அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15
ஒரு நாள் இரவு மணி பத்தரை இருக்கும்.சேகர் வேலையிலே இருந்து குடிசைக்குத் திரும்பி வரவில்லை.செங்கலமும் கமலாவும் மிகவும் கவலைப் பட்டார்கள்.இருவருக்கும் என்ன பண்ணுவது என்றே தெரியாமல் தவித்தார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் “அத்தே,நான் என அம்மா அப்பா குடிசை க்குப் போய் இந்த விஷயத்தை சொல்லி என் அப்பாவைப் போய் அவரு எங்கே போனார்ன்னு கண்டு பிடிக்க சொல்றேன்.போய் வரட்டுமா” என்று கேட்டதும் “சரி கமலா,நான் இங்கே குழந்தைங்களெ பாத்துக் கிட்டு இருக்கேன்.நீ போய் உன் அப்பாவை உடனே வெளியே போய் தேடிப் பாக்க சொல்லு” என்று சொல்லவே கமலா தன் குடிசையை விட்டு வெளியெ ஓடி வந்தாள்.ஓடி வந்த கமலா தன் அம்மா குடிசைக்கு வந்து வாசல் கதவைத் தட்டி”அம்மா, அப்பா. கொஞ்சம் கதவை தொறங்க” என்று உரக்க கத்தினாள்.பயந்து போய் தேவி வாசல் கதவைத் திறந்தாள்.கமலா அழுதுக் கொண்டு “அம்மா, அவரு இன்னும் வூட்டுக்கு வரலேம்மா.எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா.உடனே கொஞ்சம் அப்பா வை வெளீயே போய் அவரை தேடிப் பாக்க சொல்லும்மா”என்று அழுதுக் கொண்டே சொன்னாள் இதைக் கேட்டு தேவியும் ராஜ்ஜும் ரொம்ப கவலைப் பட்டார்கள்.தேவி உடனே “அவ இப்படி அழறா ளேய்யா.உடனே வெளியே போய் உன் சகாக்களையும்,சேகர் சகாக்களையும் கேட்டுப் பாருய்யா” என்று சொல்லி காளியை விரட்டினாள்.“சரி புள்ளே,நான் இப்பொ போய் அவங்களை எல்லாம் கேட்டுப் பாக்கறேன்” என்று சொல்லி விட்டு அவன் செல் போனை எடுத்துக் கிட்டு வெளியே போ னான் ராஜ்.ஒரு மணி நேரம் கழித்து குடிசைக்கு வந்த ராஜ்”தேவி,சேகர் சகாங்க எல்லாம் சேகர் ஒரு வாரமா அவன் வேலை செய்யற ‘ஸைட்டுக்கெ’ வரலேன்னு சொன்னாங்க.எந்த ‘ஸைட்லே’ அவன் வேலை செஞ்சு வறான்னே அவங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க புள்ளே”ன்னு சொல்லி மிகவும் வருத்தப் பட்டான்.தேவியும் ராஜ்ஜும் மெல்ல கமலாவைப் பாத்து “அம்மா கமலா.மணி பன்னன்டு ஆவப்போவுது.நீ இப்போ உன் குடிசைக்கு போ.நான் நாளைக்கு காத்தாலே உங்க அப்பா வை மத்த ‘ஸைட்’ எல்லாத் தேயும் போய் தேடிப் பாக்க சொல்றேன்.சேகர் நிச்சியமா கிடைச்சு விடு வார்.அழாதே.உன் கண்ணைத் தொடை.இப்ப உன் குடிசைக்குப் போய் உங்க குழந்தைங்க கூட இருந்து வா.உங்க மாமியாருக்கும் ரொம்ப வயசு ஆவுது. போய் வாம்மா” என்று சொன்னார்கள்.
காலை எழுந்ததும் தேவி கண்கள் ரெண்டும் கோவைப் பழம் போல சிவந்து இருந்தது.மெல்ல ராஜ்ஜை எழுப்பி “யோவ் சீக்கிரமா எழுந்து,பல் தேச்சு கிட்டு, டீ குடிச்சு விட்டு எல்லா ‘ஸைட்டுக்கும்’ போய் சேகரைத் தேடி பாருய்யா.பாவம் கமலா சின்ன பொண்ணுயா.ரெண்டு பொட்டை பிள்ளங்களே வச்சு கிட்டு இருக்காயா” என்று சொல்லி ராஜ்ஜை உலுக்கி எழுப்பினாள்.ராஜ் தன் கண்களை கசக்கிக் கொண்டே ”எனக்கு தெரியும் புள்ளே.நான் இன்னிக்கு பூராவும் சுத்திப் பாக்கறேன்” என்று சொல்லி விட்டு தன் பல்லை தேய்த்து விட்டு ரத்தினம் கொடுத்த ‘டீயை’ கொடுத்தாள்.பிறகு தன் ‘டீ’ ஷர்ட் டைப் போட்டுக் கொண்டு தன் செருப்பைப் போட்டு கொண்டு குடிசையை விட்டு வெளியே கிளம்பி னான்.சாயங்காலம் மணி ஏழு இருக்கும்.ரொம்ப களைப்பாக குடிசைக்கு வந்தான்.“ஏன்யா அந்த சேகர் பையன் எந்த சைட்லேயாவது உன் கண்ணிலே தென்பட்டானாயா” என்று கலவத்தோடு கேட் டாள் தேவி.”நானும் பத்து ‘சைட்டுக்கு’ப் போய் பாத்தேன் புள்ளே.ஆந்த சேகர் பையன் என் கண்ணிலே தென்படலே.அவன் சகா ரெண்டு பேரையும் விசாரிச்சேன்.அவங்களும் சேகரை ஒரு வாரமா அவங்க கண்லே படலேன்னு சொல்லிட்டாங்க.என் ‘செல் போன்’ நம்பரை அவங்க கிட்டே குடுத்து வுட்டு வந்து இருக்கேன்.அவங்களுக்கு சேகரை பத்தி ஏதாச்சும் தெரிஞ்ச எனக்கு போன் பண்ண சொல்லி இருக்கேன்” என்று சொல்லி தன் செருப்பை காலில் இருந்து கழட்டி தூர ஏறிந்தான்.அந்த சமயம் பாத்து ராஜ் செல் போன் மணி அடித்தது.செல் போனை ‘ஆன்’ பண்ணி பேசினான் ராஜ். அடுத்த பக்கத்திலே இருந்து “மேஸ்திரி,உங்க மருமக சேகரை நான் இன்னைக்கு சாயர¨க்ஷ மயிலாப்புரிலே ஒரு சின்ன பொண்ணோடு பாத்தேன்.நான் போய் சேகரைக் கூப்பிடறதுக்கு முன்னாடி அவன் அந்த பொண்ணை இட்டு கிட்டு ஒரு ஆட்டோவிலெ ஏறி போயிட்டான்” என்று சொன்னான்.தூக்கி வாரிப் போட்டது ராஜ்ஜுக்கு.அவன் உடனே “அடப் படு பாவி பயலே.என் பொண்ணை கட்டி கிட்டு அவளு க்கு ரெண்டு பொட்டை புள்ளைங்களே கொடுத்து விட்டு இப்படி ஒரு ‘சின்ன வூட்டை ‘செட் அப்’ பண்ணிக்கிட்டேயே.உனக்கு ஏண்டா இப்படி புத்தி கெட்டுப் போச்சு.இத்தனை வருஷம் கழிச்சு உனக்கு ஒரு சின்ன வூடு கேக்குதடா. நீ மட்டும் என் கண் முன்னாலே கிடைச்சா……” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது தேவி “நீ அப்படி எல்லாம் ஒன்னும் செஞ்சுடாதேய்யா. என்னை க்கு இருந்தாலும் அவரு கமலா புருஷன்ய்யா” என்று சொல்லி விட்டு கமலா குடிசைக்குப் போய் ராஜ் சகா சொன்ன விவரத்தை சொன்னாள்.கொஞ்ச நேரம் அழுதாள் கமலா.பிறகு தன் மனதை தேற்றிக் கொண்டு “நான் சித்தாள் வேலைக்கு தினமும் போய் வந்து என் ரெண்டு பொட்டை புள்ளைங்களை காப்பாத்தி வருவேம்மா.நீங்க கவலைப் படாம இருந்து வாங்க”என்று சொல்லி விட்டு தன் கண்களை துடைத்துக் கொண்டு விட்டு அம்மாவை தன் குடிசைக்குப் போகச் சொன்னாள் கமலா.
அது வரை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சும்மா இருந்த செங்கமலம் “அடப் பாவி மவனே.இந்த வயசிலே உனக்கு ஒரு ‘சின்ன வூடு’ கேக்குதாடா.உன் புத்தி இப்படி ஏண்டா கெட்டுப் போய் இருக்கு.உனக்கு பெண்ஜாதியும் ரெண்டு பொட்டை பிள்ளைங்க இருப்பதை மறந்துட்டாயாடா” என்று கத்தினாள்.தன் ஒரே பிள்ளை இப்படி பண்ணி விட்டானே என்கிற ஏக்கத் தில் செங்கமலம் படுத்த படுக்கையாய் ஆகி விட்டாள்.படுத்த படுக்கையாய் இருந்து வந்த செங்கமலம் மகனைப் பிரிந்த ஏக்கத்தாலேயே ரெண்டு மாசத்துக்கு எல்லாம் தூக்கத்திலேயே தன் கண்களை மூடிவிட்டாள்.விஷயம் தெரிஞ்சதும் தேவியும்,ராஜ்ஜும்,ரத்தினமும்,கமலாவின் குடிசைக்கு ஓடி வந்தார்கள்.இருவரும் செங்க மலத்தை அடக்கம் பண்ணி விட்டு குடிசைக்கு வந்தார்கள்.
இரண்டு வருஷங்கள் ஓடி விட்டது.செந்தாமரை MSc.Maths பரிக்ஷயிலே சென்னை மா நிலத்திலேயே முதல் மாணவியாக மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருந்தாள். விஷயம் கேள்விப் பட்டதும் பிரின்ஸிபாலும்,எல்லா ’ப்ரபஸர்களும்’,செந்தாமரையை மிகவும் புகழ்ந்து தங்கள் சந்தோஷ த்தைத் தெரிவித்தார்கள்.செந்தாமரை MSc.Maths ‘கோர்ஸிலே’ ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்ததை கேள்விப் பட்ட சுந்தரம் நிறுவன மானேஜிங்க் டைரக்டர் மிஸ்டர் ராமன் பிரின்ஸிபால் ரூமுக்கு வந்து செந்தாமரையை மிகவும் புகழந்துப் பேசி விட்டு செந்தாமரையைப் பார்த்து “செந்தாமரை எங்க நிறுவன ‘ஸ்காலர்ஷிப்பை’ உபயோக படுத்தி வந்து நீ MSc.Maths ‘கோர்ஸிலே’ ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்து எங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்து இருக்கே..நீஎங்க கம்பனியிலே ‘அக்கவுண்ட்ஸ் ‘டிபார் ட்மென்ட்டிலே’ ஒரு ஆபீஸரா சேரத் தயாரா இருக்கியாம்மா.உன்னை எங்க கம்பனியிலே சேர்த்துக் கொள்ள நான ரொம்ப ஆவலா இருக்கோம்” என்று கேட்டார்.செந்தாமரை மிஸ்டர் ராமனைப் பார்த்து “சார்,நீங்க எனக்கு இந்த ரெண்டு ‘ஸ்காலர்ஷிப்களையும்’ குடுக்காம இருந்து இருந்தா நான் ஒரு சாதாரண பன்னாடவது படிச்ச ஒரு பொண்ணாவே இருந்து வந்து இருப்பேன்.அதுக்கு நான் முதல்லே என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன்” என்று சொல்லி தன் கையை கூப்பி சொல்லி விட்டு, “சார்,நீங்க எனக்கு உங்க கம்பனியிலே இந்த பெரிய ‘ஜாப்பை’ ஆபர் பண்ணினதற்கு நான் உங்களு க்கு என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன்.நான் ஒரு ஏழை சேரியில் வாழ்ந்து வந்த பொண்ணு.சின்ன வயசில் இருந்தே எனக்கு மத்த குடிசை வாழ் பிள்ளைகளுக்கு நிறைய கணக்கு சொல்லி கொடுத்து அவங்களை வாழ்க்கையிலே முன்னுக்கு கொண்டு வரணும் என்கிற ஆசை ரொம்ப இருக்கு.சின்ன வயசில் இருந்தே எனக்கு ஒரு கணக்கு வாத்தியாரா ஆகணும் என்று தான் ரொம்ப ஆசைபட்டுக் கொண்டு வந்தேன்.அதனால் நீங்க என்னை மன்னிக்கணும்.என்னை நீங்க தயவு செஞ்சி தப்பா எடுத்தாதீங்க” என்று தன் கைகளைக் கூப்பி சொன்னாள்.“அப்படியா செந்தாமரை,உன் மனசுக்குள் இப்படி ஒரு ‘நோபள்’ ஆசையை இருக்குன்னு தெரியாம நான் கேட்டு விட்டேன்.நீ உன் இஷ்டப் படியே ஒரு கணக்கு வாத்தியார ஒரு பள்ளிக்கூடத்திலே சேர்ந்து உன் வாழக்கையின் குறிக்கோளை நீ செஞ்சு முடிம்மா.உன்னை போல ஒரு ஏழை பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு ‘ஆபீஸர்’ வேலை கிடைச்சா, அதை அவ சந்தோஷமா எடுத்துக் கொண்டு நல்லா சம்பாதிச்சு வர தான் ரொம்ப ஆசை படுவாங்க.ஆனா நீ அப்படி பண்ணாம ஒரு கணக்கு வாத்தியார் வேலையைத் தேடிக் கொண்டு வந்து குடிசை வாழ் பிள்ளைகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்து வந்து,அவங்க வாழக்கைத் தரத்தை உயர்த்த பாடு படப்போறேன்னு சொல்றே.உன் குறி கோளைக் கேக்கவே எனக்கு புல்லா¢க்குது. நீ ஒரு புத்திசாலி பொண்ணுதான்னு நான் இது வரைக்கும் நினைச்சு வந்தேன்.நீ பாரதியார் கண்ட ஒரு பெரிய மனசு கொண்ட புதுமை பொண்ணு.உன்னுடைய இந்த ‘புனித பயணத்துக்கு’ என் பா¢பூரண ஆசீர்வாதங்கள்”என்று சொல்லி செந்தாமரை வாழ்த்தினார் மிஸ்டர் ராமன்.பிறகு கொஞ்ச நேரம் பிரின்சிபாலிடம் பேசி கொண்டு இருந்து விட்டு ராமன் பிரின்ஸிபால் ரூமை விட்டு கிளம்பி போனார்.
ராமன் போனவுடன் பிரின்சிபால் செந்தாமரையை பார்த்து “செந்தாமரை, உனக்கு சுந்தரம் நிறு வனத்திலே ஒரு பெரிய ஆபீசர் வேலையை உனக்குத் தறேன்னு மிஸ்டர் ராமன் உனக்கு சொன்ன போது ‘நீ அந்த வேலை எனக்கு வேணாம்.நான் ஒரு கணக்கு வாத்தியாரா ஆகி மத்த குடிசை வாழ் பிள்ளைகளுக்கு நிறைய கணக்கு சொல்லிக் கொடுத்து அவங்களை வாழ்க்கையிலே முன்னுக்குக் கொண்டு வரணும் என்கிற ஆசை எனக்கு ரொம்ப இருக்கு சார் என்று சொன்னதை கேட்டவுடன் எனக்கு ரொம்ப பெருமையா இருந்ததும்மா.அந்த வேலையை நீ செஞ்சு வந்து உன் ஆசையை நிறைவேத்திக் கொண்டு வாம்மா.நீ உண்மையிலே ரொம்ப ‘கிறேட்’.உனக்கு என் பா¢பூரண ஆசீர்வா தங்கள்”என்று சொல்லி எழுந்து நின்றுக் கொண்டு செந்தாமரை கைகளைப் பிடித்து வாழ்த்து தெரிவி த்தார். பிரின்ஸிபால் ரூமை விட்டு வெளியே வந்த செந்தாமரை நேராக கணபதி ‘புரபஸர்’ ரூமுக்குப் போய் சுந்தரம் நிறுனத்தின் ‘மேனேஜிங்க் டைரக்டர்’ மிஸ்டர் ராமன் சொன்னதையும்,அதற்கு தான் சொன்ன பதிலையும் சொன்னாள்.உடனே கணபதி செந்தாமரையைப் பார்த்து ”நான் ரொம்ப பெருமைப்படறேம்மா.உன் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு ‘நோபள்’ குறிக்கோளை வச்சுக் கிட்டு இருக்கேன்னு கேக்கும் போது நாம் ரொம்ப சந்தோஷப்படறேம்மா.மத்த ஏழை குழந்தைகளுக்கு கணக்கு சொல்லிக் குடுக்க வேணும் என்கிற ஒரு உயர்ந்த நோக்கமும்,வாத்தியார் தொழிலை கேவலமா நினைக்காம,உன் மனசுக்குள்ளே கொழுந்து விட்டு எரியும் அந்த ஆசையை நிறைவேத்தி வர ஆசைப் படுவதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.உன் ஆசை நிறைவேறி வர உனக்கு என் பா¢பூரண ஆசீர்வாதங்கள்” என்று சொல்லி விட்டு செந்தாமரையின் கைகளைப் பிடித்து கொண்டு சொன்னார்..
ஹாஸ்டலுக்கு வந்து செந்தாமரை தன் ‘டிரஸ்சை’ மாத்திக் கொண்டு விட்டு கணபதி வீட்டுக்குப் போனாள்.கணபதியும் சாந்தாவும் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.வீட்டுக்குள்ளே போனதும் செந்தாமரை தன் செருப்பை ஒரு ஓரமாக கழட்டி வைத்து விட்டு சாந்தாவைப் பார்த்து தன் கைகளைக் கூப்பிக் கொண்டு ”அம்மா,உங்க ஆசீர்வாதத்தாலே நான் MSc.Maths ‘கோர்ஸிலே’ சென்னை மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி பாஸ் பண்ணி இருக்கே ம்மா” என்று சொல்லி சாந்தாவின் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒத்துக் கொண்டாள்.கொஞ்ச நேரம் கழித்து சாந்தா கொடுத்த பலகாரத்தையும் ‘காபியையும்’ குடித்து விட்டு ரெண்டு பேரிடமும் சொல்லிக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்துக் கொண்டு இருந்தாள்.
அடுத்த வாரம் வந்ததும் செந்தாமரை ‘B.Ed.கோர்ஸ்’ சேர மதுரை பல்கலைக் கழகத்திலே இருந்த ‘டீச்சர்ஸ் டிரேனிங்க்’ காலேஜ் பிரின்சிபாலைப் போய் பார்த்து ஒரு ‘அப்லிகேஷனை’க் கொடுத்தாள்.செந்தாமரையை பார்த்ததும் அந்த பிரின்சிபால் “செந்தாமரை, நான் உன்னைப் பத்தி ரொம்ப கேள்விபட்டு இருக்கேன்ம்மா.நீ எங்க ‘டீச்சர்ஸ் டிரேனிங்க்’ காலேஜிலே படிக்க ஆசைப் படறேன்னு கேட்டதை நினைச்சு ரொம்ப சந்தோஷப் படறேம்மா.நீ MSc.Maths ‘கோர்ஸிலே’ சென்னை மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கிற பொண்ணு என்று தெரிஞ்சவுடன் நான் உனக்கு இந்த காலேஜிலே ஒரு ‘சீட்’ கொடுத்து ‘பீ£ஸ்’ இல்லாமல் படிக்க அனுமதி தறேம்மா.நீ இந்த காலேஜுலே படிச்சு வந்து எங்க காலேஜுக்கும் பெருமைத் தேடி குடு” என்று சொன்னார்.செந்தாமரை தன் கைகளைக் கூப்பி அந்த பிரின்சிபாலைப் பார்த்து “ரொம்ப ‘தாங்க்ஸ்’ சார்” என்று தன் நன்றியைத் தெரிவித்து விட்டு ஹாஸ் டல் ரூமுக்கு வந்து சேர்ந்தாள்.
செந்தாமரை B.Ed.’கோர்ஸ்’ சேர்ந்து மிகவும் சந்தோஷத்துடன் படித்து வந்தாள்.ரெண்டு வருஷம் முடிந்ததும் செந்தாமரை ‘B.Ed.கோர்ஸை’ படித்து ‘பஸ்ட் க்லாஸில்’ ‘பாஸ்’ பண்ணி முடித் தாள்.
தன் டிரஸ்ஸை மாத்திக் கொண்டு செந்தாமரை கணபதி சார் வீட்டுக்கு வந்தாள்.செந்தாமரை யைப் பார்த்த்தும் கணபதி ”வா செந்தாமரை,நீ உன்னுடைய ‘B.Ed. கோர்ஸை’ ‘பாஸ்’ பண்ணி விட்டா யா.நானே உன்னை ‘டீச்சர்ஸ் டிரேனிங்க்’ காலேஜிலே வந்து பார்க்கணும்ன்னு இருந்தேன்.ஆனா எனக்கு ‘டயமே’ கிடைக்கலே செந்தாமரை.என் காலேஜிலே எனக்கு இப்போ நிறைய வேலை கொடு த்து இருக்காங்க.அதை முடிக்கவே எனக்கு நேரம் போதாம இருந்தது” என்று வருத்ததுடன் சொன் னார்.உடனே செந்தாமரை “அதனால் என்ன அப்பா.நீங்க எப்பவும் என் மனசிலே இருந்து வறீங்க. நீங்க என்னை வந்து பார்க்கவே வேணாம்.நான் தான் உங்களை இந்த வீட்டுக்கு வந்துப் பார்த்து என் நன்றியை உங்களுக்கும் அம்மாவுக்கும் தெரிவிக்கணும்.நான் என்னுடைய ‘B.Ed. கோர்ஸை’ ‘பஸ்ட்’ ‘க்ளாசிலே’ ‘பாஸ்’ பண்ணி விட்டேன்ப்பா.இதை உங்க கிட்டேயும், அம்மா கிட்டேயும் சொல்லி விட்டு போகத் தான் நான் இப்போ வீட்டுக்கு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது கண பதியின் ‘செல்’ போன் மணி அடித்தது.செல் போனை ஆன் பண்ணி கணபதி பேச ஆரம்பித்தார். அந்தப் பக்கம் இருந்து ராஜா தான் பேசினார்.“மச்சான்,நான் தான் ராஜா பேசறேன்.உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சந்தோஷ சமாசாரம்.வர வாரம் வெள்ளிக் கிழமை நானும் உங்க அக்காவும் சுமதிக்கு நிச்சியதாத்தம் வச்சு இருக்கோம்.பையன் BE படிச்சு விட்டு இங்கே ஒரு IT கம்பனியிலே ‘சாப்ட்வேர்’ இஞ்சினியரா வேலை செஞ்சி வரார்.நீயும் சாந்தாவும் வர திங்கக் கிழமை அன்னைக்கே ஒரு வார லீவிலே சென்னைக்கு வந்து விடுங்க.நீங்க வந்த பிறகு தான் சுமதிக்கு,மாப்பிளை பையனுக்கு,நம்ம எல்லோருக்கும் ‘டிரஸ்’ எடுக்கணும்.வீட்டிலே நிறைய வேலைங்க இருக்கு கணபதி.நீங்க ரெண்டு பேரும் அவசியம் சென்னைக்கு வந்து எல்லாத்தையும் சுபமா முடிச்சுக் குடுக்கணும்” என்று ராஜா பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் கையில் இருந்து செல் போனை வாங்கி கொண்டு ராதா ”கணா,நீயும் சாந்தாவும் அவசியம் ஒரு வாரம் லீவு போட்டு விட்டு சென்னைக்கு வந்து சுமதி நிச்சிய தார்த்தை சுபமா முடிச்சு குடுக்கணும் தெறிதா.எனக்கு கூடப் பிறந்தவன்ன்னு நீ ஒருத்தன் தான்ப்பா இருக்கே.நிச்சியமா நீங்க ரெண்டு பேரும் சென்னைக்கு வரணும்” என்று சொல்லி கணபதியையும் சாந்தாவையும் அவசியம் வரச் சொன்னாள் ராதா.சந்தோஷப் பட்டுக் கொண்டே கணபதி ”நீ கவலை யே படாதேக்கா.நானும்,சாந்தாவும்.ஒரு வாரம் சென்னைக்கு வந்து நம்ப சுமதி நிச்சியதார்த்தை ஜமாய்ச்சு விடறோம்.நீங்க கவலைப் படாம இருந்து வாங்க” என்று சொல்லி ‘செல்’ போனை ‘ஆப்’ பண்ணினார்.
உடனே கணபதி சாந்தாவிடம் ராஜாவும் ராதாவும் ‘செல்’ போனில் சொன்ன சந்தோஷ சமாராத்தை சொன்னார்.அதற்கு சாந்தா ”நாம அவசியம் சுமதி நிச்ச்சியதார்த்தத்துக்குப் போவணுங்க. நாம போய் வரலாங்க”என்று சந்தோஷப் பட்டு சொன்னாள்.கணபதி செந்தாமரையைப் பார்த்து “செந்தாமரை,நானும் அம்மாவும் சுமதி நிச்சியதார்த்ததுக்கு சனிக் கிழமை இரவு கிளம்பி போகப் போறோம்.நீ தான் இப்போ உன் படிப்பு எல்லாத்தையும் நல்ல விதமா முடிச்சி விட்டு ஒரு வாத்தியார் வேலைக்கு ரெடியாக இருக்கியே.நான் உன்னை மதுரைக்கு அழைச்சுக் கிட்டு வந்த வேலையை நீ வெற்றிகரமா முடிச்சிட்டேன்.நான் உன்னை மறுபடியும் சென்னைக்கு கொண்டு போய் விட்டு விட றேன்.நீ உன் ‘ப்ரெண்ட்’ சுமதியின் நிச்சியதார்த்ததை ‘அட்டெண்ட்’ பண்ணி விட்டு அப்புறமா சென்னையிலே ஒரு நல்ல பள்ளிக் கூடத்திலே ஒரு கணக்கு வாத்தியார் வேலைக்கு சேர்ந்து உன் வாழ் நாள் குறிக்கோளை சந்தோஷமா செஞ்சு வா.நீ உன் ‘ஹாஸ்டலை’ காலி பண்ணி விட்டு எல்லார்கிட்டேயும் சொல்லி விட்டு, சனிக் கிழமை இரவு உன் சாப்பாட்டை முடிச்சி கிட்டு எங்க வீட்டுக்கு ஒரு ஏழு மணிக்கு வந்து விடு.நான் என் காரில் உன்னை அழைச்சுக் கிட்டு வந்தா மாதிரி சென் னையிலே கொண்டு போய் விட்டு விடறேன்” என்று சொன்னார்.
உடனே செந்தாமரை ”ரொம்ப தாங்க் ஸ்ப்பா’.நீங்க சொன்னா மாதிரி நான் இரவு சாப்பாட்டை முடிச்சிகிட்டு, சனிக்கிழமை சாயங்காலம் ஒரு ஏழு மணிக்கெல்லாம் இங்கே வந்து விடுகிறேன்ப்பா” என்று சொல்லி விட்டு கணபதி வீட்டை விட்டு கிளம்பி ‘ஹாஸ்டலுக்கு’ வந்து சேர்ந்தாள். சனிக் கிழமை தன் இரவு சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, ‘ஹாஸ்டலை’ காலி பண்ணி விட்டு, தன் படிப்பு ‘சர்டிபிகேட்டுகள்’ புஸ்தகங்கள், துணிமணிகள்,பிள்ளையார் படம் எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு, ரூமை காலி பண்ணிக் கொண்டு ஹாஸ்டல் வார்டனிடம் ரூம் சாவியைக் கொடுத்து விட்டு கணபதியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் செந்தாமரை.
கணபதியும்,சாந்தாவும்,ஆனந்தனும்,செந்தாமரையும்,சாப்பிட்டு விட்டு ரெடி ஆகி, வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்து அவர்கள் காரில் ஏறி சென்னைக்குப் புறப்பட்டார்கள்.எல்லோரும் ஞாயித்துக் கிழமை காலையில் ராஜா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். கணபதியும், சாந்தாவும், ஆனந்த னும்,செந்தாமரையும் காரை விட்டு கிழே இறங்கினார்கள்.வாசலிலிலேயே தயாராக காத்து இருந்த ராஜா, ராதா,சுமதி மூனு பேரும் ரொம்ப சந்தோஷப் பட்டு “வாங்க, வாங்க எல்லோரும் வாங்க” என்று சொல்லி வரவேற்று எல்லோரையும் வீட்டுக்குள்ளே அழைத்துப் போனார்கள்.ராஜா செந்தாமரையைப் பார்த்து “செந்தாமரை,நீ பன்னட்டாவதிலே, ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்து, அப்புறமா B.Sc கணக்கு பரிஷையிலும்,MSc கணக்கு பரிக்ஷயிலும் ஸ்டேட் ‘பஸ்ட்டா’ ‘பாஸ்’ பண்ணி விட்டு இப்போ B.Ed.’ கோர்ஸையும்’ ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்னு எனக்கு கணபதி போன்லே சொன்னார். உன் கணக்கு புத்திசாலித்தனதை மெச்சி,அவர் உன்னை மதுரைக்கு அழைச்சு போய்,படிக்க வக்க ஆசைப் பட்டது க்கு நீ அவரை ஏமாத்தாம எல்லா பரிக்ஷயிலும் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ வந்து இருக்கேம்மா.உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா” என்று சொன்னதும் செந்தாமரை ராஜா ராதா ரெண்டு பேருடைய கால்களையும் தொட்டு தன் கண்களில் ஒத்தி கொண்டு “உங்க ரெண்டு பேரு டைய ஆசீர்வாதத்தாலே தான் என்னால் எல்லா பரிக்ஷயிலும் நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ண முடிஞ்சிச்சு. நான் மட்டும் சுமதியை சந்திக்காம இருந்தா நான் வெறுமனே எட்டாம் ‘க்ளாஸ்’ மட்டும் தான் ‘பாஸ்’ பண்ணி வந்து இருப்பேன்.சுமதி என்னைப் பாத்து தனக்கு கணக்கு ‘டியூஷன்’ சொல்லி கொடுக்க என்னை இந்த பங்களாவுக்கு கூப்பிட்டதாலே தான் என்னால் அப்பாவையும், அம்மாவை யும்,சந்திக்க முடிஞ்சிச்சு.அவங்களும் என்னை மதுரைக்கு அழைச்சுப் போய், என்னை நல்லா கவனி ச்சு வந்து, நல்லா படிக்க வச்சாங்க” என்று தன் கண்களில் கண்ணீர் மல்க சொன்னாள்.ராதா உடனே “இல்லை செந்தாமரை,என் தம்பியும் அவன் சம்சாரமும் உன்னை அழைச்சுக்கிட்டுப் போப் படிக்க வச் சாலும்,நீ ரொம்ப புத்திசாலியா இருந்ததால் தானே நீ எல்லா பரிக்ஷயிலும் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ ‘பாஸ்’ பண்ணி வந்து இருக்கே.நீ உண்மையிலே ரொம்ப புத்திசாலி தான்.நீ ஒரு ‘அறிவு ஜீவி’ என்பதில் எனக்குத் துளிகூட சந்தேகமே இல்லே செந்தாமரை” என்று சொல்லி செந்தாமரையின் முதுகிலே தட்டிக் கொடுத்தாள்.சுமதியிடம் அவ ‘பெட் ரூமில்’ பேசிக் கொண்டு இருந்தாலே ஒழிய செந்தா மரைக்கு சென்னைக்கு வந்து இறங்கியதில் இருந்து ஒவ்வொரு நிமிஷமும் தன் பழைய குடிசை வீடு, தன்னுடைய அப்பா,அம்மா,அக்கா,ஆயா,இவர்களை பார்க்கவேண்டும் என்று மிகவும் துடித்து கொண் டு இருந்தாள்.‘நாம சென்னையை விட்டு மதுரைக்குப் போய் கிட்டத் தட்ட ஒன்பது வரு ஷத்துக்கு மேலே ஆவப் போவுது.இந்த ஒன்பது வருஷத்திலே நம்ம அம்மா,அப்பா,ஆயா, கமலா, அவ புரு ஷன்,குழந்தை ராணீ இவங்க எல்லாம் எப்படி இருந்து வறாங்களோ.சொல்லிக்காம வீட்டை விட்டு ஓடிப் போன நம்மைப் பாத்தா அவங்களுக்கு கோவம் வராம இருக்கணுமே. அப்படியே அவங்களுக்கு கோவம் வந்து நம்மைத் திட்டினா அதை நாம பெரிசா எடுத்துக்காம மெல்ல சொல்லி அவங்களுக்கு சமாதானம் சொல்லி,அவங்க கோவத்தை தணிச்சு,அவங்க கூட வாழ்ந்து வரணும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் செந்தாமரை. ‘நாம இப்ப அவசரபடக் கூடாது,முதலில் நுங்கம்பாக்கம் பள்ளிக் கூடத்துக்குப் போய் மூர்த்தி வாத்தியாரையும்,பழைய கணக்கு வாத்தியார் சுந்தரம் பிள்ளை யைப் பார்த்து, தான் மதுரைக்குப் போய் பன்னாடவது, B.Sc, M.Sc பரிக்ஷகளை எல்லாம் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ ‘பாஸ்’ பண்ணி இருக்கும் சந்தோஷ சமாசாரத்தையும்,B.Ed. கோர்ஸ்ஸ¤ம் ‘பாஸ்’ பண்ணி விட்டு வந்து இருப்பதையும் சொல்லி விட்டு,அவர்களிடம் தனக்கு எப்படியாவது ஒரு பள்ளிக் கூடத் திலேயே ஒரு கணக்கு வாத்தியார் வேலை வாங்கிக் குடுக்க முடியுமா’ ன்னு அவங்களை பார்த்து கேக்க வேண்டும் என்று நினைத்தாள்.
காலையில் எழுந்ததும் செந்தாமரை குளித்து விட்டு நாஷாடா சாப்பிட்டதும் ராஜாவைப் பார்த்து “அங்கிள்,நான் படித்த பழைய பள்ளிக்கூடத்து வாத்தியார் ஒருத்தரைப் பார்த்து என் படிப்பை பத்தி சொல்லி விட்டு,அவர் கிட்டே அந்த பள்ளி கூடத்திலே எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் வேலை கிடைக்குமான்னு கேக்க போறேன்.நான் போய் வரட்டுமா.என்னை நீங்க ரெண்டு பேரும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று பவ்யமாகக் கேட்டாள்.உடனே ராஜாவும் ராதாவும் செந்தாமரையைப் பார்த்து “செந்தாமரை,உனக்கு எங்க ரெண்டு பேருடைய பூரண ஆசீர்வாதங்கள” என்று சொல்லி செந்தாமரை யின் முதிகில் செல்லமாகத் தட்டினார்கள்.உடனே கணபதி ”ஆமாம் மாமா, செந்தாமரை இந்த ஆசை யை என் கிட்டே மதுரையிலேயே சொன்னா.அவ அப்படியே செஞ்சு வரட்டும்” என்று சொன்னதும் ராஜா “ஓ,அப்படியா,ரொம்ப சந்தோஷமா இருகும்மா.நீ நிச்சியமா ஒரு கணக்கு வாத்தியார் வேலை யை தேடி வந்து உன் இஷ்டம் போல செஞ்சு வாம்மா ” என்று சொன்னார்.உடனே சுமதி “செந்தாம ரை,உன் வேலையை எல்லாம் முடிச்சிக் கிட்டு சீக்கிரமா பங்களாவுக்கு வந்து விடு. நான் ராத்திரி சாப்பாடு உன்னோடு தான் சாப்பிட காத்துக் கிட்டு இருப்பேன்” என்று சொன்னதும் செந்தாமரை “நிச்சியமா சுமதி,நான் என் வேலைங்களே எல்லாம் முடிச்சு கிட்டு ராத்திரி இங்கெ வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு தான் கல்லூரியிலே படித்த ‘டிகிரீ’ ‘சர்டிபிகேட்டுகளை’ எல்லாம் ஒரு பையில் போட்டுக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பங்களாவை விட்டுப் புறப்பட்டாள். செந்தா மரை முதலில் தான் எட்டாவது படித்த பள்ளிக் கூடத்திற்கு போய் சுந்தரம் பிள்ளையைப் பார்க்கப் போனாள்.அப்போது எதிரே வந்த ஒருவரைப் பார்த்து “சார், சுமார் ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி நான் இந்தப் பள்ளி கூத்திலே படிச் சேங்க.அப்போ எனக்கு சுந்தரம் பிள்ளை என்கிற ஒரு வாத்தியார் கணக்கு சொல்லிக் குடுத்தார்.நான் அவரை இப்போ பாக்கணுங்க.அவர் எந்த இடத்திலே இருப்பாருங்க” என்று கேட்டாள்.“அப்படியாம்மா.சொல்லவே ரொம்ப வருத்தமா இருக்கும்மா.நாலு வருஷத்துக்கு முன்னாடி அவர் மோட்டார் பைக்கிலே பள்ளி கூடம் வரும் போது பின்னாலே இருந்து வந்த ஒரு தண்ணி லாரி அவர் மேலே மோதி,அவரை ‘ஸ்பாட்டிலே’ சாகடிச்சுட்டான்ம்மா.நாங்க எல்லோரும் போய் அவர் ‘பாடியை வாங்கி வந்து,அவருக்கு எங்க இறுதி மா¢யாதையை செலுத்தி விட்டு எல்லா ஈமக் கிரியை களையும் செஞ்சு முடிச்சோம்மா.அவ ங்க சம்சாரம் அவங்க இருந்த வீட்டை காலி பண்ணி விட்டு அவங்க சொந்த ஊரான திருச்சிக்கே போய் அவங்க அப்பா அம்மா கூட இருந்து வர கிளம்பிப் போய் விட்டாங்க” என்று வருத்தத்தோடு சொல்லி தன் கண்களைத் துடைத்து கொண்டார். “அப்படியாங்க, எனக்குக் கேக்கவே ரொம்ப வருத்தமா இருக்குங்க.நான் போய் வறேன்ங்க” என்று சொல்லி அவர் கிட்டே இருந்து விடைப் பெற்றுக் கொண்டு தான் படித்த நுங்கம்பாகம் உயர் நிலைப் பள்ளிக்குக் கிளம்பினாள்.பள்ளிகூடத்துக்கு உள்ளே போன செந்தாமரை ஒவ்வொறு இடமாக வரிசையாக பார்த்து கொண்டு வந்தாள்.செந்தாமரைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘ஹெட்மாஸ்டர் ரூம்’ என்று போட்டு இருந்த ரூம் வாசலில் இருந்த போர்டை படித்தாள் செந்தாமரை.
O.S. MOORTHY. M.Sc.
PRINCIPAL.
என்ற போர்ட் தொங்கிக் கொண்டு இருந்தது.அவள் அசந்துப் போனாள்.அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.‘தனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த மூர்த்தி சார் தான் இப்போது இந்தப் பள்ளிக் கூத்திலே ‘பிரின்ஸிபாலாக’இருந்து வறார்’ என்று ஒரு நிமிஷம் அசந்து போனாள்.
தன்னை மெல்ல சுதாரித்துக் கொண்டு ‘மூர்த்தி சார் நம்மைப் பார்த்தா தெரிஞ்சுக் கொள்ளு வாறா.நம்மைப் பத்தி விசாரிப்பாரா.நான் படிச்சு இருக்கும் படிப்பை கேட்டு விட்டு சந்தோஷப்படுவா ரா.அவர் நமக்கு இந்தப் பள்ளி கூடத்திலே ஒரு கணக்கு வாத்தியார் கொடுப்பாரா.அவர் அந்த மாதிரி நமக்கு இந்தப் பள்ளிக் கூடத்திலே ஒரு கணக்கு வாத்தியார் வாங்கி கொடுத்தா நான் படிச்ச இந்தப் பள்ளிக் கூடத்திலேயே கணக்கு வாத்தியார் வேலை செஞ்சி வரலாமே. நமக்கு எவ்வளவு சந்தோஷ மாய் இருக்கும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.மெல்ல ¨தா¢யத்தை வர வழைத்துக் கொ ண்டு செந்தாமரை ‘பிரின்ஸிபால்’ ரூமின் வாசலுக்குப் போ னாள்.வாசலில் இருந்த பியூனிடம் “பிரின்ஸிபால்’ சார் வந்து விட்டாரா,நான் அவரை கொஞ்சம் பார்க்க முடியுமா” என்று கேட்டாள் செந்தாமரை. அதற்கு அந்த பியூன் “நீங்க யாருங்க” என்று கேட் டான்.“நான் சாரோட ஒரு பழைய ‘ஸ்டூடெண்ட்’.என் பேர் செந்தாமரை ”என்று சொன்னாள் ”இருங்க நான் உள்ளே போய் அவர் கிட்டே சொல்றேன்” என்று சொல்லி விட்டு ‘ ‘பிரின்ஸிபால்’ ரூமுக்கு உள்ளே போனான் அந்த பியூன். ‘பிரின்சிபால்’ ரூமுகுள் போன அந்த பியூன் ‘பிரின்சிபாலை’ப் பாத்து “சார்,உங்க பழைய ‘ஸ்டூடண்ட்’ செந்தாமரை வெளியே காத்து கிட்டு இருக்காங்க.உங்களை பாக்க ஆசைபடறாங்க.அவங்களை நான் உங்க ரூமுக்கு அனுப்பட்டுமா” என்று கேட்டு விட்டு அவர் முன்னால் நின்றுக் கொண்டு இருந் தான்.தான் பார்த்து கொண்டு இருந்த ‘பைலில்’ இருந்து வெளியே வந்த ‘பிரின்சி பால்’ தன் மூக்கு கண்னாடியை கழட்டி விட்டு “அந்த ஸ்டூடண்ட் பேரு என்னன்னு சொன்னேப்பா” என்று கேட்டார். உடனே அந்த பியூன் “அவங்க பேர் செந்தாமரைன்னு சொன்னாங்க சார்” என்று சொல்லி விட்டு அவர் முன்னால் பவ்யாமாக நின்றுக் கொண்டு இருந்தான்.சற்று நேரம் யோஜனைப் பண்ணின, ’பிரின்சிபால்’ “எனக்கு அவங்க யார்ன்னு சரியா ஞாபகம் இல்லே.சரி உள்ளே அனுப்பு” என்று சொன் னதும் பியூன் ‘பிரின்சிபால்’ ரூமை விட்டு வெளியே வந்த பியூன் செந்தாமரையை பார்த்து “சார் உங்களெ உள்ளெ வரச் சொன்னாருங்க” என்று சொன்னான்.பயந்துக் கொண்டே செந்தாமரை ‘பிரின் சிபால்’ ரூமுக்குள் ‘பிரின்ஸிபாலை’ பார்த்தாள்.அவர் தலை எல்லாம் நரைத்து சற்று மெலிந்து இருந் தார்.ஏதோ ஒரு ‘பைலை’ப் பார்த்துக் கொண்டு இருந்த ‘பிரின்சிபால்’ ‘பைலை’லில் தன் பார்வை யை எடுத்து விட்டு,தன் கண்ணாடியை கழட்டி விட்டு ‘டேபிளின்’ மேல் வைத்து விட்டு செந்தாமரை யை நிமிர்ந்துப் பார்த்து “நீ யாரம்மா” என்று கேட்டார்.உடனே செந்தாமரை “வணக்கம் சார்.சார் நான் செந்தாமரை.உங்க தயவாலே இந்த பள்ளீக் கூடத்திலே பத்தாவது வரை படிச்ச பழைய ‘ஸ்டூடெண்ட்’” என்று சொல்லி நிறுத்தினாள்.அவர் சற்று நேரம் யோசித்து விட்டு உடனே “அடேடே, நீ ‘கணக்கு புலி’ செந்தாமரையா.உன்னை எனக்கு அடையாளமே தெரியலை.நீ இப்போ நல்லா வளர்ந்துகே அதனால் தான் எனக்கு உனனை அடையாளம் தெரியலே செந்தாமரை. தப்பா எடுத்துக்காதே” என்று ஆச்சரியத்தோடு சொன்னார் ‘பிரின்சிபால்’.செந்தாமரை அவர் ஞாபக சக்தியை வெகுவாக வியந்துக் கொண்டே“ஆமாம் சார்,நான் அந்த செந்தாமரை தான்” என்று சொல்லி விட்டு அவர் கால்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டாள் “ஆமாம் செந்தாமரை, நீ நான் பன்னாடாவது படிக்கப் போற தில்லே.ஏதாவது ஒரு வேலையைத் தேடி கிட்டு வரபோறேன்னு சொல்லிட்டுப் போனியே.அப்புறமா நீ அந்த மாதிரி எந்த வேலைக்குப் போவலே போல இருக்கு.கொஞ்ச நாள் ஆனதும்,ஒரு ‘போலீஸ் ஏட்’ நமப ஸ்கூலுக்கு வந்து நீ வீட்டை விட்டு ஓடி போயிட்டேன்னு தானே ஒரு ‘கம்ப்லெயின்ட்’ எழுதிக் கொடுத்தரே” என்று வியப்புடன் கேட்டார் ‘பிரின்ஸிபால்’.செந்தாமரை தன் கண்களில் கண்ணீர் தளும்ப அவரை பார்த்து “சார், நீங்க முதல்லே என்னை மன்னிக்கனும்.என் வாழ்க்கையிலே நடந்த தை எல்லாம் விவரமா உங்க கிட்டே சொல்றேன்” என்று சொல்லி விட்டு தன கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“சார், எங்க வீட்லே என்னை பன்னாடவது எல்லாம் படிக்கக் கூடாது.ஒரு வேலைக்குப் போய் வம்பாதிச்சு வான்னு தாங்க சொன்னாங்க.அதைத் தான் நான் உங்க கிட்டே சொல்லிட்டு போனேன். நான் இங்கே பத்தாவது படிச்சுக்கிட்டு இருக்கும் போது என்னோடு படித்து வந்த சுமதி என்கிற பொ ணுக்கு இலவசமா கணக்கு சொல்லி கொடுத்து வந்தேன்.அவ என்னை கூப்பிட்டாளேன்னு என்று நான் அவ பங்களாவுக்குப் போனேன்.அவ பங்களாவிலே அவங்க மாமா கணபதி என்கிற ஒரு மதுரை பல்கலைக் கழக கணக்கு ‘புரபசராக இருந்து வந்தார்.அவர் என் கணக்கு அறிவை சோதித்துப் பார் த்தார்.அவர் கேட்ட எல்லா மனக் கணக்குகளையும் சரியாக சொல்லவே அவர் ரொம்ப சந்தோஷப் பட்டு என்னைப் பார்த்து ‘செந்தாமரை, நீ என்னோடு உங்க வீட்லெ சொல்லி விட்டு மதுரைக்கு வறயா.நான் எங்க கல்லூரியிலே உன்னை படிக்க வச்சு ஒரு கணக்கு பட்டதாரியாக ஆசைப்படறேன்’ ன்னு சொன்னார்.எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது சார்.அதனால் நான் யார் கிட்டேயும் சொல்லிக் காம என் வீட்டை விட்டு அவர் கூட மதுரைக்கு போய் விட்டேன்.அவர் என்னை மதுரைக்கு அழைச் சுக் கிட்டு அவங்க காலூரியிலே என்னை பதினோராவது சேர்த்தார்.நான் ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சு வந்து,பன்னாடாவதில் சென்னை மாநிலத்திலேயே முதல் மானவியா ‘பாஸ்’ பண்ணினேன்.இதைக் கேள்வி பட்ட சுந்தரம் நிறுவனம் எனக்கு இருபத்தி அஞ்சு ரூபாய் ‘ஸ்காலர்ஷிப்’ கொடுததாங்க. நான் அந்த ‘ஸ்காலர்ஷிப்’ பணத்தாலே B.Sc.கணக்கு ‘கோர்ர்ஸ்’ படிச்சு,அதிலேயும் நான் சென்னை மாநில த்திலேயே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணினேன்.அப்பு றமா அந்த கம்பனியே எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ‘ஸ்காலர்ஷிப்’ குடுத்து M.Sc.கணக்கு படிக்கச் சொன்னாங்க.நான் M.Sc. கணக்கு படிப்பு படிச்சு அதிலேயும் சென்னை மாநிலலத்தில் முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணினேன்.உடனே அந்த கம்பனி ‘மானேஜிங்க் டைரக்டர்’ என்னைப் பார்த்து அவங்க கம்பனியிலே என்னை ஒரு ‘ஆபீஸரா’ வேலைக்குச் சேரச் சொன்னார்.ஆனா நான் உடனே அவர் கிட்டே ‘சார்,நீங்க எனக்கு இந்த ரெண்டு ‘ஸ்காலர்ஷிப்களையும்’ கொடுக்காம இருந்து இருந்தா நான் ஒரு சாதாரண பன்னாடவது படிச்ச ஒரு பொண்ணாவே இருந்து வந்து இருப்பேன்.அதுக்கு நான் முதல்லே என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்’ என்று என் கையைக் கூப்பி சொல்லி விட்டு அப்புறமா ‘சார்,நீங்க எனக்கு உங்க கம்பனியிலே இந்த பெரிய ‘ஜாப்பை’ ‘ஆபர்’ பண்ணினதற்கு நான் உங்களுக்கு என் நன்றியை தெரிவிச்சுக்கறேன். சின்ன வயசில் இருந்தே எனக்கு ஒரு கணக்கு வாத்தியாரா ஆகணும்ன்னு ஆசை.அதனால் நீங்க என்னை மன்னிக்கணும்.என்னை நீங்க தயவு செஞ்சி தப்பா எடுத்தாதீங்க” என்று தன் கைகளைக் கூப்பி சொன்னேன்.இதை கேட்டதும் அவர் “நீ அப்படியே செஞ்சு வாம்மா செந்தாமரை” ன்னு சொல்லி என்னை வாழ்த்தினார்.
– தொடரும்