கணேசன் கண்ட கனவு பலிக்கலையே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 3,970 
 
 

‘கனவு’ என்பது ஏழை,பணகாரன்,நல்லவன் கெட்டவன்,ஆண்,பெண்,சின்னவன்,பெரியவன், கிழவன் என்று பாகுபாடு பார்க்காமல் எலோருக்கும் நிறைய சந்தோஷத்தை தருகிறது,
காலக்ஷபம் கேட்டு விட்டு வீட்டுக்கு வந்த பெரியவர் தன் கனவில் தான் சொர்க்கத்தில் இருப்பது போல ‘கனவு’ கண்டு சந்தோஷப் படுகிறார்.பத்து நிமிஷம் கூட தன்னோடு நின்று பேசாத காதலியை,காதலிக்கும் அந்த காதலன் தூக்கத்திலேஅவளோடு நெருக்கமாக உட்கார்ந்துக் கொண்டு மணி கணக்கா பேசி வருவது போல ‘கனவு’ கண்டு மகிழ்கிறான்.பத்து ரூபாய் கூட கிடைக்காத ஒரு பிச்சைக்காரன் தூக்கத்திலே ஒரு பணக்காரனாக இருந்து வருவது போல ‘கணவு’ காண்கிறான்.

இந்த கனவுக்கு கணேசனுக்கு விதி விலக்கு இல்லையே!.

கணேசன் படுத்துக் கொண்டு கனவு கண்டுக் கொண்டு இருந்தான்.

மணி ஏழடிச்சும்,அவன் அம்மா,அப்பா இருவரும் பல முறை பலமாக குரல் கொடுத்தும் எழுந்தா¢க்காமல் தூங்கிக் கொண்டு இருக்கும் போது,ஒரு ‘மக்’ பச்சை தண்ணியை, அவன் அம்மா முகத்தில் கொட்டிய போது வாரி சுரு ட்டிக் கொண்டு எழுந்தான்.”ஏண்டா கணேசா,மணி ஏழடிடுச்சி இருக்கு.படிக்கிற பையன் இப்படி தூங் கிக் கிட்டு இருக்கே.உனக்கு வெக்கமா இல்லே”என்று அம்மா கத்திய போது கணேசன் தன் கனவு உலகத்தை விட்டு நிஜ உலகத்துக்கு வந்தான்.

சுவாமி படத்துக்கு முன்னால் கந்த ‘ஷ்ஷ்டி மந்திரத்தை’ அப்பா உரக்க சொல்லிக் கொண்டு இருந்து கேட்டது கணேசனுக்கு.தன் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்த அவனுக்கு,அண்ணன் ராமசாமி குளியல் அறையில் தன் தலையில் மீதம் இருந்த தண்ணீயை தலையில் ஊத்திக் கொள்ளும் சத்தம் கேட்டது.சின்ன தங்கை சுமதி கதவைத் திறந்துக் கொண்டு “இந்தாம்மா,நீ கேட்ட கருவேப்பி லை” என்று சொல்லி கொண்டு வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தான்.

அவனுக்கு மிகவும் வெக்கமாக இருந்தது.’நம்ம அண்ணனும், தங்கச்சியும்,எழுந்து விட்டு இருக்காங்களே, நாம தான் இன்னும் தூங்கி கிட்டு இருக்கோமாமே’ என்று நினைத்து,தன் படுக்கையையும் போர்வையையும் வேகமாக எடுத்து வைத்து விட்டு பிடிக்காமல்,அவன் மெல்ல எழுந்து, நிறைய கொட்டாவி விட்டுக் கொண்டே பல் பொடியை கையில் கொட்டிக் கொண்டு பல் தேய்த்து விட்டு, முகத்தில் நிறைய பச்சை தண்ணீரை விட்டு கழுவிக் கொண்டு வந்தான் கணேசன்.தூங்கி கொண்டு இருக்கும் போது வந்த கனவிலே கணேசன் அவன் ‘ப்ரெண்ட்ஸ்’களுடன் கார்பரேஷன் மைதானத்தி தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டு இருந்ததையும், அவன் சதம் அடிக்க இன்னும் மூனே ‘ரன்’ பாக்கி இருந்ததையும் நினைத்து சந்தோஷப் பட்டான்.

பல் தேய்த்துக் கொண்டு இருந்தானே ஓழிய கணேசன்,இன்னும் கனவு உலகத்தை விட்டு நிஜ உலகத்துக்கு வரவில்லை. அவன் மனசிலே ‘நாம் நல்லா கிரிகெட் ஆடி ஒரு சச்சின் டெண்டூல்கர் மாதிரியோ,தோனி மாதிரியோ,விராட் கோலி மாதிரியோ வர வேணும்’ என்று மிகவும் விரும்பினான்.‘ அப்படி நாம வந்துட்டா, நம்மை பல கோடி ரூபாய் குடுத்து T20 ஆட்டம் ஆட பல ‘டீம்கள்’ முன் வருமே. அப்படி அவங்க குடுத்தா,நாம ஒரு விலை ஒசந்த கார்,பங்களா எல்லாம் வாங்கலாமே.நம்மை காதலிக்க பல ‘மாடல்’கள் வருவார்களே. அந்த ‘லைப்பே லைப்’ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது அவன் விரலை அழுத்தி கடித்துக் கொண்டு விட்டான்.

வலி உயிர் போய் விட்டது.அப்போது தான் அவன் இந்த உலகத்துக்கே வந்தான்.விரலை கொஞ்ச நேரம் வாயில் வைத்து சப்பினான்.வலி போன பிறகு மீதி பல் பொடியைத் தேய்த்து விட்டு வெறுப்புடன் ஹாலுக்கு வந்தான்.

தன்னுடைய கம்மி சம்பளத்தில் எப்படியோ மாலதி தம்பதிகள் மூன்று குழந்தைகளை பள்ளி கூடத்தில் சேர்த்து படிக்க வைத்து கொண்டு இருந்தார்கள்.பத்தாவது ‘பாஸ்’ பண்ணின உடனே முதல் பையன் ராமசாமி,அப்பாவை பார்த்து “எனக்கு மேலே படிக்க ஆசை இல்லே, நான் ஒரு ‘சூப்பர் மார்கெட்லே’ வேலை தேடிக்கப் போறேன்” என்று சொன்னதும் மாலதி தம்பதிகள் திடுக்கிட்டுப் போனாகள்.

”ஏண்டா ராமசாமி,நீ நல்லா படிச்சி ஒரு நல்ல வேலையிலே சேந்து நிறைய சம்பளம் சம்பாதிச்சு வந்து, இந்த குடும்பத்துக்கு ஆதறவா இருப்பேன்னு நான் நினைச்சேன். நீ என்னடான்னா பத்தாவது படிச்சது போதும்ன்னு வேலைக்கு போகப் போறேன்னு சொல்றே” என்று கத்தினார் மாதவன்.

”அதெல்லாம் முடியாதுப்பா, எனக்கு மேலே படிக்க வேணாம்.நான் வேலைக்கு தான் போவப் போறேன்” என்று சொல்லி விட்டு செருப்பை போட்டுக் கொண்டு வெளியே போய் விட்டான்.

சொன்னது போல ராமசாமி ஒரு சூப்பர் மார்கெட்டில் ஒரு வேலைக்கு சேர்ந்து விட்டான். மாச சம்பளம் வந்ததும் அவனுக்கு புது, புது,’ட்ரஸ்’ எல்லாம் வாங்கிக் கொண்டானே ஒழிய வீட்டுக்கு தன் சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட அவன் அப்பா அம்மா கிட்டே கொடுக்கவில்லை. மாதவன் பொறுமையாக இருந்தார்.

’இவன் தனக்கு ‘டிரஸ்’ எல்லாம் வாங்கிக் கொண்டு கொஞ்ச மாசம் போனதும்,அவன் சம்பள பணத்தில் ஒரு பாதியை குடும்பத்துக்கு குடுப்பான்’ என்று நினைத்து வந்தார்.

ஒரு வருஷம் ஆயிற்று.ராமசாமி ஒரு புது மோட்டார் ‘பைக்கை’ ஓட்டி வந்து வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு,த லையிலே போட்டு இருந்த ‘ஹெல்மட்டை’எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு “நான் இந்த மொட்டார் ‘பைக்கையும்’,‘ஹெல்மட்டையும்’ வாங்கி இருக்கேன். ரெண்டுக்கும் மொத்தம் ரெண்டு லக்ஷ ரூபாய் ஆச்சு. நான் பாங்கிலே ‘லோன்’ போட்டு வாங்கி இருக்கேன். அதுக்கு மாசா மாசம் பதினைஞ்சு ஆயிரம் ‘லோன்’ கட்டி நான் அடைக்கணும்” என்று சொல்லி விட்டு தட்டை எடுத்து வைத்துக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். மாலதி அவனுக்கு சாதம் பறிமாறினாள். சாப்பீட்டு விட்டு “நான் கொஞ்சம் வேளியே போயாறேன்”என்று சொல்லி விட்டு செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பிப் போய் விட்டான் ராமசாமி.

அவன் தலை மறைஞ்சதும் ”மாலதி, இவன் மனசிலே என்ன நினைச்சுக் கிட்டு இருக்கான். சம்பள பணத்திலே காலணா கூட நமக்கு குடுக்காம, இங்கே காலை நாஷ்டா, ராத்திரி சாப்பாடு சாப்பிடறான். இது என்ன தர்ம சத்திரம்ன்னு நினைச்சுக் கிட்டு இருக்கானா தடியன். நீயும் வாய் தொறக்காம அவனுக்கு எல்லாம் போட்டுகிட்டு இருக்கே” என்று கத்தினார்.

”எப்படிங்க நான் அவனுக்கு நாஷ்டா சாப்பாடு நான் போடாம இருக்கிறது சொல்லுங்க. அவனை நான் பத்து மாசம் சும்ந்து பெத்தவங்க” என்று பிள்ளை பாசம் மேலிட சொன்னாள் மாலதி.

இரண்டு வருஷம் ஆகியும் ராமசாமி கொஞ்சம் கூட மாறாமல் அவன் இஷடப் படி ‘ஜாலி’யாக இருந்து வந்தான். மாதவன் “மாலதி,நான் பொறுத்தது போதும், இனிமே நான் சும்மா இருக்கப் போவது இல்லே. இன்னைக்கு ராத்திரி அவன் வரட்டும்.ரெண்டுலே ஒன்னும் எனக்கு தெரிஞ்சு ஆகணும்.மாச சம்பளத்திலே பாதியாச்சும் அவன் நமக்கு குடுத்தான்னா,அவன் இங்கே இருக்கட்டும்.இல்லேன்னா அவன் எங்காச்சும் வெளியே போய் இருக்கட்டும்”என்று கத்தினார்.

அப்பா கத்துவதை கேட்டுக் கொண்டே வீட்டுக்கு உள்ளே வந்தான் ராமசாமி.நேரே போய் அவன் துணிமணிகளை ஒரு பையில் போட் டு கொண்டு “நான் இனிமே இந்த வூட்டுக்கு வர மாட்டேன்” என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பிப் போய் விட்டான். அன்று வீட்டை விட்டு போன ராமசாமி மறுபடியும் வீட் டுக்கே வரவில்லை. ஒரு வருஷம் ஆகியும் ராமசாமி அப்பா, அம்மா,தம்பி, தங்கையை பார்க்க வரவில்லை. மாலதியும் மாதவனும் ‘ராமசாமி இனிமே இந்த வீட்டுக்கு வரமாட்டான்’ என்று முடிவு பண்ணீ அவனுக்கு தலை முழுகி விட்டார்கள்.

கணேசனைப் பார்த்து மாலதியும், மாதவனும் அடிக்கடி ”டே கணா, இப்போ எங்களுக்கு நீ இருக்கிறது தான் ஒரே பிள்ளை. நீயாவது நல்லா படிச்சி ஒரு நாலு காசு சம்பாதிச்சு எங்களுக்கு உபயோகமா இருந்து வாடா. இது வரைக்கும் நீ விளையாடி ‘டயத்தே’ வீணடிச்சுட்டே. போதும். இனிமே நீ விளையாட போக வேணாம். நல்ல படிச்சு முன்னுக்கு வாடா” என்று நல்ல புத்தி சொல்லி வந்தார்கள்.

ஆனாலும் கணேசன் தன் மனசுக்குள்ளே ‘நான் நல்லா படிச்சு வேலைக்குப் போனா என்ன பத்தாயிரமோ,இருபதாயிரமோ தான் சம்பளம் வரும். அதுவே நாம நல்லா கிரிக்கெட் ஆடி வந்து ஒரு நல்ல ‘டீம்லெ’ சேந்தா,முதல்லே ஆயிரமா வரும், அப்புறமா லக்ஷ லக்ஷமா ரூபாய் வரும்,அப்புறமா கோடி,கோடியா ரூபாய் வரும்.அதனால்லே நாம கிரிகெட் நல்ல விளையாடி வரலாம்.நமக்கு படிப்பு முக்கியம் இல்லே,விளையாட்டு தான் முக்கியம்’என்று முடிவு பண்ணி கிரிக்கெட் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தான். கனேசனை விட ரெண்டு வயது சின்னவளான தங்கை சுமதி நன்றாக படித்து வந்தாள்.

அந்த வருஷம் கணேசன் ‘ப்லஸ் டூவில்’ ‘பெயில்’ ஆகி விட்டான்.

மாதவனும் மாலதியும் நன்றாக திட்டினார்கள்.கணேசன் கவலைப் படவில்லை.அவன் நிதானமாக “என்னை மறுபடியும் ‘ப்லஸ்டூ லே’ சேத்துடுங்க.நான் நல்லா படிச்சு ‘பாஸ்’ பண்ண ‘ட்ரை’ பண்றேன்” என்று சொன்னான். மாலதியும் ரொம்ப சொல்லவே மாதவன் கணேசனை மறுபடியும் பணம் கட்டி ‘ப்லஸ் டூவில்’ சேர்த்தார். பாடங்களை படித்து வந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் தன் ‘டீமோடு’ தவறாமல் கிரிக்கெட் ஆடி வந்தான் கணேசன். அவன் நண்பர்கள் எல்லாம் ஒரு வாய் வைத்தால் போல் “டே,கணா,நீ தாண்டா நம்ம’ டீமு’க்கு ஒரு தோனி மாதிரி. ரொம்ப நல்லா ‘விக்கட் கீப்பர்’ ”என்று புகழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் சொன்னதை கேட்டதும் கணேசன் மனம் ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்தது. அடிக்கடி தோனியை ப் போல் ‘ஆக்ஷன்’ பண்ணி வந்தான். ’விக்கட் கீப்பிங்கில்’ மிகவும் கவனம் செலுத்தி வந்தான்.அந்த வருஷமும் கணேசன் ‘ப்லஸ் டூ’வில் பெயில் ஆகி விட்டான்.

அடுத்த வருஷம் ‘ப்லஸ் டூ ரிசல்ட்’ வந்தது.சுமதி ரொம்ப நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருந்தாள். சுமதிக்கு அவ ‘ப்ரெண்ட்ஸ்’கள் போல மேலே படிக்க ஆசை.ஒரு நாள் அப்பா நல்ல மூடி ல் இருக்கும் போது “அப்பா,எனக்கு மேலே படிக்கணும்ன்னு ஆசையா இருக்கு.என் ‘ப்ரெண்ட்ஸ்’ங்க எல்லாம் மேலே படிக்கப் போறாங்கப்பா” என்று செல்லமாக கேட்டாள்.

சுமதி கேட்டு வாயை கூட மூடலே மாலதி “பொட்டே பிள்ளைக்கு எதுக்குடி மேலே படிக்கணும். அப்படி நீ மேலே படிச்சா,அப்புறமா அந்த படிப்புக்கு ஏத்த மாப்பீள்ளையா பாக்கணும். மாப்பிள்ளே வீட்டாருங்க நிறைய சீர் செனத்து கேப்பாங்க. நீ படிச்ச து போதும். வூட்டு வேலையையும், சமையல் வேலையையும் நல்லா கத்துக்க. ரெண்டோ, மூனோ வருஷம் போனதும், ஒரு ‘ப்ளஸ் டூ’ படிச்ச பையனா பாத்து ‘சிம்பிளா’ கல்யாணத்தே முடிக்கலாம். இவ படிச்சது போதுங்க. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க” என்று சொன்னதும் சுமதிக்கு அதள பாதாளத்தில் விழுவது போல இருந்தது. மாலதி சொன்னது மாதவனுக்கு பிடிக்கவில்லை. அவர் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தார்.

மறுபடியும் கணேசனை ஒரு ‘டிடோரியல்’ பள்ளியில் ‘ப்லஸ்’ டூவில்’ சேர்த்து அவனுக்கு ‘யூஷ னும்’ வைத்து படிக்க வைத்தார் மாதவன்.கணேசன் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் தானே அவன் பாடங்கள் மனதில் பதியும்.’ட்யூஷன்’ வாத்தியார் அவர் வாங்கும் சம்பளத்துக்கு அந்த ரெண்டு மணி நேரம் படங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு போய் கொண்டு இருந்தார். கணேசன் சதா கிரிக்கெட் கனவுகள் கண்டு வந்தான்.அந்த வருஷமும் கணேசன் ‘பாஸ்’ பண்ணவில்லை. ரெண்டு வருஷம் ஆனதும் மாலதி சுமதியை தன் அம்மா அப்பா இடம் சொல்லி தன் தம்பி சரவணனுக்கு அதிக செலவு இல்லாம கல்யாணம் பண்ணி வைத்து விட்டாள்.

சுமதியும் கல்யாணம் ஆனவுடனே அவள் கணவன் வீட்டுக்குப் போய் விட்டாள்.

மாதவன் வேலை செய்து வந்த ‘ப்ளாஸ்டிக் கம்பனி’ தயார் செய்த பொருட்கள் எல்லாம் மார்கெட்டில் விலை போகாமல் மிகவும் தேக்கமாய் இருந்து வந்தது. வருவாய் ஒன்றும் இல்லாமல் எத்தனை மாசம் தான் கமபனி தொழிளாளர்களுக்கு அந்த நிர்வாகம் சம்பளம் கொடுத்து கொண்டு வர முடியும். வேறு வழி இல்லாமல் கமபனி ‘ஆட் குறைப்பு’ செய்ய ஆரம்பித்தார்கள். மாதவன் இந்த சமாசாரத்தை தன் மணைவி மாலதி இடம் சொல்லி வந்தார். ரெண்டு மாசம் ஆயிற்று. கம்பனி மாதவன் மொத்த சேமிப்பையும், அவருக்கு ஒரு வருஷ மொத்த சம்பளத்தையும் கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

மாதவன் ஒரு காலியான கடையை வாடகைக்கு எடுத்து, தனக்கு கம்பனியில் இருந்த வந்த பணத்தையும் முதலாகப் போட்டு, பல சரக்கு சாமான்களை எல்லாம் வாங்கி வந்து, அவன் அப்பா வைத்து இருந்தது போல ஒரு மளீகை கடையை வைத்து நடத்த ஆரம்பித்தார்.

முதல் ரெண்டு மாசம் வியாபாரம் மிகவும் மந்தமாக இருந்து வந்தது.வீட்டில் பணத் தட்டுபாடு இருந்து வந்தது.மெல்ல நிலைமையை சமாளித்து வந்தார் மாதவன்.

அந்த வருஷமும் கணேசன் ‘ப்ளஸ் டூவில்’ பெயில் ஆகி விட்டான்.

நன்றாக யோஜனைப் பண்ணீனான் கணேசன்.

’நாமோ மூனு தடவை ‘ப்லஸ் டூ’ பரிக்ஷ எழுதியும் பாஸ் பண்ண முடியலே. கிரிகெட் ஆடப் போனா நாம் ‘டீம்’ செலவுக்கு பணம் குடுத்தா தான்,அவங்க நம்மை ‘டோர்னமெண்ட்டிலே’ சேத்துக் கொள்ளுவாங்க. இத்தனை வருஷமா எப்படியோ அம்மாவை ரகசியமா கேட்டு நாம பணம் குடுத்து வந்தோம்.இப்ப நம்ப குடும்பம் இருக்கிற நிலையில் அம்மாவை பணம் கேட்டா அவங்க குடுக்க மாட் டாங்களே’என்று தன் மனதில் வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தான்.

ஒரு முடிவுக்கு வந்தான் கணேசன்.

அன்று இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு மாதவன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். கணேசன் மெல்ல அப்பா கிட்டே”அப்பா,நீங்க என்னை மூனு தடவை ‘ப்ளஸ்டூ’ சேத்து,’ட்யுஷன்’ வச்சும்,நான் பெயிலாயி விட்டேன். எனக்கு படிப்பு ஏறலே. நாளைலே இருந்து உங்க கூட மளீகைக் கடைக்கு வந்து உங்களுக்கு உதவியா இருந்து மளீகை கடை நுணுக்கங்களை கத்து கிட்டு வறேன்” என்று அவர் காலைப் பிடிச்சு கெஞ்சினான்.

நன்றாக யோஜனை பண்ணீனார்கள் மாதவனும் மாலதியும். ’இது தான் இப்போதைக்கு நல்லது’ என்று நினைத்து அடுத்த நாள் முதல் கணேசனை மளீகைக்க் கடைக்கு அழைத்துப் போய் மளிகை கடை விஷயங்களை எல்லாம் கணேசனுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். கணேசனும் எல்லா விஷயங்களையும் கவனமாக கேட்டு கற்று வந்தான். கணேசன் ஞாயிற்று கிழமை ஒரு நாள் மட்டும் கிரிகெட் மைதானத்திற்குப் போய் ஆசை தீர கிரிக்கெட் ஆடிக் கொண்டு இருந்தான்.

ஒரு நாள் மாதவன் ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருக்கும் போது வேகமாக வந்த ஒரு தண்ணீ லாரிக்காரன் மாதவன் ஸ்கூட்டார் மேலே இடித்து அவரை கீழே தள்ளி விட்டான்.அவர் கிழே விழுந்து, ஸ்கூட்டர் அவர் இடது கால் மேலே விழுந்து விட்டது.தண்ணி லாரியின் சக்கரம் அவர் வலது கால் மேலே ஏறி விட்டது.மாதவனால் எழுதரிக்கவே முடியவில்லை.

ரோடில் போய் கொண்டு இருந்த ஒரு மனித நேயம் கொண்டவர் மாதவனை மெல்ல தூக்கி, ஸ்கூட்டரை எதிரில் இருந்த ஒரு கடைக்காரர் கிட்ட சொல்லி ‘பார்க்’ பண்ணி விட்டு,ஸ்கூட்டர் சாவி யை எடுத்து மாதவன் கிட்டே கொடுத்து விட்டு, அவர் விலாசத்தை கேட்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றீ,அவரை வீட்டுக்கு அனுப்பினார்.

வீட்டுக்கு வந்த மாதவன் கால் தென்னை மரம் போல் வீங்கி விட்டது. மாலதியும் கணேசனும் மாதவனை ஒரு பெரிய ‘நர்ஸிங்க் ஹோமுக்கு அழைத்து போய் காட்டினார்கள்.நர்ஸிங்க் ஹோமில் ‘எக்ஸ்ரே’ எடுத்து பார்த்து,அவர் வலது கால் எலும்புகள் மிகவும் நொறுங்கி போய்,பல ரத்த குழாய்கள் பாதிக்கப் பட்டு இருக்கவே, டாகடர்கள் ‘ஆபரேஷன்’ பண்ணீ மாதவன் வலது காலை அறுவை சிக்ச்சை பண்னி எடுத்து விட்டார்கள்.

ஏழு வாரம் போனதும் மாதவன் அக்குள் கட்டை வைத்துக் கொண்டு மெல்ல வீட்டில் நடக்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் மணி ஏழு இருக்கும்.

திடீரென்று சுமதி தன் மூனு வயது பெண்ணுடன் அழுது கொண்டே”அம்மா,என் வூட்டுகாரர் என்னை விவாகரத்து பண்ணிடாரு” என்று சொன்னாள்.

கோவம் அடைந்த மாலதி உடனே தன் அம்மா அப்பா வீட்டுக்கு போய் “அம்மா,என்ன சரவணன் இப்படி பண்ணீ இருக்கான். சுமதிக்கு மூனு வயசிலே ஒரு பொண்ணே குடுத்துட்டு,இப்படி விவாகரத்து பண்ணா சுமதி வாழ்க்கை என்ன ஆறது” என்று கத்தினாள்.

சரவணனின் அம்மா “நாங்க என்ன பண்ணட்டும், அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போவலையாம்.அவன் எங்க கிட்டே சொல்லிட்டு தான் விவாகரத்து பண்ணான்”என்று சொன்னாள்.

மாலதிக்கு இன்னும் கோவம் அதிகம் ஆகியது.அவள் உடனே ”எப்போ சுமதியே வேணான்னு சரவணன் சொல்லிட்டானோ,சுமதி கல்யாணத்துக்கு நாங்க போட்ட நகைகளை எல்லாத்தியும் திருப்பி குடுங்க” என்று கத்தினாள்.

பெட் ரூமில் இருந்து வெளீயே வந்த சரவணன் “அதெல்லாம் நான் திருப்பி தர முடியாது” என்று சொல்லி விடவே சரவணனை கண்ட படி திட்டி விட்டு தன் வீட்டுக்கு வந்து எல்லா விவரத்தையும் சொல்லி அழுதாள் மாலதி. மாதவனும் தன் மனதுக்குள் அழுதுக் கொண்டு இருந்தார்.

’தன் தங்கை வாழ்க்கை இப்படி வீணா ஆயிட்டதே’ என்று நினைத்து கணேசன் தன் மனதில் அழுதான்.

பிறகு தன்னை தேற்றிக் கொண்டு வீட்டில் இருக்கும் சூழ் நிலையை மனதில் வைத்துக்ண்டு கணேசன் எல்லா ஞாயித்துக் கிழமையும் மளிகை கடையை திறந்து வியாபாரம் பண்ணி வந்தான்.மாலதிக்கு அடிக்கடி நெஞ்சு வலி வர ஆரம்பித்து விட்டது.அதுவே நாளடைவில் அதிகம் ஆகி,அவள் நெஞ்சு வலி மாத்திரைகளால் தான் உயிர் வாழந்து வந்தாள்.

ரெண்டு வருஷம் ஓடி விட்டது.

ஒரு வித உடல் பயிற்சி இல்லாமல்,வாரத்தில் ஏழு நாட்களும் கடையிலே உட்கார்ந்து வந்து வியாபாரம் பண்ணீ வந்த கணேசன் வெயிட்’போட ஆரம்பித்தான்.

’நாம இப்படி ‘வெயிட்’ போடறோமே.இப்படி போனா நம்மால் கிரிக்கெட் ஆட முடியாதே’ என்கிற கவலை வரவே கணேசன் ஒரு டாகடர் இடம் போய் தன்னை ‘செக் அப்’ பண்ணிக் கொண்டான்.எல்லா ‘டெஸ்டுகளையும்’ பண்ணி பார்த்து விட்டு அந்த டாக்டர் “தம்பி,உனக்கு ‘தைராயிடு ப்ராப்லெம்’ இருக்கு. அதான் இப்படி நீ ‘வெயிட்’ போடறே” என்று சொல்லி கணேசனுக்கு ‘தைராயிடு’ மாத்திரை எழுதிக் கொடுத்து அதை தவறாம தினமும் சாப்பிட சொன்னார்.

கவலைப் பட்ட கணேசன் ‘மெடிக்கல் ஷாப்பில்’ ‘தைராயிடு’ மாத்திரைகள் வாங்கி வீட்டுக்கு வந்து, டாக்டர் சொன்னா எல்லா விவரங்களையும் கண்களீல் கண்ணீர் மல்க சொல்லி அழுதான். மிகவும் கவலைப் பட்டார்கள் மாதவனும், மாலதியும், சுமதியும். கணேசன் உடம்பில் ‘தைராயிடு’ மாத்திரைகள் சரியாக வேலை பண்ணாததால் அவன் உடம்பின் எடை நாளுக்கு நாள் கூடி வந்தது.

’இந்த மாதிரி உடம்பே வச்சு கிட்டு இந்த ஜென்மத்திலே இனிமே நாம கிரிக்கெட் ஆடவே முடி யாது.அப்பாவால் இனிமே ஒன்னும் முடியாது.தங்கை வாழ்க்கை வீணாகப் போயிடுச்சி. அவளுக்கு ஒரு பெண் குழந்தை வேறே. அம்மாவும் நெஞ்சு வலியாலே கஷ்டப்பட்டு கிட்டு வறாங்க. இனிமே நாம தான் இந்த மளீகை கடையை ஒழுங்கா நடத்தி வந்து இந்த குடும்ப பாரத்தே சுமந்து ஆகணும்.கிரிக் கெட் ‘ஆசைக்கு’ முழுக்கு போட்டு தான் ஆகணும்’ என்று நினைத்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ‘நாம ஒருத்தியே கட்டிகிட்டு, குழந்தைகளே பெத்துக் கிட்டு, வூட்டு செலவை அதிகப்படுத்திக் கிட்டு வரணுமா’ என்று தீவிரமாக யோஜனை பண்ணீனான் கணேசன்.

அப்பா,அம்மா, தங்கை மூவரும் வற்புறுத்தியும் தன் கல்யாணத்தை மறுத்து வந்த கணேசன் மளிகை கடை வியாபாரத்தை நடத்தி வந்து, அந்த குடும்பத்திற்கு ஒரு ‘சுமை தாங்கியாக’ இருந்து வந்து தன் காலத்தை ஒரு ‘பிரம்மசாரியாக’ கழித்து வந்தான்.

ஒரு ‘சச்சின் டெண்டூலகர்’ ஆகவோ,’தோனி ஆகவோ’,’விராட் கோலி’ஆகவோ,ஆக ஆசைப் பட்ட கணேசன் அவன் பேருக்கு ஏற்ப, இப்போது ஒரு சின்ன மளீகை கடையிலே, ஒரு உடல் பயிற்சியும் இல்லாமல், நாலு வேளையும் நன்றாக சாப்பிட்டு விட்டு, நல்ல தொப்பையும் தொந்தியுமாக, ஒரு ‘பிரம்ம்சாரியாக’ இருந்து வந்து, கடைக்கு வருகிறவர்களுக்கு உப்பு, புளி, மிளகாய்,பருப்பு வகைகள் எல்லாம் விற்று விட்டு, அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டு இருந்தான்.

பலருக்கும் அவர்கள் வாழ்க்கையில் கண்டு வரும் “கனவு” நிஜம் ஆவதில்லையே!

“தலை விதி” என்று ஒன்று இருக்கிறதேங்க. அதன் படி தாங்க நம்ம வாழ்க்கை அமையும் என்பது தாங்க ‘நிதர்ஷணமான; உண்மை!.

பல வருஷங்கள் கழித்து கணேசனுக்கு இப்போது அந்த உண்மை நன்றாக புரிந்தது!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *