கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 5,063 
 

அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 | அத்தியாயம்-20

அன்று ஞாயிற்றுக் கிழமை.நடராஜனுக்கும் கமலாவுக்கும் லீவு. குழந்தைக்கு மூனு மாசமாகி விட்டதால் அன்று சாயங்காலம் பீச்சுக்குப் போய் வர முடிவு பண்ணி ஒரு ‘கால் டாக்ஸி’ எற்பாடு பண்ணினான் நடராஜன். எல்லோரும் கிளம்பி முதலில் முருகர் கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணி விட்டு, பறகு ஹோட்டலுக்குப் போய் டிபன் வாங்கி சாப்பிட்டு விட்டு,அதே ‘கால் டாக்ஸி’ யில் பீச்சுக்குப் போனார்கள்.மெல்ல மணலில் நடந்து எல்லோரும் ஒரு நல்ல இடத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.நடராஜனுக்கும் கமலாவுக்கும் லீவு. குழந்தைக்கு மூனு மாசமாகி விட்டதால் அன்று சாயங்காலம் பீச்சுக்குப் போய் வர முடிவு பண்ணி ஒரு ‘கால் டாக்ஸி’ எற்பாடு பண்ணினான் நடராஜன்.எல்லோரும் கிளம்பி முதலில் முருகர் கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணி விட்டு, பறகு ஹோட்டலுக்குப் போய் டிபன் வாங்கி சாப்பிட்டு விட்டு,அதே ‘கால் டாக்ஸி’யில் பீச்சுக்குப் போனார்கள்.மெல்ல மணலில் நடந்து எல்லோரும் ஒரு நல்ல இடத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டார்கள்.நான்கு பேரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்க்ச்சிகளை பேசி வந்தார்கள்.

பிறகு கமலாவும் நடராஜனும் எல்லோருக்கும் பஜ்ஜியும் சுண்டலும் வாங்கி வந்தார்கள். நான்கு பேரும் ரசித்து சாப்பிட்டார்கள்.பழைய விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டு இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை அவர்களுக்கு. வானத்துலே மேகங்கள் கருத்து இருப்பதை அவர்கள கவனிக்கவே இல்லை. அந்த மேகங்களே திடீரென்று இடியுடன் கூடிய மழையாய் மாறி மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. மழை வேகமாக பேயவே நான்கு பேரும் நன்றாக நனைந்து விட்டார்கள். உடனே சரோஜா “வாங்க கிளம்பலாங்க,காத்து ரொம்ப சில்லுன்னு அடிக்குது. குழந்தை வேறே ரொம்ப நனைஞ்சு போச்சுங்க.குழந்தைக்கு ஒத்துக்காதுங்க” என்றாள் வருத்தப்பட்டுக் கொண்டே. அப்போது தான் மணியைப் பார்த்தார் சிவலிங்கம்.மணி ஒன்பது காட்டியது.எல்லோரும் மெல்ல ஈரமான மணலில் மெல்ல நடந்து ரோடுக்கு வந்து ‘கால் டக்ஸியில்’ ஏறி ஒரு நல்ல ஹோட்டலுக்கு வந்தார்கள். ஹோட்டலில் நிறைய கூட்டம் இருந்தது.அங்கு இருந்த சூப்பர்வைஸர் “சார் உங்களுக்கு முன்னாலே இன்னும் பத்து பேர் இருக்காங்க. உங்களுக்கு ‘சீட்’ கிடைக்க இன்னும் இருபது நிமிஷமாவது ஆவும். உங்களுக்கு அவசரம்ன்னா நீங்க ஏ.ஸி.ரூமுக்குப் போங்க.அங்கே காலி இருக்கும்” என்று சொன்னார்.நடராஜன் ரொம்ப லேட்டாகி விட்டதாலும் எல்லோருக்கும் ரொம்ப பசியாய் இருந்த தினாலும் “சரிங்க,நாங்க ஏ.ஸி.ரூமுக்குப் போறோம்” என்று சொல்லி விட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஏ.ஸி.ரூமுக்குப் போனான்.அங்கே அவரவர்கள் பசிக்கு ஏற்ப ‘டிபனை’ சாப்பிட்டார்கள்.பிறகு எல்லோரும் ‘கால் டாக்ஸி’யில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள்.கமலா குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு துங்க பண்ண ஆரம்பித்தாள்.ஆனால் குழந்தை தூங்காமல் சிணுங்கிக் கொண்டே இருந்தது.ரொம்ப நேரமா குழந்தை தூங்காமல் சிணுங்கிக் கொண்டு இருக்கவே கமலா குழந்தையை கையில் எடுத்தாள்.குழந்தை உடம்பு கொதிச்சது. கவலைப் பட்டாள் கமலா. குழந்தையின் அக்குளில் ‘தெர்மா மீட்டரை’ வைத்து குழந்தைக்கு ஜூரம் இருக்கிறதா என்று பர்ர்த்தாள்.ஜுரம் 100* காட்டியது.’என்னடா இது அக்குளில் வைத்துப் பார்க்கும் போதே100* காட்டுகிறதே, அப்படின்னா ஜுரம் 101* ஆச்சேன்னு அவளுக்கு கவலை வந்து நடராஜனை எழுப்பி “என்னங்க, குழந்தைக்கு நல்ல ஜுரம் அடிக்குதுங்க.எழுந்து வந்து தொட்டுப் பாருங்க” என்று அழைத்தாள் கமலா.நடராஜம் குழ்ந்தையை தொட்டு பார்த்து விட்டு “ ஆமாம் கமலா குழந்தைக்கு நல்ல ஜுரம் அடிக்குது.டாக்டர் குழந்தைக்குன்னு ஒரு ஜுர மருந்து ஒன்னு கொடுத்து இருந்தாரே, அந்த மருந்தை ஒரு ‘ஸ்பூன்’ உடனே கொடு. ஜுரம் குறையுதா ன்னு பாப்போம்” என்று சொல்லி நடராஜன் அந்த மருந்தையும் ஒரு ஸ்பூனையும் கொண்டு வந்து கமலாவிடம் கொடுத்தான்.கமலாவும் அந்த மருந்தில் ஒரு ‘ஸ்பூன்’ மருந்தை குழந்தைக்குக் கொடுத்தாள். குழந்தை லேசாக தூங்கியவுடன் கமலா குழந்தையை தொட்டிலில் விடப் போனாள். தொட்டிலில் விட்டதும் குழந்தை மறுபடியும் சிணுங்கிக் கொண்டு அழ ஆரம்பித்தது.ஹாலில் படுத்து இருந்த தன் அம்மாவை குரல் கொடுத்து எழுப்பினாள் கமலா.கமலா கதவைத் திறந்ததும் “குழந்தை தூங்கலேம்மா.அழுது கிட்டே இருக்கு. ஜுரம் அடிக்குதுன்னேன்னு குழந்தைக்கு ஜுர மருந்து கொடுத்தேன்.ஆனா ஜுரம் இன்னும் குறையலே “என்று சொல்லி கமலா குழந்தையை அம்மா கையிலே கொடுத்தாள். குழந்தையை வாங்கிக் கொண்ட சரோஜா “நல்ல ஜுரம் அடிக்குதே” என்று சொல்லி குழந்தையை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்து சொல்லிக் கொண்டு இருந்தாள்.

அப்போது மணி 2-30.அந்த ஜுர மருந்தை இன்னும் ஒரு ஸ்பூன் மறுபடியும் குடுக்கலாம். சூரிய உதயம் ஆனதும் நாம் டாக்டரிடம் போய் குழந்தையை காட்டலாம்” என்று சொன்னார் சிவலிங்கம்.உதயம் ஆனதும் மூவரும் வெறும் காப்பி மட்டும் குடித்து விட்டு குழந்தையை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு பொ¢ய ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ போனார்கள்.குழந்தையை பரிசோதித்த டாக்டர் “குழந்தைக்கு ‘ஹை ·பீவர்’ இருக்குது..நீங்க குழந்தையை உடனே எமர்ஜென்ஸியில்’ ‘அட்மிட்’ பண்ணுங்க” என்று சொன்னார்.நடராஜனும்’ ரிஸ·பஷனில்’ பணம் கட்டி விட்டு குழந்தையை ‘எமர்ஜென்ஸி’ யில் ‘அட்மிட்’ பண்ணினான்.டாக்டர் உடனே குழந்தைக்கு ஊசி போட்டு ‘ப்லட் டெஸ்ட்டு’ எடுத்து வர ஏற்பாடு பண்ணினார்.மூனு மணி நேரம் கழித்து ரத்த ‘ரிப்போர்ட்’ வந்தது. ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர் ”குழந்தைக்கு நிறைய ’இன்·பெக்ஷன்’ ஆகி இருக்கு” என்று சொல்லி விட்டு ICU க்குள் ‘அட்மிட்’ பண்ணினார்.மூவரும் கடவுளை வேண்டிக் கொண்டார்கள்.

வீட்டுக்கு வந்த சரோஜா ‘கிடு’ ‘கிடு’ என்று சமையலை செய்து முடித்தாள்.தானும் சப்பிட்டு விட்டு காரியா¢ல் மூவருக்கும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள்.சரோஜா கொண்டு வந்த சாப்பாட்டை மூவரும் சாப்பிட்டார்கள்.நடராஜனு ம் கமலாவும் நர்ஸிங்க் ஹோமில் இருந்து கொண்டு சிவலிங்கத்தையும் சரோஜாவையும் வீட்டுக்கு அனுப்பினார்கள்.மாலை ஆறு மணிக்கு ICUல் இருந்த டாகடர் வெளியே வந்து “உங்க குழந்தைக்கு வந்து இருக்கிறது விஷ ஜுரம். அதனால் நாங்க உடனே ‘ஆன்டிபயாடிக்ஸ்’ குடுக்க ஆரம்பிச்சு இருக்கோம்” என்று சொல்லி விட்டு போனார்.இருவரும் கவலைப் பட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.இருவரும் அடிக்கடி குழந்தையை மட்டும் ICU கண்ணாடிக் கதவின் வழியாக பார்த்து வந்தார்கள். குழந்தை கண்ணைத் திறக்காமல் படுத்து இருந்தான்.கடவுளை வேண்டி வந்தார்கள்.

தியம் முன்று மணி இருக்கும். பொ¢ய டாக்டர் தன் ‘ஸ்டெதஸ்கொப்பை’ தன் தோளில் போட்டுக் கொண்டு ICUவை விட்டு வெளியே வந்து “சாரி மிஸ்டர் நடராஜன்,உங்க குழந்தையை எங்களால் காப்பாத்த முடியவில்லை” என்று சொல்லி விட்டு வேகமாகப் போய் விட்டார்.மூன்று நாளாய் ஒன்றும் சாப்பிடாமல் வீக்ககாக இருந்த கமலாவுக்கு டாக்டர் சொன்னதை கேட்டவுடன் அங்கேயே மயக்கம் வந்து மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டாள்.அங்கே இருந்த ஆஸ்பத்திரி ஆட்கள் உடனே ஒரு ‘ஸ்ட்ரெச்சரை’ கொண்டு வந்து கமலாவை அதில் படுக்க வைத்து ‘எமர்ஜென் ஸிக்கு’ அழைத்துப் போனார்கள்.‘எமர்ஜென்ஸி’ டாக்டர் அவளுக்கு ஒரு ஊசி போட்டு படுக்க வைத்தார்கள். ‘‘ரிஸ்ப்ஷனில்’ அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டினான் நடராஜன்.கூடவே குழந்தை இறந்த ‘சர்டிபிகேட்டை’யும் அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டான்.தன் மாமியார் மாமனாரிடம் கமலாவைப் பார்த்துக் கொள்ளும் படி சொல்லி விட்டு,ஒரு ‘கால் டாக்ஸி எற்பாடு பண்ணி தன் இறந்த குழந்தையை ஏற்றிக் கொண்டு நடராஜன் மயானத்துக்கு சென்று எல்லாவற்றையும் முடித்து விட்டு வந்தான்.எல்லாம் முடித்துவிட்டு நடராஜன் வர எட்டு ஆகி விட்டது. ஒரு S.T.D.பூத்துக்கு வந்து தன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த எல்லா எல்லா விவரமும் போனில் சொல்லி அழுதான்.இந்த துக்க செய்தியை கேட்டு அவர்களும் அழுதார்கள்

“கமலாவுக்கு இன்னும் மயக்கம் தெளிய வில்லையே மாப்பிள்ளை.ரொம்ப கவலையா இருக்குங்க” என்றார் சிவலிங்கம்.“அப்படியாங்க” என்று சொல்லி விட்டு நேரே ‘எமர்ஜென்ஸிக்கு’ப் போய் டாக்டரைப் பார்த்துக் கேட்டான் நடராஜன்.“அவங்க மயக்கம் இன்னும் தெளியவில்லை.ரொம்ப வீக்காக இருக்காங்க.நாங்க ‘ட்ரிப்ஸ் ‘கொடுத்து இருக்கோம். இப்ப ரெண்டு பாட்டில் முடிந்து இருக்கு. அடுத்த பாட்டில் கொடுத்தா அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சு விடும்”என்று சொன்னார் ‘ட்யூட்டி’ டாக்டர்.

இரவு மணி மூன்று இருக்கும். கமலாவுக்கு லேசாக மயக்கம் தெளிந்தது. டாக்டர் அவளை மெல்ல எழுப்பி உட்கார வைத்து அவளுக்கு சாப்பிட தயிர் சாதம் கொடுத்தார்.கமலா மெல்ல சாப்பிட்டாள்.டாக்டர் சொன்னதும் நடராஜனும், சிவலிங்கமும், சரோஜாவும் கமலாவை போய் பார்த்தார்கள்.நடராஜனை பார்த்ததும் “நம்ம ஆனந்த் எங்கேங்க.நான் அவனை பார்க்கணுங்க. அவனை உடனே கொண்டு வாங்க,உடனே கொண்டு வாங்க” என்று நடராஜனின் காலரைப் பிடித்து வெறி வந்தது போல் கத்தினாள் கமலா. ‘டியூட்டி’ டாக்டர் நடராஜனிடம் “ உங்க மணைவியின் மன நிலை இப்போது ரொம்பவும் சரி இல்லாமல் ரொம்ப வீக்கா இருக்கு.அவங்க மனதை ‘குழந்தை இறந்த சேதி’ மிகவும் பாதிச்சு இருக்கு.அவங்க இப்படித் தான் கத்துவாங்க,பைத்தியம் பிடிச்ச மாதிரி இருப்பாங்க. அவங்களை குழந்தை போல் நீங்க ‘ஹாண்டில் ‘பண்ணனும் ஜாக்கிறதை. ரொம்பவும் மிரட்டியோ கத்தியோ ஒன்னும் சொல்லக் கூடாது.நல்ல விதமாகச் சொல்லி வர வேணும்.அவங்க மன நிலை சரியாக ரொம்ப நாள் ஆகுங்க” என்று சொல்லி விட்டு போய் விட்டார்.பிறகு ஒரு ‘கால் டாக்ஸியை’ ஏற்பாடு பண்ணி எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து வந்தான்.வீட்டுக்கு வந்த கமலா மட்டும் பயித்தியம் போல் மோட்டு வளையை வெறுமனே பார்த்துக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.சில நேரம் இதையே கத்திக் கொண்டும் இருந்தாள் கமலா.சில நேரம் அழுதுக் கொண்டு இருந்தாள் அவள்.எப்படி கமலாவை சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் முழித்தார்கள்.“ஆமாம் மாமா,நீங்க சொல்றது ரொம்ப சரி மாமா.நாம உடனே ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் கமலாவை காட்டி அவளுக்கு வைத்தியம் பண்ணணும்”என்றான் என்றான் நடராஜன்.

ஜோதியும் டேவிட்டும் தினம் தோறும் பார்க்கில் சந்தித்து சந்தோஷமாக பேசி பழகி வந்தார்கள்.

அடுத்த நாள் நடராஜன் நன்றாக குளித்து விட்டு,நாஷ்டா முடித்து விட்டு,தன் மாமாவையும்,அத்தையும், கமலாவையும் அழைத்துக் கொண்டு அவன் நண்பன் சொன்ன ஒரு மனோ தத்துவ நிபுணரிடம் அழைத்துப் போய் போய் அங்கு இருந்த மனோ தத்துவ டாக்டரிடம் நடராஜன் நடந்த எல்லா விவரத் தையும் முழுக்கச் சொல்லி இப்போது கமலா இருக்கும் மன நிலையையும் சொன்னான்.டாக்டர் எல்லா விவரமும் கேட்டு விட்டு “நான் இந்த அம்மாவின் மன நிலையை பழைய நிலைக்கு கொண்டு வருறேன்.ஆனா இந்த அம்மா இன்னி யோடு இன்னும் நாலு ‘சிட்டிங்க்’ இங்கே வரணும்.இந்த ஐஞ்சு ‘சிட்டிங்க்’ க்கும் என்னுடைய ‘·பீஸ்’ பத்தா யிரம் ரூபாய்.இந்த ஐஞ்சு ‘சிட்டிங்க்’ முடிந்ததும் இந்த அம்மா பழையபடி ஆயிடுவாங்க” இருந்தாலும் இந்த குழந்தை ஏக்கம் அவங்களுக்கு இருந்து கிட்டு தாங்க் இருக்கும். அதை மறக்க அவங்களுக்கு ரொம்ப வருஷமாகும்.ஒரு வேளை அவங்க சம்மத்திச்சா நீங்க ஒரு குழந்தையை தத்து எடுத்திகிட்டா அந்த குழந்தையோடு அவங்க இருந்து வந்தா அவங்க மனசு பழைய நிலைக்கு சீக்கிரமா வர வாய்ப்பு இருக்ங்க” என்று சொன்னார் அந்த மனோ தத்துவ டாக்டர். நடராஜன் உடனே “சரி டாக்டர் நான் உங்க’ பீஸை’த் தருகிறேன்.நீங்க இன்னி யிலே இருந்தே அவங்களுக்கு ‘ட்¡£ட்மெண்ட்டை’ ஆரம்பிங்க” என்று சொன்னான்.மூன்று மணி நேரம் கழித்து கமலாவை டாக்டர் வெளியே அழைத்து வந்து நடராஜனைப் பார்த்து அடுத்த நாலு ‘சிட்டிங்க்’க்கும் தேதியைகளைச் சொல்லி இதே நேரத்துக்கு மறுபடியும் கமலாவை அழைத்து வரச் சொன்னாள்.உடனே நடராஜன் ‘‘சரி,டாக்டர்,நீங்க சொன்னபடியே நான் கமலாவை இங்கே அழைச்சுக் கிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு கமலாவையும், தன் மாமனாரையும், மாமியாரையும், அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.வேலைக்கு ‘லீவு’ போட்டு அதிக நாள் ஆகி விட்டதாலும், ‘பாஸ்’ கூப்பிட்டு சொன்னதாலும் நடராஜன் அடுத்த நாள் முதல் வேலைக்குப் போக ஆரம்பித்தான்.

குறிப்பிட்ட தினங்களில் அந்த மனோ த்ததுவ நிபுணரிடம் கமலாவை அழைத்துப் போனார்கள் சிவலிங்கமும் சரோஜாவும். கமலாவுக்கு ஐந்து ‘சிட்டிங்கும்’ முடிந்து விட்டது.டாக்டர் சொன்னது போல் அவள் முக்கால் பங்கு நார்மலாகி வந்தாள்.கடைசி சிட்டிங்கின் போது அந்த மனோத்தது டாக்டர் “இப்படியே இவங்களை நீங்க நல்லா கவனிச்சுகிட்டு வந்தீங்கன்னா,இவங்க போகப் போக பழைய நிலைக்கு வந்திடுவாங்க”என்று சொன்னார். வீட்டுக்கு வந்து கமலாவுக்கு ஆகாரம் கொடுத்து விட்டு அவளை தூங்கப் பண்ணினாள் சரோஜா.

கமலாவும் படி படியாக தேறி வந்தாள்.கமலா தேறி வருவதை எண்ணி எல்லோரும் சந்தோஷப் பட்டார்கள். சரோஜாவுக்கு தன் மகள் வாழ்க்கை இப்படி பாலைவனமாக ஆகி விட்டதை எண்ணி எண்ணி மிகவும் கவலைப் பட்டு வந்தாள்.இந்த கவலையே அவளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது.ஒரு நாள் சரோஜாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகியது.இதனால் சரோஜாவுக்கு அடிக்கடி மயக்கம் வர ஆரம்பித்தது.அவள் இதை யாருடமும் சொல்லாமல் வேலை சோர்வாக இருக்கும் என்று கொஞ்சம் ‘ரெஸ்ட்’ மட்டும் எடுத்து வந்தாள்.

ஒரு நாள் அவள் ரத்த கொதிப்பு அதிகமாகி சமையல் செய்துக் கொண்டு இருக்கும் போது மயக்கமாய் விழுந்து விட்டாள் சரோஜா.பயந்துப் போனார் சிவலிங்கம்.உடனே சிவலிங்கம் கமலாவை தன்னுடன் துணைக்கு அழைத்துக் கொண்டு சரோஜாவை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய் ‘அட்மிட்’ பண்ணினார். அங்கு டாக்டர்கள் அவளை I.C.U.வில் வைத்து பரிசோதனைப் பண்ணினார்கள்.சிவலிங்கமும் கமலாவும் நடராஜனும் I.C.U’. வாசலில் போட்டு இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள். ஆபரேஷன் தியேட்டரில் இருந்த டாக்டர்கள் நான்கு மணி நேரம் போராடியும் அவர்களால் சரோஜாவை காப்பாத்தவே முடியவில்லை.நடராஜன் தன் மாமாவுக்கும் கமலாவுக்கும் ஆறுதல் சொன்னான்.

தன் மணைவியை பிரிந்து ஒரு மாதம் ஆனதும் சிவ்லிங்கம் நடராஜனிடமும் கமலாவிடமும் சொல்லிக் கொண்டு காசிகுப் போய் விட்டார்.மருமகனும் மகளும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.நடராஜனும் கமலாவும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

அடுத்த நாள் “இனிமே நாம நம்முடைய எதிர் காலத்தை பத்தி யோஜனைப் பண்ண வேணும் கமலா.உன் அம்மாவும் இறந்து விட்டாங்க.உன் அப்பாவும் எங்கோ போய் விட்டார். என் அப்பா இங்கே வந்து நம்மோடு இருக்கவும் முடியாது.அதனால் என் அம்மா அவருடன் ஊரில் அவருக்கு துணையாய் இருந்து வர வேணும்.நீ மறுபடியும் வேலைக்கு போகலாம் ன்னு ஆசைப் படறாயா, இல்லை இப்படியே கொஞ்ச நாளுங்க வீட்டிலேயே இருந்து வரலாம் ன்னு என்று இருக்கியா” என்று நடராஜன் கமலாவைப் பார்த்து கேட்டான்.“நான் இந்த விஷயத்தைப் பத்தி நல்லா யோஜனைப் பண்ணினேனுங்க. மறுபடியும் நான் வேலைக்கு போனா என்னை எல்லோரும் நான் இவ்வளவு மாசம் ஏன் வேலைக்கு வரலேன்னு கேட்டு,நம் வாழ்க்கையில் நடந்த பழைய சோக சம்பவத்தை கேட்டு என் மனசை புண் படுத்துவாங்களோன்னு ரொம்ப பயமா இருக்குங்க. நான் வூட்டிலேயே இருந்துக் கிட்டு,உங்களுக்கு வேண்டிய சமையல்,மத்த வூட்டு வேலைங்களை எல்லாம் பண்ணி வரலாம் என்று தான் இருக்கேனுங்க.எனக்கு இது தான் பிடிச்சு இருக்குங்க.உங்க சம்பளத்தில் நாம் இருவரும் சந்தோஷமாய் இருந்து வரலாமுங்க.உங்க சம்பளத்தே நான் சிக்கனமாக செலவு செஞ்சி வருவேணுங்க” என்று சொன்னாள் கமலா.சற்று நேரம் கழித்து ”அடுத்த சமாசாரம் கமலா.நாம் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கிட்டுஅந்த குழந்தையை வளர்த்து வரலாமா..நீ என்ன சொல்றே. உனக்கு இந்த ஐடியா பிடிச்சி இருக்கா” என்று கமலாவைப் பார்த்து கேட்டான் நடராஜன்.”நல்ல குழந்தையா, நமக்கு தெரிஞ்சவங்க குழந்தையா நமக்குக் கிடைக்க வேணு மேங்க.முன் பின் தெரியாத, யாருக்கோ பிறந்த குழந்தையை என் குழந்தை ன்னு நான் சொல்லிக்க மாட்டேங்க.எனக்கு அது பிடிக்காதுங்க.நம்ம உறவுலே ஏதாச்சும் நல்ல குழந்தை நமக்கு கிடைச்சா நாம அந்த குழந்தையை தத்து எடுத்துக் கிட்டு வளத்து வரலாங்க”என்று சொல்லி விட்டு அதற்கு தன் கணவர் என்ன சொல்கிறார் கமலா என்று உன்னிப்பாக கவனித்தாள்.“சரி கமலா,நாம முயற்சி செய்வோம். உனக்குப் பிடிச்ச மாதிரி குழந்தை கிடைச்சா நாம் தத்து எடுத்து வளர்த்து வரலாம்”என்று சொன்னான் நடராஜன்.

அடுத்த நாள் சமையலுக்கு காய்கறி வேண்டுமே என்று எண்ணிய கமலா காய்கறி கடைக்கு கிளம்பிப் போனாள் கமலா.காய்கறி வாங்கிக் கொண்டு கொஞ்சம் வேகமாக மாடிப் படி ஏறினாள் கமலா.மாடிப் படி ஏறும் போது அவள் கால் தவறி பையை போட்டுக் கொண்டு படியில் விழுந்து இரண்டு படிகள் உருண்டு கீழே விழுந்தாள்மெல்ல சமாளித்து எழுந்துக் கொண்டு மேலே வந்து கதவைத் திறந்து உள்ளே வந்தாள்.அப்போதில் இருந்தே அவள் கீழ் முதுகில் வலி இருந்துக் கொண்டே இருந்தது.காய்கறி பையை மேஜை மேல் வைத்தாள்.அப்போது அவள் கொண்டுப் போன ‘பர்ஸ்’ கீழே விழுந்து விட்டது.குனிந்து கீழே விழுந்த ‘பர்ஸை’ கமலா எடுக்கும் போது அவள் கீழ் முதுகில் பயங்கர வலி ஏற்பட்டது அவளுக்கு. வலியைப் பொறுத்துக் கொண்டு மெல்ல அவள் சமையல் வேலையை கவனித்தாள்..வலி அப்படியே இருக்கவே அவள் வந்து சோபாவில் உட்கார்ந்துக் கொண்டாள் கமலா.வெளியே போய் இருந்த நடராஜன் வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான்.மெல்ல கமலா எழுந்து விந்தி,விந்தி நடந்து வந்து வாசல் கதவைத் திறந்தாள்.உள்ளே வந்தான்.ஆனால் கமலா அவன் பின்னாலே விந்தி,விந்தி வந்துக் கொண்டு இருந்தாள்.அவன் கமலாவைப் பார்த்து “என்ன கமலா,நீ ஏன் இப்படி உன் காலை விந்தி, விந்தி, நடந்து வறே.உன் காலுக்கு என்ன ஆச்சு” என்று பதறிப் போய் கேட்டான் நடராஜன்.நடந்ததை எல்லாம் விவரமாகச் சொன்னாள் கமலா.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின நடராஜன் “கமலா,எதற்கும் நாம நாளைக்குக் காத்தாலே ஒரு நல்ல டாக்டரிடம் உன் காலைக் காட்டி விட்டு வரலாம். அவர் உன் காலை ‘எக்ஸ்ரே’ எடுத்துப் பாத்து விட்டு எலும்பு முறிவு ஒன்னும் இல்லையான்னு பார்க்கட்டும்” என்று கவலையோடு சொன்னான்.

அடுத்த நாள் காலையில் நடராஜன் கமலா ரெடி ஆனதும் அவளை அழைத்துக் கொண்டு போய் ஒரு நல்ல டாக்டரிடம் காட்டினான் நடராஜன்.அந்த டாக்டர் “சார்,இந்த மாதிரி விடாம கால்லே வலி இருந்தா நாம ‘எக்ஸ்ரே’ தான் பண்ணித் தாங்க பார்க்க வேணும்”என்று சொல்லி டாக்டர் கமலாவு க்கு ‘எக்ஸ்ரே’ பண்ண அனுப்பினார்.ஒரு மணி கழிச்சு கமலா ‘எக்ஸ்ரே படம்’ வந்ததும், டாக்டர் அந்த ‘எக்ஸ்ரே படத்தை’ ப் பார்த்தார்.“சார் ‘எக்ஸ்ரே’ படத்தில் உங்க மணைவியின் முதுகெலும்பின் கீழ் பாகத்திலே தண்டு வடத்தில் ஒரு ‘சில்லு’ சற்று விலகி இருக்கு.இனிமே அவங்க அதிகம் குனிஞ்சு நிமிர்ந்து பண்ணாம இருக்கணும்.அதிக பளு தூக்காம இருந்து வரணும்.அதிக நேரம் கால்களில் ‘வெயிட்’ போட்டுக் கொண்டு நிக்கக் கூடாது.நிறைய ‘ரெஸ்ட்’ எடுத்து வர வேண்டும்”என்று சொல்லி அவள் முதுகுக்கு ஒரு ‘பெல்ட்டும்’ எழுதிக் கொடுத்து உடனே அதை கடையில் வாங்கிப் கமலாவை போட்டு கொள்ளச் சொன்னார் டாக்டர். கூடவே முதுகு வலிக்கு சில பயிற்சிகளும் சொல்லி கொடுத்து,கமலாவை அந்த பயிற்சிகளை தவறாமல் செய்து வரச் சொன்னார் டாக்டர்.

வீட்டுக்கு வேலை செய்ய வந்த வேலைகாரியிடம் “நீங்க என் வூட்டிலே சமையல் தவிர மத்த எல்லா வேலை ங்களையும் செய்யணும்.வீட்டிலே நாங்க ரெண்டு பேர் தான் இருக்கோங்க.நீங்க எங்க வீட்லே வேலை செய்ய என்ன சம்பளம் கேப்பீங்க”என்று கேட்டாள் கமலா. “நான் எல்லா வேலை ங்களையும் செய்யறேங்க.எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தாங்க” என்றாள் அந்த அம்மா.“ரொம்ப அதிகம்ங்க.நான் எட்டு நூறு தான் தருவேன்.இஷடம்ன்னா செய்யுங்க. இல்லாவிட்டடா நான் வேறு அம்மாவை வேலைக்கு வச்சுக்கிறேன்” என்றாள் கமலா கண்டிப்பாக. ”சரிங்க.நான் நாளையில் இருந்து வேலைக்கு வரேங்க” என்று சொல்லி விட்டு போய் விட்டள் அந்த அம்மா.கமலாவும் அதிக நேரம் நிற்காமல் கொஞ்சம் நேரம் சமைப்பதும்,பிறகு கொஞ்சம் நேரம் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டும், சமையல் பண்ணும் போது அதிகமாக குனியாமலும் இருந்து வந்து தன்னை கவனமாகப் பார்த்துக் கொண்டாள் கமலா.புதிதாக வந்த வேலைக்காரி வேலைகளை எல்லாம் அவ்வளவு நல்லா செய்ய வில்லை. கமலாவுக்கு இந்த வேலைக்காரியை பிடிக்கவே இல்லை. அன்று பீரோவை திறந்து பார்த்த நடராஜன் “கமலா,கட்டம் போட்ட என் நீல நிற ‘டீ ஷர்ட்’ எங்கே.காணோமே கமலா” என்று கேட்டான்.“எனக்கு தெரியாதேங்க.நான் பாக்கலைங்க அந்த ‘டீ ஷர்ட்டை’.அங்கு தான் இருக்கணுங்க.இருங்க.நான் வந்து தேடி தரேனுங்க”என்று சொல்லி விட்டு கமலா நடராஜன் பீரோவைத் தேடினாள்.அவளுக்கும் அந்த ‘டீ ஷர்ட்’ கிடைக்கவில்லை.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *