கல்யாண காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 5,034 
 
 

சற்றே தொலைவில் நின்று காதல் தந்த போதையில் மயங்கி நின்ற பொம்மா திடீரென, ஹேய் பொம்மி… என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓட தொடங்கினான் .காலில் தென்னை மட்டை தடுக்கி குப்புற விழுந்தவனை திடுக்கிட்டு பார்த்தவளுக்கு, அவளின் அருகிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அத்தனை நேரம் தனது காதலன் பாதுகாப்பில் வானில் பறக்கும் உணர்வுடன் ஆழ்ந்திருந்த அழகு மங்கையின் முகத்தில் , திடீரென அச்சம் பற்றி உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது. அச்சப்படும் போதும் இவள் இத்தனை அழகா, நம் உலக நாக கன்னிகைகள் கூட இவள் அளவுக்கு மயக்குவதில்லையே, என்று எண்ணியதோ எண்ணவோ , அசையாமல் தொடர்ந்து அவளையே படமெடுத்து கொண்டிருக்கிறது ஒரு கருநாகம். அதிர்ச்சியடைந்த அவளது கண்கள் காதலன் பொம்மாவை தேடின, அவள் கருவிழி நகர்ந்தது தான் மிச்சம், கருநாகம் இவளை முத்தமிட எத்தனை கோடி புன்னியம் செய்தோமோ என்று எண்ணியவாரே தனது பல்லை பொம்மியவள் பொன் உடலில் பதிக்க இரண்டு அங்குல தூரத்திற்கு பின்னோக்கி நகர்த்தி, தலையின் வேகத்தை கூட்டி கொத்த சென்றது. கீழே விழுந்து கிடந்த பொம்மாவோ தனக்குள் இருக்கும் சக்தியை எல்லாம் திரட்டி பாம்பின் மீது பாய முற்பட்டான், பாம்பை அடிக்கவேண்டும் என்பதை விட, அதன் பல் தடத்தை தன் கைகளில் தாங்கிவிட வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருந்தது. ஆனால் பாவம் அவன் நின்ற தூரம் 10 அடிக்கும் மேல் இருந்ததால் அவனால் பொம்மி அருகில் இருந்த கொடிய கருநாகம் தன் விசத்தை கக்கும் முன்னர் வந்து சேர்வது கடினம் என்றே பொம்மி எண்ணினாள். அதே நேரம் திடீரென பொம்மியை தாக்குவது போல எங்கிருந்தோ வேகமாக பூப்போன்ற கரம் ஒன்று நாகத்திற்கு பின்புறம் வந்து கொண்டிருந்தது.

புது ஜோடி , எங்கையாவது வெளியே சென்றுவிட்டு வர வேண்டியது தானே என்று மாமியார் காது கேட்கும்படியாகவே கத்தினால் மச்சினிச்சி மயிலா. ஏய் உனக்கெதுக்கு இந்த பேச்செல்லாம் , ஒரு வாரத்துக்கு அவங்க நம்ம ஊர தாண்டி வெளியூர் போக கூடாது . உன் வயசுக்குண்டான பேச்சு பேசு. இரண்டாவது பிள்ளையும் திருமண வயதை அடைந்துவிட்டாள் என்று நினைத்த அம்மா வள்ளி தனது இளமை பருவத்தை நினைத்திருப்பார் போல, லேசான புன்முறுவல் உதட்டில் வந்து சென்றது. வெளியில் உட்கார்ந்து டி.வி. பார்க்கும் புதுமன தம்பதிக்கோ , உடனிருக்கும் வாயாடி மயிலாவுக்கோ இது தெரியாது. ஏன் கிழவி தான் இத பேசனுமா என்ன ! ஏன் மாமா , இப்டி ஒரு பொண்ண கட்டிட்டு வீட்டுக்குள்ளேயே அடஞ்சி கிடக்கீங்களே , ஜாலியா வெளிய போயிட்டுவாங்க என்ற மயிலாவை பார்த்து , எல்லாத்துக்கும் ஒரு காரணம் உண்டு என்று கூறி அருகிலிருந்த அழகு பதுமையை பார்த்து வெக்கமொன்றை சிந்தினான் பொம்மா. அவளது உடலோ மென் பஞ்சு போல மேலும் மென்மையாகி சிவந்தது. தனது வெட்கத்தை எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும் அவள் உடலே அதை காட்டி கொடுத்துவிடுகிறது. பாவம் அவளும் என்ன செய்வாள். ஆனால் மயிலாவுக்கோ இது உடனே புரிந்தது , அவளும் திருமண வயதில் சுற்றி திரிபவளாயிற்றே, ஆனாலும் ஒன்றுமே அறியாதவள் போல என்ன காரணமோ , என்ன சம்பிரதாயமோ போங்க என்று சொன்னவுடன் ,சற்றே திரும்பி , உதட்டில் ஒழித்துவைத்திருந்ந புன்னகையை சிந்திவிட்டு மீண்டும் தன் தலைவனை பார்க்க ஆரம்பித்தால் பொம்மி. மயிலா அளவு இல்லை என்றாலும் பொம்மியும் வாய் துடுக்கில் சளைத்தவள் இல்லை. அதானே உங்களை கட்டிகிட்டு என்ன பாடு படபோறேனோ என்று மயிலாவுக்கு தெரியாமல் தன் கழுத்தின் பின்புறம் தன் காரிருள் கூந்தலுக்குள் மறைந்திருந்த நகக்குறியை தடவிக்கொண்டே இன்ப பெருமூச்சிவிட்டாள். காயத்தை தடவி பார்த்தால் வலி தானே வர வேண்டும். இவன் தரும் காயங்கள் இன்பத்தை தருகிறதே என்று ஆச்சர்யப்பட்டாள் பொம்மி. என்ன தான் இளமை இருந்தாலும் மயிலாவால் இதை உணர இயலாது. ஆனால் பொம்மாவோ சட்டென புரிந்து கொண்டான். பொம்மியின் உடல் வெட்கத்தில் மேலும் மேலும் மெருகேறிக்கொண்டிருப்பதை கண்ட பின்னர் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதும் மயிலாவின் துடுக்குத்தனத்தை ரசிக்கும் பொம்மா , ஐயோ இவள் எழுந்து வெளியில் எங்கும் போய்வர கூடாதா என்று மனதில் வேண்டிக்கொண்டான்.

வாங்கி வைத்த பலகாரத்தில் கொஞ்சம் எடுத்து போட்டு தட்டோடு மயிலாவின் அம்மா வள்ளியும் கூடத்தில் வந்து உட்கார்ந்தார். ஆகா இவருமா என்று உள்ளுக்குள் நெளிந்தவனை மனதுக்குள்ளே கிண்டலாக சிரித்துகொண்டாள் பொம்மி. தம்பதிகள் இருவரின் முகத்திலும் பொலிவு தாண்டவமாடுவதை வள்ளி கவனிக்க தவறவில்லை. தனது மகளின் இல்லறம் இன்பமாகவே இருக்கிறது என்பதை உறுதிபடுத்திக்கொண்டு உள்ளுக்குள் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

சட்டென ,வலதுபுறமிருந்து வள்ளி ,அத இங்க கொடு என்று கையை நீட்டி பலகாரத்தை எடுக்க வந்த மயிலாவை , அம்மானு கூப்பிடு என்று சட்டென முதுகில் தட்டினாள் வள்ளி . சரி சரி ,எதுக்கு இவங்க ஒரு வாரத்துக்கு ஊர தாண்டி போக கூடாதுனு சொல்கிறாய் என்று கேட்டாள் மயிலா. அதெல்லாம் யாருக்கு தெரியும் , அந்த காலத்திலிருந்து நம் வழக்கம் அது என்றார் வள்ளி. ஒரு வாரம் என்பது ,ஒரு மாதமாக வைத்திருக்கலாம் என்று மனதுக்குள் நினைத்துகொண்டான் பொம்மா. அவனுக்கு பொற்கிண்ணம் போன்ற மனைவியின் மடியில் எப்போதும் நீந்த ஆசை. அது வீட்டை தாண்டினால் முடியுமா ?..

திடீரென எழுந்த மயிலா , ஒரு நிமிடம் தனது மார்பின் மீது , தொங்கி கொண்டிருந்த நகையை பிடித்து பல்லில் கடித்தவாரே யோசிக்க ஆரம்பித்தால், ஏதோ சிவனின் கழுத்தை அலங்கரிக்கும் ஆதிசேஷன் போலவும், மாமன்னர்களின் தலையை அலங்கரிக்கும் க்ரீடம் போலவும் , ஒரு பேரழகியின் மார்பில் தொங்கும் கர்வத்தோடு அந்த நகை மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஊரில் அழகில் பொம்மியோடு போட்டி போடும் பேரழகி மயிலா மட்டும் தான். அவள் ஒயிலாக நின்றதை பெரும் முனிவன் பார்த்தால் கூட துறவரம் துறந்து கவி பாடி காதலுற ஆரம்பித்துவிடுவான் போல. அவளது தாவனியும் ,அதற்கு தோதாக இடுப்பை சுற்றியுள்ள சங்கிலியும், அவளை ஏதோ இந்திரலோக இளவரசியாகவே காட்டியது. அவளின் இரு பாதங்களிலும் கிடந்த கொலுசுகள் கூட காதலர்கள் போல , அதிக சத்தமில்லாமல் கிசு கிசுத்தன. மெதுவாக அவள் பொற்பாதம் நகர அவள் இடையில் கட்டியிருந்த ஜரிகை வைத்த பாவாடையோ ,ஏதோ தேர் அசைவது போல அசைந்து கொடுத்து அவள் கால்களை சூழ்ந்தே சென்றது. அழகிற்கே இலக்கணம் வகுக்கும் அழகு ஒன்று அங்கே சிலை போல மட்டுமல்ல தங்கச்சிலையாகவே நின்றது.

ஒரு பெரிய கவி இல்லை என்றாலும் அழகை கண்டால் ஏதாவது ஒரு கவிதை கூறும் பொம்மாவின் கண்ணிலோ ,பொங்கி பாயும் மயிலாவின் அழகு படவில்லை, காரணம் அவன் மனம் மட்டுமல்ல உடலும் பொம்மியிடம் கட்டுண்டு கிடந்தது. ஏற்கனவே பெரும் மயக்க மருந்தை உட்கொண்டிருப்பவனுக்கு மற்றவை கண்ணுக்கு தெரியவா போகின்றது.

இப்போது இந்திர லோக இளவரசி பேச ஆரம்பித்தால். மாமா நா ஒரு ஐடியா தரவா. என்று சொல்லிவிட்டு , வள்ளி… என்று ஆரம்பித்தவள் நறுக்கென்று உதட்டை கடித்துக்கொண்டு அம்மா என்று கூப்பிட்டாள். முறைத்து பார்த்த வள்ளியை கவனிக்க தவறவில்லை மயிலா. அதேநேரம் தன் அக்கா கணவர் தன் பக்கம் திரும்பவே இல்லை என்பதையும் கவனிக்க தான் செய்தாள். அழகிற்கே உண்டான கர்வம் அவளிடமும் இருக்கத்தானே செய்யும். அதிலும் முழு தகுதியுடையவள் மயிலா. அம்மா என்று அழைத்த மயிலா , புது ஜோடி ஊரை தாண்டி தானே வெளியே போக கூடாது. ஊருக்குள் வெளியே போகலாம் அல்லவா என்றாள்.

இதை விரும்பாதவர்போல திரும்பிய வள்ளியோ அதற்கு என்ன என்று மயிலாவை அதட்டினார். இவங்க ஊர விட்டு வெளிய போக வேண்டாம். அதான் நம்ம தோட்டம் இருக்கே ,அங்க போயிட்டு சுத்தி பாத்துட்டு வரட்டும் என்றாள் மயிலா.

இதை கேட்டுக்கொண்டிருந்த பொம்மாவுக்கு என்னவோ போல் இருந்தது. எப்போதுமே ஆணின் புத்தி அவசர புத்தி தான் என்பது போல வெளியில் சென்று புல்லையும் , பூச்சியையும் பார்க்கவா கல்யாணம் பன்னோம் என்று எண்ணியவாறே யாருக்கும் தெரியாமல் உதட்டை சுழித்தான். ஆனால் பொம்மியோ புத்திசாலி. தோட்டத்தில் கூட தனிமை உருவாக்க முடியும் என நம்பினால். அது மட்டுமா திருமணத்துக்கு முன் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சந்தித்துகொண்ட முருகன் கோவிலில் அவள் கண்ட எண்ணற்ற மயில்கள் மீண்டும் அவள் கண் முன்னே வந்தன. அதே போல மயில்கள் அவர்கள் தோட்டத்திலும் நிறைந்திருக்கிறது என்பதை பொம்மி நன்றாக அறிவாள். தனது காதலின் ஆரம்பகால தினம் அந்த மயில்களால் மீண்டும் கிடைப்பது போல அவள் கனவு கண்டாள். மயில்பாறையில் காதலனின் ஸ்பரிசத்தில் கிறங்கியவள் இன்று அதையே தோட்டத்தில் பெறப்போகிறோம் என்ற எண்ணமே அவள் மனதில் தேன்துளியை சொட்டச்செய்தது. பொம்மிக்கு ஆசையிருந்தாலும் , எதோ பெயருக்கு அதெல்லாம் வேண்டாம் மயிலா, எப்படியும் அடுத்தவாரம் வெளில போக போறோம் என்ன அவசரம் என்றாள் மெல்லிய குரலில்.

ஏய், பொம்மி நான் உன் தங்கச்சிடி , அம்மாவ கூட ஏமாத்திடலாம் ,ஆனா நீ என்ன ஏமாத்த முடியாது என்று அவள் கண்களை குறும்புடன் பார்த்தாள். பொம்மியை ஆரம்பகாலத்தில் மயில்பாறைக்கு அழைத்து கொண்டு துணைக்கு வருவது மயிலா தானே, அவளுக்கு தெரியாத விசயம் பொம்மியிடம் இருப்பது நியாயமில்லை. சரி சரி , ரெடியாகு பொம்மி நாம போயிட்டு வருவோம் என்று தக்க சமயம் வந்து பொம்மியை காப்பாற்றினான் பொம்மா. எது போறீங்களோ ,மாமா நாங்களும் கூட வருவோம் என்று மயிலா சொல்லி வாயை மூடவில்லை இருவரும் அதிர்ச்சியில் ஒன்றாக மயிலாவை பார்த்து திரும்பினார்கள். மயிலா வால் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டால். மருமகனின் தர்மசங்கடத்தை போக்க வேண்டி அத்தை வள்ளியோ, மயிலாவை அதட்டி பக்கத்துல தான அவங்க போயிட்டு வரட்டும் நீ வா, நாம கடைக்கு போயிட்டு வருவோம் என்று கையோடு வாசலுக்கு வெளியே இழுத்து வந்துவிட்டார். வாசலுக்கு வந்தது தான் தாமதம் ,அடுத்த விநாடியே பொம்மியிடமிருந்து திடீரென ஒரு விக்கல் சத்தம் வெளியே நின்றவர்களுக்கும் கேட்கதான் செய்தது. உடனே உள்பக்கம் திரும்பிய மயிலாவின் தலையில் ஒரு குட்டு வைத்து இந்த வாயாடியிடமிருந்து எப்படி தான் புது ஜோடிகளை காப்பாற்றுவதோ என்று தனக்குள் சிரித்துக்கொண்டே மயிலாவையும் இழுத்துக்கொண்டு கடைபக்கம் நகர்ந்தார் வள்ளி.

வள்ளி எண்ணவோ தனது மூத்த மகள் பொம்மியின் காதலுக்கு உதவுவதாக நினைத்து கொண்டு மயிலாவை மார்க்கெட் பக்கம் தள்ளிகொண்டு போனார். ஆனால் அவர் அறியாத ஒன்று , அவரை அறியாமலே மயிலாவை மார்க்கெட் க்கு அழைத்து செல்வதன் மூலம் மயிலாவின் காதலுக்கும் அவர் உதவி செய்துவிட்டார்.

அங்கே மார்க்கெட்டில் கட்டிளம் காளையாக, சுருட்டை முடியும், கழுத்தை ஒட்டிய தங்கச்சங்கிலியும் , கம்பீர மார்பும் , ஆண்மகனுக்கான அத்தனை அம்சமும் பொருந்திய குறுஞ்சிரிப்பு முகத்தில் தவள, காத்துக்கொண்டிருக்கிறான் அந்த பொல்லாத காதலன் வேலன். ஆனாலும் நம்ம ஹீரோ ஹீரோயின் பொம்மா, பொம்மி தான் , ஆகையால் வேலனின் வீர, தீர சாகசங்களை விட்டுவிட்டு , பொம்மாவிடம் போவோம். பாவம் இளம் காதலர்கள், அவர்களை நாம் தொந்தரவு செய்ய வேண்டாம்.

அங்கே பொம்மாவோ பொம்மியிடம் கொட்டு வாங்கி கொண்டு குறும்பாக சிரித்துக்கொண்டிருந்தான் , என் விக்கல் சத்தம் கேட்டு அம்மா என்ன நினைத்திருப்பாளோ என்று முறைப்புடன் பொம்மாவை முறைத்தாள் பொம்மி. இருவருக்குள்ளும் அந்த வெட்கத்தை மட்டும் அடக்கவே முடியவில்லை, இருவரும் குழந்தையாகி போனார்கள். என்னதான் பொம்மா தீர்க்கமான யோசிக்கும் திறன் கொண்ட ஆளுமை மிக்க ஆளாக இருந்தாலும் ,பொம்மியை சந்தித்த நாளில் இருந்து பொம்மா எனும் படகின் சுக்கான் பொம்மியிடம் மட்டுமே இருந்தது. அவன் கப்பல் என்றால் அவள் மாலுமியாக இருந்தாள். உண்மையில் உணர்வுகளுக்குள் மூழ்கி போய் ,உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை வெறுக்கும் பொம்மா கூட , பொம்மி விரும்புகிறாள் என்பதால் பல விஷயங்களில் தன்னை அவளுக்கேற்ப மாற்றிக்கொண்டான். அவள் பார்வைக்கு 100% அவன் அவளின் பிடியில் இருந்தாலும் ,தேவையான முக்கிய விஷயங்களில் அவளின் பேச்சை மீறி அவளுக்கு தெரியாமல் அவன் அனுபவத்திற்கேற்ப தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கத்தவறுவதில்லை. அந்த ஆளுமையினால் தானே பொம்மி அவன் மேல் மையல் கொண்டாள் பின் எப்படி அதை விடுவான். சரி அந்த வாயாடி வருவதற்குள் நாம் தோட்டத்துக்கு போய்விடலாம், வாங்க என்றாள் பொம்மி. ஏன் மயில் பாறைக்கு மட்டும் தான் மயிலா துணைக்கு வேண்டுமா, மயில் தோட்டத்துக்கு வேண்டாமா என்றான் பொம்மா ? இவனுக்கெப்படி நம்ம தோட்டத்தில் மயில்கள் உள்ளது தெரியும் என்று நினைத்துக்கொண்டே , அப்போ நாம் வெறும் காதலர்கள் ,

இப்போ …

இப்போ தான் என் கிட்ட லைசன்ஸ் இருக்கே மாமா என்று சொன்னவள் அவனது கழுத்தில் மாலையை போல் தொங்கிக்கொண்டிருந்தாள். அவளின் 52 கிலோ எடையும் அவனை அழுத்துவதற்கு பதிலாக ஏதோ வான வெளியில் பறக்க செய்வதாக உணர்ந்தான். எப்படியோ ஒருவழியாக அந்த ஜோடி பைக்கை எடுத்துக்கொண்டு மயில் தொட்டத்தை நோக்கி விரைந்தனர்.

எங்கள் தோட்டத்துக்குள் இதற்கு மேல் வண்டியை கொண்டு போக முடியாது. கொஞ்ச தூரம் இந்த ஓடை வழியாக நடந்து தான் போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே ,வண்டியிலிருந்து சாவியை எடுத்துக்கொண்டிருந்தவனின் இன்னொரு கையை இழுத்துக்கொண்டு நடக்கலானாள் பொம்மி. இரு பொம்மி , லாக் போட்டுக்குறேனு சொன்னதற்கு கூட இங்கு வேறு யாரும் இப்போதைக்கு வர மாட்டார்கள் ,வா என்று இழுத்து ஓடைக்குள் இறங்கினாள்.

அது மழை காலம் மட்டுமே பாய்ந்தோடும் ஓடை ,மற்ற காலங்களில் ஏதோ நீருக்கு பதிலாக மணல் தான் ஓடுகிறதோ என்று எண்ணும் அளவிற்கு மணல் நிறைந்து காணப்படும். பொண்ணிற மணலில் , பொற்பாதங்கள் பதியும் அழகை ஒவ்வொரு நொடியும் அவன் கண்கள் புகைப்படம் எடுத்துகொண்டிருந்தன. வழியில் மூங்கில் அடர்ந்த வேலியை கடந்த போதே ஆங்காங்கே சிதறிக்கிடந்த மயில் தோகைகள் யாரோ அவர்கள் வரும் வழியில் பூக்களை தூவி வைத்து வரவேற்பது போல வரவேற்றன.

அவர்களின் கண்கள் சுற்றிலும் அலைந்து திரிந்தாளும் ,கரங்கள் வினாடி பொழுது கூட பிரியவில்லை. அங்கே வழிநடத்தி செல்வது மன்னவன் அல்ல ,மகாராணி. அவளின் இழுத்த இழுப்புக்கு ஆனந்தமாய் சென்றுகொண்டிருந்தது அவன் கால்கள்.

ஒரு வழியாக தோட்டத்தின் மையப்பகுதியை வந்தடைந்து சேர்ந்தார்கள். பொம்மா கண்ணிமைக்காமல் நின்றான். மயிலா வை நினைத்து அவளுக்கு நன்றி சொன்னான் , அவள் தானே இவர்கள் இங்கு வர காரணம்.

அவனுக்கு சுற்றிலும் இருப்பது அரண்மனையின் அந்தப்புரம் போல தோன்றியது. அங்கு நின்ற மயில்கள் அனைத்தும் பொம்மியின் அந்தப்புர தோழிகள் தான் போல , அவள் வந்தவுடனேயே எல்லா மயில்களும் அவளுடன் உறவாட ஆரம்பித்துவிட்டன. அப்புறம் தான் கவனித்தான் மயில்களுக்காக என்றே அவள் தானியங்களை கொண்டு வந்திருக்கிறாள் என்று.

ஒரு மயில் வா அங்கு போகலாம் என்று அழைத்தது , தோழி அழைக்கிறாள் நான் போகட்டுமா என்று அவள் கண்கள் அனுமதி கேட்டன, அவள் கரங்கள் அவனிடம் சிறைபட்டிருந்தது. அவளுடைய கண்கள் பேசும் காதல் அவனை கிறங்கச்செய்தது, கையை விடக்கோரி அனுமதி கேட்ட போதும் இரண்டு கரங்களும் இன்னும் இறுக்கமாக பற்றிக்கொண்டன, உதவிக்கு இன்னொரு கரமும் வரவே பாவம் காற்றால் கூட அவர்களுக்கிடையில் செல்ல முடியாமல் தவித்தது. அனைப்பின் இறுக்கத்தில் இருவரும் உலகையே மறந்த நிலையில் இருக்கும் போது பொம்மாவின் வலது புறம் ஏதோ சல சலப்பு கேட்டது. மயில்களின் அகவலோசையை தவிர வேறு அரவம் இல்லாத அந்த பகுதியில் லேசான சலசலப்பை , பொம்மாவால் அறிய முடியவில்லை, ஆனால் பொம்மியின் காதுகளில் அவை விழுந்தன. ஆனால் அதை திரும்பி பார் என்று மூளை சொல்லவில்லை. மூளையால் ஒரு நேரத்தில் ஒரு வேலை தானே செய்ய முடியும். பொம்மாவின் கரங்களுக்குள் சிறைபட்டிருந்த பொம்மி இதழாள் போர் புரிந்தாள். இதை விட வேறு ஆயுதம் என்ன வேண்டும் பொம்மாவை சாய்க்க.

அதே நேரம் அந்த சலசலப்பு அவர்களையே சுற்றிவருவதை மீண்டும் கவனித்த பொம்மி ,சற்றே போரை நிறுத்தி ,அவனது கையிலிருந்து விடுபட்டு சுற்றுமுற்றும் பார்த்தால் , அதற்குள் எதிரி உற்சாகம் பெற்று மீண்டும் தாக்க தொடங்கிவிட்டான் ,ஆம் மீண்டும் சிறைபட்டாள் பொம்மி .

இந்த முறை அவன் இழுத்த வேகத்தில் மார்பில் சாந்தவள் ஏதோ யோசித்தவள் சட்டென அவனது முதுகை இரு கரங்களாலும் தடவி பார்த்தாள். பொம்மாவுக்கோ பூரிப்பு தாங்க முடியவில்லை. அவன் இதை ஒரு கனத்தில் புரிந்து கொண்டான். பேரழகிகளுக்கே உரிய மனப்பான்மை இது. அவள் அழகில் கர்வம் கொள்ளும் சமயம் அது என்று பொம்மாவுக்கா சொல்லி தர வேண்டும்.

நம் தமிழ் சமுதாயத்தில் உலகம் முழுக்க படர்ந்து விரிந்து வாணிபம் மேற்கொண்ட காலங்களில் , பெரும் போர்களும் நடந்துகொண்டே இருக்குமாம். அப்போது பெரும்பாலும் எல்லா இளம் ஆண்களுமே போர்களத்துக்கு போய்விடிவார்கள். இளம் மனைவி, காதலி என எத்தனையோ உறவுகளை பிரிந்து செல்வார்கள் . போர் முடிந்து பலரின் உயிர் வெறும் ஓலை வடிவில் செய்தியை மட்டும் தாங்கி வரும். பலரின் உடல் ஒரு பாகத்தை இழந்து வரும். அதே போல பல இளைஞர்கள் வெற்றி களிப்பில் மார்பில் பட்ட விழுபுண்களை வீரத்தின் அடையாளமாக காட்டிக்கொண்டு நெஞ்சம் நிறைந்த தனது காதலியையோ ,புது மனைவியையோ காண ஓடி வருவார்கள். வந்த வேகத்தில் காதலிகள் போர் வீரனிடம் சிறைபட துடித்தே காத்து நிற்பார்கள். வெற்றி முழக்கங்கள் ஊர் அதிர சாலையில் செல்லும். ஆனால் இளைஞர்களின் கால்களோ காதலிகளை தேடி ஓடும். சந்தித்த கனத்தில் காதலர்கள் காதலி சிறைபடவேண்டுமென்றே அவனிடம் ஓடுவாள். இருவரின் மார்பும் மோதிக்கொள்ளும் சமயம் அந்த போர்வீரனின் காதலி , ஏற்கனவே போரில் ,மார்பில் காயம் தாங்கி வந்தவனின் மேல் தனது கொங்கைகளை கொண்டு வேகமாக தாக்கிவிட்டோமே ,, ஐயோ எங்கே அது குத்தி முதுகு புறம் வந்திருக்குமோ என்று தனது கொங்கைகளின் மீது கொண்ட கர்வத்தில் வீரனின் முதுகை தடவி பார்ப்பாளாம். இவ்வாறாக காதல் போர் தொடங்குமென்று நம் முன்னோர்களை பாடும் காவியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும்.

அதையே இங்கே கண்டாள் பொம்மி. அவளின் கரங்கள் முதுகை பரசவும் புரிந்து கொண்ட பொம்மா போரை தொடர்ந்து நடத்தலானான். பொம்மிக்கு வேறு வழியில்லை சரண் அடைந்தாள். அங்கே மயில்தோட்டத்தில் இருவரும் முயல்குட்டிகளாக மீண்டும் மாறிப்போனார்கள். அவர்களின் விளையாட்டை பார்க்க வெட்கப்பட்டுகொண்டு மயில்கள் வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டன.

ஒரு வழியாக போர் முடிந்து தற்காலிக ஒப்பந்தம் போட்டது போல , விடுவித்தான் அவளை, இப்போது இவளின் கரங்கள் சுதந்திரம் பெற்று அங்கிருந்த பாறையை நோக்கி சென்றாள்.

சிலை நகர்ந்தாள் இப்படி தான் இருக்குமோ என்று நின்ற இடத்தில் அசையாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு துணையாக ஒரு மயில் அவளுடன் நடந்தது. இந்த மயில் அவளிடம் நடை பயில கற்றுக்கொள்கிறது போல என்று தன் மனைவியின் நளினத்தில் பெருமை கொண்டான். அந்த மயிலும் அதே போல அவளை பின்பற்றி நடந்து சென்றது. அவள் பாறைக்கு சென்றதும் பல மயில்களும் வந்து சேர்ந்தன. அதே நேரம் பொம்மாவும் அருகில் வந்தான்.

அங்கே இருந்தால் நிச்சயமாக மயில்கள் ஆடுவதை பார்க்கலாம் என பொம்மிக்கு தெரியும். அது மழை ஆரம்பிக்கும் சீசன். அதாவது ஆண் மயில்கள் பெண் மயிலுடன் காதலுறும் சீசன் . என்ன பொம்மி பார்க்கிறாய் என்று கேட்டான் பொம்மா. இல்ல மாமா இங்கு மயில்கள் பல தோகை விரித்து ஆடும் , அதை தான் தேடிபார்க்கிறேன் என்றாள். அவள் சொன்ன கனத்தில் சற்றே தொலைவில் 2 மயில்கள் தோகையை விரித்து ஆட ஆரம்பித்தன

பொம்மி இங்கு ஏன் இத்தனை மயில்கள் உன்னை சுற்றி நிற்கின்றன என தெரியுமா என்று கேட்டான் பொம்மா. உடனே பொம்மியோ எல்லாம் உங்களை பார்த்து ஆசைகொண்டனவோ என்னவோ ,இத்தனை முரடர் அருகில் இருந்தும் பயம் இல்லாமல் அவை அருகில் நிற்பதை பார்த்தால் அப்படி தான் தெரிகிறது என்றாள். உடனே அவன் , இருக்கலாம் பொம்மி ஆனால் நிற்பதை எல்லாம் ஆண் மயில்களாயிற்றே என்றான். அவளின் முகம் நாணத்தால் சிவந்தது. தன்னை காதலுறவா இந்த மயில்கள் இங்கு வந்துள்ளதாக கூறுகிறான்.ஹப்பா ,இந்த ஆண்கள் பொல்லாதவர்கள் ,நம்மை எதையாவது சொல்லி மயக்கிவிடுகிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இதழோரமாக மறைக்க முடியாமல் காதல் புன்னகை புரிந்தாள் . அதே சமயம் அருகில் நின்ற மயில் ஒன்று தோகையை விரிக்கவே இருவரும் அமைதியானார்கள் . உடனே பொம்மா அவள் காதோரமாக அமைதியான குரலில் பேசினால் ,அவன் மூச்சின் அனல் அவளை சிலிர்க்கச்செய்தது. இந்த மயில்கள் எதற்காக தோகை விரித்தாடும் என தெரியாமா என்றான் மெல்லிய குரலில். எதற்கு என்று விழுங்கி கொண்டு கேட்டாள் பொம்மி. அவள் பேசும் நிலையிலேயே இல்லை, எங்கோ மிதந்துகொண்டிருந்தாள். அவனது நெருக்கம் அவளை மேலும் மேலும் இன்பத்தின் எல்லையை நோக்கி பறக்க செய்தது. உடனே அவன் லேசாக சிரித்துக்கொண்டு அவளின் இடையை இழுத்து வாயருகில் கொண்டுவந்து தனது காதலியை இவை இந்த தோகையை காட்டி மயக்கி தான் காதலுறும். என்றதும் அவளுக்கு மயிர்கூச்செரிந்தது. அவள் இவனது மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டே மயிலின் அழகு நடனத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் , இன்னொன்று கவனித்தாயா என்று கேட்டான் அவள் ம்ம் என்று சினுகினாளே தவிர அவளது வாயில் வார்த்தைகள் வரவில்லை, உணர்ச்சிகளின் உச்சியில் வார்த்தைகளுக்கு இடமில்லை , ஆனால் பொம்மாவோ அவளின் மயக்க நிலையை உணர்ந்து ஆதரவாக அணைத்துக்கொண்டே கூறினான். இந்த மயில்கள் காதலுற சுற்றிலும் அருகில் பெண்மயில்கள் ஏதும் இல்லை , உன்னை தவிர . கவனித்தாயா என்றான். அதற்கு அடுத்த நொடி அவனது வாயும் சிறைபட்டது. தற்போது அவனை ஆட்கொண்டது அவளின் பெண்மை. பெண்மைக்குள் ஆண்மை அடங்கிப்போனது.

சற்று நேரம் நடனமாடிப்பார்த்த மயில்கள் இவள் நம்மை எங்கே இனி திரும்பி பார்க்க போகிறாள் என்ற காதல் தோல்வியால் தோகையை மடக்கி கொண்டு அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தன. வெகுநேரம் சென்றதே தெரியவில்லை. அவன் அவளிடமிருந்து சற்றே விலகினான்.

பொம்மி அரை மயக்கத்தில் இருப்பவள் போல மெதுவாக அவளது பொண்ணுடலை அருகிலிருந்த பாறையின் சாய்த்தாள். அவள் அமர்வதை பார்த்துக்கொண்டிருந்த பொம்மா திடீரென ஒரு அதிசயத்தை கண்டான். அந்த பாறையும் உயிர் பெற்று ஏனோ அழுது கொண்டிருந்தது. அதுவும் ஒரு ஆண் பாறையாக தான் இருக்கும். தனது மெல்லுடலை என் மீது படர்த்திய பூவிதழை வாரி அணைக்க நமக்கு கரங்கள் இல்லையே என்று அந்த பாறை அழுவதாக நினைத்து தனது காதலியின் மீது கர்வம் கொண்டான். அவனது அறிவு அது பாறையின் கண்ணீர் அல்ல , பாறை இடுக்கிலிருந்து நீர் கசிந்து ஓடுகிறது என்று என்னதான் கூப்பாடு போட்டாலும் , அதை கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. இது ஒன்றும் அறிவுக்கூடம் அல்லவே உண்மையை யோசிக்க. இது காதல் கூடம் , இங்கு கற்பனைக்கும் , காதலுக்கும் ,கவிதைக்கும் தான் வேலை என்று கூறி புத்தியை ஓரங்கட்டினான். அந்த நொடி அவன் மட்டும் புத்தியை அனுமதித்திருந்தால் அருகில் மீண்டும் ஏற்பட்ட சலசலப்பையும் கவனித்திருப்பானோ எண்ணவோ . அந்த சலசலப்பு மெதுவாக உருவாகி மறைந்தது.

பொம்மா கொஞ்சம் மயிலிறகுகளை எடுத்து வாயேன் என்றாள். பொம்மாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அவள் எதற்கு கேட்கிறாள் என்பதை கன நேரத்தில் புரிந்துகொண்டு சுற்றிலும் மயிலிறகுகளை நோக்கி அடியெடுத்து வைக்கலானான் அவன். அவன் விலகிச்சென்றதும் இனி நமக்கு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு ஒரு மயில் மீண்டும் தோகையை விரித்து நடனமாட ஆரம்பித்தது. பொம்மி பாறையில் அமரவில்லை, வானவெளியில் ஏதோ ஒரு மயிலின் மேல் பொம்மா எனும் முருகனுடன் பறந்து செல்வதாகவே நினைத்தாள். அந்த பாறையும் கூட அவள் மேனி நோக கூடாது என்று மயிலின் மேனி போல மென்மையாக மாற்றிக்கொண்டது போலும் . ஒய்யாரமாய் ஆடும் மயிலின் நடனத்தில் கண்கள் லயித்திருக்க ,எண்ணம் முழுக்க காதல் நிரம்பியிருக்க காதலின் தேன்சுவையை பருகிக்கொண்டிருந்தாள் பொம்மி.

சுற்றிலும் இன்பம் சூழ்ந்திருக்க அந்நேரத்தில் கொடிய விஷத்தை கொண்ட நாகமொன்றும் அவளின் அருகில் சுருண்டிருந்ததை அவள் கவனிக்க தவறிவிட்டாள். எத்தனையோ சலசலப்பை ஏற்படுத்தி என்னையும் பார்க்க மாட்டாயா என்று கெஞ்சி பார்த்த அந்த கருநாகம் தற்போது கோபம் கொண்டு தலையை உயர்த்தியது.

ஏற்கனவே பார்த்தது போல சம்பவங்கள் வேகமாக நடந்து முடிய , திக்கென்று ஒரு நிமிடம் பொம்மின் இதயம் நிற்க இருந்த சமயம், அவளை காக்க வந்த மென்கரம் திடீரென பாம்பின் தலைக்கு அரை அடி கீழே பிடித்து தூக்கியது. பொம்மியின் இதயம் ஒரு முறை நின்று துடிக்க ஆரம்பித்தது. அவளது அழகிய கர்வமிக்க மார்புகள் வேகமாக ஏறி இறங்கி கொண்டிருந்தது. பொம்மா வுக்கு உயிரே அப்போது தான் திரும்ப வந்திருந்தது.

கையில் தூக்கிய நாகத்துடன் அங்கே ஒரு பெண் புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தாள். அவள் புகத்தில் ஒளிவீசும் தேஜஸ் இருந்தது. இளமை முடிந்து 50 வயது ஆகியிருந்தாலும் கூட அவளின் குலையாத அழகு பொம்மியின் கண்ணை பரித்தது. பார்ப்பதற்கோ காட்டு வாசி உடையில் இருந்தாலும் ,அதை அவள் கச்சிதமாக கட்டியிருந்ததாள் அவளை ஏதோ தேவ மங்கையாக காட்டியது. பல்வேறு வகையாக அணிகலண்களுடன் உடல் முழுக்க நிறைத்து காட்டு வாசி என ஏன் இந்த தேவதை தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறாள் என்று பொம்மி கேட்டுக்கொண்டாள். அவளை இப்படியாக பார்த்துகொண்டிருந்த பொம்மிக்கு அவள் கையிலிருந்த கருநாகம் அப்போது பட்டுவிட்டது. அவ்வளவு தான் வெடுக்கென கோழி குஞ்சை போல உடலை லேசாக உள்ளிழுத்துக்கொண்டே அதன் வால் 6 அடிக்கும் கீழே தரையில் கிடப்பதை பார்த்தாள். அவள் பயப்படுவதை பார்த்து சிரித்துக்கொண்டே பாம்பை பார்த்த அந்த மகராசி , என்ன கருநாகா , என்ன இது புது பழக்கம் , உன்னை துன்புறுத்தாதவர்களை எப்போதிலிருந்து நீ துன்புறுத்த துணிந்தாய். உன் நாக லோகத்திலேயே இந்த பழக்கம் கிடையாதே என்று கோபத்தோடும் உரிமையோடும் பேசினால், பாம்போ மன்னிப்பு கேட்பது போல படத்தை சுருக்கி தன் தலையை அவளின் கையில் வைத்து தேய்த்தது. சரி இங்கிருந்து செல் , யாரையும் அவசியமின்றி துன்புறுத்தாதே என்று கூறி அதை தரையில் அந்த பக்கமாக விடுவித்தார். உடனே போன இடம் தெரியாமல் வேகமெடுத்து மறைந்தது பாம்பு. பொம்மி நிம்மதியடைந்தாள் ஆனாலும் அவளின் ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. பாம்பை காட்டு வாசி பெண்கள் பிடிப்பார்கள் என்றாளும் , தலையின் பின்புறம் தானே பிடிக்க வேண்டும். பயமே இல்லாமல் இவர் எப்படி உடலை பிடித்து தூக்கி புத்திமதி சொல்லி அனுப்புகிறாரே , அவரிடம் பாம்பும் தாயிடம் அடங்கிய குழந்தையாகிப்போனதே என்று மேலும் மேலும் நினைத்து பிரம்மிப்படைந்தாள். அவள் பாம்பிடம் பேசிய தமிழ் ஏதோ தெய்வீக மொழி போல இனிமையாக இருந்தது. இத்தனை அழகு தமிழை தமிழ்நாட்டில் நான் கேட்டதே இல்லையே ,எந்த ஊர் பேச்சும் இவ்வளவு தெளிவாக இனிமையாக இந்த காலத்தில் இல்லையே, ஒரு வேலை உண்மையில் இவள் தேவலோகத்திலிருந்து தான் வந்திருப்பாளோ என்று யோசிக்க தோன்றியது.

அந்த நேரத்தில் பொம்மா ஒரு வழியாக எழுந்து வந்து நின்றான். அந்த காட்டுவாசி பெண்ணை பார்த்து ,தாயே நீ யார் என தெரியாது ஆனால் தக்க சமயத்தில் அவள் உயிரை மட்டும் காக்கவில்லை எனது உயிரையும் காப்பாற்றியுள்ளாய். மிக்க நன்றி என்று சொல்லி அவரின் பாதத்தில் விழப்போனான். கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாத பொம்மாவுக்கு ஏதோ அங்கு கடவுளே வந்து நிற்பதாக தோன்றியது. அந்த மங்கயர்கரசியோ இதழில் சிந்திய புன்னகை மாறாமல் குனிய போன பொம்மாவின் தோளை தூக்கி ,தம்பி என்று அழைத்தார்.

ஆகா என்ன இனிமையான குரல், கொஞ்சும் தமிழ் ,அம்மா நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் , சரியான சமயம் இங்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் நீங்கள் மட்டும் இல்லையென்றால் ,ஐயோ நினைக்கவே பதைக்கிறது என்றான் பொம்மா. நன்றியுணர்வால் அவன் கண்களில் நீர் பொங்கியது. அந்த தாயோ மீண்டும் புன்னகை மாறாமல் , நான் வரவில்லை என்றாலும் பாதகம் இல்லை தம்பி , இதோ அருகில் இருக்கிறானே இந்த மயிலவன் கருநாகத்தை தடுத்து துரத்தியிருப்பான் என்று அருகிலிருந்த மயிலை காட்டினார் அந்த பெண். அந்த மயிலும் பெருமை கொண்டு தலையை தூக்கி வணக்கம் சொல்வது போல பாவனை செய்யவே இருவருக்கும் அதிசயம் தாங்க முடியவில்லை.

ஏனப்பா நல்ல பிள்ளைகள் நீங்கள். காட்டு பகுதிக்கு வந்தால் கவனமாக இருக்க கூடாதா ? என்று கேட்டார் அந்த தாய் அதற்கு பொம்மியோ இல்லை அந்த மயில்களின் ஆட்டத்தை விரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன் என்று சிக்கி திக்கி சொன்னாள். உடனே கலகல வென சிரித்த அந்த பெண் ,நல்ல பிள்ளை நீ அம்மா. என்னிடமே கதை கட்டுகிறாயே காதல் போதையில் காலை சுற்றும் பாம்பு கூட கண்ணில் படவில்லை போல என்று நகைத்தார். பொம்மிக்கு சங்கடமாகி போனது அதே சமயம் வெட்கம் தாங்க முடியவில்லை. கணவனின் சில்மிசத்தில் சில சமயம் வீட்டில் தனது அம்மா வள்ளியிடம் மாட்டிக்கொண்டு திருதிருவென விழிப்பதை போல இங்கும் விழிக்க ஆரம்பித்தால். ஒன்றும் பாதகம் இல்லை தாயே , காதல் ஒரு தெய்வீக உணர்வு அது உலகை மறக்கச்செய்யும் தான்.

ஆனால் தம்பி ஒரு ஆண்மகன் நீ தடுமாறலாமா ? உனது வேலை காதலுறுவது மட்டும் தானா அவறை காவல் காக்க வேண்டியவனும் நீ தானே. அறிவுக்கு தடை போட்டு நீயும் காதலில் மூழ்கி அவளின் பாதுகாப்பை குறைக்கலாகுமா என்று கேட்டவுடன் ,தனது மனதுக்குள் நடந்தவற்றை எல்லாம் அப்படியே படமாக பார்த்தவர் ப ல பேசிகிறாரே ,யார் இவர் , ஒருவேளை கடவுள் தானோ என்ற ஐயம் வந்தது.

உன் உயிரை காப்பாற்றி கொடுத்துள்ளதால் உனக்கு நான் கடவுளாக தான் தெரிவேன் .ஆனால் நான் ஒரு சாதாரண வேடுவச்சி தான் என்று கூறி அவர் புன்னகைத்தார். இருவரும் ஒன்றாக எழுந்து நின்றார்கள். எதிரே அந்த தாய் நின்று கொண்டிருக்க இருவரும் கையை உயர்த்தி கடவுளை வணங்குவது போல வணங்கி நன்றி கூறினார்கள். அவர்கள் இருவரையும் ஏதோ ஓர் சக்தி ஆட்கொண்டது போல ஒரு உணர்வு. ஆம் அவர்களை ஆட்கொண்டது சக்தி தான்.அந்த தாயின் பெயர் சக்தி. சக்தி அங்கு யாரிடம் பேசி கொண்டிருக்கிறாய் வா போகலாம் என்று ஆண் ஒருவர் அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு என கூறும் ஆண் குழந்தை ஒன்றை ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையில் பெரும் தடியை ஊன்றிக்கொண்டு கம்பீரமாக நின்றார். ஆகா என்ன பொருத்தம் இவர்களுக்குள். ஒரு தெய்வ குடும்பமாகவே தான் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்துக்கொண்டனர்.

அம்மா நீங்கள் யார் என்று கூறவே இல்லையே என்று கனிவு மிக்க குரலில் கேட்டாள் பொம்மி . அந்த தாயும் அவர் கணவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டு பின் அந்த பெண் பொம்மியை நோக்கி பேசலானாள். அம்மாடி நாங்கள் ஒரு வேடுவ குடும்பம். நாடோடிகள் , உலகம் முழுக்க கூட சுற்றி வருவோம். இந்த பக்கம் மகன் முருகனுக்கு மயிலிறகு பிடிக்குமே என்று எடுத்து கொடுக்க வரும் போது உங்களின் அந்தபுரத்தை கவனிக்காமல் நுழைந்துவிட்டேன் என்று கூறியதும் இருவரும் ஏதோ வெட்கத்தில் நெழிந்தார்கள்.

சரி தம்பி எனக்கு நேரமில்லை வெகுதூரம் செல்ல வேண்டும். ஆயிரம் தான் உணர்வுகளில் மிதந்து இல்லற இன்பத்தில் திழைத்தாலும் உடனிருக்கும் மங்கையை பாதுகாப்பது உன் பொறுப்பு தான். எப்போதும் அதை நினைவில் கொள் என்று கிளம்ப முற்படும் போது முந்தியில் இருந்த பொட்டலத்துக்குள் கை விட்டு இருவர் நெற்றிலும் திருநீரு பூசினார். தன்னையறியாமலே இருவரும் அந்த தாயின் காலில் விழுந்து வணங்கினார்கள். ஆசி அளித்த தாய் எல்லா வளமும் பெறுவீர்கள் அம்மா. உனக்கு பிறக்க போகும் மைந்தன் என் மகனை போலவே பேரழகு மட்டுமல்லாமல் பேராண்மை கொண்டு விளங்குவான். உன் வயிற்றில் வரப்போகும் இளவரசியால் உங்கள் குலமே பெரும் வளம் கொண்டு செழிக்கும் என்று கூறி மகிழ்ச்சி நிறையட்டும் என்று இருவரின் தலையிலும் ஆதரவாக கைவைத்து, எங்கிருந்து அவருக்கு கிடைத்ததோ தெரியவில்லை ஒரு எலுமிச்சை பழத்தை நீட்டினார் அதை பொம்மி முந்தியை விரித்து வாங்கி கொண்டு முடிந்துகொண்டால். எல்லாம் ஏதோ கடவுளின் செயலாக அவர்களுக்கு பட்டது. தம்பி மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று புன்னகை புரிந்து விட்டு அங்கிருந்த தனது கணவர் குழந்தையுடன் வேகமாக நடந்து மறைந்தது அந்த உருவம்.

இருவரும் திக் பிரம்மை பிடித்ததை போல நின்றார்கள். இங்கு என்ன நடந்தது என்பதை யோசித்து பார்த்துகொண்டிருக்கும் போதே தூரத்தில் மயிலாவின் குரல் அவர்களுக்கு கேட்க ஆரம்பித்தது. அக்கா , எங்க இருக்கீங்க ,மாமா ……. என்று கத்திக்கொண்டே ஒரு குரல் வந்தது. திடீரென தனது கரங்களை பிடித்து உலுப்புவதை போல உணர்ந்தால் பொம்மி.

மாமா எழுந்திருங்க ,மார்க்கெட் போயிட்டு வரதுக்குள்ள தோட்டத்துக்கு போவீங்கனு பாத்தா இப்பிடி தூங்குறீங்களே ரெண்டு பேரும். உங்களுக்கு போய் ரொமான்ஸ் பன்ன ஐடியா கொடுத்தேன் பாரு, என்ன சொல்லனும் என்று பேசிக்கொண்டே அவர்கள் இருவரின் உடலையும் அசைத்தாள் மயிலா. அங்கே மயில்தோட்டத்தில் நின்றவர்கள் திடீரென பொம்மியின் வீட்டு படுக்கை அறைக்குள் வந்தார்கள் , மெதுவாக எழுந்து கண் திறந்து ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தார்கள். என்ன மாமா தோட்டத்துக்கு போக சொன்னா குப்புற படுத்து தூங்குறீங்க என்று சொல்லி கிண்டலடித்தாள் மயிலா.

ஆனால் இருவருக்கும் முகத்திலிருந்த அதிர்ச்சி குறையவே இல்லை. ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு , கனவா என்றாள் பொம்மி. என்ன கனவு டி கண்ட என்று கேட்டாள் மயிலா. ஒண்ணுமிள்ளடி , மயில் , பாம்பு, முருகன் , சக்தி என்று ஏதேதோ உலருவதாக மயிலா நினைத்தாள். ஆனால் பொம்மாவின் முகத்தில் பெரும் ஆச்சரியம் படர்ந்தது. நாம் கண்ட கனவை தான் இவளும் கண்டாளா , எத்தனையோ ஆயிரம் விஷயம் பேசவேண்டுமென இருவரும் பதைத்தனர். ஆனால் மயிலா அருகிலேயே இருந்துகொண்டு என்ன ஆச்சி , தூக்கம் போகலயா என கேட்க இருவரும் விழித்தனர்.

ஒரு வழியாக அடியேய் மயிலா இங்க வா என்று வள்ளி அழைக்க இருமா வரேன் என்று எழும்போதே சீக்ரமா எந்திரிச்சி முகத்த கழுவுங்க , நீங்களா போக மாட்டீங்க நானும் வரேன் தோட்டத்துக்கு போவோம். அங்க போய் சாப்டலாம் என்று கூறிவிட்டு நகர்ந்தாள். ஆனால் இருவரின் காதிலும் எதுவும் விழவில்லை. பொம்மாவின் காதில் அந்த பெண் சொன்ன “இவளை நீதான் பாதுகாக்க வேண்டும். காதலுற்றாலும் காவல் அவசியம்” என்று சொன்ன வார்த்தைகள் ஓடிக்கொண்டிருந்தது. பொம்மியின் மூளையிலோ ,பேராண்மை கொண்ட ஆணும், பெரும் புகழ் பெறப்போகும் பெண் பிள்ளையும் உன் வயிற்றில் பிறக்க போகிறார்கள் என்ற வார்த்தைகள் ஓடிக்கொண்டிருந்தன.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்ட கனவை பரிமாறி கொள்ள ஆரம்பித்த உடனேயே ஆச்சர்யமடைந்தனர். சிறிதும் மாறாமல் இருவருக்கும் ஒரே கனவு எப்படி வந்தது , என்று மேலும் மேலும் ஆச்சர்யமடைந்தனர்.

மீண்டும் மயிலா துள்ளி குதித்து ஓடி வந்தாள் ,மாமா உங்க நண்பர்கள் வந்துருக்காங்க.வாங்க சீக்ரமா என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடினாள். இருவரும் எழுந்து முகத்தை கழுவிக்கொள்ள போனார்கள், வழியில் மறித்து என்னடா நைட் முழுக்க தூங்கல போல பகலில் தூங்கி வழியிற என்று கிண்டலடித்த தோழியை ,ஏய் சும்மா இரு என்று அதட்டினான் பொம்மா. சரி நீங்கெல்லாம் எப்போ வந்தீங்க சரி உக்காருங்க , முகம் கழுவிட்டு வந்துடுறேன் என்றான், அதெல்லாம் வேணாம் வா என்று கையை பிடித்து இழுத்தாள் பூங்கொடி. அங்கே அவன் நண்பர்கள் 4 பேரும் ,தோழிகள் 2 பேரும் வந்திருந்தனர். அவனது கையை பிடித்து இழுக்கிறாளே என்று கோவத்துடன் பார்த்தாள் பொம்மி. பொம்மா கண்ணாலேயே மன்னிப்பு கேட்டான் ,வேறு என்ன செய்ய முடியும். நீங்களும் வாங்க என்று சிரித்துக்கொண்டே குப்பிட்டாள் பூங்கொடி. பொம்மியும் பதிலுக்கு சிரித்து இருவரும் கூடத்தை நோக்கி நடந்தார்கள்.

என்னங்கடா எல்லாரும் ஒண்ணா வந்துருக்கீங்க , 2 நாள் முன்னாடி தான கல்யாணத்துக்கு வந்தீங்க, காரணம் இல்லாம இவ்ளோ தூரம் வரமாட்டீங்களே என்று கேட்டான் பொம்மா. வந்தவங்கள எப்போ வந்த ,வாங்கனு சொல்லி வரவேற்கிறத விட்டுவிட்டு ஏன் வந்தீங்கனு கேக்குறான் பாரு என்று பூங்கொடி அவன் தலையில் லேசாக கொட்டினாள். பொம்மிக்கு பத்திக்கொண்டு வந்தது. இன்னிக்கு நாம செத்தோம் என்று நெழிந்தான் பொம்மா.

அதற்குள் கையில் காபி குவளைகளுடன் வந்துசேர்ந்நாள் மயிலா. எல்லோருக்கும் கொடுத்துவிட்டு ஓரமாக நின்று துணை பிடித்துக்கொண்டு வெட்கப்பட்டுக்கொண்டாள் மயிலா , காரணம் அந்த கட்டிளங்காளை வேலன் தான் அனைவரையும் அழைத்துகொண்டு வந்திருக்கிறான். மார்க்கெட்டில் அம்மா அருகிலிருக்கும் போது செய்கையும் சீண்டலுமாக படாத பாடு படுத்திவிட்டு இப்போது இங்கும் வந்துவிட்டானே என்று மயிலாவுக்குள் ஒரு வித எல்லையற்ற சந்தோசம். பொல்லாத ஆள் தான் நம்மாளு என்று நினைத்துக்கொண்டாள்.

சரி சொல்லுடா வேலா என்ன எல்லாரையும் கூட்டிட்டு வந்துருக்க என்று பொம்மா கேட்டான்.

காபியை பருகுவது போல யாருக்கும் தெரியாமல் மயிலாவின் அழகை பருகிக்கொண்டிருந்த வேலன். சற்றே தடுமாறி , அது ஒண்ணுமிள்ளடா ,உங்க கல்யாண பரிசு கொடுக்கலாம்னு வந்தோம். அதான் மேடைலே கொடுத்தீங்களே என்று சொன்ன பொம்மாவிடம், அது வெறும் ட்ரைலர் மாப்ள , இது தான் மெயின் பிக்சர் என்று சொல்லிக்கொண்டே ஒரு சிறு கவரை கொடுத்தான். அவ்வப்போது யாரும் பார்க்காத போது மயிலாவின் பக்கம் கருவிழியையும் மேய விட்டுக்கொண்டான் வேலன்.

இதையெல்லாம் கண்டும் காணாமலும் பொம்மி இருந்தாள் ,உள்ளுக்குள் பூங்கொடி தன் கணவனிடம் எடுத்து கொள்ளும் உரிமையை பார்த்தும் , தன் தங்கையை காதலிப்பவன் இவ்வளவு தைரியமாக வீட்டுக்கே வந்து கண்களால் துளாவுவதை கண்டு அவள் பொறுமினாள். ஆம் பொம்மிக்கு எல்லாமே தெரியும். மயிலாவின் செயல்பாட்டில் சிறு மாற்றம் வந்தாலும் அவளால் உணராமல் இருக்க முடியாது.அதிலும் மயில் பாறை முருகன் கோவிலில் பொம்மாவை சந்திக்க துணைக்கு வருவதனால் தனது காதலுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற உத்திரவாதத்தை வாங்கி கொண்டு தான் அவளுக்கு எல்லா உதவியும் செய்தாள் மயிலா , இவையெல்லாம் பொம்மாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டாலும், பொம்மாவுக்கு எப்போதோ தெரியும். உடன் பழகுகிறவர்களின் மனநிலையை எளிதாக எடைபோட கூடியவன் பொம்மா.

அந்த கவரை வாங்கி கொண்டு என்னடா இது என்று கேட்டான் பொம்மா. இது தான் உங்க கல்யாணக்காதலுக்கு எங்களின் பரிசு என்றாள் வெகுநேரமாக அமைதியாக இருந்த ராணி . என்னடா மாப்ள சிலை திடீர்னு பேசுது என்று கிண்டலடித்ததும் எல்லோரும் ராணியின் பக்கம் திரும்பினர். அவ்வளவு நேரம் எல்லோரும் ஒருவருக்கொருவர் சிரித்து ,வசைபாடி விளையாண்டாலும் ராணி பேசியதும் அமைதியாகி அவளின் பக்கமாக திரும்பி சிரிக்க ஆரம்பித்தனர். ஆம் உண்மையில் அவளும் ஒரு பொற்சிலை போலவே அமர்ந்திருந்தாள். ஒரு காலத்தில் துடுக்குத்தனம் அதிகமாக இருந்தது. பின் பொம்மா நண்பர்கள் கூட்டத்தில் பழக ஆரம்பித்த பின் ,மொத்தமாக மாறிவிட்டாள். அதிலும் பொம்மாவிடம் பேசும் போது மட்டும் அவளுக்கு வார்த்தையே வராது. ஒருவேளை என்னவனை இவள் ஒருதலையாக காதலித்திருப்பளோ என்று பொம்மிக்கு அடிக்கடி சந்தேகம் கூட வருவதுண்டு. சரி அதை விடுங்க பரிச பாருடா என்றான் அருகிலிருந்த இன்னொரு நண்பன்.

உங்கள் ஹனிமூனுக்கு அடுத்த வாரமே நாங்கள் ஏற்பாடு செஞ்சிருக்கோம் என்றவுடன் பொம்மிக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. பொம்மா அவள் முகத்தை பார்த்து எல்லார் முன்னிலையிலுமே சிரித்து வழிந்துகொண்டான். 4 இரவு 5 நாட்கள் கொண்ட அந்த தேனிலவு சுற்றுலாவுக்கு தேவையான எல்லா போக்குவரத்து தங்குமிடம் , உணவு ,கேளிக்கை என அனைத்திற்குமான டிக்கெட்ஸ் அதில் இருந்தது. டேய் சூப்பர் டா மாப்ள , ரொம்ப தேங்க்ஸ் டா. நானே போகனும்னு நினைச்சிருந்தேன். என்று பேசிக்கொண்டிருந்தவனை பொம்மி ,திடீரென ஏதோ ஓர் அதிர்ச்சியுடன் அழைத்து தன் முந்தியில் இருந்த எலும்பிச்சை பழத்தை காண்பித்தாள். அதுமட்டுமல்ல அவர்கள் இருவரின் நெற்றியிலும் அந்த விபூதி இருந்தது அவர்களை திகைக்க வைத்தது. என்னடா மாப்ள இதுக்கே அதிர்ச்சியாயிட்ட இன்னும் போக போற இடத்த கேளு என்று சிரித்தான் மற்றொருவன். அவர்கள் அதிர்ச்சியாய் இருக்க காரணம் ,இருவரும் ஒரே போல தூங்குவது ,ஒரே கனவு வருவது கூட பரவாயில்லை , எப்படி கனவில் தந்த எலுமிச்சையும் , பூசிவிட்ட விபூதியும் நிஜத்தில் வந்தது என்பது தான். பொம்மியின் உடல் லேசாக நடுங்கியது. பொம்மாவுக்கு ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்கொள்ளும் உணர்வை மறுபடி உணர்ந்தான்.

அந்நேரம் பார்த்து பூங்கொடி சொன்னாள், டேய் நீங்க ரெண்டு பேரும் தேனிலவுக்கு லட்சத்தீவு போறீங்க , ஆமாடா பொம்மா தீவுல போய் சந்தோசமா இருக்க போறீங்க இப்போ ஹேப்பி தானே என்றாள்.

அங்கோ பொம்மா ,பொம்மி இருவரும் சிலையென நின்றிருந்தார்கள். ஆம் அவர்களை சக்தி தான் ஆட்கொண்டாள் ,தீவில் அவர்களை சந்திக்க அவளும் அங்கே வருவாளா என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *