த்தாள்.

பாவாடை தாவணியில் இருந்த சிந்துவை ஆச்சரியமாக பார்த்தாள்… “அ…அம்மா நான் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்!”

அவள் கண்களை பார்த்துச் சொல்லாமல் வேறெங்கோ பார்த்து சொன்னாள். அவள் பதிலுக்காக காத்திராமல் விறுவிறுவென ஹீல்ஸ் செப்பலை போட்டுக் கொண்டு வெளியேறினாள். பக்கத்து தெருவில் முகேஷ் பல்சரில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். சிந்துவைக் கண்டதும் புன்னகைத்தான்.

5

சிவன் கோவிலிருந்த அனைத்து பிரகாரங்களையும் சுற்றி பார்த்துவிட்டு ஒரு தூணின் மறைவில் இருவரும் அருகருகே அமர்ந்துக் கொண்டார்கள்.

“பாவாடை தாவணியில் நீ எவ்வளவு அழகாக இருக்கே தெரியுமா? பெண்களின் நாகரீகமான உடை இப்போது அதிகரித்துப் போனது கஷ்டமாயிருக்கு…பயப்படாதே நம்ம கல்யாணத்திற்கு பிறகு இந்த டிரஸ் போடச் சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்!”

“உங்க அப்பா அம்மா என்னை ஏத்துப் பாங்களா?”

” அதுக்கு முன்னாடி நான் உன்கிட்டே ஒரு விஷயத்தை பத்தி பேசியாகணும்!”

“என்னது ஆதர்ஷ்?”

முகேஷ் சிரித்தான்.

“நான் யாருனு உனக்கு தெரியுமா சிந்து?”

“டாக்டர் ஆதர்ஷ்” என்றாள்.

“நான் டாக்டர் கிடையாது என் பேர் முகேஷ். நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்”

சிந்து புரியாமல் அவனையே பார்த்தாள்.

“நீங்க டாக்டர் ஆதர்ஷ் இல்லையா? அன்னிக்கு நீங்க தானே கிளினிக்கில் இருந்திங்க!”

“டாக்டர் ஆதர்ஷ் என்பது என்னோட தம்பி அன்னிக்கு தற்செயலாக நான் அவன் சீட்டில் உட்கார்ந்துட்டேன். உன்னைப் பார்த்ததும் உன் மனசில் இடம் பிடிப்பதற்காக ஒரு டாக்டர் மாதிரி நடந்துக்கிட்டேன். அப்படியே தொடர்ந்தேன்… இதற்கு மேலும் உண்மையை மறைப்பது நாகரீகம் இல்லை!” சிந்து அமைதியானாள்.

“இது நாள் வரை என்னை ஒரு டாக்டராக நினைச்சு நிறைய கற்பனைகள் வளர்த்திருப்பே இப்போ நான் ஒரு டாக்டர் இல்லைனு தெரிஞ்சதும் ஏமாற்றமாக இருக்கிறதா?”

அவள் வலது கையால் அவன் வாயை பொத்தினாள்.

“இத்தனை நாட்களாக உங்களை ஒரு டாக்டராக தான் நினைச்சுகிட்டிருந்தேன், இப்போ நீங்க டாக்டர் இல்லைனு தெரிஞ்சதும் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் உங்க உருவமும் உள்ளமும் என் அடி மனதில் எப்பவோ பதிஞ்சு போச்சு… வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லிட்டங்க உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நீங்க எந்த கம்பெனியில் வேலை பார்க்கறீங்க?”

“ஸ்னோ ஒயிட் இன்ஃபோடைக் கம்பெனி. மார்னிங் ஒன்பதரை மணிக்கு ஆபீஸ் ஈவினிங் சிக்ஸ் தர்டிக்கு தான் முடியும்!”

“லன்ச்செல்லாம் ஆப்ஸிலேயே சாப்பிடுவீங்களா?”

“பெஸ்”

அதற்கு பிறகு இருவரும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“டைம் ஆகுது கிளம்பலாமா?” எனக் கேட்டாள் அவள்.

“சரி!” என்றான். இருவரும் கிளம்பினார்கள். முகேஷ் நேராக அவன் வீட்டிற்கு அவளை கூட்டிப் போனான்.

“என்னங்க உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கிங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு!”

“உன்னை என்ன எங்கப்பா அம்மாகிட்டேவா அறிமுகப்படுத்தப் போகிறேன். பயப்படறதுக்கு… உன் கிட்டே ஒண்ணு காண்பிக்கணும்… அங்கே கிளினிக்கில் என் தம்பி இருப்பான். அவன் கிட்டே சும்மா பேசிக்கிட்டுயிரு இதோ வந்துடறேன்!” என்று அவன் வீட்டுக்குள் சென்றான்.

6

சிந்துவை அந்த நேரத்தில் பார்ப்போம் என்று ஆதர்ஷ் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை. அதுவும் பாவாடை தாவணியில் பள்ளிக்குச் செல்லும் மாணவியை போல் இருந்த அவளைப் பார்த்து ‘ஹாய்’ என்றான் புன்னகைத்து. சிந்து அவனைப் பார்த்து, “எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“நல்லா இருக்கேன்!” என்றான் அவன்.

“நான் யாருனு உங்களுக்கு தெரியுமா?”

“என் தெரியாம… நல்லாவே தெரியும்!”

“அடப்பாவி அதுக்குள்ள என்னைப்பற்றி உங்க தம்பிகிட்டே செல்லிட்டிங்களா”. சிந்து உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள். கையில் சுருட்டி வைத்திருந்த பேப்பரை பிரித்தாள். அதிலிருந்த விபூதி குங்குமத்தை அவனிடம் நீட்டினாள்.

“சாமிப்பிரசாதம் எடுத்துக்கோங்க!”

ஆதர்ஷ் ஆள்காட்டி விரலால் விபூதி தங்குமத்தை தொட்டு அவன் நெற்றியில் இட்டுக் கொண்டான்.

“ஆதர்ஷ்கிற உங்க பெயர் ரொம்ப நல்லாயிருக்கு!” என்றாள் அவள் அவன் அவளைப் பார்த்து சிரித்தான்.

அந்நேரம் கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு மங்களா வேகமாக வந்தாள்.

“டேய் கும்பகோணத்திலிருந்து உன் அக்கா ரேணுகா போனில் லைனில் இருக்கா உன்கிட்ட பேசணுமாம் சீக்கிரம் வாடா!!”

“அ… அம்மா…வ… வந்து!”

“பேஷண்ட்டை அப்புறம் வந்து பாரு உன் அக்கா கிட்ட இரண்டு வார்த்தை பேசிட்டு போ இல்லையின்னா கோவிச்சுக்க போறா!”

“இதோ வர்றேன்… இதோ வந்துட்டேன்”

முகேஷின் அம்மாவை நேரில் கண்ட சிந்து ஒரு கணம் சிலிர்த்துப் போனாள். அவளை அறியாமல் எழுந்து நின்றாள். கைகூப்பி நமஸ்காரம் பண்ணப் போனாள். அதற்குள் மங்களா சென்றுவிட்டாள். மங்களா சென்றதும் ஆதர்ஷ் சிந்துவிடம் வேகமாக கேட்டான்.

“உங்களை மறுபடி எப்போ பார்க்கிறது… எப்போ பேசறது?” சிந்து க்ளுக்கென சிரித்துக் கொண்டாள்.

“உங்க வீட்டுக்கு வரப்போற மருமகள் தானே அதற்கப்புறம் எப்ப வேணும்னாலும் என்கிட்ட பேசிகிட்டே இருக்கலாம்!”

ஆதர்ஷின் இதயம் சந்தோசத்தால் மிதந்தது.

“டேய் ஆதர்ஷ் வாடா!”

மங்களாவின் குரல் உள்ளிருந்து கேட்டது.

“என் அக்கா போனில் கூப்பிடறாங்க நான் போய் பேசனும் பை!” என்று சிந்துவிடம் சொல்லிவிட்டு எழுந்தான்.

“நானும் கிளம்பறேன்!” பை சொல்லிவிட்டு எழுந்து போன சிந்துவின் கால் அவன் பார்வையில் பட்டது. கொலுசு இல்லாமல் வெறுங்காலாக இருந்தது.

சிறிது நேரங்கழித்து முகேஷ் அங்கு வந்தான். சிந்து கிளினிக்கின் வெளியே நின்றுக் கொண்டிருந்தான்.

“உங்கக்கா கிட்டே பேசிட்டீங்களா” என்று கேட்டாள்.

“ஏய் உனக்கெப்படி தெரியும்?”

“இப்ப தான் உங்கம்மா வந்து உங்க தம்பியை இழுத்துக்கிட்டு போனாங்க ஏய்… என் மாமியாரை நேரில் பார்த்தேனே…!”

“சந்தோஷத்தைப் பாரு!”

“அவங்க கிட்டே பேசணும் போல் இருக்குப்பா!”

“எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்!” அவனிடம் ஒரு பாக்ஸை காண்பித்தான்.

“என்னது முகேஷ்?”

அந்த பாக்ஸின் மேல் ஒரு ஆண் கோட்சூட்டுடன் சிரித்தப்படி மாடல் கொடுத்திருந்தான். சிந்து அந்த அட்டை பெட்டியை திறந்துப் பார்த்தான். உள்ளே கண்ணாடி கவரில் பச்சைகலர் ஷர்ட் இருந்தது.

“என்னோட ஃப்ரெண்ட் சிங்கபூரில் இருந்து வந்திருந்தான். இந்த ஷர்ட் எனக்கு வாங்கி வந்தான்!”

“இதை என் என்கிட்டே காண்பிக்கிறீங்க?

“உனக்கு இந்த கலர் ஷர்ட் பிடிச்சிருந்தால் எடுத்துப்பேன். உனக்கு பிடிக்கலைன்னா அவன் கிட்டேயே திருப்பி கொடுத்துடுவேன்!”

சிந்துவின் முகத்தில் சந்தோஷம் மின்னியது.

“ஷர்ட் நல்லாயிருக்கு முகேஷ். இந்த கலர் உங்களுக்கு சூப்பராக இருக்கும் சரிப்பா எனக்கு டைம் ஆகுது நான் கிளம்பறேன்!”

“ஒரு இரண்டு நிமிஷம்… ஷர்ட்டை கொண்டு போய் உள்ளே வெச்சிடு வந்துடறேன் உன்னை எங்கிட்டிருந்து கூட்டிக்கிட்டு வந்தேனோ அங்கேயே விட்டுடறேன்!”

7

ஆவி பறக்கும் சாதத்தில் சிக்கன் குழம்பை ஊற்றி சைடில் சிக்கன் வறுவலை வைத்தாள் சாந்தா தேவி. தர்மராஜ் உற்சாகமாக சாப்பிடத் தொடங்கினார்.

“ம்… சமையல் சூப்பர் சாந்தா தேவி! இன்னிக்கு நான் எவ்வளவோ சந்தோஷமாக இருக்கேன் தெரியுமா நாம சின்னா ஆரம்பிச்ச இரண்டு கடைகளும் இப்போ அமோகமாக ஓடிகிட்டியிருக்கு, நான் உழைச்ச உழைப்பு வீண் போகலை!” தர்மராஜ் பேசிக்கொண்டே போனார். சாந்தா தேவி கன்னத்தில் கை வைத்துக்கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன சாந்தாதேவி அப்படி யோசனை”

“நம்ப பொண்ணு சிந்துவை பத்தி தான் நினைச்சுகிட்டிருக்கேன்!”

“அவளுக்கென்ன?”

“அவளை நினைச்சா ரொம்ப பயமா இருக்குங்க அன்னிக்கு என்னடானா பப்பியை டாக்டர் கூட்டிக்கிட்டு வந்து காண்பிக்க சொன்னாருனு வேகமாக கிளம்பி போனாங்க அப்புறம் பார்த்தா நாய் குட்டியை வீட்டிலேயே விட்டுவிட்டு போயிட்டா திரும்ப வந்து தூக்கிட்டு போவானு நினைச்சேன்… ஆளையே காணோம்…இன்னிக்கு என்னடானா நாம அவளுக்கு என்னிக்கோ வாங்கி கொடுத்த பாவாடை தாவணியை அழகாக உடுத்திகிட்டு வெளியே கிளம்பி போயிருக்கா…கேட்டா ஃபிரண்ட் வீட்டுக்குனு சொல்றா. ஒண்ணுமே புரியலை!”

“அவ சின்னப் பொண்ணு அவ இஷ்டபடி ஏதோ ஒரு டிரெஸை போட்டுகிட்டும்!”

“அவளுக்கு காலங்காலத்துக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிடணும்ங்க அது வரைக்கும் என் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது!”

வாசலில் கேட் திறக்கும் சப்தம் கேட்டது.

“அவ தான் வர்றா… என்ன ஏதுனு விசாரிங்க…” தர்மராஜிக்கும் மட்டும் கேட்டும்படி கிசுகிசுத்தாள். டைனிங் ஹாலை கடந்து அவள் அறைக்குச் செல்ல முயன்ற சிந்துவை.

“இங்கே வாம்மா!” என்றழைத்தார். சிந்து தயக்கத்துடன் சென்றாள். அவர் அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டார்.

“இப்படி உட்காரும்மா”

சிந்து உட்கார்ந்தாள்.

“எங்கேம்மா போயிட்டு வர்றே?”

“என்னோட ஃப்ரெண்ட் வீட்டிற்குப்பா” தர்மராஜ் குழம்பு சாதத்தை முடித்துவிட்டு இருந்தார். சாந்தா தேவி அவருக்கு கொஞ்சம் சாதம் வைத்து தாளித்த மோரை ஊற்றினாள். தர்மராஜ் அமைதியாய் இரண்டு வாய் மோர் சாதத்தை எடுத்து சாப்பிட்டார். பின்பு சிந்துவை நிமிர்ந்து பார்க்காமல் கேட்டார்.

“யாரைம்மா லவ் பண்றே?”

“அ… அப்பா …”

“ப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வர்றேனு சொல்றே நெற்றியில் விபூதி குங்குமம் இருக்கிறது… யார் கூட கோவிலுக்கு போயிட்டு வரறே? என்னடா அப்பா எப்படி கண்டுபிடிச்சாருனு பாக்கிறீயா? வியர்வை கொட்டுது…கை லேசாக உதறுது…சொல்லுமா யாரை லவ் பண்றே?”

‘வ…வந்து முகேஷை லவ் பண்றேன்… ”

“யார் அந்த முகேஷ்?”

“டாக்டர் ஆதர்ஷோட அண்ணன். நம்ம பப்பியை டாக்டர் கிட்டே காண்பிப்பதற்காக கூட்டிட்டு போய்… போய்… அவர் அண்ணன் எனக்கு அறிமுகமானார். இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிபோய் காதலிலிக்க ஆராம்பிச்சிட்டோம்!”

“முகேஷ் என்ன பண்றார்?”

“சாஃப்ட்வேர் இன்ஜினியர்!”

“பேமிலி எப்படி?”

“அது பத்தி எதுவும் தெரியாதுப்பா!”

“நாளைக்கு அந்த பையனை நம்ப கடையிலல என்னை வந்து பார்க்கச் சொல்லு முதலில் பையனை பார்த்துவிட்டு அப்புறம் அவங்கப்பா அம்மாவை போய் பார்ப்போம்!”

சிந்து மகிழ்ந்துப் போனாள்.

“ரொம்ப தாங்க்ஸ்ப்பா!” என்று சொல்லிவிட்டு குதுகலத்துடன் அவள் அறைக்குச் சென்றாள். சந்தாதேவி தர்மராஜை பார்த்தாள்.

“என்னங்க எவனையோ லவ் பண்றேனு வந்து நிற்கிறா கன்னத்துல நாலு அறைவிட்டு காதலெல்லாம் கூடாதுனு சொல்லறதை விட்டுவிட்டு… பையனை வர்ற சொல்லு பேசலானு சொல்றீங்க…”

“சாந்தா தேவி இப்போ காலம் எவ்வளவோ மாறிப்போச்சு. அந்த காலத்துல தான் பெரியவங்க கிழிச்ச கோட்டை பசங்க தாண்டமாட்டாங்க அவங்களுக்கு தெரியாத விஷயத்தை எல்லாம் பெரியவங்ககிட்டே கேட்டு தெரிஞ்சுப்பாங்க ஆனா இப்போ அப்படி கிடையாது. நம்மளை விட இளையதலைமுறை பலமடங்கு எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு வெச்சிருக்காங்க. புத்திசாலியாக இருக்காங்க. நாம் ரொம்ப கண்டிப்பாக இருந்தால் நம்மகிட்ட பேச பிடிக்காது… எதிர்த்துப் பேச ஆரம்பிப்பா. பையன் எந்த குல கோத்திரமாக இருந்தால் என்ன? நல்ல பையனாக இருந்தால் அவள் இஷ்டபடியே அவனை பேசி முடிச்சிடுவோம். பையன் சரியில்லையென்றால் அவளிடம் பக்குவமாக பேசி புரிய வைப்போம். என்ன சொல்றே?”

சாந்தா தேவி அரைமனதாக தலையாட்டினாள்.

8

ஈஸ்வர் தோட்டத்தில் பறித்த அனைத்து பூக்களையும் சுவாமி படத்திற்குப் போட்டு பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். பூஜையை முடித்துக் கொண்டு படத்திற்கு முன்னால் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு எழுந்தார். பூஜை அறையின் வாசலில் முகேஷ் தயக்கமாய் நின்றுக் கொண்டிருந்தான்.

“என்னடா?!”

வேஷ்டியின் மீது கட்டியிருந்த துண்டை உதறி தோளில் போட்டவாறு கேட்டார்.

“அ…அப்பா நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அவ பேரு சிந்து. அவளோட அப்பா என்னை பார்கணும்து சொன்னார்…”

ஈஸ்வரின் அருகே மெல்லமாக வந்து நின்ற மங்களாவை திரும்பிப் பார்த்தார்.

“என்னடி சொல்றான் உன் பையன்?”

“நான் கூட காதல் கீதல்னு வந்து நிக்கிறீயேனு திட்டினேன்… அப்புறம் பொண்ணோட போட்டோவை பார்த்ததும் அவளை ரொம்ப புடிச்சிப் போச்சுங்க. பொண்ணு கண்ணுக்கு லட்சணமா அவ்வளவு அழகா இருக்கா…அவளோட அப்பா அவ்வளவு பவ்யமா நடந்துக்கிறார்…”

“அவரை நீ எப்போ பார்த்தே?”

“ஹால்ல தான் உட்கார்ந்திருக்கார். நம் முகேஷ் தான் அவரை கூட்டிட்டு வந்தான்!”

“அதுசரி!”

“என்னங்க ஜாதி, மதம், ஜாதகம் பொருந்தலை…எதையாவது காரணங்காட்டி சொதப்பாமா சுகமாக முடிக்க பாருங்க!”

“நீங்க இரண்டு பேரும் சேர்ந்து முக்கால் வாசி கிணற்றை தாண்ட்டிங்க இனிமேல் இதில் என் பங்கு என்ன இருக்கிறது!”

அவரோட வெள்ளை சட்டையை அணிந்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார். அவரைக் கண்டதும் தர்மராஜ் எழுந்து நின்று கைகூப்பினார்.

“உட்காருங்க… உட்காருங்க… ”

என்றபடி எதிரே இருந்த சோபாவில் ஈஸ்வர் அமர்ந்தார். அவருக்கு பின்னால் முகேஷூம் மங்களாவும் நின்றுக் கொண்டார்கள்.

“நீங்க தான் முகேஷ் காதலிக்கிற பொண்ணோட அப்பாவா…” என கேட்டார் ஈஸ்டர்.

“ஆமாங்க! என் பொண்ணு பேரு சிந்து. நாங்க முதலியாருங்க… சொந்தமாக இரண்டு கடை வெச்சியிருக்கேன். கடவுள் புண்ணியத்துல அதுல எந்த குறையும் இல்லீங்க… அமோகமாக ஓடிகிட்டியிருக்கு, சிந்து அவளோட காதலை பத்தி சொன்னா… என்னடா காதல் கீதல்னு வந்து நிக்கிறாளேனு யோசிச்சேன். உங்க பையனை சந்திச்சு பேசினதுல அவரை ரொம்ப பிடிச்சி போச்சு அப்படியே உங்களையும் பார்த்து பேசிடலாம்னு நினைச்சேன். உங்க அபிப்பிரயம் என்னங்க… ”

“நாங்க கவுண்டர். எங்க ஜாதியில் கலப்பு திருமணம் அவ்வளவா நடந்ததில்லை. என்ன பண்றது? சின்னசிறுசுங்க ஒருத்தர் மேல் ஒருத்தர் ஆசை பட்டுட்டாங்க சேர்த்து வெட்சிடுவோம்”

“ரொம்ப சந்தோஷங்க!”

“உங்களுக்கு ஒரே பையன்தானா?”

“இல்லிங்க இரண்டு பையன் ஒரு பொண்ணு. ரேணுகா மூத்தவ கல்யாணமாகி கும்பகோணத்துல இருக்கா. அடுத்தவன் முகேஷ், இளையவன் ஆதர்ஷ்”

“அவர் என்ன பண்றார்?”

“வெட்னரி டாக்டர்…டாக்டர் ஆதர்ஷ்!”

“ஓஹோ டாக்டர்…டாக்டர் ஆதர்ஷ் சிந்துக் கூட சொல்லியிருக்கா நாய்குட்டியை அவரிடம் காண்பிப்பதற்காக கூட்டிட்டுப் போய் தான் நம்ப முகேஷ் தம்பியை அறிமுகமாகி இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்!”

ஈஸ்வர் முருகேஷைப் பார்த்து கேட்டார்.

“என்னடா அப்படியா?”

“கிட்ட தட்ட அப்படி தாம்ப்பா!”

அனைவரும் சிரித்தார்கள்.

எழுபது சவரன் நகைகள் போட்டு ஒரு லட்சம் ரொக்கம் தருவதாக சொன்னார் தர்மராஜ். ஒட்டு மொத்த கல்யாணச் செலவையும் அவரே ஏற்றுக்கொள்வதாக சொன்னார். கல்யாண வேலைகளை பற்றி வெகு நேரம் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.

“உங்க இரண்டாவது பையன் வந்தால் அவரையும் பார்த்துவிட்டு கிளம்பிவிடுவேன்” என்றார் தர்மராஜ். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதர்ஷ் அங்கு வந்தான். மதிய உணவிற்காக கிளினிக்கை மூடிவிட்டு வந்தான். ஹாலில் ஏதோ முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்காங்க என்பதை உணர்ந்தான். ஆனால் என்னவென்று புரியவில்லை. முகேஷ் வந்து அவனிடம் தோளில் கைப்போட்டான்.

“என்னடா முழிக்கிறே? அவர் யார் தெரியுமா? சிந்துவோட அப்பா… உன்னை பார்கணும்னு ஆசைப்பட்டார். நல்ல வேளை நீயே வந்துட்டே!”

மங்களாவும் அவள் அருகில் வந்து கிசுகிசுத்தாள்.

“எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுப் போச்சு சிந்து நாய்குட்டியை உன்கிட்டே காண்பிக்க வரபோய் லைன் வேற மாதிரி மாறிடுச்சு…அப்படிதானே!”

ஆதர்ஷ் தர்மராபைார்த்து நமஸ்காரம் பண்ணினான். தர்மராஜ் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

“என்ன தம்பி எப்படி இருக்கீங்க?”

“இனிமேல் சிந்து பப்பிக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னா காண்பிப்பதற்காக அங்கிருந்து வரத்தேவையில்லை…உங்க வீட்டு மருமகள் ஆனத்துக்கப்புறம் காண்பிச்சிடுவா..” சொல்லிவிட்டு கடகடவென சிரித்தார்.

பின்பு தர்மராஜ் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடைப் பெற்றார். அவர் சென்ற பிறகு மங்களா சொன்னாள்.

“ஆதர்ஷ் சிந்துவோட அப்பா பண்பான மனுஷன். நாளைக்கு சிந்துவை பொண்ணு பார்க்க போறோம் நீயும் வாடா!”

“நான் எதுக்கும்மா? உங்களுக்கும் அண்ணணுக்கும் புடிச்சிருந்தால் சரி. நீங்க அப்பா, அண்ணன் மூன்று பேரும் சேர்ந்து பேசி முடிவு எடுங்க…கல்யாண தேதியை குறிச்சிட்டு என்கிட்டே சொல்லுங்க!” அம்மாவிடம் சொல்லிவிட்டு மனம் முழுக்க சந்தோஷத்துடன் அவன் அறைக்கு சென்றான்.

9

நகரின் மையப் பகுதியிலிருந்து அந்த பிரபல நகை கடைக்கு சென்றான் ஆதர்ஷ் வெள்ளி என்று போர்ட்டு தொங்கிக் கொண்டிருந்த செக்ஷனுக்குள் சென்றான். அங்கிருந்த கடைக்காரரும் அவனிடம் அடக்கமாக கேட்டார்.

“வாங்க சார், என்ன பாக்கறீங்க?”

“கொலுசு!”

“உட்காருங்க சார்!” என்று சொன்ன கடைக்காரர் கண்ணாடி ஷெல்பில் இருந்து சில பாக்ஸை எடுத்தார். அந்த பாக்சில் இருந்த எல்லா கொலுகளையும் கண்ணாடி மேஜையின் மீது பரத்தினார்.

“பாருங்க-சார்!”

ஆதர்ஷ் ஒவ்வொரு ஜோடியாக எடுத்துப் பார்த்தான். எதுவும் அவனுக்கு திருப்தியாக இல்லை. எல்லா கொலுசுகளிலும் கொக்கி மாட்டும் இடத்தில் மட்டும் தான் முத்து இருந்தது.

“எனக்கு இந்த மாதிரி டிஸைன்ஸ் வேண்டாம் சலங்கை நிறைய முத்துக்கள் உள்ள கொலுசு இருக்கா?” கடைக்காரர் பரத்தி வைத்த அனைத்து கொலுசுக்களையும் பாக்ஸில் போட்டு மூடி விட்டு வேறொரு பாக்ஸை எடுத்தார். அதிலிருந்த எல்லா கொலுசுகளையும் அவனிடம் காண்பித்தார். எல்லா கொலுசுக்களிலும் முத்துக்கள் வரிசையாக நிறைந்திருந்தன. அதைப்பார்த்ததும் ஆதரிஷின் மனம் குதூகலமானது. எதை தேர்வு செய்வது என்று ஒரு நிமிடம் குழம்பிப் போனான். விலை உயர்ந்த கொலுசை தேர்வு செய்தான். பில் போட்டு வாங்கி கொண்டு கடையைவிட்டு வெளியே வந்தான்.

அங்கே சிந்துவின் வீட்டில் சிந்துவை ஈஸ்வருக்கும் மங்களாவிற்கும் பிடித்து போனது. பட்டுப்புடவையிலிருந்து சிந்து சகஜமாக பழகினாள். மங்களாவின் அருகில் வந்து அமர்ந்து, “எப்படி அத்தை இருக்கீங்க?” என்று கேட்டாள். அதுலேயே மங்களா பாதி கரைந்துப் போனாள்.

“நல்லா இருக்கேன்ம்மா”.

“என் பையன் உன் போட்டோவை காண்பிச்சான் போட்டோவிலேயே உன்னை எங்களுக்கு புடிச்சிப் போச்சு. எனக்கு மொத்தம் இரண்டு பையன் இவன் தான் முத்தவன்!”

“தெரியும் அத்தை இரண்டாவது பையன் டாக்டர் ஆதர்ஷ் தனே அவர் வரலையா?”

“அவன் வரலைன்டடுன்ம்மா!”

சாந்தாதேவி முகேஷை நேரில் பார்த்தவுடன் பிடித்துப் போய்விட்டது. சம்பந்தம் பேசிய பிறகு சாந்தாதேவி பண்ணியிருந்த வடை கேசரி பஜ்ஜி பாயாசம்…எல்லாம் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

முகேஷ் சாப்பிட சாப்பிட உளுந்து வடையை கொண்டுபோய் பரிமாறினாள். அவன் “போதும் அத்தை” என்று சொல்ல பாயாசம் இன்னொரு கப் வைத்தாள். அனைவரும் ஜாலியாக அரட்டை அடித்துப் பேசி கொண்டிருந்தார்கள். விடே மங்ளகரமாக இருந்தது. மனநிறைவாக மங்களா, ஈஸ்வர், முகேஷ் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

அவர்கள் வீட்டிற்கு வந்ததும் ஆதர்ஷ் அனைவரிடத்திலும் பொய்யாக கோபித்துக் கொண்டான்.

“என்னை விட்டுவிட்டு போய்ட்டங்க”

“உதைச்சேன்னா பெரிசா நீங்களும் அண்ணணும் பேசி முடிவு பண்ணுங்கனு பிகு பண்ணிக்கிட்டே…”

“என்னாச்சும்மா”

“சிந்து நேரில் உன்னைப்பத்தி அக்கரையா விசாரிச்சிட்டா!”

ஆதர்ஷ் கையில் வைத்திருந்த அடடைப் பெட்டியை திறந்தான். உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்த சிவப்பு கலர் பேப்பரை பிரித்தான். அதிலிருந்த கொலுசை வெளியே எடுத்தான்.

“எப்படி இருக்கிறது?”

முத்துக்கள் நிறைந்த கொலுசுவை மங்களாவின் முகத்துக்கு நேரே தொங்கவிட்டு ஆட்டியபடி கேட்டான். மங்களா அந்த கொலுசை வாங்கி பார்த்தாள்!

“நல்லாயிருக்குடா!”

“நீங்க கிளம்புவதற்கு முன்னாடியே வாங்கி குடுத்தனுப்பணும் நினைச்சேன்…லேட்டாயிடுச்சு”

“பார்த்தாயா முகேஷ் உனக்கு தோணாதது உன் தம்பிக்கு தோணியிருக்கு வருங்கால அண்ணிக்கு கொலுசு வாங்கி கொடுத்து ஐஸ் வைக்க பார்க்கிறான்!”

ஒன்றுமே புரியாமல் மங்களாவை பார்த்தான் ஆதர்ஷ். மங்களா சொன்னாள்,

“இதோ பாருடா ஆதர்ஷ் உன் அண்ணியா சிந்து வர்றபோராள். அண்ணி என்பவள் அம்மாவுக்கு சமம்னு சொல்லுவாங்க அதனால அவளை பேர் சொல்லி எல்லாம் கூப்பிட கூடாது!”

ஆதர்ஷீக்க மூளையில் எங்கோ உறைந்தது. “அ… அண்ணியா?”

“நீங்க இன்னும் அந்த காலத்திலேயே இருங்க சிந்துவை பேர் சொல்லி கூப்பிடணும்னு பிரியப்பட்டா கூப்பிட்டு போறான்” என்றான் முகேஷ். மங்களா சற்று குரலை உயர்த்திச் சொன்னாள்.

“சும்மா இருடா ஒரு மட்டு மரியாதை வேண்டாம். உன்னை அண்ணானு தானே கூப்பிடறான். அண்ணன் பொண்டாட்டியை அண்ணினு தானே கூப்பிடனும். ஆதர்ஷ் நான் சொன்ன கேட்டுப்பான். உன்னை மாதிரி விதண்டா வாதம் பண்ணமாட்டான். என்னப்பா சிந்துவை அண்ணினு தானே கூட்பிடுவே!”

“…சரி அம்மா… நீங்க சொல்றபடி அண்ணிணே கூப்பிடறனே!”

இன்னும் நம்பமுடியாமல் அதிர்ச்சியில் இருந்தான்.

“டேய் ஆதர்ஷ் சிந்து எனக்கு எப்படி பழக்கம்னு தெரியுமா? உனக்கு ஞாபகமிருக்கா அன்னிக்கு ஒரு நாள் அஜித் சி.டியை எடுத்துட்டு வர்றதுகாக நீ எழுந்து உள்ளே போயிட்டே அந்நேரம் உன் சீட்டில் எதேச்சையாக உட்கார்ந்தேன். அப்போ சிந்து அவ நாய்க்குட்டியை தூக்கிட்டு வந்தா… அப்ப தான் எனக்கு அறிமுகமானா…அப்புறம் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க ஆரம்பிச்சப்புறம் நான் டாக்டர் இல்லை ஒரு இன்ஜினியர்னு அவர்கிட்டே செல்லிட்டேன். அவளும் அந்த விஷயத்தை பெரிசாக எடுத்துகலை என்னோட லவ்ஸ்டோரி இன்ட்ரஸ்ட்டிங்காக இருக்குல்ல…!”

பதிலேமுதும் சொல்லாமல் வருத்தத்துடன் தலையை ஆட்டினான்.

10

இரவு முழுவதும் சரியாக தூங்காததால் அதிகாலையிலே எழுந்து விட்டான் ஆதர்ஷ் மனம் கரைந்தது. என்னலின் திரைச்சீலையை விளக்கி வானத்தைப்பார்த்தான். இன்னும் கொஞ்சம் நேரத்தில் சூரியன்பந்து போல் வெளியே வர ஆரம்பிப்பான். வெள்ளை பனிமூட்டத்தோடு பறவைகள் கூட்டத்தோடும் பாதி இருட்டும் பாதி வெளிச்சமும் கலந்த விடியலை பார்த்தால் மனதில் வலி கொஞ்சம் குறையும் என்று நினைத்து வானத்தையே பார்த்த வண்ணம் இருந்தான்.

சிந்துவை நினைத்து நிறைய கற்பனைகளை வளர்த்து வைத்திருந்தான். இப்போ அவள் இல்லை என்றாகிவிட்டது.

அதை நினைகையில் ஆதர்ஷின் கண்கள் கலங்கின. அவன் கண்கள் கலங்கி இருந்ததால் வானம் மங்கலாக தெரிந்தது. அதனால் தான் இயற்கையின் அழகை பார்க்க முடியவில்லையோ என்று நினைத்தான். இரண்டு கண்களையும் நன்கு துடைத்துக் கொண்டு இப்போ வானத்தை பார்த்தான். வானம் தொடர்ந்து இருட்டாகவே இருந்தது.

மணி ஆச்சே மஞ்சள் சூரியன் ஏன் இன்னும் எழுந்தபாடில்லை…கடிகாரத்தில் மணியை பார்த்தான். மணி மூன்று என்று காண்பித்தது. உள்ளுக்குள் லேசாக சிரித்தப்படி வந்து கட்டிலின் அமர்ந்தான். மேஜையின் மீதிருந்த அவனது பர்ஸை எடுத்தான். அதிலிருந்து அந்த லெட்டரை வெளியே எடுத்தான் பிரித்து பார்த்தான்.

“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு!” இப்படிக்கு சிந்து.

என் அண்ணன் பார்க்க வேண்டும் என்பதற்காக வைத்துவிட்டு போன லெட்டரை தவறுதலாக நான் எடுத்து பார்த்ததால் என்னை தான் காதலிக்கிறாய் என்று நினைத்து கற்பனை பண்ண தொடங்கி விட்டேன்.

‘என்னடா ஒரு பெண்ணே தயக்கமில்லாமல் வந்து காதலை வெளிப்படுத்துகிறாளேனு நினைச்சேன்… நடந்த எல்லாவற்றையும் நான் தான் தவறாக புரிந்துக்கொண்டேன். உன் மீது ஸாரி உங்கள் மீது எந்த தப்பும் இல்லை. அந்த கடிதத்தை நான்காக கிழித்து ஜன்னலுக்கு வெளியே தாக்கிப் போட்டான்.

இத்தனை நாட்கள் மனதில் காதலியாக நினைத்துக் கொண்டிருந்த உருவத்தை அழித்து ஒரே நொடியில் அண்ணியாக நினைத்து மனதை மாற்றி அமைத்துக் கொண்டான்.

கை கால்களை பரப்பிக்கொண்டு கட்டிலில் படுத்த அடுத்த கணமே தூங்கி போனான்.

சிந்து முகேஷின் திருமணம் சலசலப்பில்லாமல் கலகலப்பாக விமர்சையாக நடந்து முடிந்தது. சிந்துவின் வீட்டில் அறை முழுவதும் நறுமணம் கமழந்துக் கொண்டு இருந்தது. பட்டு இதழாக மொட்டு விரிந்த முல்லையும் மலில்கையும் கமகமத்தன. சந்தன ஊதுபத்தி சாம்பல் ஆகிக் கொண்டிருந்தது. ஆப்பிள் மணம் வீசின. ஒரு தட்டில் லட்டு, அல்வா, ஜாங்கிரி என்று அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுத்தமான நெய்யில் செய்யப்பட்ட அனைத்தும் சுத்தமான மணத்தை வீசின.

பூத்தூவிய மஞ்சத்தில் புத்தாடையுடன் அமர்ந்து இருந்த முகேஷ் சென்ட்போட்டு இருந்தான். மற்ற மணத்துடன் அதும் போட்டியிட்டது. ஊது பத்தியின் புகை சுருள் கருளாகக் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தது. தான் மட்டும் அல்ல நேரமும் கரைந்து கொண்டு இருப்பதை அது உணர்த்தியது.

என்ன பெரியவர்கள் ஒரு புது மாப்பிள்ளை எவ்வளவு நேரம் காத்திருப்பான். இவர்களுக்கெல்லாம் முதல் இரவு என்று ஒன்று நடந்ததே இல்லையா? முகேஷ் கைகடிகாரத்தைப் பார்த்தான். அதுவும் புதுசு தான் மாமனார் வாங்கி கொடுத்தது. மனைவியை தங்கத்தில் வார்த்துத் தந்தார். கைகடிகாரமும் பொன்னிற மெருகூட்டப்பட்ட தங்க சங்கலி மின்னிப் பளபளத்தது- மணி பத்தைத் தாண்டிவிட்டது. இரவுச் சாப்பாடு முடிந்ததும் நண்பர்களைக் கூட அடித்து விரட்டிவிட்டு அவன் அறைக்குள் வந்துவிட்டான்.

ஆனால் சிந்து இன்னும் வாந்தபாடில்லை. அலங்காரம் நடந்துக் கொண்டிருக்கிறதோ? சிந்துவுக்கு என்ன அலங்காரம் வேண்டியிருக்கிறது ! அல்வாவுக்கு யாராவது சக்கரைப் போட்டுக் கொள்வார்களா? அவளே பட்டைத் தீட்டப்பட்ட வைரம் ஆயிற்றே! தோழிகள் பிடித்து வைத்திருப்பார்களோ சொல்ல முடியாது. முகேஷ் பொறுமை இழந்தான். அறைக்குள் நடைபயின்றான். காலையில் அவனுக்கும் அவளுக்கும் வந்த பரிசு பொருட்களை ஓர் ஓரமாக அடுக்கி வைத்திருந்தார்கள்.

சில பரிசுப் பொருட்கள் கன்னி கழியாத பெண் போல பரிசுத் தாளில் சுற்றப்பட்டு வைக்கபட்டு இருந்தன. உள்ளே இருப்பது பிரித்துப் பார்க்கப்படவில்லை. மணமக்கள் பிரித்து பார்க்கட்டுமே என்று அப்படியே வைத்துவிட்டார்கள் போருலிக்கிறது. அந்தச் சாமான்கள் இடையே ஒரு பெட்டி… அந்தப் பெட்டி மீது தந்திகளும் அஞ்சல்களும் அடுக்காக இருந்தன. காலையில் வந்த வாழ்த்துச் செய்திகள் சில பிரிக்கப்படாமலும் இருந்தன. முகேஷ் காலையில் சில தந்திகளைப் பார்த்தான். பிறகு படிக்க நேரமில்லை. மணமக்கள் படிக்கட்டுமே என்று இப்பொழுது இங்கே வைத்திருக்கிறார்கள் போலும். முகேஷ் அருகில் சென்று நாலைந்து தந்திகளைக் கையில் எடுத்தான். இரண்டைப் பிரித்துப் பார்த்தான். அதற்கு மேல் அவனுக்கு பொறுமை இல்லை. வைத்துவிட்டு மீண்டும் கட்டிலுக்கு வந்தான். அவன் தலைக்கு மேல் பூச்சரம் தொங்கியது. ஒரு மல்லிகை மொட்டு இன்னும் மலராமல் இருந்தது. சரத்தில் இருந்த அதை உதிர்த்து எடுத்தான். சிந்துவை நினைத்துக் கொண்டே அதன் இதழ்களை கையில் விரித்தான். ‘குப்’ என்று மணந்தது. கையை உயர்த்தி முகர்ந்தான். அப்பொழுது கதவு திறந்தது. சொர்க்க வாசல் திறப்பது போல் இருந்தது. முகேஷ் திரும்பிப் பார்த்தான். நாலைந்து தோழிகள் என்று சிந்துவை அறைக்குள் தள்ளினார்கள். ‘கலீர் கலீர்’ தோழிகளின் சிரிப்புகள் குபீர்ச் சிரிப்பாக மாறி விட்டையே குலுங்க வைத்தது.

***

சிந்துவிற்கு முகேஷின் வீடு மிகவும் பிடித்துப் போனது. டிசைன் போடப்பட்ட டைல்ஸ் பதித்து ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு கலர் திசைச் சிலைகள் தொங்களிடப்பட்டு பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அவர்கள் வீட்டிலும் சிறிய தோட்டம் இருந்தது.

முதல் நாளே சீக்கிரமாக எழுந்து மங்களாவிற்கு உதவுவதற்காக சமையல் அறைக்கு வந்தாள்.

“சிந்து நான் பாத்துக்கறேன். நீ போய் முதலில் குளிச்சிட்டு வா!” என்றாள் மங்களா.

“மெதுவாக குளிச்சிக்கிறேன் அத்தை நீங்க பாவம் தனியா கஷ்டப்பறீங்க எனக்கு சமைக்க தெரியும் அத்தை நீங்க போய் உட்காருங்க நான் மீதி சமையலை பாத்துக்கறேன்!”

“முதலில் போய் குளிச்சிட்டு வந்து வேலையைப் பாரு!”

“சரி அத்தை…” என்றாள்.

“பாத்ரூமிலேயே மஞ்சளும் உரசரகல்லும் இருக்கிறது. முகத்திற்கு மஞ்சள் பூசி குளிச்சிட்டு வா!”

“மஞ்சள் எல்லாம் நான் பூசறதில்லை எனக்கு பிடிக்காது!” என்று மங்களாவிடம் சொல்லிவிட்டு அவள் உடையை எடுத்துக் கொண்டு பாத்ருமிற்கு சென்றாள். குளித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியே வந்தாள். மங்களா பாத்ரும் வாசலிலேயே நின்றுக் கொண்டிருந்தாள்.

“என்ன அத்தை?*

“மஞ்சள் பூசிணியாம்மா? ”

“எனக்கு பழக்கமில்லை!”

“நான் தான் பூசச் சொன்னேனே. சும்மா கொஞ்சம் மஞ்சள் முகத்க்கு வரைக்கும் பூசிட்டு வா!”

சிந்துவால் மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை.

இஷ்டமில்லாமல் மாயியார் சொன்னதற்காக கொஞ்சம் மஞ்சள் முகத்திற்கு மட்டும் பூசிக் கொண்டு வந்தாள். அவள் அறைக்கு செல்ல முயன்றாள்.

“நில்லும்மா உன்னை பொண்ணு பார்க்க வந்தப்பவே கவனிச்சேன் தலையில் எண்ணெய் தேய்க்கிற பழக்கமில்லையா உனக்கு… முடி எப்படி வறண்டு போய் கிடக்குது பாகு தேங்காய் எண்ணெய் பாட்டிலை எடுத்துட்டு வா நான் உனக்கு தலை பின்னி விடறேன்!”

சிந்து அவள் அறைக்குள் சென்று விட்டாள். கொஞ்ச நேரத்திலேயே மங்களா குரல் கொடுத்தாள்.

“சிந்து எண்ணெய் பாட்டிலையும் சீப்பையும் எடுத்துட்டு வாம்மா!”

சிந்து அமைதியாய் இண்டையும் கொண்டு வந்து கொடுத்தாள். மங்களா சிந்துவை உட்கார வைத்துவிட்டு இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருந்த தலைமுடியில் இரண்டு கையிலும் தேங்காய் எண்ணெய் ஊற்றி பரபரவென அவள் கூந்தலில் தேய்த்தாள்.

“எத்தனை நாளா தலையில என்னை தேய்காம இருக்கே!”

“இ… இரண்டு நாளா”

“இரண்டு நாளாவா தலையில் எண்ணெய் காண்பிக்கலை அதான் முடி காய்ஞ்சி போய் கிடக்கு… எப்ப பாரு இந்த குதிரை வாலு போட்டுகிட்டு இருந்தா முடியெல்லாம் சீக்கிரம் கொட்டி போயிடும். ஒற்றை பின்னல் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்!”

பேசிக்கொண்டே இன்னும் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து விட்டாள். நேர்வகிடு எடுத்து இறுக்கமாக ஒற்றை பின்னலை போட்டு விட்டாள்.

“பின்னிட்டேம்மா நல்ல பட்டு புடவையா எடுத்து கட்டிக்கோ முதன் முதலா புருஷன் பொண்டாட்டியும் சேர்ந்து கோவிலுக்கு போக போறீங்க இந்த பூவையை சேர்த்து வெச்சிக்கோ!”

“பூவெல்லாம் வேண்டாம் அத்தை!*

“யாராவது பூ கொடுத்தால் வேண்டான்னு சொல்ல கூடாது. வடபழனி முருகன் கோவிலுக்கு போக போறீங்க பூ இல்லாம போக கூடாது!”

“மல்லிகை பூ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் அத்தை கோவில் வாசலில் பூ வித்தால் அங்கே வாங்கி வெச்சிகிறேன்!”

“ஏன் இந்த பூவுக்கு என்ன குறைச்சல்? இதுவும் நல்ல பூ தான்.இந்த பூவையே நீ வெட்சிக்கிட்டு போ”

கதம்ப பூவை அவள் கையில் திணித்தாள். சிந்து அவனறைக்கு வந்தாள் கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தாள். தலை முழுவதும் மொழு மொழுவென்று எண்ணெய் மின்னிக் கொண்டிருந்தது. இதில் நேர் வடுகு வேற கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல்… மாமியார் கொடுத்த பூவை வைத்துக் கொண்டாள். அவள் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு அவள் அம்மாவிடம் ஒரு நாள் கூட அவள் தலையை கொடுத்தது கிடையாது. அவளுக்கு பிடித்தமான நதியா கொண்டை பானுப்பிரியா ஹேர் ஸ்டைல், குஷ்புவின் சின்னதம்பி ஹேர் ஸ்டைல் என அவளுக்கு பிடித்தமான ஸ்டைலில் வாரிக் விதவிதமாக வாரிவிடச் கொள்வாள். அவள் அம்மாவிடம் சொல்லிக் கேட்பாள். ஒற்றை ஜடை, இரட்டை ஜடை பின்னலை தவிர சாந்த தேவிக்கு வேறு ஒன்றும் போட தெரியாது. சிந்து சொல்லி கொடுத்தாலும் அவளுக்கு புரியாது. அதனால் சிந்து அவளுக்கு பிடித்த மாதிரி வாரிக்கொள்ள ஆரம்பித்தாள். சாந்தா தேவியும் சிந்துவின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க மாட்டாள். பீரோவை திறந்தாள். எந்த புடவை கட்டலாம்… வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புடவை ஒவ்வொன்றாக தூக்கிப்பார்த்தாள். நடுவில் இருந்த ஆரஞ்சு கலர் பட்டுபுடவையை உருவினாள். சிந்துவின் பாட்டி அவள் கல்யாணத்தின் போது எடுத்து தந்தது. முகேஷ் கூட சொல்லியிருக்கான்.

“இந்த புடவை நல்லா இருக்கிறது நீ இந்த புடவையில் அழகாக இருக்கே”

அந்த புடவையை எடுத்து சந்தோஷமாக கட்டிக் கொண்டாள். முகேஷ் மட்டும் என்னை இந்த புடவையில் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவான்… அமைதியாக சென்று அவன் கண் முன் தோன்றி சஸ்பென்ஸ் கொடுக்கணும்… முகேஷ்கு வேற சாப்பாடு எடுத்து வைக்கணும் மனதில் ஒரமாக இனிமையான ஆர்வம் தோன்ற அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே முகேஷ் டைனிங் ஹாலில் சாப்பிட்டு முடித்து விட்டு கையை கழுவிக் கொண்டிருந்தான்.

“இன்னும் இரண்டு இட்லி சாப்பிடுடா வர்றதுக்கு எத்தனை மணியாகுதோ…”

“போதும்மா” என்றவன் சிந்துவை கவனித்தான்.

“ஏய் ரெடியாயிட்டியா? சீக்கிரம் வந்து சாப்பிடு!” என்றவன் அவள் புடவையை பார்த்தான்.

“இந்த சாரியை ஏண்டிக் கட்டினே நம்ப நிச்சயதார்த்தப் புடவையை கட்டியிருக்கலாம் சரி வா அம்மா கூட உட்கார்ந்து சாப்பிடு நான் போய் பைகை ரெடி பண்றேன்!”

சிந்து டைனிங் ஹாலில் வந்து அமர்ந்தாள். அவள் அருகே மங்களாவும் அமர்ந்துக் கொண்டாள். இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

“ஏம்மா அவனுக்கு புடிச்ச நிச்சயதார்த்தா புடவையை கட்டியிருக்கலாம்…”

சிந்து பதிலேதும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். காலையில் எழுந்த போது இருந்த உற்சாகம் விலகி மனது இருக்கமாக தொடங்கியது.

11

அன்று ஞாயிற்று கிழமை முகேஷிற்கு லீவு. சிந்துவை கத்திக்காய் கருவாட்டுக் குழம்பு சமைக்கச் சொல்லி- யிருந்தான். மங்களாவும் இன்னிக்கு சிந்துவே சமைக்கட்டும் என்று சொல்வதற்காக சமையல் அறைக்கு வந்தாள். கிச்சன் சற்று வித்தியாசமாக புதுமையாக இருப்பதைப் போல் உணர்ந்தாள். பளபளப்பாக ஆப்பிள் வடிவ டப்பா குடைமிளகாய், திராட்சை வடிவ டப்பாக்கள் இருந்தன. அதில் என்ன இருக்கிறது என்று ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள். ஆப்பிள் வடிவ பிளாஸ்டிக் டப்பாவில் குழம்பு மிளகாய் தூள் இருந்தது. குடைமிளகாய் டப்பாவில் உப்பு இருந்தது. திராட்சை வடிவ பிளாஸ்டிக் டப்பாவில் மஞ்சள் துள் இருந்தது. அதைத் தவிர இன்னும் சில அழகான டப்பாக்கள் இருந்தன.

“என்ன அத்தை அப்படி பாக்கறீங்க நான் தான் இதெல்லாம் வாங்கினேன். எல்லா டப்பாக்களும் பழசா தெரிஞ்சது அதான் எல்லாத்தையும் மாத்திட்டேன்.”

மங்களா ‘ம்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள். காலங்காலமாக அவள் உபயோகித்து வந்த டப்பாக்களை எல்லாம் இவள் ஓங்கட்டிவிட்டாளேங்கிற வருத்தம் அவளுக்கு…

எல்லா டப்பாக்களும் பழசாக இருந்ததால் விதவிதமான வடிவங்களில் பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கி வைத்தாள் சிந்து. சமையல் அறையை ஒழுங்குபடுத்தி அழகுபடுத்தியதைப் பார்த்து மாமியார் சந்தோஷப்படுவாள் என்று நினைத்தாள்…

இந்த டப்பாக்களை எல்லாம் எங்கே வாங்கினே விலை என்ன என்று ஆசையாக கேட்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு மங்களா சரியாக கூட முகம் காட்டாமல் சென்றது ஏமாற்றமாக இருந்து.

கத்திரிக்காய் கருவாட்டுக் குழம்பை சமைக்க ஆரம்பித்தாள். மாமியார் மாமனார் கணவருக்கு சமைப்பதால் பார்த்து பார்த்து அக்கறையாக செய்தாள். சிறிது நேரத்திலேயே வீடு முழுவதும் கருவாட்டு குழம்பு கமகமக்கத் தொடங்கியது. சமையல் முடிந்ததும் ஈஸ்வர், மங்களா, முகேஷ் ஆகிய மூன்று பேரும் ஆர்வமாக சாப்பிட அமர்ந்தார்கள். சிந்து அனைவருக்கும் பரிமாறினாள். மூன்று பேரின் தட்டிலும் போதுமான அளவு சாதம் வைத்தாள். அவர்கள் சாப்பிட்ட பிறகு மீண்டும் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள். அவள் குழும்பை ஊற்றின உடன் எல்லோரும் சாப்பிடத் தொடங்கினார்கள். ஈஸ்வர் இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு “நல்லா இருக்கும்மா” என்றார்.

“நல்லாயிருக்கா…நீங்க வேற புளி, காரம், உப்பு கம்மியாயிருக்கு… அதனால குழம்பே சப்புனு இருக்கு… நம்ம ரேணுகான்னா அவ்வளவு அம்சமா செய்வா!” என்றாள் மங்களா,

இதைக் கேட்ட சிந்துவின் மனம் வாடிப்போனது. ‘இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கட்டுமா’ என்று கேட்க தோன்றவில்லை.

“ஆதர்ஷ்கு பிரண்ட்ஸ் கூட விளையாடுவதற்கு நேரம் காலம் கிடையாது. இந்த உச்சி வெயிலில் விளையாடிவிட்டு எத்தனை மணிக்கு வருவானே!”

மங்களா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசவில் கேட் திறக்கும் சப்தம் கேட்டது.

“ஆயுசு நூறுடா உனக்கு சாப்பிட வாடா…!”

“இருக்க… இருங்க… கை காலெல்லாம் கழுவிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்!*

வெள்ளை நிற பேண்டும் வெள்ளை நிற டீ ஷர்ட்டுடன் வியர்த்து ஒழுக வந்திருந்தான். ஈஸ்வரும் மங்களாவும் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள். மங்களா கைகழுவ சென்ற பிறகு சிந்து கிசுகிசுப்பாக முகேஷிடம் கேட்டாள்.

“என்னங்க குழம்பு எப்படி இருக்கிறது?”

“ம்… நல்லா தான் இருந்துச்சு” என்றான்.

“அடுத்தவாட்டி உன் பொண்டாட்டியை இப்படி சப்புனு வைக்காம உப்பு காரத்தோடு நல்லா குழம்பு வைக்கச் சொல்லு!”

கை கழுவின மங்களா அங்கு வந்து சொன்னாள். உடனே முகேஷீம், “ஆமா சிந்து உப்பு காரம் கம்மியா இருந்துச்சு அதை கொஞ்சம் சரிபண்ணி இருந்தால் நல்லாயிருந்திருக்கும்!” என்றான்.

சிந்துவின் முகம் இறுகிப் போனது. முகேஷ் டி.வியை ஆன் பண்ணினான். ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டுவந்தான். ராஜ்டினியில் ‘இதயத்தை திருடாதே’ படம் ஓடிக் கொண்டிருந்தது. அதை வைத்து பார்க்கத் தொடங்கினான். சிந்து அவனுடன் அமர்ந்து அந்த படத்தைப் பார்க்கலாமென்று அவனருகே அமர போனாள். அதற்குள் மங்களா அவனருகே வந்து உட்கார்ந்துக் கொண்டாள். அவ்வளவு பெரிய ஹாலில் உட்காருவதற்கு எவ்வளவோ இடம் இருந்தது. ஏன்? ஈஸ்வர் அருகே இடம் இருந்தது. அவர் கூட அமராமல் முகேஷூடன் உட்கார்ந்துக் கொண்டாள்.

“ஆதர்ஷீக்கு சாப்பிட எடுத்து வை” என்றாள்..

பெர்முடாஸ் பனியனுடன் ஆதர்ஷ் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான். வேறுவழி இல்லாமல் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க வந்தாள். கருவாட்டு குழம்பை சாதத்தில் பிசைந்து ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்தான் ஆதர்ஷ். அங்கே மங்களாவும், முகேஷீம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்னப்பா படம் இது?”

“இதயத்தை திருடாதே!”

“நல்ல படமாச்சே… இந்த படத்துல வர்ற ஹீரோயின் புஸ்புஸீவென குதிரைவாள் போட்டுக்கிட்டு வருவாளே ரொம்ப அழகா இருக்கும்!” என்றா மங்களா.

இதைக் கேட்ட சிந்து உள்ளுக்குள் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டாள்.

“என்ன மாதிரி படம் இது… இப்போ கூட நூறுவாட்டி பார்க்கலாம். பாட்டெல்லாம் சூப்பரா இருக்கும். இந்த படத்துல வர்ற ஹீரோயின் இந்த படத்துக்கு அப்புறம் வேற படம் நடிச்சாலானு தெரியலை!”

அவன் பாட்டுக்கு மங்களாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“அண்ணீ எக் பொடிமாஸ் வையுங்க!” என்றான் ஆதர்ஷ்.

“பக்கத்துல தானே இருக்கு எடுத்து வெச்சிக்கோங்க!”

சுள்ளென்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று எழுந்து அவள் அறைக்குச் சென்றுவிட்டாள். மங்களா எழுந்து வந்தாள்.

“என்னடா என்ன சொல்லிட்டு போறா!”

“கருவாட்டு குழப்பு ரொம்ப நல்லா இருந்ததுனு சொன்னேன்.ரொம்ப தாங்க்ஸ் என்று சொல்லிட்டு போறாங்க!”

எங்கே தான் கோபப்பட்டதை மாமியாரிடம் சொல்லி விடுவானோ என்று பயந்து போனாள். அவன் சொல்லாதது மனசுக்கு நிம்மதியாக இருந்தது.

12

வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டு சன் மியூசிக்கில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து, அந்நேரம் அழைப்பு மணி அழைத்தது.

எழுந்து போய் யாரென்று பார்த்தான். முகேஷின் நண்பன் ராஜா வந்திருந்தான் பள்ளி நண்பன்.

“வாங்க… வாங்க” என வரவேற்றாள். ராஜா புன்னகையுடன் உள்ளே வந்து அமர்ந்தான். முகேஷின் திருமண ரிஷப்ஷினில் சிந்துவிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தான்.

“சிந்துனு பேர் வைச்சிருக்கீங்க பைரவினு யாரையாவது என்று அவன் சின்னவீ வெச்சுக்க போறான் பார்த்துங்க!” அவளிடம் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

சிந்து மங்களாவின் அறைக்குச் சென்றாள். அறைமுழுவதும் அமர்த்தாஞ்சன் வாசனை அடித்தது. தலைவலி, கால்வலி என அமர்த்தாஞ்சனை தடவிக் கொண்டு படுத்திருந்தவளை கூட்பிட்டாள். “அத்தை அவரோட ப்ரெண்ட் ராஜா வந்திருக்கிறார்!” என்றாள். மங்களா அசையவில்லை. சிந்து லேசாக தட்டினாள். முழித்துக் கொண்டாள்.

“அவரோட ப்ரெண்ட் ராஜா வந்திருக்கார்…!”

“ம்… ப்ர்ஜில் சூஸ் இருக்கும் ஊத்திக்குடு, ஸ்வீட், காரம் எதாவது இருந்தால் வெச்சுகுடு…”

அறையைவிட்டு மெதுவாக எழுந்து வெளியே வந்தாள் மங்களா. அவளை பார்த்தும் ராஜா கேட்டான் “என்னம்மா எப்படி இருக்கீங்க?!*

“இருக்கேன்ப்பா… என்னப்பா திடீர்னு இந்தப் பக்கம்?”

“குழந்தைக்கு இந்த மாசம் 13ம் தேதி பேர்வெக்கிறேன்ம்மா… எல்லோரும் வந்திருங்க.”

“முப்பது நாளாச்சா, உன் பொண்டாட்டி கல்யாணமான அடுத்த மாசமே உண்டாயிட்டா…எங்க சிந்து இன்னும் சும்மா தான் இருக்கா…”.

சிந்து சிரித்தவாறு ஜூஸை அவனிடம் கொடுத்தாள். ஸ்விட் காரம் இருந்த தட்டை அவனிடம் நீட்டினாள். அவன் ஜூஸ் தட்டு போதும் என்று சொல்லிவிட்டான்.

அவன் தமாசாக பேசியதால் மாமியாரின் குத்தல் பேச்சு அவளை அவ்வளவாக பாதிக்கவில்லை.

“என்ன பெயர் வெச்சிருக்கீங்க” என கேட்டாள் சிந்து.

“ரோகினி… முகேஷ் வந்ததும் சொல்லிடுங்க நான் முடிஞ்சா அவனுக்கு அப்புறமா போன் பண்றேன். கண்டிப்பாக வந்திடுங்க!”

சிந்துவிடம் சொல்லிவிட்டு அவன் எழுந்தான்.

அவன் சென்ற பிறகு அவன் பேசிய விதத்தை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டாள். முகேஷ் வந்ததும் முதலில் இதைச் சொல்லனும், அவரும் ஏதாவது சொல்லி கலாய்ப்பார்.

ஏழு மணியளவில் அலுவலகத்தில் இருந்து முகேஷ் வந்தான். உற்சாகமாய் அவன் முன்பு போய் நின்றாள் சிந்து. அவன் நண்பன் ராஜா வந்துவிட்டு போன விஷயத்தை சொல்வதற்காக ஆசை ஆசையாக பேச ஆரம்பித்தாள்.

“என்னங்க…”

“ப்ளீஸ்…ப்ளீஸ்…காபி சிந்து…ரொம்ப டயார்டா இருக்கேன்…”

“சரிங்க இதோ எடுத்துட்டு வறேன்”

காபியை கலக்குவதற்காக அவள் சமையல் அறைக்குச் சென்றாள். அதுவரை அவள் அறைக்குள் படுத்திருந்த மங்களா எழுந்து வெளியே வந்தாள்.

“உன்னோட ப்ரெண்ட் ராஜா வந்துட்டு போனம்பா!” என்றாள்

“அப்படியா! ” என்று ஆச்சர்யமாக கேட்டான்.

“எப்போம்மா?”

“காலையில் தான் அவனோட குழந்தைக்கு பேர் வெக்கிற பங்ஷனாம். எல்லாரையும் வரச்சொல்லியிருக்கான். உனக்கப்புறமா போன் பண்ணிச் சொல்றேன்னா. மங்காள ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்தாள். உள்ளே சமையல் அறையில் சிந்துவின் மனது படபடவென்று அடித்துக் கொண்டது. தான் அந்த விஷயத்தை கணவனிடம் சொல்லவேண்டும் என்று அவள் மனம் ஏங்கியது. ராஜா சிந்துவைப்பற்றி தமாஷாக பேசியதையும் முகேஷிடம் ஒப்பித்துவிட்டாள். முகேஷ் சிரித்தான்.

“வரவர அவனுக்கு கொழுப்பு ஜாஸ்தியாடுச்சி. நேரில் பார்க்கும் போது ஒரு லெப்ட் ரைட் குடுத்தா சரியாயிடும்”

சிந்து சூடான காப்பியை அவனிடம் கொடுத்தாள்.

“சிந்து நீ எதோ சொல்லவந்தியே என்ன அது?”.

“ஓ… ஒன்னுமில்ல…!”

சிந்துவின் முகம் கரும்பாறையாக மாறியிருந்தது.

“ஏய்… ஏதோ சொல்ல வந்தே இப்போ ஒன்னுமில்லன்னு சொல்ற…பொய் சொல்லாத என்ன சொல்லவந்தே சொல்லு?” அவளது தோளை தொட்டு திருப்பினான்.

சிந்து அவனது கையை பட்னெட தட்டிவிட்டு அவள் அறைக்குச் சென்றுவிட்டாள். முகேஷ் அவள் பின்னாடியே வந்தான்.

“நில்லுடி நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு ரூமுக்குள்ள வந்துட்டே கேட்டுகிட்டு இருக்கிற நான் என்ன பைத்தியக் காரனா?”

“உங்க ப்ரெண்டு வந்துட்டு போன விஷயத்தை நான் உங்க கிட்ட ஆசையா சொல்லாமுன்னு இருந்தேன். அதுகுள்ள உங்க அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க”

“அதுக்கென்ன இப்போ…? அவங்க சொன்னதுல என்ன தப்பு? குழந்தை மாதிரி நடந்துக்காதே!”

அவன் அதுமாதிரி கேட்டதால் அவளின் நிலைமை எப்படி சொல்லி அவனுக்கு புரிய வைப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் சமைக்கும் சமையலை குறை சொல்வதும்… அவர்கள் மகள் ரேணுகாவுடன் அவளை ஒப்பிட்டு பேசுவதும்… தான் அவனிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களை எல்லாம் மாமியார் முந்திக் கொண்டு அவனிடம் சொல்லிவிடுவது இதுபோன்ற விஷயங்களை எல்லாம் அவனிடம் வெளிப்படையாக சொல்வதற்கு அவளுக்கு பயமாக இருந்தது. திருமணமான பின்பு சில விஷயங்களில் எளிதில் நெருங்கவிடாதபடி அவனை சுற்றி ஒரு வளையம் போட்டுக் கொண்டிருந்தான்.

“சும்மா என்பின்னாடியே சுத்திகிட்டு இருக்னும்னு நினைக்காதே என் அம்மாவை கவனி”

அதிகாரத்துடன் சொல்லிவிட்டு கதவை டமாரென சாத்திவிட்டு செல்லும் போது அவனை நினைக்கும் போதே திகிலாக இருந்தது.

13

மறுநாள் வாஷிங் மெஷினிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து பக்கெட்டில் போட்டாள் சிந்து. முகேஷின் வெள்ளைநிற பனியனை வெளியே எடுத்தபோது அதைப் பார்த்து திகைத்துப் போனாள். சிவப்பு நிற சாயம் ஒட்டியிருந்தது. அவளது சிவப்பு ஜாக்கிட்டிலிருந்து ஒட்டி இருந்தது.

அய்யோ பனியன் பூராவும் கறையாயிடுச்சே அவர் பார்த்தால் அவ்வளவு தான் கொன்னுடுவார் அவருக்கு தெரியாமல் டிரைக்கிளின் கொடுத்து சரி பண்ணணும் என்று நினைத்துக் கொண்டாள். படபடக்கும் நெஞ்சோடு சாயம் பிடித்த பனியனை மற்ற துணிகளோடு சோர்த்து மொட்டை மாடியில் உலர்த்திவிட்டு வந்தாள். மாலை அந்த பனியனை பிரோவில் அவன் இடத்தில் வைக்காமல் அவள் புடவைகள் இருந்த தட்டில் கடைசி புடவையின் அடியில் மறைத்து வைத்தாள். டிரைக்கிளீன் பண்ணி சரி பண்ணும் வரை முகேஷின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ளணும்… முகேஷ் அவளது பொருட்களை என்றுமே அந்த அவளிற்கு அலசி ஆராய மாட்டான். அது கொஞ்சம் தைரியமாக இருந்தது.

அலுவலகத்திலிருந்து திரும்பிய முகேஷுக்கு வழக்கம் போல காப்பி போட்டுக் கொடுத்தாள். ரொம்ப நாட்களுக்கு பிறகு வழியில் சந்தித்த நண்பனைப் பற்றியும் ஆபிஸில் நடந்த கலாட்டா…எம்ப்ளாயிஸீக்கும் மேனேஜருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பற்றியும் அவன் அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். சிந்து பொம்மை மாதிரி உட்கார்ந்துக் கொண்டிருந்தாள். முகேஷ் சிந்துவை பார்த்தான்.

“வர்றீயா பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு போயிட்டு வரலாம்” எனக் கேட்டான். அவளுடன் வெளியே செல்லும் போது நிறைய பேசுவான் என்று நினைத்து ஆசையாக கிளம்ப தாயாரானாள். அவள் ஆசையில் மண் விழும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“கொஞ்சம் இருப்பா” என்றாள் மங்களா. முகேஷின் அறைக்கு விறுவிறுவென சென்றாள். அறையில் இருந்து வெளியே வந்த மங்களாவின் கையில் சாயம் படிந்த பனியன் இருந்தது. அதைப் பார்த்த சிந்துவிற்கு தூக்கி வாரிப் போட்டது.

“உன்னோட பனியனை பார்த்தியா முகேஷ்”

பனியனை மகனிடம் காண்பித்தாள். மடித்து வைத்திருந்த பனியனை பிரித்து ஒரு உதறு உதறி பார்த்தான். அவன் முகம் மாறியது.

“என்னடி இது?” எனக் கேட்டான்.

“உன்னோட பனியனை வாஷிங் மெஷினில் போட்டிருக்கா அவளோட சிவப்பு கலர் ஜாக்கிட்டிலிருந்து சாயம் ஓட்டியிருக்கு இதை நீ பார்த்தால் கத்துவேனு அவ அலமாரியில் ஒளிச்சு வெச்சிருக்கா!”

மங்களம் தெள்ளத்தெளிவாக சொன்னாள். சிந்து அதிர்ந்து போனாள்.

இத்தனை நாட்கள் மாமியார் சாதரணமாக அவளோட வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். தன்னை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அன்று தெரிந்துக் கொண்டாள்.

ஒரு சாதாரண விஷயத்தை பெரிதுபடுத்தி கணவனும், மாமியாரும் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். பெரிய தவறு செய்துவிட்டோமோங்கிற குற்ற உணர்வு ஏற்பட அவமானத்தால் மனது ஒடுங்கியது. உதடுகள் துடித்தன. குறுகி போனாள்.

“எத்தனைவாட்டி சொல்லியிருக்கேன் வெள்ளை துணிகளைத் தனியா போடுன்னு…!”

“அப்பப்போ துணிகளை கையால் தான் துணியை துவைச்சு போடறது!”

மங்களா ஏற்றிவிட்டாள்.

“இதை எப்படி நான் ஆபீஸ்க்கு போட்டுட்டு போறது. அறிவில்லை… ஒரு வாட்டி சொன்னா தெரியாது!”

“இனிமே கையால் துவைத்துப் போடச் சொல்லுப்பா… நாம இரண்டுபேரும் இவ்வளவு பேசுறோமே ஏதாவது வாயை திறக்கிறாளா பாருப்பா!”

சிந்துவிற்கு கோபம் பீறிட்டது.

“எனக்கெல்லாம் தெரியும் நீங்க எதுவும் சொல்லத் தேவையில்லை!” குரலை உயர்த்தி சீரிட்டாள். அவ்வளவு தான் வீடே களேபரமானது.

“என்னடி எங்கம்மாவை எதிர்த்து குரலை உயர்த்தி பேசறே…”

கையை ஓங்க போனவனை ஈஸ்வர் வந்து தடுத்து நிறுத்தினார். மாமனாராவது தன் நிலைமையை புரிந்துக் கொண்டார் என நினைத்தாள்.

“நாம் ஆரம்பத்திலேயே அவளை கண்டிச்சு வெச்சிருக்கணும்டா இல்லையினா இதுமாதிரி பேசறதுக்கு தைரியம் வந்திருக்குமா?” மாமனார் மகன் கூட சேர்ந்து கடிந்தார்.

சிந்து உடைந்து போனாள் பயத்தால் இருதயம் படபடவென அதிகமாக அடித்துக் கொண்டது. கண்கள் கலங்க அறையினுள் சென்று தாளிட்டுக் கொண்டாள். கணவன் மட்டும் கேள்விகேட்டு மற்றவர்கள் அமைதியாக இருந்திருந்தால் இந்தளவுக்கு புழுவாக துடித்துப் போய் இருந்திருக்கமாட்டாள்.

14

மொட்டைமாடியில் இருட்டில் தனியாக இருந்தாள் சிந்து.

“ஹாய் அண்ணி!”

உற்சாகமாய் அழைத்தவாறு ஆதர்ஷ் அங்கு வந்தான்.

“அண்ணி தூக்கம் வரலையா? எனக்கும் தான்… மொட்டை மாடியில் கொஞ்சம் நேரம் காத்துவாங்கிட்டு வரலாம்னு வந்தேன்…பார்த்தா நீங்களும் இங்கே இருக்கீங்க”

பெர்முடாஸீம் பனியனுடன் இருந்தான். சிந்துவிடமிருந்து சற்றுத் தள்ளி இடைவெளிவிட்டு ஜம்ப் பண்ணி சிமெண்ட் திட்டில் அமர்ந்துக் கொண்டான்.

“அண்ணி…”

ஆசையாக கூப்பிட்டுவிட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான். சிந்து வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். சோகமாக அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

“என் அண்ணி சோகமாக இருக்கீங்க?”

“ஒண்ணுமில்ல ஆதர்ஷ்!”

“பரவாயில்லை என்கிட்ட சொல்லூங்க வீட்டில் ஏதாவது பிரச்சனையா?”

“ஆமா ஆதர்ஷ்!”

“என்ன நடந்தது?”

“நான் உன்கிட்ட ஒன்னு சொல்லப்போய் நீ அப்படியே உன் அண்ணன்கிட்டே ஒப்பிப்பே…அப்புறம் உங்கண்ணன் என் மேல தான் தாம் தூம்னு குதிப்பாரு!”

“நான் சத்தியமா யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். உங்களுக்கு என்ன பிரச்சனை?”

அவன் அக்கரையாக விசாரித்து ரணமாய் போயிருந்த மனதை மயிலிறகால் வருடுவதைப் போல இருந்தது. ஒரு நொடி மூச்சை இழுத்துவிட்டாள். பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினாள். ஆதர்ஷ் அவளது தயக்கத்தை உடைத்தான்.

“எங்கம்மாவைக் கண்டாலே உங்களுக்கு பிடிக்கவில்லை கரெக்ட்தானே!*

சிந்த அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“க்… கரெக்ட்!”

“நீங்க என் அவங்களை உங்க அம்மா மாதிரி நினைக்க கூடாது?”

“எங்கம்மா மாதிரி நினைச்சு தான் அவங்களக்கு ஆக்கி போடறேன். ஆன அவங்க குறை சொல்லிட்டே இருக்காங்களே. உங்கக்காவோட என்னை ஒப்பிட்டுப் பார்த்து என்னை குறைவா பேசறாங்க. நீங்க சொல்ற மாதிரி மாமியார் கிட்டே எல்லாம் அவ்வளவு ஈஸியாக பேசி பழக முடியாது ஆதர்ஷ், சதா அவர்கூடவே உட்கார்ந்துகிட்டுருக்காங்க. நான் அவர்கிட்ட சொல்ல நினைக்கிற விஷயங்களை எல்லாம் எனக்கு முன்னே அவங்க சொல்லி ஓப்படிச்சிடறாங்க. மனரீதியா கஷ்டப்படுத்துராங்க அவங்க இதுமாதியெல்லாம் நடந்துக்கிறதால் எனக்கு அவங்க மேல பகை தான் வருது ஆதர்ஷ்!”

“அண்ணி அம்மா வயசானனவங்க தான் என்ன செய்றோம்ங்கிறது அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது!”

“இதை நான் கண்டிப்பாக ஒப்புக்கொள்ளமாட்டேன். உங்கம்மா என்னைவிட வயசுல பெரியவங்க… பூஜை புனஸ்காரமெல்லாம் செய்றாங்க…நாகரிகம் தெரிஞ்சவங்க.. சமயத்துல இங்கிதம் இல்லாம நடந்துகிறதனதால் தான் வீட்டில் பிரச்சனையாயிருக்கு!”

“சரி அண்ணா என்ன சொல்றான்?”

“உங்க அன்னன் அண்ணன் என்னடான்னா நீ என்னை கவனிக்களையினாலும் பரவாயில்லை எங்கப்பா அம்மாவை நல்லா கவனிக்கிறார். உங்கண்ணன் கூட குடும்பம் நடத்த தானே என்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கார். என்னோட உணர்வுகளை புரிஞ்சுக்க மாட்டேங்கிறார். எங்களுக்குள்ளே பலமான உறவில்லை.

பொண்டாட்டிங்கிறன படுக்கைக்கு மட்டும் தான்… அது தவிர சிரிச்சி பேசி அரட்டை அடிக்கிறது. பகிர்ந்துகிறது இது போன்ற நியாயமான ஆசைகளை ஜஸ்ட் லைக் தட்னு நினைக்கிறார். கணவன் மனைவிக்குள்ளே பலமான உறவு இருந்தால் தான் கணவனின் குடுபத்தாருடன் நெருங்கி பழக பிடிக்கும். யாராவது குத்தலாக பேசினாலும் பொருத்துப் போக தோன்றும். எங்களுகுள்ள அது இல்லவே இல்லை. அதனால் தான் எரிச்சல் கோபம் எல்லாம் வருது. வீட்டில் இத்தனை பேர் இருந்தும் தனியாக பில் பண்றேன் ஆதர்ஷ்!”

“உங்க நிலைமை எனக்கு புரியுது. ஆனா என்ன பண்றது தான் தெரியலை!”

சில நொடிகள் அங்கே நிசப்தம் நிலவியது. பின்பு பட்டென்று,

“அந்த நிலாவை பாருங்களேன்!” என்றான் ஆதர்ஷ். சிந்து அன்னார்ந்து வானத்தைப் பார்த்தாள். வட்டவடிவமாக நிலா பெரியதாக இருந்தது.

“அழகா இருக்க்கில்ல…”

“ரொம்ப அழகா இருக்கிறது ஆதர்ஷ் எவ்வளவு பெரிசாக இருக்கிறது பாறேன்!”

“இன்னிக்கு பௌர்ணமி அண்ணி”

“ஓஹோ…”

“பௌர்ணமி அன்னிக்கு தான் இதை உங்ககிட்டே குடுக்கணும்னு நினைச்சேன் இந்தாங்க!”

கிண்டலாக சிரித்தவாறு நீளமான அட்டை பெட்டியை அவளிடம் கொடுத்தான்.

“என்னது ஆதர்ஷ்”

“பிரிச்சு பாருங்க”

அட்டை பெட்டியை திறந்து பார்த்தாள். உள்ளே முத்துகள் நிறைந்த கொலுசு இருந்தது. கொலுசை வெளியே எடுத்துப் பார்த்தாள்.

“உங்களுக்காக நான் வாங்கினேன். எப்பவோ வாங்கினது. மணமேடையில் ப்ரெசென்ட் பண்ணியிருந்தால் பத்தோடு பதினொன்னா போயிருந்திருக்கும். மெதுவா குடுத்துகலாம்னு நினைச்சேன். கிளினிக் ஃப்ரெண்ட்ஸ்னு பிஸியாக இருந்ததால் குடுக்க முடியலை. இன்னிக்குதான் ஞாபகம் வந்தது. உங்களுக்கு கொலுசு பிடிக்குமா அண்ணி?”

“கொலுசு போடற பழக்கமில்லை எனக்கு, நீ கொடுத்கிறதால் வாங்கிறேன்”. கொலுசை அட்டைப் பெட்டியில் வைத்து மூடினாள். நிலாவை மீண்டும் அன்னார்ந்து பார்த்தாள்.

“நிலா மாதிரி சூரியனும் அழகுதான் தெரியுமா அண்ணி?”

“ரியலி?”

“உச்சி வெயிலில் பன்னிரெண்டு மணிக்கு சுட்டெரிக்கும் சூரியன் இருக்கே…!”

“அதையா பார்க்கச் சொல்றே?”

“அட நீங்க வேற அதிகாலையில் வானத்திற்குள்ளே இருந்து வெளியே வரும் சூரியனை ரசிச்சுப் பாருங்க உங்க கவலையெல்லாம் மறந்து போகும்” என்று சொல்லவிட்டு பெரிதாக ஒரு கொட்டாவி விட்டான்.

“தூக்கம் வருது போகலாமா அண்ணி?”

“ம்!”

15

சிந்து அவளறைக்கு வந்தாள்.

முகேஷ் நன்கு தூங்கிக் கொண்டிருந்தான். அவள் பக்கம் திரும்பி படுக்க கூடாது என்று முதுகை காண்பித்துக் கொண்டு படுத்திருந்தான். முன்பெல்லாம் சண்டை வந்தால் அவன் திரும்பிக் கொண்டு படுத்திருந்தாலும் பறிதவிக்கும் மனதோடு ஒரு குழந்தையையோல் அவனை அனைத்துக் கொள்வாள். அவன் தட்டிவிடுவான். முகத்தில் அடித்தாற் போல் இருந்தாலும் மீண்டும் அவனிடம் ஒட்டிக்கொள்வாள்.

சிந்து படுத்தாள். தூக்கம் வராமல் மின்விசிறியையே பார்த்த வண்ணம் இருந்தாள். நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த வேதனையெல்லாம் காணமல் போயிருந்தது. காரணம் ஆதர்ஷ். ஆதர்ஷின் அன்பான பேச்சு… ஆசையாக கொடுத்த பரிசு… மனதில் இனம்புரியாத ஒரு இதமான மெல்லிய உணர்வு ஏற்பட்டது. அது சுகமாக இருந்தது.

முகேஷ் ஒரு நாளும் நிலவையும், சூரியனையும் காட்டி ஆசையாக பேசியதில்லை. பேச முயன்றாலும் அது மாமியாரால் தடைப்பட்டுவிடும்.

அட்டைப் பெட்டியை திறந்து கொலுசை வெளியே எடுத்துப்பார்த்தாள். லேசாக ஆட்டிப் பார்த்தாள். அதன் சப்தம் இனிமையாக இருந்தது. முகேஷ் லேசாக புரண்டுபடுத்தான். சப்தம் இல்லாமல் கொலுசை அட்டைப் பெட்டியில் வைத்து மூடினாள். தலையனைக்கீழ் வைத்துவிட்டு ளகண்களை மூடினாள். ஆதர்ஷ் சொன்னது நினைவுக்கு வந்தது.

அதிகாலையில் மஞ்சள் சூரியனை பாருங்க அண்ணி மறக்காமல் சீக்கிரம் எந்திரிச்சு சூரியனைப் பார்க்கணும். ‘ஹாய் நீ சொன்னமாதிரி காலையிலே எந்திரிச்சு சூரியனைப் பார்த்தேனே’ என்று ஆதர்ஷ் கிட்டே சொல்லனும் என நினைத்துக் கொண்டாள்.

விடிவதற்கு முன்பாகவே எழுந்துக் கொண்டாள். அவளுக்கு கலைப்பேத் தெரியவில்லை. அன்னல் வழியா வெளியே பார்த்தாள். ஆதர்ஷின் நினைவு வந்தது. ஆதர்ஷிடம் பேசிக்கொண்டே இருக்கனும் போல் இருந்தது. அவள் ஆதர்வை பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வானத்தில் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒளி எழுந்தது. ஆவர்வத்துடன் பார்வையை கூர்மையாக்கினாள். நொடிகள் கரைய கரைய மஞ்சள் சூரியன் பந்து போல் முழுவதுமாக வெளியே வந்தான். அங்கிருக்கும் மரங்கள் லேசாக காற்றில் அசைவதும் பறவைகள் கூட்டம் கூட்டமாக படபடவென வானத்தில் பறந்து சொல்வதும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. சிந்து பிரமித்து போனாள்.

“இங்கே என்னடி பண்ணிகிட்டிருக்கே!”

குரல் கேட்டு லேசாக திருக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

“உங்கப்பா கிட்டே இருந்து போன்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான். இவ்வளவு காலையிலேவா என்னவா இருக்கும் லேசான பதற்றதோடு போய் போனை எடுத்துப் பேசினாள்.

என்னம்மா மாப்பிள்ளை என்னையும் அம்மாவையும் வரச்சொல்லியிருக்கார் வீட்டில் ஏதாவது பிரச்சனையா?” மறுமுனையில் தர்மராஜ் கேட்டார்.

“வ… வந்துப்பா”

“நானும் அம்மாவும் இப்போ கிளம்பி வர்றோம்!” என்று சொல்லவிட்டு போனை வைத்தார்.

சிந்து வெலவெலத்துப் போனாள். மாமியாகும். மாமனாரும், கணவனும் நிற்க வைத்து கேள்வி கேட்டது போதாதென்று இப்போ அப்பா அம்மாகிட்டே வேறு சொல்லியிருக்கார். அப்பா என்றாள் பயம் உண்டு அவளுக்கு. அவர் வந்து…என்ன நடக்கப்போகுதோ?

“அண்ணி சூரியனைப் பார்த்தீங்களா?”

கையில் பிரஷீம், டூத்பேஸ்டுடன் அங்கு வந்த ஆதர்ஷ் கேட்டான். அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் நடுங்கும் மனதுடன் அவள் அறைக்கு சென்று விட்டாள். தர்மராஜும் சாந்தாதேவியும் ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆதர்ஷ் அவன் அறையின் அருகே நின்றுக் கொண்டிருந்தான். முகேஷ் ஒருமுறை சாந்தாதேவியையும், தர்மராஜையும் ஏஹிட்டும் பார்த்தான்.

“நீங்க கேளுக!” என்றான்.

“ஏம்மா அப்படி பண்ணிணே? பெரியவங்களை அப்படி எடுத்தெறிஞ்சு பேசலாமா?”

“எங்கமாகிட்டே மட்டுமா அப்படி பேசினா அன்னிக்கு என் தம்பி கிட்டேயும் கோபமா நடந்துகிட்டா அதை நான் கவனிக்கலைனு நினைச்சிட்டிருக்கா! இது மாதிரி நடந்துகிட்டா உங்க பொண்ணை நிரந்தரமாக உங்க வீட்டிலேயே கொண்டு வந்து விட்டுடுவேன்!”

இதைக் கேட்ட தர்மராஜீம் சாந்தாதேவியும் திகைத்துப் போனார்கள், மங்களா வேறு அவள் பங்கிற்கு தூசி மாதிரியான விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்திச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்கள். ஈஸ்வர் பங்கிற்கு சில குறைகளைச் சொன்னார். வேறுவழியில்லாமல் தர்மராஜீம் சாந்தாதேவியும் சிந்துவைக் கண்டித்தார்கள். பின் அவர்கள் கிளம்ப தயாரானார்கள். முகேஷ் அவர்களை சாப்பிட்டுவிட்டு போகச் சொன்னான்.

கண்களை துடைக்க துடைக்க வழிந்துக் கொண்டிருந்த கண்ணணீரோடு இட்லி சட்னி செய்துக் கொடுத்தாள் சிந்து. அவர்கள் கிளம்பினப் பிறகு ஆதர்ஷ் கிளினிக்குச் சென்றுவிட்டான். அலுவலகம் கிளம்புவதற்கு அறைக்கு வந்தான் முகேஷ். அறையில் இருந்த சிந்து அழுத முகத்துடன் அவனிடம் கேட்டாள்.

“சாதரண விஷயத்தையெல்லாம் எதற்காக என் அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருக்கீங்க?”

“இது உனக்கு சாதாரணவிஷயமாக?”

“நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்கம்மாவிற்கும் மாமியார் இருக்காங்களா? உங்கம்மாவிற்கும் அவங்க மாமியாருக்கும் சண்டை வந்ததே கிடையாதா? உங்க மாமா என்ன உங்கம்மா அப்பாகிட்டே அதையெல்லாம் சொல்லிகிட்டாயிருக்கார். இது என்ன ஹாஸ்டலா நான் என்ன பண்றேது என் அப்பா அம்மாவிடம் சொல்வதற்கு, இதனால் என்மனசு எந்தளவிற்கு பாடுபட்டதுனு உங்களுக்கு தெரியுமா?”

அவன் கண்டுக்கொள்ளாமல் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். அவன் சென்றபிறகு அவன் மனசு கொதித்தது. தன்னை ஒரு பலியாடுபோல் நிற்கவைத்து சுற்றியிருக்கும் அனைவரும் தன்னை மட்டும் குற்றம் சாட்டியது வேதனையாக இருந்தது.

16

அழுதழுது களைத்துப் போனாள். கொஞ்சம் நேரம் டி.வியில் பாடல் ஏதாவது பார்த்தால் மனதிற்கு இதமாக இருக்கும் என நினைத்தாள். ஹாலில் மாமியாரும், மாமனாரும் இருப்பதால் அறையைவிட்டு வெளியே செல்வதற்கு பிடிக்கவில்லை. புக் எதாவது படிக்கலாம் என நினைத்தாள். அங்கிருந்த டீயாயின் மீது ஏறி சிதறி கிடந்த புத்தகங்களில் இருந்து ஒன்றை எடுத்தான். அது பெண்களுக்கான மாதப்பத்திரிக்கை. முதல் பக்கத்தில் புடவைக்கான விளம்பரம் இருந்தது. இரண்டாம் பக்கத்தில் ஒரு கட்டுரை இருந்தது. அந்த கட்டுரையின் மீது அவள் கவனம் ஈர்த்தது. ‘பெண்களுக்கு சவால்கள் தான் எப்போதும் சுறுசுறுப்பாகவும் உத்வேகத்துடனும் வைத்துக் கொண்டிருக்கின்றன’ சிந்து நிமிர்ந்து உட்கார்ந்து மேலும் படிக்க தொடங்கினாள்.

…அதற்காக நாம் பிரச்சனையை தேடிப் போக வேண்டாம். நம்மிடம் உள்ள ஆற்றல் தனித்திறமை உழைப்பு இவை வெளிப்பட்டால் தான் நாம் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நின்று ஜெயிக்க முடியும். அது எப்போதும் சாத்தியம். சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் போது மட்டுமே… உங்களை, உங்களுக்கும் ஊராருக்கும் அடையாளம் காட்டும்.

இவ்வளவு அழகாக அந்த பத்திரிக்யிைன் எடிட்டர் எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் சிந்துவின் மனதில் ஒரு புதிய தெம்பு பிறந்தது. அனைவரும் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தான் தான் காரணம் என்று குற்றம் சாட்டி தன்னை முடக்கப் பார்க்கிறார்கள். எதையாவது சாதித்து தாழ்வு மன்பான்மையிலி- ருந்து வெளிவர வேண்டும். முக்கியமான நிலையை நிலைநிறுத்த வேண்டும். மனம் துடித்தது. மூலை தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.

என்ன செய்வது… என்ன செய்யலாம்…

பொறிக்கப்பட்டிருந்த எடிட்டரின் பெயரைப் பார்த்தாள். அது ஒரு தீவிரமாக யோசித்தாள். அந்த கட்டுரையில் கீழ் பெண்மணியின் பெயர். சிந்து சிந்தனையில் பொறிதட்டியது. இந்த மாதிரி புத்தகத்தில் என் பெயரும் வெளிவந்தால் அது பெருமை தானே.

‘நான் ஏன் கட்டுரை, கதை, கவிதை எல்லாம் எழுத ஆரம்பிக்க கூடாது… தமிழில் எழுதுவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் முயன்று பார்த்தாள்… சிந்து ஆங்கிலத்தில் சரளமாக பேசுவாள். பள்ளி, கல்லூரி நாட்களில் எல்லாம் கவிதை கட்டுரைப் போட்டிகளிலெல்லாம் கலந்துக் கொண்டு பல பரிசுகள் வாங்கியிருக்கிறாள். அந்த திறமையை நான் ஏன் ப்போது வளர்க்ககூடாது. அவளுக்குள்ளே ஒரு உந்துதல் ஏற்பட்டது.

அந்நேரம் கதவு லேசாக தட்டும் சப்தம் கேட்டது. மாமியாராக இருக்குமோ….கிள்ளுவதை நன்றாக கிள்ளிவிட்டு தொட்டிலாட்டச் சொன்னால் மாமியாரை மிஞ்சுவதற்கு யாரும் கிடையாது…எழுந்து போய் கதவை திறந்தாள்.

அறையின் வெளியே ஆதர்ஷ் நின்றுக்கொண்டிருந்தான். அவளை அறியாமல் ‘ஹாய்’ என்றாள்.

“எதற்காக கதவை தட்டிக்கிட்டு கதவை திறந்துகிட்டு உள்ளே வர்றது தானே!”

“அது நாகரீகம் கிடையாதுள!”

“பரவாயில்லை உள்ளே வா”

“கொஞ்சம் ஹாலுக்கு வாங்க!” என்றான்.

“அங்கேவா?” என்று அவள் தயங்கினாள்.

“அப்பா போஸ்ட் ஆபிஸ்வரைக்கும் போய்யிருக்காங்க… அம்மா பக்கத்துவீட்டு மாமிகூட ரேஷன் கடைக்கு போயிருக்காங்க… உங்களுக்காக மொத்த பேஷண்டையும் வெயிட்டிங்கில் போட்டுட்டு வந்திருக்கேன்”

“ஏய் முதல்ல பேஷண்டைப் போய் பாரு” என்று சொல்லியபடி ஹாலுக்கு வந்தாள்.

“அப்புறம் எல்லோரும் போயிடபோறாங்க ஆதர்ஷ்!”

“போனால் போகட்டும் எனக்கு நீங்கதான் முக்கியம். இந்தாங்க” என்று ஒரு குட்டி மாத்திரையை அவளிம் கொடுத்தான்.

“என்ன மாத்திரை இது?”

“உட்காருங்க நான் போய் தண்ணி எடுத்துட்டு வர்றேன்!” சமையல் அறையில் இருந்து ஒரு டம்ளர் தண்ணிர் கொண்டு வந்தான். தண்ணீரை அவள் திட்ட கொடுத்து மாத்திரையை வாயில் போடும் படி சொன்னான்.

அவள் மறுக்காமல் மாத்திரையை வாயில் போட்டு விழுங்கினாள். இப்போ அவன் சொன்னான்.

இந்த மாத்திரையை சாப்பிட்டா தலைவலி, உடம்புவலி- யெல்லாம் போயே போய்விடும்!

“எனக்கு தலைவலி இருப்பது உனக்கு எப்படி தெரியும்?” ஆதர்ஷ் சிரித்தான்.

“இன்னிக்கு காலையில் நடந்த சம்பவத்தான் உங்க மனசு எந்த அளவிற்கு பாதிச்சிருக்கும் என்பது எனக்கு நல்லாவே தெரியும். அழுதுதழுது உங்க உடம்பை கெடுத்துகாதீங்க அண்ணி. நீங்க அழறதனால் உங்க பிரச்சனை தீர்ந்துதிடப் போகுதா என்ன? நாம என்ன மறுபடியும் மனுசனுங்களாவா பிறக்கப் போறோம்… இருக்கிற வரைக்கும் எல்லா விஷயத்தையும் டேக்கிடீசி பாசிலியாக எடுத்துகிட்டு சந்தோஷமாக இருங்க!”

“அப்படியிருக்க முடியலையே ஆதர்ஷ்!”

“அட்லீட்ஸ் எனக்காகவாது அழாமல் இருக்கனும்!”

சிந்துவின் கண்யிமை பனித்தன. அவனையே பார்த்தாள்.

“என்ன அண்ணி அப்படி பார்கிறீங்க?”

“நீ காட்ற அன்பு, அக்கறை, மனசை புரிஞ்கிற விதம் இதை எல்லாத்தையும் பார்க்கும் போது…”

“சொல்லுங்க அண்ணி!”

தலையை குனிந்துக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள்.

“உங்க அண்ணனை காதலிச்சதுக்கு பதிலாக உன்னையே காதலிச்சிருக்கலாமோன்னு தோனுது ஆதர்ஷ்…!” இதை கேட்டதும் நெற்றிப் பொட்டில் கல்லடிப் பட்டது போல் ஒரு நொடி நிலைகுலைந்துப் போனான் ஆதர்ஷ். விறுவிறுவென அவன் கிளினிக்கிற்கு சென்றுவிட்டான்.

அவன் செல்வதையே அவள் பார்த்தாள்.

17

அன்று இரவு மொட்டை மாடியில் தன்னை மறந்த நிலையில் வானத்தில் இருந்த வெண்மையான நிலாவையே பார்த்தவண்ணம் இருந்தான் ஆதர்ஷ்.

“…க்கூகும்…”

லேசாக குரல் கனைக்கும் சப்தம் கேட்டு ஆதர்ஷ் திரும்பிப் பார்த்தான். சிந்து புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தாள்.

“வாங்க அண்ணி தூக்கம் வரலையா !”

நீலநிற நைட்டியில் இருந்த சிந்து சிமெண்ட் திட்டில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். நின்று கொண்டிருந்த ஆதர்ஷ் உதட்டை சப்பிக்கொண்டு தரையை வெறித்துக்கொண்டிருந்தான்.

“என்ன யோசனை?”

“நானே உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்தி பேசனும்னு நினைச்சேன்! ”

“என்ன விஷயம்?*

“நான் ஒரு புக் படிச்சேன் அதில் ஒரு ஆர்ட்டிகல் இருந்தது. அதில் என்ன தெரியுமா போட்டிருந்தாங்க… ”

“என்ன போட்டிருந்தாங்க?”

“காதலிக்கும் போது காதல் காலிதயை தங்க தாம்பூலத் தட்டில் வெச்சி தாங்கு தாங்குன்னு தாங்குவானாம். கல்யாணத்திற்கு பிறகு அதாவது கணவனான பிறகு ஒரு சராசரி கணவனுக்குறிய குணாதியங்கள் தான் அவனுக்கு வருமாம். லைக் ஈகோ சுயநலம், டாமினேசன், மனைவியை எப்போதும் அவனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் கணவனாகத்தான் இருப்பானாம்…!”

சிந்து சிரித்தாள்.

“இதை ஏன் இப்போ என்கிட்ட சொல்ற?”

“சு…சும்மாதான்!”

“இன்னைக்கு மத்தியானம் நான் அதுமாதிரி உன்கிட்ட சொன்னதால் தானே!”

“எந்தவிதத்திலாவது உங்க மனசை பாதித்திருந்தா ஐம் சாரி… என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்திடக் கூடதுங்கிறதல ரொம்ப கவனமாக இருக்கேன் அதனால..

“அ… அதனால?”

“வி ஆர் குட் ப்ரெண்ஸ்… நாம் நல்ல ப்ரெண்ட்ஸா இருப்போம்!”

கைகுளுக்குவதற்காக அவன் கையை நீட்டினான்.

“ப்ரெண்ட்கிட்டே தான் ரகசியமான விஷயங்களைக் கூட பகிர்ந்துக்க முடியும் அது ‘நீ’ங்ற போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஆதர்ஷ்!”

அவன் கையைப் பிடித்து மென்மையாக குலுக்கினாள்.

“நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்!”

அவன் அவளைப் பார்த்தான்.

“என்னவென்று கேட்கமாட்டியா?”

“சொல்லுங்க!”

“நான் கதை, கவிதை, கட்டுரை எல்லாம் எழுதலான்னு நினைக்கிறேன் ஆங்கிலத்தில்!”

ஆதர்ஷின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

“நீங்க எழுதுவீங்களா அண்ணி?”

“ஸ்கூல் டேஸ்ல, காலேஜ் டேஸ்ல கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கேன். அந்த திறமையை இப்போ வளர்க்கலான்னு…அழுது தீர்க்க முடியாததை எழுதி தீர்க்கலாம். உங்க அண்ணன் என்ன சொல்லுவாறோ தெரியலை!”

“நீங்க பாட்டுக்கு எழுத ஆரம்பிங்க… வீட்டுல போர் அழச்சது. சும்மா எழுத ஆரம்பிச்சேன் புக்குல வந்துச்சின்னு காண்பிங்க ஒன்னும் சொல்லமாட்டார்”

“நான் எழுதுற கதை உமன்செராவில் வந்தால் என்னை பேட்டி எடுப்பதற்காக எல்லாம் வருவாங்கில்ல ஆதர்ஷ்!”

இதை கேட்ட ஆதர்ஷ் பலமாக சிரித்தான்.

“ஏண்டா சிரிக்கிற நி வேணுன்னா பாரு நான் எழுதுற கதை ஒரு நாள் படமாக்கப் போறாங்களா இல்லையானு. இல்லையினா அப்போ இந்த சிந்துவோட பக்கத்துல உன்னால நிக்கக்கூட முடியாது!*

“என்னது டாவா!”

“ஆமாம் டா ஆதர்ஷ்!”

இருவரும் சிரித்தார்கள்.

18

சிந்து விடிகாலையில் கண்விழித்தப் போது ஆரஞ்சுநிற சூரியன் ஜன்னல் பக்கத்தில் நின்று உள்ளே வரலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

காலைக்காற்று இதமாக இருந்தது. ட்ருவி… ட்ரூவி… ட்ரூவி… நிசப்த்தமான அந்த நிமிஷத்தில் திடும் என ஒரு பறவையின் குரல் பெரிதாக கேட்கவே அவள் எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

என்னப்பறவை இது! புது தினிசாக கத்துகிறது. ஜன்னல் வழியாக தெரிந்த மாமரத்தில் பார்வை சுழல விட்ட வரைக்கும் எதுவும் தென்படாதுபோகவே அவள் தூக்கம் கலைந்தது.

வாசல் பக்கம் ஆஜானுபாகுவாய் இரண்டு வேப்பமரங்கள் சற்றுத் தள்ளி வளர்தியுடன் மாம்மரங்கள், வீட்டுக்கு பின்னால் வாழை, தென்னை மரங்கள் அப்புறம் இந்தப்பக்கமாய் வீட்டை ஓட்டி உயரமும் பருமனுமாய் இரண்டு கொய்யாமரங்கள் எந்த அறை ஜன்னல் வழியாக பார்த்தாலும் பச்சென்று ஏதாவது ஒரு மரம் தெரியும்.

ஆரம்பத்தில் வீட்டை சூழ்ந்திருந்த இந்த மரங்களின் மீது அவளுக்கு கவனம் செல்லவில்லை. வீட்டில் நடக்கும் சின்னசின்ன பிரச்சனைகளைால் ‘தனியா’க்கப்பட்டதை உணர ஆரம்பித்த சிந்து இந்த மரங்களையும் அதில் ஆனந்தமாய் கூடிகட்டி வாழ்ந்த பறவைகளையும் அணில்களையும் ரசிக்கத் தொடங்கினாள்.

அந்த தோட்டத்தில் ஒரு அணில் படையே இருந்த மாதிரிதான் அவளுக்குத் அவளுக்குத் தோன்றியது. இரண்டு வேப்பமரத்தடியில் ஓடி விளையாடும். இரண்டு தென்னை மரங்களில் ஏறி மொசமொசவென்று பன்னாடைகளைப் பிராண்டி வாய்கொள்ளாமல் நார் சேகரித்துக் கொண்டு ஓடும். மரத்தில் உள்ள பூக்களை கடித்து துப்பும். வாசலில் போட்டிருக்கும் அரிசி மாவு கோலத்தைச் சுரண்டித்தின்னும் ஒன்று வாலைத் தூக்கிக் கொண்டு கச்… கச்… கச் என்று கத்தும். இன்னும் ஒன்று இன்னும் ஒன்று உங்களுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்கிற தினுசில் வாட்டர் மாங்லிகிருந்து உபரி தண்ணீர் வழிந்து விழும் இடத்தில் சில்லென்னு பாசி படர்ந்திருக்கும் கல்மேல் அக்காடா என்று கையையும், காலையும் பரப்பிக் கொண்டு படுத்திருக்கும்.

அணில்களுக்கு இத்தனை துடிப்பும் விளையாட்டும் இருக்கும் என்று அவள் நினைத்தது இல்லை. பார்த்து வியந்து போனாள். சில அணில்கள் வேப்பமரத்தை முற்றுகை இட வேண்டியது. நொடிக்கொரு பழத்தைச் சப்பித்தின்று கொட்டையை மட்டும் கீழே ஏறிய வேண்டியது. இதே வேலை! கால்களால் பழத்தை அழுத்தப் பிடித்துக் கொண்டு நிமிஷமாய் பத்து பதினைந்து பழங்களை ஒரு அணில் சாப்பிடும். அமுகும் சுறுசுறுப்பும் ஆளை அசர அடிக்க வைக்கும். ஆர்வத்தோடு ஒவ்வொரு நிமிஷமும் அணில்களைத் தேடிதேடி கண்காணித்து ரசிக்கத் தொடங்கினாள். ஆதர்ஷின் நினைவு வந்தது.

அவன் தானே இயற்கையை ரசிக்க கற்றுக்கொடுத்தது. அதே ஆர்வத்துடன் எழுத உட்கார்ந்தாள். ஆங்கிலத்தில் கவிதை, கட்டுரை, கதை என ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தாள். எந்த பத்திரிக்கையிலும் அவளது படைப்பு வரவில்லை. சோர்ந்து போகாமல் எழுதினாள். ஆங்கில நாளிதளில் அவளது சமையல் குறிப்பு வெளிவந்தது. அவள் புகைப்படத்துடன் அந்த சமையல் குறிப்பு வெளியாகி இருந்தது. அதன் கீழே அவள் பெயரை போட்டிருந்தார்கள். பார்த்து பார்த்து மகிழ்ந்தாள். முதலாவதாக ஆதர்ஷிடம் தான் காண்பித்தாள்.

“வாழ்த்துக்கள் அண்ணி! இந்த டிஷ்ஷை இதுவரைக்கும் நம்ம வீட்டில் செஞ்சதில்லையே!”

“உதைச்சேன்னா இந்த கிண்டல்தானே வேண்ங்கிறது. இந்த டிஸ்ஷை எல்லாம் ஸ்டார் ஓட்டாலில் மட்டும் தான் செய்யமுடியும். ஆமா அது ஆங்கிலத்தில் இருக்கிறது உனக்கு ஏதாவது புரியுதா ஆதர்ஷ்?”

குபுக்கென்று வந்த சிரிப்பை உதட்டை மடித்து அடக்கிக் கொண்டாள்.

“ஓஹோ! எல்லாம் என் நேரம் அண்ணி…நானும் உங்களுக்கு ஒரு குட்நியூஸ் வெச்சிருக்கேன்!”

“என்னப்பா?”

“அய்யா டெல்லிக்கு போக போகிறேன். எக்மோரி – விருக்கும் ஹாஸ்பிட்டலில் அப்பப்போ சில ஆப்ரேஷ்ன பண்ணியிருக்கேன்… எல்லாமே சக்ஸஸ்… அந்த யூனிட்டின் மெயின் பிரான்சு டெல்லியில் இருக்கிறது. என்னோட திறமையைப் பார்த்து டெல்லி வெட்னெரி ஹாஸ்பிட்டலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. நம்ம கிளினிக்கை மூடிவிட்டு வர்ற வெள்ளிக்கிழமை நான் டெல்லிக்கு பறந்திடுவேன்.*

அவள் சந்தோஷமாக கையைபிடித்து குலுக்கி,

“கன்கிராட்ஸ்… ஆனா ஒரு சின்ன வருத்தம்… நீயும் போயிட்டா அப்புறம் இந்த வீட்டில் என்னோட நிலைமை!”

“நடுவில் அப்பப்போ வந்து எட்டிப் பார்த்துட்டு போவேன். ஸோ டோன்டுவெர்ரி… இன்னொரு விஷயம்…!” லேசாக தயங்கினான்.

“சொல்லு ஆதர்ஷ்”

“இந்த விஷயத்தை உங்ககிட்டே தான் கண்டிப்பா சொல்லணும்னு துடியாய் துடிச்சுகிட்டு இருந்தேன். ஆனா எப்படி ஆரம்பிக்கிறது தான் தெரியலை!”

“சும்மா பில்டப் எல்லாம் வேண்டாம். சீக்கிரம் சொல்லு!”

ஆதர்ஷ் லேசாக வெட்கப்பட்டான் பின்பு அவளிடம் கேட்டான்.

“வினோதினி…இந்த பெயர் எப்படி இருக்கிறது. அண்ணி?”

“இந்த பெயருக்கென்ன நல்லாதானே இருக்கு!”

“வினோதினி முதன் முதலாக அவ நாய்க்குட்டியை தூக்கி கிட்டு என்கிட்ட காண்பிக்க வந்த நாள் நல்லா ஞாபகமிருக்கு- நான் சாதரணமாக தான் இருந்தேன். ஆனா அவ என்னடான்னா டாக்டர் நீங்க ஸ்மார்ட்டாக இருக்கீங்க ராத்திரி கண்களை முடினால் உங்க முகம் தான் நினைவுக்கு வருது. நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது… ஐ லவ்யூன்னு சொல்லிட்டா… முது லில் நான் மறுத்துட்டேன். விடாமல் என்னை துரத்தி துரத்தி என் மனசுக்குள்ளும் அவ வந்துட்டா… இதுல ஒரு ப்யூட்டி என்ன தெரியுமா? அவ எம்.எஸ்.சி கெமிஸ்ட்ரி பண்றா. அவ காலேஜில் டெல்லிக்கு டூர் கூட்டுட்டு போறாங்களாம். நாம் டெல்லியில் யாருக்கும் தெரியமாமல் டூயட் பாடலாம்னு சொல்றா அண்ணி!”

அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்தான். அதில் வைத்திருந்த வினோதினியின் போட்டோவை மேஜையின் மீது வைத்தான்.

“இது தான் அவள் போட்டோ எடுத்து பாருங்க அண்ணி!” என்றான்.

எந்தவிதமான சப்தமுமில்லாததால் அவன் திரும்பி பார்த்தான். அவன் வைத்தப் போட்டே அந்த இடத்திலே இருந்தது. சிந்து அங்கே இல்லை.

19

சிந்து அன்று இரவு அனைவருக்கும் சப்பாத்தி செய்தாள். எல்லோரும் சாப்பிட்ட பிறகு அவள் சாப்பிட உட்கார்ந்தாள். சப்பாத்தி அவளுக்கு இறங்க மறுத்தது. ஒரு டம்ளர் பாலாவது குடிக்கலாம் என நினைத்து பாலை சூடு பண்ணி டம்ரில் ஊற்றி குடிக்க முற்பட்டாள். அதுவும் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. அந்த பாலை அப்படியே பிரிட்ஜ்ஜியில் வைத்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்தாள். ஆதர்ஷ் வருவான் என்று நினைத்தாள். அவன் வரவே இல்லை. வெறுமையான மனதோடு கீழே இறங்கி போனாள்.

மறுநாள் சிந்துவின் நெஞ்சம் பாறைபோல கனத்தது. விடேதிருவிழாப் பூண்டது போல் கலகலப்பாக இருந்தது.

மங்களாவும், ரேணுகாவும் டெல்லியிருந்து கார்ட்டன் புடவை சுடிதார் எல்லாம் வாங்கிட்டு வாடா என்று அவனிடம் ஒரு பட்டியலை லிஸ்ட் போட்டுக் கொடுத்தார்கள். ஈஸ்வரும் முகேஷிம் ஆதர்ஷ்க்கு தேவையான பொருட்களை பேக்கினுள் வைத்து பேக் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ப்ளூ ஜீன்ஸ் ப்ளாக் டிஷார்ட்டில் இருந்தான் ஆதர்ஷ். கேசம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. அவன் திறமைக்காக கிடைத்த வேலை என்பதால் அந்த சந்தோஷம் முகத்தில் மின்னி கூடுதல் அழகாக தெரிந்தான்.

“ஒவ்வொரு சனி, ஞாயிறு தோறும் தவறாம வந்துடுடா!” என்றாள் மங்களா.

“ம்…பக்கத்திலேயா இருக்கு முதன் முதலாக ஒரு பெரிய ஹாஸ்பிட்டலில் ஜாயின் பண்ணியிருக்கேள். ஒரு ஆறு மாசம். கழிச்சிதான் இந்த பக்கம் வர்ற முடியும்!”

சிந்துவிற்கு திக்கென்றது. அவள் அறைக்குச் சென்றுவிட்டாள். மங்களா ரேணுகாவிடம் கிசுகிசுத்தாள்.

“எப்ப பாரு ரூமுக்குள்ள போய் புகுந்துகிறா அப்படி என்னதான் செய்வாளோ?”

“சும்மா இருக்கிங்களா… நீங்க எப்பவும் அண்ணியை பத்தி குறை சொல்லிகிட்டே இருக்கிறதாலே தான் ரூமுக்குள்ளேயே இருக்காங்க. பாராட்டுவதற்குத் தான் மனசு இல்லைன்னா அமைதியாகவாவது இருங்க. எந்த நேரமும் கண் கொத்திப் பாம்பு மாதிரி அவங்களையே வேவு பாக்கிறதை விட்டுட்டு அப்பாவையும் உங்க உடம்பையும் கவனியுங்க!”

மங்களா, ஈஸ்வர், ரேணுகா முகேஷ் உட்பட அனைவரும் வாயடைத்துப் போனார்கள்.

“அண்ணி…”

குரலை உயர்த்தி கூப்பிட்டான் ஆதர்ஷ், சிந்து லேசான படபடப்புடன் அறையைவிட்டு வெளியே வந்தாள்.

“அம்மாவும், அப்பாவும் சின்ன விஷயத்தை பெரிதுபடுத்தி பிரச்சனையாக்கி பார்த்தால் எனக்குப் போன் பண்ணுங்க நான் பாத்துகிறேன்…”

ஆதர்ஷ் முகேஷிடம் வந்தான்.

“அண்ணா அண்ணி ரொம்ப நல்லவங்க. இது தான் உன் வீடு, உன் கணவனும் கணவனின் உறவுகளையும் நீ தான் பேணி காக்கனும்னு சொல்லி தான் அங்க அம்மாவும் அப்பாவும் அனுப்பி வெச்சாங்க. நீங்களும் அம்மாவும் சேர்ந்துக் கொண்டு அவங்களை குருடாக்கி, முடமாக்கி அடுக்களை உழைப்பாளியாக்கி ஓடுக்க பாக்காதீங்க. ஒரு மருமகள் தான் குடும்பத்தின் உயிர் சக்தியாக திகழவேண்டும் என்றால் மருமகளின் உணர்வுகளை மதித்துப் போற்றினால் தான் அது சாத்தியம். இந்த வீட்டில் எனக்கு பேசுவதற்கு உரிமை இருக்கிறது. நான் இது மாதிரி பேசனதால் நான் கிளம்பின பிறகு அண்ணிக்ட்டே கோவிச்சுகாதீங்க!”

ஆதர்ஷ் சிதர் தேங்காயை போட்டு உடைத்ததைப் போல் பேசியதால் அவனை வழியனுப்ப ஒருத்தரும் வாசல் வரை வரவில்லை சிந்துவைத் தவிர. கேட்டின் வெளியே ஆட்டோ நின்றுக் கொண்டிருந்தது. தோளில் கேன்வாஸ் பேக்குடன் கையில் ஒரு சூட்கேஸ்டனும் ஆதர்ஷ் கேட்டின் அருகில் வந்தான். திரும்பிப் பார்த்தான்.

கலங்கிய கண்களுடன் சிந்து நின்றுக் கொண்டிருந்தாள்.

“நோ! சிரிக்கனும் அப்போ தான் நான் சந்தோஷமாக கிளம்புவேன்!”

கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

நெற்றியில் விழுந்த அவனது முடியை இடது கையால் விலக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“என்னை மறக்கமாட்டியே ஆதர்ஷ்?”

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.ஆதர்ஷ் அவளைப் பார்த்து புன்னைகைத்தான். பையையும் சூட்கேஸையும் ஆட்டோவில் திணித்தான்.

“பை!” என்று அவளிடம் சொல்லிவிட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். ஆட்டோ கிளம்பியது.

சிந்துவை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக தலையை இறக்கினான். முதுகைக் காட்டிக்கொண்டு சிந்து வீட்டுக்குள் போய் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த சிவப்புநிற கோரா காட்டன் புடவையில் இருந்து வெண்மையாக அவளது கால் வெளிப்பட்டது. அதில் ஆதர்ஷ் அன்பளித்த ‘கொலுசு’ ஜொலித்துக் கொண்டிருந்தது.

என் வாழ்க்கையில் முதலாவதாக திசைமாறிய தென்றலாய் வந்த உன்னை எப்படியடி மறக்க முடியம்!

(முற்றும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *