காய்க்காத பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 7,793 
 
 

அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4

“எத வெச்சு கொலைக்கு வாய்ப்பு அதிகம்’னு சொல்றீங்க?”

“ஃபிங்கர் பிரிண்ட்ஸ் வெச்சு தான்”

“இப்ப தான் தேர்ட் பர்சன் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எதுவும் கிடைக்கலனு சொன்னீங்க”

“ஆமா. இங்க ஃபிங்கர் பிரிண்ட்ஸ் இல்லங்கிறது தான் லீடே. ரேவதி மரண வாக்குமூலம் எழுதுன A4 ஷீட்ல வெறும் கையால ஹேண்டில் பண்ணதுக்கான எந்த ட்ரேஸஸும் இல்ல. பொதுவா பேப்பர்ல இந்த மாதிரி கை ரேகை துல்லியமா எடுக்குறது கஷ்டம் தான். அத வெச்சு கோர்ட்ல வாதாடவும் முடியாது. ஆனா இவ்வளவு க்ளீனா இருக்க வாய்ப்பே இல்ல”

“சார் Manufacturingல ஆரம்பிச்சு retailer வரைக்கும் யாருமே ஹேண்டில் பண்ணாம இருந்து இருப்பாங்களா என்ன?”

“Manufacturing sideல பண்டல் பண்ற கவர் தவிர வேற எதுலயும் Fingerprintsக்கு வாய்ப்பு இல்ல மேடம். அந்த பண்டல் ஓபன் பண்றப்ப தான் மனித கைகள் அந்த பேப்பர தொடும். அந்த ரூம்ல புதுசா ஓபன் பண்ண பேப்பர் பண்டல் இருந்தது. அதுல இருந்து ஒரு ஷீட் தான் எடுத்து இருக்காங்க. அதுவுமில்லாம பேப்பர் ஒரு பேட்ல கிளிப் பண்ணி தான் எழுதி இருக்காங்க. அதனால எதாவது மூலையில Fingerprints கிடைச்சு இருக்கணும்”

“So கொலைகாரன் மட்டும் தான் அந்த பேப்பர ஹேண்டில் பண்ணி இருக்கான் with gloves or something”

“ஆமா. அதுபோக அந்த ரூம்ல உள்ள ஒரு ஃபைல் நிறைய கவிதைகள் இருந்தது. எல்லாமே ஒரு பக்க கவிதைகள். A4 ஷீட்ல பிரிண்ட் பண்ணி இருக்காங்க.. மொத்தம் 66 கவிதைகள். இதுல இன்னொரு விஷயம் அந்த 66 கவிதைகளும் ஒரு நோட் புக்ல Hand Writtenலயும் இருக்கு. அந்த கவிதைகள் யார் எழுதுனதுன்னு தெரிஞ்சா மேற்கொண்டு ப்ரொசீட் பண்ணலாம்”

“கவிதை எழுதின கையெழுத்தும் லெட்டர்ல இருக்க கையெழுத்தும் ஒரே மாதிரி இருக்கானு செக் பண்ணீங்களா?”

“பார்வைக்கு ஓரே மாதிரி தான் தெரியூது. ஆனா கன்ஃபார்மா சொல்ல முடியல. நம்ம ஹேண்ட் ரைட்டிங் எக்ஸ்பர்ட்ஸ் கிட்ட குடுத்து செக் பண்ணனும். அதுக்கு முன்னாடி ராஜேஷ் ரேவதி 2 பேர்ல யார் கவிதை எழுதுவாங்கனு விசாரிச்சு சொல்லுங்க. ரேவதி எழுதினதுனு தெரிஞ்சா கையெழுத்த கம்பேர் பண்ணிக்கலாம்”

“ஓகே சார். நான் விசாரிச்சிட்டு உங்களுக்கு கால் பண்றேன்”

கவிதா ஃபோனை கட் செய்து விட்டு ஏட்டு கதிரவனை அழைத்தார்.

“கதிர் சார். ரேவதி வீட்டுல எத்தனை பேர் இருப்பாங்க? ஐ மீன் ரெகுலரா?”

“ராஜேஷ் ரேவதி அப்புறம் அந்த வீட்டுல வேலை செய்ற ஒரு பொண்ணு. அந்த பொண்ணு ரேவதியோட ஊர்க்கார பொண்ணு தான். ரேவதியோட அப்பா அம்மா தான் வீட்டு வேலைக்கு உதவியா இருக்கட்டும்னு அனுப்பி வெச்சாங்க. சம்பவம் நடக்குறதுக்கு 2 நாள் முன்னாடி தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்கனு அவங்க வீட்டுல இருந்து கூட்டிட்டு போய்ட்டாங்க. அந்த பொண்ணு இருந்து இருந்தா கூட ரேவதிக்கு இந்த நிலை வந்து இருக்காது”

“அந்த வீட்டுல இருந்த 3 பேர்ல ஒருத்தர் உயிரோட இல்ல. மீதி 2 பேரும் எப்படிபட்டவங்க?”

“ராஜேஷ பொறுத்தவரை நல்ல மனுஷன். என்ன பணம் சம்பாதிக்க அதிக நேரம் வீட்டுல இருக்க மாட்டாரு. வசதி இல்லாத குழந்தைகள் படிப்புக்கு எல்லாம் தாராளமா உதவி பண்றவரு. அந்த வேலைக்கார பொண்ணும் நல்ல பொறுப்பான பொண்ணு தான். அந்த பொண்ணோட குடும்பமே ரேவதி குடும்பத்துக்கு விஸ்வாசமான மனுசங்கனு ரேவதியே ஒரு தடவ சொல்லி இருக்காங்க’

“So அவங்க 2 பேரும் Suspects listல வர மாட்டாங்கனு சொல்றீங்க”

“Suspects listஆ? அப்ப கொலைனு கன்ஃபார்ம் ஆயிடுச்சா மேடம்?”

“அது நீங்க சொல்ற பதில்ல தான் இருக்கு கதிர் சார். ரேவதி எப்படிபட்ட பொண்ணு?”

“ரேவதி தங்கமான பொண்ணு மேடம். யார் மனசையும் புண்படுத்துற மாதிரி ஒரு வார்த்தை கூட பேச மாட்டாங்க. ராஜேஷ் மாதிரியே ரேவதியும் இல்லாதவங்க இயலாதவங்கனு எல்லாருக்கும் உதவி செய்ற குணம் உள்ள நபர் தான்”

“So வெளி உலகத்துக்கு ரேவதி ரொம்ப நல்லவங்க ரைட்”

“அந்த பொண்ணுக்கு எல்லாம் இன்னொரு பக்கம் இருக்க வாய்ப்பே இல்ல மேடம். அந்த பொண்ணு கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா கொல்ல வர்றவன் கூட கொல்லாம போய்டுவான்”

“கதிர் சார் அதுதான் இன்னும் ஆபத்து. சரி ரேவதியோட தினசரி வேலைகள் என்ன?”

“வேலைன்னு சொன்னா புருஷன் சம்பாதிக்கும் பணத்த சரியானபடி முதலீடு பண்றது மட்டும் தான். வேற ஒண்ணும் இல்ல”

“அது சம்பந்தமா யார் எல்லாம் அவங்க கூட காண்டாக்ட்ல இருப்பாங்க”

“ஆடிட்டர் சுந்தரமூர்த்தி. எல்லா இன்வெஸ்ட்மென்ட்டும் அவர் மூலமா தான் நடக்கும். இவ்ளோ ஏன் அவங்களோட செகண்ட் அக்கவுண்ட் கூட சுந்தரமூர்த்தி தான் மெயின்டெய்ன் பண்றாரு”

“இப்ப தான் ரொம்ப நல்லவங்க’னு சர்ட்டிபிகேட் குடுத்தீங்க. இப்ப ப்ளாக் மணி வெச்சு இருக்குறதா சொல்றீங்க”

“உலக உத்தமரா இருந்தாலும் அரசு அதிகாரிகளுக்கு சல்யூட் அடிச்சு தான மேடம் ஆகணும்”

இன்ஸ்பெக்டர் கவிதா ஏட்டு கதிரை முறைக்க

“அய்யய்யோ நான் எல்லாரையுமே சொல்லல மேடம். எல்லாருமே உங்கள போல நல்லவங்களா இருக்குறதில்லயே”

“ஹாஹாஹா. ஹ்ம்ம் சரி அவங்களுக்கு இடையில சட்டவிரோத பண பரிமாற்றம் இருக்கு. அவரையும் Suspects listல சேர்த்துங்க. மேல சொல்லுங்க. இன்னும் யார் எல்லாம் அவங்க காண்டாக்ட்ல இருக்காங்க”

“அப்புறம் ராஜேஷ் ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்காரு மேம். அவர் பேர் சுரேஷ். இதுக்கு முன்னாடி ராஜேஷும் அவரும் சேர்ந்து தான் பிஸினஸ் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா சுரேஷ் கல்யாணம் ஆன பிறகு பங்க பிரிச்சிக்கிட்டு தனியா தொழில் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. காரணம் கூட்டு தொழில் பண்றதுல அவரோட பொண்டாட்டி யுவராணிக்கு விருப்பம் இல்ல. ராஜேஷும் சுரேஷ் நிலைமைய புரிஞ்சிக்கிட்டு பங்கு பிரிச்சு குடுத்துட்டாரு. ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் அவங்க நல்ல ஃப்ரெண்ட்ஸா தான் மேடம் இருக்காங்க. தொழில்லயும் சரி சம்பாதிச்ச பணத்த முதலீடு பண்றதுலயும் சரி ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப உதவியா இருப்பாங்க. அந்த வகையில ரேவதி சுரேஷ்க்கு இடையில காண்டாக்ட் உண்டு”

“இவங்களுக்கு இடைல பிரச்சினைனு எதுவும் இல்லயா?”

“பிரச்சினைனு பார்த்தா சுரேஷ் வொய்ஃப் தான் மேம். பண விஷயத்துல அந்த பொண்ணு திருப்தி அடையவே மாட்டா. ராஜேஷ் சுரேஷ் ரெண்டு பேரும் தனித்தனியா தொழில் பண்ண ஆரம்பிச்சு 1½ வருசத்துக்கு மேல ஆகுது. ஆனா பங்கு பிரிக்கும் போது தன் புருஷன ஏமாத்திட்டதா இன்னும் நம்பிட்டு இருக்கு அந்த பொண்ணு”

“So இங்க Suspects listல சேருறது யுவராணி. மோடிவ் பெருசா இல்ல. ஆனா Psychological obsession எதாவது காரணமா இருக்கானு தெரிஞ்சிக்கணும். வேற”

“இதுக்கு அப்புறம் யாரு. ஹான் ராஜேஷ் சொந்தக்காரங்க பாலகிருஷ்ணன் உமா மகேஸ்வரி. அப்புறம் அவங்க பொண்ணு ஜெயந்தி. ஜெயந்திக்கு இன்னும் கல்யாணம் ஆகல. சென்னையில ஒர்க் பண்றாங்க. பாலா கல்யாண மண்டப ஓனர். உமா ஹவுஸ் ஒய்ஃப். இவங்க ராஜேஷுக்கு எந்த வகையில சொந்தம்’னு தெரில. அத்தை மாமானு கூப்பிடுவார். அவ்ளோ தான் எனக்கு தெரியும். இவங்களுக்குள்ள பிரச்சினைனு எதுவும் இருக்குறதா தெரில. ஆனா உமா எப்பவும் ரேவதிய மட்டம் தட்றதுலயே குறியா இருப்பாங்க. காரணம் என்னன்னு தெரியல”

“So உமா இன்னொரு Suspect. ஆனா காரணம் இனிமே தான் கண்டுபிடிக்கணும். வேற”

“இவங்கள விட்டா எங்க தெருவுல இருக்க மனுசங்க தான் மேம் எனக்கு தெரிஞ்சு ரேவதிக்கு இருக்க காண்டாக்ட்ஸ். ஆனா அவங்க யார் கூடவும் ரேவதி குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் இருந்தது இல்ல”

“ரேவதியோட கையெழுத்து கம்பேர் பண்ண அவங்க கைப்பட எழுதுன பேப்பர்ஸ் கேட்டு இருந்தனே. கிடைச்சதா?”

“அவங்க கவிதை நோட் எடுத்துக்க சொல்லி ராஜேஷ் சொன்னாரு மேடம். ஆனா அந்த நோட் அங்க இல்ல. அத நம்ம ஃபாரன்சிக் ஆளுங்க தான் எடுத்துட்டு வந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். இத நேத்தே சொல்லி இருக்கணும். மினிஸ்டர் ரிலேடிவ் கேஸ்ல வேலையா இருந்ததுல மறந்துட்டேன். சாரி மேடம்”

“தனியா இருந்தா இப்படிபட்ட பிரச்சினைகள் தான் வரும். கான்ஸ்டபிள் மணிகண்டன கூப்பிடுங்க”

கதிரவன் மணிகண்டனை கூப்பிட சென்றார். கவிதா துண்டு சீட்டில் ஏதோ எழுதி கையில் மறைத்து வைத்து கொண்டார். கதிரவனும் மணிகண்டனும் அறைக்குள் வந்தனர்.

“மணி மர்டர் இண்வெஸ்டிகேஷனா உனக்கு ரொம்ப பிடிக்கும்ல”

“ஆமா மேடம். ஆனா நீங்க தான் எந்த கேஸும் தர மாட்றீங்க”

“கதிர் சார் கிட்ட ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க சொல்லி இருக்கேன். நீயும் ஜாயின் பண்ணிக்க”

“யெஸ் மேம்”

“ஓகே. ராஜேஷ், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, சுரேஷ், யுவராணி, பாலகிருஷ்ணன், உமா மகேஸ்வரி இவங்க எல்லாரையும் தனித்தனியா விசாரிக்கணும். அதுக்கு முன்னாடி ஜீவா சார் கிட்ட போய் Autopsy report வாங்கிட்டு வாங்க. சம்பவம் நடந்த அன்னைக்கு உங்க ஏரியாவோட எல்லா எண்ட்ரி பாயிண்ட்ல இருந்து ரேவதி வீடு வரைக்கும் உள்ள CCTV ஃபுட்டேஜ் கலெக்ட் பண்ணுங்க. இப்ப உள்ள Suspects எல்லாரோட ஃபோன் நம்பரும் சம்பவம் நடந்த நாள்ல எந்த ஏரியால இருந்தது அதோட கால் டீடெயில்ஸ்’னு எல்லாத்தையும் கலெக்ட் பண்ணுங்க. அதெல்லாம் பார்த்துட்டு அப்புறமா சஸ்பெக்ட்ஸ விசாரிக்கலாம். இந்த கேஸ் முடியுற வரைக்கும் நீங்க இதுல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ண பாருங்க. முடிஞ்சா ராஜேஷ கூட கூட்டிட்டு போய் கவிதை நோட்ல இருக்குறது ரேவதி கையெழுத்து தானானு கன்ஃபார்ம் பண்ண சொல்லுங்க”

“சரி மேம்”

“மணி ஃபர்ஸ்ட் மர்டர் கேஸ்ல. ஆல் த வெரி பெஸ்ட்” என கூறி கை கொடுக்கிறார். கை குலுக்கும் போது மணிகண்டன் கையில் துண்டு சீட்டை கதிரவனுக்கு தெரியாமல் கொடுக்கிறார். அவனும் கதிரவனுக்கு தெரியாமல் பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொள்கிறான். இருவரும் லேப் செல்ல ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறார்கள். ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என கதிரவனிடம் கூறிவிட்டு மணிகண்டன் தனியாக வந்து கவிதா கொடுத்த துண்டு சீட்டை பிரித்து பார்க்கிறான். அதில் “கதிரவனுக்கு தெரியாமல் ஃபோன் பண்ணு” என் எழுதி இருந்தது!!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *