கண்மணிக்கு கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 1,172 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிந்தால் கண்மணிக்கு கல்யாணம். ஆனால், மாப்பிள்ளை இன்னும் சிங்கப்பூர் வந்து சேரவில்லை. ஆம். கண்மணி இணையத்தின் மூலம் பார்த்த மாப்பிள்ளை கண்ணன் மலேசியாவின் கோலாலம்பூரைச் சேர்ந்தவன். கல்யாண ஏற்பாட்டுடன் தன் நண்பனுடன் காரில் வந்து விடுவதாக கண்ணன், கண்மணியிடம் தொலைபேசியின் மூலம் கூறியிருந்தான்.

இதற்கிடையில் கண்மணியின் தாய் பூங்காவனம் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதய நோய்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தாள். கண்மணியின் ஒரே அக்கா சகுந்தலா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தஞ்சாவூரில் சொந்த அத்தை மகனை திருமணம் செய்து சென்றவள். ஏதாவது பொருள் உதவி தேவை என்றால் தான் கடிதமே வரும்.

கண்மணியின் திருமணம் இணையத்தின் மூலம்தான் நிச்சயிக்கப் பட்டிருந்தது. ஆனால், முக்கிய சக நண்பர்களையும் உறவினர் சிலரையும் போன் மூலம் அழைத்து சிறு விருந்து வைத்து கோவிலில் மாலை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதுகூட கண்மணிக்கு சோதனையாகத்தான் இருந்தது. அவள் பிறந்த நேரமா? அல்லது அவள் குடும்ப ஸ்ரீழ்நிலையா?

எப்படியோ சிங்கப்பூரில் ‘எ’ நிலை வரை படித்துவிட்டு ஒரு தனியார் அலுவலகத்தில் ‘கிளார்க்’காக பணிபுரிகிறாள்.

பொறுப்பில்லாத தந்தை, பாவம் கண்மணி என்ன செய்வாள்? கடந்த ஐந்து வருடமாக அவள் சம்பாதித்துதான் குடும்பம் நடக்கிறது. நோயாளி தாயை வைத்துக் கொண்டு வீடு, மருத்துவமனை என்று அலைச்சல் வேறு அவளை வாட்டி எடுத்தது. சேமிப்பு என்று சொல்ல ஒரு வெள்ளி பணம் கூட இல்லை. கடன் இல்லாமல் இருப்பது அவள் செய்த பாக்கியம்.

கண்மணி கவலைப்பட்டாள். ஆடம்பரமாக கல்யாண மண்டபத்தில் பல ஆரவாரங்களுடன் நடக்கும் கல்யாணங்களுக்கிடையில், கண்மணியின் கல்யாணம் ‘தொட்டுக்க ஊறுகாய் போல’ கணவன் மனைவி என்ற உடன்பாட்டை சம்பிரதாயங்களுக்காக ஊரார் மத்தியில் அனுமதி பெறுவதற்காக நடத்தப்படும் சடங்கை மிக எளிமையாக நடத்த ஏற்பாடு செய்து அதுவும் இப்போது ,சோதனையாக இருக்கிறது. இப்படி இவளை வாட்ட இறைவனுக்கு ஏன் இந்த ஆசை என்றுதான் கண்மணி நினைத்தாள்.

கண்மணியின் வயதையொத்த பெண்கள் திருமணம் செய்து கொண்டு கணவனுடன் உல்லாசமாக வலம் வந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். கண்மணிக்கும் கல்யாண ஆசை வந்து அவளும் கணவன் உறவோடு பெருமையுடன் வாழ ஆசைப்பட்டாள்.

அவளுக்கு என்ன குறை. வாட்டசாட்டமாக ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம். அறுபது கிலோ உடல் எடையில் ஆஜானுபாகுவாக சற்று ஆண்களின் பலத்தோடு இருந்தாள். இந்தக்கால இளைஞர்கள் கனவில் நடிகை சிம்ரனைப் போல, உலக அழகி ஐஸ்வர்ய் ராயைப் போல பெண் தேடுபவர்களுக்கு, கண்மணியின் அழகு எடுபடவில்லை. அதற்காக கண்மணி சற்று கவலைப்பட்டாலும் மனம் தளரவில்லை. பத்திரிக்கையில் என்றோ படித்த ஞாபகம். ‘இண்டர்நெட் மூலம் திருமணம் புரிந்த தம்பதிகள்’. கண்மணிக்கு சிறிய சபலம் மனதில் தோன்ற இவளும் இணையத்தின் ழூலம் தொடர்பு கொண்டு சில மாதங்கள் முயற்சியின் பலன் பல வரன்களின் தொடர்பு கிடைத்தது. ஆனால் இவள் எதிர்பார்த்த தகுதிகள் ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லை. இறுதியாக கண்மணி தன் தகுதியை சற்று இறக்கிக் கொண்டு கிடைத்த மாப்பிள்ளைதான் இந்த மலேசிய இளைஞர் கண்ணன் என்பவன்.

கண்ணன் தன்னை பெரிய வியாபார வித்தகர் என்றும் தனக்கு மலேசியாவில் இரண்டு பங்களா, இரண்டு கார் இருப்பதாகக் கூறிக் கொண்டு கண்மணியை எப்படியோ வளைத்து விட்டான். கண்மணியின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, கண்ணன் தன்னுடைய சொந்தக் காரில் சிங்கப்பூர் வந்தான். ஏழ்மையில் இருக்கும் கண்மணி காரைப் பார்த்தவுடன் மயங்கி விட்டாள். நடக்க நினைத்தவளுக்கு பறக்க வாய்ப்பு கிடைத்தது. கண்ணன் கண்மணியை சிங்கப்பூரின் பெரிய கடைத் தொகுதிக்கு அழைத்துச் சென்று விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுத்தான். பணம் கண்ணன் கையில் தண்ணீர் பட்ட பாடு பட்டதை கண்மணி பார்த்து பிரமித்தாள். இருவரும் தங்கள் தகுதிகளை வார்த்தை ஜாலங்களுடன் பரிமாறிக் கொண்டனர்.

இறைவன் போட்ட முடிச்சு என்றே இருவரும் நினைத்தனர். கண்ணன்- கண்மணி பெயர் பொருத்தம் இருவருக்கும் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர்.

மலேசியாவில் கண்ணன் வீட்டில் பல எதிர்ப்புகளுக்கிடையில்தான் கண்மணியை மணமுடிக்க சம்மதம் கிடைத்தது. சிங்கப்பூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், வியாபாரத்தை சிங்கப்பூரிலும் விஸ்தரிக்கலாம் என்ற எண்ணத்தில் கண்ணன், அவன் பெற்றோரிடம் கூறி சம்மதத்தை பெற்றுவிட்டான் பண ஆசை பிடித்தவன். கண்மணியோ திருமணத்திற்குப் பிறகு தன் கணவனோடு மலேசியாவுக்குச் சென்று.அவனது பங்களாவில் உல்லாசமாக வாழலாம் என கனவு கண்டாள். பொறுத்திருந்து பார்ப்போமே யார் கனவு ஈடேறும் என்று.

இரவு பதினொரு மணிக்கு மாப்பிள்ளை கண்ணன் ஒரு வழியாக சிங்கப்பூர் வந்தான். மாப்பிள்ளை வீட்டில் மொத்தம் பத்து பேர் மட்டும் பேருந்து மூலம் வந்து சேர்ந்தனர். கண்மணிக்கு வந்து சேர்ந்த விபரத்தை கைத்தொலைபேசி மூலம் அறிவித்தான். கண்மணி அவர்களை தன் தோழியின் வீட்டில் கிளமண்டியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தாள்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு மருத்துவர் அனுமதியுடன் கண்மணி தன் தாய் பூங்காவனத்தை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தாள் பூங்காவனத்தின் உடல்நிலை சற்று தெளிவடைந்திருந்தது. பெற்ற மகள் திருமணக் கோலத்தைப் பார்க்க இறைவன் சற்று பலத்தை கொடுத்திருந்தான்.

கண்ணன் தன் நண்பனுடன் ஒரு வழியாக மாப்பிள்ளை கோலத்தில் பட்டு வேஷ்டி, ஜிப்பாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேங்ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான். கண்மணி தன் தோழியின் உதவியுடன் மிக சாதாரண நீல நிற பட்டுப்புடவை உடுத்தி லேசான ஒப்பனையுடன் தன் அம்மாவுடன் காலை பத்து மணிக்கு அதே ஆலயத்திற்கு வந்தாள்.

அழைக்கப்பட்ட உறவினர் சிலர் மாப்பிள்ளையை பார்த்து விட்டு ‘பெண்ணுக்கு தம்பி போல’ இருக்கிறான் என முனுமுனுத்துக் கொண்டே வந்து பெயருக்கு வாழ்த்தி அவர்கள் போட்ட சைவ சாப்பாட்டை கடனுக்காக சாப்பிட்டு விட்டு பறந்தனர்.

கண்ணன்-கண்மணி தம்பதியாகிவிட்டனர். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். இரண்டு மாதம் எப்படியோ ஒடி விட்டது. கண்மணி தன் வேலயை ராஜினாமா செய்ய நினைத்தபோது கண்ணன் தடுத்தான்; மறுத்தான்.“

கண்மணி வேலய விட வேண்டாம். ஆயிரத்து ஜநூறு வெள்ளி சம்பளம் யார் தருவா சொல்லு” என்று கண்ணன் கூறியதைக் கேட்ட கண்மணி ஆடிப் போய்விட்டாள். வேலையை விட்டுட்டு என்னோட மலேசியாவுக்கு வந்துரு என்று தன்னை அழைப்பான் என காத்திருந்த கண்மணிக்கு என்ன சொல்வதென்று தடுமாறினாலும்,

“அதான் நீங்க பெரிய பிஸ்னெஸ்மேன் ஆயிற்றே உங்களுக்கு இந்த என்னுடைய சம்பளம் என்ன பெரிய பணம்”, என்றாள்.

கண்ணன் எதையும் மறைக்காமல் பேசத் தொடங்கினான். “கண்மணி நீ நெனைக்கிற மாதிரி என் வியாபாரம் இப்போ லாபத்தில் நடக்கலை. நஷ்டம் ஏற்பட்டு நிறைய கடன் வேறு வாங்கிட்டேன். அதான் என்ன செய்யனும்னு தெரியாம கடனை அடைக்க வழி தெரியாமல் திண்டாடறேன்”, என்றதும் முதன் முறையாக கண்மணி அதிர்ச்சியுடன் “என்ன சொல்றீங்க?” என்று சத்தம் போட்டாள்.

கண்மணியின் கனவுகள் கலைந்து விட்டதாக, கண்ணன் தன்னை ஏமாற்றி விட்டானோ என்று உணரத் தொடங்கினாள்.

“அப்பம்னா உங்க காராவது உங்களுடையதா இல்ல… என்றதும், “இந்த பழைய கார்தான் என்னுடையது. கல்யாணத்தில் நான் வந்த கார் என் நண்பனுடையது”, என தயங்கியபடி கூறினான்.

“நீங்க மனுஷனே இல்லே, என் முகத்திலே விழிக்க வேணாம். இங்கிருந்து போயிடுங்க,” என புலியாகப் பாய்ந்தாள் கண்மணி.

கண்ணன் சிறிதும் அச்சப்படாமல் “இப்போ என்ன ஆச்சு, இங்கே உன் அம்மா வீட்டில் நாம் தங்கிக்கலாம். உனக்கு ஒரு வேலை இருக்கு, என் வியாபாரம் ஒரு வேளை அடுத்த வருடம் நல்லா நடந்தா லாபம் வராமயா போயிடும்” என்றான்.

“இனி நான் எதையும் நம்பத் தயாரா இல்லே”, என்று கண்மணி கண்ணனை வெறுத்தாள். தன்னிடம் எல்லாவற்றையும் .மறைத்து பொய் சொல்லி தன்னை ஏமாற்றி விட்டான் என அழுதாள் ஆசை வார்த்தை காட்டி தன்னை ஏமாற்றியவனுக்கு, பாடம் கற்பிக்க விரும்பினாள்.

தன் வாழ்க்கை ஏதோ நாடகம் போல ஆகிவிட்டதே. இதைப் பற்றி யாரிடமும் பேச கண்மணி அஞ்சினாள் திருமணம் என்ற சடங்கை கேவலப்படுத்தி விட்ட்தாக நினைத்து கண்ணனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

‘முதல் கோணல் முற்றும் கோணல்’ நாம் எப்படி ஏமாந்து போனோம் என எண்ணிய கண்மணி, இதற்கு என்ன விமோச்சனம் என்று யோசித்தவள், கண்ணனிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியதுதான் என நினைத்தாள் ஆனால், விதியின் முடிச்சு ரொம்ப வலியுதாக இருந்தது.

திம்ரென்று கண்மணிக்கு தலையை சுற்றியது. வாந்தி வருவது போல இருந்தது. தலையை வலித்தது. மயங்கி கீழே விழப்போனவளை கண்மணியின் தாய் பூங்காவனம் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் பின்பு கண்மணிக்கு பழச்சாறு கொண்டுவந்து கொடுத்து குடிக்கச் சொன்னாள் கண்மணிக்கு எதையும் சாப்பிட பிடிக்கவில்லை. அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்தாள் கண்மணி மருத்துவர் சொன்னதைக் கேட்ட கண்மணிக்கு மயக்கமே அதிகமானது.

ஆம்! கண்மணி கர்ப்பமாக இருந்தாள். ஆனந்தப்பட வேண்டிய நேரத்தில் ஆத்திரப்பட்டாள் கண்மணி இந்த வாழ்க்கை தொடர வேண்டுமா? இப்படிப்பட்ட வாழ்க்கை வாழவா7 இத்தனை சிரமத்தை எடுத்துக் கொண்டு போராடி வந்தோம். நினைக்க நினைக்க கண்மணிக்கு நெஞ்சுக்குள் கனல் பறந்தது கண்ணீர் பெருகியது.

திருமணத்திற்கு முன்பு கண்ணன் எவ்வளவு கண்ணியமாக நடந்துக் கொண்டான். பெரிய வள்ளல் பரம்பரை போல கண்மணிக்கு அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்தான் வேஷம் போட்டு மோசம் பண்ணியதை நினைத்து வேதனைப்பட்டாள் கடைத் தொகுதிக்கு அழைத்துச் சென்று பார்த்துப் பார்த்து கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தானே, கடனில் ழூழ்கி இருப்பவன் ஏன் இப்படி கண்மூடித் தனமாக நடந்துக் கொண்டான். ஏமாந்து விட்டோமே என்று தவித்தாள் கண்மணி. தனக்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டவள் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தாள் வயிற்றை தடவிப் பார்த்தாள் கருவிலேயே கேள்விக்குறியாக இருக்கும் குழந்தையின் எதிர்காலம் எப்படி பிரகாசமாக அமைய முடியுமா?

கண்ணனை விவாகரத்து செய்து விட்டு வாழ்க்கைப் பாதையிலிருந்து விலகிவிட முடிவு செய்தாள் குழந்ன்தயை கருவிலேயே அழித்து விடவும் துணிந்தாள் கண்மணி . விசயம் தெரிந்த கண்மணியின் தாய் பூங்காவனம் என்னவெ ன்று தெரியாமல் தவித்தாள் அவள் இப்பொழுதுதான் உடல் நலம் தேறி வந்தாள். மேலும் இப்படி ஒர் அதிர்ச்சி.

அப்போது திம்ரென்று கண்மணியின் அக்கா சகுந்தலா இந்நிதயாவிலிருந்து அழுது கொண்டே வந்தாள் கண்மணியின் அம்மா பூங்காவனம் என்னவென்று விசாரித்த போது சகுந்தலா சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சியுடன் இருந்தது.

சகுந்தலாவுக்கு திருமணமாகி ஆறு வருடமாகியும் குழந்தை பிறக்காததால் அவள் கணவன் தஞ்சாவூரில் வேறு ‘ ஒரு பெண்ணை மணந்து கொள்ள ஏற்பாடு நடப்பதாக சொன்னாள்.

“இறைவா இது என்ன சோதனை? ஒருத்திக்கு குழந்தை பாக்கியம் இல்லை இன்னொருத்திக்கு உடனே குழந்தை பெறும் பாக்கியம் கிடைத்தும் அதைப் பெற்று வளர்க்க துணிச்சல் இல்லாமல் இருக்கிறதே என கண்மணியின் தாய் புலம்பி அழுதாள்.

கையெழுத்தை மாற்றி எழுதலாம். தலையெழுத்தை எப்படி யாரால் மாற்றி எழுத முடியும்?

கண்மணியின் விபரங்களை கேட்ட சகுந்தலா. குழந்தையை பெற்றெடுக்குமாறு வேண்டிக் கொண்டாள்.

“மனைவி உயிரோடு இருக்கும்போது இன்னொரு பெண்ணை மறுமணம் செயதுக்கொள்வதுதான் உலகிலேயே பெண்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய கொடுமை உன் கணவன் அப்படிப்பட்ட தவறைச் செய்யவில்லை. காலம் உனக்கு நல்ல பாதையைக் காட்டும்”, என சகுந்தலா தங்கை கண்மணிக்கு ஆறுதல் கூறினாள்.

ஆனால் கண்மணி தன்னை ஏமாற்றிய கண்ணனின் குழந்தையை வயிற்றில் சுமப்பதை பாரமாக எண்ணினாள். கண்ணனுக்கு பாடம் புகட்ட விரும்பினாள். “மனைவியை ஏமாற்றும் கணவன்மார்களுக்கு பாடம் புகட்ட வேண்டியதுதான். ஆனால், எந்தப் பாவமும் அறியாத குழந்த்யை கொல்வது ஞாயமா? என சகுந்தலா கேட்டாள்.

குழந்தையை பெற்றெடுத்து இந்த சமூகத்தில் அல்லல் பட விட வேண்டுமா என கண்மணி யோசித்தாள்.

பெற்றவர்களைவிட்டு விட்டு தான் மலேசியாவில் உல்லாசமாக வாழலாம் என நிவுனத்தது ரவ்வ?வு தவறு என உணர்ந்தாள் கண்மணி. அதற்காக இறைவன் கொடுத்த தண்டனையோ இது என அறிந்தாள்.

குழந்த்யை பெற்றெடுப்பாளா கண்மணி?

மலேசியாவுக்குச் சென்ற கண்மணியின் கணவன் கண்ணனும் திரும்பி சிங்கப்பூர் வரவில்லை.

யோசிக்காவுல் அவசரமாக கண்டதே காட்சி என முடிவெடுக்கும் கண்மணி போன்ற பெண்களுக்கு அனுதாபப்படுவதை விட வேறு என்ன செய்ய முடியும்?

கண்ணன் மலேசியாவில் வேறு பெண்ணை தேட ஆரம்பித்து விட்டான் திருமணம் செய்து கொள்ள என்ற செய்தி காற்றுவாக்கில் மிதந்து கொண்டிருந்தது.

– தமிழ் முரசு 15.02.2003, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *