கருணையுள்ளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 2,040 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணனைப் பலமுறை கண்ணீர் பாதித்திருக்கின்றது. எதை எல்லாமோ தாங்கிக் கொள்ள முடிந்த அவனால் இந்தக் கண்ணீரை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனிதனுக்கும் ஒரு பாதிப்பு இருக்கும்… ஆனால் அவனுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவிட அவன் தன்னை எத்தனையோ வகையில் பக்குவப் படுத்திக் கொள்ள முயன்றாலும் தோல்வியே அவனைத் தொடுகின்றது_

சின்ன வயதில் அவன் வயதில் உள்ள யாராவது அவனைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதால் அவன் வெயிலில் விழுந்த மெழுகுபோல் கரைந்து போய்விடுவான். அடுத்தவர் பசி பொறுக்காது அப்போதே அவனுக்கு…

வறிய நண்பர்களின் தேவைக்காக வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்து அவர்களின் கண்ணீரைத் துடைத்து விட்டு வீடு திரும்பி வீட்டில் முதுகு பழுக்க அடிவாங்கிக் கண்ணீர் விர்ட அனுபவம் கூட அவனுக்கு உண்டு.

கண்ணன் வளர்ந்து வாலிபனானதும் வாலிப வயதில் வரவேண்டிய ஆசைகள் வந்து அதற்காக்த் தன்னை மனிதனாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் சகவயது நண்பன் கதையைக் கேட்டு, அவன் கவலையைப் போக்க, அவன் கண்ணீரைத் துடைத்து அவன் சொன்ன பெண்ணிடம் தூது சென்று அவள் அண்ணனிடம் “மானக் கேடாய்“ வார்த்தைகளை வாங்கிக் கட்டிக் கொண்டு…கண்ணன் அறைக்குள்ளேயே அழுது கண்ணீரில் கரைந்த அனுபவமும் அவனுக்குண்டு.

குடும்பஸ்தனாகி மனைவி மக்கள் என்று வந்தபின் அலுவலக நண்பர் ஒருவரின் குடும்பக் கடனைத் தீர்க்க அவருக்காக ஜாமின் கொடுத்துக் கடன்பத்திரத்தில் கையழுத்துப் போட்டு…“நீங்க நல்லாயிருக்கணும் அண்ணே” என்று தம்பதி சமேதரராய் நண்பரும் அவர் மனைவியும் தங்கள் துடைத்துக் கொண்டு கண்ணனுக்கு நன்றியுரை சொன்ன போது…

“இதெல்லாம் சாதாரண விஷயம் தானே மனிதருக்கு மனிதர் உதவிக் கொள்வதில் தானே பிறவிக்கே பெருமை இருக்கிறது” என்று அவர்களை ஆறுதல் படுத்திய கண்ணன்…அடுத்த மூன்றாவது மாதத்திலேயே அந்த நண்பரால் பகிரங்கமாக ஏமாற்றப்பட்டு அவர் பட்ட கடனை அடைக்க மனைவி மக்களின் நகை நட்டுகளையெல்லாம் விற்றுக் கட்டி விட்டுப் படுக்கையில் ஊமையாய்க் கண்ணீர் வடித்த அனுபவமும் அவனுக்குண்டு.

இந்தக் கண்ணீர் என்பது, துன்பத்தில் மட்டுறின்றி, இன்பத்திலும் பெருகும் என்பதை அவன் தன் வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை கண்டிருக்கின்றான், அனுபவித்திருக்கிறான் அழுதாலும் கண்ணீர் வரும்… சிரித்தாலும் கண்ணீர் வரும் என்பது போல் அவனை இந்தக் கண்ணீர் பலமுறை தழுவி எடுத்திருக்கின்றது.

அப்போதெல்லாம் அவன் பெற்ற அனுபவங்களை விட இன்று மாலை அவன் பெற்ற அனுபவம் இருக்கிறதே அதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் இந்தக் சொல்ல வருகின்றேன். இன்று செப்டம்பர் முதல் நாள்.

கண்ணன் வேலை முடிந்து வீடு திரும்புவதற்கு முன்பு பிற்பகல் மூன்று மணியளவில் நண்பர் ஒருவர் தொலைபேசி வழியாதச் சொன்ன செய்தியை மனதில் வைத்துக் கொண்டு குவிந்து கிடக்கின்ற பணியை இன்றே முடித்து உந்துதலில் விடவேண்டும் என்ற கோப்புகள் அனைத்தையும் இணையத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறான்… தொலைபேசி மீண்டும் அலறுகின்றது. அதே நண்பரின் குரல்தான். மாலை ஐந்தரை இருக்கும்… கண்ணனின் பணிமுடிய இன்னும் சில இருந்தபோது.

மத்திய வர்த்தக வட்டாரமானதால் இங்கு சாலையின் மருங்கிலும் மக்கள் கூட்டம் மழை வேறு சிணுங்கங்த் தொடங்கியது… எல்லாவகையான வாகனங்களும் தங்கள் இருப்பிடம் நோக்கியும் தஞ்சோங்பகார் பெருவிரைவுப் போக்குவரத்து நிலையம் நோக்கியும், பஸ் போக்குவரத்து நிறுத்தம் நோக்கியும் பல நூறு மக்கள் விரைந்து கொண்டு இருக்கின்றனர்…

கண்ணனுக்கு முன்னால் சாலை ஒரமாகத் தரையில் உட்கார்ந்திருந்த ஒரு மூதட்டியைத் தன் கைகளால் தூக்கி நிறுத்தி மெல்ல மெல்ல நடத்தி அந்த மாக்ஸ்வல் சாலையைக் கடந்து மறுபுறம் போய்க் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

சாலையின் மறுபக்கத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்ததைக் கவனித்த போதுதான் அப்பெண்மணி அவனோடு அலுவலகத்தில் பணிபுரியும் திருமதி சரோஜினி என்பது அவனுக்குப் புலனாகிறது. மனதில் ஒர் இனம் புரியாத கவலை வந்து உட்கார்ந்து கொண்டு தன்னை விரட்ட அவன் விரைவாகத் தனது வாகனத்தை நெருங்கி அதை எடுத்துக் கொண்டு அவசரம் அவசரமாய் அவர் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான்.

கண்ணன் மனமெல்லாம் திருமதி சரோஜினியே நிறைந்திருந்தார். ஒரு நடுத்தர வர்கத்துப் பெண்மணியான அவர் குடும்ப வருமானத்திற்காக நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கின்ற நிலையில் கூட அலுவலகம் வந்து வேலை செய்து கொண்டிருப்பவர். ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள் இந்தியர் நற்பணி மன்றம் நடத்தும் மழலையர் தமிழி வகுப்பிலும் படித்துக்கொண்டிருக்கின்றனர். கணவர் சொந்தமாய்த் செய்கிறார். இரண்டுக்கு மேல் வேண்டாம் என்று இவர் நினைத்தாலும், கணவரின் விருப்பத்திற்காக இன்னொரு குழந்தை என்பார். மிகவும் அன்பான பெண்மணி.

“இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கின்ற தறுவாயில் கூட வேலைக்கு வரணுமா… வீட்டில் ஒய்வாக இருக்கலாமே… இது கஷ்டமாக இல்லையா” என்று சக தோழிகள் நண்பர்கள் கேட்டால் “இது என்ன கஷ்டம்… கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்கள் படுத்து ஓய்வெடுப்பது தானே கஷ்டத்தைக் கொடுக்கும்….வேலைக்கு வருவது..சிந்தனையைப் பல விஷயங்களில் ஈடுபடுத்தி வேலை பார்ப்பது மற்றவர்களோடு கலந்துரையாடி கலகலப்பாக இருப்பது காலார நடப்பது போன்ற செயல்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயம் தானே! பிரசவம் ஒன்னும் பயப்படக் கூடிய விஷயமில்லையே … ஜீவன்களைப் பாருங்கள் … அவை எத்தனை இருக்கின்றன… நாம் மட்டும் இதை ஏன் கஷ்டம் என்று நினைத்துக் கவலைப்பட வேண்டும்” ஏன்பார் இன்முகத்துடன்.

திருமதி சரோவினிக்கும் அவர் அழைத்துச் மாதுவுக்கும் அவன் வாகனத்தில் இடமளித்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவனே கொண்டு போய் விட்டு வரலாமே என்ற எண்ணத்தில் அவன் தன் வாகனத்தில் விரைந்து கொண்டிருந்தான்.

அவனுடைய வாகனம் மாக்ஸ்வல் சாலை வழியாய் விரைந்து தஞ்சோங்பகார் சந்திப்பில் நின்று பச்சை விளக்கு வந்ததும் அவனுக்கு முன்பாக நின்ற வாகனங்கள் நகர்ந்ததும் அவனும் மெல்ல மெல்ல ஊர்ந்து நடந்து ஓடத்தொடங்கி அவன் பார்வையை அகலமாக்கினான்… இந்த இடத்திலுள்ள சின்னச் சின்ன சாலைகளிலும் அலசினான்…

அவன் தனது வாகனத்தை ஆன்சன் சாலையைக் கடந்து மீண்டும் மாக்ஸ்வல் சாலை வழியாகச் சென்டன் வேயில் வாகனத்தைச் செலுத்தும் போது… மழையும் தொடர்ந்தது… கெப்பல் சாலை சந்திப்பு தஞ்சோங்பகார் சாலையை அடைந்தபோது தான் அவனுக்குத் தெரிய வருகின்றது. அன்று முதல் அமுலுக்கு வந்திருக்கும் மின்னியல் சாலை கட்டண “சிஆர்பி“ திட்டம்.

கண்ணன் உடனே காந்த அட்டை மேல் கருவிக்குள் நோக்கியிருந்தபடி சாதனத்துக்குள் செலுத்தி தஞ்சோங் பகார் நுழைவாயிலில் வாகனம் மெல்ல கடந்து கீ செங் சாலை அருகில் வந்து பார்த்தபோது… அவளால் நடக்கமுடியாமல் வயிற்றுபு கனத்து, தொப்பை தொப்பையாய் நனைந்துபோய், அங்கே அவர் மட்டுமே நின்றிருந்தார் அவரோடு வந்த இன்னொரு பெண்மணியை அங்கே காணவில்லை.

தஞ்சோங் பகார்பிளாஸா ஓரமாய் போய் அவர் அருகே நிறுத்தி அவரை அழைக்கிறான். புன்னகையுடன் கையை அசைத்து வேண்டாம் என்று மறுக்கிறார். அவன் மறுமுறை வற்புறுத்திய் பின் நன்றி சொல்லிக் கொண்டே வாகனத்தில் ஏறுகின்றார்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில நான் போக வேண்டிய பஸ் வந்துடும்… உங்களுக்கு ஏன் வீண் சிரமம் .. எனக்காக இந்தப்பக்கமா வந்து தேடி அலைஞ்சுட்டீங்க… அப்புறம் உங்க வீட்டுக்குப் போறதுன்னா நேரமும், பணமும் செலவுதானே…!”

இருக்கையில் அமர்ந்து பாதுகாப்புப் பட்டையைப் போட்டுக் கொண்டே பேசும் அவரை அவன் அமைதியாகப் பார்க்கின்றான். அவரும்… கண்ணனைப் பார்க்கிறார் அவரின் கண்கள் பட படக்கின்றன…

“என்ன பார்வை இது…ஏன் இப்படிப் பாக்குறீங்க…” என்பது போன்ற பார்வை.

“பணமும் நேரமும் செலவானது கெடக்கட்டும்… நீங்க எப்போதும் அந்தப்பக்கத்திலே ஆன்சன் சாலையிலே தானே நிப்பீங்க… உங்க வீட்டுக்குப் போக வேண்டிய பஸ்கூட அங்கே தானே நிற்கும்… நீங்க ஏன் இங்கே வந்து நிற்கணும்… உங்களோட யாரோ ஒரு அம்மாவைப் பார்த்தேனே; அவுங்க எங்கே…! அவுங்கள விட்டுட்டு நீங்க மட்டும் தனியா மழையில் நிக்கறீங்களே…?”

திருமதி சரோஜினி பூவாய்ச் சிரிக்கிறார்.

“அவுங்க போக வேண்டிய இடத்துக்குப் போயிட்டாங்க…”

“போயிட்டாங்களா… அப்படின்னா அவுங்க உங்க சொந்தக்காரங்க இல்லையா…?”

அவனுக்குள் எழுந்த சிறு சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள அவன் அவசரப்படுகிறான், திருமதி சரோஜினி இளநகையுடன் அவனைப் பார்க்கிறார்.

“இல்லீங்க மிஸ்டர் கண்ணன்… அவுங்க ஒரு சீனப் பெண்மனி… வயசான காலத்துல அவுங்களோட சொந்தத்காரர்களும் பிள்ளைகளும் கைவிட்டதால தனியா இருந்து கஷ்டப்படறாங்க… யாரோ சொன்னாங்கன்னு ம.சே.நி. சேவை அலுவலகத்துல புருஷன் விட்டுப்போன பணம் ஏதும் கிடைக்குமான்னு கேட்டு வந்துருக்காங்க… வந்த வேலை முடிஞ்சு வீடு திரும்பறப்ப மயக்கமும் களைப்பும் அதிகமாயிடுச்சு… மேல நடக்க முடியாம உட்கார்ந்துட்டாங்க… அதனாலத்தான் அவுங்களை வாலி ஸ்த்ரீட் வழியாய் நான் அழைச்சிக்கிட்டு வந்தேன்… பக்கத்தில உள்ள தஞ்சோங் பகார் பிளாசாவுல தான் அவுங்க தங்கி இருக்காங்க… அங்கேயே விட்டுவிட்டு வந்துட்டேன்…”

அவனுக்குத் திகைப்பாக இருந்தது.

தன்னுடைய தாய் தகப்பனைப் பற்றிய கவலையே இல்லாமல் எத்தனையோ பேர் இக்காலத்தில் உலவுகின்ற போது இப்படியும் ஒரு பெண்மணியா?

“என்ன பார்க்கறீங்க… !என்னைப் பார்த்தா கிறுக்கு மாதிரி தோணுதா உங்களுக்கு… சின்னக் குழந்தைகளும் வயசான பெரியவங்களும் தெய்வத்துக்குச் சமமானவுங்க மிஸ்டர் கண்ணன்…அவுங்களுக்கு உதவி செய்யறப்ப அங்கே சாதின்னு, இனமின்னு, மதமின்னு பார்க்கக் கூடாது. அவுங்கள நம்மக் குழந்தைகளா… நம் தாய்-தகப்பனா நெனைக்கணும்…”

வார்த்தைகளைக் கேட்கும் போது அவன் மேனி அந்த ஒருமுறை சிலிர்த்து அடங்குகின்றது.

“எனக்குப் பெற்றோர்களோட வாழற பாக்கியம் நான் சின்னவளா இருந்தப்பவே அவுங்க கிடைக்கலே…நான் சின்னவளா இருந்தப்பவே அவுங்க செத்துட்டாங்க, என் மாமனார்-மாமியாரும் தமிழ்நாட்டிலேயே தங்கிட்டாங்க… பெரியவங்களுக்குப் பணிவிடை செய்து அவுங்களோட ஆசியைப் பெறும் வாய்ப்பு வசதி இல்லாமப் போன எனந்குள்ளே நெறைய ஆசை இருக்கு அதை இந்தமாதிரி நிறைவேத்திக்கணும்னுதான் கடவுள் வழியைக் காட்டறதா நான் நினைக்கிறேன்”.

திருமதி. சரோஜினியின் வார்த்தைகள் கண்ணனின் கண்களில் நீர்த்திரையிடுகின்றன. பெண்குலத்தின் பொன் விளக்காய் ஒளிதந்து மறைந்த அன்னை திரேசாவின் முகம் அவன் கண்ணில் நிறைகின்றது.

தனது தாய்-தந்தையரைப் பேணிப் பாதுகாப்பதையே பாரமாய்க் கருதி அவர்களை அனாதை விடுதிகளுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் அனுப்பிவிடும் பிள்ளைகள் நிரம்பிக் கிடக்கும் இக்காலகட்டத்தில் இப்படியும் ஒரு பெண்ணா?

அன்பைக் காட்டவும் அரவணைக்கவும் மதம், இனம், வசதி வாய்ப்பு தேவையில்லை என்பதைத் தன் செயல் வழி அறிவுறுத்தி விட்டுச் சென்ற அப்பெண்மணியை நினைக்கும் போதெல்லாம் அவனுக்குக் கண்கள் குளம் கட்டிக் கொள்கின்றன. அதை அவன் ஆனந்தமாய் அனுபவிக்கின்றான்.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *