காய்க்காத பூக்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 7,412 
 
 

அத்தியாயம் 6 | அத்தியாயம் 7 | அத்தியாயம் 8

கதிரவன்:

“மேடம் என்ன பிரச்சினை?”

கவிதா:

“நந்தா பத்தி கேஸ் ரெக்கார்ட்ஸ்ல வரக் கூடாதாம். அப்படி செய்ய முடியாட்டி கேஸ சூசைட்னு க்ளோஸ் பண்ணனுமாம். மேலிடத்து உத்தரவு”

ராஜேஷ்:

“மேடம் நீங்க கேஸ எப்படி முடிச்சாலும் பரவால்ல. ஆனா ப்ளீஸ் என் ரே’வ கொன்னது யாருன்னு மட்டும் கண்டுபிடிச்சு சொல்லுங்க. அவன நான் டீல் பண்ணிக்குறேன்”

கவிதா:

“கேஸ உடனே க்ளோஸ் பண்ண சொல்லல ராஜேஷ். அவங்களுக்கு பிரச்சினை வரும்’னாதா சூசைட்னு மாத்த சொல்லி இருக்காங்க. எனக்கு ஒரு 2 நாள் டைம் குடுங்க. என்னால முடிஞ்சத ட்ரை பண்ணி பார்க்குறேன்”

ராஜேஷும் நந்தினியும் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

கவிதா:

“ஃபோன் கால்ஸ் லிஸ்ட், சிம் லொகேஷன்ஸ், ஸ்டேட்மெண்ட்ஸ், CCTV ஃபுட்டேஜ்ஸ். இதத் தவிர வேற எதுவும் இல்ல இந்த கேஸ்ல. முட்டி மோதி நமக்கு கிடைச்ச ஓரே வழியிலயும் மேற்கொண்டு போக முடியாது”

மணிகண்டன்:

“நந்தினி சொல்ற எல்லாத்தையும் ராஜேஷ் வேணா நம்பலாம். நீங்களுமா நம்புறீங்க மேடம்?”

கவிதா:

“அவங்களுக்குள்ள அஃபயர் இருக்குன்னு ஃப்ரூஃப் பண்ண முடியாதுனா அத நம்பாம இருக்கலாம். ஆனா அவ தான் வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ண சொல்லி மொத்தமா ஆஃப் பண்ணிட்டாளே. ஏன் தப்பிக்க சும்மா அடிச்சு விட்டு இருப்பானு நினைக்குறியா?”

மணிகண்டன்:

“இல்ல மேடம். கண்டுபிடிக்க முடிஞ்ச விஷயத்துல பொய் சொன்னா மாட்டிக்குவோம்னு அவங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கு. என் சந்தேகமே அது உண்மை’ன்ற அடிப்படையில தான். இது தான் நம்ம சந்தேகம்’னு வரும் போது இந்த விஷயங்கள ஓபன் பண்ணனும்னு தெளிவா ப்ளான் பண்ண மாதிரி இருக்கு”

கவிதா:

“கதிர் சார் இவ்ளோ நாள் நம்ம கூடவே ஷெர்லாக் ஹோம்ஸ் இருந்து இருக்கார். நம்ம தான் யூஸ் பண்ணிக்காம இருந்து இருக்கோம். சரி நமக்கு பாக்கி இருக்கிறது என்ன?”

கதிரவன்:

“மேடம் இப்ப மிச்சம் இருக்குறது நந்தினி மட்டும் தான். நந்தினி பத்தி நமக்கு தெரியாதது எல்லாம் ஸ்க்ரீன் பண்ணா ஒரு முடிவுக்கு வந்துடலாம்”

கவிதா:

“ஓகே. நந்தினி பத்தி கம்ப்ளீட்டா தேடுங்க. 2 நாள் தான் டைம். திங்கட்கிழமை officially or unofficially கேஸ் சால்வ் ஆகி இருக்கணும்”

கதிரவனும் மணிகண்டனும் சல்யூட் அடித்து விட்டு வெளியே சென்றனர்.

மார்ச் 25 திங்கட்கிழமை. காலை 9 மணிக்கு ஸ்டேஷனில் கதிரவனும் மணிகண்டனும் CCTV ஃபுட்டேஜ்களை பார்த்து கொண்டு இருந்தார்கள்.

“கதிர் சார். இந்த ஆள் யாரு?”

“இவர் ரேவதி வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்க ஜானகியோட புருஷன் சேகர்”

“ஹெல்மெட் போட்டு இருக்காரு. இருந்தும் அவர் தான்னு எப்படி சொல்றீங்க?”

“அவரோட வண்டி. அவர் போட்டு இருக்க நைட் பேண்ட். அப்புறம் அவரோட உடல்வாகு இதெல்லாம் வச்சு தான் சொன்னேன்”

“ஒரு நிமிஷம் சார்”

இன்னொரு ஃபுட்டேஜை ஓட விடுகிறான்

“இதுல இருக்க குடும்பம் யார் சார்?”

“அவங்க சேகர் வீட்டுக்கு வந்த விருந்தாளியா இருக்கும். அடுத்த நாள் சேகர் ஜானகி வீட்டுல எதோ விசேஷம். அதுக்கு வந்து இருப்பாங்க”

“சார் நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்துடுறேன். லன்ச்’க்குள்ள கில்லர் யாருன்னு கண்டுபிடிச்சிடலாம்”

சொல்லிட்டு வேகமாக கிளம்பி போனான் மணிகண்டன். கதிரவன் எதுவும் புரியாமல் அந்த CCTV ஃபுட்டேஜையே பார்த்து கொண்டு இருந்தார்.

11 மணிக்கு கவிதா ஸ்டேசனுக்கு வந்தார்.

“கதிர் சார் எனி இம்ப்ரூவ்மெண்ட்ஸ்?”

“மேடம். நந்தினி விவகாரத்துல எல்லாமே உண்மையா தான் இருக்கு. கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்ல. நம்ம ஷெர்லாக் ஹோம்ஸ் தான் CCTV ஃபுட்டேஜ் பார்த்துட்டு எதோ க்ளூ கிடைச்சு இருக்குன்னு சொல்லிட்டு வெளிய போய் இருக்காரு. லன்ச்க்கு முன்னாடி கில்லர் ரிவீல் பண்றதா சொல்லி இருக்காரு”

“அப்படியா? ஃபோன் பண்ணுங்க”

கதிரவன் மணிகண்டனுக்கு ஃபோன் செய்கிறார்.

“ஹலோ”

“நான் கதிரவன் பேசுறேன்பா. போன விஷயம் என்னாச்சு? கில்லர் யாரு?”

“சார் இன்னும் ½ மணிநேரத்துல வேலை முடிஞ்சிடும். நேர்லயே வந்து சொல்றேன். இப்ப ஃபோன கட் பண்றேன்”

சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்கிறான்.

“மேடம் இன்னும் ½ மணிநேரத்துல வேலை முடிஞ்சிடும். நேர்லயே வந்து சொல்றேன்னு சொல்லிட்டு ஃபோன கட் பண்ணிட்டான்”

“சரி வரட்டும்”

12 மணிக்கு மணிகண்டன் ஸ்டேசன் வந்து சேர்ந்தான்

கவிதா:

“என்ன ஷெர்லாக் ஹோம்ஸ் கில்லர் யாரு?”

மணிகண்டன்:

“சொல்றேன் மேடம். ஃபர்ஸ்ட் இந்த CCTV ஃபுட்டேஜ் பாருங்க. இந்த டூவீலர்ல போற குடும்பம் தான் 18ஆம் தேதி கதிர் சார் ஏரியாவுல இருந்த வெளியாட்கள். இதுல இந்த நபர் ஹெல்மெட் போட்டு இருக்குறதால முகம் தெரியல. அப்புறம் இந்த ஃபுட்டேஜ்ல இன்னொரு நபர் பைக்ல ஏரியாவ விட்டு வெளில போயிட்டு 50 மினிட்ஸ் அப்புறம் எதோ பொருட்கள் வாங்கிட்டு திரும்ப வந்து இருக்காரு. கதிர் சார கேட்டா இவர் ரேவதி வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்க சேகர்னு சொல்றாரு. ஆனா இது சேகர் இல்ல”

கதிரவன்:

“சேகர் இல்லன்னா வேற யாரு?”

மணிகண்டன்:

“இந்த ஃபர்ஸ்ட் ஃபுட்டேஜ்ல அந்தாளோட கைல பாருங்க. அதேபோல நீங்க சேகர்’னு சொல்ற ஆள் ரிட்டர்ன் ஆன ஃபுட்டேஜ்ல அவனோட ரைட் ஹேண்ட் பாருங்க”

கவிதா:

“எதோ பெருசா கோடு மாதிரி இருக்கு. ரெண்டு பேரும் ஒரே ஆள்”

கதிரவன்:

“ஏப்பா இதுக்காகவா ஓடுன. வீட்டுக்கு வந்த விருந்தாளி சேகரோட நைட் பேண்ட் போட்டு இருப்பாரு”

மணிகண்டன்:

“கரைக்ட். ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போது அப்படி நினைச்சு தான் இந்த ஃபுட்டேஜ தவற விட்டுட்டோம். அதனாலதான் அந்த குடும்பத்த பத்தி நம்ம யோசிக்கவே இல்ல”

கவிதா:

“சரி இப்ப தெரிஞ்சு என்ன ஆகப் போவுது?”

மணிகண்டன்:

“மேடம் உங்களுக்குமா புரியல. இந்த ஃபோட்டோ பாருங்க”

கவிதா:

“அதே ஃபேமிலி. கைல நீளமா வெட்டுப்பட்ட அடையாளம். இவன் கொலை நடந்தப்ப அங்க தான் இருந்து இருக்கானா?”

கதிரவன்:

“இவனுக்கு என்ன மோட்டிவ் இருக்கு?”

மணிகண்டன்:

“மோட்டிவ் இருக்க ஆள் என்கேஜ் பண்ணி இருக்காங்க சார்”

கவிதா:

“வாட்??”

மணிகண்டன்:

“இது அவனோட ஃபோன் கால் டீடெயில்ஸ். மார்ச் 18 ஈவ்னிங் இந்த நம்பருக்கு 4 தடவை கால் பண்ணி இருக்கான். 4 தடவையும் இவன் தான் கால் பண்ணி இருக்கான். ஆனா 8:45க்கு மட்டும் அந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்துருக்கு. பதிலுக்கு இவனும் கால் பண்ணி இருக்கான். அப்புறம் ஃபோன் பண்ண நபரப் போய் மீட் பண்ணி இருக்கான். அவன் அந்த ஏரியாவுக்கு போனதுக்கான CCTV ஃபுட்டேஜ் கூட இருக்கு. திரும்ப வந்து ரேவதிய மிரட்டி பில்ஸ் எடுத்துக்க வெச்சு இருக்கான். அந்த டைம் ஒரு கால் பண்ணி இருக்கான். இவனுக்கு இன்னொருத்தர் மாதிரி எழுதுற திறமையும் இருக்கு. எல்லாம் மேட்ச் ஆகுது. இவன என்கேஜ் பண்ணது இவங்க தான்”

கவிதா:

“மை காட். உண்மையிலேயே நீ ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் தான் மணி”

அப்போது கவிதாவிற்கு ஒரு ஃபோன் கால் வருகிறது

“ஹலோ”

“…..”

“சொல்லுங்க சார்”

“…..”

“ஓகே சார்”

“…..”

“ஷ்யூர் சார்”

ஃபோன் கால் கட் செய்யப்படுகிறது

கவிதா:

“மேல இருந்து ஆர்டர். 2 பேரையும் கஸ்டடில எடுங்க. அப்படியே ராஜேஷ விசாரணைக்கு வரச் சொல்லுங்க”

மணிகண்டன்:

“அதுக்குள்ள அவங்களுக்கு எப்படி மேடம் தெரிஞ்சது?”

கவிதா:

“எதோ ஒரு மோசடி நடந்து இருக்காம். அதுல நம்ம தேடுற இந்த கொலைகாரன் A1. உடனே கஸ்டடியில எடுக்க சொல்றாங்க. ப்ரொசீட் பண்ணுங்க”

மாலை 3 மணி. கவிதா ராஜேஷிடம் தனது விசாரணையை தொடங்கினார்

கவிதா:

“ராஜேஷ் மார்ச் 18ஆம் தேதி பெங்களூர் போறதா ரேவதி கிட்ட சொல்லிட்டு வீட்ட விட்டு கிளம்பினதுல இருந்து ரேவதி இறந்துட்டதா உங்களுக்கு தெரியிற வரைக்கும் என்ன நடந்ததுனு தெளிவா சொல்றீங்களா?”

ராஜேஷ்:

“அன்னைக்கு சாயங்காலம் 5 மணி சுமார்க்கு வீட்டுல இருந்து கிளம்பினேன் மேடம். அரை மணி நேரத்துல நந்தினி வீட்டுக்கு போய்ட்டேன். கொஞ்ச நேரத்துல நந்தா கிட்ட இருந்து நந்தினிக்கு மிரட்டல் கால் வந்தது. அப்ப நான் கொஞ்சம் ஹார்ஷா பேசினதும் ஃபோன கட் பண்ணிட்டாரு. அதுக்கு பிறகு கால் பண்ணல. அப்புறம் நானும் நந்தினியும் பேசிட்டு இருந்தோம். 7 மணிக்கு நந்தினி டின்னர் ரெடி பண்ண போய்ட்டா. நான் டிவி பார்த்துட்டு இருந்தேன். டின்னர் சாப்பிட்டுட்டு இருக்கும் போது ரேவதி ஃபோன் பண்ணி அவ கர்ப்பமா இருக்குறதா சொன்னா. இன்ஃபேக்ட் அவ சொல்ல வந்தத நான் முழுசா கூட சொல்ல விடல. மே பீ கர்ப்பமா இருக்குறதா நான் தப்பா கூட புரிஞ்சிட்டு இருந்து இருக்கலாம். அதுக்கு அப்புறம் அம்மாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லி அவங்கள ரேவதி கூட போய் இருக்க சொன்னேன். அப்புறம் டின்னர் முடிச்சிட்டு எப்பவும் பால் சாப்பிடுவேன். நந்தினி பால் காய்ச்சி எடுத்துட்டு வந்தா. பால் குடிச்ச பிறகு தூக்கம் வந்ததால் நான் தூங்க போய்ட்டேன். அப்புறம் அடுத்த நாள் காலைல ரொம்ப லேட்டா தான் எழுந்தேன். எப்படியும் 11 மணி கிட்ட இருக்கும். அப்புறம் தான் ரே இறந்ததே எனக்கு தெரியும்”

கவிதா:

“இடைல எழுந்துக்கவே இல்லயா?”

ராஜேஷ்:

“இல்ல மேடம். காலைல தான் எழுந்தேன்”

கவிதா:

“தூங்க போகும் போது எத்தனை மணி இருக்கும்?”

ராஜேஷ்:

“சரியா ஞாபகம் இல்ல மேடம். எட்டரை மணிக்கு மேல இருக்கும்”

கவிதா:

“மணி அவங்க 2 பேரையும் கூட்டிட்டு வா”

நந்தினியும், நந்தாவும் கையில் விலங்குகள் பூட்டப்பட்டு அறைக்குள் அழைத்து வரப்பட்டனர்

ராஜேஷ்:

“மேடம் நந்தினிய எதுக்கு கை விலங்கோட”

கவிதா:

“அமைதியா இருங்க ராஜேஷ். விசாரணை முடிவுல உங்களுக்கே புரியும்”

ராஜேஷ் ஒன்றும் புரியாமல் சேரில் உட்கார்ந்தான்.

கவிதா:

“சொல்லுங்க நந்தினி எதுக்காக இந்த கொலை? உங்கள ரொம்ப நம்புற ஒரு அப்பாவிய சுத்தி எதுக்கு இத்தனை சதி? ராஜேஷ அடைய இதெல்லாம் செய்ததா பொய் மட்டும் சொல்லிடாதிங்க”

நந்தினி:

“எனக்கு நடந்த கொடுமைகள் தான் என்னை இப்படி செய்ய வெச்சது. சிலது திட்டம் போட்டு செஞ்சேன். சிலது வேற வழியில்லாம செஞ்சேன். அதுல ஒண்ணு ரேவதி கொலை. இது எல்லாமே எங்க ஊர்ல இருந்து ஆரம்பிச்சது”

நந்தினி தனக்கு நடந்தவைகளை கூறத் தொடங்குகிறாள்

தொடரும்….

Print Friendly, PDF & Email

1 thought on “காய்க்காத பூக்கள்

  1. செம்ம ஜம்பு.. மிக மிகத்தேர்ந்த எழுத்தாளர் நீங்கள்..! வாழ்த்துகள்..!

    நாவலே எழுதலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *