அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13
மெல்ல கமலாவின்அம்மா கமலாவைப் பாத்து “ கமலா, உனக்கும், மாப்பிள்ளைக்கும் வயசாகி கிட்டு போவுது,சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்துக் கோங்க” என்று சாடை மாடையாகச் சொல்லி வந்தாள்.கமலா சிரிச்சக் கிட்டு “அதுக்கு இப்ப என்னம்மா அவசரம்.இன்னும் கொஞ்ச நாள் போவட்டுமேம்மா “ என்று சொல்லி சிரித்தாள்.நடராஜன் அம்மாவும் அவனிடம் போனில் பேசும் போதெல்லாம் “நடராஜா உனக்கு வயசு ஆகி கிட்டே போவுது.சீக்கிரம் நாங்க கண்ணை மூடுவதுக்கு எங்களுக்கு ஒரு பேரனையோ இல்லை பேத்தியையோ கண்ணில் காட்டுப்பா” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.கமலா சொன்ன மாதிரியே “இப்ப என்ன அவசரம்மா,இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்று சொல்லி சிரிச்சான் நடராஜன்.
இருவரும் ‘இப்போதைக்கு குழந்தை வேண்டாம்,குழந்தைக்கு இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும்’ என்று முடிவு பண்ணி அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்
திண்டிவனம் கிராமம்.சேவல் கூவும் குரலைக் கேட்டு செண்பகம் மெல்ல தன் தூக்கத்தில் இருந்து எழுந்து பாதி தூக்கத்திலேயே வெளியே வந்து கண்ணைத் திறந்து பார்த்தாள்.பொழுது இன்னும் அவ்வளவாக இன்னும் விடியவில்லை.பிறகு தன் இரு கைகளையும் தேய்த்து கொண்டு கண்ணில் ஒற்றிக் கொண்டாள். உள்ளே போய் கோலப் பொடியும் வாளியில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வந்து வாசல் தெளித்து விட்டு தனக்குத் தெரிந்த ஒரு கோலம் போட ஆரம்பித்தாள். கோலம் போட்டு முடிக்க நேரமானதால் அவசர அவசரமாக உள்ளே போய் தன் புருஷனுக்கு வேலைக்குப் போக நேரம் ஆகி விட்டதோன்னு எண்ணி காளியை எழுப்பினாள்.
செண்பகத்தின் புருஷன் காளி திண்டிவனத்தில் ஒரு ‘ஹோல் ஸேல்’ வியாபாரியிடம் ஒரு லாரி டிரைவராக வேலை பண்ணி வந்தான்.அவனுக்கு நிரந்திர வருமானம் கிடையாது.சில நாள் லாரி ஓட்ட வேலை கிடைத்தால் பணம் வரும்.லாரி ஓட்டாத நாட்களில் அவன் மார்கெட்டிலே பழியாய் கிடப்பான் வேலை கிடைக்குமா என்று எதிர் பார்த்துக் கொண்டு.வீட்டு செலவுக்கு பணம் போதாமல் இருக்கவே செண்பகம் ஐந்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்து தன் இரண்டு பெண் குழந்தை களையும் காப்பாத்தி வந்தாள்.
முகத்தையும் கண்களையும் துடைத்துக் கொண்டே மெல்ல எழுந்தான் காளி.”ரொம்ப உடம்பு வலி செண்பகம்.அசந்து தூங்கிட்டேன்.நல்ல வேளை நீ ஞாபகம் வச்சுக்கிட்டு என்னை எழுப்பினே. இதோ நான் பல் துலக்கி விட்டு கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு பல் தேய்க்கப் போனான் காளி. பிறகு தன் ‘டிரஸ்ஸை’ மாத்திக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டான் அவன்.
கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷத்திலேயே செண்பகத்துக்கு ஓரு பொண்ணு பிறந்தாள். அந்த குழந்தைக்கு முத்தம்மா என்று பெயர் வைத்து ‘முத்து’ ‘முத்து’ என்று செல்லமாக கூப்பிட்டு வந்தாள்.
முத்து பிறந்து பத்து வருஷன் ஆனதும் ‘இனிமே தள்ளிப் போட வேணாம்’ என்று கருத்தடை மாத்திரைகளை நிறுத்தி விட்டாள் செண்பகம்.செண்பகம் ஆசைப் பட்டது போல் அவள் நாலு மாசத்திலேயே கருவுற்றாள்.பாவம் அவளுக்கு ரெண்டாவது குழந்தையும் ஒரு பெண் குழந்தையாகப் பிறந்தது.மனதை தேற்றிக் கொண்டு இவளாவது இருண்ட நம் வாழ்க்கையில் ஒளி கொண்டு வரட்டும் என்று எண்ணி ரெண்டாவது குழந்தைக்கு ‘ஜோதி’ என்று பேர் வைத்தாள் செண்பகம்.
முத்தம்மா ஒன்பதாவது படித்து கொண்டுஇருந்தாள்.சின்னவ ஜோதி ரெண்டவது படித்துக் கொண்டு இருந்தாள்.
காளிக்கு பல நண்பர்கள் உண்டு.அதில் கதிர்வேல் என்பவன் ரொம்ப ‘தோஸ்த்’. தன்னை விட ஒரு இருபது வருஷம் சின்னவனாக கதிர்வேல் இருந்தாலும் என்னமோ காளிக்கு கதிர்வேலுவை மிகவும் பிடித்து இருந்தது.கையில் பணம் இருந்தா காளி கதிருக்கு ‘கட்டிங்க்’ வாங்கிக் குடுப்பான். கதிர்வேல் திண்டிவனம் மெயின் மார்கெட்டில் ஒரு பொ¢ய ‘ஹோல்சேல்’ வெங்காய கடையில் மூட்டை தூக்கி வரும் வேலைகாரனாக வேலை பார்த்து வந்தான்.
ஒரு நாள் “கதிர்,இந்த ஞாயித்துக்கிழமை உனக்கு லீவு தானே.நம்ம வீட்டுலே ஒரு விசேஷம் நீ சாப்பிட வரயா” என்று சொல்லி கதிர்வேலுவை தன் வீட்டுக்கு வரச் சொன்னான் காளி. கதிர் வேலுவும்”சரி நான் நிச்சியம் வரேன்னே” என்று சொன்னான்.சொன்னது போல் ஞாயித்துக்கிழமை ஒரு பதினோறு மணிக்கா காளி வீட்டுக்கு வந்தான் கதிர்வேல்.வாசலில் ஒரு சின்ன பந்தல் போட்டு இருந்தார்கள்.நிறைய பேர்கள் வாசலில் போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார் கள்.கதிவேலு வந்ததை கவனித்த காளி ஓடி வந்து அவன் கையைப் பிடித்து அழைத்து வந்து ஒரு சேரில் உட்கார வைத்தான்.விழா முடிந்ததும் தன் கையில் இருந்த நூறு ரூபாயை தன் பங்குக்கு தான் கொடுக்கும் சின்ன ‘காணிக்கை’ என்று சொல்லிக் ‘மொய்’ எழுதினான் கதிர்வேலு. எல்லோரும் சாப்பிட உட்கார்ந்ததும் கதிர்வேலுவும் சாப்பிட உட்கார்ந்தான்.கதிர்வேலுவை நன்றாகக் கவனித்து அவன் பக்கத்தில் நின்றுக் கொண்டு அவனுக்கு ‘இன்னும் இதைப் போடு’ ‘அதைப் போடு’ என்று சொல்லி அக்கறைக் காட்டி கதிr வேலுவை சாப்பிட வைத்தான் காளி.சாப்பிட்டு விட்டு வெளியே வந்த கதிர்வேலு காளியிடம் சொல்லிக் கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டான்.அதன் பிறகு கதிர்வேலு காளியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டு இருந்தான்.
செண்பகமும் காளியும் கலந்துப் பேசி,யோசனைப் பண்ணி ‘அவங்க மூத்த பொண்ணு முத்தம்மாவை கதிர்வேலுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கலாம்’ என்று முடிவு பண்ணி முதலில் முத்தம்மாவைக் கேட்டான் காளி. முத்தம்மா கதிர்வேலுவை பல தடவைப் பார்த்து இருந்ததினால், அவன் கட்டு மஸ்தான உடல் அழகும் அவளுக்குப் பிடித்து இருந்ததினால், அவள் மறுப்பு ஒன்றும் சொல்லாமல் ‘சரி’ என்று சொன்னாள்.முதலில் தயங்கிய கதிர்வேலு காளி அவனை வெறுமனே நிர்பந்தப் படுத்தவே ‘சரி’ என்று ஒத்துக் கொண்டான்.அந்த ஊர் கோடியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் கதிர்வேலு முத்தம்மா கல்யாணத்தை செய்து முடித்தார்கள்.
செண்பகம் தான் சேத்து வைத்திருந்த பணத்தில் முத்தம்மாவுக்கு பக்கத்திலேயே ஒரு குடிசை வாங்கி அவளை அவள் புருஷனோடு தனியே இருந்து வரச் சொன்னாள்.முத்தம்மா தன் புருஷன் கதிர்வேலுவுடன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்தி வந்தாள்.
அந்த வருஷமே முத்தம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.முத்தம்மா தன் குழந்தைக்கு ‘ராணீ’ என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தாள்.பேருக்கு ஏத்தார் போல் ராணீ நல்ல கலராகவும் நல்ல அழகாகவும் இருந்தாள்.முத்தம்மாவுக்கு தனக்கு இவ்வளவு கலராகவும் அழகாகவும் குழந்தை பிறந்ததை எண்ணி சந்தோஷப் பட்டாள்.கதிர்வேலுவும் ‘எப்படி தனக்கு இவ்வளவு கலரா குழந்தை எப்படி பிறந்தது’ என்று ஆச்சரியப் பட்டான்.
பெண் குழந்தை பிறந்ததும் குடிக்கு அடிமை ஆகி விடுவான் கதிர் வேலு. விலை வாசி ஏறிப்போனதால் புருஷன் தரும் பணம் குடும்பத்துக்கு போதாமல் கஷ்டப் பட்டு வந்தாள் முத்தம்மா.
வேறு வழி இல்லாமல் தன் குழந்தைக்கு மூனு வயசு ஆனவுடனே முத்தம்மாவும் தன் குழந்தையை எதிர் வீட்டு பாட்டிக்கிட்டே விட்டு விட்டு ரெண்டு வீட்டிலே வீட்டு வேலை செய்து வந்தாள்.
காளி அன்று நிறைய குடித்து இருந்தான்.அன்று பார்த்து அவனுக்கு ஒரு லாரி ஓட்ட வேலை கிடைத்தது.குடி போதையின் மயக்கத்தில் ‘ஹைவேயில்’ லாரி ஓட்டிக் கொண்டு இருந்தான் அவன். இரவு வேளையாக இருந்தது .மழை வேறு பெய்த்துக் கொண்டு இருந்தது.அவனால் எதிரே வரும் பஸ்ஸின் தூரத்தை சரியாக புரிந்துக் கொள்ள முடிய வில்லை.பஸ் டிரைவர் வேறே ‘ஹை பீம்’ போட்டுக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான். ‘ஓவர்டேக்’ பண்ணி விடலாம் என்று தப்பு கணக்குப் போட்டு மெதுவாகப் போய்க் கொண்டு இருக்கும் ‘ட்ரக்கின்’ வலது புறத்தில் தன் ‘ஸ்டியா¢ங்கை’ ஒடித்து வெளியே வந்தான்.அந்த நேரம் பாத்து ‘ட்ரக்’ டிரைவரும் கொஞ்சம் ‘ஸ்பீட்’ எடுத்து விட்டான்.காளியினால் ஒன்னும் பண்ண முடியவில்லை.எதிரே வந்த பஸ்ஸ¤டன் வேகமாக மோதி விட்டான். விபத்து நடந்த ’ஸ்பாட்டிலேயே’ இறந்து விட்டான் காளி.இடிந்துப் போனாள் செண்பகம். அவனை அடக்கம் பண்ணி விட்டு வீட்டிலேயே படுத்து கிடந்தாள் செண்பகம். சாப்பாடு ஏதும் சாப்பிடாம அவள் இருந்து வந்தாள்.அவள் வீட்டு வேலைக்கும் போகவில்லை.
”நடந்தது நடந்துப் போச்சும்மா.இனிமே நாம என்ன பண்ண முடியும்.கடவுள் நமக்கு எத்தினி நாள் இந்த உலகத்துலே உயிர் போட்டு இருக்கானோ அத்தினி நாள் நாம இந்த உலகத்துலே இருந்து தானேம்மா ஆகணும். கடவுள் போட்ட அப்பா உயிர் முடிஞ்சிப் போச்சி.அவர் போயிட்டார். ஜோதி இன்னும் சின்ன பொண்ணு.நீ அவளுக் காக உன்னை மாத்திகிட்டு வாழ்ந்து தான் வரணும்.எழுந்திரு.நடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைச்சு மறக்க ‘ட்ரை’ பண்ணு “என்று சொன்னாள் முத்தம்மா.கதிர்வேலுவும் செண்பகத்துக்கு ஆறுதலா கொஞ்சம் சொல்லி அவளை எழுந்தரிக்கச் சொன்னான். மெல்ல அவள் கையைப் பிடித்து எழுப்பி அவளுக்கு கொஞ்சம் இள நீர் கொடுத்தாள் ஜோதி. எல்லோரும் சொன்னதைக் கேட்டு மெல்ல எழுந்து இள நீரைக் குடித்தாள் செண்பகம்.எல்லோரும் சொன்னதால் மனதில் கொஞ்சம் ¨தா¢யததை வர வழைத்துக் கொண்டு தன் பொண்ணு ஜோதிக்காக செண்பகம் மீண்டும் வீட்டு வேலைகளுக்குப் போக ஆரம்பித்தாள்.
காளி இறந்துப் போய் ஐந்து வருஷங்கள் ஓடி விட்டன.ஜோதி பத்தாவது க்ளாஸ் பாஸ் பண்ணினாள்.‘வயசான தன் அம்மா இன்னும் எத்த்தினி நாளைக்கு தனியே கஷடபட்டு வேலை செஞ்சு வருவாங்க’ என்று எண்னி ஜோதியும் தன் படிப்பை நிறுத்திவிட்டு அம்மாவுடன் வீட்டு வேலைக்கு போய் வந்துக் கொண்டு இருந்தாள்.
“எனக்கு வயசு அதிகமாக்¢க் கிட்டு வருது முத்தம்மா.என் தலை கீழே விழறத்து குள்ளார நம்ம ஜோதியை ஒருவன் கையிலே நான் பிடிச்சி குடுத்திட்டேனா,நான் நிம்மதியா கண்னை மூடுவேன். இந்த எண்ணம் தான் ராவு பகலா என் மனசே உறுத்திக் கிட்டு இருக்குது முத்தம்மா” என்று வெறுமனே முத்தம்மாவிடம் சொல்லி வந்தாள் செண்பகம்.“எனக்கு புரியுதுமா உன் கவலை.அது அதுக்கு நேரம் காலம் வர வேணாவா.நான் வேணா என் புருஷன் கிட்டே சொல்லி வக்கிறேன்.இந்த குடிகாரன் இன்னொரு குடி காரனே கொண்டு வந்து நிறுத்துவானோன்னு பயப் படுகிறேம்மா. இவருக்கு தெரிஞ்சவன் எல்லாம் குடுகாரப் பயங்க தானேம்மா” என்று சொல்லி வருத்தப் பட்டாள் முத்தம்மா.
வேலைக்குப் போகும் வழியில் ஜோதி ஆட்டோ டிரைவர் சேகரை ரகசியமா சந்திதத்துப் பேசி வந்தாள்.சேகரும் ஜோதியிடம் நன்றாக பழகி வந்தார்கள்.யாரும் பார்க்காத நேரத்தில் அவளுக்கு இனிப்புகளும் நிறைய ‘மேக்கப்’ பொருள்களையும் வாங்கிக் குடுத்தான் அவன். இருவரும் மனம் விட்டு பழகி வந்தார்கள். இந்த ரகசிய சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. சேகர் ஜோதியை அடிக்கடி கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தவே “இரு அவசரப் படாதேய்யா.நானே சமயம் வரும் போது என் அம்மா அக்கா ரெண்டு பேர் கிட்டேயும் மெல்ல கேக்கறேன்” என்று சொல்லி வந்தாள் ஜோதி.
ராணீ திண்டிவனத்தில் பெண்கள் படிக்கும் முனிசிபல் ஹைஸ்கூலில் படித்து வந்தாள்.
கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவன் அந்த தமிழ் பேப்பரை படித்துக் கொண்டு இருந்தான் கதிர்வேலு. முத்தம்மா அவன் பக்கத்தில் வந்து உட்கர்ந்தாள்.“சொல்லு, முத்தம்மா சொல்லு.நான் என்ன பண்ணணும்.கடைக்குப் போய் ஏதாச்சும் வாங்கி வரணுமா சொல்லு.இதே நான் போய் வாங்கி வரேன்” என்றான் கதிர்வேலு.நீ ஒன்னும் கடைக்கெல்லாம் போக வேணாம்.என் தங்கை ஜோதிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளயா எங்கம்மா தேடிக் கிட்டு இருக்காங்க. உனக்கு தெரிஞ்சவன் யாராச்சும் நல்ல பையனா இருக்கானா சொல்லேன்” என்று கேட்டாள் முத்தம்மா.“இந்த காலத்துலே ‘தண்ணி’ அடிக்காதவன் எவன் இருக்கான் முத்தம்மா.சரி ஒரு நல்ல ஆளாப் பாத்து நான் உனக்கு சீக்கிரம் சொல்றேன்.கவலை படாதே முத்தம்மா. எனக்கு தெரிஞ்ச பசங்கள்ளே தேடி பர்க்கரேன். யாராச்சும் ஒருவன் நிச்சியமா கிடைப்பான்” என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தான் கதிர்வேலு.
இதற்கிடையில் சேகர் ஜோதி காதல் வேகமாக வளர்ந்துக் கொண்டு இருந்தது. சேகர் ஜோதியை அடிக்கடி தன்னுடன் ஓடி வந்து விடுமாறு வற்புறுத்தி வந்தான்.ஜோதி தான் ‘இருயா அவசப்படாதே.நான் சமயம் வரும் போது சொல்றேன்’ என்று சனாதானம் சொல்லி வந்தாள்.
ராணீ பத்தாவது பாஸ் பண்ணி விட்டாள்.முத்தம்மா இவள் படித்து போதும் மேலே படிக்க வேண்டாம் என்று நினைத்து அவளை வீட்டோடு இருக்கச் சொல்லி விட்டாள்.“சரிம்மா,நான் வூட்டோடு இருந்து வரேன்.நான் தினமும் சமையல் செஞ்சு வரேன்.நீ வீட்டு வேலைக்கு மட்டும் போய் வந்து ‘ரெஸ்ட்’ எடுத்துக்கோ” என்றாள் ராணீ.அன்று முதல் ராணீ வீட்டோடு இருந்து வந்து சமையல் வேலைகளை கவனித்து வந்தாள்.வேலை இல்லாத போது டீ.வியிலும்,ரேடியோ பெட்டியிலும் நிறைய சினிமா பாட்டுகளை எல்லாம் கேட்டு வந்தாள்.
முத்தம்மா சொன்னது போல் கதிர்வேலு ஒரு நல்ல பையானாக பார்த்து வந்தான்.
அன்று விட்டுக்கு வந்ததும் கதிர்வேலு முத்தம்மா கிட்டே “நான் என் நணபன் ராசுவை இன்னைக்கி காலையிலே மார்கெட்டுலே பாத்தேன் முத்தம்மா. பையன் நல்ல வாட்ட சாட்டமா,நல்லா இருப்பான்.அவன் நமம்ப ஜோதியை கல்லாணம் கட்டிக்க தயார்ன்னு சொன்னான்” என்றான் கதிர்வேலு. முத்தம்மா தன் அம்மா விட்டுக்குப் போய் கதிர்வேலு சொன்ன சமாசாரத்தை செண்பகத்திடம் சொன்னாள்.அந்த நேரம் ஜோதியும் அங்கே இருந்தாள்.
”ஏண்டி ஜோதி,முத்தம்மா புருஷன் யாரோ ஒரு நல்ல பையனை பாத்து பேசி இருக்காராம். உனக்கு அந்த பையனை இப்ப கல்யாணம் பண்ணலாம்ன்னு தான் நான் இருக்கேன்.உனக்கும் வயசு ஆகி கிட்டே போவுது.என் உடம்பில் திடம் இருக்கும் போது உனக்கு கல்யாணம் கட்டிக் குடுத்தடுனும்ன்னு நினைச்சு இருக்கேன்.இந்த பையனே நீ பாத்துட்டு உனக்கு பிடிச்சி இருந்தா நீ கல்யாணம் கட்டிக்கிறியா“ என்று கேட்டாள் செண்பகம்.“எனக்கு இப்ப என்னாம்மா கல்யாணத்துக்கு அவசரம் இன்னும் கொஞ்சம் நாளாகட்டுமே அம்மா” என்றாள் கொஞ்சலாக ஜோதி.“உனக்கு ஒன்னும் சின்ன வயசு இல்லியே ஜோதி..நீ அந்த பையனைப் பாத்து விட்டு அப்புறமா சொல்லு ஜோதி” என்று கேட்டாள் செண்பகம்.”எனக்கு ஒரு வாரம் டயம் கொடு அம்மா.நான் யோசிச்சு பிறகு சொல்றேன் “ என்று சொல்லி விட்டாள் ஜோதி.
தன் அம்மாவும் அக்காவும் நமக்கு கல்யாணம் பண்ணுவதில் மும்முறமாக இருப்பதை நன்றாக உணர்ந்தாள் ஜோதி.‘இனிமே நாம் சும்மா இருந்தா இவங்க நம்மை எவனோ ஒருத்தன் தலையில் கட்டி விடுவாங்க’ என்று எண்ணி பயந்தாள் ஜோதி.அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அடுத்த நாள் காலையில் அவள் வேலைக்குப் போகும் போது சேகரை ரகசியமா சந்தித்து எல்லா விஷயத்¨யும் சொன்னாள் ஜோதி.
சேகர் உடனே “ஜோதி, இனிமே நாம சும்மா இருந்தா நல்லது இல்லே.இங்கு இருந்தா அவங்க ரெண்டு பேரும் நம்மை கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் விடமாட்டாங்க.அதனால் நாம ரெண்டு பேரும் நான் முன்னே சொன்னது போல ராவோடு ராவாக இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடலாம். சென்னையிலே என் அண்ணனும் அவங்க சம்சாரமும் இருக்காங்க.அவரும் என்னே போல ஒரு ஆட்டோ டிரைவர் தான்.நாம அங்கே ஓடிப் போய் நாம அங்கே பிழைச்சுகலாம் ஜோதி” என்னை நம்பு ஜோதி.உன்னை நான் நிச்சியமா கை விட மாட்டேன் ஜோதி” என்று கெஞ்சினான் சேகர்.“எனக்கு பயமா இருக்கு.ஆனா உன் கூட இருக்கணுன்னு ஆசையாவும் இருக்கு” என்று ஜோதி சொன்னாள். “நீ பயப் படாதே ஜோதி.நான் உன்னே கை விட மாட்டேன்”என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினான் சேகர்.சற்று நேரம் கழித்து ”நான் சொல்றபடி பண்ணு ஜோதி. நீ இன்னைக்கு ராத்திரி எல்லோரும் தூங்கிப் போன பிறகு மெல்ல உன் ‘டிரஸ்சை’ எல்லாம் எடுத்துக் கிட்டு ஒரு பையிலே வச்சுக்க்கிட்டு நீ கிளம்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விடு.நாம ரெண்டு பேரும் இரவு பாசஞ்சர் வண்டியில் சென்னைக்கு ஓடிப் போயிடலாம்” என்று ஐடியா கொடுத்தான் சேகர்.”“சரி நான் அப்படியே செய்கிறேன்” என்று சொல்லி விட்டு தன் வீட்டுக்கு வந்தாள் ஜோதி.
அன்று பூராவும் ஜோதி யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.வீட்டில் மறுபடியும் இரவு பூராவும் மறுபடியும் யோஜனைப் பண்ணினாள் ஜோதி.” பேசாம கடவுள் மேலே பாரத்தே போட்டு சேகரோடு ஓடிப் போயிடலாம்” என்று முடிவு பண்ணினாள் ஜோதி. இரவு வந்தது. வேலைக்குப் போய் வந்ததில் செண்பகத்திற்கு அலுப்பு அதிகமாய் இருந்தது. அவள் படுத்துக் கொண்டு விட்டாள்.ஜோதியும் அவள் பக்கத்தில் படுத்துக் கொண்டு விட்டாள்.செண்பகம் படுத்தவுடனே தூங்கி விட்டாள்.அம்மா நல்ல தூங்கின பிறகு ஜோதி மெல்ல எழுந்து ஒரு பேப்பரில் நான் “என் காதலுடன் நான் ஓடிப் போறேன். என்னைத் நீங்க தேடவேணாம்” என்று மொட்டை யாய் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் துணி மணிகளை எல்லாம் ஒரு பையில் போட்டுக் கொண்டு மெல்ல ஓசை படாமல் கதவைத் திறந்துக் கொண்டு யாருக்கும் தெரியாத படி ஒளிந்து ஓளிந்து மெல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து விட்டாள்
நல்ல வேளை.ஸ்டேஷன் நுழை வாயிலில் சேகர் ஒரு மறைவான இடத்தில் நின்றுக் கொண்டு இருந்தான்.ஜோதி வந்தவுடன் அவளை அழைத்துக் கொண்டு போய் ப்ளாட்பாரத்தில் இருக்கும் ஒரு இருட்டான பகுதியில் நின்றுக் கொண்டு இருக்குமாறு சொல்லி விட்டு ‘டிக்கட் கவுண்டருக்கு’ப் போய் சென்னைக்கு இரண்டு ‘டிக்கட்’ வாங்கி வந்தான் சேகர்.இரவு பேசஞ்சர் வண்டி ப்ளாட்பாரத்துக்கு வந்தது.சேகர் ஜோதியையும் கூட்டிக் கொண்டு வேகமாகப் போய் அவர்களுக்கு எதிரே இருந்த பெட்டியில் சட்டென்று ஏறிக் கொண்டான்.சேகர் தன் பையையும் ஜோதி பையையும் சீட்டுக்கு மேல் இருந்த பலகையில் வைத்து விட்டு கீழே இருந்த சீட்டில் ஜோதியுடன் உட்கார்ந்துக் கொண்டான்.பத்து நிமிஷம் கழித்து வண்டி மெல்ல கிளம்பியது.
காலையில் சென்னை வந்து சேர்ந்தார்கள் இருவரும்..பிறகு ஒரு ஆட்டோவைப் பிடித்து சேகர் சேத்துபட்டில் இருக்கும் அவன் அண்ணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.வாசலில் இருந்த காலிங்க் பெல்லை அழுத்தினான் சேகர்.சேகா¢ன் அண்ணி தான் வாடல் கதவைத் திறந்தாள்.சேகரையும் ஒர் வயசுப் பொண்ணையும் பார்த்த தேவிக்கு தூக்கிப் போட்டது.“அண்ணன் வீட்டுலே இல்லையா அண்ணி” என்று சேகர் கவலையோடு கேட்டான்.“உள்ளே வாப்பா” என்று சொன்னவள் தன் மச்சினன் ஒரு வயசுப் பொண்ணோடே நின்னுக் கிட்டு இருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.“என்னப்பா சேகர் யாருப்பா இந்தப் பொண்ணு” என்று கலவரத்துடன் கேட்டாள் அண்ணி தேவி. சேகர் தன் கதையை பூராவும் தன் அண்ணி தேவி இடம் சொன்னான்.
– தொடரும்