காய்க்காத பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 7,107 
 
 

அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 | அத்தியாயம் 10

“ஹே நந்தினி உண்மையாவே நீதான் பேசுறியா? ஹ்ம்ம் சரியா தான் சொல்ற. ஆனா இதுக்கு நீ ராஜேஷ சரி கட்டணுமே. ஒத்து வருவானா?”

“இல்லக்கா. ஆனா அவனுக்கு குழந்தை ஆசைய தூண்டப் போறேன். ரேவதியால அவன் ஆசைய நிறைவேற்ற முடியாது. அதவெச்சு அவன என் பக்கம் இழுத்துடுவேன்”

“ஆனா உன் திட்டத்தோட க்ளைமேக்ஸ்ல ஒரு பிரச்சினை இருக்கு. நீ குழந்தை பெத்துக்குற வரைக்கும் கூட மாணிக்கத்துக்கு தெரியாம பார்த்துக்கலாம். அப்புறம் வெளி உலகத்துக்கு சொல்லி தான் ஆகணும். அப்ப மாணிக்கம் சும்மா இருப்பானா? அந்தாளுக்கு இருக்க அதிகார வெறிக்கு உன்னையும் உன் குழந்தையையும் கொன்னுட்டு ராஜேஷ்க்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க தான் பார்ப்பான்”

“ஒரு குழந்தை தான். அதுக்கு பிறகு ராஜேஷ்க்கு குடும்ப கட்டுப்பாடு தான். அவன் விரும்பினாலும் சரி விரும்பாட்டியும் சரி. மாணிக்கம் ரொம்ப பிற்போக்கு சிந்தனை உள்ள ஆளு. அதனால Artificial Insemination பண்ண சொல்லி கூட எந்த டாக்டர் கிட்டயும் போய் நிற்க மாட்டான். ஒருவேளை இந்த முட்டி தேய்ஞ்ச வயசுல புதுசா கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து வம்சத்த விருத்தி செய்தாதா உண்டு. (கொஞ்சம் நக்கலாக) முடிஞ்சா பெத்துக்கட்டும்”

“ஹாஹாஹா”

என் அப்பா மரணத்துக்கு பிறகு நான் ரொம்ப சந்தோஷமா இருந்த நாள் அதுதான். அடுத்த நாள் ராஜேஷ் வேற ஒரு பிரச்சினைய உருவாக்கினான். அவன் டெல்லி ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசி என்னோட புரொஃபைலுக்கு ஏத்த பெரிய வேலை வாங்கி தர்றதா சொன்னான். இங்கேயே இருந்து அவன் அப்பாவுக்கு பயந்துட்டு இருக்குறத விட டெல்லி போய்ட்டா நான் நிம்மதியா இருக்கலாம்னு சொன்னான். அதுவும் ஓரே மாசத்துல டெல்லி போக தயாரா இருக்க சொன்னான். ராஜேஷ் இங்கேயும் நான் டெல்லிலயும் இருந்தா என் நோக்கம் நிறைவேறாது. அதனால என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன். ரெண்டு நாள் கழிச்சு லாவண்யா அக்கா நான் இங்கயே இருக்கவும் ராஜேஷோட அதிகமா நெருங்கி பழகவும் வேற ஒரு வழி இருக்குன்னு சொன்னாங்க.

“நான் இந்த ஊருக்கு வந்தது பணம் அடிக்க இல்ல. ஒரு குழந்தைய தத்து எடுத்துகிட்டு வெளிநாட்டுக்கு ஓடுறதுக்கு தான் என்னோட ப்ளான். அதுக்கு உண்டான ப்ராசஸஸ் முடியுற வரைக்கும் தலைமறைவா இருக்கத்தான் இங்க வந்தேன். என் வேலை இன்னும் ஏழெட்டு நாள்ல முடிஞ்சிரும். அதுக்கு அப்புறம் இங்க இருக்க மாட்டேன். என் ஆளுங்க மூலமா இதே ஏரியால பணத்தாசை உள்ள அரசியல் பிரமுகர்கள் ப்ளாக் மணிய டீல் பண்ற ஒரு ஆள கண்டுபிடிச்சேன். அவனுக்கு கொஞ்சம் பணத்தாசை காட்டி பிரச்சினைக்கு உதவி கேட்டு இருக்கேன். நாளைக்கு அவன போய் பார்க்கலாம். உன்னோட ஃப்ளாஷ்பேக்ல ராஜேஷ்க்கு சொன்ன அதே வெர்ஷன அவனுக்கும் சொல்லி இருக்கேன். அதயே நீயும் மெயின்டெய்ன் பண்ணிக்க”

“சரிக்கா”

அடுத்த நாள் நந்தாவை சந்திக்க போனோம்

நந்தா:

“உங்க ப்ளான் படி நீங்க வெளிநாடு போய்டுவீங்க. அதுக்கு அப்புறம் நீங்க 20 லட்சம் ரூபாய் பணத்தை இந்த பொண்ணோட வீட்டு பத்திரத்த கொடுத்து வாங்கிட்டு கம்பி நீட்டிட்டதா சொல்லி நான் இந்த பொண்ண இங்கயே லாக் பண்ணனும். இதுக்கு அந்த மினிஸ்டர் இன்ஃப்ளுயன்ஸ யூஸ் பண்றதுக்கு கிடைக்குற கூலி அந்த 20 லட்சம். அதுவும் இந்த பொண்ணு வீட்ட வித்து தான் வசூல் பண்ணனும். தெரியாம தான் கேட்குறேன் இதவிட பெட்டர் ஆப்சன் கிடைக்கலயா”

லாவண்யா:

“ஆமா. ராஜேஷ்க்கு இவ மேல பரிதாபம் வரணும்னா இதுதான் ஓரே வழி. நீ குடுக்குற டார்ச்சர்ல அவன் இவள தனியா விட்டு போக நினைக்கவே கூடாது. இவளுக்கு ஆறுதலா இவ கூட அதிக நேரம் இருக்கணும். அவன் ஏமாந்தா மட்டும் தான் இவளுக்கு லாபம்”

நந்தா:

“சரி அது எனக்கும் லாபம் தான். ஆனா கொஞ்சம் டீப்பா யோசிச்சு பார்த்தா இது எதோ மாமா வேலை மாதிரி இருக்கு”

லாவண்யா:

“ஏன் மாமா வேலையா மட்டும் தான் நினைப்பியா? இவளுக்கு ஒரு ஃப்ரெண்ட்டா இவ இழந்த வாழ்க்கைய மீட்டு தர்றதுக்கு செய்ற உதவியா நினைக்க மாட்டியா?”

நந்தா:

“அப்படிங்கிறீங்களா. சரி அப்படியே நினைச்சு ஒண்ணு கேட்குறேன். இவ லவ்வர் பசையுள்ள பார்ட்டினு சொல்றீங்க. அவன் நெனைச்சா இந்த பணத்த ஒரே நாள்ல தந்துடுவானே? பணம் அதிகமாக கேட்டாதான நீங்க எதிர்பார்க்குற டைம் கிடைக்கும்”

லாவண்யா:

“இவ கிட்ட என்ன சொத்து இருக்கோ அதுக்கு தான் கடன் வாங்க முடியும். Moreover நாங்க விசாரிச்ச வரை ராஜேஷ் அவன் பொண்டாட்டிக்கு தெரியாம பணம் தர முடியாது. வட்டி கட்டுனாலே அதிகம் தான்”

நந்தா:

“எனக்கும் கொஞ்சம் பணம் கூடுமேனு பார்த்தேன். சரி விடு. நோகாம பணம் வருது. அதுல எதுக்கு பேரம் பேசிக்கிட்டு. எனக்கும் பெரியவருக்கு தெரியாத ஒரு கமிட்மென்ட்ல பணத் தேவை இருக்குது. அதனால இதுக்கு ஒத்துக்குறேன். அப்புறம் இன்னொரு விஷயம் எதையும் சொதப்பாம செய்யணும். இந்தப் பொண்ண பார்த்தா பால்வாடி புள்ள மாதிரி இருக்கு. அவ காதலன் காட்டுற பாசத்துல மயங்கி சரண்டர் ஆயிட்டானு வை. நீங்களும் இவளும் எஸ்கேப் ஆயிடுவீங்க. நான் தான் மினிஸ்டர் கிட்ட மாட்டிக்கிட்டு சாவணும். பார்த்துக்கங்க”

நந்தினி:

“நீங்களே வெளியே சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன். ஏன்னா இதுதான் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்க கிடைச்சிருக்க. கடைசி வாய்ப்பு”

லாவண்யா:

“ஓகேவா?”

நந்தா:

“ஓகே. செஞ்சிடலாம்”

லாவண்யா அக்கா கிளம்புற நாள் வந்தது

“இன்னைக்கு இருந்து 4வது நாள் நான் இந்தியால இருக்க மாட்டேன். அதுக்கு அப்புறம் பிரச்சினைய ஆரம்பிங்க. நான் கெளம்பட்டுமா”

“அக்கா ஒரு விஷயம்”

“என்ன?”

“இனிமே ஒரு குழந்தையோட வாழப் போறீங்க. அதனால குடிப்பழக்கத்த விட்டுருங்க ப்ளீஸ்”

“சரி. இனிமே சந்திப்போமானு கூட தெரில. ஆனா எப்பவும் நீ நல்லா இருக்கணும்னு மட்டும் தான் நான் நினைப்பேன். நான் வர்றேன்”

அன்னைக்கு இருந்து நாலாவது நாள் பிரச்சினைய ஆரம்பிச்சோம். நானும் நிறைய வழில முயற்சி பண்ணி பார்த்தேன். ராஜேஷ் மசியவே இல்ல. அவன் கதிரவன் சார் மூலமா லாவண்யாவ தேடுறதுலயே குறியா இருந்தான். இப்படியே 3 மாசம் ஓடிருச்சு. எந்த அளவுக்கு அவன் ரேவதிய நேசிக்கிறான்னு புரிஞ்சுது. இந்த மாசம் வட்டி கட்டல. அதனால நந்தா கொஞ்சம் கெடுபிடி காட்ட ஆரம்பிச்சாரு. சம்பவம் நடந்த அந்த 18ஆம் தேதி…

“இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே ஓட்டப் போற? 3 மாசம் ஓடிருச்சு. போன மாசம் வரைக்கும் வட்டியாச்சும் வந்தது. இந்த மாசம் அதுவும் இல்ல. தேவைக்கு யூஸ் பண்ணிட்டு கலட்டி விட பார்க்குறியா?”

“அய்யய்யோ அப்படி எதுவும் இல்ல. ராஜேஷ் ரேவதிக்கு தெரியாம பணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கான். அவன் கிட்ட சொல்லி நாளைக்கே வட்டி கட்டிடுறேன்”

“உன் வட்டி எவனுக்கு வேணும். நீ தர்றேனு சொன்ன பணத்த நம்பி நான் வேற ஒரு வேலைல பெரியவர் பணத்த போட்டேன். பெரியவர் கேட்கும் போது பணம் இல்லனா என்னை குடும்பத்தோட காலி பண்ணிடுவாரு. உனக்கு துணை போனதுக்கு நான் குடும்பமா பரலோகம் போக முடியாது. எனக்கு பணம் அவசரம். உனக்கு இடைஞ்சலா இருக்குறது உன் ஆளோட பொண்டாட்டி தான. இன்னைக்கு நைட்டு அவ வீட்டுக்கு பக்கத்து வீட்டுல தான் நான் இருப்பேன். சத்தமில்லாம முடிச்சிடுறட்டுமா?”

“ஐய்யய்யோ கொலையா?”

“பின்ன அறுத்து போட்டா ஈஸியா முடியிற வேலை இது. பொம்பளைங்க உங்க பேச்ச கேட்டு தேவையில்லாம வளர்ந்துட்டு இருக்கு”

“இன்னைக்கு ஒரு நைட் பொறுத்துக்கங்க. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்றேன்”

“என்ன பண்ண போற?”

“ராஜேஷ நைட் என் வீட்டுல தங்க வெச்சு செடக்டிவ் பில்ஸ் கொடுக்க போறேன்”

“அப்படின்னா?”

“அது ஒரு மருந்து. அத எப்படி சொல்றது?”

“ஓ.. ஓகே ஓகே புரியுது”

“நீங்க வட்டி தர்லன்னு என்னை கடத்தி விற்கப் போறேன்னு மிரட்டினதா ராஜேஷ் கிட்ட சொல்லி தான் நைட் இங்க தங்க வைக்கப் போறேன். நீங்களும் அதையே மெயின்டெய்ன் பண்ணிக்கங்க”

“சரி. ஒருவேளை இது சக்சஸ் ஆகாது ரேவதிய கொலை பண்றதுன்னு முடிவு பண்ணா இன்னைக்கே சொல்லிடு. இவ்வளவு ஈஸியான சந்தர்ப்பம் அமையாது. ஏன்னா அந்த ரேவதி பொண்ணுக்கு எதோ தூக்கம் வராத வியாதி இருக்காம். ராத்திரி நேரத்துல மாத்திரை சாப்பிட்டு தூங்கணும்னு நினைப்புலயே கதவ பூட்ட மறந்துடுமாம். வேலைக்கார பொண்ணு தான் எல்லா கதவை பூட்டி வைக்குமாம். இப்ப அந்த பொண்ணு வேலைல இல்ல. புது வேலைக்காரி வர்றதுக்கு முன்னாடி ரேவதிய கொன்னாதான் உண்டு. அதனாலதான்…”

“ஹலோ ஹலோ. நிப்பாட்டுங்க. நான் தான் சொல்றேன்ல அதெல்லாம் தேவை இல்லன்னு. இப்ப ராஜேஷ் கிட்ட நீங்க மிரட்டினதா சொல்லி நைட் என் வீட்டுல தங்க சொல்லப் போறேன். உங்களுக்கு அவன் ஃபோன் பண்ணா கொஞ்சம் ஹார்ஷாவே பேசுங்க”

“சரி சரி. ப்ளான்ல எதாவது சேஞ்ச் இருந்தா மிஸ்டு கால் மட்டும் பண்ணு. ஏன்னா நான் இங்க ஃபேமிலியோட இருப்பேன்”

“ஹ்ம்ம்”

பேசிக்கிட்டபடி எல்லாம் நடந்துட்டு இருந்தது. ஆனா ராத்திரி 8 மணிக்கு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த செய்தி வந்தது. ரேவதி கர்ப்பம். இது நடந்தா மாணிக்கம் வாழ்க்கையில எல்லாமே சரியா இருக்கும். என் திட்டம் முழுசா பாழாகிடும். அந்த நிமிஷமே ரேவதி சாகணும்னு முடிவு பண்ணேன். ராஜேஷ்க்கு குடுக்குற பால்ல செடக்ஷன் பில்ஸுக்கு பதில் கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஸ்லீப்பிங் பில்ஸ் கலந்து குடுத்தேன். ராஜேஷ் தூங்கினதும் நந்தாவுக்கு மிஸ்டு கால் குடுத்தேன். அவரும் கால் பண்ணாரு.

“சொல்லுமா. ப்ளான்ல என்ன மாற்றம்?”

“ரேவதி உயிரோட இருக்கக் கூடாது”

“இதத்தான் நான் அப்பவே சொன்னேன். சரி விடு நான் பார்த்துக்குறேன்”

“ஹலோ ரேவதி உயிரோட இருக்கக் கூடாதுன்னு தான் சொன்னேன். கொலை பண்ண சொல்லல”

“நம்ம கொலை பண்ணாம அவளேவா சாவா?”

“ஆமா. சொல்றத சரியா செஞ்சா அவளே செத்துடுவா”

“என்ன சொய்யணும்?”

“என் வீட்டுக்கு வா சொல்றேன்”

“சரி வர்றேன்”

நந்தா வீட்டுக்கு வந்தார். அவரோட ஃபோன்ல ஒரு வீடியோ எடுத்து குடுத்தேன். கூடவே ராஜேஷ் கிட்ட இருந்த வீட்டு சாவியும் குடுத்து என்ன செய்யணும்னு சொல்லி அனுப்பி வெச்சேன். இதுக்கு மேல நடந்தத என்னை விட நந்தாவால தான் தெளிவா சொல்ல முடியும்

கவிதா:

“சொல்லுங்க ஃபைனான்சியர் சார். சொல்டா டேய்”

நந்தா மீதி ஃப்ளாஷ்பேக் சொல்ல தொடங்குகிறான்

நான் நந்தினி வீட்டுல இருந்து கிளம்பி சேகர் வீட்டுக்கு வந்தேன். பத்து மணிக்கு மேல சேகர் வீட்டு மொட்டை மாடியிலிருந்து குதிச்சு ரேவதி வீட்டுக்குள்ள நுழைஞ்சேன். உள்ள பெட்ரூம்ல ரேவதி ஏதோ மாத்திரை அட்டைய கைல வெச்சுகிட்டு பார்த்துட்டு இருந்தாங்க. அப்ப தடாலடியா உள்ள நுழைஞ்சு கத்திய காட்டுனேன். ஆனா அந்த பொண்ணு பயப்படவே இல்ல. சிரிச்ச முகத்தோட உட்கார்ந்துட்டு இருந்தது. எனக்கு தான் அந்த பொண்ண பார்த்து பயமா இருந்தது.

“எதுக்காக கைல கத்திய வெச்சு கிட்டு இப்படி பயப்படுறீங்க?”

“நீ எப்படி கத்திய காட்டியும் பயப்படாம இப்படி சிரிச்ச முகமா இருக்க? அதச் சொல்லு மொதல்ல”

“இங்க என்னை காப்பாத்த யாரும் இல்ல. நான் கஷ்டப்பட்டு அக்கம் பக்கத்து ஆளுங்கள கூப்பிடவும் இப்ப என் குரலுக்கு தெம்பில்ல. ரொம்ப நேரம் இங்க இருந்து நீங்க தேவை இல்லாத சிக்கல்ல மாட்டிக்காம உங்களுக்கு என்ன வேணுமோ அத எடுத்து கிட்டு போய் சந்தோஷமா இருங்க”

எனக்கு மிரட்ட கூட வார்த்தை வரல. உண்மைய சொன்னா நான் தான் மிரண்டு போய் இருந்தேன்

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *