ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 3,743 
 
 

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

கேட்டு விட்டு குப்புசாமியும், மரகதமும் ரகுராமன் ஜாதகத்தை பவ்யமாக சீனு வாத்தியார் கிட் டே கொடுத்தார்கள்.

குப்புசாமி சொன்னதைக் கேட்ட வாத்தியாருக்கு தூக்கி வாரிப் போட்டது.அவர் ஒன்னும் சொல்லாமல் குப்புசாமி கொடுத்த ஜாதகத்தை வாங்கிக் கொண்டார்.

அவர் உடனே “என்ன சொல்றேள் குப்புசாமி. எதுக்கு உங்க பையனை நீங்க ரெண்டு பேரும் பாலு மாமா கிட்டே சமையல் வேலைக்கு சேக்கணும்.அவனை நீங்க நன்னா படிக்க வச்சு ஒரு நல்ல உத்யோகத்துக்கு அனுப்பக் கூடாதோ.அப்படி போனா அவன் கை நிறைய சம்பாதிப்பானே.அதே விட்டுட்டு, நீங்க ரெண்டு பேரும் அவனை ஒரு சமையல் கார மாமா கிட்டே வேலை கத்துண்டு வர ஒரு நல்ல நாள் பாக்க சொல்றேளே.இந்த சமையல் வேலை ஒரு வேலையா.நேக்கு அது சரியாவேப் படலே.அவனை மேலே படிக்க வையுங்கோ”என்று அவர் அபிப்பிரயத்தை சொன்னார்..

குப்புசாமி தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ரகுராமனைப் பற்றீன எல்லா விஷ யத்தையும் விவரமாகச் சொல்லி விட்டு அவர்கள் எடுத்து இருக்கும் முடிவையும் சொன்னார்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின வாத்தியார் குப்புசாமியையும் மரகத்தையும் பார்த்து “ஓ அப்படியா சமாச்சாரம்.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.இந்த காலத்திலே பொம்மணாட்டி குழந்தை கள் கூட நன்னா படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிச்சுண்டு வறா.புருஷப் பையனா ரகுராமனுக்கு படிப்பு ஏறலைன்னு சொல்றேளே.இதே கேட்டதும் நேக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்று சொன்னார்.

கொஞ்ச நேரம் போனதும் வாத்தியார் குப்புசாமி தம்பதிகளைப் பர்த்து “ நீங்க வேணும்ன்னா ஒன்னும் பண்ணுங்களேன்.ரகுராமனை சமையல் வேலைக்கு அனுப்பறதே விட என் கிட்டே அனுப்பு ங்கோ.நான் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமா இந்த பூஜை மந்திரங்களை எல்லாம் சொல்லித் தறேன். அவன் அவைகளை நன்னா கத்துண்டு வந்தான்னா,நான் யார் ஆத்லேயாவது ஒரு சின்ன பூஜைக்கு க் கூப்பிட்டா ரகுராமனை அங்கே அனுப்பி பண்ணி வக்கிறேன். மெல்ல அவன் எல்லா மந்திரங்களை யும் கத்துண்டு வந்தான்னா,அவனை என்னுடனே ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தியாரா வச்சுண்டு வறேனே.நீங்கோ நாளே பாக்க வேணம்.வர ஞாயித்துக் கிழமை அமாவாசை வறது.நிறைஞ்ச நாள். அன்னிக்கு ரகுராமனை எங்க ஆத்துக்கு அனுப்புங்கோ.நான் அவனை நான் ‘உபாத்யாயம்’ பண்ற ஆத்துக்கு எல்லாம் அழைச்சுண்டு போய் அவனுக்கு மெல்ல,மெல்ல வாத்தியார் வேலேயே பழக்கி வறேனே” என்று தனக்கு தோன்றின ஒரு ‘ஐடியா’வைச் சொன்னார்.

குப்புசாமிக்கும், மரகதத்துக்கும் வாத்தியார் சொன்ன ‘ஐடியா’ ரொம்ப பிடித்து இருந்தது. ’உடனே குப்புசாமி “நீங்க சொல்றது ரொம்ப நல்ல ‘ஐடியா’ மாதிரி தான் எனக்குப் படறது.நீ என்ன சொல்றே மரகதம்” என்று தன் மணைவியைப் பார்த்துக் கேட்டார்.

மரகதம் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “எனக்கும் வாத்தியார் மாமா சொல்ற ‘ஐடி யா’ நல்லது தான்னு படறது.ஒரு சமையல் கார வேலையே விட வாத்தியார் வேலே எவ்வளவோ மேலாச்சே” என்று சொன்னதும் குப்புசாமி வாத்தியாரைப் பார்த்து “நீங்கோ சொல்றது ரொம்ப நல்ல ‘ஐடியா’.நாங்க ஆத்துக்குப் போய்,நீங்க சொன்ன ‘ஐடியா’வை ரகுராமன் கிட்டே சொல்லி அவனை உங்க ஆத்துக்கு வர ஞாயித்துக் கிழமை அனுப்பி வக்கிறோம்” என்று சொல்லி விட்டு வாத்தியார் சம்சாரம் போட்டுக் கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு வீட்டிற்கு சந்தோஷமாக வந்தார்கள்.

வெளியே விளையாடப் போய் இருந்த ரகுராமன் அப்போது தான் வீட்டுக்கு வந்தான்.அவன் உள்ளே வந்து தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு வந்தான்.
குப்புசாமி அவனைப் பார்த்து “ரகுராமா, நாங்க ரெண்டு பேரும் இப்போ தான் வாத்தியார் ஆத்து க்குப் போய் இருந்தோம்.வாத்தியார் எங்களேப் பாத்து ‘நீங்க ரகுராமனை ஒரு சமையல் வேலைக்கு அனுப்பறதே விட என் கிட்டே அனுப்புங்கோ.நான் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமா இந்த பூஜை மந்தி ரங்களை எல்லாம் சொல்லித் தறேன்.அவன் அவைகளை நன்னா கத்துண்டு வந்தான்னா,நான் யார் ஆத்லேயாவது ஒரு சின்ன பூஜைக்குக் கூப்பிட்டா ரகுராமனை அங்கே அனுப்பி பண்ணி வக்கறேன். இந்த மாதிரி சின்ன,சின்ன புஜை எல்லாம் பண்ணின்டு வந்து,மெல்ல, மெல்ல அவன் எல்லா மந்திர ங்களை எல்லாம் கத்துண்டு வந்தான்னா,அவனை என்னுடனே ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தியாரா வச்சுண்டு வறேனே.நான் அவனை நான் ‘உபாத்யாயம்’ பண்ற ஆத்துக்கு எல்லாம் அழைச்சுண்டு போய் அவனை நன்னா பழக்கி வறேனே’ன்னு அவருக்கு தோன்றிய ஒரு ‘ஐடியா’வைச் சொன்னார்.நீ அந்த வாத்தியார் ஆத்துக்குப் போய் அவர் சொல்லிக் குடுக்கற மந்திரங்களை எல்லாம் கத்துண்டு வந்து,அவர் கிட்டே ஒரு ‘அஸிஸ்டெண்ட்’ வாத்தியாரா கொஞ்ச வருஷம் வேலை பண்ணி வந்துட்டு, அப்புறமா நீயே ஒரு முழு வாத்தியார் வேலையே பண்ணிண்டு வறயா.உனக்கு வாத்தியார் சொன்ன ‘ஐடீயா’ பிடிச்சு இருக்கா.நீ ஒரு சமையல் காரனா ஆறதே விட ஒரு ‘வாத்தியாரா ஆறது நல்லதுன்னு அபிப்பிராயப் படறயா.நீ அப்படி அபிப்ராயப் படறாதா இருந்தா, எங்க கிட்டே சொல்லு.அதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன்” என்று நிதானமாகக் கேட்டார்.

ரகுராமன் ஒரு நிமிஷம் கூட யோஜனைப் பண்ணவில்லை.

அவன் உடனே அப்பாவைப் பார்த்து “அப்பா,எனக்கு இந்த “வாத்தியார்” வேலே சுத்தமா பிடிக் கலே.அந்த வாத்தியார் கிட்டே போனா அவர் உடனே என்னைப் பாத்து ‘ரகுராமா,நீ இந்த ‘கிராப்’ தலையை வெட்டிண்டு வந்து ஒரு குடுமி வச்சுக்கோன்னு சொல்லுவார்.தினமும் ஒரு தோச்ச வேஷ்டி யை கட்டிண்டு வரச் சொல்லுவார்.எனக்கு அது சரின்னு படலே.நான் ‘வாத்தியார்’ வேலைக்குப் போக மாட்டேன்.என்னை நீங்க ரெண்டு பேரும் பாலு மாமா கிட்டேயே ஒரு சமையல் கார வேலைக்கு சேத்துடுங்கோ.நான் அந்த சமையல் கார வேலைக்கு சந்தோஷமா போய் வருவேன்” என்று சொன்ன தும் குப்புசாமிக்கும் மரகதத்துக்கும் தூக்கி வாரிப் போட்டது.

மரகதம் ரகுராமனைப் பார்த்து “டே ரகுராமா,ஒரு சமையல் காரனா ஆறதே விட,ஒரு ‘வாத்தியா ரா’ ஆறது தான் நம்ம மாதிரி பிராமணாளுக்கு நல்லது.நீ அந்த வாத்தியார் கிட்டே சேந்து ஒரு வாத்தி யாரா ஆகணுன்னு தான் நானும்,அப்பாவும் ரொம்ப ஆசைப் படறோம்” என்று சொல்லி முடிக்கவில் லை ரகுராமன் “நீங்க என்ன சொன்னாலும் நான் அந்த வாத்தியார் கிட்டே போய் வாத்தியார் வேலை க்கு சேரவே மாட்டேன்.எனக்கு ‘வாத்தியார்’ வேலே சுத்தமா பிடிக்கவே இல்லே” என்று சொல்லி விட்டு சுவாமி ரூமுக்குள் போய் சுவாமி மந்திரங்களை உரக்க சொல்ல ஆரம்பித்தான்.

மரகதம் இன்னும் புரியாதவாளாக தன் கணவணைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

குப்புசாமி நிதானமாக தன் மணைவி மரகதத்தைப் பார்த்து ” மரகதம்,ரகுராமன் தான் ‘நான் ‘வாத்தியார்’ வேலைக்குப் போக மாட்டேன்ன்னு பிடிவாதமா சொல்லிண்டு இருக்கான். அவனுக்குப் பிடிக்காத ஒரு வேலையை அவனை பண்ணி வரச் சொல்றது ரொம்ப சரி இல்லே.நான் நாளைக்கு கா த்தாலே முதல் வேலையா வாத்தியார் ஆத்துக்குப் போய் ரகுராமன் ‘ஒரு வாத்தியார் வேலைக்குப் போக ஆசைப் படலே,அவன் ஒரு சமையல் காரனா ஆகத் தான் ஆசை படறான்’னு சொல்லிட்டு, அவரை தப்பா எடுத்துக்க வேணாம்ன்னும் சொல்லிட்டு வறேன்” என்று சொன்னனார்.

உடனே மரகதம்” எனக்கும் அது தான் சரின்னு படறது.நீங்க வாத்தியார் கிட்டே உண்மையே சொல்லிட்டு வாங்கோ.அவர் நம்மை தப்பா எடுத்துகக் கூடாது.ஒரு நாள் கிழமைக்கு அவர் நமக்கு அவசியமா வேணும்”என்று சொன்னதும் குப்புசாமி.’தன் பையன் இப்படி சொல்லிட்டானே’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டே தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு வந்து சுவாமி ரூமுக்குள் போனார்.

மரகதமும் தன் பையன் சொன்னத்தையே யோஜனைப் பண்ணி கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் குப்புசாமி வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பிப் போனார்.வாத்தியார் சம்சாரம் தான் குப்புசாமியைப் பார்த்து “வாங்கோ,உள்ளே வாங்கோ.வாத்தியார் ரெண்டு மணிக்கே திருவண்ணாம லைக்குக் கிளம்பிப் போய் இருக்கார். அவர் கிட்டே இருந்த ‘தர்ப்பை’ எல்லாம் தீந்துப் போயிடுத்து. அதையும் இன்னும் கொஞ்ச வைதீக சாமான்களையும் வாங்கிண்டு வரப் போய் இருக்கார்.இப்போ அவர் வர நேரம் தான்” என்று சொன்னார்.

குப்புசாமி கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினார்.’என்னடா இது.நாம் சொல்ல வந்த விஷ யத்தே வாத்தியார் கிட்டே சொல்லாம அவர் சம்சாரத்துக்கு கிட்டே சொல்ல வேண்டியதா போச்சே. நாம வாத்தியார் சம்சா¡ரத்து கிட்டே சொல்லலாமா,இல்லே அப்புறமா வந்து சொல்ரேன்னு சொல்லிட் டு வந்து விடலாமா.என்ன சொல்லிட்டு நாம கிளம்பறது.வாத்தியார் சம்சாரம் நம்மை போக விட மாட் டாளே’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தபோது வாத்தியாரின் சம்சாரம் குப்புசாமியை பார்த்து “என்ன என்னமோ யோஜனைப் பண்ணிண்டு இருக்கேள்.என் கிட்டே சொல்லுங்கோ.நான் வாத்தியார் திருவண்ணாமலையிலே இருந்து திரும்பி வந்ததும் ‘நீங்க வந்து இருந்தேள்ன்னு சொல்லி ட்டு நீங்க சொல்ற சமாசரத்தே நான் அவர் கிட்டே சொல்றேன்” என்று கேட்டு அவசரப் படுத்தினாள்.

‘ஒன்னும் சொல்லாம போனால் நன்னா இருக்காதுன்னு’என்று நினைத்து குப்புசாமி “அது வேறே ஒன்னும் இல்லே.நேத்திக்கு வாத்தியார் சொன்னதே நானும், மரகதமும் வெளியே விளையாடி விட்டு வந்த ரகுராமன் கிட்டே சொன்னோம்.அவன் உடனே ‘எனக்கு வாத்தியார் வேலைக்குப் போக இஷ்டம் இல்லே.நான் சமையல் வேலை கத்துண்டு வறேன்.எனக்கு ஒரு சமையல் காரனாத் தான் ஆகணும்ன்னு ஆசைன்னு’ சொல்லிட்டான்.அந்த விஷயத்தே வாத்தியார் கிட்டே சொல்லிட்டுப் போ கலாம்ன்னு தான் நான் கிளம்பி வந்தேன்.ஆனா இந்த சமயம் பாத்து வாத்தியார் திருவண்ணாமலை க்கு போய் இருக்காரே” என்று தன் உடம்பை குறுக்கிக் கொண்டு சொன்னார்.

ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை.

வாத்தியார் சம்சாரம் குப்புசாமியைப் பார்த்து “அவனுக்கு ‘வாத்தியார்’ வேலே பிடிக்கலேன்னா, நீங்க’இவர்’ பேச்சேக் கேட்டுண்டு உங்க பையனை ‘இவர்’ கிட்டே கொண்டு வந்து விடாதீங்கோ.நான் நேத்திக்கே சொல்லி இருப்பேன்.ஆனா ‘அவர்’ இருந்தாரேன்னு நான் சொல்லலே.’இவர்’ என்னமோ எனக்கு ‘உபாத்யாயம்’ இருக்குன்னு சொல்றாரே ஒழிய, மாசத்திலே பாதி நாள் ஆத்லே தான் சும்மா இருந்துண்டு வறார்.ஏதோ எங்க அப்பா வச்சுட்டுப் போன நாலு ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கோ,நாங்க சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம இருந்து வறோம்.’இவர் உபாத்யாய’ வரும்படியை நம்பிண்டு இருந்தா பட்டினி இருக்க வேண்டியது தான்.நிறைய பிராமணாள் இப்போ எல்லாம் வைதீக காரியங்களை பண் ணிண்டு வருவதே இல்லே.’இவருக்கே’ ‘உபாத்யாயம்’ எல்லாம் ரொம்ப குறைஞ்சிண்டே வறது. அத னால்லே நீங்க பேசாம உங்க பையனை அந்த பாலு மாமா கிட்டேயே சமையல் வேலையை கத்துண்டு வரச் சொல்லுங்கோ.அவன் அந்த சமையல் வேலையே நன்னா கத்துண்டு வந்தான்னா,அப்புறமா அவன் மெல்ல,மெல்ல,மேலே வந்து ஒரு முழு சமையல் காரணா வந்து,அவன் வாழக்கையே நன்னா அமைச்சுக்கலாம்.நான் உங்க பையன் நல்லதுக்குத் தான் சொல்றேன்.தவிர இந்த ‘வாத்தியார்’ வேலே க்கு வர வெறுமனே மந்திரங்கள் மட்டும் தொ¢ஞ்சு இருந்தா போறாது.வேதம் நன்னா கத்துண்டு இரு க்கணும்.அப்போ தான் எல்லா ‘வைதீக காரியங்கள’ எல்லாம் பண்ண முடியும்.நான் சொன்னேன்னு நீங்க ‘அவர்’ கிட்டே சொல்லிடாதீங்கோ.அவர் என்னை ‘உண்டு’ ‘இல்லே’ன்னு ஆக்கிடுவார்.’யார் உன்னே நம்ம கதை எல்லாம் அவர் கிட்டே சொல்ல சொன்னது’ன்னு சொல்லி ரொம்ப கோவிச்சுக்கு வார்” என்று சொல்லி விட்டு வாசலைப் பார்த்துக் கொண்டு, பயந்துக் கொண்டே சொன்னாள்.

உடனே குப்புசாமி வாத்தியார் சம்சாரத்தைப் பார்த்து “நீங்க வாத்தியார் வந்தவுடனே, என் பையன் ‘அபிப்பிரயத்தே’ சித்தே சொல்லிடுங்கோ.அவர் மனசு கஷ்டப் படறா மாதிரி சொல்லாதீங் கோ.எனக்கு அவர் சகவாசம் ரொம்ப முக்கியம்.அவர் என்னை தப்பா புரிஞ்சிக்காம இருக்கணும். நீங் கோ சொன்னதே நான் வாத்தியார் கிட்டே நிச்சியமா சொல்ல மாட்டேன்.நான் போயிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு தன் துண்டை தோளீல் போட்டுக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தார்.

வாத்தியார் வீட்டுக்கு வந்ததும் அவர் மணைவி “குப்புசாமி, சித்தே முன்னாடி ஆத்துக்கு வந்து இருந்தார்.அவர் பையனுக்கு வாத்தியார் வேலே பிடிக்கலென்னு சொல்லிட்டானாம்” என்று சொன்னது ம்,“நான் அவா நல்லதுக்குத் தான் எனக்குத் தோனின ‘ஐடியா’வை’சொன்னேன்.அந்த பையனுக்கு வாத்தியார் வேலே பிடிக்கலேன்னா,அனுப்பாம இருக்கட்டும்.அதனால்லே எனக்கு ஒரு நஷ்டமும் இல்லே” என்று சொல்லி விட்டு தன் கால்களை கழுவ ‘பாத் ரூமு’க்குப் போனார்.

வீட்டுக்கு வந்ததும் குப்புசாமி வாத்தியார் வீட்டில் இல்லாததையும்,அவர் வீட்டில் நடந்த எல்லா சம்பஷணையையும் விவரமாகச் சொன்னார்.

உடனே மரகதம் “வாத்தியார் சம்சாரமே அந்த மாதிரி சொல்லிட்டா,நீங்க யோஜனையே பண் ண வேண்டாம்.பேசாம ரகுராமன் ஆசைப் படறாப் போல அவனை அந்த பாலு மாமா கிட்டேயே சமை யல் வேலைக்கு சேத்துடுங்கோ.அவன் சந்தோஷமா வேலைக்குப் போய் வருவான்”என்று சொன்னாள் மங்களமும் ‘தன் தம்பி அவன் ஆசை படற வேலையை பண்ணி வரட்டும்’ என்று நினைத்து “ஆமாம்ப் பா,எனக்கும் அம்மா சொல்றது தான் சரின்னு படறது” என்று சொன்னாள்.

குப்புசாமி வாத்தியார் சொன்ன அமாவாசை அன்று ரகுராமனை அழைத்துக் கொண்டு தன் ஆப்த நண்பன் பாலு வீட்டிற்குப் போய் அவனை சமையல் வேலைக்கு சேர்த்து விட்டு,பாலு சம்சாரம் கொடுத்த காபியை குடித்து விட்டு கிளம்பும் முன் “பாலு,நீ சொன்னா மாதிரி நான் ரகுராமனை உன் கிட்டே கொண்டு வந்து விட்டு இருக்கேன்.அவனை நீ எல்லா சமையல் நுணுக்கங்களையும் சொல்லி க் குடுத்து நல்ல சமையல் காரனா ஆக்கணும்” என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

உடனே பாலு “நீ கவலையே படாதே குப்பு.இனிமே ரகுராமன் என் சொத்து.இனிமே அவனை ஒரு நல்ல சமையல் காரனா¡ ஆக்கறது என் பொறுப்பு” என்று உறுதியாகச் சொன்னார்.உடனே குப்பு சாமி பாலுவுக்கு தன் நன்றியைச் சொன்னார்

கொஞ்ச நேரம் பாலுவிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, வீட்டுக்கு வந்தார் குப்புசாமி.

ரகுராமன் இல்லாத வீடு குப்புசாமிக்கும்,மரகத்ததுக்கும்,மங்களத்துக்கும் வெறுமையாக இருந் தது.ஒரு நாள் போவதே ஒரு யுகமாக இருந்தது மூவருக்கும்.

மங்களம் அவள் தோழி விமலாவுடனும்,அன்று சயந்திரம் கோவிலுக்குப் போய் இருந்தாள்.

குப்புசாமி அவர் மணைவியை அழைத்து “மரகதம்,நாமோ ரகுராமனை ஒரு சமையல் காரர் கிட்டே வேலை கத்துக்க அனுப்பி இருக்கோம்.அவன் அந்த சமையல் வேலையை நன்னா கத்துண்டு, அவன் காலில் நிக்க இன்னும் ஆறு வருஷமோ ஏழு வருஷமோ ஆகும்ன்னு எனக்குப் படறது. மங்கள த்துக்கு இந்த தை மாசம் வந்தா பத்தொன்பது முடிஞ்சி,பேருக்கு இருபது ஆரம்பிக்கப் போறது.ரொம்ப பொ¢ய ‘இடமா’ நாம பாத்தோம்ன்னா,நிறைய செலவு கல்யாண செலவு பண்ண வேண்டிஇருக்கும். இந்த வருஷமும் மழை நன்னா பெய்யலே.மங்களத்துக்கு என்ன மாதிரி ‘இடம்’ பாக்கலாம்.அவளுக்கு என்ன என்ன நகைகள் எல்லாம் போடலாம்ன்னு நீ யோஜனைப் பண்ணயா” என்று கேட்டு தன் மணைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மரகதம்” நீங்க சொல்றது ரொம்ப சரின்னு தான் நேக்கும் படறது.நாம நினைக்கிறா மாதிரி,நம்ம மங்களத்துக்கு ஒரு நல்ல ‘இடமா’ கிடைச்சு,அவாளும் கல்யாணத்துக்கு ரொம்ப நகைகள் எல்லாம் கேக்காம,நம்ம சக்திக்கு ஏத்தாப் போல பண்ண ஒத்துக்கணும்.நினைச்சா ரொம்ப பயமாத் தான் இரு க்கு.மங்களம் கல்யாணத்துக்கு நிறைய செலவு பண்ணிட்டு,அப்புறமா நம்ம ரகுராமனுக்கு நிலமும் வக்காம,பணமும் வக்காம இருந்து விடக் கூடாது.அவன் பாவம் ஒரு சமையல் காரனாத் தானே வாழ் ந்துண்டு வறப் போறான்.அவனுக்கு நம்ம கிட்ட இருக்கிற எல்லா நிலங்களும்,கணிசமா பணமும் வச்சிட்டுத் தான் நாம கண்ணே மூடணும்.ரெண்டும் எப்படி நடக்கப் போறதுன்னு நினைச்சா எனக்கு தலையே சுத்தறது.பல பூஜைகள் பண்ணி,பல விரதங்கள் இருந்து,அந்த பகவானை நிறைய வேண்டி ண்டு வந்து,ரகுராமனை பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவாச்சே நான்.அவன் காலம் பூரா கஷ்டப் படாம இருந்து வரணும் இல்லையா சொல்லுங்கோ.அவனுக்கு நாம நம்ம நிலங்களையும்,கணிசமா பணமும் வக்காட்டா அவன் கல்யாணம் பண்ணிண்டு சொற்ப சம்பளத்லே கஷ்டப் பட்டுண்டு தானே வருவான்.இதே நாம நன்னா யோஜனை பண்ணனும்” என்று சொல்லும் போது அவள் கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வந்தது.

தன் புடவைத் தலைப்பால் துடைந்துக் கொண்டாள்.

இதை பார்த்த குப்புசாமிக்கு ரொம்ப வருத்தமாய் இருந்தது.

அவர் உடனே ”வருத்தப் படாதே, மரகதம்.அந்த பகவான் நமக்கு அந்த மாதிரி சோதனை எல் லாம் பண்ணி,நம்மே கஷ்டப் பட வக்க மாட்டார்.அவர் நமக்கு நல்ல விதமா எல்லாத்தையும் முடிச்சுக் குடுப்பார்ன்னு தான் எனக்குப் படறது.நீ விணா கண் கலங்காதே.நீ கண் கலங்கினா,அதே பாத்துண் டு என்னாலே சும்மா இருக்க முடியாது” என்று சொல்லி தன் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

“உங்க வாய் முஹ¥ர்த்தப் படி எல்லாம் நன்னா போகணும்.மங்களம் கல்யாணம் நல்லபடியா நட ந்து,அதுக்கு அப்புறமா நமக்கு ஒரு கஷ்டமும் இல்லாம நாம இருந்து வரணும்”என்று மரகதம் சொல்லி க் கொண்டு இருந்தபோது,மங்களம் வீட்டுக்கு சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விடவே, குப்புசாமி தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு சுவாமி ரூமுக்குப் போய் சுவாமி மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தார்.

மரகதம் சமையல் வேலையை கவனிக்கப் போனாள்.

ராமநாதன் நன்றாக படித்து வந்து ‘இண்டர்மீடியட்’ “பாஸ்” பண்ணினான்.அவன் ‘இண்டர்மீடி யட்’ பா¢¨க்ஷயிலே ரொம்ப நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருக்கவே,அவனுக்கு அந்த காலேஜே B.com.’கோர்ஸில்’ ‘ஸ்காலர்ஷிப்’ கொடுத்து படிக்கச் சொன்னார்கள்.

ராமநாதன் ரொம்ப ஆசைப் பட்டதால் ராமசாமியும் விமலாவும்அவனை B.com.’கோர்ஸில்’ சேர்ந்து படிக்க வைத்தார்கள்.வீட்டு செலவும்,வீட்டு வாடகையும்,இதர செலவுகளும் ராமசாமியையும் விமலாவையும் மிகவும் கஷ்டப் படுத்தி வந்தது.கையிலே இருந்த பணத்தை சிக்கனமாக செலவு பண்ணீ வந்து,மெல்ல சமாளித்து வந்தார்கள் இருவரும்.
இரண்டு வருஷம் ஆனதும் ராமநாதன் நல்ல மார்க் வாங்கி B.com ‘பாஸ்’ பண்ணினான்.

ராமநாதன் ‘பாங்கு பா¢¨க்ஷ’ புஸ்தங்களை எல்லாம் வாங்கி படித்துக் கொண்டு இருந்தான்.

அன்றைய ‘ஹிண்டு’ பேப்பா¢ல் ஒரு தனியார் ‘பாங்கில்’ B.com படித்தவர்கள் அந்த ‘பாங்கில்’ ‘க்லார்க்’ வேலைக்கு மனு அனுப்பலாம்’ என்ற விளம்பரம் வந்ததைப் பார்த்தார் ராமசாமி, உடனே அவர் ராமநானைப் பார்த்து “ராமநாதா,நீ உடனே இந்த பாங்குக்கு ‘க்லார்க்’ வேலைக்கு ஒரு ‘அப்லிகிகேஷன்’ அனுப்பு” என்று சொன்னதும் ராமநாதனும் அந்த தனியார் பாங்குக்கு ஒரு ‘க்லார்க்’ வேலைக்கு ‘அப்லிகேஷனை’ அனுப்பி விட்டு பாங்கு பா¢¨க்ஷ புஸ்தகங்களை மும்முறமாக படித்து வந்தான்.

ஒரு மாசம் ஆனதும் ராமநாதனுக்கு அந்த பாங்கிலே இருந்து ‘க்லார்க்’ பா¢¨க்ஷக்கு வர லெட்டர் வந்தது.உடனே ராமசாமியும் விமலாவும் அந்த ‘பாங்கு லெட்டரை’ சுவாமியிடம் வைத்து விட்டு,”இந்த ‘பாங்கு’ பா¢¨க்ஷயிலே ராமநாதன் ‘பாஸ்’ பண்ணி,அவனுக்கு சீக்கிரமா வேலே கிடைக்கணும்.எங்க கஷ்ட காலமும் சீக்கிரமா தீரணும்” என்று சொல்லி சுவாமியை வேண்டிக் கொண்டு வந்தார்கள்.

குறிப்பிட்ட அன்றைக்கு ராமநாதன் அந்த தனியார் பாங்குக்குப் போய் அவர்கள் கொடுத்த பா¢¨க்ஷயை மிக நன்றாக எழுதி விட்டு,வீட்டுக்கு வந்து தன் அம்மா அப்பாவிடம் “பா¢¨க்ஷயை நான் ரொம்ப நன்னா எழுதி இருக்கேன்.எனக்கு நிச்சியமா அந்த பாங்கிலே ஒரு ‘க்லார்க்’ வேலை கிடைச் சிடும்” என்று சந்தோஷமாகச் சொன்னான்.
ராமசாமியும் விமலாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ஒரு மாசம் ஆனதும் அந்த தனியார் ‘பாங்கில்’ இருந்து ராமநாதனுக்கு ஒரு லெட்டர் வந்தது. அந்த லெட்டரை மிகவும் ஆவலாக ராமசாமி சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு பிரித்துப் படித் தார்.அந்த லெட்டா¢ல் ‘ராமநாதன் அந்த ‘பாங்கு’ நடத்தின பா¢¨க்ஷயில் ‘பாஸ்’ பண்ணி விட்டதாக வும்,ஒரு வருஷ ‘ட்ரெயினிங்க்’ வகுப்புக்கு இந்த மாசம் இருபது தேதிக்குள் சேர வேண்டும்’ என்று உத்தரவு வந்து இருந்தது.

ராமசாமி ஒரு சின்ன குழந்தையைப் போல அந்த லெட்டரைப் படித்து விட்டு சந்தோஷப் பட்டு, மணைவி விமலாவைக் கூப்பிட்டு “விமலா,சீக்கிரம் வாயேன்.உனக்கு ஒரு ‘ஸ்வீட் நியூஸ்’ சொல்லப் போறேன்” என்று சத்தம் போட்டு சொல்லி விட்டு,தன் கண்களை மூடிக் கொண்டு பகவானுக்கு தன் நன்றியை சொல்லிக் கொண்டு இருந்தார்.

தன் கணவன் இப்படி சத்தம் போட்டு பேசினத்தை இது வரை கேட்டதே இல்லை விமலா.

‘என்னடா,இவர் இப்படி சத்தம் போட்டு ’ஸ்வீட் நியூஸ்’ன்னு சொல்றாரே’ என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டே” என்ன சமாசாரம்,என்ன ‘ஸ்வீட் நியூஸ்’.நீங்க இது வரைக்கும் இவ்வளவு சத்தம் போட்டு பேசினதே நான் கேட்டதே இல்லையே“ என்று கேட்டுக் கொண்டே சமையல் ரூமை விட்டு வெளியே வந்தாள் விமலா.

“சத்தம் போட்டு சொல்ல வேண்டிய ’ஸ்வீட் நியூஸ்’ தான் இது விமலா.நம்ம ராமநாதன் அந்த ‘பாங்கில்’ எழுதின் பா¢¨க்ஷயிலே ‘பாஸ்’ பண்ணி இருக்கான்.அவனை உடனே ஒரு வருஷ ‘ட்ரெயி னிங்க்’ வகுப்புக்கு இந்த மாசம் இருபது தேதிக்குள் சேர வேண்டும்ன்னு சொல்லி ‘லெட்டர்’ அனுப்பி இருக்கா.இந்த ‘லெட்டரை’ப் பாரேன்.உனக்கு எல்லா புரியும்”என்று சொல்லி பாங்கு அனுப்பி இருந்த லெட்டரை சந்தோஷத்துடன் தன் மணைவி விமலா கிட்டே கொடுத்தார் ராமசாமி.

விமலாவும் தன் கணவன் கொடுத்த லெட்டரைப் படித்துத் பார்த்தாள்.

அவள் சந்தோஷத்தில் “ஆமாம்ண்ணா,நம்ம ரமநாதனுக்கு அந்த ‘பாங்லே’ வேலை கிடைச்சு இருக்கு.நான் இன்னிக்கே பகவானுக்கு ‘பால் பாயசம்’ பண்ணி நைவேத்யம் பண்ணப் போறேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது வெளியெ போய் இருந்த ராமநாதன் வீட்டிற்குள் நுழைந் தான்.

ராமசாமி ராமநாதன் இடம் பாங்கில் இருந்த லெட்டரைக் கொடுத்து விட்டு “’கங்கிராஜுலே ஷண்ஸ்’.உனக்கு அந்த ‘பாங்’லே வேலை கிடைச்சு இருக்கு.உன்னே ஒரு வருஷ “ட்ரெயினிங்க்’ வகுப்புக்கு இந்த மாசம் இருபது தேதிக்குள் சேர வேண்டும்’ ன்னு இந்த லெட்டா¢ல் எழுதி இருக்கா” என்று சொல்லி தன் மணைவியின் கையிலே வந்து இருந்த ‘பாங்க்’ ‘லெட்டரை’ வாங்கி ராமநாதன் கையிலே கொடுத்தார்.

உடனே ராமநாதன் அந்த ‘லெட்டரை’ வாங்கிப் படித்து பார்த்து சந்தோஷப் பட்டான்.

ராமசாமி விடாமல் ”ராமநாதன் மெல்ல,மெல்ல,அந்த ‘ட்ரெயினிங்கை’ நல்ல விதமா முடிச்சி, அவன் ஒரு ‘க்ளார்க்கா’ வேலைக்கு சேந்துட்டானா,அப்புறமா நம்ம கஷ்டம் எல்லாம் தீந்து, நாம சந் தோஷமா இருந்துண்டு வரலாம்.அப்புறமா அவன் படிப் படியா மெல்ல,ஒசந்து ஒரு ‘ஆபீஸரா’ ஆயிடுவான் விமலா” என்று சந்தோஷத்தில் சொன்னார்.

உடனே “ஆமாம்ப்பா,நீங்க சொல்றா மாதிரி நான் அந்த “ட்ரெயினிங்கை’ நல்ல விதமா முடிச்சி, ஒரு ‘க்ளார்க்கா’ வேலைக்கு சேந்துட்டா,அப்புறமா படிப் படியா மெல்ல,ஒசந்து ஒரு ஆபீஸரா ஆயி டலாம்” என்று சந்தோஷத்தில் சொன்னான் ராமநாதன்.

சொன்னார் போல் அன்று மத்தியான சாப்பட்டுக்கே விமலா ‘பால்’ பாயசம் பண்ணி,சுவாமிக்கு ‘நைவேத்யம்’ பண்ணி விட்டு,தன் கணவருக்கும் ராமநாதனுக்கும் கொடுத்து விட்டு,அவளும் மீந்த பால் பாயசத்தை குடிக்க ஆரம்பித்தாள்.எல்லோரும் அந்த பால் பாயசத்தை சந்தோஷமாகக் குடித்தார் கள்.விமலாவுக்கும்,ராமசாமிக்கும்,’தன் பையனுக்கு ஒரு நல்ல ‘பாங்கு’ வேலை கிடைத்து விட்டது. இனிமே நாம பணத்துக்கு கஷ்டப படாம இருந்து வரலாம்’என்று நினைக்கும் போது மிகவும் சந்தோ ஷமாக இருந்தது.

ராமசாமி வாத்தியாரிடம் போய் ஒரு நல்ல நாள் பார்த்து வந்தார்.

அந்த நல்ல நாள் அன்று விமலா ராமநாதன் நெத்தியில் கொஞ்சம் குங்குமம் இட்டு,சுவாமி படத்துக்கு ஒரு நமஸ்காரம் பண்ணச் சொன்னாள்.ராமநாதன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும், நமஸ் காரத்தைப் பண்ணி விட்டு,நன்றாக ‘டிரஸ்’பண்ணிக் கொண்டு அந்த தனியார் ‘பாங்க்’ வேலைக்குப் போனான்.

அந்த வருஷம் நல்ல மழை பெய்ததால் குப்புசாமி நிலங்களில் நல்ல விளைச்சல் வந்தது. விளை ச்சலில் வந்த பணத்தில் குப்புசாமியும் மரகதமும் மங்களத்தை திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டு போய்,அவளுக்கு பிடித்தாற் போல் கழுத்துக்கு ஒரு ஆறு சவரனில் ஒரு தங்க சங்கிலியும், கைக்கு ரெண்டு ஜதை தங்க வளையல்களையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

ரகுராமன் பாலு மாமாவிடம் சமையல் வேலையை நன்றாக கற்றுக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.

ராமநாதன் ஒரு தனியார் பாங்கில் ‘க்லார்க்’ வேலைக்கு ‘ட்ரெயினிங்க்’ எடுத்து வந்தான்.

ஒரு வருஷம் ‘ட்ரெயினிங்க்’ ஆனதும் ராமநாதன் அந்த தனியார் பாங்கில் ஒரு ‘க்லார்க்காக’ வேலை செய்து வர ஆரம்பித்தான்.

விமலா தன் கணவனிடம் ”நம்ம ராமநாதனுக்கு பாங்கிலே ‘க்லார்க்’ வேலை கிடைச்ச சந்தோஷ சமாசாரத்தே,என் தம்பி குப்பு குடும்பத்துக்கு சொல்லிட்டு,அவா நாலு பேரையும்,இந்த ஞாயித்துக் கிழமை மத்தியானம் சாப்பாட்டுக்கு கூப்பிடலாம்ன்னு நான் நினைக்கிறேன்.நீங்க என்ன நினைக்கி கிறேள்.உங்களுக்கு இதில் ‘ஆ§க்ஷபணை’ ஒன்னும் இல்லையே” என்று கேட்டாள்.

உடனே ராமசாமி “நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னுக்குள் ஒன்னா தானே இருக்கோம் விமலா. நீஅந்த குடும்பத்தே ஞாயித்துக் கிழமை சாப்பிடக் கூப்பிடறதிலே,எனக்கு என்ன ‘ஆ§க்ஷபணை’ இருக்கப் போறது.அந்தக் குடும்பத்திலே தானே என் தங்கை மரகதமும் இருந்துண்டு வறா.தாராளமா நீ போய்,அவா நாலு பேரையும் ஞாயித்துக் கிழமை மத்தியானம் சாப்பிட கூப்பிட்டுட்டு வா” என்று சொன்னார்.

அடுத்த நாள் சாயங்காலம ஒரு நாலு மணிக்கா விமலா ‘பஸ் ஸ்டாண்டுக்கு’ப் போய் ‘பஸ்ஸை’ பிடித்து தன் தம்பி குப்புசாமி இருந்து கிராமத்துக்குப் போனாள்.
அக்கா விமலாவைப் பார்த்ததும் வாசலில் நின்றுக் கொண்டு இருந்த குப்புசாமி “வா அக்கா. எங்கே இவ்வளவு தூரம்.அத்திம்பேரும் ராமநானும் சௌக்கியமா” என்று கேட்டு விட்டு அக்கா விமலா வை விட்டிற்குள் அழைத்துப் போனார்.

உடனே மரகதம் “வாங்கோ அக்கா.அத்திம்பேர் சௌக்கியமா, ராமு சௌக்கியமா” என்று அவள் பங்குக்கு விசாரித்தாள்.மங்களமும் தன் அத்தையைப் பார்த்து “வாங்கோ அத்தே” என்று வரவேற்று, ஒரு சேரைப் போட்டு ”உக்காருங்கோ அத்தே” என்று சொன்னாள்.

விமலா தான் வாங்கிக் கொண்டு வந்து இருந்த பூ.வெத்திலைப் பாக்கு,பழங்கள் எல்லாவற்றை யும் மரகதத்திடம் கொடுத்து விட்டு,மங்களம் போட்ட சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டாள்.

விமலா மங்களத்தை அப்போ தான் கிட்டப் பார்த்தாள்.தங்க விக்ரகம் மாதிரி ‘தள’ ‘தள’ என்று ஒரு அழகு பொம்மைப் போல வளர்ந்து இருந்தாள்.ஒரு நிமிஷம் அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.அசந்துப் போய் விட்டாள் விமலா.

தம்பி குப்புசாமி இடம் ”மங்களம் இப்போ நன்னா வளந்து இருக்காளே.அவ பாக்க ரொம்ப அழகா கூட இருக்கா.மரகதம்,நான் கிளபம்பிப் போனதும்,நீ அவளுக்கு சுத்திப் போடு.என் கண்ணே மங்களம் மேலே பட்டு விடும் போல இருக்கு” என்று சொன்னாள்.

நல்ல வெளுப்பாக இருந்த மங்களத்தின் மிகம் சிவப்பாகியது.அவள் வெட்கப் பட்டுக் கொண்டு “ரொம்ப் ‘தாங்க்ஸ்’ அத்தே” என்று சொன்னாள்.
விமலா சொன்னதையும் மங்களம் சொன்னதையும் கேட்டார்கள் குப்புசாமியும்,மரகதமும்.

“சரி,மன்னி,நான் மங்களத்துக்கு சாயங்காலமா சுத்திப் போடறேன்” என்று சொன்னாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *