கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 6,572 
 
 

கரண் வீடே களை கட்டி இருந்தது.

மாவிலை தோரணம்,மாக்கோலம் இடப்பட்டிருந்தது,

திருமணமாகி கரண்-சித்ரா தம்பதியர், வீட்டிற்க்கு வரும் நாள் இன்று. இரண்டு மாதம் முன்பு வரை அவர்கள் காதலர்கள். கரண் பிரபல தனியார் பாங்க் ஒன்றில் வேலை, சித்ராவும் அதே வங்கியில் வேலை பார்த்து தற்போது விட்டுவிட்டு போட்டி தேர்வுக்கு தயாரகிக் கொண்டு இருக்கிறார். வங்கியில் ஒரே நேரத்தில் இன்டர்வியூயில் சந்தித்து பழகி ,காதலாகி ,
கணிந்து உருகி, பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து கல்யாண ஏற்பாடுகள் கரண் வீட்டு முறைப்படி நடப்பது என முடிவு செய்து,மணம் முடித்து இன்று முதல் கூட்டு குடும்பமாக வசிக்க வருகிறார் மணமகள்.

கரணின் ஒரே அண்ணன்,சரண், அவர் துனை வட்டாட்சியராகப் பணி, அவரது மனைவி அருணா இல்லத்தரசி, இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து வருடமாகிறது,இவர்களுக்கு ஒரே மகள் 3 வயது.

கரண் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே இவர்களுக்குத் திருமணமாகவிட்டதால், கரணின் விருப்பு, வெறுப்பு அனைத்தும் நன்கு அறிந்தவர்,அண்ணி அருணா.

காலை சிற்றூன்டி தயாரனது,அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அலுவலகம் கிளம்பினர்,மாமா ஓய்வு பெற்ற ஆசிரியர், வங்கி செல்வதாக கூறி கிளம்பினார்.

சித்ரா,நீ இன்றைக்கு சமையல் செய்,என கூறினார் அத்தை,

சரி அத்தை,என்று அடுப்படி சென்றாள்.

என்ன சமையல் செய்யனும்,எது பிடிக்கும்,என்ன அளவு எல்லாம் அருணா கிட்ட கேட்டுக்க,செய் பார்ப்போம்,என்றாள் அத்தை.

அவளுக்கு மட்டும் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை,ஏனெனில் அனைவருக்கும் செல்லபிள்ளை கரண்,அவனின் திருமணம் நம் விருப்பப்படி நடக்காமல் போனதும், தனது தம்பி பெண்னை பேசி வைத்தது முடியாமல் போனதும், வருத்தம்தான்.

அதை கரணிடம் காட்டினால், அப்பா,அண்ணன், அண்ணி எல்லோரும் அவன் பக்கமே பேசுகிறார்கள், அதனால் அம்மாவுக்கு கோபம் இருப்பது கரணிற்கும் தெரியும்.

அத்தையும்,மாமவும்,சாப்பிட்டனர்,

என்ன எல்லாத்திலேயும் ஒரே உப்பு,உரைப்பு, உங்க வீட்ல சமைப்பியா? மாட்டியா ? என்றாள்,

சாதம் மட்டும் நல்லா இருக்கு.எனக்கூறி அத்தை தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

மாமவோ,சூப்பரா இருக்கு, இவ்ளோ நாள் காரமா சாப்பிடாம நாக்கு செத்துப்போச்சு,இப்பதான் நாக்குக்கே உயிர் வந்த மாதிரி இருக்கு, அவ சொன்னதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதே, அருணா சொல்ரதை கேட்டுக்கோ! என கூறவும்,உள்ளே இருந்து குரல் மட்டும் வந்தது,

இங்கே வர்றேளா! என மிரட்டல்.

நல்லாத்தான் இருக்கும்.

அத்தை ஏதோ காரணமாக சொல்கிறாள் என உணர்ந்தாள்,அருணா. முகம் வாடினாள் சித்ரா!

மதியம் வந்து கரணும்,அண்ணனும் சாப்பிட்டு விட்டுச் சென்றனர்.

இவர்கள் இருவரும் சாப்பிட , அருமையா இருக்கு, என்ன! அத்தை சோம்பு சேர்க்கமாட்டாங்க, அதை போடாதே! அவ்வளவுதான். கூறிவிட்டு தனது வேலையை கவனித்தாள் அண்ணி.

சித்ராவிற்கு போன் வந்தது,

அவள் அம்மாவிடமிருந்து, இங்கு நடந்த அனைத்தையும் சொன்னாள்,

சரிம்மா,சரிம்மா என பதிலுக்கு கூறி வைத்துவிட்டாள்,

இரவு டிபன் நீயே பன்னிடு அருணா! என்றாள்.அத்தை.

இல்ல அத்தை,சித்ரா சப்பாத்தி நல்லா பன்னுவாளாம்,பன்னட்டுமே அவளும் ஆசை படுறா,என்றாள்,

ம்,ம்,பார்ப்போம் என்றாள்.

எல்லாம் அண்ணி பேச்சைத்தான் கேட்பாங்க போல,என நினைத்தாள்.

பார்த்து பார்த்து சப்பாத்தியும்,அதற்கு இணையாக பன்னீர் மசாலா கிரேவியும் தயார் செய்தாள், அனைவரும் பாராடினார்கள்,கரணின் அண்ணனோ எந்த ஓட்டலில் வாங்கியது என்றார், அவ்வளவு நன்றாக இருந்தது. காரம் குறைத்து,மிருதுவான சப்பாத்தி,என அசத்தியிருந்தாள்.

மசாலா எல்லாம் நான் சேர்க்கமாட்டேன்! என்றார்,மாமா.

ஆனா,சாப்பாத்தி ஓகே என்றார்.

என்ன இருந்தாலும் அருணா டேஸ்ட் வரவில்லை என்றார்.

ஆமாம் ,மாமாவுக்கு மசாலா பொருட்கள் எல்லாம் சேர்க்க மாட்டாங்க,அதை அவாய்ட் பன்னிடு என்றாள்,அண்ணி.

இரவும் போன் வந்தது. நீண்ட நேரம் சித்ராவும் அவள் அம்மாவும் பேசினார்கள், இங்க நடந்த அனைத்தையும் கூறினாள்.

படுக்கைக்கு போனாள் தூக்கம் வரவில்லை,என்ன என்றான் கரண்,

ஏன் தூங்கலையா என்றான்.

இல்லை! அத்தைக்கு என்ன பிடிக்கலை போல,அதான் நான் எது பன்னினாலும் குறையா சொல்றாங்க,என்றாள்,

இருக்கும்,ஆனா நீ கவலைப்படாதே அம்மா கொஞ்ச நாள்ள மாறிடுவாங்க! நீ அண்ணி செல்றதைக் கேட்டு நடந்துக்கோ! இந்த வீட்ல அக்கறையா இருக்கிறது அவங்கதான்.என்றான் கரண்.

அவங்களும் சேர்ந்துதான் செய்றாங்க!

அத்தை,மாமாவுக்கு பிடிக்காதுன்னு முதல்லேயா சொன்னா நான் அதை தவிர்த்து இருப்பேன்.,

ஆனா செய்ய சொல்லிட்டு ஆமாம் இது அத்தைக்கு பிடிக்காது என அவர்களுக்கு முன் நல்ல பேர் எடுத்துங்கிறாங்க! என்னை குறையா சொல்றாங்க.

இப்படியாக நாட்கள் கழிந்தது,சித்ராவிற்கும் மதியம் நேரம் கிடைத்தது படிப்பதற்கு, மீதி நேரம் அலைபேசியில் அம்மாவுடன் பேச்சு,இவள் போன் செய்யவில்லை என்றாள் சித்ராவின் அம்மா கூப்பிட்டு விடுவாள்.

இப்பொழுது எல்லாம் அத்தை எது சொன்னாலும் எங்க வீட்டில் இப்படித்தான்,எனக்கு தெரிந்தது, இதுதான் என பதிலுக்கு பதில் பேசினாள் சித்ரா.

இதையே சித்ரா தன் அம்மாவிடமும் சொல்லிருப்பாள் போலும்,மறுநாள் போன் வந்தது சித்ரா அம்மாவிடமிருந்து அருணாவிற்கு,

ஏம்மா,அவளை தங்கச்சியா நினைச்சி பார்த்துக்கோ,அவளும் உன்னை மாதிரி வாழ வந்தவதான்,சின்னப்பொன்னு, நீ பார்த்து சொல்லிக்கொடும்மா! அத்தைகிட்டே வாக்கு வாதமாயிடப் போகுது எனப் பயந்தாள்.

சித்ரா இங்க எல்லார்கிட்டேயும் பழகிற வரைக்கும், நீங்க கொஞ்ச நாள் அடிக்கடி போன் பண்ணாமல் இருந்தாலே போதும் இங்க ஒன்றும் நடக்காது.என்றாள். அவள் அம்மாவிடம்.

சித்ரா,உங்க அம்மா பேசினாங்க,எல்லா விஷயமும் சொன்னாங்க! நான் சொல்றதை கேட்டுக்கோ! அடிக்கடி அம்மாகிட்ட போன் பேசறதை குறைச்சுக்கோ, பேசினாலும் இங்கு நடப்பதை எல்லாம் சொல்லக்கூடாது. உங்க வீட்டு விஷயத்தையும் இந்த வீட்டோட ஒப்பிட்டு பேசாதே.

ஏன்னா, ஒவ்வொருவருக்கும் தனித் தனியான விருப்பு ,வெறுப்புகள் உண்டு, அனைவரும் ஒரே மாதிரி இல்லை,என்பதை முதலில் புரிந்துக்கொள்.

சோம்பு,மசாலா,அத்தைக்கும், எனக்கும்தான் பிடிக்காது,மற்ற அனைவருக்கும் பிடிக்கும். அதனால் உன்கிட்ட சொல்லவில்லை. உப்பும் உரைப்பும் அத்தைக்கும்,கரணுக்கும் குறைக்கனும், ஆனா மாமாவுக்கு,எனக்கு,அவருக்கு பிடிக்கும், அதனால தனித்தனியா சமைக்க முடியுமா? அட்ஜெஸ்ட் செய்து வாழ்வதுதான் வாழ்க்கை.

அத்தை கோபம் ஒரு மேட்டரே இல்லை. மாமா,பாராட்டினாரே! நீ்யோ புதிதாய் வந்து இருக்கே! அதனால பழக நாள் ஆகும், அதற்குள் அதை குறையா நினைச்சா, குறைகள்தான் பெரிதாக தெரியும்.

நம்ம பெண்கள் வாழ்க்கை, பயிர் நாத்து மாதிரி, பிறப்பது ஓரிடம், வாழறது ஓரிடம்,

வளர்த்தவங்க, கூட வளர்ந்தவங்க என அனைத்தையும் விட்டுவிட்டு வேறிடத்தில்,புதிய மணிதர்களுடன், புதிய வாழ்க்கை வாழனும், அதற்கு பொறுமையும், விட்டுகொடுத்தலும் மிக அவசியம்.

அதனால்தான் அந்த குணங்களை நமக்கு நிறைய கிடைக்கப் பெற்றோம், அதை பயன்படுத்தி குடும்பம் தழைக்க வைக்க நம்மால் மட்டுமே முடியும்,என அருணா கூறியதைக்கேட்ட சித்ரா,

நீங்க எனக்கு ஓரகத்தி இல்லை, என் அம்மா என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள் சித்ரா.

பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *