ஒரு போதும் கூடாது….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 8,327 
 

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்திருவிழா நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அலைகடலென திரண்டு திருவிழாவில் சங்கமம் ஆனார்கள். காந்தனும் தனது மனைவி பிள்ளைகள் ஐவரையும் அழைத்துக்கொண்டு திருவிழாவுக்கு வந்திருந்தான்.

சன நெரிசலில் பிள்ளைகள் தவறிவிடுவார்கள் என அவர்களை காந்தனும் மனைவி ரதியும் கண்ணும் கருத்துமாக அழைத்து சென்றனர். ஆலயத்துக்குள் சென்று அருட்ஷனையினை செய்துவிட்டு பிரசாதத்தினை எடுத்து கொண்டு பிள்ளைகளுக்கு பேழையினையும் வேண்டி கொண்டு ஆலயத்தின் உட்பகுதியை விட்டு வெளியே வந்தனர்.

ஆட்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்த இடத்தில் தாம் கொண்டு வந்த பனையோலைப் பாயினை ஒரு இடத்தில் விரித்துவிட்டு அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டனர்.

ரதி வீட்டில் இருந்து கொண்டு வந்த கச்சான், கடலைகளை பிள்ளைகளுக்கு கொடுத்தாள். அவர்கள் அதனை சாப்பிட்டனர்.

அவர்கள் இருந்த இடத்தில் ‘பலூன் பலூன் ……’ என நடைபாதை வியாபாரிகள் கூவிக் கூவி விற்றுக் கொண்டு திருந்தார்கள். முத்தவன் அடம் பிடிக்க காந்தன் ஐந்து பிள்ளைகளுக்கும் வேண்டிக் கொடுத்தான்.

பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போதே பிள்ளைகள் ஐவரும் நித்திரை கொண்டு விட்டனர்.

மனைவியை பார்த்து ‘பிள்ளைகளை கவனமாக பர்த்துக் கொள் எனக்கு தெரிஞ்சவங்க யாரும் வந்திருக்காங்களா என பார்த்து வாரன்’ என கூறி காந்தன் சென்றான்.

காந்தன் சென்றவுடன் ரதி தனக்கு அருகில் இருந்த பெண்னிடம் ‘அக்கா இப்ப என்ன நேரம்’ என கேட்டாள்.

‘தங்கச்சி இப்ப நேரம் இரவு 12.30’ என கூறினாள்.

‘கடவுளே இப்பதான் நடுச்சாமம் இந்த மனுசன் போன எப்ப வருமோ யாரையும் கண்டு கதைக்க வெளிக்கிட்டா நேரம் போறதே தெரியாது இச்ச வர விடியும்’ என தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

காந்தன் கூலி வேலை செய்து தான் தன் குடும்பத்தினை பாதுகாத்து வருகின்றான். எப்படித்தான் மாடு மாதிரி வேலை செய்தாலும் ஈட்டும் வருமானம் தனது பிள்ளைகளை வளர்க்க அவனால் முடியவில்லை ஒரு நாள் சம்பளத்தினை எடுத்து ஒரு நாளுக்கு தேவையான வீட்டுப் பொருட்களை கூட அவனால் பூரணமாக வேண்ட முடியாத அவல நிலை என்னபாடு பட்டாவது பிள்ளைகளை வளர்த்து விடவேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.

ஆலயத்தினுள் ஒலிபெருக்கியில் திருட்டுக்கள் அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அடியார்களே உங்கள் உடைமைகளை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் எனவும் ஆலயத் திருவிழாவுக்கு வந்த உறவுகளை தேடுகின்ற அழைப்புக்களும் ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டு இருந்தன.

ஆலய வீதியெங்கும் சுற்றித்திரிந்த காந்தன் தனக்கு தெரிந்தவர்கள் யாருமே கண்ணில் தென்படாமையினால் ஆலயத்தின் கோபுர வாயிலுக்கு சென்றான். அங்கு சென்ற காந்தனுக்கு தீடீரென ஒரு திட்டம் தோன்றியது. இந்த சன நெரிசலுக்குள் கழுத்தில் உள்ள நகையினை அறுக்கலாம் என தோன்றியது. ஒரு மனம் இது கூடாது என சொன்னாலும் மறுமனம் உன்ர கஸ்ரம் தீர நல்லதொரு சந்தர்ப்பம் என எண்ணியது.

சன நெரிகலுக்குள் சனத்துடன் சனமாக சென்று நெரிபடுவதும் இவ்வாறு நெரிபடுகின்ற போது எல்லோருடைய கழுத்தையும் நோட்டமிட்ட காந்தனுக்கு சரியான தருணம் இன்னும் கிடைக்கவில்லை இவ்வாறு கோபுர வீதியில் சென்று பின் வீதியால் வெளியே வந்தான்.

இவ்வேளையில் ‘பல திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அடியார்களே உங்கள் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டு இருந்தது.

காந்தனுக்கு சற்று பயமாக இருந்தது தச்சம் தவறி தான் மாட்டுப்பட்டால் எப்படி இருக்கும் ஊர்பக்கம் போகவே ஏலாது. பிள்ளைகளின் வாழ்கை அந்தளவு தான் என உள்ளுக்குள் எண்ணிக் கொண்டான் இருந்தாலும் இதுக்க யார் என்ன பிடிக்க போறாங்கள் என நினைத்துக் கொண்டு மீண்டும் கோபுர வாயிலுக்குள்; உள்ளே சென்றான்.

இம்முறை வயதுபோன கிழவி ஒருத்தி அம்பாளை மெய்மறந்து வணங்கியபடி சென்று கொண்டிருந்தாள். ‘இது தான் தருணம் கைவரிசையினை காட்டுவோம்’ என காந்தன் நினைத்தபோது எங்கிருந்தோ வந்த ஒரு கை அந்த கிழவியின் சங்கிலியை பற்றி இழுத்தது அந்த கிழவி சங்கிலி அறுப்பது தெரியாமல் இருந்தாள்.

திடீர் என சுதாகரித்துக்கொண்ட காந்தன் ‘அம்மா உங்கட சங்கிலிய அறுக்கிறான்’ என கத்தியபடி சங்கிலி அறுத்தவனை கையும் மெய்யுமாய் பிடித்துவிட்டான். உடனே அருகில் இருந்தவர்கள் எல்லோரும் ‘கள்ளன்… கள்ளன்..’ எனக் கத்த பக்கத்தில் நின்ற பொலீஸ்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; சம்;;;;;;;;;;பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காந்தன் அந்த கள்ளனை இறுக பிடிந்த வண்ணம் இருந்தான்.

‘தம்பி உனக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்….. என வாழ்த்திய படி சங்கிலியை பறிகொடுத்த கிழவி காந்தன் அருகில் வந்தாள்.

‘கடைசி யுத்தில செத்துப்போன என்ர மகன்ர ஞர்பகத்துக்கு இந்த சங்கிலி ஒன்று தான் இருக்கு தம்பி என்ர உயிரையே நீ காப்பத்தி தந்திட்டாய் உன்னைப் போல எல்லோரும் இருக்கனும்’ எனக் கூறிக் கொன்டே அந்த கிழவி சென்றாள்.

இதனை கேட்ட காந்தனுக்கு செய்வதறியாது நின்றான். ‘கடவுளே கொடிய பாவச்செயலை செய்ய இருந்த என்னை காப்பாற்றி விட்டாய்’ என மனதுக்குள் எண்ணிக் கொணடான்.

சம்பவ இடத்துக்கு வந்த கோயில் நிர்வாத்தினர் காந்தனிடம் பல தகவல்களை கோட்டு பெற்றுக் கொண்டனர்.

அம்பாளை வணங்கி திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிவிட்டு மனைவி பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு சென்று தனது பிள்ளைகளுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

பிள்ளைகளின் தலையினை வருடிக் கொண்டிருந்தான். ‘உங்க அப்பா நல்ல வளர்ப்பன்’ என சந்தியம் எடுத்துக்கொன்டான்.

இவ் வேளையில் ஆலய ஒலிபெருக்கியில் ‘இன்று இடம்பெற்ற பல திருட்டுகளை செய்த திருடனை காந்தன் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அவருக்கு ஆலய நிர்வாகத்தினர் நன்றிகளை; தெரிவித்துக்கொள்கின்றோம்’.

மனைவியிடம் நடந்தவற்றை கூறினான் காந்தன்.

காந்தனை பார்ந்த ரதி ‘நீங்க பிள்ளைகளுக்கு அத வேண்டிக் கொடுக்கல இத வேண்டிக் கொடுக்கல என்பதை விட காலத்தாலும் அழியாத புகழை இன்று வேண்டிக் கொடுத்துள்ளீர்கள். இதுவே எனக்கு போதும். நினைக்கும் போதே பெருமையா இருக்கு’ என கூறி முடித்தாள்.

‘நல்ல வேளை பழிகாரனாக இருக்க வேண்டிய நான் இன்று கடவுள் புண்ணியத்தால் தப்பீற்ரன் களவு பற்றி நினைக்கவோ அதனை செய்வோம் என எண்ணுவதோ ஒருபோம் கூடாது’ என மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *