ஓலைச்சுவடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 7,329 
 
 

தாத்தா சந்திரசேகர் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார் ஊரிலிருந்து வரும் பேத்தியை எதிர்பார்த்து விழிமேல் விழிவைத்து கண் இமை மூடாது காத்திருந்தார்.

நேரம் நகர்ந்தன பேத்தியை காணாத தாத்தா முகம் சுழித்தார் அங்கு வந்த அவரின் மருமகள் உமா “என்ன மாமா ஏதோ ரொம்ப யோசனையில் இருக்கிறாப்பல இருக்கு என்றாள்”
அம்மா மைதிலி இன்னுமா வரல என்றார் தொலைபேசியில் கேட்டையா அவ எங்க வந்திட்டு இருக்காள் என்று அவ சென்னை வந்திட்டாளம் இன்னும் ஓரு மணி நேரத்தில அப்பாவும் பொண்ணும் இங்க இருப்பாங்க மாமா மேலே பேசாது அமைதியானார்;

மைதிலியின் ஆரவாரம் கேட்டது தாத்தாவின் முகத்திலோ சந்தோஷம். மைதிலி வந்துட்டா மைதிலி வந்திட்டா என்று பூரித்து சொல்லிக் கொண்டே இருந்தார்;.

அவர் எதிர்பார்த்து போல 15 வயது நிறம்பிய மைதிலி ஒடோடி தாத்தாவிடம் வந்தாள் தாத்தா எப்படி இருக்கிறாய் என்றாள்

நல்லா இருக்கேன் பாப்பா என்றார் பெரியவர்

தாத்தாவும் பேத்தியும் டிபன் சாப்பிட்டு பிறகு பேசலாம் என்றாள்

அமைதியாக டிபனை ருசித்து ரசித்து சாப்பிட்டாள் மைதிலி. அம்மா உன் கையில் டிபன் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு என்றாள். ஹாஸ்டலில் போடறானே டிபன் சகிக்கவில்லை என்றாள்.

மகள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே சந்தோஷமாக பரிமாறினாள் உமா

தாத்தாவும் பேத்தியும் கட்டிலில் படுத்துக்கொண்டு பேச துவங்கினர்.

தாத்தா நீங்க இப்போ என் பண்ணிகிட்டு இருக்கிங்க என்றாள்.

என்னம்மா என்னோடு தினசரி வேலையை பத்தி உனக்கு தெரியாதா என்ன என்றார்.

அந்த பழைய ஒலைசுவடி எல்லாம் பார்த்துட்டு இருப்பீங்க அதுதானே என்றாள்.

நீ என்ன விளையாட்டா கேட்கிறாய் அது சாதாரண விஷயமில்லேமா என்றார் அது ஒரு பொக்கிஷம் என்றார்

அதைப்பத்தி சொல்லுங்க தாத்தா தெரிஞ்சுகலாம் பழையது வேஸ்ட் சங்கதி என்று என் தோழி சொல்லாற தாத்தா அதை பத்தி சொன்னீங்கின்னா நானும் அவளுக்கு எடுத்து சொல்வேன் என்றாள்.

ஒலைச்சுவடியில் இருக்கும் விஷயத்தை நம்மவர்கள் நம்புவதில்லை ஆனால் தலைமுறைகளாக வரும் நம்பிக்கைகள் சாஸ்திர அடிப்படையிலும் நடைமுறை அடிப்படையிலும் மேல் நாட்டவர் அங்கீகரித்துள்ளனர். அவர்கள் செயலில் வந்த பின் நாம் அதை நம்பிகிறோம் இந்த நடைமுறை மாற வேண்டும்.

பெற்றோர்களை தினமும் கால் தொட்டு வணங்கனும் சொல்லுவாங்க அதை நீ செய்யறியா என்றார்

எதுக்கு அதை செய்யனும் என்றாள்.

தாய் தந்தை குரு போன்றோர்கள் தினசரி நாம் வணங்கும் தெய்வங்கள். இந்த தலைமுறை இந்த பழக்கம் நடைமுறையில்லை. மதிப்பை தெரிவிக்கும் நான்கு ஆசாரங்கள் நாம் கண்டு வருகின்றோம் அதில் முதலாவது ‘வணக்கம்” என்று கூறுவது இரண்டாவது பெரியோர்களை கண்டால் எழுந்து நிற்பது மூன்றாவது கால் தொட்டு வணக்கம் செய்வது நான்காவது சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது. யோகாப்பியாசத்தில் கால் தொட்டு வணங்குதல் என்பது சாஷ்டாங்க வந்தனம் என்று பெயர். இதை செய்வதால் நாம் உடற்பயிற்சி செய்த பயன் நமக்கு கிடைக்கின்றது. பாதங்கள் தனிச் சிறப்பானவை இறைவனின் பாத தரிசனம் பெற கண்கோடி வேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.

இனிமே நான் அப்பா அம்மாவை கால் தொட்டு கும்பிடபோகிறேன் தாத்தா என்றாள்.

பொட்டு வைத்து கொள்ளவில்லையா பாப்பா என்றார்.

பொட்டு வைக்கிறது இப்ப பேஷன் இல்ல தாத்தா என்றாள்.

மனித உடலில் பொட்டு நெற்றியின் மத்தியில் வைப்பதால் பிறர் நம்மை தன்வயப்படுத்தி மயக்கவைப்பதை தடுக்கலாம். பிரம்ம முகூர்த்ததில் சந்தனமும் விடியற்காலை குங்குமமும் மாலைப்பொழுதில் திருநீரும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவராணத்துக்கும் உத்தமம் என்று சூரிய ஆராய்ச்சிகள் செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எப்படி படிக்கிறாய் எல்லா பாடத்திலும் நல்ல மார்க் எடுப்பியா என்றார்.

நல்லாதான் படிக்கிறேன் தாத்தா ஆனா ஹாஸ்டலில் காலையிலே 4 மணிக்கெல்லாம் எழுப்பிவிடுகிறார்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு தாத்தா

சூரியன் உதித்தெழுவதற்கு முன்பு நாற்பத்தி எட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது..பிரம்மா பெயரால் அறியப்படும் இம்முகூர்த்தம் அவருடைய மனைவியான சரஸ்வதிதேவி விழித்து செயல்படும் நேரம் என்புது நம்பிக்கை. மேலும் தலையின் இடது பாகம் கல்வி மையம் செயல்படும் போது படிப்புது பயனளிக்கும் என்புது நவீன கண்டுபிடிப்பு என்றார்.

என்னம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டு காலாட்டிட்டு இருக்க என்றார்.

அவர் சொல்வதை அலட்சியம் செய்கிறாள் மைதிலி

பண்டைய காலத்தில் கட்டிலுக்கு அடியில் பெரியவர்களின் மருந்து பொருட்கள் பணம் வெற்றிலை துப்பும் தம்பலாப் பாத்திரம் கட்டிலினடியில் வைப்புது வழக்கம் அதன் மேல் காலாட்டினால் அப்பொருள் விழுந்து நஷ்டம் அடையும் மற்றும் நோய்கள் வரும் சுத்தம் இல்லாமல் போகும் அதை உபயோகிக்க தயங்குவார்கள். இதை உணர்த்தவே காலாட்டினால் வீட்டிற்கு தரித்திரம் என்று கூறுகிறார்கள்.

காலையில் தூக்கலிருந்து விழித்துக்கொண்ட பின் பூமிதேவியை தொட்டு வணங்கவேண்டும் என்றார்

இதில் என்ன இருக்கு தாத்தா என்றாள்.

விழித்தெழும்போது கால் முதலாவது தரையில் தொட்டால் கைனடிக் எனர்ஜியாக மாறுகிறது அப்போது கீழ்நோக்கி ஓழுகி உடல் பலம் குறைகின்றுது. நாம் பூமியை தொடும் போது அந்த ஆற்றல் மேல்நோக்கி பரவி நம் உடலில் பலம் சேர்கின்றுது. இந்த விஞ்ஞான ரகசியத்தை நம் முன்னோர்கள் தெரிந்தவர்களாய் இருந்திருக்கின்றனர்.

இந்த முறை விடுமுறைக்கு வந்ததில் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன் தாத்தா நீங்க சொன்னதை எல்லாம் தினமும் பண்ணப்போறேன் என்றாள் சந்தோஷமாக பெரியவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல பாப்பா நாம அவர்களுடைய எக்பிரியன்சை தான் ஒலைச்சுவடியில எழுதிட்டு போயிருக்கிறாங்க தெரிஞ்சுகணும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *