கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 6,061 
 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 |

எல்லாத்துக்கும் மேலாக உங்க அப்பா தான் ‘ரிடையர்’ ஆன பணத்தை யாரோ ஆளும் ஒரு கட்சிக் காரன் கிட்ட குடுத்து விட்டு இப்படி அந்த பணத்தை திரும்பி வாங்க முடியாம கஷ்டப் படுவதையும் நினைச்சா இன்னும் ரொம்ப கஷ்டமா இருக்கு கமலா.என்ன பண்ணுவது.நம்ப மாதிரி நடுத்தர குடும்பங்களில் இந்த மாதிரி கஷ்டங்கள் வருவதனால் தான் நாம நடுத்தர குடும்பமாகவே இருந்து வருகிறோம்.நல்ல உயர்ந்து மேலே வந்து பணக்காரர்களாக ஆக முடிவதில்லை கமலா” என்று வேதாந்த மாக சொன்னான் நடராஜன்.இருவரும் ஒருவர் குடும்ப கஷ்டத்தை இவ்வாளவு அனுதாபம் காட்டி வந்ததை எண்ணி எண்ணி வியந்தார்கள்.இதுவே அவர்கள் இருவரும் இன்னும் நெருங்கி பழகி வர அவர்கள் மனம் இடம் கொடுத்தது. இந்த நேரம் பார்த்து ஒரு சுண்டல் கார பையன் அங்கு வரவே கமலா அவனிடம் இரண்டு பேருக்கும் சுண்டல் பாக்கெட் வாங்கினாள்.அதை அவசர அவசரமாகப் பிரித்து கொஞ்சம் சுண்டலை வாயில் போட்டுக் கொண்டாள்.”உனக்கு சுண்டல்ன்னு ரொம்ப பிடிக்கு மா கமலா.இவ்வளவு இஷ்டமா நீ சுண்டலை சாப்பிடறே” என்று கேட்டான் நடராஜன். “ஆமாங்க. எனக்கு சுண்டல்ன்னா ரொம்ப பிடிக்கும் “ என்றாள் பட்டென்று.

“உன் முதல் ‘பிடித்ததை’ நீ சொல்லிட்டே கமலா.இன்னும் என்ன என்ன பிடிக்கும்ன்னு சொல்லு.அப்போ தான் அதை எல்லாம் என்னால் பண்ண முடியும் கமலா.இப்போ நான் எனக்குப் பிடிச்சதை எல்லாம் உனக்கு சொல்லணும் இல்லையா” என்று சொல்லி சிரித்தான்.கமலாவும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே “ஆமாங்க,நீங்களும் உங்களுக்குப் பிடிச்சதைச் சொன்னாத் தான் நான் உங்களுக்கு பிடிச்சதை எல்லாம் பண்ண முடியும்” என்றாள்.“சொல்றேன் கமலா, நிச்சியம் சொல்றேன்” என்றான் நடராஜன் பதிலுக்கு.சுண்டலை சுவைத்துக் கொண்டே “ஏங்க,நீங்க உங்க உடம்பை இப்படி நல்ல கட்டு மஸ்தாக வச்சு இருக்கீங்களேங்க அது எப்படிங்க” என்று கேட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.“அது ஒன்னும் இல்லே,கமலா. நான் நிறைய ‘கேம்ஸ்’ ஆடி இருக்கேன். இன்னமும் ஆடிக் கிட்டு இருக்கேன்.இதைத் தவிர நான் தவறாமல் எங்க ‘ஸ்பாக்டா¢யில்’ இருக்கும் ‘ஜிம்முக்கு’ப் போய் அங்கே ‘வெயிட் லிஸ்ப்டிங்க்’‘த்ரெட் மில்’எல்லாம் பண்ணி வருவேன்.டைம் கிடைக்கும் போது நிறைய காலியான மைதான த்தில் ஓடுவேன்.என் உடம்பை இப்படி கட்டு மஸ்தாக வச்சுக்க நான் ரொம்ப ஆசைப் படுவேன்” என்று சொல்லி நிறுத்தினான். “கேக்கவே ரொம்ப சந்தோஷமாய் இருக்குங்க.நீங்க இப்படி உங்க உடம்பை ஒரு ஆணழகான வச்சு வாங்க.எனக்கு உங்க உடம்பு அழகு ரொம்பப் பிடிச்சு இருக்குங்க” என்று சொல்லும் போது அவள் தன் தலையை குனிந்துக் கொண்டு தன் கைகளால் தன் கண்களை மறைத்துக் கொன்ஸ்டாள்.அவள் கன்னங்கள் மட்டும் ‘குப்’பென்று சிவந்து இருந்தன.

கொஞ்ச நேரம் போனதும் “நம்ம காதலை உங்க வீட்லே ஏத்துக்குவாங்களா கமலா.உனக்கு யாராச்சும் ‘முறை பிள்ளைங்க’ இருக்காங்களா உங்க குடும்பத்திலே.உன் உறவிலே உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க உங்க அப்பா அம்மா யோஜனைப் பண்ணிக் கிட்டு இருக்காங்களா நீ முதல்லே நம்ப காதலைப் பத்தி என்ன நினைக்கிறே .உன் அப்பா அம்மா இருவரும் நம்ம காதலை ஒத்துக்கிட்டாத் தானே நாம கல்யாணம் பண்ணிக்கிட முடியும்.நாம இது வரை சகஜமாக பழகி வருவதாலே தான் நான் உன்னிடம் நான் இந்த கேள்வியை நான் உன்னிடம் சகஜமாகக் கேட்டேன்”என்றான் நடராஜன் ஒரு வித கலக்கத்துடன்.“இதில் ஒன்னும் தப்பு இல்லீங்க,எனக்குத் தொ¢ஞ்சு எனக்கு ‘முறைப் பையன்னு’ யாரும் இல்லீங்க.என் அப்பா அம்மா எனக்கு அவங்க உறவிலே ஒரு பையனைப் பாத்து எனக்குக் கல்யணம் பண்ணி வைப்பாங்களா இல்லையான்னு எனக்குத் தொ¢யாதுங்க.ஆனா ஒன்னும் மட்டும் நிச்சியங்க.அவங்க நம்ம காதலுக்கு சம்மதம் சொன்னாத் தாங்க நாம கல்யாணம் பண்ணிக் கிட்டு கணவன் மணைவி ஆக முடியும்.நான் இது வரைக்கும் அவங்க கிட்டே நம்ப காதலைப் பத்தி சொல்லலேங்க.இன்னிக்குத் தானே நாம இருவரும் மனம் திறந்து பேசி இருக்கோம்.கொஞ்ச நாள் போனதும் சொல்லலாம்னு இருக்கேனுங்க” என்றாள் கமலா.“நீ செஞ்சது ரொம்ப சரி கமலா.நம் இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு மனம் பிடித்து நாம் ரெண்டு பேரும் இந்த காதலை ஏத்துக் கொள்வதுன்னு முடிவு பண்ண பறகு சொல்வது தான் சரி” என்று ஒத்துக் கொண்டான் நடராஜன்.

“நாம் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிஞ்சுக் கொள்ள நாம் நம்முடைய குடும்ப சூழ் நிலையை ஒன்றும் மறைக்காமல் முழுக்கச் சொல்லி பகிர்ந்துக் கிட்டோம்.இதனால் நாம் ஒரு நல்ல முடிவுக்கு வரலாம் கமலா.நீ என்ன சொல்றே” என்று கேட்டு அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் நடராஜன்.“ஆமாங்க,நீங்க சொல்றது ரொம்ப உண்மைங்க.அந்த மாதிரி நாம் நம்முடைய குடும்ப சூழ் நிலையைப் பகிர்ந்துக் கிட்டதாலே நமக்குள்ளே நிச்சியமா ஒரு நெருக்கம் ஏற்பட்டு இருக்குன்னு நான் நம்பரேனுங்க.நீங்க எப்படி ‘ஸ்பீல் ‘பன்றீங்க” என்று கேட்டாள் கமலா.“ ஆமாம் கமலா,நிச்ச்சியமா அது ஒரு நெருக்கத்தை குடுத்து இருக்கு “ என்று சொல்லி ஆமோதித்தான் நடராஜன்.

சற்று பொறுத்து ”நீ ஒரு பெண் கமலா.உனக்கு நாம அவசரப் பட்டு நம் குடும்ப சூழ் நிலையைச் சொல்லி விட்டா அதற்கு ஏற்ப அவர் தன் குடும்ப சூழ் நிலையை மாத்திச் சொல்லி நம்ம ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடுவாரோ என்கிற பயம் இருக்கும்.இல்லியா சொல்லு கமலா” என்று கேட்டு பேசாமல் இருந்தான்.”அப்படி எல்லாம் இல்லீங்க. உங்க பேர்லே எனக்கு புரண நம்பிக்கை இருக்குங்க”என்ரு கமலா சொன்னவுடன் “ரொம்ப தாங்க்ஸ் கமலா.நீ என் பேர்லே வச்சு இருக்கிற நல்ல எண்ணத்தைப் போலவே நான் நடந்துக்குவேன். என்று சொன்னான் நடராஜன்.

தொண்டையை கனைத்துக் கொண்டு “நான் என் ஊருக்குப் போய் என் அப்பா அம்மா கிட்டே என் காதலைப் பத்தி நான் சொல்லப் போறேன்.அவங்க உடனே என்னைப் பாத்து ‘நீ ஒரு நல்ல பொண்ணா,நம் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா,உன் மனசுக்கு ஏத்த பொண்ணா பாத்து இருக்கியா நடராஜா’ ன்னு என்னைக் கேப்பாங்க. நான் அதற்கு பட்டென்று ‘நீங்க சொன்ன அந்த மூனும் அந்த பொண்ணிடத்தில் இருக்கு.நீங்க கவலைப் படாதீங்கன்னு சொல்லிட்டு விட்டு உன்னே பத்தின எல்லா விவரத்தையும் சொல்லுவேன் வேன் கமலா” என்று பெருமிதத்துடன் சொல்லி நிறுத்தினான் நடராஜன்.கமலா அவன் கையை பிடித்துக் கொண்டு “ரொம்ப நன்றிங்க.இதுக்கு உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போறேன்ன்னு தெரியலேங்க” என்று சொல்லும் போது கமலா கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் நடராஜன் கைகளின் மேல் விழ்ந்தது. நடராஜன் அதைத் துடைத்துக் கொண்டான்.

இருவரும் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்கள்.பிறகு கமலா தான் பேச ஆரம்பித்தாள். “நான் ஒரு வயசுப் பொண்ணுங்க.நீங்க தான் நான் முதலில் பழகிய ஒரு ஆண் மகன்.நீங்க புரிஞ்சிப்பீங்க எனக்கு நம்பிக்கை இருக்குங்க.நான் உண்மையை உங்க கிட்டே சொல்றேன்.நான் இது வரை நம்ம சந்திப்பைப் பற்றி என் பெற்றோர்ங்க கிட்ட சொல்லலே.நீங்க தான் எனக்கு உதவி செய்யணுங்க.நீங்க செய்வீங்களா” என்று அவன் கையைப் பிடித்து கெஞ்சினாள்.”நான் நிச்சியம் செய்றேன் கமலா.என்ன பண்ணனும்ன்னு சொல்லு” கமலா.சந்தோஷத்தில் அவன் கைகளை கெட்டியாகப் பிடித்து அமுக்கினாள் கமலா.பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு “ரொம்ப நன்றிங்க” என்று சொல்லி விட்டு “எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்க. அதுவரைக்கும் நாம இந்த மாதிரி சந்திச்சுட்டு இருக்கணுங்க.தயவு செஞ்சு இதை மட்டும் நிறுத்தி விடாதீங்க, ‘ப்ளீஸ்’’” என்று அவனை கெஞ்சினாள் கமலா.“உன் கஷ்டம் எனக்கு நல்லா புரியுது கமலா.கவலைப் படாதே கமலா.நான் உனக்காக எத்தனை மாசமானாலும் காத்துகிட்டு இருக்கத் தயார்.நாம சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மாதிரி சந்திச்சு பேசிகிட்டு இருக்கலாம்.நீ நிம்மதியா இருந்தா அதுவே எனக்குப் போதும் கமலா” என்று சொன்னான் நடராஜன்.கமலா கண்கள் குளமாயின.

”இந்த உதவிக்கு நன்றி சொல்ல நான் உங்களை ஒரு ‘ஸ்பெஷல் டீன்னரு’க்கு இப்போ அழைச்சுக் கிட்டுப் போகிறேன் வாங்க” என்று சொல்லி அவனை எழுப்பினாள்.தன் ‘டிரஸ்ஸில்’ ஒட்டி இருந்த மணலைத் தட்டி விட்டுக் கொண்டாள் கமலா.“அப்படியா இதோ நான் ரெடி” என்று சொல்லி எழுந்தான்.“என்ன கமலா கல்யாணத்துக்கு முன்னாலேயே எனக்கு ‘அட்வான்ஸ்’ டின்னரா “ என்று கேட்டுக் கொண்டே நடந்தான் நடராஜன்.“ஆமாம் அப்படித் தான் வச்சுக்குங்க.எம் மனம் இப்போ ரொம்ப சந்தோஷமாய் இருக்குதுங்க.நான் அதை ‘செலிபிரேட்’ பண்ன வேணாங்களா” என்று கேட்டாள் கமலா.” ’ஷ¥ர்’ கமலா “ என்று சொல்லிக் கொண்டே நடராஜன் தன் ‘டூ வீலரை’’ ஸ்டார்ட்’ பண்ணினான்.இருவரும் அந்த பொ¢ய ஹோட்டலுக்கு வந்தார்கள்.அந்த பொ¢ய ஹோட்டலுக்குல் நுழைந்து ஒரு ‘ஸ்பெஷல் டின்னருக்கு’ ஆர்டர் கொடுத்து விட்டு மறுபடியும் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.சர்வர் ‘டின்னரை’ கொண்டு வந்து வைத்தவுடன் இருவரும் ‘டின்னரை‘ சந்தோஷமாக ரசித்து சாப்பிட்டார்கள். கமலா தான்அந்த ‘டின்னர்’ பில்லுக்குப் பணம் கொடுத்தாள் பிறகு நடராஜன் கமலாவை தன் ‘டூ வீலா¢ல்’ ஏற்றிக் கொண்டு போய் கே. கே. நகா¢ல் வழக்கமாக ‘ட்ராப்’ பண்ணும் இடத்தில் ‘ட்ராப்’ பண்ணினான்.இருவரும் தங்கள் செல்போன் நம்பர்களை ஒருவருக்கு ஒருவர் கொடுத்து தங்கள் செல்போன்களில் நம்பரைப் போட்டுக் கொண்டார்கள். “பை கமலா, குட் நைட். ‘ஸ்வீட் ட்¡£ம்ஸ்’ “என்று விஷ் பண்ணினான் நடராஜன்.“பைங்க.ஜாக்கிறதையா போங்க” என்று சொல்லி கையை ஆட்டிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள் கமலா.கமலா உருவம் மரையும் வரை நெடு நேரம் கையை ஆட்டிக் கொண்டு இருந்து விட்டு பிறகு நடராஜன் கிளம்பினான் ‘நைட் டியூட்டி’க்கு தன் ‘ஸ்பாக்டா¢யை’ நோக்கி.மெல்ல வீட்டுக்குள் நுழைந்தாள் கமலா. தன் கை கால்களை கழுவி விட்டு ஹாலில் சற்று நேரம் உட்கார்ந்தாள் கமலா. கொஞ்ச நேரம் அவர்களுடன் உட்கார்ந்துக் கொண்டு இருந்து விட்டு “அம்மா நான் படுக்கப் போறேன். எனக்கு தூக்கம் வருது” என்று சொல்லி விட்டு அவள் படுக்கப் போனாள்.படுத்துக் கொண்டே யோஜனை பண்ண ஆரம்பித்தாள்.அவளுக்கு தூக்கம் வரவில்லை.’ அவருகு என்ன,அவர் ஒரு ஆண்.அவன்ஸ்ப வீட்லே சொல்லி பர்மிஷன் சுலபமா வாங்கிடுவாரு.நம் குடும்ப கதையே அலாதி ஆச்சே.ஏற்கெனவே காதலித்து ஆசைப் பட்ட வளோடு நம் அண்ணன் குமார் ஓடிப் போய் இருக்கான்.இப்ப ‘காதல்’ ‘ஆசைபட்டவர்’ ’ நான் அவரையே கல்யாணம் பண்ணிக்க போகிறேன்’ன்னு எல்லாம் சொல்லி ‘பர்மிஷன்’ கேட்டா நம்ப அப்பா அம்மா ஒத்துக் கொள்ளுவாங்களோ மாட்டாங்களோ.நினைக்கும் போதே கமலாவுக்கு பயம் அவள் வயத்தை கலக்கியது.‘மனதை போட்டு கசக்கி பிழிந்தாள்.

கமலா தன் பெற்றோர்களிடம் தன் காதலைச் சொல்ல ஒரு நல்ல சந்தர்பத்தைத் தேடிக் கொண்டு இருந்தாள்.எப்படியாவது சொல்லி தன் காதலுக்கு ‘பச்சைக் கொடி’ காட்டி விட வேண்டும் என்பதில் துடிப்பாக இருந்தாள்.அதற்காக தினமும் கடவுளை வேண்டி வந்தாள் கமலா.

அன்று ஞாயிற்றுக் கிழமை.எல்லோரும் நிதானமாக தங்கள் காரியங்களை செய்து வந்தார்கள்.கமலாவும் அன்று நிதானமாக எழுந்து குளித்து விட்டு வந்தாள்.எல்லோரும் மதிய உணவு அருந்த உட்கார்ந்தார்கள்.ஏதோ கமலாவுக்கு வேண்டாத சமாசாரங்களை எல்லாம் பேசி வந்துக் கொண்டு இருந்தார்கள் சிவலிங்கமும் சரோஜாவும்.மதியம் உண்வு அருந்திய பின் அப்பாவும் அம்மாவும் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.இது நல்ல சமயமாக இருக்கும் என்று எண்ணி கமலா தன் அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.மெல்ல தன் காதலைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள். “அம்மா நன் ஒருத்தரைக் காதலிக்கிறேன்.அவர் ரொம்பவும் நல்லவர்.என்னிடம் அன்பாக…..” என்று சொல்லி முடிக்கவில்லை கமலா அதற்குள் ”என்னடி இது, ‘காதல்’ ‘அது’ ‘இது’ன்னு பேசறே. உனக்கு என்ன ஆச்சு.நாங்க பொ¢யவங்க இல்லையா.உனக்கு நாங்க ஒரு நல்ல பையனைப் பாத்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோமா.என்னங்க கேட்டீங்களா இவ சொல்றதே” என்று கண்ணை மூடிக் கிட்டு இருந்த தன் கணவனைப் பாத்து ‘ அலறினாள் சரோஜா.“நான் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன் சரோஜா ‘என்னம்மா இது ‘காதல் ‘‘அது’ ‘இது’ன்னு எல்லாம் நீ சொல்றே.யாரோ முன் பின் தொ¢யாத ஒருவனைப் பத்தி இவ்வளவு சீக்கிரம் நல்லவர், அன்பானவர், இன்னெல்லாம் நீ சொல்றே.நாங்க இருக்கோம்மா உனக்கு நல்ல ஒரு பையணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கக. அவசரப் படாதேம்மா கமலா.நம் குடும்பத்துக்கு இந்த காதல் அது இது எல்லாம் சரிப்படாதும்மா. ஏற்கெனவே நம்ப குமார் இப்படித் தான் காதலிச்சு இந்த வீட்டை விட்டே ஓடிப் போயிட்டான்.அவன் இப்போ எங்கு இருக்கானோ,என்ன பண்றானோ நமக்கு தொ¢யாது.அவனும் நம்மைப் பற்றி கவலை படாம எங்கோ இருந்து வரான்.நீயும் லதாவை மாதிரி நாங்க பாக்கிற ஒரு நல்ல பையனை கல்யாணம் கட்டிக் கிட்டு எங்க கண் முன்னாலே சந்தோஷமா வாழ்ந்து வாம்மா” என்று பொறுமையாக ஒரு பெரிய ‘லெக்ச்சரே’ அடித்தார் சிவலிங்கம். என்னடா இது வம்பாப் போச்சே, ‘மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி’ என்கிற மாதிரி அப்பா அம்மா ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துக் கொண்டு அதே பாட்டைப் பாடறாங்களேன்னு யோசித்தாள் கமலா.

பிறகு தைரியத்தை வர வழைத்துக் கொண்டு தன் காதலை பத்தி சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்து “இல்லேப்பா நான் அவரோடு நாலு மாசமா பழகி வரேன்.அவர் ரொம்ப நல்லவர் ப்பா,என்னிடம் மிகவும் அன்பாக பேசி வரார்ப்பா. அவர் ‘அசோக் லேலண்ட்’ கம்பனியில் ‘சூப்பர் வைஸராக’ வேலை பண்ணி வறார்ப்பா” என்று நிறுத்தாமல் சொல்லி முடித்தாள் கமலா.“ஏண்டி நாலு மாசமா பழகி வரேன்னு சொல்றே,எங்க கிட்டே இதை பத்தி நீ இது வரைக்கும் மூச்சே விடலே” என்று கோபமாகக் கேட்டாள் சரோஜா.”இல்லேம்மா, நான் அவருடன் பழகி,அவர் நல்லவர்ன்னு தானா,நம்ப குடும்ப த்துக்கு ஏத்தவரான்னு தொ¢ஞ்சுக் கிட்ட பிறகு உங்க கிட்டே சொல்லலாம்ன்னு தாம்மா இருந்தேன்” என்று சொல்லி முடிக்கும் முன் “வயசுப் பொண்ணு கிட்டே எல்லாப் பையங்களும் நல்லாத் தான் பழகுவாங்க.நீ வேறே பார்க்க அழகா இருக்கே.வேலை வேறு செய்யறே.அதெல்லாம் நம்ப முடியாதும்மா.நீ சின்னப் போண்ணு. இது ஏமாத்ததற உலகம் கமலா.நீ அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் இவ்வளவு சீக்கிரம் வரக்கூடாதும்மா. நாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்மா. எல்லாவத்தையும் தீர விசாரிக்கணும்மா” என்று மறுபடியும் ஒரு பொ¢ய ‘லெக்சரே’ அடித்தார் சிவலிங்கம்.சற்று நேரம் எல்லோரும் மௌனமாய் இருந்தனர். கமலா விடாமல் சொல்ல ஆரம்பித்தாள்.

“எனக்கு அவரை ரொம்ப பிடிச்சு இருக்கும்மா.அவருக்கும் என்னை பிடிச்சு இருக்கும்மா.நான் அவசரப் படவில்லைம்மா.நான்அவரோடு நல்லா பழகின பிறகு தான் இந்த அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேம்மா. நீங்க அவரை ஒரு தரம் பாத்து பேசினா உங்களுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்மா நான் அவரை ஒரு தரம் நம்ம வீட்டுக்கு வரச் சொல்றேன்.நீங்களே அவர் கிட்டே பேசுங்க.அப்போ உங்களுக்கே நான் சொல்றது உண்¨ன்னு தொ¢யும். ‘ப்ளீஸ்ம்மா’ “ என்று அம்மாவின் மோவாக் கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் கமலா.சரோஜாவுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.“என்னங்க,இவ இப்படி பிடிவாதம் பிடிக்கிறா.இவ கேப்பதை எப்படிங்க நாம செய்ய முடியும்.இவளே அவரை நல்லவர்ன்னு சொன்னா எப்படிங்க நாம நம்பறதுங்க. இவ சொல்றதை வச்சுகிட்டு நாம் முடிவு பண்ணக் கூடாதேங்க.நீங்களே இவளுக்கு விவரமா சொல்லுங்க.என்னால் இவளுக்கு சொல்ல முடியாதுங்க” என்று கணவனைப் பார்த்துக் கவலையோடு கேட்டாள் சரோஜா. எல்லாவற்றையும் கேட்டு விட்டு சற்று நேரம் மௌனமாய் இருந்தார் சிவலிங்கம். அவர் யோஜனைப் பண்ணினார்.கமலா இப்படி பிடிவாதமா ‘நான் அவரைத் தான் கல்ய ¡ணம் பண்ணிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதை கேட்டு யோஜனைப் பண்ணினார்.

“இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு நாள் பழகி வந்து இருக்காங்க.இவளோ அவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தீர்மானமா,ஒத்த கால்லே நிக்கறா.எனக்கு வேறு வழி ஒன்னும் தோணலேயே சரோஜா.இவ சொல்றாப் போலே அந்த பையனை நாம ஒரு தடவை நேரிடையாகப் பாத்து பேசுவோம்.எல்லா விவரமும் நாம கேப்போம்.அப்புறமா முடிவு பண்ணலாம்” என்று பொறுமையாக சொன்னார் சிவலிங்கம்.பிறகு சிவலிங்கமும் சரோஜாவும் கமலாவிடம் அந்த பையனைப் பத்தின சமாசாரங்களை எல்லாம் விவரமாகக் கேட்டு தொ¢ந்து கொண்டார்கள்.கொஞ்ச நேரம் யோஜனை பண்ணின சிவலிங்கம் “சரி முதல்லே அந்த பையனை ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வரச் சொல் கமலா. நாம அவனுடன் பேசலாம்.அப்புறம் முடிவு பண்ணலாம்” என்றார் சிவலிங்கம். சந்தோஷத்தில் “சரிப்பா ,நான் அவரை ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வரச் சொல்றேம்ப்பா.நீங்க அவா¢டம் பேசிப் பாருங்க அப்பா” என்றாள் கமலா.”நாங்க பேசி முடிவு பண்ணும் வரை ஜாக்கிறதையா இரு.நாங்க ஒத்துக்கிட்டோம் ன்னு நினைச்சு நீ ஏதாவது ‘ஏடா கூடமா’ பண்ணிக் கிட்டு வந்து நிக்காதே. நான் சொல்றது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். என்ன” என்றாள் சரோஜா கண்டிப்பான குரலில்.“சரிம்மா,எனக்கு புரியுதும்மா.நான் ஜாக்கிறதையா இருக்கேம்மா.நீ வீணா கவலைப் படாதேம்மா” என்றாள் கமலா.

சிவலிங்கதிற்கு காப்பி கொண்டு வந்து வைத்தாள் சரோஜா.காலிங்க் பெல் அடித்தது. கதவைத் திறந்தாள் சரோஜா.வாசலில் கமலாவின் தோழி பிரேமா நின்றுக் கொண்டு இருந்தாள்.”வா பிரேமா உள்ளே வா” என்று சொல்லி அவளை உள்ளே வரச் சொல்லி விட்டு “கமலா,யார் வந்து இருக்கான்னு பார்” என்று குரல் கொடுத்தாள் சரோஜா.கமலா வெளியே வந்து “ ஹாய் பிரேம் வா வா” என்று சொல்லிக் கொண்டு தன் தோழியை வரவேற்றாள்.சரோஜா கொடுத்த காப்பியை குடித்து விட்டு “எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க ‘ஆன்ட்டி’.கல்யாணம் பண்ணிகிட்டு நான் போயிட்டா அப்புறம் கமலாவோடு பேச முடியாதேன்னு தான் நான் வந்தேன்.அவ ‘சண்டே’ மட்டும் தானே வீட்லே இருப்பா.அதனால் தான் இன்னைக்கு வந்தேன்” என்று வெக்கப்பட்டுக் கொண்டே மெதுவாகச் சொன்னாள்.“கங்கராட்ஸ்,பிரேம் கங்க்ராட்ஸ்” என்று சொல்லி அவள் கையை பிடித்து குலுக்கினாள் கமலா. ”பையன் உள்ளூரா, வெளியூரா,உறவிலேயா,இல்லே வெளியிலா” என்று சரோஜா கேள்வி மேல் கேள்விகள் கேட்டாள்.“அவர் உறவில் இல்லை ‘ஆன்ட்டி’ வெளியில் தான்.இந்த தெருவிலே தான் ‘அவர் ‘ இருக்கார்.நானும் அவரும் ரெண்டு வருஷமா பழகி வரோம் ‘ஆன்டி’ “ என்று வெக்கத்துடன் சொல்லி விட்டு “நான் கமலாவோடு கொஞ்சம் வெளியே போய் வறேன் ஆன்ட்டி” என்று சொன்னாள்.“சரி போய் வாங்க” என்று சொல்லிவிட்டு சரோஜா வேறு வேலையாய் சமையல் அறைக்குப் போய் விட்டாள். ‘டிரஸ்ஸை’ மாற்றிக் கொண்டு பிரேமாவுடன் வெளியே கிளம்பி போனாள் கமலா.பார்க்கில் பிரேமா தன் காதல் எப்படி வெற்றி பெற்றது எங்கிற விவரத்தை கமலாவிடம் சொன்னா:உடனே “பரவாயில்லையே பிரேமா உன் ‘அவர்’ வந்து பேசியதும் உன் அப்பா அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக் கிட்டு விட்டாங்க.எங்க காதலும் அப்படியே முடியுமேன்னு நினைச்சா கவலையா இருக்கு பிரேம்”என்று சொல்லி வருத்தப் பட்டாள் கமலா.”கவலைப் படாதே கமல், உன் கல்யாணமும் நீ ஆசைப் பட்டாப் போலவே நிச்சியமா நடக்கும் என்று ஆறுதல் சொன்னாள் பிரேமா.

கமலாவும் பிரேமாவும் வெளியே போகும் வரை ஒன்னும் பேசாமல் இருந்தாள் சரோஜா. பிறகு தன் கணவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு ”பாத்தீங்களா இந்த காலத்து பொண்ணுங்க ளெ.அவங்களே தாங்களே காதல் பண்ணிக்கிட்டு தனக்கு ஒரு புருஷனைத் தேடிக்கிறாங்க”என்று அங்கலாய்த்துக் கொண்டாள் சரோஜா.“ஆமாம் சரோஜா நீ சொல்றது ரொம்ப சரி.நிறைய பெண்கள் இப்படித் தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறாங்க. என்று சொல்லி வருத்தப் பட்டார் சிவலிங்கம். கொஞ்ச நேரம் பண்ணின சிவலிங்கம் “சரோஜா நிலைமையை நல்லாக புரிஞ்சுக்கோ. நம்ம பொண்ணும் அந்த பையனும் நாலு மாசமா பழகறாங்க.இருவரும் ஒருவரை ஒருவர் ரொம்ப விரும்புறாங்க.இவ ‘நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு’ பிடிவாதமா வேறு சொல்றா.கமலா இப்போ வேலைக்குப் போற பொண்ணு.கையிலே நாலு காசு சம்பாத்திக்கிறா.இவ வயசு பெண்களுக்கு காதல் கல்யாணம் ஆகிக் கிட்டு இருப்பதை இவ கேள்விப் படறா.இவ வயசு இருபத்தி மூனு முடியப் போவுது. நாம ‘இந்த பையன் உனக்கு வேணாம் நாங்க வேறு நல்ல பையனை பார்க்கிறோம்ன்னு’ சொன்னோம்ன்னு வச்சுக்க,இவளும் நம்ம குமார் மாதிரி ஒரு நாள் வீட்டை விட்டு அந்தப் பையணோடு ஓடிப் போய் விட்டா நாம அப்புறம் அழுதா வருமா,கதறினா வருமா, சொல்லு பாக்கலாம்” என்று நிதானமாகச் சொன்னார் சிவலிங்கம். பிறகு “இந்த பையன் நல்லவனா இருக்கணும்,இவங்க அப்பா அம்மாவும் நல்லவங்களா நம்ம கமலாவை நல்ல மாதிரி வச்சுக்கணும்ன்னு நாம் கடவுளை வேண்டி வருவோம். என்று சொல்லி விட்டு எழுந்து விட்டார் சிவலிங்கம் வேறு வேலையை கவனிக்க.சரோஜாவும் பதில் ஒன்னும் சொல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் கமலா ‘லன்ச் பாக்ஸை’ எடுத்துக் கொண்டு ஆஸ்பீஸ் கிளம்பி போனாள்.சேர்ந்ததும் சேராததும் ன் செல் போனில் நடராஜனைக் கூப்பிட்டாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *